acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ”பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசமற்ற கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கிறது..!” உள்துறை அமைச்சர் அமித் ஷா first appeared on Madras Murasu.
]]>ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் இன்று நடைபெற்ற 75-வது ஆர்ஆர் தொகுப்பு ஐபிஎஸ் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் இன்று (27.10.2023) நடைபெற்ற 75-வது ஆர்.ஆர் தொகுப்பு ஐபிஎஸ் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர், மத்திய உள்துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில், 75-வது ஆர் ஆர் தொகுப்பு பயிற்சி அதிகாரிகளுக்கு இன்று மிகவும் முக்கியமான நாள் என்று கூறினார். நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டின் போது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பின் பொறுப்பு அவர்களின் கைகளில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமிர்தகால தீர்மானத்தை நிறைவேற்றும் திசையில் 75 ஆர்ஆர் தொகுப்பு பயிற்சி அதிகாரிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று அவர் கூறினார்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல சர்தார் படேல் மிகவும் சிந்தனையுடன் இந்த அகாடமிக்கு அடித்தளம் அமைத்தார் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்து அமிர்தகால காலத்திற்குள் நுழைந்துள்ள நிலையில் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு அவற்றைச் சாதனைகளாக மாற்ற பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பூடான், மாலத்தீவு, மொரீஷியஸ், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 175 பேர் அடிப்படை படிப்பை முடித்துவிட்டு இன்று இங்கிருந்து தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த 175 பேரில் 34 பேர் பெண் அதிகாரிகள் என்று அவர் கூறினார்.
வரும் நாட்களில் உள்நாட்டு பாதுகாப்பைக் கையாள்வதில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய காவல்துறையை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உலகிலேயே மிகவும் சிறந்ததாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

இன்று ஒரு பெண் அதிகாரி சிறந்த பயிற்சி அதிகாரிக்கான விருதைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அமித் ஷா தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார். நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்காக மோடி அரசு சமீபத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் நக்ஸலைட் வன்முறை போன்ற சவால்களை நாடு நீண்ட காலமாக எதிர்கொண்டு வருவதாகவும், ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், நமது துணிச்சலான காவல்துறையினரின் முயற்சியால், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கிடைத்துள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார்.

நமது சவால்கள் இன்னும் முடிவடையவில்லை என்று கூறிய அவர், திட்டமிட்ட குற்றங்கள், இணையதள குற்றங்கள், மாநிலங்களுக்கு இடையிலான குற்றங்கள், சர்வதேச நிதி மோசடிகளில் போன்ற பல புதிய சவால்கள் இன்று நம் முன் நிற்கின்றன என்றும் அவர் கூறினார். போதைப்பொருள் கடத்தல், கிரிப்டோ கரன்சி, ஹவாலா வர்த்தகம் போன்ற சவால்களுக்கு எதிராக அதே வீரியத்துடன் நாம் போராட வேண்டும் என்று அவர் கூறினார்.
நாட்டின் ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர்களாக காவல் துறை அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும் என்று அமித்ஷா கேட்டுக்கொண்டார். பணியமர்த்தப்படும் இடத்தின் உள்ளூர் மொழி, பாரம்பரியம் மற்றும் வரலாற்றை மதித்து, அந்த மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்பு பெரிய அளவில் மேம்பட்டுள்ளது என்று அவர் கூறினார். வடகிழக்கு மாநிலங்கள், இடதுசாரி தீவிரவாத பகுதிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய நாட்டின் மூன்று முக்கியப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மேம்படுத்துவதில் அரசு மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசமற்ற கொள்கையை இந்தியா கடைப்பிடிப்பதாக அவர் கூறினார். தரவுத்தளங்கள் மற்றும் பகுப்பாய்வு கருவிகளின் துணையுடன் பணியாற்றுமாறும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துமாறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
The post ”பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசமற்ற கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கிறது..!” உள்துறை அமைச்சர் அமித் ஷா first appeared on Madras Murasu.
]]>The post ’’நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் திட்டமா..?’’ டாக்டர் தமிழிசை விளக்கம் first appeared on Madras Murasu.
]]>தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிழை கூறியுள்ளதாவது:
மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் “பூஜ்ஜியம்” மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை போல தவறாக விமர்சிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண், பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன? என்பதை பற்றிய புரிதல் முதலில் அவசியம்.
நீட் தேர்வை பற்றிய புரிதல் இன்றி நீட் தேர்வை ஒழிப்பதாக கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமல்ல?
நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை.
நீட் தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்துவ மேற்படிப்பில் சேரலாம். இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள் அனைவருக்குமே மருத்துவ மேற்படிப்பு படிக்க இடம் கிடைப்பதில்லை.
மருத்துவ மேற்படிப்பில் நீட் தேர்வில் உச்ச பட்ச மதிப்பெண்கள் பெற்றவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க முன்னுரிமை.
அத்தகைய இடங்கள் முழுமையான நிரம்பிய பின்னர் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட் ஆப் மதிப்பெண்கள் பெற முடியாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்திக் கொள்ளும் இந்த முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இதன் புரிதல் மிக அவசியம்.
நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நிச்சயம் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காது.
குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கே இந்த முறை.
இதை விமர்சிப்பவர்கள் இதைப் பற்றிய புரிதல் மிக அவசியம்.
இதைப்பற்றி புரிதல் இல்லாமல் மக்களையும், மாணவர்களையும் குழப்பி மாணவச் செல்வங்களிடம் தவறான எண்ணங்களை கொண்டு சேர்க்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
The post ’’நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் திட்டமா..?’’ டாக்டர் தமிழிசை விளக்கம் first appeared on Madras Murasu.
]]>The post புதுச்சேரியில், ‘வாட்டர் பெல்’..!’’ டாக்டர் தமிழிசை மகிழ்ச்சி first appeared on Madras Murasu.
]]>கோடையின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் போதிய அளவு தண்ணீர் அருந்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தேன்.
மாணவர்கள் இரண்டு வேளை தண்ணீர் குடிக்க “வாட்டர் பெல்” ஒலிக்க வேண்டும். மாணவர்கள் தண்ணீர் குடிக்க ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினேன்.

அதன் அடிப்படையில், காலை இரண்டு நேரமும் பிற்பகல் ஒரு நேரமும்
வாட்டர் பெல் ஒலிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. மாணவர்கள் போதிய தண்ணீர் குடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்த அதிகாரிகளுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
The post புதுச்சேரியில், ‘வாட்டர் பெல்’..!’’ டாக்டர் தமிழிசை மகிழ்ச்சி first appeared on Madras Murasu.
]]>