Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#duraivaiko - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 06 Nov 2023 10:15:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’பாஜக அரசின் சூழ்ச்சி வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது..!’’ துரை வைகோ கண்டனம் https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%2595-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2582%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%25b5 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5/#respond Mon, 06 Nov 2023 10:15:06 +0000 https://madrasmurasu.com/?p=7409 ’’நூறு நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசு தன் முயற்சியை கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு போதிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்’’ என்று துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்ட அறிக்கை: இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் விளங்குகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு […]

The post ’’பாஜக அரசின் சூழ்ச்சி வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது..!’’ துரை வைகோ கண்டனம் first appeared on Madras Murasu.

]]>
’’நூறு நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசு தன் முயற்சியை கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு போதிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்’’ என்று துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்ட அறிக்கை:

இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் விளங்குகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.
பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்வதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரித்தது. கிராமப்புற பொருளாதாரமும் உயர்ந்தது.

இந்த திட்டத்தின் மூலம், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் கிராமப்புற பெண்களே அதிக அளவில் பயனடைந்து வருகின்றார்கள். கொரோனா காலத்தில் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் தலைகீழாக மாறியது. மூன்று வேளை உணவு என்பதே கேள்விக்குறி ஆனது. அந்த நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை தேவையை இந்த நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் கிடைத்த வருவாய் தான் பூர்த்தி செய்தது. 2016 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் அவர்கள், இந்த நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை இந்தியாவின் முற்போக்கான திட்டம் என்று பாராட்டியதோடு, உலகம் முழுமைக்கும் இத்திட்டம் ஒரு சிறந்த பாடம் என நெகிழ்ச்சியோடு தெரிவித்து இருந்தார். மேலும், இந்தியாவின் சமத்துவமின்மையை குறைக்க இத்திட்டம் மிகவும் பயன்படும் என அவர் தெரிவித்து இருந்தார்.

அப்படிப்பட்ட தலைசிறந்த இந்த திட்டத்தை முடக்கும் நோக்கத்தில் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகின்றது. 2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டம், ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்காததால் பதினைந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் முடக்கப்பட்டு உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கும் மேலாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து உள்ளார்கள். அனைத்து தொழிலாளர்களுக்கும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும் என்றால் 2.7 இலட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது வெறும் 60,000 கோடி தான் நிதி ஒதுக்கி உள்ளது. இது கடந்த ஆண்டு நிதியை விட 21 விழுக்காடு குறைவு. இத்திட்டத்தில் பெரும்பாலும் கிராமப்புற, பட்டியலின, பழங்குடியின பெண்கள் தான் அதிக அளவில் பதிவு செய்து உள்ளனர். ஒன்றிய பாஜக அரசின் நிதி குறைப்பால் அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கேள்விக்குறியாகி உள்ளது. நாட்டின் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து வந்த நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி அளிப்பதை நிறுத்தும் விதமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு, நேரடியாக பலகோடி பட்டியலின மக்களின் வாழ்வை இதன்மூலம் சிதைக்கிறது. அழிக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் பல தவறான கொள்கையால் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இந்த நேரத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் இந்த திட்டத்தின் நிதி குறைப்பை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும். இல்லாவிடில், ஏழை எளிய மக்களின் கோபத்திற்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை எச்சரிக்கிறேன்.

நிதி குறைப்பு ஒருபக்கம் இருக்க, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என சமீபத்தில் பேசியிருக்கிறார்.
ஒன்றிய பாஜக அரசு அவர்களின் கைப்பாவையாக உள்ள ஆளுநர்களின் மூலம் தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்த நினைப்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நூறு நாள் வேலைத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என பேசியிருப்பதை மறுமலர்ச்சி திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். அவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் நூறு நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசு தன் முயற்சியை கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு போதிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

The post ’’பாஜக அரசின் சூழ்ச்சி வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது..!’’ துரை வைகோ கண்டனம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5/feed/ 0
“ஆளுநருக்கு அரசியல் செய்வதற்கு மாணவர்களின் எதிர்காலமா கிடைத்தது?” துரை வைகோ https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d/#respond Fri, 09 Jun 2023 14:48:00 +0000 https://madrasmurasu.com/?p=3660 மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அறிக்கை: “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாகளுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவி, தற்பொழுது மாணவர்கள் வாழ்விலும் விளையாடுகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் சனாதன இந்துத்வா கருத்துகளையும், ஆளும் அரசை விமர்சித்து எல்லை மீறுகிறார் ஆளுநர் என சமீபத்தில் கூட இயக்க தந்தை வைகோ விமர்ச்சிருந்தார். பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு தேதி வழங்க வேண்டுமென்றால் ஒன்றிய அமைச்சர் ஒருவர் கலந்து கொள்ளவேண்டும் என ஆளுநர் விரும்புவதாக உயர்கல்வித்துறை […]

The post “ஆளுநருக்கு அரசியல் செய்வதற்கு மாணவர்களின் எதிர்காலமா கிடைத்தது?” துரை வைகோ first appeared on Madras Murasu.

]]>
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அறிக்கை:

“சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாகளுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவி, தற்பொழுது மாணவர்கள் வாழ்விலும் விளையாடுகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் சனாதன இந்துத்வா கருத்துகளையும், ஆளும் அரசை விமர்சித்து எல்லை மீறுகிறார் ஆளுநர் என சமீபத்தில் கூட இயக்க தந்தை வைகோ விமர்ச்சிருந்தார்.

பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு தேதி வழங்க வேண்டுமென்றால் ஒன்றிய அமைச்சர் ஒருவர் கலந்து கொள்ளவேண்டும் என ஆளுநர் விரும்புவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். கலந்துரையாடல் நிகழ்வை ஏற்படுத்த வேண்டும் என நிர்பந்திப்பதாக தகவல் வருகின்றது. ஆளுநருக்கு அரசியல் செய்வதற்கு மாணவர்களின் எதிர்காலமா கிடைத்தது.

மாணவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியும் இதர தரம்களும் தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் தற்காலிக பட்ட/பட்டய சான்றிதழ்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. மேற்படி மதிப்பெண் மற்றும் பட்ட/பட்டய சான்றிதழ்களை அங்கீகரித்து ஒப்பளிக்கும் உரிமை பல்கலைக் கழக வேந்தரான ஆளுநர்களுக்கு தான் உண்டு. அந்த வகையில் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஒரு மாணவருக்கு பட்ட/பட்டய சான்றிதழ்கள் வழங்க முடியும்.

மரபு வழியாக ஆளுநர் தலைமையில்தான் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழா தேதி முடிவானவுடன் அந்தநாளிலோ அல்லது அதற்கு முந்தைய நாட்களிலோ ஒப்பளிப்பு கூட்டம் நடத்தப்பட்டு கையெழுத்து பெறப்படும். பாஜக ஆளுநர்கள் வரும் வரை இதில் எந்த பிரச்சனைகளும் வந்ததில்லை. பட்டமளிப்பு விழாவில் பல்கலை வேந்தரான ஆளுநரோ, இணை வேந்தரான உயர்கல்வி அமைச்சரோ பேரூரை ஆற்றுவதில்லை. ஆளுநர் அலுவலகத்தில் அனுமதி வாங்கி அழைக்கப்படும் சிறப்பு விருந்தினரே மாணவர்களிடம் உரை நிகழ்த்துவார்.

இங்குதான் ஆளுநர் ஆர்.என் ரவி, ஒன்றிய அமைச்சர்களை அழைக்க வேண்டும், சனாதன கொள்கைகளை பேசக்கூடிய வடக்கத்திய தலைவர்களை அழைக்கவேண்டும் என நிர்பந்தபடுத்துகிறார். அவர்கள் தரும் தேதியும் தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சர் தேதியும் ஒத்துபோகவேண்டும். அதனாலும் காலவிரயம் ஏற்படுகிறது.

பட்டமளிப்பு விழாவில் அந்த பகுதி இளைஞர்கள் ஒரே கூரையின் கீழ் கூடும் நிகழ்வு. அந்த நிகழ்வை தங்கள் சனாதன மதவெறி கொள்கைகளை பரப்பும் களமாக ஆளுநர் ஆர்.என்.ரவி நினைப்பதால்தான் இத்தகைய குளறுபடிகள் நிகழ்கின்றன. பல்கலை கழகங்கள் தரும் தற்காலிக பட்ட / பட்டய சான்றிதழ்கள் ஆறுமாதம் மட்டுமே செல்லுபடியாகும். எனவே பட்டமளிப்பு விழா நடத்த ஏற்படுத்தும் காலதாமதத்தால் 9.29 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கடினமாகும்.

இது குறித்து நான் ஏப்ரல் 1-ஆம் தேதி செய்தியாளர்களுக்கு விரிவாக பேட்டி அளித்திருந்தேன். அதை மீண்டும் நினைவு கூறுகிறேன், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் கல்லூரி வளாக நேர்முக தேர்வில் (campus interview) வேலை வாய்ப்பை பெற்ற மாணவர்கள் ஆறு மாத காலத்திற்க்குள் பட்ட/பட்டய படிப்பு முடித்த சான்றிதழை தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் சமர்பிக்க விட்டால் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும், எண்ணற்ற மாணவர்கள் ஆளுநரின் இந்த நடவடிக்கையால் கிடைத்த வேலை வாய்ப்பையும் இழந்துள்ளனர்.

மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

The post “ஆளுநருக்கு அரசியல் செய்வதற்கு மாணவர்களின் எதிர்காலமா கிடைத்தது?” துரை வைகோ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d/feed/ 0
“எம்.பி தொகுதிகளுக்கு 40 பொறுப்பாளர்கள்..!” விறுவிறு துரை வைகோ https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-40-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-40-%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25b1 https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-40-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1/#respond Sun, 04 Jun 2023 05:17:56 +0000 https://madrasmurasu.com/?p=3349 மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ அறிக்கையில், “நமது இயக்கத்தின் இணையதள அணி அதிகாரபூர்வமாக தலைவர் வைகோ -வால் அங்கீகரிக்கப்பட்டு, தற்போது நடைமுறையிலும் செயல்பட்டு வருகிறது. இதுவரை 11 மண்டல பொறுப்பாளர்களும், 22 நாடாளுமன்ற பொறுப்பாளர்களும் இயக்கத் தந்தை தலைவர் வைகோ ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டு, இணையதள அணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அதனுடன் இப்போது மீதமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இணையதள பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூடுதலாக […]

The post “எம்.பி தொகுதிகளுக்கு 40 பொறுப்பாளர்கள்..!” விறுவிறு துரை வைகோ first appeared on Madras Murasu.

]]>
மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ அறிக்கையில், “நமது இயக்கத்தின் இணையதள அணி அதிகாரபூர்வமாக தலைவர் வைகோ -வால் அங்கீகரிக்கப்பட்டு, தற்போது நடைமுறையிலும் செயல்பட்டு வருகிறது.

இதுவரை 11 மண்டல பொறுப்பாளர்களும், 22 நாடாளுமன்ற பொறுப்பாளர்களும் இயக்கத் தந்தை தலைவர் வைகோ ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டு, இணையதள அணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

அதனுடன் இப்போது மீதமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இணையதள பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கூடுதலாக 2 மண்டல பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு, மொத்தமாக 13 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் இணைந்து செயல்பட 53 சட்டமன்றப் பொறுப்பாளர்களும் தலைவர் வைகோ  ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே தங்கள் பணிகளுக்கு இடையில் இணையதள அணியினருக்கு உறுதுணையாக இருந்து அனைத்து பொறுப்பாளர்களையும் தேர்ந்தெடுக்க ஒத்துழைப்பு நல்கிய மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இனி வரும் காலங்களில் எஞ்சியுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் உடனடியாக நியமனம் செய்யப்படுவார்கள் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இணையத்தில் தலைவர் வைகோவின் கொள்கைகளையும், இயக்கத்தின் செயல்பாடுகளையும மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியினை, இணையதள அணியினர் தொடர்ந்து செய்வார்கள். அவர்களுக்கு கழகத் தோழர்கள் ஒத்துழைப்பு தந்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இப்போதுதான் மதிமுக அமைப்பு தேர்தல் 5 -வது முறையாக நடந்தது. இந்நிலையில்,  திமுக கூட்டணியில் இருக்கும் அக்கட்சி இப்போதே நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகத் தொடங்கி விட்டது.

மதிமுகவின் இணையதள அணி கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விறு விறு மாற்றம், கட்சித் தொண்டர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

The post “எம்.பி தொகுதிகளுக்கு 40 பொறுப்பாளர்கள்..!” விறுவிறு துரை வைகோ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-40-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1/feed/ 0