acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’ இது எந்த விதத்தில் நியாயம்? ’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
வணக்கம்! இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் – ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் நடைபெறும் உங்களின் திராவிட மாடல் அரசு, கடந்த மூன்றாண்டு காலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறதென்று, உங்கள் எல்லோருக்குமே நன்கு தெரியும்!
நமது அரசின் திட்டங்களின் பயன்கள், ஒவ்வொரு குடும்பத்துக்கும் – ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாகக் கிடைக்கிறது! அதனால்தான், தி.மு.க.வுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது! “நாள்தோறும் திட்டங்கள்! மக்கள் மனந்தோறும் மகிழ்ச்சி!” இதுதான் நமது அரசின் எண்ணம்! இப்படிப்பட்ட நமது எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்துகொண்டு வருகிறது! ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை – நான் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகின்றேன். ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல – வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும்!
இப்படித்தான் தமிழ்நாடு அரசு பணியாற்றிக் கொண்டு இருக்கிறது! ஏன், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா ஒன்றிய அரசுகளும்கூட அப்படித்தான் இருந்தன. ஆனால், இந்தப் பெருந்தன்மை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இல்லை! இவர்கள் மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள்.
அதற்கு அடையாளம்தான், கடந்த 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பா.ஜ.க.வைப் பல்வேறு மாநில மக்களும் புறக்கணித்தார்கள்! அப்படி புறக்கணித்த மாநிலங்களை – அந்த மாநில மக்களைப் பழிவாங்குகிற பட்ஜெட்டாகத்தான், ஒன்றிய நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அமைந்துள்ளது! ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை – ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால், அவர் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கே முரணானது!
ஒன்றிய பாஜக அரசானது, தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டைப் புறக்கணித்துக் கொண்டு வருகிறது! தமிழ்நாட்டுக்கு என்று அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டம் என்றால், அது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைதான்! ஆனால் அதுவும் பத்தாண்டுகள் ஆகியும் என்ன நிலைமையில் இருக்கிறதென உங்களுக்கே நன்றாகத் தெரியும்! தமிழ்நாட்டுக்கென எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை!
மூன்றாவது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைத்துள்ளது! ஆனால், இந்திய மக்கள் அந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை அளிக்கவில்லை! ஒரு சில மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லையென்றால், பா.ஜ.க.வால் ஆட்சி அமைத்திருக்க முடியாது! இப்படிப்பட்ட நிலையில், தங்களின் சறுக்கலுக்கு என்ன காரணம் என்று உணர்ந்து, பா.ஜ.க. திருந்தியிருக்கும் என நினைத்தேன்! ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது!
பட்ஜெட்டுக்கு இரண்டு நாளுக்கு முன்பு கூட, நமது தமிழ்நாட்டுக்கான தேவைகள் என்னவென்று, சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஆனால், அதில் இருந்து ஒன்றைக்கூட நிதி அமைச்சர் அறிவிக்கவில்லை! அவ்வளவு ஏன்? ‘தமிழ்நாடு’ என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை! இவ்வளவு ஆண்டுகளாகச் சும்மா ஒப்புக்காகவாவது ஒரு திருக்குறளைச் சொல்லி, பட்ஜெட் வாசிப்பார்கள். இந்த முறை திருவள்ளுவரும் கசந்துவிட்டார் போல… இப்படிப்பட்ட பட்ஜெட்டில், திருக்குறள் இடம்பெறாதது ஒருவகையில் நிம்மதிதான்!
இந்த பட்ஜெட்டில் நாம் மிகவும் எதிர்பார்த்தது… சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதி! 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலேயே – மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், அவசரமாக வந்து அடிக்கல் நாட்டிய திட்டம் அது. “தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இணைந்து, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்” என்று 2021-ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் அறிவித்தார்கள்! ஆனால், இப்போது தமிழ்நாடு அரசுதான் இந்தத் திட்டப்பணிகளை முடுக்கிவிட்டுச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது! ஒன்றிய அரசோ, தன்னோட பங்காக ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல், வேண்டுமென்றே மூன்று ஆண்டுகளாகக் காலம் தாழ்த்திக் கொண்டு இருக்கிறது!
கேட்டால், ‘இது மாநில அரசின் திட்டம்’ என நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்கிறார்கள்… அப்படி என்றால், இரயில்வே துறையை மாநில அரசுக்குக் கொடுத்துவிடுவீர்களா? கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிப்பதைப் பற்றி மூச்சே விடவில்லை! ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இதே ஒன்றிய அரசு, நமது நகரங்களைவிடப் பல சிறிய நகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து – நிதி உதவியும் வாரி வழங்கியிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்?
கடந்த ஆண்டு இரண்டு முறை புயல்கள் தாக்கி, கடும் இயற்கைப் பேரிடர்களைத் தமிழ்நாடு சந்தித்தது! இதற்கு நிவாரணமாக, 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். ஆனால், ஆண்டுதோறும் வழக்கமாக வழங்கப்பட வேண்டிய 276 கோடி ரூபாய் நிதியை அளித்துவிட்டு, ஏமாற்றிவிட்டார்கள். சரி, இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால், தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர்.
ஒட்டுமொத்தமாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களைத் அறிவிக்கவில்லை என்பதோடு – ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்களுக்கான நிதியையும் குறைக்கும் வஞ்சக முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்த ஒன்றிய அரசு. இது எல்லாவற்றையும்விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால்.. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் வகையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ திட்டத்தின்கீழ், வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியைக் கூட நிறுத்தி வைத்துள்ளார்கள். தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது ஒன்றிய அரசு. மாணவ – மாணவிகளின் கல்வி பாழாகுமே… அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே என ஒரு துளி கவலை கூட இல்லாமல், தங்களின் கொள்கைத் திணிப்பையும் இந்தித் திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாகத்தான் பா.ஜ.க. அரசு இருக்கிறது.
அடுத்து, பட்ஜெட் உரையில் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்கள்… மாநிலங்களால் விதிக்கப்படும் முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைப்போம் என மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலேயே பட்ஜெட்டில் அறிவிக்கிறார், ஒன்றிய நிதி அமைச்சர். ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்து, மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையை எடுத்துக்கொண்டார்கள். நான் கேட்பது என்னவென்றால், ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கான 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டையே இன்னும் அளிக்காத இந்த ஒன்றிய அரசுக்கு, மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது?
கடந்த பத்தாண்டுகளாக வருமானச் வரிச்சலுகை இன்றித் தவித்துக்கொண்டு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, வெறும் 17 ஆயிரத்து 500 ரூபாய் சலுகையை மட்டும் வழங்கி, அந்தச் சலுகையும் பெரும்பான்மையோருக்குக் கிடைக்காமல் செய்துகொண்டு, பெரும் வரிச்சலுகை கொடுத்ததாக மார்தட்டிக் கொள்கிறது இந்த ஒன்றிய அரசு. இது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல – ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட்! சுயநலத்துக்காக – நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளப் போட்டுக்கொண்ட பட்ஜெட் இது! ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் குரலாக – ஏன், இந்திய நாட்டு மக்களின் குரலாக ஒன்று சொல்கிறேன்… மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள்! மேலும் மேலும் தோல்விகளைச் சந்திப்பீர்கள்! இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பதுபோல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது! இதற்கு பா.ஜ.க. பதில் சொல்லியே தீர வேண்டும்!
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post ’’ இது எந்த விதத்தில் நியாயம்? ’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் first appeared on Madras Murasu.
]]>The post ”மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம்..!” மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கூடுதல் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழாவில் ஆற்றிய உரை:
கடந்த சில நாட்களாக காய்ச்சலும், தொண்டை வலியும் எனக்கு இருந்தது. இப்போது காய்ச்சல் குறைந்துவிட்டாலும், தொண்டை வலி மட்டும் இருக்கிறது. என்னுடைய குரலை கேட்கும்போதே உங்களுக்கு நன்றாக தெரியும். அதனால்தான், சில நாட்களாக வீட்டிலேயே முழு ஓய்வு எடுத்துக்கொண்டேன். இந்த வாரம் முழுக்க ஓய்வெடுக்கவேண்டும் என்று என்னுடைய மருத்துவர்கள் சொன்னாலும், என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியவில்லை! அதனால்தான், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி மூலமாக இணைந்திருக்கின்ற உங்களை எல்லாம் நான் பார்க்க வந்துவிட்டேன். தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது! அதனால்தான் வந்துவிட்டேன். உங்களை பார்க்கும்போது என்னுடைய உடல் வலி எல்லாம் குறைந்து மனது மகிழ்ச்சியில் நிறைந்துவிட்டது!
இந்த ஆயிரம் ரூபாயை வாங்கும்போது உங்களுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியைவிட, கொடுக்கும்போது, எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியைவிட சிறந்த மருந்து எதுவாக இருக்க முடியும்? அதனால்தான், மருத்துவர்கள் அறிவுரையையும் மீறி இந்த விழாவுக்கு வந்துவிட்டேன்.
குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பாகவே சொன்னோம். அப்போது சிலர் என்ன சொன்னார்கள், என்ன சொன்னார்கள் என்றால், “இதையெல்லாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி”, “இவர்கள் ஆட்சிக்கு வரவே மாட்டார்கள்” இதுமாதிரி ஒவ்வொருவரும் நிறைய சொன்னார்கள். கட்டம் எல்லாம் பார்த்தார்கள். ஆனால், நீங்கள் எல்லோரும் என்ன சொன்னீர்கள்? “தி.மு.க.தான் ஆட்சிக்கு வரவேண்டும்” “தி.மு.க. சொன்னால், சொன்னதை நிறைவேற்றும். கலைஞர் மகன் ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரவேண்டும்” என்று ஓட்டு போட்டு பதிலடி தந்தீர்கள். உங்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டவன் நான்! இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னால், சொன்னதை நிச்சயம் செய்வேன்! அதற்கு அடையாளமாகதான், மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்குகிறோம். அதனால்தான் உங்கள் முன்னால் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன்!
கடந்த செப்டம்பர் 15-ஆம் நாள் பேரறிஞர் பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சிபுரத்தில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தேன். செப்டம்பர் 15, அக்டோபர் 15 என்று இரண்டு மாதங்களுக்கான 2000 ரூபாயை, ஒரு கோடியே ஆறு இலட்சம் சகோதரிகள் வாங்கிவிட்டார்கள். இந்த முறை முன்கூட்டியே இன்றைக்கு மாலைக்குள் அடுத்த ஆயிரம் ரூபாயும் உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.
மகளிருக்கு, சொத்துரிமை, கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு கொடுத்து உங்களுடைய உரிமைகளுக்காக, பாதுகாவலராக இருந்த தமிழினத் தலைவர் கலைஞருடைய நூற்றாண்டில் தொடங்கி கொடுக்கப்படுகிற இந்த தொகை, உதவித்தொகை இல்லை; உரிமைத்தொகை! இந்த உரிமைத் தொகை உண்மையிலேயே தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதில் நம்முடைய அரசு மிகவும் கவனமாக இருந்தது.
வி.ஏ.ஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் என்று எங்கேயும் செல்லாமல் அலைச்சலில்லாமல், பொதுமக்களுக்கு எந்தச் சிரமமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று அரசே உங்களிடம் வந்து விண்ணப்பங்களை வாங்க எப்படி வாங்கினார்களோ அதேபோல, அந்த விண்ணப்பங்களை வாங்குகின்ற முகாம்களை அமைக்க சொன்னேன். கடந்த ஜூலை 24-ந் தேதி, தருமபுரி மாவட்டம் தொப்பூரில் அந்த முகாமை, நானே நேரில் சென்று தொடங்கி வைத்தேன். ஏறக்குறைய ஒரு கோடியே 63 இலட்சம் மகளிர் விண்ணப்பித்தார்கள். இதற்கும் சிலர் விமர்சனம் செய்தார்கள்!
தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சொன்னதை, தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக செய்கிறார்கள் என்று பேசினார்கள்! நாம் தொடக்கத்தில் இருந்தே தெளிவாக சொன்னோம். தகுதி உள்ளவர்கள் யார் யாரென்று நேர்மையான, பாரபட்சமற்ற விதிமுறைகளின் அடிப்படையில், அரசு சார்பில் வெளியிடப்பட்டு, தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை குடும்ப அட்டைதாரர்களையும் விண்ணப்பிக்க சொன்னோம்.
இந்தத் திட்டத்தின் நோக்கத்தையும், விதிமுறைகளின் குறிக்கோளையும் மக்கள் உள்ளார்ந்து புரிந்து கொண்ட காரணத்தால்,
2 கோடியே 24 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களில், 1 கோடியே 63 இலட்சம் மகளிர் மட்டும் விண்ணப்பித்தார்கள்!
மக்களுடைய இந்த புரிதல், இந்தத் திட்ட விதிமுறைகளுக்கான நியாயத்தை காண்பித்தது. விமர்சித்தவர்கள் அமைதி ஆகிவிட்டார்கள். இப்படி விண்ணப்பத்தவர்களிலிருந்து, 1 கோடியே 6 இலட்சத்து 58 ஆயிரத்து 375 தகுதியுள்ள மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு, எல்லோருக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்கில், இந்தத் திட்டம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாகவே, அதாவது, செப்டம்பர் 14-ந் தேதியே, அந்த மாதத்திற்கான உரிமைத்தொகையான 1000 ரூபாயை நாம் வரவு வைத்தோம். அந்த மாதம், வங்கிக் கணக்கு இல்லாத 2 இலட்சத்து 42 ஆயிரத்து 956 பயனாளிகளுக்கு, மணியார்டர் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
அடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி வங்கிக் கணக்குகளில் வரவு வைத்தோம். மணியார்டர் மூலம் உரிமைத்தொகை வழங்கப்பட்ட மகளிருக்கு, வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வளவு பெரிய திட்டம்! ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள்! அவர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய்! ஆனால், எந்தச் சிறிய புகாருக்கும் இடமில்லை! அதுதான், இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி! அந்தப் பெருமிதத்துடன் சொல்கிறேன், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்திருக்கக்கூடிய திட்டம்!
ஒரு திட்டம் பெற்ற வெற்றியை தொடர வேண்டுமென்றால், அதை தொடர்ந்து கவனிக்கவேண்டும்! அதனால், முகாம்களில் விண்ணப்பித்து, தகுதி இருந்தும் தேர்ந்தெடுக்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கும், முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், பதிவாகாமல் போன விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களும் தரவுகளை தொடர்ந்து சரிபார்க்கப்பட்டது. இதற்காக மட்டுமே அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏறக்குறைய 54,220 அலுவலர்கள் மாவட்ட அளவிலும், கிராம அளவிலும் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சரி பார்த்து ஒரு பட்டியலை எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அதில் இந்த மாதத்திலிருந்து, 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
புதிய பயனாளிகளான என் அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் முதலில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்! உங்களுக்கான 1000 ரூபாயை நேற்றே உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது! உங்களுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ‘1000 ரூபாய் இனி பெறப்போகிறார்கள். நீங்கள் மட்டுமல்ல, தகுதியுள்ள யாரும் விடுபட்டுவிட கூடாது என்று கவனமாக இருக்கிறோம். அதானல்தான், விண்ணப்பித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற காரணத்தை, குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தோம். அந்தக் காரணம் ஏற்புடையதாக இல்லையென்றால், மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு கொடுத்தோம். அதை பயன்படுத்தி, மேல்முறையீடு செய்தார்கள். அவர்களுடைய விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம்.
சரிபார்ப்பு அலுவலர்கள் களஆய்வு செய்து, தகுதிபெறும் மகளிருக்கு, வருகிற டிசம்பர் மாதத்தில் இருந்து, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ மூலமாக 1000 ரூபாய் வழங்கப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்கின்ற வரைக்கும், திராவிட மாடல் அரசின் இந்தப் பணி நிச்சயம் தொடரும்! கடந்த மார்ச் 27-ந்தேதி சட்டமன்றத்தில் இந்தத் திட்டத்தைப் பற்றி பேசும்போது, ஏறத்தாழ 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1000 ரூபாய் வழங்கிடும் வகையில் இந்தத் திட்டம் அமையும் என்று நான் சொன்னேன். ஆனால், இன்றைக்கு, 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 பயனாளிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி!
இதே மாதிரியான திட்டம், வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டபோது, பொதுமக்கள் கூட்ட நெரிசல்களில் எப்படிப்பட்ட இன்னல்களுக்கும், அலைக்கழிப்புக்கும் ஆளாகினார்கள் என்று ஊடகங்களில் வந்தது. அதுமாதிரி எந்த நிகழ்வும் இல்லாமல் அமைதியான முறையில் அனைத்து தகுதியுள்ள மகளிரையும் இந்தத் திட்டம் சென்று சேர்ந்திருக்கிறது. எந்தவிதமான சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்திக்காட்டிய பெருமை, அரசு அலுவலர்களையும், பணியாளர்களையும்தான் போய்ச் சேரும்!
இந்தத் திட்டத்திற்குப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் தம்பி உதயநிதி, அரசு அலுவலர்களுடன் இந்தத் திட்டச் செயல்பாடு குறித்து தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள நடத்திக்கொண்டே இருப்பார். அவருக்கும் என்னோட வாழ்த்துகள். தொடர்ந்து களத்திலும் ஆய்வு செய்துகொண்டு இருக்கிறார். அது இனியும் தொடரும். அதில் எந்தவித சந்தேகமும் உங்களுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர், நிதித் துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கடந்த சில மாதங்களாக, ஏறக்குறைய 50 முறைக்கும் மேலாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி இந்தத் திட்டத்தில் எந்தவித குறைபாடும் ஏற்படாமல் செயல்படுத்துவது குறித்து விவாதித்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டும் என்றால், மாண்புமிகு அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் முதல், தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் என அனைத்து நிலை பணியாளர்களும் தொடர்ந்து உழைத்ததின் விளைவுதான், இந்த மாபெரும் வெற்றி! இது, ஊர் கூடி, ‘இழுத்த தேர்!’ ஊருக்காக நம்முடைய திராவிட மாடல் அரசு, ‘உருவாக்கிய தேர்!’ ’மக்களின் தேர்’ இது! தேசிய ஊடகங்களும், பிற மாநில அரசுகளும் கூட நம்முடைய இந்த திட்டமிடல், நிர்வாக நடைமுறையை வியந்து பார்க்கிறார்கள். அந்த வகையில், இந்தத் திட்டம் இவ்வளவு பெரிய இமாலய வெற்றி பெற உழைத்திட்ட அனைவருக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகளையும், என் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான மாநிலமாக, தமிழ்நாடு தொடர்ந்து வளரும்! வளரும்!
நிறைவாக, தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலினுடைய வாழ்த்துகளை தெரிவித்து விடைபெறுகிறேன்.
The post ”மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம்..!” மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ’’இலங்கை மலையகத் தமிழர் விழாவில் மு.க.ஸ்டாலின் காணொளி உரையை ஒளிபரப்ப தடை..!’’ ஒன்றிய அரசுக்கு வைகோ கடும் கண்டனம் first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு அவர்களுக்கு தேவையான தேயிலை காபி ரப்பர் தோட்டங்கள் ஏராளமாக பயிரிடப்பட்டது. அதில் குறைந்த கூலிக்கு வேலை செய்யவும் அங்கு இருந்த வனம் சார்ந்த இடங்களை விவசாயத்திற்கு ஏற்ப பண்படுத்தி பிரிட்டிசாருக்குத் தேவையான விவசாயம் உற்பத்தி சார்ந்த துறைகளில் உழைப்பதற்காகவும் தமிழ்நாட்டு மக்கள் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு கொண்டு போகப் பட்டார்கள்.
தென் தமிழகத்தில் இருந்த அப்பாவி மக்களை வலு கட்டாயமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தியது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள் என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டார்கள். பிரிட்டிஷாரால் வலுக்கட்டாயமாக கொண்டு போகப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள் புலம்பெயர்ந்த 200 வது ஆண்டு தற்போது அனுசரிக்கப்படுகிறது. “நாம் 200 ஒற்றுமை பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்” என்ற பெயரில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியை இலங்கை மலையக தமிழர்களுக்காக இலங்கையின் உள்நாட்டு தோட்ட தொழில் துறை மற்றும் அரசு தொழில்துறை அமைச்சகம் முன்னெடுத்தது.
இலங்கையில் உள்ள மலையக தமிழர்களின் உறவு பாலமாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்னெடுத்த, இந்த நிகழ்ச்சியில் மலையக தமிழர்கள் அவர்களின் பூர்வீக தமிழ் பூமி சார்ந்த அரசியல் பிரதிநிதிகளாக தமிழ்நாட்டிலிருந்தும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார் .
இலங்கை அரசின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக மலைகத் தமிழர்களின் நாம் 200 விழாவிற்கு வாழ்த்துரை வழங்கி அனுப்பியிருந்தார்.
அந்த உரையில், “மனிதன் வாழ்ந்திராத மலைக் காடுகளை மலையகத் தோட்டங்களாக மாற்றியவர்கள் மலையகத் தமிழர்கள்! மலையகத் தமிழ்த் தொழிலாளர்களின் வரலாறு – இலங்கையில் காப்பி பயிர் செய்யப்பட்ட ஆரம்பகாலம் முதல் தொடங்குகிறது. 1823-ஆம் ஆண்டு கம்பளைக்கு அருகே உள்ள சிங்கபிட்டிய என்ற கிராமத்தில் கேப்டன் ஹென்றி பேட் என்ற பிரிட்டிஷ்காரர், 14 இந்தியத் தொழிலாளர்களையும் சில சிங்களத் தொழிலாளர்களையும் வைத்து காப்பித் தோட்டம் தொடங்கினார். இது இலங்கைப் பொருளாதாரத்தில் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது.
காப்பித் தோட்டங்கள் பெருகப்பெருக இந்தியத் தொழிலாளர்கள் ஏராளமாக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காப்பி தோட்டத்தையடுத்து தேயிலைத் தோட்டங்கள் அதிகமானது. அதனையும் மலையகத் தமிழர்கள் வளப்படுத்தினார்கள். பின்னர் ரப்பர், தென்னை என அனைத்துப் பணப் பயிர்களது உற்பத்தியும் மலையகத் தமிழர்களது உழைப்பால் உருவானதுதான். இலங்கை நாட்டுக்காக தங்களது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை நாடு உயர உழைத்தவர்கள். தங்களது ரத்தத்தையும் வியர்வையையும் காலத்தையும் கடமையையும் அந்த நாட்டுக்காகவே ஒப்படைத்தவர்கள்.
“கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்? அது கடல் கடந்த தமிழர்களின் கண்ணீரால்!” என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா அவர்கள். மலையகத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பியபோது அவர்களை அரவணைத்து தமிழக மலைப்பகுதிகளில் குடியமர்த்தி, அரசு ரப்பர் தோட்டங்கள் மூலம் அவர்கள் வாழ்வில் உயர வழிவகை செய்தோம். அந்த உணர்வோடுதான் அனைத்துப் பிரச்சினைகளையும் அணுகி துயர் துடைக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். உரிமை காக்கவும் உதவிகள் செய்து வருகிறோம். அந்த வகையில், மலையக தமிழ் மக்களின் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மலையக தமிழர்களின் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் போல கல்வியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் அவர்கள் மேலெழும்பும் காலத்தை எதிர்நோக்கி தமிழ்நாடு காத்திருக்கிறது. கல்வி, சுகாதாரம், வாழிட உரிமைகள், பொருளாதார உதவிகள், சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும். நாட்டை வாழ வைத்த மக்களை வாழ வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உரையில் குறிப்பிட்டிருந்தார்.
முதல்வரின் உரை ஊடகங்கள் மற்றும் ஏடுகளுக்கும் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் நவம்பர் 3 ஆம் தேதி கொழும்பில் நடைபெற்ற மேற்கண்ட விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் காணொலி உரையை ஒளிபரப்ப கூடாது என்று ஒன்றிய பாஜக அரசு தடை போட்டு விட்டது என இன்று வெளியான இந்து ஆங்கில நாளேடு (06.11.2023)விரிவாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் இந்திய அரசின் சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு பாஜக தலைவரும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துரை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுப்பிய காணொலி உரையை அந்த விழாவில் ஒளிபரப்ப தடை விதித்ததன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சிறுமைப்படுத்துவதற்கு முயன்றுள்ள ஒன்றிய பாஜக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது கடும் கண்டனத்துக்குரியது.
The post ’’இலங்கை மலையகத் தமிழர் விழாவில் மு.க.ஸ்டாலின் காணொளி உரையை ஒளிபரப்ப தடை..!’’ ஒன்றிய அரசுக்கு வைகோ கடும் கண்டனம் first appeared on Madras Murasu.
]]>The post ”மலையக தமிழ் மக்களின் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும்..!” கொழும்பு ’நாம்200’ மாநாட்டில் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகள் (1823 – – 2023) ஆவதை நினைவுகூரும் வகையிலும், அவர்கள் இலங்கைக்கு ஆற்றிய சேவைகளையும், இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய பங்களிப்பைப் பாராட்டியும் இலங்கை மத்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நாம் 200’ என்ற தலைப்பிலான தேசிய நிகழ்வில் (கொழும்பு), முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வழங்கிய வாழ்த்துரை வருமாறு:–
அனைவருக்கும் வணக்கம்!
இலங்கையில் வாழும் மலையகத் தமிழ் மக்களின் வாழ்வு என்பது 200 ஆண்டுகளை எட்டுகிறது. இரண்டு நூற்றாண்டுகாலமாக தனிப்பெரும் இனமாக வாழ்ந்துவரும் மலையகத் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துகள்!
இந்த நிகழ்ச்சியில் நான் காணொலி மூலமாக உரையாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அருமை சகோதரர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
காடுகளை மாற்றிய மலையகத் தமிழர்கள்!
மனிதன் வாழ்ந்திராத மலைக் காடுகளை மலையகத் தோட்டங்களாக மாற்றியவர்கள் மலையகத் தமிழர்கள்! மலையகத் தமிழ்த் தொழிலாளர்களின் வரலாறு – இலங்கையில் காப்பி பயிர் செய்யப்பட்ட ஆரம்பகாலம் முதல் தொடங்குகிறது.
1823-ஆம் ஆண்டு கம்பளைக்கு அருகே உள்ள சிங்கபிட்டிய என்ற கிராமத்தில் கேப்டன் ஹென்றி பேட் என்ற பிரிட்டிஷ்காரர், 14 இந்தியத் தொழிலாளர்களையும் சில சிங்களத் தொழிலாளர்களையும் வைத்து காப்பித் தோட்டம் தொடங்கினார். இது இலங்கைப் பொருளாதாரத்தில் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது.
காப்பித் தோட்டங்கள் பெருகப்பெருக இந்தியத் தொழிலாளர்கள் ஏராளமாக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காப்பி தோட்டத்தையடுத்து தேயிலைத் தோட்டங்கள் அதிகமானது. அதனையும் மலையகத் தமிழர்கள் வளப்படுத்தினார்கள். பின்னர் ரப்பர், தென்னை என அனைத்துப் பணப் பயிர்களது உற்பத்தியும்மலையகத் தமிழர்களது உழைப்பால் உருவானதுதான்.
மகத்தான பங்களிப்பை வழங்கும் தமிழர்கள்!
பயிரிடப்படாத நிலத்தை பயிரிட்டும் – காடுகளாக இருந்த நிலத்தை காசுப் பயிர்களாக விளைவித்தும் பின்தங்கிய பொருளாதாரத்தை முன்னணி பொருளாதாரமாக ஆக்கியவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள்! இப்படி கடந்த 200 ஆண்டுகளாக இலங்கையின் நல்வாழ்வுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இன்னமும் வழங்கி வருகின்றனர்.
அதாவது இலங்கை நாட்டுக்காக தங்களது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை நாடு உயர உழைத்தவர்கள். தங்களது ரத்தத்தையும் வியர்வையையும் காலத்தையும் கடமையையும் அந்த நாட்டுக்காகவே ஒப்படைத்தவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய காலம்முதல் புலம்பெயர் தமிழர்களது உரிமையைக் காப்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டுள்ளது.
எப்போதும் குரல் கொடுக்கும் கழகம்!
1952-ஆம் ஆண்டு தி.மு.க.வின் முதல் மாநில மாநாட்டில் பேசும்போது பேரறிஞர் அண்ணா அவர்கள், “இலங்கை வாழ் திராவிட மக்களுக்காக ஓட்டு உரிமையைக் கொடுத்து நீதியை நிலைநிறுத்துங்கள். ஜனநாயகத்தைக் கேலி செய்யாதீர். வீண் போக்கு வெற்றியைத் தராது” என்று பேசினார்.
தி.மு.க.வின் இரண்டாவது மாநில மாநாட்டில் தனி தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. 1957 தேர்தல் அறிக்கையில், தமிழர்கள் நிறைந்துள்ள வெளிநாடுகளில், தமிழர்களே தூதுவர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று திமுக கோரியது. இப்படி தமிழ் மக்களது உரிமைகளுக்காக ஆரம்பகாலம் முதல் குரல் கொடுக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
“கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்? அது கடல் கடந்த தமிழர்களின் கண்ணீரால்!” என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
மலையகத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பியபோது அவர்களை அரவணைத்து தமிழக மலைப்பகுதிகளில் குடியமர்த்தி TANTEA, அரசு ரப்பர் தோட்டங்கள் மூலம் அவர்கள் வாழ்வில் உயர வழிவகை செய்தோம்.
தொப்புள்கொடி உறவுகளுக்கு தமிழ்நாடு என்றும் துணை நிற்கும்!
அந்த உணர்வோடுதான் அனைத்துப் பிரச்சினைகளையும் அணுகி துயர் துடைக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். உரிமை காக்கவும் உதவிகள் செய்து வருகிறோம். அந்த வகையில், மலையக தமிழ் மக்களின் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன்.
மலையக தமிழர்களின் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் போல கல்வியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் அவர்கள் மேலெழும்பும் காலத்தை எதிர்நோக்கி தமிழ்நாடு காத்திருக்கிறது. கல்வி, சுகாதாரம், வாழிட உரிமைகள், பொருளாதார உதவிகள், சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.
நாட்டை வாழ வைத்த மக்களை வாழ வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும். நன்றி. வணக்கம்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துறை வழங்கினார்.
The post ”மலையக தமிழ் மக்களின் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும்..!” கொழும்பு ’நாம்200’ மாநாட்டில் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ’’நாட்டு மக்களின் விடுதலைக்காக களம் காணட்டும் கழகப் படை..!’’ மு.க.ஸ்டாலின் சூளுரை first appeared on Madras Murasu.
]]>முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், ’’நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்’ என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கை:
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சி செய்கின்ற வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிற வகையில் நாள்தோறும் சாதனைத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் பின்பற்றக்கூடிய வகையில் நம்முடைய அரசின் திட்டங்கள் மக்களுக்குப் பயனளித்து வருகின்றன.
அதேநேரத்தில், மாநிலங்களின் வளர்ச்சியை விரும்பாத – மாநிலங்களின் உரிமைகளை மதிக்காத – மாநிலங்களுக்குப் போதிய நிதியளிக்காத – மாநிலங்கள் என்ற கட்டமைப்பே இருக்கக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டவர்களின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து Speaking for India என்ற நிகழ்வின் மூன்றாவது பகுதியில் பேசியிருக்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சிக் கொள்கையையும் அதன் இன்றைய தேவையையும் அந்த உரையில் குறிப்பிட்டிருக்கிறேன். தமிழிலும் இந்திய மொழிகள் பலவற்றிலும் வெளியாகியுள்ள அந்த உரையை உடன்பிறப்புகளாகிய நீங்கள் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அதனை எல்லாரிடமும் எடுத்துச் செல்ல வேண்டிய பணியையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இந்தியா கூட்டணி
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான மதவாதக் கொள்கை கொண்ட ஆட்சியை அகற்றிட இந்தியா கூட்டணி உருவாகி, நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. அதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு மகத்தானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றிட, தமிழ்நாடு, புதுவை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கான கட்டமைப்பை இந்தியா கூட்டணி உருவாவதற்கு முன்பே நாம் தொடங்கிவிட்டோம்.
கடந்த மார்ச் 22-ஆம் நாள் நடந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என பூத் கமிட்டி அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் மகளிர், இளைஞர், சமூக வலைத்தளச் செயல்பாட்டாளர்கள் இருக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முழுவதுமுள்ள வாக்குச்சாவடிகளுக்கு பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் பங்கேற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதும் உறுதி செய்யப்பட்டது.
புதிய உறுப்பினர் அட்டைகள்
அதே மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், தி.மு.கழகத்தில் ஏற்கனவே உள்ள ஒரு கோடி உறுப்பினர்களுடன் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, ஒரு தொகுதிக்கு எத்தனை உறுப்பினர்கள் என்ற விவரமும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு, அதன்படி புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு நிறைவடைந்துள்ளது. புதிய உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆதாரங்களும் சரிபார்க்கப்பட்டுள்ளன. நவம்பர் 7-ஆம் நாள் முதல் கழகத்தின் புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகள் வழங்கப்படவிருக்கின்றன.
அதுபோலவே, பூத் கமிட்டிக்குரிய பாக முகவர்களின் (BLA2) கூட்டம் மண்டலவாரியாக நடைபெற்று வருகிறது. 26-07-2023 அன்று திருச்சியில் டெல்டா மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும், 17-08-2023 அன்று இராமநாதபுரத்தில் தென்மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும், 24-09-2023 அன்று காங்கேயத்தில் மேற்கு மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும், 22-10-2023 அன்று திருவண்ணாமலையில் வடக்கு மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும் சிறப்பான முறையில் நடந்தேறிய நிலையில், நவம்பர் 5 அன்று சென்னை மண்டலத்திற்கான பாக முகவர்களுக்குரிய பயிற்சிக் கூட்டம் திருவள்ளூரில் நடைபெறவிருக்கிறது.
வெறும் கூடிக் கலையும் கூட்டமா?
மாநாடுகள் போல நடைபெற்ற ஒவ்வொரு கூட்டத்திலும், பாக முகவர்களும் பூத் கமிட்டி உறுப்பினர்களும் எத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் எப்படி செயல்படவேண்டும் என்பதையும், கழகத்தின் சார்பிலான செயலிகளைப் பயன்படுத்தும் முறையையும் தெளிவாக விளக்கி, ஒவ்வொரு வாக்கையும் சிந்தாமல் சிதறாமல் கழக அணிக்குக் கொண்டு வருவதற்குரிய வகையில் பயிற்சிகள் அமைந்தன. வெறும் கூடிக் கலையும் கூட்டமாக இல்லாமல், கொள்கைத் தெளிவுடனும் அந்தக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சியுடனும் இந்தக் கூட்டங்கள் மிகச் சிறந்த பயிலரங்குகளாக நடைபெற்றிருக்கின்றன.
100 வாக்காளர்களுக்கு ஓர் உறுப்பினர்
பூத் கமிட்டிகளை அமைப்பதற்காகவும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை மேற்கொள்வதற்காவும் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கழகத்தின் சார்பில் தொகுதிப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தங்கள் பணியை நிறைவேற்றியுள்ளனர். 100 வாக்காளர்களுக்கு ஓர் உறுப்பினர் என்ற அளவில் நியமிக்கப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களின் விவரங்களை இந்தப் பார்வையாளர்கள் சரிபார்த்ததுடன், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு நிகழ்வுகளையும் வீடு வீடாகச் சென்று மேற்கொள்வதை உறுதி செய்தனர். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகும், வாரம் ஒரு நாளேனும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிக்கு நேரில் சென்று களப்பணியாற்றி, வாக்காளர்களின் ஆதரவை உறுதி செய்யும் பணியும் தொகுதிப் பார்வையாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
உங்களில் ஒருவனான நானும்
கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் வரை களத்தில் பணியாற்றும்போது, கழகத் தலைவர் என்ற பொறுப்பை உங்களால் அடைந்த கழகத்தின் மூத்த தொண்டனான உங்களில் ஒருவனான நானும் – தமிழ்நாடு முழுவதும் பயணித்து வருகிறேன். அரசு அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு எந்தளவில் பயன்களைத் தருகின்றன, எந்தெந்த திட்டங்களில் சுணக்கம் தெரிகிறது, அவற்றை மேம்படுத்த வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை நான் மாவட்டந்தோறும் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கி, பணிகளை விரைந்து நிறைவேற்றச் செய்து வருகிறேன். கழகத்தின் மூத்த அமைச்சர்களும் இதே போல ஆய்வுப் பணியை மேற்கொண்டு, இளைய அமைச்சர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள்.
கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன்-விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சருமான தம்பி உதயநிதியும் தமிழ்நாடு முழுவதும் கழக நிகழ்வுகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்பதுடன், கழக அரசின் திட்டங்கள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் பணிகளிலும் முனைப்பாகச் செயல்பட்டு வருவதை நான் செல்லும் மாவட்டங்களில் என்னைச் சந்திக்கும் மூத்த அமைச்சர்களும் மாவட்டக் கழகச் செயலாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.
தம்பி உதயநிதி
கழகத்தில் எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞருக்காகவும், கருப்பு-சிவப்பு கொடியின் நிறமே தங்கள் குருதி நிறம் என்ற உணர்வுடனும் தங்கள் இளமை வாழ்வை இயக்கத்திற்கு அர்ப்பணித்து, இன்று மூத்த உறுப்பினர்களாகத் திகழ்பவர்களுக்கு மாவட்டந்தோறும் பொற்கிழி வழங்குகிறார் தம்பி உதயநிதி. கழகம் என்றென்றும் வலிமையுடன் திகழ்ந்து, ஆதிக்க சக்தியினரையும், அவர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் கூட்டத்தினரையும் ஒருசேர வீழ்த்த வேண்டும் என்பதற்காக அயராது பாடுபடும் மூத்த உறுப்பினர்களைத் தம்பி உதயநிதி மதித்துப் போற்றுகின்ற விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இதைத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒன்றியத்திலும், நகரத்திலும், பேரூர்களிலும் பொறுப்பில் இருக்கும் கழகத்தினர் செய்ய வேண்டும். மூத்த உடன்பிறப்புகளின் அர்ப்பணிப்பையும் நெஞ்சுறுதியையும் இளைய உடன்பிறப்புகள் பெற வேண்டும் என்பதை இளைஞரணிச் செயலாளர் பங்கேற்கும் இந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
உங்களுடைய பங்களிப்பு
அதுபோலவே, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை உருக்குலைத்து, தமிழ்நாட்டு மாணவமணிகளின் மருத்துவப் படிப்புக் கனவைச் சிதைக்கும் நீட் எனும் கோடரிக்கு எதிராகத் தம்பி உதயநிதி அவர்கள் கழக இளைஞரணி-மாணவரணி-மருத்துவ அணியை இணைத்து தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கமும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நீட்டை விரட்டும் இயக்கத்திற்கான முதல் கையெழுத்தைக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி நடத்திய நிகழ்வில் உங்களில் ஒருவனான நான் போட்டேன். இந்தக் கையெழுத்து இயக்கத்தில், கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் பங்கேற்று கையெழுத்திடுவது மட்டுமின்றி, அவரவர் பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் நீங்கள் கையெழுத்தைப் பெற வேண்டும். 50 இலட்சம் என நிர்ணயித்திருக்கின்ற இலக்கையும் தாண்டி உங்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவக் கனவு சிதைகின்ற அச்சத்தில் உள்ள மாணவர்கள், நீட் தேர்வினால் பெரும் அவதிக்கு உள்ளாகும் பெற்றோர் ஆகியோரிடம் கையெழுத்து பெற வேண்டும்.
இளைஞரணி சார்பில் வருகின்ற டிசம்பர் 17-ஆம் நாள் சேலம் மாநகரில் இளைஞரணியின் மாநில மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற இருக்கிறது. மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன், இந்தியாவின் தென் திசையிலிருந்து எத்திசைக்கும் பரவுகின்ற வகையில் நடைபெறவுள்ள எழுச்சி மாநாட்டைக் கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மேற்கொள்ள வேண்டும்
தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமையையும் திராவிட முன்னேற்றக் கழகம் தன் தோளில் சுமந்துள்ளது. அதற்குப் பாக முகவர்களும், பூத் கமிட்டியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தொகுதிப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருப்போரும் வாரம் ஒரு முறையேனும் தொகுதிக்குச் சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரின் பணிகளையும் மூத்த தொண்டன் என்ற முறையில் கழகத்தின் தலைவனான நான் கண்காணித்து, ஒவ்வொரு தொகுதியின் நிலவரத்தையும் பெற்றுக் கொண்டுதான் இருப்பேன்.
அரசின் திட்டங்களின் பயன்கள்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் புரட்சித் திட்டம், பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாத விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட மகத்தான திட்டங்களின் பயன்கள் மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவேண்டும். அது பற்றி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அரசின் திட்டங்கள் எவருக்கேனும் கிடைக்காமல் இருந்தால், அவர்கள் தகுதியான விண்ணப்பதாரர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அரசின் திட்டங்களின் பயன்கள் கிடைக்கும்படி செய்திட வேண்டியது தொகுதிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய – நகரச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.
ஏழரை லட்சம் கோடி ஊழல்
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியினைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் நாட்களில் நம்முடைய கழகத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்து, யார் யார் உண்மையான வாக்காளர்கள், யார் யார் போலியானவர்கள், இறந்துபோனவர்கள் எத்தனை பேர், இடம் மாறியவர்கள் எத்தனை பேர், இரண்டு இடங்களில் பெயர் கொடுத்திருப்போர் யார் என்பது உள்ளிட்டவற்றைக் கவனித்திட வேண்டும்.
சென்னை மண்டல பாக முகவர்கள் கூட்டம் நடைபெறும் நாளான நவம்பர் 5-ஆம் நாளன்று கூட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடைபெறவிருக்கிறது. தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் இருக்கக்கூடிய பூத் கமிட்டி உறுப்பினர்களைக் கொண்டு அந்தப் பணியைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக! ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்ததாக சி.ஏ.ஜி.யால் குற்றம்சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க.வின் கைகளிலிருந்து காப்பாற்றும் வகையிலும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் எண்ணற்ற துரோகங்கள் செய்துவிட்டு, இப்போது கூட்டணி முறிந்துவிட்டதாக வேடம் போடும் அ.தி.மு.க.வின் கள்ளக்கூட்டணியை அம்பலப்படுத்தும் வகையிலும் வீடு வீடாக உங்கள் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
மகத்தான வெற்றி
நாற்பதும் நமதே, நாடும் நமதே என்று கடந்த 2022-ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் என் முழக்கத்தை முன்வைத்தேன். அதைச் செயல்படுத்தும் வியூகங்கள் வலுப்பெற்று, இன்று இந்தியா முழுவதும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான அலை கடுமையாக வீசிக்கொண்டிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம்தான்! ஜனநாயகம் காப்பதில் உறுதியாக உள்ள தோழமை சக்திகளுடன் இணைந்து மகத்தான வெற்றியைப் பெறுவோம். அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியாகக் களம் காணட்டும் கழகப் படை. வெற்றியை உறுதி செய்யும் உழைப்பை வழங்கட்டும்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!
அன்புடன்
மு.க. ஸ்டாலின்
திருவள்ளுவர் ஆண்டு 2054
ஐப்பசி 16
02-11-2023
The post ’’நாட்டு மக்களின் விடுதலைக்காக களம் காணட்டும் கழகப் படை..!’’ மு.க.ஸ்டாலின் சூளுரை first appeared on Madras Murasu.
]]>The post ’’வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை மிரட்டும் பிஜேபி ஆட்சி..!’’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.
]]>முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.11.2023) சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி இல்ல திருமண விழாவில் பேசியதாவது:
மணமக்களே, மணமக்களுடைய பெற்றோர்களே, உற்றார் உறவினர்களே, நண்பர்களே, திரளாக திரண்டிருக்கக்கூடிய என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
நம்முடைய கிருஷ்ணசாமி அருமை மகள் தாரணி-க்கும், முருகன் – மஞ்சுளா தம்பதியின் மகன் மருத்துவர் எம். பரத் கௌசிக் -கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது. இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பை பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
சீர்திருத்த திருமணங்கள்
நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம் என்பது ஒரு சீர்திருத்த திருமணம். சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம். இதுபோன்ற திருமணங்களில் நாம் பங்கேற்கின்ற நேரத்தில் வாழ்த்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக ஒரு செய்தியை பதிவு செய்யாமல் நான் இருந்தது இல்லை. அந்த வரலாற்றுச் செய்தி என்னவென்று கேட்டால், இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த சீர்திருத்த திருமணம் 1967-க்கு முன்னால் நடைபெற்றிருக்கும் என்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெறமுடியாத நிலையில் இருந்தது. ஆனால் 1967-ல் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆட்சியின் தலைவனாக தமிழக முதல்வராக அறிஞர் அண்ணா அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முதலமைச்சராக முதன்முதலில் சட்டமன்றத்தில் நுழைந்து சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கின்ற அந்த தீர்மானத்தை கொண்டு வந்து அவர் நிறைவேற்றி தந்தார்.
ஆகவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த சீர்திருத்த திருமணம் முறைப்படி, சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது. இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம். இன்னும் பெருமையோடு சொல்லவேண்டுமென்றால், தமிழ் திருமணம், இந்த தமிழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நாடு மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட தமிழ் திருமணமாக, சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணமாக நம்முடைய அருமை சகோதரர் கிருஷ்ணசாமி தன்னுடைய அன்பு மகளுக்கு இன்றைக்கு சிறப்போடு நடத்தியிருக்கிறார்.
இது எங்கள் வீட்டு திருமணம்
‘பூந்தண்மல்லி’ என்பதுதான் அதன் உண்மை பெயராக இருந்தது. இன்றைக்கு பூந்தமல்லி, பூந்தமல்லி என்று நாம் அழைக்கிறோம். ஆனால் உண்மையில் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அது பூந்தண்மல்லி என்றுதான் அழைத்துக் கொண்டிருந்த காலம். அது நாளடைவில் மாறிப்போய் இன்றைக்கு பூந்தமல்லி என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம். பூந்தண் என்றால் அந்த ‘தண்’ என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் குளிர்ச்சி! அந்த குளிர்ச்சிமயமான மலர்களுடைய பெயர்கள் மட்டுமல்ல, கொள்கை பிடிப்புள்ள உடன்பிறப்புகளும், பிறந்திருக்கக்கூடிய பகுதியாகதான் பூந்தமல்லி இருந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கிறபோது நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். அதில் ஒருவராக இன்றைக்கு நம்முடைய கிருஷ்ணசாமி திகழ்ந்து கொண்டிருக்கிறார். கிருஷ்ணசாமி இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் பழகுவதற்கு இனிமையானவர். இனிமையானர் மட்டுமல்ல, உறுதியானவர் அதுதான் முக்கியம். தம்பி, உதயநிதி இங்கே குறிப்பிட்டுச் சொன்னார். இந்த திருமணத்தை அவர்கள் வீட்டு திருமணமாக நாங்கள் கருதவில்லை, இது எங்கள் வீட்டு திருமணமாக, இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இது நம்முடைய வீட்டு திருமணமாக கருதிதான் இந்த விழாவில் பங்கேற்று மணமக்களை நாமெல்லாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் எதிர்க்கக்கூடாது
கிருஷ்ணசாமி, நன்றியுரையாற்றுகின்ற போது குறிப்பிட்டுச் சொன்னார். அவருடைய தந்தையை அடையாளம் காட்டினார். தந்தைக்கு உரிய வணக்கத்தை எடுத்துச் சொன்னார். அப்படி சொல்கின்ற நேரத்தில் அவருடைய வரலாற்றையும் அவர் நினைவுபடுத்தி எடுத்துச் சொன்னார். அவருடைய தந்தை ஆதிசதாசிவம்.
1976-ஆம் ஆண்டில் நாம் ஒரு நெருக்கடி நிலையை சந்தித்தோம். நாட்டிற்கே நெருக்கடி வந்தது. அந்த நேரத்தில் எமர்ஜென்ஸியை நாம் எதிர்த்தோம். தலைவர் கலைஞர் -க்கு தூதுவர்கள் டில்லியிலிருந்து வருகிறார்கள். அம்மையார் இந்திராகாந்தி கொண்டு வந்திருக்கக்கூடிய அவசர நிலையை, எமர்ஜென்ஸியை நீங்கள் எதிர்க்கக்கூடாது. ஆதரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் எதிர்க்கக்கூடாது. அப்படி மீறி எதிர்த்தால், உங்கள் ஆட்சி உடனடியாக கவிழ்க்கப்படும். நீங்கள் எதிர்க்காமல் இருந்தால், இன்னும் உங்கள் ஆட்சி சில ஆண்டு காலம் தொடரும் என்று வந்த தூதுவர்கள், கோபாலபுரத்தில் உள்ள கலைஞரிடத்தில் சொன்னார்கள். அப்போது நான், அண்ணன் துரைமுருகன், டி.ஆர்.பாலு எல்லாம் அருகில் இருக்கிறோம். அப்போது கலைஞர் ஒரு வார்த்தையை சொன்னார். எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும், நாட்டிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடி சூழ்நிலையை நாங்கள் ஆதரிக்கமாட்டோம். நாங்கள் ஜனநாயகத்தைதான் நம்பியிருக்கிறோம். ஆட்சி அல்ல, எங்கள் உயிரே போனாலும், நாங்கள் இதற்கு சம்மதிக்கமாட்டோம் என்று தலைவர் கலைஞர், வந்த தூதுவரிடத்தில் சொல்லி அனுப்பினார்கள். இது வரலாறு.
கழக ஆட்சி கலைக்கப்படுகிறது
சொல்லி அனுப்பிவிட்டு, அடுத்த நாள் சென்னை கடற்கரையில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தை திரட்டி, திரண்டிருந்த அந்த மக்கள் கூட்டத்தில் தலைவர் கலைஞர் முன்மொழிந்தார்கள். அம்மையார் இந்திராகாந்தி அவர்களே, நீங்கள் கொண்டு வந்திருக்கக்கூடிய அவசர கால நிலையை உடனடியாக திரும்ப பெறவேண்டும். எமர்ஜென்ஸியை இரத்து செய்யவேண்டும். மிசா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் வைத்திருக்கக்கூடிய தலைவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும், பல்வேறு இந்திய நாட்டின் தலைவர்கள் எல்லாம் வாடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று சொல்லி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை தலைவர் கலைஞர் முன்மொழிய குழுமியிருந்த மக்கள் அனைவரையும் எழுந்திருக்க வைத்து வழிமொழிய வைத்தார். தீர்மானம் நிறைவேற்றிய அடுத்த வினாடி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்படுகிறது. கலைக்கப்பட்டதற்கு பிறகு பலபேர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் எல்லாம் கைது செய்யப்படுகிறார்கள். அந்த வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியும். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு அதுவும் சென்னை சிறையில் நடந்த கொடுமைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். அதைப்பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.
சிறையில் அடைத்தார்கள். இதுதான் வரலாறு..!
எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால், அந்த சூழ்நிலையில், நம்முடைய கிருஷ்ணசாமி அவர்களுடைய தந்தை ஆதிசதாசிவம் துணிச்சலானவர். பல பேர் வேட்டிக் கட்டுவதற்கே பயப்பட்டார்கள். அப்படியே வேட்டிக் கட்டினாலும், கருப்பு, சிவப்பு பார்டர் வைத்த வேட்டியை சிலபேர் கட்டமாட்டார்கள். அவ்வளவு பயம் சில பேருக்கு இருந்தது. உடனே கருப்பு, சிவப்பு உள்ள வேட்டியை பார்த்தால் கைது செய்து விடுவார்கள். அவ்வளவு கொடுமைப்படுத்தக்கூடிய நிகழ்ச்சியெல்லாம் நடந்தது. அந்த நேரத்தில் துணிச்சலோடு நம்முடைய கிருஷ்ணசாமி தந்தை ஆதிசதாசிவம் கழுத்தில் கருப்பு, சிவப்பு துண்டை அணிந்துகொண்டு காவல்நிலையத்திற்கு முன்பு நின்றுகொண்டு எமர்ஜென்ஸியை எதிர்க்கக்கூடிய அந்த வாதங்களை எல்லாம் எடுத்துச் சொல்லக்கூடிய அந்த நிலையை பார்த்து அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இதுதான் வரலாறு.
அப்போது சிறையில் இருந்த நேரத்தில் நம்முடைய கிருஷ்ணசாமி அவர்களே சொன்னார், அப்போது அவருக்கு வயது 10. அந்த 10 வயது சிறுவனாக இருந்து கிருஷ்ணசாமி தன்னுடைய தந்தையை பார்க்க சிறைக்கு சென்றபோது அவருக்கு ஏற்பட்ட கொடுமைகள் எல்லாம் தன்னுடைய தந்தை சொல்கின்றபோது, அவருக்கு கோபம் வரவில்லை, அதற்கு நேர்மாறாக என்ன வந்தது என்றால், உணர்ச்சி வந்தது. அந்த உணர்ச்சி எல்லாம் கடந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பற்று வந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவருக்கு ஈடுபாடு வந்ததற்கு காரணம் என்ன என்று கேட்டால், அவர் தந்தை கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த காட்சிதான் அவர் திமுக மீது இன்றைக்கு ஈடுபாடு கொண்டு, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சியில் பல பொறுப்புகளை ஏற்று, செயல்படுத்தக்கூடிய நிலையில் இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறார்.
அந்த 10 வயதில், நம்முடைய கிருஷ்ணசாமி
இளைஞர் அணி தொடங்கப்பட்டபோது நான்தான் அந்த பொறுப்பில் இருந்தேன் உங்கள் எல்லாருக்கும் தெரியும். அப்போது இளைஞர் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு நம்முடைய கிருஷ்ணசாமி அந்த பகுதியில் கிளைக் கழகத்தின் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றிய அந்த நிகழ்ச்சி. அவரே பேசுகின்றபோது சொன்னார், என்னை அழைத்துக்கொண்டு கொடியேற்று விழா நடத்திய நேரத்தில், கொடியை ஏற்றிவிட்டு, ஏன் கல்வெட்டு இல்லை என்று கேட்டேன். கல்வெட்டு மட்டும் கேட்கவில்லை, நிதியும் கேட்டேன். அப்போது நிதியும் கொடுக்கவில்லை. இன்றைக்கும் அவர் கடனாளியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால், எப்படி வசூலிப்பது என்று எனக்கு தெரியும். அது அல்ல முக்கியம். எதற்காக இதை சொல்கிறேன் என்று சொன்னால், அந்த 10 வயதில், நம்முடைய கிருஷ்ணசாமி இயக்கத்தில் பற்று கொண்டு அந்த வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றி, படிப்படியாக வளர்ந்து, அவர் சட்டக் கல்லூரியில் மாணவரணி பொறுப்பேற்று பணியாற்றி, அதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர் அணியில் தன்னை இணைத்துக்கொண்டு. ஆதிதிராவிடர் நலக்குழுவில் அவர் பொறுப்பேற்று பணியாற்றி, அதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு முறை, அதாவது நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றக்கூடியவர்கள் என்று சிலரை குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. அந்த குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருவராக இருந்தவர்தான் நம்முடைய கிருஷ்ணசாமி.
உங்களுக்கு நன்றாக தெரியும்
இதை தலைவர் கலைஞர் சொன்னால் கூட நான் பெரிதுபடுத்தியிருக்க மாட்டேன். ஆனால், நம்முடைய மறைந்த ஒன்றிய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் பலமுறை சொல்லியிருக்கிறார். அவர் வாயில் இருந்து வருவது என்பது சாதாரண விஷயமல்ல. அவரே சொல்லியிருக்கிறார். பலமுறை என்னிடத்தில் சொல்லியிருக்கிறார். தலைவரிடத்திலும் சொல்வார், மாமா, கிருஷ்ணசாமி, நாடாளுமன்றத்தில் உட்கார்ந்தால், உட்கார்ந்ததுதான், எழுந்து போகமாட்டார். அவ்வளவு உன்னிப்பாக கவனித்து அனைத்து பிரச்சனைகளையும் கூர்ந்து கவனிக்கக்கூடிய ஆற்றலை பெற்றிருக்கக்கூடியவராக இருக்கிறார் என்று பலமுறை சொல்லியிருக்கிறார். நானும் அதை கேட்டிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் நூல் நிலையம் இருக்கிறது. அந்த நூல்நிலையத்தை பலபேர் பயன்படுத்த மாட்டார்கள். சிலபேர் தான் பயன்படுத்துவார்கள். அதையும் முறையாக பயன்படுத்தியவர்தான் நம்முடைய கிருஷ்ணசாமி. அவர்தான் இன்றைக்கு பூவிருந்தவல்லி தொகுதியில் இடைத்தேர்தல் வந்தபோது அவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தோம். தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். அதற்குப் பின்னால் இப்போதும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆகவே, இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் பணியாற்றக்கூடிய வாய்ப்பை பெற்றிக்கின்றபோது நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது இன்றைக்கு நாட்டில் உள்ள நிலைமை எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.
இது என்ன கேலிகூத்து!
ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா? என்ற நிலையில்தான் இன்றைய சூழ்நிலை அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பிஜேபி ஆட்சி, தனக்கெதிராக யார் எந்த கருத்தைச் சொன்னாலும், அவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது, அதற்காக IT-ஐ, EDஐ அதாவது அமலாக்கத்துறையை, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தொலைபேசியை டேப் செய்கின்ற முயற்சியை கையாண்டிருக்கிறார்கள். ஆப்பிள் என்ற ஒரு பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களே எச்சரித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கெல்லாம் இதுபோல ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று அவர்களே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். கடிதம் எழுதியிருக்கிறார்கள். இப்படி செய்தி வந்தவுடனே, ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் என்ன பதில் சொல்லியிருக்கிறார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார். இது என்ன கேலிகூத்து! செய்வது எல்லாம் செய்துவிட்டு இன்றைக்கு விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று செய்தியை வெளியிடுகிறார் என்று சொன்னால், அந்த அளவுக்கு நாட்டில் இன்றைக்கு ஒரு கொடுமையை சந்திக்கக்கூடிய நிலையில் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு அவர்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணியைப் பார்த்து தோல்வி பயம் வந்துவிட்டது.
பயம் வந்துவிட்டது.
இங்கே இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் உட்கார்ந்திருக்கிறோம். இந்தியா கூட்டணி இன்றைக்கு எதிர்பாராத வகையில் அவர்கள் எதிர்பாராத வகையில் அமைந்திருக்கிறது. இன்றைக்கு மக்களிடம் சென்று, மோடி ஆட்சியின் கொடுமைகளை, அக்கிரமங்களை, அநியாயங்களை, அவலநிலைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஐந்து மாநில தேர்தல்கள் வர இருக்கிறது. நமக்கு கிடைக்கக்கூடிய செய்திகள் எல்லாம் ஐந்து மாநிலத்திலும் பிஜேபி தோல்வியை தழுவப் போகிறது என்ற செய்திதான் வந்து கொண்டிருக்கிறது. அதனால் அவர்களுக்கு அச்சம் வந்துவிட்டது. பயம் வந்துவிட்டது. அந்த பயத்தின் காரணமாகத்தான், இன்றைக்கு இதுபோன்ற செயல்களில் எல்லாம் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் முறியடித்து, நாட்டிற்கு ஒரு நல்ல விமோசனத்தை உருவாக்கித் தருவதற்கு, இந்தியாவை காப்பாற்றுவதற்கு, இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அத்தனை பேரும் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியை தேடித்தர வேண்டுமென்று உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு, அந்த வெற்றியை தேடி தரக்கூடிய படைவரிசையில் கிருஷ்ணசாமி இன்றைக்கு செயலாற்றிக் கொண்டிருக்கிறார். அவருடைய செயல்பாடு வெற்றி பெறவேண்டும்.
வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்..!
அவருடைய அன்புச் செல்வங்கள் இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கிறார்கள். மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்” வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று வாழ்த்தி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.
The post ’’வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை மிரட்டும் பிஜேபி ஆட்சி..!’’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.
]]>The post ’’இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட்(Capitaland) குழுமத்தின் சர்வதேச தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.10.2023) சென்னையில் பேசியதாவது:
கேப்பிட்டாலேண்ட் முதலீட்டு நிறுவனத்தின், சர்வதேச தொழில்நுட்பப் பூங்கா, சென்னை – ரேடியல் சாலைத் திட்டத்தின் முதல் கட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகத்தரம் வாய்ந்த ஒரு தொழில்நுட்பப் பூங்காவை தமிழ்நாட்டில் தொடங்குவதற்காக இந்த நிறுவனத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் புதியதொரு தொழில் புரட்சி நடந்து கொண்டு வருகிறது. அதற்கு சான்றாக, ஏராளமான தொழில் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் கேப்பிட்டாலேண்ட் நிறுவனமும் இணைந்திருப்பது எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது. 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டிருக்கின்ற இந்த சர்வதேசத் தொழில்நுட்பப் பூங்காவில், 50 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிகிற அளவுக்கான உலகத்தரம் வாய்ந்த அலுவலக இடங்கள் கட்டித்தர நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது இன்றைக்கு மிக மிகத் தேவையான ஒன்றாக இருக்கிறது.
முதல் கட்டமாக, இன்றைக்கு 1.3 மில்லியன் சதுர அடிக்கான பூங்கா தயார் நிலையில், துவக்கி வைக்கப்பட இருக்கிறது. இரண்டாவது கட்டத்தின் கட்டுமானப் பணிகளையும் துவக்கி இருப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என்று இந்த நேரத்தில் நான் உறுதி அளிக்கிறேன்.
நான் கடந்த மே மாதம் சிங்கப்பூருக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தேன். அங்கே கிடைத்த வரவேற்பும், உற்சாகமும் எங்களால் மறக்க முடியாதது. இந்தப் பயணத்தின்போது, கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் C.E.O சஞ்சீவ் தாஸ் குப்தா அவர்களை சந்தித்து, அவர்கள் நிறுவனம் பல முதலீட்டுத் திட்டங்களை தமிழ்நாட்டில் மேற்கொள்ளுவதை பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தினேன். அதன் தொடர்ச்சியாக, இந்த விழா நடைபெறுவது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது. தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்வார்கள். அது போலவே நடந்திருக்கிறது. எங்கள் ஆட்சியின் மீதும், எங்கள் தமிழ்நாட்டின் மீதும் நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தொழில்துறையில் முதன்மை மாநிலமாக முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அது மட்டுமல்ல, இந்த வளர்ச்சி சீராகவும், பரவலாகவும் இருக்க வேண்டுமென்று மாநிலத்தில் இருக்கின்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் 9 நியோ டைடல் பார்க்குகள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டும் வருகிறது.
முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்கின்ற வகையில், உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்களை அமைத்துக் கொண்டு வருகிறோம். வளர்ந்து வருகின்ற துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கின்ற வகையில், துறை சார்ந்த கொள்கை அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் பெருமளவில் ஈர்ப்பதற்காக திட்டங்கள் தீட்டினோம்.
உலக அளவில், அதிவேகமாக ஏற்பட்டு வருகின்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய தொழில்துறையும் பயணம் செய்வது இன்றியமையாத ஒன்று. இதற்கான முயற்சிகளை ஊக்கப்படுத்தி, இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்க்கின்ற நோக்கத்தில்தான் “தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை 2022” கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்னால் வெளியிடப்பட்டது. இதற்குப் பிறகு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்கம், புத்தொழில்கள் மற்றும் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற துறைகளில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொழில்துறை கல்வியாளர்கள், புத்தாக்கம் மேற்கொள்வோர் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்ஸின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட GCC-க்கள் தங்களுடைய புதிய நிறுவனங்கள் அல்லது விரிவாக்கத் திட்டங்களை நிறுவியிருக்கிறார்கள். யு.பி.எஸ், வால்மார்ட் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி போன்ற சர்வதேச நிறுவனங்கள் தங்களுடைய GCC மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை அண்மையில் நிறுவியிருக்கிறது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில், தமிழ்நாடு உலக அளவில் சிறந்து விளங்கி வருகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பயனை ஏற்படுத்தும். இந்த வேகத்தை பார்க்கின்றபோது “2030-ஆம் ஆண்டிற்குள்
1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற எங்கள் இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தசோ சிஸ்டம், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீமென்ஸ்
அமெரிக்க நிறுவனமான ஜி.இ. ஏவியேஷன் உடன் இணைந்து, மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையங்கள் (Centres of excellence) மற்றும் தொழில் புத்தாக்க மையங்களை (Start-Ups) தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. திருப்பெரும்புதூர் மற்றும் ஓசூரில் இருக்கின்ற சிப்காட் தொழிற் பூங்காக்களில், உலகத் தரம் வாய்ந்த தொழில் புத்தாக்க மையமும் அமைக்கப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்ல, ஒரு துடிப்பான தகவல் தொழில்நுட்ப சூழலமைப்புடன் வளர்ச்சிக்குத் திறன் இடைவெளி ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்று தான், என்னுடைய கனவுத்திட்டமான, நான் முதல்வன் திட்டத்தை முழு முனைப்புடன் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். உயர்கல்வி கற்பிக்கின்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குத் தொழில் சார்ந்த பயிற்சிகளை வழங்கி, அவர்கள் துறையில் முதன்மையானவர்களாக திகழச் செய்ய வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோள். இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இந்த சீரிய முயற்சிகள் காரணமாகதான், தமிழ்நாட்டில், முதலீடுகளின் வரத்து வளர்ச்சியடைந்து வருவதை கண்கூடாக பார்க்கின்றோம்.
இதற்கெல்லாம் மணிமகுடமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகின்ற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கின்றோம். உங்களைப் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்துதான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம். உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கிறார்கள். பல நிறுவனங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்று பெருமைப்படுத்த இருக்கிறார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதற்கு முன்னதாகவே, கேப்பிட்டாலேண்ட் நிறுவனம் இந்த அதிநவீன பன்னாட்டுத் தொழில்நுட்ப பூங்காவை தொடங்கி இருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் தொழில் முயற்சிகள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொண்டு என் உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!
The post ’’இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ’’பசும்பொன்னில்1 கோடியே 55 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள்..!’’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கம் இட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் திருமகனார் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில், 1908-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள் பிறந்தார். பள்ளிப்படிப்பினை மட்டுமே முடித்திருந்தாலும், அன்னிய நாட்டினால் அடிமைப்பட்டிருந்த அடித்தள மக்களின் அன்றாட வாழ்க்கையே போரட்டமாக இருந்ததைக் கண்ணுற்ற தேவர் பெருமகனார், அம்மக்களின் வாழ்வு மேம்பட தன்னையே அர்ப்பணித்தார்.
தேவர் பெருமகன்
ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையினைத் திரட்டி அனுப்பிய பெருமை தேவர் பெருமகனார் அவர்களையேச் சாரும். 1920-ஆம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த மிகவும் கொடுமையான குற்றப்பரம்பரை என்கிற சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் போராடி அச்சட்டத்தினை அகற்றியவர் தேவர் பெருமகனார் ஆவார்.
1939-ஆம் ஆண்டு ஜூன் 22, அகில இந்திய பார்வர்டு கட்சியை நிறுவி நேதாஜி சுபாஷ் சந்திர போஸூடன் இணைந்து செயல்படல், 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அருப்புக்கோட்டை பாராளுமன்ற தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி என பல்வேறு உச்சங்களைத் தொட்டவர் தேவர் பெருமகனார். ‘வங்கத்தில் நேதாஜி; தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ எனத் தலைவர் கலைஞரால் போற்றப்பட்டவர்.
நினைவிடத்தில் மரியாதை
இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்ட விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நினைவிடத்தின் முன் ஒரு சிறிய இடத்தில், குறுகிய நேரத்தில் அதிக கூட்டம் கூடுவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் திறந்த வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வெயில் மற்றும் மழையில் இருந்து அவர்களைப் பாதுகாத்திடவும், கூட்ட நெரிசலை தடுப்பதற்கும் தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் விழாவின் போது நினைவிடத்தின் முன் தற்காலிக கொட்டகை / பந்தல் மற்றும் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது.
நீண்ட நாள் கோரிக்கை
தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தி அரசுக்கு பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை அளித்து வருகின்றனர்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில் 1 கோடியே 42 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் பாதையில் 12 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மற்றொரு மண்டபமும், ஆக மொத்தம் 1 கோடியே 55 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழ்நாடு அரசால் அமைத்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
The post ’’பசும்பொன்னில்1 கோடியே 55 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள்..!’’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு first appeared on Madras Murasu.
]]>The post ’’மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்கீடு..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:
மாற்றுத்திறனாளிகள் என்று பெயரிட்டு, அவர்களுக்கெனத் தனித் துறையையும் உருவாக்கி, விளிம்புநிலை மக்களான அவர்களது வாழ்வில் விளக்கேற்றியது நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு. நம்முடைய அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அரசாக, அவர்களது நலன் பேணும் அரசாக, அவர்களது உரிமைகளை நிலைநாட்டும் அரசாகச் செயல்பட்டு வருகிறது.
அதனால், “ஒரே ஒரு மாற்றுத்திறனாளிகூட மன வருத்தம் அடைந்துவிடக் கூடாது; ஒரே ஒருவருக்கு நன்மை அளிக்கும் என்றாலும் அந்தச் செயலை நாம் செய்தாக வேண்டும்” என்று முன்பு நடந்த கூட்டத்தில் நான் குறிப்பிட்டதை மீண்டும் இப்போது தொடக்கத்திலேயே நினைவூட்ட விரும்புகிறேன்.
நமது நாடு, ஐக்கிய நாடுகள் சபையில் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமைகளை காப்பதற்கான ஒப்பந்தத்தில் (UNCRPD) கையெழுத்திட்டு இருப்பதின் அடிப்படையிலும், நமது அரசின் குறிக்கோள்களான அனைத்துயிர்களும் ஒன்று – எல்லார்க்கும் எல்லாம் என்ற அடிப்படையிலும், செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு சில திட்டங்களை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு விழுக்காடு இடஒதுக்கீட்டின்கீழ், அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான குறைபாட்டினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதனை பயிற்சிகளின் மூலம் கட்டுப்படுத்தும் 92 மையங்கள் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சேவை புரியும் பணியாளர்களுக்கு, மதிப்பூதியம் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியினை வழங்குவதற்காக 22 சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்துடன் அரசு சாரா நிறுவனங்களுக்கு மானியம் வழங்கியும், சிறப்புப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு பயிலும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி இருக்கிறோம். உயர்கல்வி பயிலும், 1000 பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நவீன வாசிக்கும் கருவி வழங்கும் வகையில், 1 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
UPSC, TNPSC நடத்தும் தொகுதி 1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு முதன்மை தேர்வு எழுத தலா 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு 5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க ஆணை. தேசிய நிதி மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் பெறும் மாற்றுத் திறனாளிகள் உரிய சமயத்தில் கடனை திருப்பி செலுத்தும்போது, கடனுக்கான வட்டி தொகையை மாநில அரசே செலுத்துகிறது.
தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கி கடன் வழங்கும் நிறுவனமாக நியமிக்கப்பட்டு, 14 ஆயிரத்து 271 மாற்றுத்திறனாளிகளுக்கு
64 கோடி ரூபாய் செலவில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறு, குறு தொழில் மற்றும் பெட்டிக்கடை தொடங்க விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அல்லது கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என, இவற்றில் எது குறைவான தொகையோ அது மானியமாக வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஐந்து வகையான மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு உதவித்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருவாய் துறையின்கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளி குடும்ப தலைவி பெண்களுக்கு 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. – இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளின் கண்ணியம், தனிப்பட்ட சுதந்திரம், சுயமாக முடிவெடுக்கும் உரிமைகள் ஆகியவற்றினை ஊக்குவிக்கும் விதமாக தனியே மாநில ஆணையரகம் மூலம் வழக்குகளில் தீர்வு கண்டும், மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ளூர் மட்டக் குழு அமைத்து “பாதுகாவலர் சான்றிதழ்” வழங்கியும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மனநலம் பாதிப்படைந்தவர்களின் நலனுக்காக, “இடைநிலை பராமரிப்பு மையம்” மற்றும் “மீண்டும் இல்லம்” என்னும் புதிய திட்டத்தினை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் உள்ள மனநலம் பாதிப்படைந்த பெண்கள் மீண்டும் சமுதாயத்தில் தன்னிச்சையாக வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மனநலம் மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மூன்று இல்லங்கள் திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகைகள் உயர்த்தி, வழங்கப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழல் அமைக்கும் நடவடிக்கையாக புதிய கட்டடங்கள் அனைத்திலும், மின்தூக்கி, சாய்வுதளப்பாதைகளை அமைத்திடவும், மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு உகந்த கழிவறைகள் அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடையற்ற சூழல் அமைப்பதற்கான வழிகாட்டுதல்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் மாவட்ட அளவிலும் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சைகை மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, அரசு கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்காக 15 லட்சம் ரூபாய் செலவில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடையற்ற சூழல் நடவடிக்கைகளை ஊக்குவிக்க மாநில விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தடையற்ற சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசின் முன்னெடுப்பு நடவடிக்கையாக, மாற்றுத்திறனாளிகள் இயக்குநரக வளாகத்தில் “அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
இந்தச் சிறப்பு முயற்சியினைப் பாராட்டி, புதுதில்லியில் நடைபெற்ற ’எம்பசிஸ்’ விழாவில் “மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கான தேசிய மையத்தால்” 2023-ஆம் ஆண்டிற்கான “உலகளாவிய வடிவமைப்பு விருது”, “அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் தடையில்லாமல் மேற்கொள்ளும் நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை, தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் அணுகத்தக்க வகையில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் தங்கும் இருப்பிடங்களிலும் தடையற்ற சூழல் அமைய மாவட்ட அளவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் “விடியல் வீடு” என்னும் திட்டம், முன்னோடி திட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகளில் தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு உலக வங்கி நிதி உதவியுடன் “உரிமைகள் திட்டம்” 1773 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு உட்கோட்ட அளவிலும் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைத்து மறுவாழ்வு நிபுணர்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படும்.
முதற்கட்டமாக, 5 மாவட்டங்களில் உட்கோட்ட அளவில் 12 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களை எல்லாம் எவ்வாறு மேலும் சிறப்பாக செயல்படுத்தலாம் என்பதை இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசித்து, உறுப்பினர்கள் அரசுக்குப் பரிந்துரைக்கும் கருத்துக்கள் ஆய்வுசெய்து நுட்பமாகச் செயல்படுத்தப்படும் என்பதை தெரிவித்து என் உரையை இந்த அளவுடன் நிறைவு செய்கிறேன்.
The post ’’மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்கீடு..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ’’தலைக்கவசத்தை கட்டாயமாக்க வாதாடியவர் டாக்டர் ராமமூர்த்தி..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15.10.2023 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பி. ராமமூர்த்தி நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துரை வருமாறு:
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மருத்துவர் பி. ராமமூர்த்தி நூற்றாண்டு விழா கொண்டாடுவதையும், அதற்காக மிகச் சிறப்பான நினைவுத்தொகுப்பு வெளியிடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.
இந்த நிகழ்ச்சிக்காக அவரது குடும்பத்தின் சார்பில் என்னிடம் அழைப்பிதழ் தந்தார்கள். ராமமூர்த்தி எங்கள் குடும்ப மருத்துவர் என்பதை தாண்டி எங்கள் குடும்ப நண்பர் என்று தான் முதலில் சொல்ல வேண்டும்.
மருத்துவர் ராமமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்டகால நட்பு உண்டு. தலைவர் கலைஞர் அவர்களும், மருத்துவர் ராமமூர்த்தி அவர்களும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டால், இளமைக் கால நண்பர்கள் பேசிக் கொள்வதைப் போல இருக்கும்.
தலைவர் கலைஞரின் இலக்கிய ஆளுமை, எழுத்துநடை, ஆட்சி நிர்வாகத் திறன் மீது டாக்டர் ராமமூர்த்தி பெருமதிப்பு கொண்டிருந்தார். கலைஞர் மீது மட்டுமல்ல, என் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். நெருக்கடி நிலைக் காலத்தில், மிசா சட்டத்தின்கீழ் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். என்னைப் பார்ப்பதற்காக அனுமதி பெற்று வந்தவர் தான் மருத்துவர் ராமமூர்த்தி. எனது உடல்நிலையை கவனித்துக் கொண்டவர் டாக்டர் ராமமூர்த்தி.
மருத்துவ உலகத்தை கடந்து, அவருக்கு சமூக ஆர்வமும், நாட்டு மக்கள் மீதான அக்கறையும் அதிகமாக இருந்தது. இருசக்கர வாகனங்களில் அதிவேக பயணத்தின் காரணமாக பெரும் விபத்தையும், உயிரிழப்பையும் சந்தித்து வருவதை அறிந்து, தலைக்கவசத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் வீட்டிற்கே வந்து வாதாடினார். எதையும் கட்டாயமாக்கினால் கெட்டப் பெயர் வந்துவிடும், உள்நோக்கம் கற்பிப்பார்கள் என்று முதலமைச்சர் கலைஞர் அதன் இன்னொரு பக்கத்தை எடுத்துச் சொன்னார்.
மனித உயிரை காப்பதைவிட விமர்சனங்கள் பெரிதல்ல என்று வலியுறுத்தியவர் டாக்டர் ராமமூர்த்தி. அந்த இடத்தில் மருத்துவர் என்பதை கடந்து மனிதாபிமான காவலராக அவர் காட்சியளித்தார்.
மிகப் புகழ்வாய்ந்த, நாட்டுப்பற்று மிகுந்த குடும்பத்தில் பிறந்த ராமமூர்த்தி, தனக்கெனத் தனிப்பாதையைத் தேர்ந்தெடுத்ததோடு, அதில் தனிச்சிறப்பான இடத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டவர். உயிர்காக்கும் துறையான மருத்துவத்துறையில், நரம்பியல் துறை வல்லுநராக – இந்தியாவின் முகமாகவே உலகம் முழுதும் அறியப்பட்ட சிறப்புக்குரியவர் டாக்டர் ராமமூர்த்தி. இந்திய நரம்பியல் அறுவை சிகிச்சை இயலின் தந்தை என்றே போற்றப்பட்டவர்.
டாக்டர் ராமமூர்த்தி உலகம் முழுதும் சென்று உரை நிகழ்த்தியுள்ளார். உலகெங்கிலும் இருந்து வல்லுநர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். நரம்பியல் துறையிலும், தலைப் பகுதியில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சைப் பிரிவிலும் பல முன்னெடுப்புகளை நிகழ்த்தியுள்ளார்.
புதிய பிரிவுகளை நிறுவியுள்ளார். புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்திய குடியரசு தலைவர்களாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி ஆகியோராலும், இந்தியப் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோராலும் மதிக்கப்பட்ட ஆளுமையாக இருந்துள்ளார்.
மருத்துவத்துறை முன்னோடியாகவும், மனிதநேயப் பண்பாளராகவும் திகழ்ந்த டாக்டர் ராமமூர்த்தி நூற்றாண்டில் அவரது வாழ்வும் பணியும் சிறப்பான முறையில் நினைவுகூரப்பட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைப் போன்ற மனிதாபிமான மருத்துவ சமுதாயம் உருவாக உறுதியேற்போம்.
நன்றி, வணக்கம்.
The post ’’தலைக்கவசத்தை கட்டாயமாக்க வாதாடியவர் டாக்டர் ராமமூர்த்தி..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>