Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#வேல்முருகன் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Tue, 24 Oct 2023 04:10:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’கணவர் மரணம் – குவைத்தில் தவித்துக் கொண்டிருக்கும் மனைவியை அழைத்து வர வேண்டும்..!’’ பண்ருட்டி தி.வேல்முருகன் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25ae%25a3%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/#respond Tue, 24 Oct 2023 04:10:59 +0000 https://madrasmurasu.com/?p=7122 ’’கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத அவலம் நிலை ஏற்பட்டுள்ளது. குவைத்தில் தவித்துக் கொண்டிருக்கும் மனைவியை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பண்ருட்டி தி.வேல்முருகன், வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் திப்பிராஜபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் 22.10.2023 அன்று மாரடைப்பால் காலமானார். இவரது மனைவியான மகாலட்சுமி, குவைத் நாட்டில் பணியாற்றி வருகிறார். இதனால் அதிர்ச்சியையும், வேதனையையும் அடைந்த மகாலட்சுமி, தனது […]

The post ’’கணவர் மரணம் – குவைத்தில் தவித்துக் கொண்டிருக்கும் மனைவியை அழைத்து வர வேண்டும்..!’’ பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.

]]>
’’கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத அவலம் நிலை ஏற்பட்டுள்ளது. குவைத்தில் தவித்துக் கொண்டிருக்கும் மனைவியை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பண்ருட்டி தி.வேல்முருகன், வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் திப்பிராஜபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் 22.10.2023 அன்று மாரடைப்பால் காலமானார். இவரது மனைவியான மகாலட்சுமி, குவைத் நாட்டில் பணியாற்றி வருகிறார்.

இதனால் அதிர்ச்சியையும், வேதனையையும் அடைந்த மகாலட்சுமி, தனது கணவர் ரவிச்சந்திரன் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக முயன்று வருகிறார். ஆனால், சில விதிமுறைகளால் வர முடியாத சூழ்நிலை இருப்பதால், மகாலட்சுமி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறிப்பாக, குவைத்தில் பணியாற்றி வரும் நிறுவனம் மகாலட்சுமியை அனுப்ப மறுப்பதாக தெரிகிறது. இதுகுறித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர், வெளிவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு, மறைந்த ரவிச்சந்திரன் மற்றும் மகாலட்சுமியின் மகள் ரம்யா நீலமேகம் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

அதுமட்டுமின்றி, குவைத்தில் இருந்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள மகாலட்சுமி, அதில், தனது கணவர் ரவிச்சந்திரனின் இறுதி சடங்கில் பங்கேற்க வேண்டும் என்றும் அவரது முகத்தை கடைசியாக பார்க்க வேண்டும் என்றும் தான் தமிழ்நாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கணவரின் முகத்தை இறுதியாக பார்க்க முடியாதோ என்ற தவிப்பும், அச்சமும், மகாலட்சுமியிடம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, கணவர் இறந்த துக்கம் தாங்காமல் குவைத்தில் தவித்து வரும் மகாலட்சுமியை, தமிழ்நாட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

The post ’’கணவர் மரணம் – குவைத்தில் தவித்துக் கொண்டிருக்கும் மனைவியை அழைத்து வர வேண்டும்..!’’ பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/feed/ 0
”தமிழ்நாடு பாலஸ்தீனமாக மாறும் அபாயம்..!” பண்ருட்டி தி.வேல்முருகன் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%25ae https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#respond Wed, 18 Oct 2023 08:38:42 +0000 https://madrasmurasu.com/?p=6991 ”வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தால் தமிழ் குழந்தைகளுக்கு தாய் மொழி கல்வி மறுக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாடு பாலஸ்தீனமாக மாறும் அபாயம் உருவாகியுள்ளது’’ என்று பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரித்துள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: ’’மிகை எண்ணிக்கையிலான வெளி இனத்தார் ஒரு தேசிய இனத் தாயகத்தில், நுழைவது என்பது அத்தேசிய இனத்தை ஆக்கிரமிப்புச் செய்வதில்தான் முடியும் என்பதை வரலாறு பலமுறை கண்டிருக்கிறது. பாலஸ்தீனத்திலும், தமிழர் தீவான இலங்கையிலும் இதுதான் நடைபெற்றது. எனவே தான், ஒரு தேசிய […]

The post ”தமிழ்நாடு பாலஸ்தீனமாக மாறும் அபாயம்..!” பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.

]]>
”வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தால் தமிழ் குழந்தைகளுக்கு தாய் மொழி கல்வி மறுக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாடு பாலஸ்தீனமாக மாறும் அபாயம் உருவாகியுள்ளது’’ என்று பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’மிகை எண்ணிக்கையிலான வெளி இனத்தார் ஒரு தேசிய இனத் தாயகத்தில், நுழைவது என்பது அத்தேசிய இனத்தை ஆக்கிரமிப்புச் செய்வதில்தான் முடியும் என்பதை வரலாறு பலமுறை கண்டிருக்கிறது.

பாலஸ்தீனத்திலும், தமிழர் தீவான இலங்கையிலும் இதுதான் நடைபெற்றது. எனவே தான், ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் எவ்வளவு வெளியார் இருக்கலாம், இருக்கக் கூடாது என்பதை தீர்மானிக்கும் உரிமை, அவ்வினத்திற்கென அமைக்கப்பட்டுள்ள நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டதாக உலகெங்கும் நடைமுறையில் இருக்கிறது.

தமக்கென தனித்த அரசுகளைக் கொண்ட நாடுகள், தமது தாயகங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தமக்கென குடியேற்ற சட்டங்களை இயற்றி இதனை கட்டுப்படுத்தி வருகின்றன.

இவ்வகையான அரசுரிமை இல்லாததாலேயே, தமிழ்நாட்டுத் தாயகத்தை அயல் இனத்தாரின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாமல் நாம் திணறி வருகிறோம்.

குறிப்பாக, சென்னை சவுகார்பேட்டையில் உள்ள வணிக நிறுவனங்களில், அதன் உரிமையாளர்களாக, தொழிலாளர்களாக நிரம்பி வழியும் வடமாநிலத்தவர்கள், அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்ற செய்தி பேரதிர்ச்சியையும், அச்சத்தையையும் ஏற்படுத்துகிறது.

அதாவது, சவுகார்பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் 28-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் வடநாட்டினர். இதனால், அப்பள்ளிகளில் 20 ஆண்டுகளுக்கும் முன் பணியமர்த்தப்பட்ட ஓரிரு தமிழ்நாட்டு ஆசிரியர்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கி வரும் அப்பள்ளிகளில், தமிழ் பயிற்றுவிப்பது இல்லை; தமிழ் மாணவர்களைச் சேர்ப்பதில்லை என்ற தகவல்கள், நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

குஜராத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகக் கூறி தமிழ்வழிப் பள்ளிகளை அம்மாநில அரசு மூடி வரும் நிலையில், தமிழில் சொல்லித்தராத சவுகார்பேட்டையில் உள்ள பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு கோடிக்கணக்கில் நிதி உதவி அளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

அப்பள்ளிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் ஆசிரியர் பணியிடங்களுக்கு வடமாநிலங்களில் இருந்து வெறும் இளங்கலை பட்டம் பெற்றவர்களை அழைத்து வந்து பணி அமர்த்துகிறார்கள்; அவர்கள் எந்த ஆசிரியர் பயிற்சிப் பட்டமும் பெறவில்லை.

சவுகார்பேட்டையில் உள்ள குடியிருப்புகளில் வட நாட்டைச் சேர்ந்தவர்களைத் தவிர, தமிழ் நாட்டுக்காரர்களுக்கு இடம் அளிப்பதில்லை. வெளிப்படையாகவே மறுக்கவும் செய்கிறார்கள்.

இந்நிலை அன்றாடம் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் தமிழ் மொழி – தமிழர்களின் பண்பாடு என்னவாகும்? தமிழ்நாடு கலப்பினத் தாயகமாக மாறும். சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அயலார்க்குக் கீழ்ப்பட்டு, அவர்களை அண்டிப் பிழைக்கும் நிலை ஏற்படும்.

ஏற்கெனவே, தமிழ் நாட்டின் பொருளாதார ஆதிக்கம் வடமாநிலத்தவர்கள், மார்வாடி, குசராத்தி, பெரு முதலாளிகள், பெரு வணிகர்கள் கையில் இருக்கிறது. அவர்களைச் சார்ந்து அவர்களின் தயவில் தொழிலும் வணிகமும் நடத்தும் நிலையில்தான் தமிழர்கள் இருக்கிறார்கள்.

முக்கியமாக, தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக மாறும் அபாயம் உள்ளது. அவர்கள் எப்போதும் திமுகவிற்கோ, அதிமுகவிற்கோ மறந்தும் கூட வாக்களிக்க மாட்டார்கள். பாஜக, காங்கிரசுக்கும் தான் வாக்களிப்பார்கள்.

இவ்வாறான வெளியார் ஆதிக்கம் அனைத்துப் பிரிவுத் தமிழர்களின் வாழ்வுரிமைகளைத் தமிழ்நாட்டிலேயே பறிக்கிறது. ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதியையும் பறிக்கிறது.

தமிழ்நாட்டிற்குள் புகும் இந்த வெளியார் வெள்ளம், தமிழர் தாயகக் கட்டமைப்பை உடைத்துக், கலப்பினத் தாயகமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிடுமோ என்ற அச்சம் தமிழர்களில் நெஞ்சில் முள்ளாய்க் குத்துகிறது.

1956 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட, மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் வளர்ச்சியடைந்த மொழி, அம்மொழி பேசும் மக்களின் பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கவும் வளர்க்கவும்தான் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன.

எனவே, சவுகார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்; அப்பள்ளிகளில் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை ஊக்குவிக்க வேண்டும்; பள்ளிகளில் பணியாற்றும் வடமாநிலத்தவர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்; பள்ளிகளில் பயின்று வரும் வடமாநிலத்தவர்களின் நலன் கருதி, அவர்களை தங்களது சொந்த மாநிலங்களிலேயே படிக்க வைக்க வேண்டும்.

சவுகார்பேட்டை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் நிரம்பி வழியும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய குழுவை உடனடியாக அமைக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.

இக்குழுவின் வாயிலாக, தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையை ஆய்வு மேற்கொண்டு, குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து, அவர்களை, சொந்த மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

வெளியாரை வெளியேற்று வது என்பது வெறும், தமிழர்களின் கல்வி – வேலை – வாழ்வுரிமை சார்ந்த சிக்கல் மட்டுமல்ல, அது தமிழர் தாயகத்தை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கை என்பதை புரிந்து கொண்டு, தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எச்சரிக்கையோடு செயல்படவில்லை என்றால், எதிர்காலத்தில் பாலஸ்தீனம் போன்று தமிழ்நாடும் மாறும்; தமிழ்நாட்டு மக்களும் அரசியல் அனாதைகள் ஆவோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது.

The post ”தமிழ்நாடு பாலஸ்தீனமாக மாறும் அபாயம்..!” பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/feed/ 0
’’குலசேகரம் மருத்துவ மாணவி தற்கொலை : மன்னிக்கவே முடியாத கொடூரம்..!’’ பண்ருட்டி தி.வேல்முருகன் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b2%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b5-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a3 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3/#respond Wed, 18 Oct 2023 04:10:20 +0000 https://madrasmurasu.com/?p=6955 ”கல்வி நிலையங்களில் நிலவும் பாதுகாப்பற்ற தன்மை நமது இளைய தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது. இத்தகைய சூழலை தடுத்து பாலின, சாதிய, வர்க்கப் பாகுபாடுகள் களையப்பட்ட சூழல் கல்வி வளாகங்களில் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: சமீப காலமாக, நாடு முழுவதும் கல்வி வளாகங்களில் மாணவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் நாளுக்கு […]

The post ’’குலசேகரம் மருத்துவ மாணவி தற்கொலை : மன்னிக்கவே முடியாத கொடூரம்..!’’ பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.

]]>
”கல்வி நிலையங்களில் நிலவும் பாதுகாப்பற்ற தன்மை நமது இளைய தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது. இத்தகைய சூழலை தடுத்து பாலின, சாதிய, வர்க்கப் பாகுபாடுகள் களையப்பட்ட சூழல் கல்வி வளாகங்களில் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:

சமீப காலமாக, நாடு முழுவதும் கல்வி வளாகங்களில் மாணவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

அக்கொடுமைகளின் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவி சுகிர்தா, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுகலை மயக்கவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், பேராசிரியர் பாலியல் ரீதியாக தனக்கு தொந்தரவு கொடுத்ததாகவும், மயக்கவியல் பயிற்சி மருத்துவர்கள் தன்னை மனதளவில் துன்புறுத்தியதாகவும், தன் மரணத்திற்கு இவர்கள் மூவரும் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், மாணவ, மாணவிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளது.

பேராசிரியர் பரமசிவம் 14.10.2023 அன்று கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹரிஷ், ப்ரீத்தி ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அக்கல்லூரியில் நடக்கும் கொடூரங்கள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக, பயின்று வரும் மாணவ, மாணவிகளின் கைப்பேசிகளை கல்லூரி நிர்வாகம் பறிமுதல் செய்திருப்பது கண்டனத்துக்குரியது.

கல்வி வளாகங்களில் தங்களுக்கு எதிராக ஏவப்படும் வன்முறையை எதிர்த்துப் போராடக்கூடிய வலுவற்றவர்களாக, பாதுகாப்பில்லாத நிலையிலேயே மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு மாணவி சுகிர்தா இறப்பே சான்று.

பல மாணவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துப் போராடும் மனபலம் இல்லாமல், கல்வியைத் தொடராமல் விலகும் சம்பவங்கள் தொடர்கதையாகின்றன. மன உளைச்சலுக்கு உள்ளாகும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவல நிலையும் தொடர்கிறது.

கல்வி நிலையங்களில் நிலவும் பாதுகாப்பற்ற தன்மை நமது இளைய தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது. இத்தகைய சூழலை தடுத்து பாலின, சாதிய, வர்க்கப் பாகுபாடுகள் களையப்பட்ட சூழல் கல்வி வளாகங்களில் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

அதே நேரத்தில், எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் சமூகம் தங்களுக்குள் உலவும் கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். பெற்றோர்கள், பாலியல் துன்புறுத்தல் குறித்து தங்கள் பெண் குழந்தைகள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டும்.

மாணவி சுகிர்தா இறப்பில், தொடர்புடைய குற்றவாளிகள் மீது எவ்வளவு விரைவாக கடும் தண்டனை கொடுக்க முடியுமோ, அது நடக்க சிபிசிஐடி விரைந்து செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரியில், இதுபோன்ற கொடூரங்கள் ஏற்கனவே அரங்கேறி இருக்கிறதா என்பது குறித்து சிபிசிஐடி முழு விசாரணை நடத்த வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் என்பது பாதுகாவலில் நடத்தப்படும் சித்ரவதைக்கு ஒப்பாகும். இதை முற்றிலுமாக அகற்ற முற்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

The post ’’குலசேகரம் மருத்துவ மாணவி தற்கொலை : மன்னிக்கவே முடியாத கொடூரம்..!’’ பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3/feed/ 0
’’ஒன்றிய அரசின் சுங்கத்துறை பணிக்கான போட்டித் தேர்வில் மோசடி – ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்..!’’ பண்ருட்டி தி.வேல்முருகன் https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2592%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#respond Mon, 16 Oct 2023 08:36:09 +0000 https://madrasmurasu.com/?p=6896 ’’ஒன்றிய அரசின் சுங்கத்துறை பணிக்கான போட்டித் தேர்வில் மோசடி : ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்’’ என்று பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்  வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய அரசின் சுங்கத்துறை அலுவலகத்திற்கு உணவக உதவியாளர், எழுத்தர், மகிழுந்து ஓட்டுநர், சமையலர் போன்ற பணியிடங்களுக்கு 17 பேரைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு 14.10.2023 அன்று மேற்படி அலுவலகத்தில் நடந்துள்ளது. ஆயிரத்துக்கும் […]

The post ’’ஒன்றிய அரசின் சுங்கத்துறை பணிக்கான போட்டித் தேர்வில் மோசடி – ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்..!’’ பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.

]]>
’’ஒன்றிய அரசின் சுங்கத்துறை பணிக்கான போட்டித் தேர்வில் மோசடி : ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்’’ என்று பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்  வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் உள்ள இந்திய அரசின் சுங்கத்துறை அலுவலகத்திற்கு உணவக உதவியாளர், எழுத்தர், மகிழுந்து ஓட்டுநர், சமையலர் போன்ற பணியிடங்களுக்கு 17 பேரைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு 14.10.2023 அன்று மேற்படி அலுவலகத்தில் நடந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதியுள்ளனர்.

அப்போது, அத்தேர்வெழுதுவோரைக் கண்காணிப்பாளர்கள் சோதித்தபோது, 30 பேர் காதுகளில் ப்ளு-டூத்துகள் பொருத்தப்பட்டிருந்திருக்கின்றன. அவற்றைச் சோதித்தபோது வெளியிலிருந்து ஒருவர் இங்குள்ள வினாக்களுக்கு விடைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதும் தேர்வர்கள் அதைக் கேட்டு விடை எழுதிக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த 30 பேரில் 28 பேர் அரியானாவை சேர்ந்தவர்கள், இரண்டு பேர் உத்திரப்பிரதேசக்காரர்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அரசுத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளில் தமிழ்நாட்டில் இந்திக்காரர்கள் மிகை எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று வேலைகளில் சேர்க்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்திக்காரர்கள் ஆள்மாறாட்டம் செய்தும், விடைத்தாள் தில்லுமுல்லுகள் செய்தும் சிக்கிக் கொண்டு திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி படைக்கலத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் அஞ்சல் துறைக்கான வேலைவாய்ப்பு தேர்வுகள் நடந்தபோது, தமிழ்த்தாளில் மொத்த மதிப்பெண் 25க்கு 25, 24, 23 என்று அரியானாக்காரர்கள் வாங்கியதும், தமிழ்நாட்டுத் தேர்வர்கள் மேற்படித்தாளில் 25க்குப் 17. 16 என்று வாங்கியதும் வெளிப்பட்டு, அத்தேர்வுகளில் நடந்த மோசடிகள் அம்பலமாயின. அத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

இப்படியான மோசடிகள் வாயிலாக, இந்திய அரசின் வருமான வரித்துறை, ஜிஎஸ்டி வரித்துறை, கணக்குத் தணிக்கைத் துறை, துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டித்துறை, போன்ற அனைத்துத் துறைகளிலும் 100க்குத் 95 விழுகக்காடு வேலைகளை பிற மாநிலத்தவர்கள் கைப்பற்றிக் கொள்கிறார்கள்.

எனவே, சென்னை சுங்கத்துறை வேலைவாய்ப்புக்கான தேர்வில் மோசடி செய்து பிடிபட்டுள்ளவர்களின் மீதும், அவர்களுக்குத் துணை நின்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், இத்தேர்வை ரத்து செய்ய முன்வர வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

கடந்த காலங்களில் நடந்த தேர்வுகளில் இதுபோன்ற மோசடிகள் நடந்ததா, மோசடியில் ஈடுபட்டு பணியில் சேர்ந்தவர்கள் யார், அதற்கு துணை நின்றவர்கள் யார், அவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி மதிப்பிற்குரிய அரிபரந்தாமன் தலைமையில் விசாரணை குழு அமைக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, தமிழ்நாடு அரசு, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழ்நாடு அரசின் அனைத்து துறை வேலைவாய்ப்புகளில் 100-க்கு 100 விழுக்காடு தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதற்கென்று, அரியானாவை போன்று, தனிச்சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

அதேபோன்று, தமிழ்நாடு நிறுவனங்களின் முறைசாரா வேலை வாய்ப்புகள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்கும் வகையில், தமிழ்நாடு அமைப்புசாரா வேலை வழங்கும் வாரியம்’ அமைக்கும் அவசரச் சட்டத்தையும் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

The post ’’ஒன்றிய அரசின் சுங்கத்துறை பணிக்கான போட்டித் தேர்வில் மோசடி – ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்..!’’ பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0
’’சமூக நீதியைக் காப்பதில் அக்கறை இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்க..! பண்ருட்டி தி.வேல்முருகன் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9c%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%259c%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9c%e0%af%8d/#respond Fri, 22 Sep 2023 10:27:49 +0000 https://madrasmurasu.com/?p=6500 ‘’சமூக நீதியைக் காப்பதிலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் ஒன்றிய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக்குவதற்கு மாற்றாக, அத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று ஒன்றிய அரசை பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2017-ஆம் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தனியார் பயிற்சி மையங்களில் […]

The post ’’சமூக நீதியைக் காப்பதில் அக்கறை இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்க..! பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.

]]>
‘’சமூக நீதியைக் காப்பதிலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் ஒன்றிய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக்குவதற்கு மாற்றாக, அத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று ஒன்றிய அரசை பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 2017-ஆம் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது பயிற்சி பெற்றால் தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும். அதற்காக குறைந்தது ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். அதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாதவர்கள் மருத்துவம் பயில்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.

இவ்வாறு பணத்தைக் கொட்டிக் கொடுத்து படித்து, நீட் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் அனைவருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. ஏனெனில், பல இலட்சம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், இந்தியா முழுவதும் சில ஆயிரம் இடங்கள்தான் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. நீட் தேர்வில் அனைத்திந்திய தரவரிசை பட்டியலில் இருக்குமிட எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல தரவரிசையில் இடம்பெறுவோர் மட்டுமே இப்படிப்புகளில் சேர முடியும்.

சான்றாக, 2019ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய 14.10 லட்சம் பேரில் 7.04 லட்சம் பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். அரசுக் கல்லூரிகளில் 30,455 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 36,165 இடங்களும் என மொத்தம் 66 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

இதில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் 30 ஆயிரம் தரவரிசை வரை உள்ளவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அடுத்து 36 ஆயிரம் பேர் அடுத்த ரேங்க் வரிசைப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் பிடிப்பார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதியுள்ள 6 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு இடம் கிடையாது. அவர்கள் செலவு செய்த பல லட்சம் ரூபாயும் வீண்தான்.

இந்தியா முழுவதுமுள்ள அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 3,947 எம்.பி.பி.எஸ். மற்றும் 985 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அனைத்திந்திய தேர்வான நீட் வழியாகத் தேர்வு செய்யப்படும்போது, கிட்டத்தட்ட மாவட்டத்திற்கு ஒன்றாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திக்காரர்களும், பிற மாநிலத்தவரும் எளிதில் இடம் பெற்று விடுவார்கள்.

தமிழ்நாட்டு மாணவர்கள், நீட் தேர்வில் பயிற்சி பெற்ற பலர் உட்பட புறக்கணிக்கப்படுவார்கள். உயர்கல்வியில் வெளி மாநிலத்தவர் ஆதிக்கத்திற்கு நீட் தேர்வு வழிவகுக்கிறது.

நீட் தேர்வு என்பது அநீதி என்பதால் தான், அத்தகைய நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்பதால் தான், அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்காக, 2021 செப்டம்பர் 13 ஆம் தேதி சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. அதை ஆளுனர் திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் அதே சட்டம் மீண்டும் இயற்றி, மே மாதத் தொடக்கத்தில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.

நீட் விலக்கு சட்டம் பேரவையில் இயற்றப்பட்டு 20 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அந்த சட்டம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு 17 மாதங்களாகி விட்டன. ஆனால், நீட் விலக்கு சட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

இத்தகைய அறிவிப்பு வரவேற்கதக்கதாக இருந்தாலும், எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டிய நாடகமாக என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. ஏனெனில், ஆட்சியின் கடைசி தருணத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தான் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

தற்போது நீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியம் என்று அறிவித்துள்ளதால், தனியாரில் காலியாகவுள்ள அனைத்து இடங்களையும் நிரப்பலாம். இதற்கு ஏன் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இதைவிட தமிழ்நாடு அரசு ஏற்கெனவே முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்திய தேர்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

எனவே, சமூக நீதியைக் காப்பதிலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் ஒன்றிய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக்குவதற்கு மாற்றாக, அத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.

அதாவது, நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியம் என்பதற்கு பதிலாக, அத்தேர்வு முறையை அடியோடு ஒழிப்பதே சிறந்த தீர்வாகும் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்தாகும். இதனை தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

The post ’’சமூக நீதியைக் காப்பதில் அக்கறை இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்க..! பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9c%e0%af%8d/feed/ 0
’’காவிரி நீர் உரிமை மீட்க, ஜனநாயக சக்திகளும், விவசாயிகளும் ஒன்று திரள வேண்டும்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf-%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/#respond Thu, 14 Sep 2023 06:30:11 +0000 https://madrasmurasu.com/?p=6285 ’’காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கான நீர் உரிமையை போராடி தான் மீட்க வேண்டும்’’ என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி டெல்டாவில் நடப்பாண்டு ஐந்து இலட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. தண்ணீரின்றி 3 இலட்சம் ஏக்கர் பயிர்கள் காய்ந்து சருகாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், 16 இலட்சம் ஏக்கரில் சம்பாவும், தாளடியும் சாகுபடி செய்ய வேண்டியுள்ளது. தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்காக, 29.8.2023 லிருந்து 12.9.2023 […]

The post ’’காவிரி நீர் உரிமை மீட்க, ஜனநாயக சக்திகளும், விவசாயிகளும் ஒன்று திரள வேண்டும்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி first appeared on Madras Murasu.

]]>
’’காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கான நீர் உரிமையை போராடி தான் மீட்க வேண்டும்’’ என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி டெல்டாவில் நடப்பாண்டு ஐந்து இலட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. தண்ணீரின்றி 3 இலட்சம் ஏக்கர் பயிர்கள் காய்ந்து சருகாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், 16 இலட்சம் ஏக்கரில் சம்பாவும், தாளடியும் சாகுபடி செய்ய வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்காக, 29.8.2023 லிருந்து 12.9.2023 வரை,  15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா அரசு திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், கர்நாடகா அரசு வெறும், 3,000 கன அடி , 4,000 கன அடி நீரைத்தான் திறந்துவிட்டது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு வினாடிக்கு 24,000 கன அடி நீரை கேட்ட நிலையில், இந்த சொற்ப நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட்டது. இந்த சொற்ப நீர் திறப்பையும் நேற்று முன்தினமே கர்நாடகா அரசு நிறுத்திவிட்டது.

கர்நாடகத்தின் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகளில் 90 விழுக்காட்டுக்கு மேல் தண்ணீர் உள்ளது. ரி.ஸி. சாகரில் 80 விழுக்காடு தண்ணீர் உள்ளது. பற்றாக்குறை அங்கு இல்லை.

அதாவது,  4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 63.801 டி.எம்.சி ஆகும்.  இதுதவிர, வடகிழக்கு பருவ மழை காலத்திலும், இந்த 4 அணைகளுக்கு குறைந்தது 30 டி.எம்.சி. நீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு அரசும் சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சூழலில், கர்நாடக அணைகளில் இருந்து, தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு நேற்று முன்தினம் பரிந்துரைத்தது. இதையும்,  அளிக்க முடியாது என கர்நாடக அரசு  கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

இது ஒருபுறமிருக்க, உச்சநீதிமன்றத்தில் வாதாடி, காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கூறியிருக்கிறார்.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வருவதற்குள், டெல்டாவில் ஐந்து இலட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி பயிர்கள் காய்ந்து சருகாகி விடும்.  16 இலட்சம் ஏக்கரில் சம்பாவும், தாளடியும் கேள்விக்குறியாகும்.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் அதன் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அடிக்கடி கர்நாடகத்திலும், தமிழ்நாட்டிலும் கள ஆய்வு செய்து மழையளவு, தண்ணீர் வரத்து, இவ்விரு மாநிலங்களில் உள்ள தண்ணீர் இருப்பு முதலியற்றைக் கணக்கிட்டு, கர்நாடகம் எவ்வளவு தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் இருக்கிறது.

ஆனாலும், கர்நாடகத்தின் கூட்டாளிகளாகி விட்ட காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அவ்வாறு செயல்படுவதில்லை. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில், மேட்டூர் அணை மூடப்படும். காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும்.

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களின் குடிநீராகவும், 13 மாவட்டங்களின் பாசன நீராகவும் உள்ள காவிரி நீர் கிடைக்காது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், பாஜக ஆட்சி செய்தாலும், அவர்களின் நிலைப்பாடு என்பது தமிழர்களுக்கு எதிரான கன்னட இனவெறி ஆகும். நாம் அனைவரும் இந்தியர் எனக் கூறிக்கொண்டாலும், இந்திய ஆட்சியாளர்களின் தமிழினப் புறக்கணிப்பு, இக்காவிரி விவகாரத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

எனவே, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி, தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட வேண்டிய நீரை திறக்க கர்நாடகா அரசு முன் வராவிட்டால், அதனை ஒன்றிய அரசின் மூலம் ஆணையம் நிறைவேற்றலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், காவிரி நீர் உரிமை மீட்க, ஜனநாயக சக்திகளும், விவசாயிகளும் ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

இரு நாடுகளுக்கிடையேயான நீர் பங்கீட்டுகளிலும் கூட, எவ்வித சிக்கலுமின்றி நீர் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ஆனால், ஒரே நாடாக கூறப்படும் இந்தியாவில், தமிழ்நாட்டிற்கான நீர் உரிமையை போராடி தான் மீட்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனை கடந்த கால அனுபவங்களில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

The post ’’காவிரி நீர் உரிமை மீட்க, ஜனநாயக சக்திகளும், விவசாயிகளும் ஒன்று திரள வேண்டும்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/feed/ 0
’’அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும்’’ தி.வேல்முருகன் எம்.எல்.ஏ https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%af%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25af%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%af%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%81/#respond Tue, 05 Sep 2023 11:30:49 +0000 https://madrasmurasu.com/?p=6142 ’’தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம். எனவே, அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும்’’ என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த பத்தாண்டு கால ஆட்சியில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, சுங்க வரி போன்ற நடவடிக்கைகளால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசின் மோசமான பொருளாதார […]

The post ’’அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும்’’ தி.வேல்முருகன் எம்.எல்.ஏ first appeared on Madras Murasu.

]]>
’’தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம். எனவே, அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும்’’ என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த பத்தாண்டு கால ஆட்சியில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, சுங்க வரி போன்ற நடவடிக்கைகளால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோடி அரசின் மோசமான பொருளாதார கொள்கையாலும், இலட்சக்கணக்கான கோடி ரூபாய் தள்ளுபடியாலும், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள் அதீத வளர்ச்சி பெற்றுள்ளனர். அதே சமயத்தில், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தெருவில் பிச்சை எடுக்கக் கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இச்சிக்கல்களை பற்றியெல்லாம் கவலைப்படாத மோடி கும்பலுக்கு, மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சனாதனம் குறித்து பேசி இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, சனாதனத்துக்கு எதிரான கருத்து தெரிவித்ததற்காக, உதயநிதி அவர்களின் தலையை சீவினால், 10 கோடி ரூபாயை அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் அறிவித்திருக்கிறார்.

அதாவது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சனாதனத்தில் பிறப்பின் அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வு, தீண்டாமை குறித்து பேசியது, சனாதன கும்பல்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சனாதனத்தில் நிலவும் மநு நீதி, வர்ணாசிரமம், சாதிய மேலாதிக்கம், பெண்ணடிமைத் தனம், மூட நம்பிக்கை ஆகியவற்றுக்கு எதிராக பேசியதற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சனாதன கும்பல்கள் விமர்சித்து வருகின்றன. இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் 10 கோடி ரூபாயை அறிவித்திருக்கிறார் .

அதோடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்து மதத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த மோசடி கும்பலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதாவது, மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த இது ஒன்றும் வடமாநிலங்கள் அல்ல; தமிழ்நாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், இங்கு பகுத்தறிவாளர்களை விட, சித்தர்கள், ராமானுஜர், வள்ளலார், வைகுண்டசாமிகள் போன்ற ஆன்மிகவாதிகளே, சனாதன கருத்தியலுக்கு எதிரான கருத்தியலை காலம் காலமாக நடத்தி வந்துள்ளனர்.

இந்து மக்களிடையே நிலவும் வர்ணாசிரம மேலாதிக்கத்தை – பார்ப்பனிய ஆதிக்கத்தை நீக்கி இந்து மக்கள் அனைவரையும் சம உரிமை படைத்த சகோதரர்களாக மாற்றும் நோக்கம், பாஜக- ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு இல்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களில் தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் போன்ற தமிழ் மந்திரங்களைச் சொல்லியும் பாடியும் அர்ச்சனை செய்யலாம் என்ற தமிழ் மொழி உரிமைக்கு ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. தலைமைகள் முன்முயற்சி எடுக்கப் போவதில்லை. மாறாக அவ்வாறான தமிழர் முயற்சிகளைத் தடுக்கவே அவை முன்வரும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

எனவே, வர்ணாசிரம மேலாதிக்கத்தை இக்காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள் நினைக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க கும்பலுக்கு தமிழ்நாட்டின் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா உள்ளிட்ட எந்த கொம்பனாலும், அமைச்சர் உதயநிதி அவர்களின் சுண்டு விரலைக் கூட தொட முடியாது.

நாட்டில் நிலவி வரும் பெரும் சிக்கல்களை எல்லாம் திசை திருப்புவதையும், பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்வதையும் கைவிட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க, மோடி அரசை, ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க கும்பல்கள் வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடும், ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களின் தலைக்கு, 10 கோடி ரூபாய் அறிவித்துள்ள அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யாவை உடனடியாக கைது செய்ய, ஒன்றிய பாஜக அரசு முன் வர வேண்டும். ஒரு சாமியாரிடம் எப்படி 10 கோடி ரூபாய் இருக்கிறது என்பது குறித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

The post ’’அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும்’’ தி.வேல்முருகன் எம்.எல்.ஏ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%af%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%81/feed/ 0
”அத்துமீறும் என்.எல்.சி – பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்..!” வேல்முருகன் எம்.எல்.ஏ எச்சரிக்கை https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25af%2586 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86/#respond Thu, 27 Jul 2023 04:25:39 +0000 https://madrasmurasu.com/?p=5637 தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இரு அனல் மின் மின் நிலையங்கள் மற்றும் அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் வழியே 3000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களிலிருந்து 12,126 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஒன்றிய அரசும், என்.எல்.சி நிர்வாகமும் முடிவு செய்திருக்கிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்கனவே தங்கள் நிலங்களைக் கொடுத்த […]

The post ”அத்துமீறும் என்.எல்.சி – பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்..!” வேல்முருகன் எம்.எல்.ஏ எச்சரிக்கை first appeared on Madras Murasu.

]]>
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இரு அனல் மின் மின் நிலையங்கள் மற்றும் அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் வழியே 3000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களிலிருந்து 12,126 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஒன்றிய அரசும், என்.எல்.சி நிர்வாகமும் முடிவு செய்திருக்கிறது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்கனவே தங்கள் நிலங்களைக் கொடுத்த மக்களுக்கு இதுவரை உரிய வேலை வாய்ப்புகளோ, அடிப்படை வசதிகளோ செய்து தரப்படாத நிலையில், தங்களின் நிலங்களைத் தர முடியாது என கடந்த 2018ஆம் ஆண்டிலேயே நிலம் எடுப்புத் தொடர்பாக நடந்த கருத்துக்கேட்பு கூட்டங்களில், பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இச்சூழலில், சேத்தியாதோப்பு அருகே மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கத்தாழை ஆகிய 3 ஊராட்சிகளிலும், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதனை சிறிதும் மதிக்காமல், அப்பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பில், விளை நிலங்கள் கையகப்படுத்த என்.எல்.சி நிர்வாகம் முயன்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

வளையமாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பல்லாயிரம் ஏக்கரில், நடவு செய்யப்பட்டு, நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், அதனை பொருட்படுத்தாமல், விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி, நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை என்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

நிலம் வழங்கியோர்க்கு உரிய இழப்பீட்டை மறுப்பது, தமிழர்களுக்கு வேலை வழங்க மறுப்பது, ஏற்கெனவே உள்ள பணியாளர்களை நிரந்தரமாக்க மறுப்பது, பணிப்பயிற்சி மாணவர்களுக்குப் பணி வழங்க மறுப்பது என தொடர்ந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தற்போது நிலங்களை கையகப்படுத்த முயல்வதை ஒரு போது ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கான பணிகளுக்கு விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தக் கூடாது. குறிப்பாக, வாழ்வாதார இழப்பு, வேலை மறுப்பு, சூழலியல் அழிப்பு போன்ற காரணங்களுக்காக இத்திட்டத்தை அடியோடு எதிர்க்க வேண்டும்.

ஏற்கனவே, நிலம் வழங்கியோர்க்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், தற்போது பணியாற்றி வரும் தமிழர்களுக்கு பணி நிரந்தரம், பணி உறுதி ஆகியவற்றை உறுதிப்படுத்த, ஒன்றிய அரசு மற்றும் என்.எல்.சி நிர்வாகத்திடம், தமிழ்நாடு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தற்போது, விளைநிலங்களை கையகப்படுத்த முயன்று வரும் என்.எல்.சி நிர்வாகத்தையும், காவல்துறையையும், தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இனி வரும் காலங்களில், விவசாயிகளிடம், என்.எல்.சி நிர்வாகம் அத்துமீறி செயல்படுமானால், எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது.

முக்கியமாக, நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்று கூறி வரும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு, மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.

The post ”அத்துமீறும் என்.எல்.சி – பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்..!” வேல்முருகன் எம்.எல்.ஏ எச்சரிக்கை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86/feed/ 0
’’மணிப்பூர் மாநிலம் கடந்த 3.5.2023-லிருந்து பற்றி எரிகிறது..!’’ வேல்முருகன் வேதனை https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25ae%25a8%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d/#respond Fri, 21 Jul 2023 06:32:21 +0000 https://madrasmurasu.com/?p=5481 தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: மணிப்பூர் மாநிலம் கடந்த 3.5.2023-லிருந்து பற்றி எரிகிறது. இரு இனங்களுக்கு இடையே வன்முறை. மணிப்பூர் தலைநகர் இம்பால், அதை ஒட்டியுள்ள சமவெளிப் பகுதிகளில் மிகப் பெரும்பான்மையாய் வாழ்பவர்கள் பழங்குடி அல்லாத மெய்த்தி மக்கள். மலைப் பகுதிகளில் மிகப் பெரும்பான்மையாய் வாழ்பவர்கள் குக்கி பழங்குடி மக்கள். மற்ற சிறுசிறு பிரிவு பழங்குடிகளும் உண்டு. இந்நிலையில், மணிப்பூரில் குக்கி பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை, நிர்வாணப்படுத்தி […]

The post ’’மணிப்பூர் மாநிலம் கடந்த 3.5.2023-லிருந்து பற்றி எரிகிறது..!’’ வேல்முருகன் வேதனை first appeared on Madras Murasu.

]]>
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

மணிப்பூர் மாநிலம் கடந்த 3.5.2023-லிருந்து பற்றி எரிகிறது. இரு இனங்களுக்கு இடையே வன்முறை. மணிப்பூர் தலைநகர் இம்பால், அதை ஒட்டியுள்ள சமவெளிப் பகுதிகளில் மிகப் பெரும்பான்மையாய் வாழ்பவர்கள் பழங்குடி அல்லாத மெய்த்தி மக்கள். மலைப் பகுதிகளில் மிகப் பெரும்பான்மையாய் வாழ்பவர்கள் குக்கி பழங்குடி மக்கள். மற்ற சிறுசிறு பிரிவு பழங்குடிகளும் உண்டு.

இந்நிலையில், மணிப்பூரில் குக்கி பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கவலை அளிக்கிறது; பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் கிராமத்தில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஒரு வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும், ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார்.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகிய இந்த சம்பவம் அரங்கேறி 77 நாட்கள் ஆன பிறகே வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றது கடும் வேதனை அளிக்கிறது. இதனை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. பாதிக்கப்பட்ட பெண்களும், கொல்லப்பட்ட இளைஞர்களும் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை.

எனவே, பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ள நிலையில், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைக்குள்ளாக்க வேண்டும். மணிப்பூரில் நடைபெறும் கலவரங்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர, ஒன்றிய அரசும், அம்மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கும், தலா 30 இலட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக வன்முறை நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில், இதுபோன்ற பல்வேறு குற்றங்கள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்க தோன்றுகிறது. ஆக, மணிப்பூர் வன்முறை குறித்து, விரிவான விசாரணை நடத்த ஒன்றிய அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

The post ’’மணிப்பூர் மாநிலம் கடந்த 3.5.2023-லிருந்து பற்றி எரிகிறது..!’’ வேல்முருகன் வேதனை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d/feed/ 0
“கடலூர் சூறைக்காற்று இழப்பீடு வழங்குக..!” வேல்முருகன் எம்.எல்.ஏ., https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25ae%25b2%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2582%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b4%25e0%25ae%25aa https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%aa/#respond Wed, 07 Jun 2023 04:52:38 +0000 https://madrasmurasu.com/?p=3553 தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., அறிக்கை: கடலூர் மாவட்டத்தில் ராமாபுரம், கீரப்பாளையம், ஒதியடிக்குப்பம், வெள்ளக்கரை, அரசடிக்குப்பம், வழிசோதனைப்பாளையம், அன்னவல்லி, வழுதலம்பட்டு, புலியூர் மேற்கு, புலியூர் கிழக்கு, கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், கட்டியங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 1000க்கு மேற்பட்ட ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதமாகியிருப்பது விவசாயிகளின் நெஞ்சில் பேரிடியாக இறங்கி இருக்கிறது. குறிப்பாக, […]

The post “கடலூர் சூறைக்காற்று இழப்பீடு வழங்குக..!” வேல்முருகன் எம்.எல்.ஏ., first appeared on Madras Murasu.

]]>
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., அறிக்கை:

கடலூர் மாவட்டத்தில் ராமாபுரம், கீரப்பாளையம், ஒதியடிக்குப்பம், வெள்ளக்கரை, அரசடிக்குப்பம், வழிசோதனைப்பாளையம், அன்னவல்லி, வழுதலம்பட்டு, புலியூர் மேற்கு, புலியூர் கிழக்கு, கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், கட்டியங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

இந்த சூறைக்காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 1000க்கு மேற்பட்ட ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதமாகியிருப்பது விவசாயிகளின் நெஞ்சில் பேரிடியாக இறங்கி இருக்கிறது.

குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. கயிறு உற்பத்தி தொழில், கீற்று முடைதல், தேங்காய் மட்டை உரித்தல் உள்ளிட்ட தென்னை சார்ந்த உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வாழை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இந்தாண்டு வாங்கிய கடனை கொடுத்து விடலாம் என விவசாயிகள் நினைத்திருந்தனர். ஆனால், ஓரளவு தமது வாழ்க்கைப்பாட்டை பாதுகாக்கலாம் என்ற விவசாயிகளின் எண்ணம் கானல் நீரானது. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும் என்ற சொலவடை விவசாயிகளுக்கு தான் முற்றிலும் பொருந்துகிறது.

எனவே, கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக கணக்கு எடுக்க வேண்டும். இயற்கை பேரிடராக கருதி உரிய நிவாரணங்களை உடனடியாக வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு அந்த தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதோடு, அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

ஒரு சில கிராமங்களில் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு, குறைந்தபட்சம், ஒரு மரத்துக்கு, 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தரமான தென்னங்கன்றுகளை, இலவசமாக வழங்க வேண்டும். அவற்றை பராமரிக்க, ஐந்து ஆண்டுகளுக்கு, பராமரிப்பு தொகை தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

The post “கடலூர் சூறைக்காற்று இழப்பீடு வழங்குக..!” வேல்முருகன் எம்.எல்.ஏ., first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%aa/feed/ 0