Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#csk - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Sat, 03 Jun 2023 21:16:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 “ருதுராஜ் கெய்க்வாட் – உத்கர்ஷா பவார் திருமணம்..!” https://madrasmurasu.com/%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25a4%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d/#respond Sat, 03 Jun 2023 21:16:44 +0000 https://madrasmurasu.com/?p=3342 இந்தியன் பிரீமியர் லீக் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடினார். அவர் இப்போது தனது வருங்கால மனைவியான உத்கர்ஷா பவாருடன் புதிய பாதையில் செல்ல தயாராகிவிட்டார். ருதுராஜ் கெய்க்வாட், மகாராஷ்டிரா ஆல்-ரவுண்டர் உத்கர்ஷா பவாரை திருமணம் செய்துள்ளார். இதனால், ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்ட போதிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். புதுமண தம்பதியரின் திருமணத்துக்கு முந்தைய, மெஹந்தி விழா ஜூன் […]

The post “ருதுராஜ் கெய்க்வாட் – உத்கர்ஷா பவார் திருமணம்..!” first appeared on Madras Murasu.

]]>
இந்தியன் பிரீமியர் லீக் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடினார். அவர் இப்போது தனது வருங்கால மனைவியான உத்கர்ஷா பவாருடன் புதிய பாதையில் செல்ல தயாராகிவிட்டார்.

ருதுராஜ் கெய்க்வாட், மகாராஷ்டிரா ஆல்-ரவுண்டர் உத்கர்ஷா பவாரை திருமணம் செய்துள்ளார். இதனால், ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்ட போதிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.

புதுமண தம்பதியரின் திருமணத்துக்கு முந்தைய, மெஹந்தி விழா ஜூன் 1, வியாழன் அன்று நடைபெற்றது. கெய்க்வாட், மகாராஷ்டிர மகளிர் கிரிக்கெட் வீராங்கனை உத்கரை காதலித்து வந்தார். அவர் தனது காதலியையும் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்காக குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு அழைத்து வந்தார். கேப்டன் தோனியிடம் அறிமுகம் செய்து வாழ்த்து பெற்றார்.

உத்கர்ஷா பவார் யார்?

ருதுராஜ் மற்றும் உத்கர்ஷா பவார் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், அவர்களது காதல் பற்றிய விவரங்கள் குறைவாகவே உள்ளன.  உத்கர்ஷாவும் மகாராஷ்டிராவுக்காக விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரர். அவரது முழு பெயர் உத்கர்ஷா அமர் பவார். அவர் 24 வயது வேகப்பந்து வீச்சாளர். உத்கர்ஷா பவார் அக்டோபர் 13, 1998 அன்று மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிறந்தார்.

The post “ருதுராஜ் கெய்க்வாட் – உத்கர்ஷா பவார் திருமணம்..!” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d/feed/ 0
’’தோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை ..!’’ சிஎஸ்கே நிர்வாகம் தகவல் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b1%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81/#respond Fri, 02 Jun 2023 06:21:13 +0000 https://madrasmurasu.com/?p=3181 ஐபிஎல் 2023 போட்டி முழுவதும் தோனி இடது முழங்கால் காயத்துடன் அவதிப்பட்டு வந்தார். பயிற்சி வேளையின்போது, காலில் பிரத்யேக காப்புடன் தோனி வலம் வந்தார். இதன் காரணமாக கீழ் வரிசையிலேயே அவர் பேட்டிங்கும் செய்தார். ஐபிஎல் இறுதி போட்டிக்குப் பிறகு மும்பை திரும்பிய தோனி புகழ்பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். தின்ஷா பர்திவாலாவைச் சந்தித்தார். இதையடுத்து, தோனிக்கு வியாழக்கிழமை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து, பிடிஐ-யிடம் பேசியிருந்த […]

The post ’’தோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை ..!’’ சிஎஸ்கே நிர்வாகம் தகவல் first appeared on Madras Murasu.

]]>
ஐபிஎல் 2023 போட்டி முழுவதும் தோனி இடது முழங்கால் காயத்துடன் அவதிப்பட்டு வந்தார். பயிற்சி வேளையின்போது, காலில் பிரத்யேக காப்புடன் தோனி வலம் வந்தார். இதன் காரணமாக கீழ் வரிசையிலேயே அவர் பேட்டிங்கும் செய்தார். ஐபிஎல் இறுதி போட்டிக்குப் பிறகு மும்பை திரும்பிய தோனி புகழ்பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். தின்ஷா பர்திவாலாவைச் சந்தித்தார். இதையடுத்து, தோனிக்கு வியாழக்கிழமை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து, பிடிஐ-யிடம் பேசியிருந்த சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் முழங்கால் காயம் குறித்து தோனி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவார் எனவும் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டால் தோனியே அதுகுறித்து முடிவெடுப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இறுதி ஆட்டத்துக்குப் பிறகு மும்பை திரும்பிய தோனி புகழ்பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் பிசிசிஐ மருத்துவக் குழுவின் உறுப்பினருமான டாக்டர். தின்ஷா பர்திவாலாவைச் சந்தித்தார்.

இந்நிலையில், மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் தோனிக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது. இதுகுறித்து சிஎஸ்கே அணி தரப்பிலிருந்து பிடிஐ-யிடம் தெரிவிக்கப்பட்ட தகவலில்,” மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை நிறைவடைந்தது. அவர் நலமுடன் உள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். அவரது மறுவாழ்வுப் பயிற்சி தொடங்குவதற்கு முன்பு அவர் சில நாட்கள் ஓய்வெடுப்பார். அடுத்த ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியைப் பெற அவருக்கு போதுமான நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ’’தோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை ..!’’ சிஎஸ்கே நிர்வாகம் தகவல் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81/feed/ 0
குப்பையை புதையலாக மாற்றும் வித்தை தெரிந்தவர் தோனி: ஹைடன் புகழாரம்! https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/#respond Sat, 27 May 2023 06:52:57 +0000 https://madrasmurasu.com/?p=2652 தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா மாட்டாரா என்று விவாதிப்பது இப்போது தேவையில்லாதது என்றார் ஹைடன்.

The post குப்பையை புதையலாக மாற்றும் வித்தை தெரிந்தவர் தோனி: ஹைடன் புகழாரம்! first appeared on Madras Murasu.

]]>
சென்னை அணியினை மகேந்திர சிங் தோனி வழிநடத்தும் விதம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார் .
கடந்த ஐபிஎல்-லில் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்த சென்னை அணியை இந்த ஆண்டு இறுதி ஆட்டத்துக்குள் அழைத்துச் சென்றுள்ளார் தோனி. முக்கிய வீரர்களாகக் கருதப்பட்ட பென் ஸ்டோக்ஸ், ஹங்கர்கேகர் ஆகியோர் காயமடைந்த போதிலும் இளம் படையை வைத்துக்கொண்டே இறுதி ஆட்டம் வரை அணியை அழைத்துச் சென்று தனது கேப்டன்சி மாஸ்டர் கிளாஸை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் தோனி.
ஒவ்வொரு பந்துக்கும் ஆட்ட உத்திகளை மாற்றிக்கொண்டே இருக்கும் தோனிக்கு என்று ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவ்வளவு ஏன் கிரிக்கெட் ஜாம்பவான்களே தோனியைப் பாராட்டாமல் இருந்ததில்லை. தில்லிக்கு எதிரான ஆட்டம் முடிந்த பிறகு சென்னை அணி தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது. அப்போது சிறு குழந்தையைப் போல ஓடிச் சென்று தோனியிடம் தான் அணிந்திருந்த சட்டையில் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டார் சுனில் கவாஸ்கர். இப்படி ரசிகர்கள் தொடங்கி கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திரங்களுமே கூட தங்களை தோனியின் ரசிகர் என அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.
அந்த வகையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் வர்ணனையாளருமான மேத்யூ ஹைடன் சமீபத்தில் தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தோனி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அப்போது அவர்,”தோனி ஒரு மாயாஜாலக்காரர். பிறரது குப்பைகளை அவர் பொக்கிஷமாக மாற்றக்கூடியவர். சென்னை அணிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும் இடையே நல்ல பிணைப்பு உள்ளது. அதன்மூலம் சவாலை எதிர்கொள்ளவும் முடிவுகளை எடுக்கவும் சரியான வழிமுறைகளைக் கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் தோனியே அதற்குக் காரணம். இந்திய அணிக்கு தோனி இதைச் செய்தார்.
தற்போது சென்னை அணிக்கும் அவர் இதையே செய்துகொண்டிருக்கிறார். தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா மாட்டாரா என்று விவாதிப்பது இப்போது தேவையில்லாதது. தனிப்பட்ட முறையில் அவர் விளையாடமாட்டார் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் தோனியை அவ்வளவு எளிதாக யாரும் கணிக்கமுடியாது” என்றார்.

The post குப்பையை புதையலாக மாற்றும் வித்தை தெரிந்தவர் தோனி: ஹைடன் புகழாரம்! first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/feed/ 0
தில்லியை வீழ்த்தி பிளேஆஃப்பில் நுழைந்த சிஎஸ்கே! https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%87%e0%ae%86%e0%ae%83/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b3%25e0%25af%2587%25e0%25ae%2586%25e0%25ae%2583 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%87%e0%ae%86%e0%ae%83/#respond Sat, 20 May 2023 19:08:08 +0000 https://madrasmurasu.com/?p=2237 77 ரன்கள் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்திய சென்னை, பிளேஆஃப் சுற்றுக்குள் இரண்டாவது அணியாக நுழைந்துள்ளது. சிஎஸ்கே கட்டாயமாக வெல்லவேண்டிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதிரடியான தொடக்கத்துக்கு அடித்தளம் போட்டார் கான்வே. அவர் இடக்கை பேட்டர் என்பதால், இரண்டாவது ஓவரிலேயே லலித் யாதவை அழைத்தார் டேவிட் வார்னர். பலனில்லை. ஐபிஎல்-ன் 1000-வது சிக்ஸரை கான்வே இந்த ஓவரில்தான் அடித்தார். பிறகு, வலதுகை பேட்டர் ருதுராஜுக்காக அக்‌ஷர் படேலைக் கொண்டு வந்தார். இந்த […]

The post தில்லியை வீழ்த்தி பிளேஆஃப்பில் நுழைந்த சிஎஸ்கே! first appeared on Madras Murasu.

]]>
77 ரன்கள் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்திய சென்னை, பிளேஆஃப் சுற்றுக்குள் இரண்டாவது அணியாக நுழைந்துள்ளது.

சிஎஸ்கே கட்டாயமாக வெல்லவேண்டிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதிரடியான தொடக்கத்துக்கு அடித்தளம் போட்டார் கான்வே. அவர் இடக்கை பேட்டர் என்பதால், இரண்டாவது ஓவரிலேயே லலித் யாதவை அழைத்தார் டேவிட் வார்னர். பலனில்லை. ஐபிஎல்-ன் 1000-வது சிக்ஸரை கான்வே இந்த ஓவரில்தான் அடித்தார்.

பிறகு, வலதுகை பேட்டர் ருதுராஜுக்காக அக்‌ஷர் படேலைக் கொண்டு வந்தார். இந்த ஓவரில் ருதுராஜும் எக்ஸ்ட்ரா கவர் பக்கம் அழகான ஒரு சிக்ஸர் அடித்தார். இருவரும் டேவிட் வார்னரின் திட்டத்துக்குக் கட்டுப்பட மாட்டார்கள் என்பது பவர்பிளேயிலேயே தெரிந்தது. 5-வது ஓவரிலேயே சென்னை 50 ரன்களை எடுத்தது.

பவர்பிளேயின் கடைசி ஓவரில் சகாரியா 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். பவர்பிளேயில் பவுண்டரி செல்லாத ஒரே ஓவர் இது. பவர்பிளேவுக்குப் பிறகு, இருவருமே சுழற்பந்துவீச்சுக்குக் கட்டுப்பட்டு நிதானம் காண்பித்தார்கள்.

அக்‌ஷர் படேல் வீசிய 10-வது ஓவரில்தான் ருதுராஜ் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் அடித்தார். நடப்பு ஐபிஎல் பருவத்தின் மூன்றாவது அரை சதத்தை எட்டினார். 10 ஓவர்களில் சென்னை 87 ரன்கள் எடுத்தது.

ஆட்டம் மீண்டும் விறுவிறுப்படைந்தது குல்தீப் யாதவ் வீசிய 12-வது ஓவரில்தான். தொடர்ச்சியாக மூன்று பந்துகளைத் தூக்கி வீசினார். இந்த மூன்று பந்துகளையுமே லாங் ஆன், லாங் ஆஃப், பந்துவீச்சாளர் தலைக்கு மேல் என மூன்று சிக்ஸர்கள் அடித்தார் ருதுராஜ். ருதுராஜ்-கான்வே கூட்டணி 100 ரன்களைத் தாண்டியது.

கான்வே 14-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். சதமடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ், சகாரியாவின் குறைவேகப்பந்தில் வீழ்ந்தார். 50 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு ருதுராஜ்-கான்வே இணை 141 ரன்கள் சேர்த்தது. இவர்களது ஆட்டம் அதிரடியாக இருந்தாலும், அபாயகரமான ஷாட்கள் எதுவும் இல்லாமல் டைமிங் மற்றும் இடைவெளிகளைப் பயன்படுத்தி மட்டுமே பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.

ஷிவம் துபே களமிறங்கினார். களத்தில் இரு இடக்கை பேட்டர்கள். 2-வது ஓவருக்குப் பிறகு மீண்டும் லலித் யாதவை அழைத்தார் வார்னர். நடப்பு ஐபிஎல் பருவத்தில் சிக்ஸர் அடிப்பதில் கில்லியாக உள்ள துபே, 3-வது பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். 5-வது பந்தை கான்வே பவுண்டரிக்கு அனுப்பினார்.

கலீல் அஹமது ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்த துபே, இதே ஓவரில் ஆட்டமிழந்தார். இந்தப் பருவத்தில் மட்டும் அவர் 33 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஷேன் வாட்சன் 35 சிக்ஸர்கள் அடித்ததே, சிஎஸ்கேவுக்காக ஒரு ஐபிஎல் பருவத்தில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள். இந்த சாதனையை துபேவால் இன்றைய ஆட்டத்தில் முறியடிக்க முடியவில்லை.

துபே ஆட்டமிழந்தவுடன் ரஹானே, ஜடேஜா, மொயீன் அலிக்கு முன்பு எம்எஸ் தோனி களமிறங்கினார். பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தின்போதுதான் கான்வேயால் சதம் அடிக்க முடியவில்லை. இந்த முறை சதத்தைத் தவறவிட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 87 ரன்களுக்கு நோர்கியா பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். அனைவரும் தோனியின் சரவெடிக்காகக் காத்திருந்தபோது, பழைய ஜடேஜாவாக மாறி சிக்ஸரும், பவுண்டரிகளுமாக அடித்தார். 19-வது ஓவரில் சென்னை 200 ரன்களைத் தாண்டியது.

ஓப்பீட்டளவில் நன்கு பந்துவீசி வந்த சகாரியா கடைசி ஓவரை வீசினார். இரு பவுண்டரிகளை அடித்தார் ஜடேஜா. பவுண்டரியே அடிக்காத தோனி கடைசிப் பந்தை எதிர்கொண்டார். நோ-பால், ஃப்ரீ ஹிட், வைட் என வாய்ப்புகள் கிடைத்தும், இவரால் பவுண்டரி அடிக்க முடியவில்லை.

சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் விளாசி மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்தது.

பேட்டிங்கில் ருதுராஜ்-கான்வே கூட்டணி அசத்தியதுபோல், பந்துவீச்சில் தீபக் சஹார் – துஷார் தேஷ்பாண்டே இணை நல்ல அடித்தளம் அமைத்துத் தந்தது.

இம்பாக்ட் வீரராகக் களமிறங்கிய பிருத்வி ஷா, தேஷ்பாண்டே வீசிய இரண்டாவது ஓவரில் முழு நீளப் பந்தைப் பயன்படுத்தி நேராக அடிக்கப் பார்த்தார். மிட்-ஆஃபிலிருந்த அம்பதி ராயுடு அட்டகாசமான கேட்ச்சைப் பிடித்தார்.

முதல் நான்கு ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னைப் பந்துவீச்சாளர்கள் இடமளிக்கவில்லை. தில்லி அணி நான்கு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தீபக் சஹார் வீசிய 5-வது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் வார்னர், சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து இன்னிங்ஸுக்கு உயிர் கொடுத்தார். ஆனால், இதே ஓவரில் சால்ட் அவுட் ஆனார். கடந்த ஆட்டத்தில் மிரட்டிய ரூசோவ் முதல் பந்திலேயே போல்டாகி டக் அவுட் ஆனார்.

பவர்பிளேயை வார்னர் சிக்ஸருடன் நிறைவு செய்ய தில்லி ஆறு ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 34 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆட்டத்தின் முடிவை அப்போதே யூகிக்க முடிந்தது.

மற்ற பேட்டர்கள் ஒத்துழைப்பு இல்லாமல், வார்னர் மட்டுமே அடித்து விளையாடியதால் ரன்கள் பெரிதளவில் உயரவில்லை. அவர் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். தில்லி 10 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது.

கீப்பிங்கில் இருந்த தோனி அறிவுரைகளாக வழங்க, யஷ் துல் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார்.

ஜடேஜாவின் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடினார்கள் வார்னரும் அக்‌ஷர் படேலும். அக்‌ஷர் சிக்ஸர் அடித்து ஓவரைத் தொடங்க, வார்னர் பவுண்டரி மற்றும் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். ஜடேஜா 4 ஓவர்களிலும் கொடுத்த 50 ரன்களில், இந்த ஓவரில் மட்டுமே கொடுக்கப்பட்டது 23 ரன்கள்!

The post தில்லியை வீழ்த்தி பிளேஆஃப்பில் நுழைந்த சிஎஸ்கே! first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%87%e0%ae%86%e0%ae%83/feed/ 0
மும்பைக்கு இனிப்பான வெற்றி-உபயம் சூர்யகுமார் https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b1%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d/#respond Tue, 09 May 2023 19:23:07 +0000 https://madrasmurasu.com/?p=1466 ஐபிஎல் 2023 போட்டியில் மும்பை, பெங்களூர் உள்பட 5 அணிகள் தலா 10 புள்ளிகளுடன் பிளேஆஃப் போட்டியில் உள்ளன. புள்ளிகள் பட்டியலில் ஏற்பட்டுள்ள இந்த நெரிசலில் இருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயத்துடன் தான் மும்பையும் பெங்களூரும் இந்த ஆட்டத்தில் களமிறங்கின. மும்பையின் வான்கடேவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். காயம் காரணமாக ஆர்ச்சர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலக, அவருக்குப் பதிலாக கிறிஸ் ஜோர்டான் மும்பை அணியில் இணைந்தார். அதேபோல, கரண் […]

The post மும்பைக்கு இனிப்பான வெற்றி-உபயம் சூர்யகுமார் first appeared on Madras Murasu.

]]>
ஐபிஎல் 2023 போட்டியில் மும்பை, பெங்களூர் உள்பட 5 அணிகள் தலா 10 புள்ளிகளுடன் பிளேஆஃப் போட்டியில் உள்ளன. புள்ளிகள் பட்டியலில் ஏற்பட்டுள்ள இந்த நெரிசலில் இருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயத்துடன் தான் மும்பையும் பெங்களூரும் இந்த ஆட்டத்தில் களமிறங்கின.

மும்பையின் வான்கடேவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். காயம் காரணமாக ஆர்ச்சர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலக, அவருக்குப் பதிலாக கிறிஸ் ஜோர்டான் மும்பை அணியில் இணைந்தார். அதேபோல, கரண் சர்மாவுக்குப் பதிலாக வைஷாக் பெங்களூர் அணிக்குத் திரும்பினார்.

பெஹ்ரன்டார்ஃப் அட்டகாசமாக முதல் ஓவரை வீசினார். நான்காவது பந்திலேயே டு ப்ளஸியின் கேட்ச்சைத் தவறவிட்டார் வதேரா. அதற்கான பலனை மும்பை அணி அனுபவித்தது. எனினும் அதே ஓவரில் ஒரு ரன்னில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கோலி.

சாவ்லா வீசிய 2-வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை டு ப்ளஸி விளாசினார். அதற்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் 3-வது ஓவரில் ராவத்தை ஆட்டமிழக்கச் செய்தார் பெஹ்ரன்டார்ஃப்.

கிரீனின் 4-வது ஓவரில் டு ப்ளஸி 2 பவுண்டரிகளை அடிக்க, பவர்பிளேயில் 56 ரன்களை எட்டியது பெங்களூர். பவர்பிளே முடிந்தாலும் அடுத்தடுத்த ஓவர்களிலும் மேக்ஸ்வெல் – டு பிளஸி இணையின் அதிரடி தொடர்ந்தது. ஜோர்டான் வீசிய 7-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை அடித்தார் மேக்ஸ்வெல். 25 பந்துகளில் மேக்ஸ்வெல் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

10 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 104 ரன்கள் எடுத்தது. டு ப்ளஸி 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். 62 பந்துகளில் 120 ரன்களைக் குவித்து மும்பை பந்துவீச்சைப் பந்தாடியது இந்தக் கூட்டணி. ஐபிஎல் 2023 போட்டியில் இருவரும் நான்கு முறை 100+ ரன்கள் கூட்டணி அமைத்துள்ளார்கள்.

33 பந்துகளில் 68 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, கார்த்திகேயா வீசிய 14-வது ஓவரில் 1 ரன்னுடன் விக்கெட்டைப் பறிகொடுத்தார் லோம்ரோர். மற்றொரு பக்கம் நிலைத்து ஆடிய டு ப்ளஸி 65 ரன்களில் கிரீன் ஓவரில் ஆட்டமிழந்தார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்குத் திரும்பிய கேதார் ஜாதவ் பவுண்டரியுடன் தனது இன்னிங்ஸை தொடங்கினார். கார்த்திகேயா வீசிய 18-வது ஓவரில் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசிய தினேஷ் கார்த்திக் 30 ரன்களில் அவுட் ஆனார்.

19-வது ஓவரில் ஹஸரங்கா 2 பவுண்டரிகளை அடித்தார். பெங்களூர் 200 ரன்களை எட்டுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி ஓவரை அட்டகாசமாக வீசிய மத்வால் 6 ரன்களை மட்டுமே கொடுத்தார். இறுதியில் 199 ரன்களைக் குவித்தது பெங்களூர்.

சிராஜ் வீசிய முதல் ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் இஷான் கிஷன். கடந்த இரண்டு ஆட்டங்களிலும் டக் அவுட்டான ரோஹித் இந்த ஆட்டத்தில் தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார்.

ஹேசில்வுட் வீசிய ஓவரில் இரண்டு பவுண்டரிகளையும், சிராஜ் வீசிய 3-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களையும் பறக்கவிட்டார் இஷான் கிஷன். 5-வது ஓவரில் இஷான் கிஷன், ரோஹித் சர்மாவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹஸரங்கா.

அதன் பின்னர் பெங்களூரின் சோதனைக்காலம் தொடங்கியது. சூர்யகுமார் யாதவ் – வதேரா இணை அமர்க்களமாக விளையாடியது. 10 ஓவர்கள் முடிவில் 99 ரன்களை எடுத்தது மும்பை.

ஹஸரங்கா வீசிய 11-வது ஓவரில் ஆளுக்கொரு சிக்ஸரை விளாசினர். அடுத்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். 10 ஓவர்களுக்குப் பிறகு பவுண்டரிகளும் சிக்ஸர்களும் தொடர்ந்து அடிக்கப்பட்டன. சூர்யகுமாரின் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் பெங்களூர் பந்துவீச்சாளர்கள் திணறினர். 26 பந்துகளில் அரை சதம் எடுத்தார் சூர்யகுமார்.

11 -16 ஓவர்களில் எடுக்கப்பட்ட ரன்கள்

15, 10, 17, 13, 20, 19 (16-வது ஓவர்).

35 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் மறக்க முடியாத ஐபிஎல் ஆட்டத்தை வழங்கி 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சூர்யகுமார் யாதவ். டிம் டேவிட் டக் அவுட் ஆனாலும் மும்பை அணி, 16.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வதேரா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறியது மும்பை. மேலும் கடந்த 4 ஆட்டங்களில் 3 முறை 200+ ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

The post மும்பைக்கு இனிப்பான வெற்றி-உபயம் சூர்யகுமார் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d/feed/ 0