acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’துப்பு இல்லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>இலங்கையில் மலையகத்தில் தமிழர் குடியேறி -– அந்த மண்ணை வாழ்வித்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில் மலையகத் தமிழ் மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதயத்தின் அடியாழத்தில் இருந்து அன்புடனும் அக்கறையுடனும் தெரிவித்த வாழ்த்துகள் ஆகும் இவை.
*மனிதன் வாழ்ந்திராத மலைக்காடுகளை மலையகத் தோட்டங்களாக மாற்றியவர்கள் மலையகத் தமிழர்கள் ஆவார்கள்.
மலையகத் தமிழ்த் தொழிலாளர்களின் வரலாறு இலங்கையில் காப்பி பயிர் செய்யப்பட்ட ஆரம்பகட்டத்தில் இருந்து தொடங்குகிறது.
*இது இலங்கைப் பொருளாதாரத்தில் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது. பின்னர், ரப்பர், தென்னை என அனைத்துப் பணப் பயிர்களது உற்பத்தியும் மலையகத் தமிழர்களது உழைப்பால் உருவானதுதான்.
*பயிரிடப்படாத நிலத்தை பயிரிட்டும் -– காடுகளாக இருந்த நிலத்தை காசுப் பயிர்களாக விளைவித்தும் பின் தங்கிய பொருளாதாரத்தை முன்னணி பொருளாதாரமாக ஆக்கியவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவார்கள்.
*இலங்கை நாட்டுக்காக தங்களது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை நாடு உயர உழைத்தவர்கள். தங்களது ரத்தத்தையும் வியர்வையையும் காலத்தையும் கடமையையும் அந்த நாட்டுக்காகவே ஒப்படைத்தவர்கள்.
– – என்று அந்த மக்களின் மகத்தான உழைப்பைப் பாராட்டி இருந்தார் முதலமைச்சர் அவர்கள்.
“இத்தகைய மலையக மக்களின் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கல்வி, சுகாதாரம், வாழிட உரிமைகள், பொருளாதார உதவிகள், சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.”என்பதையும் வலியுறுத்தி இருந்தார் முதலமைச்சர் அவர்கள். ஏனென்றால் அம்மக்களின் நிலைமை என்பது பெரிதாக மாறிவிடவில்லை. இலங்கையை உயர்த்திய, மேம்படுத்திய அவர்களது வாழ்க்கை மேலும் முன்னேற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக முதல்வர் அவர்கள் வலியுறுத்தி இருந்தார்.
முதலமைச்சர் அவர்களின் உரை, இலங்கையில் நடைபெறும் விழாவுக்காக தயாரிக்கப்பட்டது ஆகும். இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்களது 200 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.“நாம் 200 – – ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பர்யத்தின் முழக்கம்”என்பது இந்த நிகழ்ச்சியின் பெயர். இந்த நிகழ்ச்சியை இலங்கை மலையகத் தமிழர்களுக்காக இலங்கையின் உள்நாட்டு தோட்டத் தொழில் துறை மற்றும் அரசு தொழில் துறை அமைச்சகம் முன்னெடுத்தது. அந்த விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டதால் தயாரிக்கப்பட்ட உரை இது. ஆனால் அந்த உரை, விழாவில் ஒளிபரப்பப்படவில்லை.
இது குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,‘தமிழ்நாடு முதலமைச்சரின் உரையை ஒளிபரப்பக் கூடாது என்று இந்திய பா.ஜ.க. அரசு தடை போட்டுவிட்டது’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விட ஜனநாயக மறுப்பு, தமிழர் விரோதச் செய்கை இருக்க முடியாது.
முதலமைச்சர் உரையைத் தடை செய்வதன் மூலமாக, மலையகத் தமிழர்கள் மீதான தி.மு.க.வின் பற்றுதலை மறைக்கும் சதிச் செயலை ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துள்ளது.
இதே நிகழ்வில் இன்னொரு சதியையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துள்ளதை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.
“அந்த விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் முறையான அழைப்பு தமிழ்நாடு அரசிற்கு அனுப்பப் பட்டது. முதலமைச்சர் அவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலாத நிலையில், என்னை அந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் பணித்திருந்தார்கள். இலங்கை பயணம் மேற்கொள்வதற்காக ஒன்றிய அரசின் வெளிவிவகாரத் துறையிலிருந்து உரிய அனுமதியினை பெறு வதற்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி உரிய வழிமுறைப்படி விண்ணப்பம் நம்முடைய பொதுத்துறையால் அனுப்பப்பட்டுவிட்டது. political clearance என்று சொல்லக்கூடிய வெளிவிவகாரத்தின் அனுமதி கிடைப்பதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்,
அக்டோபர் 28 ஆம் தேதி அன்று பொதுத் துறையின் வாயிலாக ஒன்றிய அரசிற்கு அனுப்பப்பட்டது. விழா நவம்பர் 2-ஆம் தேதி மதியம். ஆனால் 1-ஆம் தேதி இரவு எட்டரை மணி வரை வரவில்லை. ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி இதுவரை வராத காரணத்தால் நான் பயணத்தை மேற்கொள்ள இயலாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி, என்னுடைய பயண ஏற்பாடுகளை நான் இரத்து செய்துவிட்டு வீடு திரும்பினேன். அதற்குப்பிறகு ஒன்பதரை மணிக்கு மேல் அனுமதி வந்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக நான் பயண ஏற்பாடுகளை எல்லாம் இரத்து செய்துவிட்ட காரணத்தினால், இரவு 8.30 மணிக்கு மேல் அத்தகைய அனுமதி கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கருதி, முறைப்படி விழா ஏற்பாட்டாளர்களிடம் இதனை தெரிவித்துவிட்டு பயண ஏற்பாடுகளை எல்லாம் இரத்து செய்துவிட்டோம்.”என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
வெளிநாட்டில் நடைபெறும் விழாவுக்கு அனுமதி தருவதில் ஒன்றிய அரசு எப்படி நடந்து கொண்டுள்ளது என்பதன் மூலமாக – எதனால் இப்படி நடந்து கொண்டது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
குடியுரிமைச் சட்டத்தின் மூலமாக இலங்கைத் தமிழர்களை குடியுரிமை அற்றவர்களாக ஆக்கிய பா.ஜ.க., இப்போது மலையகத் தமிழர்கள் விழாவில் எத்தகைய சதிச்செயல்களில் ஈடுபடுகிறது என்பது புரிகிறது. இந்த நிலையில் மலையகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள பா.ஜ.க. அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை சென்றிருக்கிறார்.
இன்னமும் இந்திய மீனவர்கள், படும் துன்ப துயரங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்கத் துப்பு இல்லாத பா.ஜ.க. இலங்கைக்குப் போய் மலையக மக்களை ஏமாற்றலாம் என்று நினைப்பது காலக் கொடுமையே ஆகும்.
The post ’’துப்பு இல்லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>The post ’’அண்ணாமலை பற்றி டி.ஜெயக்குமார் சொன்னது என்ன..?’’ அதிரடி சரவெடி பேட்டி முழு விபரம் first appeared on Madras Murasu.
]]>இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவை விமர்சனம் செய்த அண்ணாமலையை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள். கழக பொதுசெயலாளர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை பத்திரிக்கையில் கழகப் பொதுச்செயலாளர் வாசித்தார். கடுமையான அளவுக்கு அம்மாவை விமர்சனம் செய்து எங்களுடைய கண்டனத்தை தெரிவித்த பிறகு ஏதே அண்ணாமலை திருந்திவிட்டார் என்ற வகையில் பார்க்கும்போது தொடர்ந்து தன்னை முன்னிலைப்படுத்திவருகிறார். பிஜேபி என்பதைவிட அண்ணாமலை என்கின்ற பிம்பம் தமிழகத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதற்காக செயல்படுகிறார். அம்மாவை விமர்சனம் செய்தபிறகு எங்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டு அதன்பிறகு ஒரு அந்தர் பல்டி அடித்தார்.
நான் அம்மாவை பெரிதும் மதிக்கின்றேன். நான் அம்மாவை அதுபோல சொல்லவில்லை என்ற தகவலை சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு அதன்பிறகு அண்ணா குறித்து பேசுகிறார். அண்ணாவின் வரலாறு என்ன? அண்ணா உலகம் முழுவதும் போற்றக்கூடிய மிகப்பெரிய அறிஞர். எந்த கேள்வி எப்போது கேட்டாலும், எந்த மொழியில் கேட்டாலும் பதில் சொல்லக்கூடியவர், பன்மொழி தன்மை வாய்ந்தவர். முதலமைச்சராக வந்து தாழ்ந்த நிலையில் இருந்த தமிழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டுசென்றவர். நாங்கள் தெய்வமாக வணங்கக்கூடியவர். எங்கள் கழகமே அண்ணாவின் பெயரை தாங்கி இருக்கும் நிலையில், அண்ணாவைப்பற்றி சிறுமைப்படுத்தும் வகையிலே அவர் கூறிய அந்த கருத்துக்கு, கடுமையான அளவுக்கு கண்டனத்தை தெரிவித்த நிலையில் அதற்கும் திருந்தாமல், திரும்பவும் தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதற்காக நேற்றைய தினம் பேட்டியில் பெரியார் குறித்தும், மற்ற விஷயங்கள் குறித்தும் கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற செயலை தன்மானம் உள்ள கழக தொண்டன் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
சிட்டு குருவிக்கு பட்டை கட்டினால் அது திமிரு பிடித்து ஆடும். வீட்டில் உள்ள பண்ட பாத்திரங்களில் வந்து டொக், டொக் என்று கொத்தும். அது சிட்டு குருவிக்கே உள்ள புத்தி அது. அதுபோல தகுதிக்கு மீறிய பதவி. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து எதற்கு விருப்ப ஓய்வு பெற்றார் என்று எனக்கு தெரியாது. அது குறித்து கிளறினால்தான் இவரைப்பற்றி தெரியும். அரசியல் தலைவருக்கே லாயக்கு இல்லாத, ஒரு பாஜக தலைவருக்கு லாயக்கு இல்லாத, ஒரு சிறுமை புத்தி கொண்ட, தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார். கழகம் என்பது ஒரு சிங்க கூட்டம். அந்த சிங்க கூட்டத்தை பார்த்து சிறுநரி அண்ணாமலை ஊளையிடுகிறது.
ஊளையிடுகின்ற சிறுநரி தனியாக சென்று நிற்கட்டும். நோட்டாகவுக்கு கீழே அண்ணாலை ஒட்டு வாங்குவரே தவிர நோட்டாவை தாண்ட மாட்டார். அப்படிதான் உள்ளது உங்களின் செல்வாக்கு.நீங்கள் பெரியார் குறித்து பேசுகிறீர்கள்.பெரியார் குறித்து பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. கழகப் பொதுசெயலாளர் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. அம்மா குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. புரட்சித்தலைவர் குறித்து பேச என்ன தகுதி உள்ளது. தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அண்ணாலை வாழ்க என்று சொல்லவேண்டுமாம். தோழமை கட்சியை, கூட்டணி கட்சியை அதனை விமர்ச்சனம் செய்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்று சொன்னால் நிச்சயமாக கழக தொண்டன் ஏற்றுக்கொள்ள மாட்டான். பல முறை எச்சரிக்கை அளித்தோம். பேச்சை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் என்று எச்சரித்தோம்.
இனிமேல் எங்கள் கழக தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். தாறுமாறாக விமர்சனம் செய்வார்கள். நீங்கள் ஒரு கருத்தை தெரிவித்தால் ஓராயிரம் கருத்து அண்ணாமலை குறித்து, அவரின் சிறுமைபுத்தி குறித்து, எதிர்க்கருத்து உங்களுக்கு பதிலடியாக வரும். இது குறித்து மேலிடத்திலும் சொன்னோம். நாங்கள் உங்கள் கூட்டணியில் இருக்கிறோம் இவரை திருத்துங்கள் என்று தெரிவித்தோம். கூட்டணி கட்சியில் இருந்துகொண்டு இப்படி பேசினால் கட்சியினர் எப்படி தேர்தல் வேலை செய்வார்கள். கழகத்தின் கூட்டணியை பாஜக தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருந்துகொண்டு இதுபோன்ற விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? உங்களை சுமக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது.
யார் மீதாவது சுமந்துதான் நீங்கள் போகவேண்டும். உங்களுக்கு கால்களே கிடையாது. பாஜக இங்கே கால் ஊன்ற முடியாது. அப்படிப்பட்ட நிலைமை உள்ளது. உங்கள் வாக்கு வங்கி எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியும். எங்களை வைத்துதான் உங்களுக்கு அடையாளமே. தன்மானம் உள்ள தொண்டன் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இது குறித்து நாங்கள் டெல்லி மேலிடத்திலும் சொல்லிவிட்டோம். கண்டித்து வையுங்கள் என்று சொன்னால், திரும்ப திரும்ப இப்படி பேசினால் இனியும் பொருத்து கொள்வதாக இல்லை. கழக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்ய முடியும். இதுதான் எங்களுடைய நிலைபாடு. இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால் கடுமையான விமர்ச்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும். துப்பாக்கி, துப்பாக்கி என்கிறார். அவரின் புகழை பாடுவதைதான் வேலையாக வைத்துவருகிறார். அவர் சார்ந்த கட்சியை வளர்ப்பது அவர் வேலையாக இல்லை.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.
கேள்வி: இது உங்களின் தனிப்பட்ட கருத்தா, கட்சியின் கருத்தா?
பதில்: என்றைக்கு தனிப்பட்ட கருத்தாக நான் பேசியது கிடையாது. கட்சி என்ன முடிவு எடுக்கின்றதே அது குறித்துதான் பேசுவேன். கட்சியின் முடிவு என்பது இப்போதைக்கு கூட்டணி கிடையாது. பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலே கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பிறகும் அண்ணாவை விமர்சனம் செய்வது, பெரியாரை விமர்சனம் செய்வது, கழக பொதுச்செயலாளரை விமர்சனம் செய்கிறார் என்றால் எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்.
அண்ணாலை விமர்சனம் செய்வதை நாங்கள் டெல்லி தலைமையிடம் சொல்லியிருக்கின்றோம். மாநில தலைவர்களாக எவ்வளவே தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அப்போது இதுபோன்ற பிரச்சனை இருந்ததா? ஆதி காலத்தில் நடைபெற்றதை இப்போது தேவையற்ற முறையில் பேசி வருகிறார். இவர் என்ன தொல்லியல் துறையை சேந்தவரா? தொல்லியல் துறையில் இருக்கவேண்டியவர். தகுதி இல்லாத ஒரு தலைவர். நான்கு பேர் சேர்ந்து தலைவர் என்று கத்திவிட்டால் தலை கனம் ஏறிவிடுகிறது. அந்த தலை கனம்தான் இதுபோன்ற முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.
கேள்வி: தேசிய தலைவர்கள் ஆதரவோடுதான் அவர் இப்படி பேசுகிறார் என்று நினைக்கின்றீர்களா?
பதில்: எங்களுக்கு இதனை ஆராய்ச்சி செய்யவேண்டிய வேலை இல்லை. எங்களின் முன்னோடிகளை விமர்சனம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். விமர்சனத்திற்கு தக்க பதிலடியை எங்கள் கட்சியினர் கண்டிப்பாக கொடுப்பார்கள். மேலே சொல்லியும் இவர் அடங்கவில்லை என்றால் மேலே சொல்லிதான் நடக்கிறது என்றுதானே அர்த்தம். இதுபோன்ற நிலையில் எங்களுக்கு இழப்பு இல்லை. உங்களுக்குதான் இழப்பு. பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ். அனைவரையும் அரவணைத்து போகவேண்டும் என்பதால் டெல்லியில் தலைவர்களை சந்தித்துவிட்டு வந்தோம். எதற்கும் ஒரு எல்லை உள்ளது இல்லையா. எப்படி தொண்டர்கள் வேலை செய்வார்கள். 2024 ல் எப்படி தேர்தல் வேலை செய்ய முடியும். அவர்களால் ஒன்றும் கிழிக்க முடியாது.
அண்ணாலையின் பேச்சை அவர்களின் கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் இன்றைக்கு சந்தோஷப்படுவார்கள். ஏன் என்றால் மூத்த தலைவர்கள் அனைவரையும் ஓரம் கட்டிவிட்டு ஒன் மேன் ஷோ வா இருந்தார். தற்போது தனி மரமாக நிற்பார். எந்த பூச்சாண்டிக்கு கழகம் பயப்படாது. கோப்பு, பைல் என்று நாங்கள் எத்தனையோ பார்த்துவிட்டோம். நீங்கள் கோப்பு என்ன என்று தெரியாத ஆள். அவர் தனியாக நின்று ஓட்டு வாங்க முடியுமா? நோட்டாவைதான் அவர் வெற்றி பெற முடியும்.அண்ணாமலையின் விமர்சனங்களை எங்கள் கட்சி தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தோழமையில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மதிக்காத ஒரு நிலையில் கூட்டணியில் நீடிக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஏற்கனவே இதுபோன்று பேசிகொண்டிருந்தால் கூட்டணி குறித்து மறுபரீசிலனை செய்யவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டோம். இப்போது பரிசீலனை செய்து அறிவித்துவிட்டோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
The post ’’அண்ணாமலை பற்றி டி.ஜெயக்குமார் சொன்னது என்ன..?’’ அதிரடி சரவெடி பேட்டி முழு விபரம் first appeared on Madras Murasu.
]]>The post ’’இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை..!’’ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை first appeared on Madras Murasu.
]]>அந்த அறிக்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
டிசம்பர் 17-ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களைத் தயார்படுத்தும் வகையில் வருவாய் மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது, கழக மூத்த முன்னோடிகளுக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் பொற்கிழி வழங்குவது, மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அரசின் நலத்திட்டப் பணிகள் குறித்து, ஆய்வுக் கூட்டத்தை நடத்துவது… இந்த மூன்று விஷயங்களை மையமாகக் கொண்டே என் சமீபகால மாவட்டச் சுற்றுப்பயணங்களை அமைத்துக்கொள்கிறேன்.
அந்த வகையில், இந்த மாதம் 4-ஆம் தேதி மதியத்துக்கு மேல் தூத்துக்குடி, 5-ஆம் தேதி தென்காசி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்ல முடிவு செய்தோம். 4-ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கடந்த ஆண்டு சாதனை படைத்த வீரர்-வீராங்கனையர்கள் 134 பேருக்கு உயரிய ஊக்கத்தொகையாக 2 கோடியே 24 லட்சம் ரூபாயை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.
அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வீரர்-வீராங்கனையர் 52 பேருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினோம். ‘தேசிய அளவில் சாதனை படைக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உயரிய ஊக்கத் தொகைகளை வழங்க வேண்டும்’ என்பது, அவர்களின் 20 ஆண்டுகாலக் கோரிக்கை. அதன் தீர்வாக, ‘சீனியர்-ஜூனியர் பிரிவுகளில் தேசிய அளவில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெறுபவர்களுக்கு முறையே தலா 5, 3, 2 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்படும்’ என்று வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு, சென்னையில் இருந்து தூத்துக்குடி பயணமானோம். தூத்துக்குடி விமான நிலையத்தில் கழகத்தினரின் வரவேற்பை பெற்றுக்கொண்டு வெளியே வரும்போது சகோதரர் ஜஸ்டின் என்னை சந்தித்து இளைஞர் அணி மாநாட்டு நிதியாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். ஜஸ்டினைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது அவசியம். ஜஸ்டின் ஒரு மாற்றுத்திறனாளி. தன்னுடைய வாழ்க்கையைத் தானே மாற்றும் வல்லமை படைத்த ஒரு திறனாளி. அவருக்குத் தேவை ஓர் உந்துதல். அதற்காக என்னைக் காண இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். அவருக்கு தூத்துக்குடி மாநகரில் பழச்சாறு விற்கும் கடையை இளைஞர் அணியின் சார்பில் அமைத்துத் தந்தோம். இன்று அவர் பிறருக்கு உதவி செய்யும் இடத்துக்கு வந்ததில் மகிழ்ந்தேன்.
விமான நிலையம் அருகிலேயே புதுக்கோட்டை நல்லமலைப் பகுதியில் அமைந்துள்ள கழக இளைஞர் அணியின் துணைச் செயலாளர் ஜோயல் அவர்களின் இல்லத்தில் கழகக் கொடியை ஏற்றிவைத்தோம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சூழ்ந்து நின்று வரவேற்றனர். அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றோம். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினோம். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் ஆய்வுக் கூட்டம்.
ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் மக்கள் நலப் பணிகள், அதன் தற்போதைய நிலை… எனத் தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு துறையாகப் பார்த்து அதற்கான விளக்கங்களை அதிகாரிகளிடம் பெறுவது, என மிக விரிவாக மூன்று மணி நேரம் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் செயல்படும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீட்டும் மக்கள் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேரவேண்டும் என்றால், இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் அவசியம்.
அதை முடித்துக்கொண்டு, `மாணிக்கம் மஹால்’ திருமண மண்டபத்தில் நடைபெற்ற கழக மூத்த முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோம். இந்தப் பொற்கிழி நிகழ்ச்சி என் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. நம் கழக முன்னோடிகள் என்னைப் பார்த்ததும் கைகளைப் பிடித்துக்கொண்டு தங்களின் கழகப் பணிகள் அத்தனையையும் என்னிடம் சொல்லிவிடவேண்டும் என்ற தவிப்பு, அவர்களிடம் தெரியும். அப்படி அன்று தூத்துக்குடி வடக்கு-தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில், மொத்தம் 1,000 கழக முன்னோடிகளுக்குத் தலா ரூ.10 ஆயிரம் வழங்கி வாழ்த்து பெற்றோம்.
“இந்தக் கழகத்தின் அச்சாணியே நீங்கள்தான். பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியர் ஆகியோரின் மறு உருவாகத்தான் உங்களைப் பார்க்கிறேன். உங்களுக்குப் பொற்கிழி வழங்குவது என்பது எங்கள் கடமை” என்று அவர்களின் மீதான என் அன்பை உரையாகப் பேசி முடித்தேன்.
அடுத்து தூத்துக்குடியில் புதுக்கோட்டைப் பகுதியில் நடைபெற்ற இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம். பிரம்மாண்டமான ஏற்பாடு. கூட்டம் நடந்த இடத்தின் வாசலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வரவேற்றனர். “கடந்த மாதம் 20-ஆம் தேதி மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அக்கட்சியின் கொள்கை குறித்தோ, தமிழ்நாட்டின் நலன் குறித்தோ ஏதாவது பேசப்பட்டதா? விவாதிக்கப்பட்டதா? ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கான உதாரணம்தான் அந்த மாநாடு. ஆனால், நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு இயக்கத்தின் இளைஞர் அணி நடத்தக்கூடிய நம் மாநாடு, ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும், எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்க வேண்டும். அதற்கு உங்களின் வருகையை உறுதி செய்வது அவசியம்” என்று உரையாற்றி அவர்களை மாநாட்டுக்கு அழைத்தேன்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்ததுடன் மாநாட்டுக்கு நிதியும் வழங்கிய மாண்புமிகு அமைச்சர்கள் அக்கா கீதாஜீவன், அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் துணைச் செயலாளர்கள் ஜோயல், இன்பா ரகு-வுக்கும், நிதியளித்த மாவட்ட இளைஞர் அணியினருக்கும் என் அன்பும் வாழ்த்தும்.
மறுநாள், தென்காசி மாவட்ட நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்துச் செல்ல மாண்புமிகு அமைச்சர்கள் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களும் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களும் தூத்துக்குடி வந்திருந்தனர். இரவு 10.30 மணி ஆனபோதும் ஆலங்குளத்தில் ஆயிரக்கணக்கானோருடன் காத்திருந்து, என்னை வரவேற்ற தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அண்ணன் ஜெயபாலன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்த நாள் 5-ம் தேதி காலை தென்காசி மாவட்டத் தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம். நோயாளிகளைக் கனிவுடன் நடத்தி, அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதையும், மருத்துவமனையைச் சுகாதாரமாகப் பராமரிப்பதையும் உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தினோம்.
அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினோம். அதன்பிறகு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். கூட்டத்தின் நிறைவாக, “மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்தத் திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பலன்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களுக்குச் சென்று சேரும் வகையில் உழைத்து, இந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து, அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தரவேண்டும்” என்று அரசு அலுவலர்களைக் கேட்டுக்கொண்டேன்.
அதைத்தொடர்ந்து, சிவந்தி நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தென்காசி தெற்கு மாவட்டக் கழகத்துக்கான அலுவலக வாசலில் அமைக்கப்பட்டுள்ள கழகக் கொடியை ஏற்றிவைத்து மகிழ்ந்தேன். மதிய உணவுக்குப் பிறகு, தென்காசி, `இசக்கி மஹால்’வளாகத்தில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி. தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழகங்களில் உள்ள முன்னோடிகளில் ஆயிரத்து 500 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழியாக வழங்கி மகிழ்ந்தோம். இதுவரை தமிழ்நாடு முழுவதும் கழக முன்னோடிகளுக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் 40 கோடி ரூபாய்க்கும் மேல் பொற்கிழியாக வழங்கப்பட்டுள்ளதைத் தெரிவித்து, இளைஞர் அணி அறக்கட்டளை சார்பிலும் உதவக் காத்திருக்கிறோம். கோரிக்கைகளை அன்பகத்துக்கு அனுப்பலாம் என்பதையும் சொல்லி விடைபெற்றோம்.
அடுத்து இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம். திரும்பிய திசையெங்கும் எழுச்சி என்று சொல்லும் அளவுக்குக் கட்டுக்கடங்காத இளைஞர்கள் கூட்டம். “9 ஆண்டுகளாக நாங்கள் இதெல்லாம் சாதனைகளைச் செய்துள்ளோம் என்று சொல்வதற்குக்கூட எதுவும் செய்யாத ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு, சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் பேசியதைத் திரித்து அரசியல் செய்கிறது. 28 எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்குப் பயந்து நாட்டின் பெயரையே ‘பாரத்’ என்று மாற்றி, தான் செய்த ஊழலையும், மணிப்பூரில் செய்த இனக்கலவரத்தையும் மறைக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க.வையும், மோடியையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓடஓட விரட்ட வேண்டும். அதற்கான முதல் படியாக நம் இளைஞர் அணி மாநில மாநாடு அமையவேண்டும். அதற்கு, உங்கள் ஒவ்வொருவரின் வருகையும் அவசியம்” என்பதை எடுத்துரைத்து உரையாற்றினேன்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த மாவட்டச் செயலாளர் சகோதரர் ராஜா, மாவட்டப் பொறுப்பாளர் அண்ணன் ஜெயபாலன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இளைஞர் அணி துணைச் செயலாளர் சகோதரர் ஜி.பி.ராஜா, கூட்டத்துக்கு இளைஞர்களைத் திரட்டி, நிதி வழங்கிய மாவட்ட அமைப்பாளர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும். மாவட்ட ஆய்வுப் பணிகளை ஒருங்கிணைத்த சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் செயலாளர் மருத்துவர் தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் நன்றி.
தூத்துக்குடி, தென்காசியையும் சேர்த்து, இதுவரை 23 மாவட்டக் கழகங்களுக்கான இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம். தென்காசியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதுரைக்கு வந்து, விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தோம்.
அடுத்தடுத்த சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும். இந்த நேரத்தில் கழகத்தினருக்கும், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கும் ஒரு வேண்டுகோள். கழக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது, சால்வை – பொன்னாடை அணிவிப்பதை அறவே தவிர்க்கவும். இவற்றுக்குப் பதிலாக புத்தகங்களையோ, கழகத்தின் கருப்பு-சிவப்பு கரை வேட்டிகளையோ, இளைஞர் அணி வளர்ச்சி நிதியோ தாருங்கள். அவை மற்றவர்களுக்குப் பயன்படும்.
இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’கடந்த 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.
‘கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசைக் கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அமித்ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார்யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிட்டேன்.
தந்தை பெரியாரிடம் இருந்து வந்த பேரறிஞர் அண்ணாவால் நிறுவப்பட்ட தி.மு.கழகத்தின் இரண்டு கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.
மதங்களைப் பற்றி அண்ணா அவர்கள் கூறியது இன்றும் பொருத்தமாக இருப்பதால் அதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “எப்போது ஒரு மதம் மக்களை சமத்துவத்தை நோக்கி வழிநடத்துகிறதோ, அவர்களுக்கு சகோதரத்துவத்தை கற்பிக்கிறதோ, அப்போது நானும் ஆன்மிகவாதிதான். எப்போது ஒரு மதம் சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறதோ, அவர்களுக்கு தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் கற்பிக்கிறதோ, அப்போது அந்த மதத்தை எதிர்த்து நிற்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்றார் அண்ணா.
`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இவை எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோவை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. ‘சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா’ என திரைப்பட நடிகர் அண்ணன் வடிவேலு அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டி போடும் அளவுக்கு மோடி அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார். இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது… என வடிவேலு அண்ணனின் `23-ஆம் புலிகேசி’ கதாபாத்திரத்தோடு போட்டிபோட்டு நகைச்சுவை செய்துகொண்டுள்ளார்.
திரையில் வடிவேலு அண்ணனை ரசிக்க முடிந்தது. நிஜத்தில் இவர்களை… மக்களின் வாக்குகளைப் பெற எந்தளவுக்கும் சென்று, இவர்கள் நாடக அரசியலைச் செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
நான் இதை நகைச்சுவைக்காக மட்டும் சொல்லவில்லை, ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்தும் ‘புதுமைப்பெண்’ திட்டம் போன்றோ, முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் போன்றோ, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றோ ஏதாவது ஒரு முற்போக்குத் திட்டம் கடந்த 9 ஆண்டுகால ஒன்றிய அரசிடம் இருந்து வந்திருக்கிறதா? மதுரை எய்ம்ஸை கட்டினார்களா? கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் போன்று ஏதாவது அறிவியக்கத்தை முன்னெடுத்தார்களா?
‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
‘என்ன வாய் மட்டும் வேலை செய்யுது’ என்பது போல, மீடியாவை சந்திப்பது மட்டுமே மக்கள் பணி என நினைக்கும் சிலர் நான் பேசாததைப் பேசியதாகத் திரிக்கும் அவதூறுகளை வைத்து, வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களின் பிழைப்பில் நான் மண் அள்ளிப்போட விரும்பவில்லை, பிழைத்துப்போகட்டும்.
நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா காலத்தில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்க வீடு வீடாக ஏறிக்கொண்டிருந்தோமே அப்போது அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் என்ன செய்தன? மணி அடித்தபடியும், விளக்கு பிடித்தபடியும் கொரோனா கிருமியை ஒழிக்கப் போராடிக் கொண்டு இருந்தன.
இன்று நாம் ஆளுங்கட்சி. இன்றும் நாம் கலைஞரின் நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாட, நலத்திட்ட உதவிகளை வழங்க வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க.வோ ஆடலும் பாடலும் பின்னணியில், புளி சாத மாநாடுகளை நடத்திக்கொண்டு, விழுவதற்குக் கால்கள் கிடைக்காதா, ஊர்ந்து போக ஏதாவது ஃபர்னிச்சர் கிடைக்காதா எனத் தேடிக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய பிரதமர் மோடியோ கொரோனா நிதியாகத் திரட்டிய ‘பி.எம். கேர்ஸ்’க்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றபடி, 7.5 லட்சம் கோடி ரூபாய் என்ன ஆனது என்ற சி.ஏ.ஜி. கேள்விக்குப் பதிலளிக்காமல், ஊரில் இருந்தால், மணிப்பூர் பற்றிக் கேள்வி கேட்பார்களே என்று பயந்து நண்பர் அதானியை அழைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு இருக்கிறார். உண்மையைச் சொல்வது என்றால், மக்களின் அறியாமைதான் இவர்களின் நாடக அரசியலுக்கான மூலதனம்.
மணிப்பூர் கலவரத்தைத் தூண்டிவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல்… போன்றவற்றைத் திசை திருப்பத்தான் மோடி அண்ட் கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது. இவர்களின் கைகளில் தான் மொத்தமாக சிக்கியுள்ளதால், ‘ஒரே நாடு ஒரே தேர்தலா… நடத்திடுவோம் எஜமான்’, ‘பாரதம்னு மாத்துறீங்களா… மாத்திடுங்க ஓனர்’ என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.
சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட ‘முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி’ என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், மாண்பமை நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ‘கொலை மிரட்டல் விடுத்த அந்தச் சாமியாரை கைது செய்ய வேண்டும்’ என்று கோரி நம் கழகத்தினர் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்தச் சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது, அவரின் படத்தைக் கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது.
நாம் பிறருக்கு நாகரிகம் கற்றுத் தருபவர்கள். நம் தலைவர்கள் நம்மை அப்படித்தான் வளர்த்தெடுத்துள்ளனர். எனவே, அதுபோன்ற காரியங்களை நம் இயக்கத் தோழர்கள் அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தவிர, நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன.
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு அரசின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் பல பணிகளை நம் மாண்புமிகு முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கான பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள்… என ஏராளமான பணிகள் நமக்கு முன் உள்ளன.
இவ்வளவு வேலைகள் இருக்கும்போது சாமியாரின் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது.. போன்ற, நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில் நம் கழகத்தினர் எவரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலும், தலைமைக் கழகத்தின் ஆலோசனையைப் பெற்று சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பகிர்ந்த தோழமை கட்சியின் தலைவர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ‘சனாதன தர்மம்’ எதை வலியுறுத்துகிறது, அதில் அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது’ என்பதை நாடு தழுவிய அளவில் ஒரு பேசுபொருளாக மாற்ற காரணமாக அமைந்த ‘சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு’ம், அதை ஒருங்கிணைத்த த.மு.எ.க.ச தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அம்மாநாட்டுக்கு நான் செல்ல காரணமாக இருந்த அண்ணன் ‘புதுகை பூபாளம்’ பிரகதீஸ்வரன் அவர்களுக்கு என் அன்பு.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் புகழ் ஓங்கட்டும். தொடர்ந்து அவர்களின் கொள்கை வழியில் நடக்க உறுதியேற்போம்.
நன்றி, வணக்கம்.
உங்கள்
உதயநிதி
The post ’’இந்த நேரத்தில் சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை..!’’ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை first appeared on Madras Murasu.
]]>The post ’’பாஜகவின் நவீன ஊழல் கூடாரங்கள் பெயர் சூட்டும் மறியல் போராட்டம்..!’’ வாலிபர் சங்கம் அழைப்பு first appeared on Madras Murasu.
]]>சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி அறி
செங்கல்பட்டு – பரனூர் டோல் கே
அதேபோல் ஆத்தூர் டோல் கேட்டில்
தனியார் முகவர்கள் மூலம் நடைபெ
நாங்கள் ஊழலற்றவர்கள் என்று மா
இப்படி திட்டமிட்டு தொடர்ச்சியா
இதனை வலியுறுத்தி பாஜகவின் நவீன
இப்போராட்டம் பரனூர் டோல்கேட் ,
The post ’’பாஜகவின் நவீன ஊழல் கூடாரங்கள் பெயர் சூட்டும் மறியல் போராட்டம்..!’’ வாலிபர் சங்கம் அழைப்பு first appeared on Madras Murasu.
]]>The post ”தி.மு.க.வை மோடியும் – பா.ஜ.க.வினரும் குறிவைக்கிறார்கள்..!” திருச்சி என்.சிவா first appeared on Madras Murasu.
]]>சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:–
மணிப்பூர் விவகாரம் குறித்தும், டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் சட்டத்தை எதிர்த்தும் நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் எழுப்பியது. மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு மிகுந்த அலட்சியத்துடன் நடந்து கொண்டது, நாட்டில் ஏற்படும் உயிர்சேதங்களுக்கு பதிலளிக்க வேண்டியது பிரதமரின் கடமை. மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் இல்லை!
அவை நிகழ்வுகளையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் தொடர்பாக பிரதமர் ஒரு அறிக்கை தர வேண்டும். நாங்கள் விவாதத்தில் வைத்திருக்கின்ற கருத்துக்களை, எங்கள் தரப்பில் இருக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் என்று சொன்னோம். ஆனால், பிரதமர் அவைக்கு வர மறுத்தார், மாறாக உள்துறை அமைச்சர வர வைக்கிறோம். நீங்கள் இரண்டரை மணி நேரம் குறுகிய கால விவாதம் எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால், நாங்கள் அதற்கு இசைவு தெரிவிக்கவில்லை, காரணம் பிரதமர் என்பவர் இந்த நாட்டின் உட்சபட்ச பொறுப்பில் இருப்பவர், ஒரு பகுதியில் ஒரு உயிருக்குச் சேதம் என்றால்கூட பதற வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உண்டு.
பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் திறன் நம் முதல்வருக்கு உண்டு!
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் முக்கிய மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றி யுள்ளது. இது நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு எதிரானது. மாநில உரிமைகளைக் காப்பதிலும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் முனைப்புடன் செயல்படுவதால் தி.மு.க.வை பிரதமரும் பா.ஜ.க. வினரும் குறிவைக்கின்றனர். இந்தியா என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி ஒற்றுமையாகவும் வலிமையாகவும் உள்ளது. தேர்தலுக்கு முன்பே சாணக்கியத்தனமாக அரசியல் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் திறன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியபோதுகூட சன்சத் தொலைக்காட்சி காட்டவில்லை. பிரதமர் மோடி பேசியபோது எதிர்க்கட்சிகள் தெரிவித்த எதிர்ப்பை சன்சத் தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் செய்வது சரியா? தவறா? என்பதை மக்கள் முடிவு செய்துகொள்ளட்டும். மக்களவை, மாநிலங்களவையில் சட்டம் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டதாக வரலாற்றில் இல்லை.
‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும்!
இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சிக்கு வரும். அப்போது ‘நீட்’ தேர்வு முடிவுக்கு வரும். ஜெயலலிதா விவகாரம் குறித்து ஒன்றும் அறியாமல் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதுதான் நிர்மலா சீதாராமன் அமைச்சராக இருக்கிறார் என்பதே தெரியவந்தது. மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை உரிமைக் குழுவுக்கு அனுப்புவதன் மூலம் ஒன்றிய பா.ஜ.க. அரசு மிரட்டல் விடுக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் 100 நாட்களுக்கு மேலாக பதட்டம் நிலவுகிறது. 150-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சம் பேர் இடம் பெயர்ந்து பதுங்கி வாழ்கின்றனர். இப்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மணிப்பூரை சேர்ந்த 230 பேர் மியான்மர் காடுகளில் தவிக்கின்றனர்.
கவலைப்படாத பிரதமர்!
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் விளக்கம் தேவை என்பதே எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி 2 நிமிடம் மட்டுமே மணிப்பூர் பற்றி பேசி உள்ளார். பெண்கள் அவமானப்படுத்தப்பட்டது பற்றி விளக்கம் அளிக்கவில்லை. மணிப்பூர் பிரச்சினை முடிந்து விட்டது போல நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம் அளிக்கிறது. மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி ஒரு நாளும் கவலைப்படவில்லை. தி.மு.க.வை கண்டு பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா அச்சம் அடைந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் மசோதாக்கள் நிறை வேற்றப்படுகின்றன. பல குற்றங்களுக்கு தண்டனைகள் குறைப்பு, 42 சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளது பா.ஜ.க. அரசு. எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் அரசாக மட்டுமே பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. மணிப்பூர் கலவரத்தில் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்காமல் பொறுப்பற்ற முறையில் பிரதமர் மோடி செயல்படு கிறார். நாட்டின் பிரச்சினைகளை தீர்க்காமல், அலட்சியமாக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி.
பா.ஜ.க.வுக்கு அச்சம்!
உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் சென்றுவந்தால் பிரச்சி்னை முடிந்துவிட்டதாக ஒன்றிய அரசு கூறு கிறது. இந்தியா கூட்டணி பெயரை கேட்டாலே பா.ஜ.க. அரசுக்கு கோபம் வருகிறது. நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல; மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்பதற்காகவே குரல் எழுப்பினோம். மாநில கட்சியான தி.மு.க. மீது நாடாளுமன்றத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் விமர்சனம் வைக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அச்சம் இங்குதான் உள்ளது. தமிழ்நாட்டில் அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியாது என்பதை கடந்த காலத்தில் நிரூபித்துள்ளோம், வரும் தேர்தலிலும் நிரூபிப்போம்.
இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. பேட்டியளித்தார்.
The post ”தி.மு.க.வை மோடியும் – பா.ஜ.க.வினரும் குறிவைக்கிறார்கள்..!” திருச்சி என்.சிவா first appeared on Madras Murasu.
]]>The post ”அன்பு சகோதரி குஷ்பு அவர்களுக்கு வணக்கம்..!” ஜனநாயக மாதர் சங்கம் first appeared on Madras Murasu.
]]>அன்பு சகோதரி குஷ்பு அவர்களுக்கு வணக்கம்…
உங்கள் ஊடகப் பேட்டியை பார்த்தேன். தங்களை மிக மோசமாக விமர்சித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் சிவாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய உங்கள் கோபம் மிக நியாயமானது.
பொதுவெளியில் இயங்கும் பெண்களை அவதூறாகப் பேசுவதையோ இழிவுபடுத்துவதையோ ஒருபோதும் அனுமதிக்கக் முடியாது. அப்படிப்பட்ட கயவர்களுக்கு சட்ட ரீதியாக அவர் சார்ந்திருக்கிற கட்சியின் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாதர் சங்கமும் வலியுறுத்தி வருகிறது.
இன்னும் கூட ஒரு விஷயத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
கற்பு குறித்து நீங்கள் தெரிவித்த ஒரு கருத்திற்காக தமிழகம் முழுவதும் சங்கிகள் குறிப்பாக பாஜக தலைவர் எச்.ராஜா உங்கள் மீது சேற்றை வாரி இறைத்தது போல விஷமத்தை கக்கியபோது அதற்கு எதிராக முதல் எதிர்ப்புக்குரல் கொடுத்ததும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.
துரதிஷ்டம் பாருங்கள் இப்போது அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கிறீர்கள்.
ஆனால் அன்றும் இன்றும் என்றும் பெண்களை இழிவுபடுத்த ஆபாசமாக பேசும் எந்த ஒரு செயலையும் யார் செய்தாலும் எந்த சமரமும் இன்றி முதல் எதிர்ப்புக் குரலை கொடுப்பது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்பதை நாடறியும்.
ஆனால் உங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய அதேவேகத்தில் உங்களிடம் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறேன்.
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பயிலும் மாணவிகள் பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட செய்தி தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய போது அமைதியாகவே கடந்து போனீர்கள்.
டெல்லியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் நீங்கள் பொறுப்பு வகிக்கும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூசன் சரண் சிங் என்ற கயவனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பெண்கள் அமைப்புகள் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தபோதும் நீங்கள் இது குறித்து பேச மறுத்துவிட்டீர்கள்.
தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் என்ற முறையில் தமிழகத்தில் முன்னெடுத்த பெண்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் என்ன?
மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் உங்களிடம் பதில் இருக்காது என்பது நன்கு தெரியும்.
ஏனென்றால் நீங்கள் சாந்திருக்கும் பாஜக எந்தக் காலத்திலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் கட்சி அல்ல.
எல்லாவற்றிலும் சுய லாபம் தேடும் பாஜகவில் அங்கம் வகிக்கும் உங்களைப் போன்றோரின் நாடக அரசியலை மக்கள் நன்கு அடையாளம் கண்டு வைத்துள்ளனர்.

The post ”அன்பு சகோதரி குஷ்பு அவர்களுக்கு வணக்கம்..!” ஜனநாயக மாதர் சங்கம் first appeared on Madras Murasu.
]]>The post ’’உலகமே இப்போது இந்தியா சொல்வதைக் உன்னிப்பாக கவனிக்கிறது..!’’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் first appeared on Madras Murasu.
]]>வளர்ந்த இந்தியா என்ற எண்ணம் இப்போது வெறும் கனவு அல்ல, அது பிரதமரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நிஜமாகி வருகிறது. இப்போது அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு, இந்தியப் பிரதமரை வரவேற்கவும், விருந்தளிக்கவும் விடாமுயற்சியுடன் தயாராகி வருவதாகவும், நாட்டின் வெற்றிக் கதையைப் பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் பேசுகின்றன.
2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த பாதுகாப்பு அமைச்சர் அத்தகைய தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளம் அரசு ஊழியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அரசு ஊழியர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதன் மூலமும், அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமும் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.
ஒரு காலத்தில் சமூகத்தில் அதிகார கலாச்சாரம் இருந்தது, இப்போது நியாயம் செய்தல் கலாச்சாரம் அதிகார கலாச்சாரத்தை முந்தியுள்ளது, ஏனெனில் குடிமக்கள் கல்வி மற்றும் புதிய தகவல்தொடர்பு வழிமுறைகளின் வருகையுடன் அதிக விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர்.
உங்கள் பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். இளம் அரசு ஊழியர்கள் மக்கள் நலனுக்காக எந்த முடிவையும் எடுக்கும்போது சமூகத்தின் கடைசி நபரைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
The post ’’உலகமே இப்போது இந்தியா சொல்வதைக் உன்னிப்பாக கவனிக்கிறது..!’’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் first appeared on Madras Murasu.
]]>The post ”எங்கள் குரல் துணிச்சலாக ஒலிக்கும்..! அண்ணாமலை first appeared on Madras Murasu.
]]>தமிழக பாஜக மாநிலச் செயலாளர் SG சூர்யா, நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.
விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.
கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்.
The post ”எங்கள் குரல் துணிச்சலாக ஒலிக்கும்..! அண்ணாமலை first appeared on Madras Murasu.
]]>The post ”இது தான் பாஜக..!” சு. வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>தமிழர் எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே!
உங்கள் அமைச்சகம் இந்தியை விதிகளை மீறி தமிழ்நாட்டில் திணிப்பதை முதலில் நிறுத்துங்கள்.
உங்கள் பொறுப்பில் உள்ள அலுவல் மொழி அமலாக்கம் எப்படி நடைபெறுகிறது பாருங்கள்!

அரசு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அலுவல் மொழி விதிகள் விதி எண் 5 ஐ 100 % அமலாக்கச் சொல்லி இந்தி பயன்பாட்டை வலியுறுத்துகிறது.
ஆனால் அலுவல் மொழி விதிகள் பிரிவு 1 (ii) மிகத் தெளிவாக தமிழ்நாட்டிற்கு அது பொருந்தாது என்று கூறுவதை தாண்டி 5 வது பிரிவை பேசும் கபடம் அரங்கேறுகிறது.
G.S.R 1052 – In exercise of the powers conferred by section 8, read with sub-section(4) of section 3 of the Official Languages Act, 1963 (19 of 1963), the Central Government hereby makes the following rules, namely ;
1) Short title, extent and commencement –
i) These rules may be called the Official Languages (Use for Official Purposes of the Union) Rules, 1976.
ii) They shall extend to the whole of India, except the State of Tamilnadu.
iii) They shall come into force on the date of their publication in the Official Gazette.
தமிழைக் காவு கொடுத்து விட்டு தமிழர் பிரதமர் ஆவார் என்று உங்கள் ஆசை வார்த்தைகளுக்கு தமிழை நேசிக்கிற ஒரு தமிழர் கூட ஏமாற மாட்டார்.
முதலில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கும், உங்கள் அலுவல் மொழி அமலாக்க குழுவிற்கும் ஒன்றை சொல்லுங்கள்.
“அலுவல் மொழி விதி 1 (ii) காட்டி தமிழ்நாட்டிற்குள் நுழையாதீர்கள்” என்று.
தமிழ்நாட்டில் உள்ள இந்தி அமலாக்க செல்களை கலையுங்கள்.
இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி., கூறியுள்ளார்.
The post ”இது தான் பாஜக..!” சு. வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post ‘’நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை..!’’ சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாடு அரசு இன்று அறிவித்த குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினால், நடப்பாண்டில் ஐந்து இலட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை நெல் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர் நலன் காக்க நம்முடைய அரசு எந்நாளும் தொடர்ந்து பாடுபடும் என்று மீண்டும் ஒருமுறை உங்கள் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு திமுக பெயர் வைக்கிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே?
முதலமைச்சர்: தொடர்ந்து நாங்கள் இதற்கு விளக்கம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இருந்தாலும் இப்போதும் கேட்கிறீர்கள். இதுமாதிரி நடந்து கொள்வது அதிமுக-வின் கலை, அவர்கள் பாணி தான் இது. சென்னையில் திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆசியாவிலேயே ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையமாக கட்டினோம். ஆனால் கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு முன்பு ஆட்சி மாற்றம். ஜெயலலிதா அம்மையார் அவர்களது பெயரை வைத்துக்கொண்டு அதை திறந்து வைத்தார்கள், நாங்கள் அதற்குக் கவலைப்படவில்லை.
அதே மாதிரி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்தை திமுக ஆட்சியில்தான் புதிதாக கட்டினோம். அதை ஆட்சிக்கு வந்து அதிமுக என்ன செய்தது? அதை அரசு மருத்துவமனையாக மாற்றி அரசியல் செய்தது. சென்னையில் இன்றைக்கு ஓடிக்கொண்டிருக்கக்கூடிய மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள் தான் தொடங்கி வைத்தோம். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நான் துணை முதலமைச்சராக இருந்தேன். நானே ஜப்பான் நாட்டிற்குச் சென்று அங்கே நிதி உதவியைப் பெற்று அதன் மூலமாகத்தான் ஒன்றிய அரசினுடைய உதவியைப் பெற்று அதை நாம் தொடங்கி வைத்தோம். அன்றைக்கு அதை எதிர்த்தவர்கள் யார் என்று கேட்டீர்களானால், மறைந்த அம்மையார் ஜெயலலிதா . முதலமைச்சராக இருந்தபோது அதை அவர்கள் எதிர்த்தார்கள், மெட்ரோ தேவையில்லை என்று வெளிப்படையாகவே சொன்னார்கள். பின்னர் அதன் திறப்புவிழாவின் போது தன்னுடைய பெயரை பொறித்துக்கொண்டு கல்வெட்டையும் திறந்து வைத்தார்கள்.
அதே மாதிரி கோட்டூர்புரத்தில் இருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திமுக ஆட்சியில்தான் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான் கட்டித் திறந்து வைத்தார். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு அதை பாழ்படுத்தவேண்டும் என்று அதை எப்படியெல்லாம் சீரழித்தார்கள் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்குப் பிறகு நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடி, போராடி அதை நிலைநாட்டி இருக்கிறோம். இப்படியே சொல்லிக்கொண்டு சென்றால், அந்தப் பட்டியல் இன்னும் போகும். இந்த வரலாறுகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு தெரியாது என்று நினைக்கிறேன். இதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அதேபோல, அம்மா உணவகம். ஆட்சிக்கு வந்தவுடன் அதை மூடிவிடுவார்கள், மூடிவிடுவார்கள் என்று திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரமே செய்தார்கள். அதை இதுவரைக்கும் மூடவில்லை, அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இன்னொன்று சொல்ல வேண்டுமென்றால், பள்ளிக்கூடத்திற்கு செல்லும் பிள்ளைகளின் புத்தகப்பையில் அவர்கள் ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் படமும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படமும் போட்டு அன்றைக்கு மாணவர்களுக்கெல்லாம் கொடுத்தார்கள். அதில் நாம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் சிறிது மீதம் வந்திருந்தது. அந்த நேரத்தில் அரசு அதிகாரிகளெல்லாம் என்னிடத்தில் வந்து கேட்டார்கள், இதை மாற்றி விடலாம். ஏனென்றால், ஏற்கனவே இருந்த முதலமைச்சர் படம் இருக்கிறது, எனவே உங்கள் படத்தை போடுகிறோம் என்று சொன்னார்கள். யார் படமும் போடவேண்டாம், இருப்பது அப்படியே இருக்கட்டும். இதை மாற்றினீர்கள் என்றால், பல கோடி ரூபாய் இழப்பு வரும், அந்த இழப்பை அரசு ஏற்றுக் கொள்ளாது, எனவே அப்படியே இருக்கட்டும் என்று சொன்னவன்தான் நான்.
எனவே இதையெல்லாம், இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கேள்வி: அமித் ஷா தமிழ்நாடு வந்தார், இரண்டு முறை தமிழர் ஒருவர் பிரதமர் ஆவதை திமுக தான் தடுத்தது என்று கூறியிருக்கிறாரே…
முதலமைச்சர்: அதை வெளிப்படையாக அவர் சொன்னாரென்றால், அதற்கு உரிய விளக்கத்தை நம்மால் சொல்லமுடியும். அதனால் அதற்கு விளக்கமாக இப்போது பதில் சொல்ல முடியாது. இருந்தாலும், தமிழரை பிரதமராக ஆக்கப் போகிறேன் என்று சொன்னது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. மோடி மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. 2024-ல் பாஜக-வின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை இருக்கிறார்கள், முருகன் இருக்கிறார், ஒருவேளை அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
கேள்வி: கர்நாடக அரசு மேதாது அணை கட்டுவதற்கு மும்முரமாக இருக்கிறார்கள், அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
முதலமைச்சர்: அதை எதிர்ப்பதில் நாங்களும் மும்முரமாக இருக்கிறோம்.
கேள்வி: கடந்த 50 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள சரபங்கா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து…
முதலமைச்சர் : அது ஆய்வில் இருக்கிறது.
கேள்வி: தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை பாஜக அரசு கொடுத்திருப்பதாக அமித் ஷா ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறார்…
முதலமைச்சர்: நான் சேலத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் தெளிவாக பேசியிருக்கிறேன். அதாவது, பாஜக ஆட்சி இருந்தபோது, எந்த சிறப்புத் திட்டமும் இந்த ஒன்பது வருடங்களில் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஆனால் ஏற்கனவே காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த திமுக அப்போது ஆட்சியில் இருந்த திரு. மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஆட்சியில் என்னென்ன சிறப்புத் திட்டங்கள் வந்தது என்பதை பட்டியல் போட்டு நான் காண்பித்து இருக்கிறேன். அவர் அதைப் படிக்கவில்லையா? இல்லை அதைப் படித்து அதை யாரும் எடுத்துச் சொல்லவில்லையா? என்பதுதான் எனக்கு சந்தேகம். பாஜக-வினுடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்திருக்கிறது என்று கேள்வி கேட்டேன். அந்தக் கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது.
ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அன்றைக்கு தமிழ்நாட்டிற்குக் கிடைத்ததை சொல்ல வேண்டுமென்றால், சென்னைக்கு புதிதாக கிடைத்த மெட்ரோ ரயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம், சேது சமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை, நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல்லில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சென்னைக்கு அருகில் கடல்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா. இவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் வந்தது.
இதேபோல தமிழ்நாட்டிற்கு என்ன சிறப்புக்களை கொண்டு வந்திருக்கிறது என்பதுதான் என் கேள்வி. எனவே எந்தத் திட்டத்திற்கும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்வதை நான் கேட்கவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் செய்யப்படும் பொதுவான இடத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்டிருப்பதைப் பற்றி நான் கேட்கவில்லை.
இன்றைக்கு ஜிஎஸ்டி-யில் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிய அரசிற்கு நிதி கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜிஎஸ்டி-யில் தமிழ்நாட்டிலிருந்து அதிகமாகக் கொடுத்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிற்குத் தான் இன்றைக்கு ஒன்றிய அரசு நிதி கொடுப்பதில் மிகவும் குறைவாக கொடுத்துக் கொண்டிருக்கிறது, மற்ற மாநிலங்களுக்கெல்லாம் அதிகமாக கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதைத்தான் அடிப்படையாக வைத்துக் கேட்டேன்.
அதேபோல, மதுரையில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் அதற்கு உறுதி கொடுத்தார், அறிவித்தார்கள். அது என்ன ஆகியது? பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார். அதற்குப் பின் பலமுறை அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். வந்தபோது, பணி 50 சதவீதம் முடிந்துவிட்டது, 75 சதவீதம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டுச் சென்றாரே தவிர இதுவரைக்கும் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. அதையெல்லாம் மூடி மறைத்து அவர் பேசிவிட்டுச் சென்றிருக்கிறாரே தவிர, நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை.
கேள்வி: டாஸ்மாக்கில் பத்து ரூபாய் ஊழல் புகார் குறித்து…
முதலமைச்சர்: அதெல்லாம் திட்டமிட்டு செய்யக்கூடிய பிரச்சாரங்கள்.
கேள்வி: எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவராததற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும் என்று அமித் ஷா சொல்லியிருக்கிறாரே?
முதலமைச்சர்: திமுக ஆட்சியில் இருந்தபோது, எய்ம்ஸ் என்று ஒரு மருத்துவமனை தேவையே படவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவக் கட்டமைப்புகள் அதிக அளவில் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், இதை அறிவித்தது யார்? திமுக-வா அறிவித்தது, அறிவித்தது ஒன்றிய அரசு. அவர்கள் தான் இதைச் செய்ய வேண்டும். இந்தக் கேள்வியைக் அவர் கேட்பதே ஒரு பொறுப்புள்ள உள்துறை அமைச்சருக்கு அழகல்ல.
கேள்வி: திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் பெரிய அளவில் நடந்தது என்று சொல்கிறார்கள்…
முதலமைச்சர்: ரஃபேல் ஊழல், அதானி ஊழல். இன்றைக்கு இந்தியாவே தலைகுனிந்து நிற்கிறது. முதலில் அதற்கு பதில் சொல்லட்டும், அதற்குப் பின் இதைப் பேசுவோம்.
கேள்வி: அத்திக்கடவு – அவினாசி திட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது.
முதலமைச்சர்: முடியக்கூடிய நிலையில் இருக்கிறது, விரைவில் திறக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.
The post ‘’நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை..!’’ சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி first appeared on Madras Murasu.
]]>