acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’பீடி, சினிமா தொழிலாளர்கள் பிள்ளைகள் ’கல்வி உதவித்தொகை’ பெற விண்ணப்பிக்கலாம்..!’’ first appeared on Madras Murasu.
]]>வகுப்பு ஒன்று முதல் பத்து வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.08.2024 மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2024.
https://scholarships.gov.in என்கிற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பதிவு (OTR) மூலம் மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்பமுறையில், தங்களுடைய சேமிப்புக்கணக்கானது, தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை, தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர். இத்திட்டத்தின் கீழ், கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள், கல்லூரிகள், https://scholarships.gov.in என்ற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், முதலில் பதிவு செய்தல் வேண்டும். பின்பு, மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில், குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை, கல்வி நிறுவனங்கள், மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல், அடுத்தகட்ட சரிபார்க்கும் முறைக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு செயல்படுத்த இயலாது.
வகுப்பு ஒன்று முதல் பத்து வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.08.2024 மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2024.
மேற்கொண்டு விளக்கங்கள் மற்றும் உதவி பெறுவதற்கு அணுகவும்:-
மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு
தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம் , திரு.வி.க.தொழில் பூங்கா
கிண்டி, சென்னை – 600032. மின்னஞ்சல் – wclwo.chn-mole@gov.in தொலைபேசி எண்: 044-29530169
The post ’’பீடி, சினிமா தொழிலாளர்கள் பிள்ளைகள் ’கல்வி உதவித்தொகை’ பெற விண்ணப்பிக்கலாம்..!’’ first appeared on Madras Murasu.
]]>The post ”இது வழக்கமான கமர்ஷியல் படம் இல்லை..!” மனம் திறந்த சர்ச்சை பட நாயகி first appeared on Madras Murasu.
]]>சித்தி இத்னானி தமிழில் ஏற்கனவே வெந்து தணிந்தது காடு மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்தது குறித்து சித்தி இத்னானி அளித்த பேட்டியில், ”இந்த படத்தின் கதையை என்னிடம் சொல்லும்போது இது வழக்கமான கமர்ஷியல் படம் இல்லை என்பது புரிந்தது. படம் வெளியாகும்போது எந்த மாதிரி பிரச்சினைகள் வரும் என்ற கேள்விகளும் மனதில் இருந்தது.
இதே உணர்வில் மற்றவர்களும் இருந்தார்கள். இதையும் தாண்டி படத்தின் மையக்கரு பார்வையாளர்களை சேர்ந்தால் படத்தை எடுத்த நோக்கத்தை நிறைவேற்றும். இதனை ஆலோசித்தே படத்தில் நடிக்க சம்மதம் சொன்னேன்” என்றார்
The post ”இது வழக்கமான கமர்ஷியல் படம் இல்லை..!” மனம் திறந்த சர்ச்சை பட நாயகி first appeared on Madras Murasu.
]]>The post பிச்சைக்காரன்-2 – சினிமா விமர்சனம் first appeared on Madras Murasu.
]]>ஒளிப்பதிவு – ஓம் நாராயணன், இசை – விஜய் ஆண்டனி, ஒலிப்பதிவு – எஸ்.சந்திரசேகர், ஒலி வடிவமைப்பு – எஸ்.விஜய்ரத்தினம், கலை இயக்கம் – ஆறுசாமி, மேக்கப் ஸ்டைலிஸ்ட் – ஜி.அனுஷா மீனாட்சி, நடன இயக்கம் – அஸார், ஹரிஹிரன், கல்யாண், சண்டை இயக்கம் – ராஜசேகர், மகேஷ் மாத்யூ, எழுத்து – விஜய் ஆண்டனி, கே.பழனி, பால் ஆண்டனி, பாடல்கள் – அருண் பாரதி, வசனம் – கே.பழனி, பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.
கதையின் நாயகனாக நடித்துள்ள விஜய் ஆண்டனி இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்து இப்படத்தை இயக்கியுள்ளார் .
இந்தப் படத்தை Vijay Antony Film Corporation நிறுவனத்தின் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.
இந்தியாவின் ஏழாவது பணக்காரராக இருக்கும் குருமூர்த்தியின் ஒரே மகன் விஜய் குருமூர்த்தி என்ற விஜய் ஆண்டனி. இவரது நெருங்கிய நண்பர்கள் அரவிந்த்(தேவ் கில்), இளங்கோ(ஜான் விஜய்) மற்றும் சிவா(ஹரீஷ் பேரடி). இவர்களில் ஹரீஷ் பெரடி விஜய்யின் குடும்ப மருத்துவரும்கூட.
பல வருடங்களாக விஜய்யுடன் இணைந்து பணியாற்றி வரும் அரவிந்துக்கு, விஜய்யின் பணக்காரத்தனம் மீது வெறுப்பு உண்டாகிறது. விஜய்யின் இடத்தில் தான் இருக்க நினைக்கிறார்.
இந்த நேரத்தில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியான கிட்டி, மூளை மாற்று ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து காட்டுகிறார். இதைப் பார்த்த அரவிந்த், விஜய் குருமூர்த்தியின் உடலில் வேறொருவரின் மூளையை பொருத்தி அதன் மூலம் அவரது சொத்தை அபகரிக்க ஜான் விஜய் மற்றும் ஹரீஷ் பெரடியுடன் இணைந்து திட்டமிடுகிறார். இந்தத் திட்டத்திற்கு மருத்துவர் கிட்டியும் ஒத்துக் கொள்கிறார்.
இந்த நேரத்தில் விஜய் ஆண்டனியின் ரத்த குரூப்புக்கு ஏற்ப ஒரு ஆளை தேடுகிறார்கள். அப்படி தேடும்போது கிடைப்பவர்தான் ‘சத்யா’ என்ற இன்னொரு விஜய் ஆண்டனி. இவர் ஒரு பிச்சைக்காரர்.
ஒரு விபத்தில் பெற்றோரை இழந்து சிறு வயதிலேயே பிச்சையெடுத்து தன் தங்கையை காப்பாற்றும் விஜய் ஆண்டனி, குழந்தை கடத்தல் கும்பலிடம் சிக்கி தன் தங்கையை தொலைக்கிறார். அதே சதிகார கும்பலால் கஞ்சா விற்றதாக பிடிபட்டு சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்.
அங்கிருந்து வெளியில் வந்த சத்யா, தன் தங்கையை கடத்தியவனை கொலை செய்துவிட்டு ஜெயிலில் 10 ஆண்டு தண்டனையடைந்து இப்போதுதான் வெளியில் வந்திருக்கிறார். வந்த வேகத்தில் தன் தங்கையை தேடி அலைகிறார்.
இந்த நேரத்தில்தான் மூளை டொனேஷனுக்காக காத்துக் கொண்டிருந்த அரவிந்த் கும்பலிடம் சத்யா சிக்கிக் கொள்ள, சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்தப்படுகிறார் சத்யா. அங்கே சத்யாவின் மூளை, விஜய் குருமூர்த்திக்கு மாற்றப்படுகிறது. சத்யா கொலை செய்யப்பட்டு துபாய் பாலைவனத்தில் எறியப்படுகிறார்.
இப்போது சத்யாவின் பிச்சைக்காரனுக்குரிய மூளையுடன் விழித்தெழும் விஜய் குருமூர்த்திக்கு, எல்லாமே புதிதாக இருக்கிறது. மூளை மாற்றப்பட்டு வேறொருவரின் உடம்பில் தான் இருப்பதை உணரும் சத்யா, போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் செய்கிறார்.
ஆனால் தங்களது செல்வாக்கால் அதை முறியடிக்கிறது அரவிந்த் அண்ட் கோ. இதனால் வெகுண்டெழும் சத்யா, அந்த மூவரையும் கொலை செய்து கடலில் தள்ளிவிட்டு விஜய் குருமூர்த்தியாக அவதரிக்கிறார்.
இப்போது அதே பணத்தை வைத்து ஏழை, எளிய மக்களுக்கு உதவ நினைக்கும் சத்யா, ‘ஆண்டி பிகிலி’ என்ற பெயரில் ஏழ்மையில் கஷ்டப்படும் மக்களுக்காக மிகக் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் வர்த்தகத்தை தொடங்குகிறார்.
இந்நேரத்தில் பயணிகள் விமானம் ஒன்று விபத்தினால் நடுக்கடலில் மூழ்குகிறது. கடற்படையினரின் தேடுதல் வேட்டையில் சத்யாவால் கொலை செய்யப்பட்ட அரவிந்த், ஜான் விஜய், டாக்டர் ஹரிஷ் பேராடி ஆகியோரின் கிடைக்கின்றன.
இவர்களின் கொலைகளின் பின்னணியில் சத்யா இருக்கும் தகவலையும், விஜய் குருமூர்த்தியின் பெயரில் இருப்பது பிச்சைக்காரன் சத்யாதான் என்பதையும் அறியும் மாநிலத்தின் முதலமைச்சரான ராதாரவி, இதை வைத்தே சத்யாவை கார்னர் செய்து விஜய் குருமூர்த்தியின் மொத்த சொத்தையும் அபகரிக்கத் திட்டமிடுகிறார்.
இதற்குப் பின் என்ன நடக்கிறது..? விஜய் ஆண்டனியின் நிலைமை என்ன ஆனது..? அவரது தங்கை கிடைத்தாரா..? இல்லையா..? அவரது ‘ஆண்டி பிக்கிலி’ திட்டம் என்னவானது..? என்பதுதான் இந்தப் ‘பிச்சைக்காரன்-2’ படத்தின் மீதமான திரைக்கதை.
தனது முதல் படத்தில் இருந்து கடைசி படம் வரையிலுமான நடிப்பையே இந்தப் படத்திலும் காண்பித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. கூடுதலாக இந்தப் படத்தில்தான் எமோஷனல் காட்சிகளில் கதறி, அழது, அரற்றி நடிப்பைக் கொணர்ந்திருக்கிறார்.
தொழிலதிபர் கெட்டப்பில் கெத்தாக வலம் வரும் அதேவேளையில் பிச்சைக்காரன் தோற்றத்திலும், வசன உச்சரிப்பலும், நடிப்பிலும் விஜய் குருமூர்த்தியைத் தாண்டிவிட்டார் ‘பிச்சைக்காரன்’ சத்யா.
ஒரேயொரு டூயட் பாடல் காட்சியில்கூட ரொமான்ஸை எண்ணி, எண்ணி கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அடுத்து வரும் படங்களில் அள்ளிக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். ‘ஆண்டி பிக்கிலி’ அறிமுக விழாவில் பேசும் பேச்சிலும், சத்யாவாக தான் வாழும் நிலைமையை எண்ணி குமுறும் காட்சிகளிலும் அவர் அளவுக்கு ஒரு நிஜமான இந்தியனின் மனத்துடிப்பைக் காண்பித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
நாயகியான காவ்யா தாப்பர் டூயட் பாடல் காட்சியில் மொத்தப் படத்திற்கும் தேவையான கவர்ச்சியைக் காட்டியிருக்கிறார். குறைந்த காட்சிகளே வந்திருப்பதால் இவரது நடிப்பு பற்றி அடுத்த படத்தில் விவாதிப்போம்.
தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி மூவரின் வில்லத்தனமும் ரசிக்க வைத்திருக்கிறது, யோகிபாபுவின் டைமிங்கான கவுண்ட்டர் வசனம் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. மன்சூர் அலிகானின் நடிப்பு சுவையானது. அந்தக் கேரக்டருக்கே வலு சேர்த்திருக்கிறது.
தொழில் நுட்பத்தில் ஒளிப்பதிவு சிறப்பு. பாடல் காட்சிகளை படமாக்கியவிதம் அழகு. இசை அதைவிட சிறப்பு. இரண்டு பாடல்களுமே ரசிக்க வைக்கின்றன. பாடல் வரிகள் முழுமையாகக் கேட்கும் அளவுக்கு வாயசைத்து நடித்திருக்கிறார்கள் நாயகனும், நாயகியும்..!
அந்த அயிட்டம் சாங்கில் ஆடியிருக்கும் நங்கை யார் என்று தெரியவில்லை. துபாய் நேட்டிவிட்டியுடன் அராபிய குதிரைபோல் வாட்ட சாட்டமான உடம்புடன் அவர் ஆடியிகுக்கும் ஆட்டம், இந்தாண்டுக்கான ஸ்பெஷல் டான்ஸ் பட்டியலில் நிச்சயமாக இடம் பெறும்.
ஆனால் கிராபிக்ஸ் காட்சிகள் என்று தெரியும் அளவுக்கு சில காட்சிகளை படமாக்கியிருப்பது ஏன் என்று தெரியவில்லை. துபாய் காட்சிகள் கிரீன் மேட் என்று தெளிவாகத் தெரியும் அளவுக்கா படம் பிடிப்பார்கள்…? அதேபோல் விஜய் ஆண்டனியின் வீடுகூட கிராபிக்ஸ் என்பதும் தெரிகிறது. கதை, திரைக்கதை, வசனத்தில் இருந்த ஆளுமை, இந்தத் தொழில் நுட்பத்தில் இல்லாமல் போனது ஏன்..?
‘அம்மா’ பாசத்தில் திளைத்து பெரும் வெற்றியைப் பெற்ற ‘பிச்சைக்காரன்’ முதல் படத்தைப் போலவே, இதிலும் அண்ணன்-தங்கை பாசத்தைக் காட்டுகிறார் இயக்குநர். ஆனால் பாதியளவே என்பதுதான் பிரச்சினை..!
‘மூளை மாற்று சிகிச்சை’ என்ற புதுமையான ஐடியாவும், அண்ணன் – தங்கை பாசத்தை காட்டியவிதமும் திரையில் அழகாக இருந்தது. பிச்சைக்காரனான சத்யா, விஜய் குருமூர்த்தியாக வெகுண்டெழும் காட்சியெல்லாம் சிறப்பு. இப்படி முதல் பாதியில் நம்மை நெர்வஸாக்கி அமர வைத்திருந்தார் இயக்குநர்.
வர்க்கப் போராட்டம், ஏழை, பணக்காரன் பிளவு, பிச்சைக்காரர்களே இல்லாத தேசத்தை உருவாக்குவோம். ஏழைகளுக்காக பாடுபடுவோம்.. பணக்காரர்களிடம் இருக்கும் அளவுக்கு மிஞ்சிய பணமெல்லாம் மக்களிடமிருந்து திருடியதுதான் என்று தேச பக்தியை ஊட்ட வேண்டும் என்ற வசனங்களை பொது நல நோக்குடன் பேசியிருக்கும் ‘சத்யா’ என்ற பிச்சைக்காரனின் இந்த எண்ணம் ஏற்புடையதுதான்..!
ஆனால், படத்தின் அடிநாதம் விஜய் குருமூர்த்தியின் சொத்துக்களை அரவிந்த் அண்ட் கோ-விடமிருந்து காப்பாற்றுவதும், திடீர் பணக்காரன் என்ற கோதாவில் காணாமல் போன தனது தங்கையை சத்யா கண்டுபிடிப்பதும்தான். இந்தக் கோணத்திலேயே படத்தைக் கொண்டு போயிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
பிச்சைக்காரன்-2 – தங்கை பாசத்தையும் மிஞ்சிய தேச பக்தன்..!
The post பிச்சைக்காரன்-2 – சினிமா விமர்சனம் first appeared on Madras Murasu.
]]>The post விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முதல் பாடல் வெளியானது! first appeared on Madras Murasu.
]]>மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிதி பங்களிப்புடன் இயக்குநர் சிவா நிர்வாணா, இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
ஜி.முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹேப் இசையமைத்திருக்கிறார்.
இப்போது இந்த ‘குஷி’ திரைப்படத்திலிருந்து ‘என் ரோஜா நீயா..’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.
இந்த ‘என் ரோஜா நீயா..’ என்னும் பாடலின் மெட்டிற்கும், பாடல் வரிகளுக்கும் விஜய் மற்றும் சமந்தா இருவரும் திரையில் தோன்றி தங்களது காதல் உணர்வை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதிய இந்தப் பாடல் வரிகளில் கதையின் நாயகனான விஜய், காதல் மீது கொண்ட பேரார்வத்தின் காரணமாக காதலை விவரிக்கிறார்.

காஷ்மீரின் பசுமையான நிலவியல் பின்னணியுடன் தொடங்கும் இந்த பாடலுக்கான காணொளியில், நடிகர் விஜய் பொருத்தமான காதலராகவும், சமந்தா அவருக்கு ஏற்ற அழகிய காதலியாகவும் நடித்துள்ளனர்.
ஹேஷாமின் இசையமைப்பும், அவரது சொந்தக் குரலும் பாடலின் ஜீவனுடன் ஒன்றிணைந்திருக்கின்றன. அவர் இனிமையான மற்றும் புதுமையான பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடல் தரமான இசையை விரும்புபவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளான இன்று அவரது நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாக இருக்கும் ‘குஷி’ படத்திலிருந்து முதல் பாடல் வெளியிடப்பட்டிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
இந்த ‘குஷி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதியன்று வெளியாகிறது.
The post விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முதல் பாடல் வெளியானது! first appeared on Madras Murasu.
]]>