Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#ரவி - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Fri, 03 Nov 2023 08:49:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” முரசொலி https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95/#respond Fri, 03 Nov 2023 08:49:29 +0000 https://madrasmurasu.com/?p=7349 ’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” என்று திமுக அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. அதன் விபரம் வருமாறு: தான் பதில் சொல்ல வேண்டியவை எதற்கும் பதில் சொல்லாமல் –- ஆரிய சனாதன வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவரைச் சட்டத்தின் நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு. இனி ஆளுநர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் அவரது முகம் […]

The post ’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” முரசொலி first appeared on Madras Murasu.

]]>
’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” என்று திமுக அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. அதன் விபரம் வருமாறு:

தான் பதில் சொல்ல வேண்டியவை எதற்கும் பதில் சொல்லாமல் –- ஆரிய சனாதன வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவரைச் சட்டத்தின் நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு. இனி ஆளுநர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் அவரது முகம் கிழித்தெறியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல், தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதையே வழக்கமாக கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளுக்கு உடனுக்குடன் கையெழுத்து போடாமல், ஒவ்வொரு கோப்புக்கும் விளக்கம் கேட்பதையே வழக்கமாக வைத்துள்ளார். அரசியல் எதிரி போன்று செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்றமானது தனது கடமைகளைச் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்.

அரசியல் சாசன பிரிவுகள் 200 மற்றும் 163–-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள தமிழ்நாடு அரசு, ‘நீட்’ விலக்கு மசோதா, பல்கலைக்கழக சட்டங்களை திருத்துவதற்கான மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்கள், 4 நடவடிக்கை உத்தரவுகள், 54 கைதிகளின் முன்கூட்டி விடுதலை தொடர்பான கோப்புகள் உள்ளிட்டவை தமிழ்நாடு ஆளுநரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பதவி ஒரு சம்பிரதாய பதவி என்றும், ஆளுநர் அமைச்சரவை ஆலோசனையின்படி செயல்படக் கடமைப்பட்டவர் எனவும் முந்தைய வழக்குகளில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள தமிழ்நாடு அரசு, மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க சர்க்காரியா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதிப்பதன் மூலம் பேரவை செயல்பாடுகளையே ஆளுநர் தடுக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக அவரது செயல்பாடுகள் அனைத்தும் உள்ளது. பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்கிறார். சரியான காரணங்களை தெரிவிக்காமல், அரசு அனுப்பும் கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளை அரசு உரிய விளக்கத்துடன் மீண்டும் அனுப்பியபோதும் ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார்.

அரசால் அனுப்பப்படும் கோப்புகள், அரசாணைகள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் தாமதிக்கும், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு அவசர சட்டமும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 6 வாரங்களில் அது நிரந்தரச் சட்டமாகியிருக்க வேண்டும். தற்போது வரை 12க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளார். இதனால் பல வகையில் அரசால் துரிதமாகச் செயல்பட முடியவில்லை.

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத்திருத்தம், மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குதல், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தை உருவாக்குவது உள்ளிட்ட மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றை முடக்கி வைத்திருக்கிறார். இதனால் பல்கலைக் கழகங்கள் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தின் நோக்கத்தையே சிதைக்கிறார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த விஜயபாஸ்கர், ரமணா, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீதான ஊழல் புகாரில் வழக்குப்பதிவு செய்ய 2022 செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இதுவரை அனுமதி தராமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார். அமைச்சராக செந்தில்பாலாஜியை நீடிக்கக் கூடாது என்று சொல்லி பெரிய பிரச்சினையைக் கிளப்பிய ஆளுநர் ரவி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் அமைச்சர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதில்தான் அவரது உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வருகிறது.

“நான் திருப்பி அனுப்பவில்லை என்றால் நிராகரித்ததாக அர்த்தம்” என்று ஆணவமாகச் சொன்னவர் இந்த ஆர்.என்.ரவி. அந்தளவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை கரைத்துக் குடித்தவர் அவர். எந்த சட்டமாக இருந்தாலும் ஒரு முறை விளக்கம் கேட்கலாம். திருப்பி அனுப்பலாம். இரண்டாவது முறை அரசு அனுப்பினால், அதனை ஆளுநர் ஏற்கத்தான் வேண்டும். அதைச் செய்வது இல்லை. அப்படியே ஊறுகாய் பானையில் ஊறப்போட்டு விடுவார். இதுதான் அவரது தந்திரம் ஆகும்.

நீட் விலக்கு மசோதாவை அரசியல் உள்நோக்கத்தோடு நிறுத்தி வைத்தார் என்றால், ஆன்லைன் ரம்மி மசோதாவையும் நிறுத்தி வைத்தார். ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து பேசினார். இதை விட வெட்கக்கேடு இருக்க முடியுமா? ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு முன்னதாக பொதுமக்கள் கருத்தை தமிழ்நாடு அரசு கேட்டது. ‘இதற்கெல்லாமா பொதுமக்கள் கருத்தை கேட்பார்கள்?’ என்று கிண்டல் செய்தது பா.ஜ.க. ஆனால், ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களையே சந்தித்து பேசினார் ரவி. அப்போது பா.ஜ.க.வால் வாயைத் திறக்க முடியவில்லை.

ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளன்று ஆளுநர் உரையாற்ற வேண்டும் என்பது ஒரு வழக்கம். அரசு தயாரித்து தரும் உரையை வாசித்து விட்டுச் செல்ல வேண்டும். அதையே மாற்றியும் திருத்தியும் நீக்கியும் சேர்த்தும் தன் இஷ்டத்துக்கு தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டவர் ஆளுநர் என்பதை அகில இந்திய ஊடகங்கள் அனைத்துமே கண்டித்தன. அதன்பிறகும் அவர் திருந்துவதாகத் தெரியவில்லை.

உச்சநீதிமன்ற வழக்குக்குப் பிறகாவது திருந்துவாரா என்பதைப் பார்ப்போம்.

The post ’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” முரசொலி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95/feed/ 0
’’வள்ளலார் இன்று இருந்திருந்தால் – மதுக்கூர் இராமலிங்கம்..!’’ https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/#respond Tue, 10 Oct 2023 04:28:52 +0000 https://madrasmurasu.com/?p=6728 வள்ளலார் உயிரோடு இருந்திருந்தால், மகளிர் இடஒதுக்கீட்டை பாராட்டியிருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் திருவுருவச் சிலையை காணொலி மூலம் திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா 2029 ஆம் ஆண்டு தேர்தலின் போதுதான் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதைப் படித்தால், வள்ளலார் ஒருவேளை ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்ற பாடலை மீண்டும் பாடியிருக்கக் கூடும். […]

The post ’’வள்ளலார் இன்று இருந்திருந்தால் – மதுக்கூர் இராமலிங்கம்..!’’ first appeared on Madras Murasu.

]]>
வள்ளலார் உயிரோடு இருந்திருந்தால், மகளிர் இடஒதுக்கீட்டை பாராட்டியிருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் திருவுருவச் சிலையை காணொலி மூலம் திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா 2029 ஆம் ஆண்டு தேர்தலின் போதுதான் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதைப் படித்தால், வள்ளலார் ஒருவேளை ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்ற பாடலை மீண்டும் பாடியிருக்கக் கூடும்.

ஆண்டவருக்கு நன்றி சொன்னவர்

ஒன்றிய பாஜக அரசின் பத்தாண்டு கால ஆட்சியை ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டால், வள்ளல் பெருமான் ஒருவேளை ‘கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக’ என்று சபித்து, ‘அருள் நயந்த நன்மார்க்க ஆள்க’ என்று இந்தியா கூட்டணிக்கு வரவேற்பு அளித்திருக்கக் கூடும்.

இளைஞர்கள் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் புலமை பெற வேண்டும் என்று வள்ளலார் விரும்பியதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இடும்பை மிகுந்த சமஸ்கிருத மொழியின்பால் என்னை ஒட்டவிடாமல், தமிழின்பால் கொண்டு சேர்த்ததற்காக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு நன்றி சொன்னவர் வள்ளலார் என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டியுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் கல்விக் கட்டமைப்பு மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் தேசிய கல்விக்கொள்கை கல்வித்துறையில் சிறந்த மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எல்லோருக்கும் கல்வி தர வேண்டும் என்பதற்காக ஞானசபையை உருவாக்கிய வள்ளலார், நிச்சயமாக இன்றைய ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை ஆதரித்து இருக்கமாட்டார்.

அரிசிக்கு ஜிஎஸ்டி வரி போடுவது சரிதானா?

வள்ளலார், மிக எளிமையான ஆடைகளையே அணிவார். காவி உடையை வெறுத்த அவர், வெள்ளை ஆடையை உடுத்துவார். இடுப்பில் உடுத்தும் ஆடையை முழங்கால் மறையும் அளவுக்கே உடுத்துவார். மேலாடையை உடல் முழுவதும் போர்த்தி இருப்பார். தலையைச் சுற்றி முக்காடாக அணிந்திருப்பார். சில சமயங்களில், ஓர் ஆடையையே கீழும் மேலுமாக உடுத்தி யிருப்பார் என்று அவருடைய சீடர்கள் கூறுகின்றனர். ஒரு மணிநேரத்திற்கு, ஒரு ஆடையை மாற்றுகிற, லட்சக்கணக்கில் ஆடை அலங்காரத்திற்கு செலவு செய்கிறவர்களுக்கு வள்ளலாரின் எளிமை பிடிக்குமா என்று தெரியவில்லை.

ஒருவரும் பட்டினி இல்லாதிருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்வோம் என்று பிரதமர் கூறியுள்ளார். இவ்வாறு பட்டினி இல்லாதிருக்க வேண்டுமானால், அரிசிக்கும், கோதுமைக்கும் ஜிஎஸ்டி வரி போடுவது சரிதானா? என்று பரிசீலிக்க வேண்டும். பொது விநியோக முறைக்கு மாநிலங்களுக்கு உணவு தானியங்களை தர மறுப்பதும் முறைதானா என்று வள்ளலார் இருந்தால் நிச்சயம் கேட்டிருப்பார்.

சாத்திரக் குப்பைகள்

மனுமுறை கண்ட வாசகம் எனும் நூலில், அவர் பாடியுள்ள சில வரிகள் ஏனோ பிரதமரின் பேச்சை படித்த போது நினைவுக்கு வந்தன. ‘நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! களவு செய்வோருக்கு உளவு சொன்னேனோ! குடிவரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ! ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ! உயிர்க் கொலை செய்வோருக்கு உபகாரஞ் செய்தேனோ! பொது மண்டபத்தை போய் இடித்தேனோ! ஆசை காட்டி மோசம் செய்தேனோ! பசித்தோர்

முகத்தை பாராதிருந்தேனோ! பகை கொண்டு அயலார் பயிரை அழித்தேனோ!’ என்றெல்லாம் வள்ளலார் யாரை நினைத்து பாடி வைத்தாரோ.

இந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வழக்கம்போல சனாதனத்தை அள்ளி வள்ளலார் மீது பூசியிருக்கிறார். ‘மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது; வருணாசிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது’ என்றும், ‘சாதிசமயங்களில் வீதி பல வகுத்த சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று’ என்றும், ‘சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்’ என்றும், ‘பிறசமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய்’ என்றும் பாடியவர் வள்ளலார்.

இத்துடன் நிறுத்திக் கொள்ளட்டும்

ஆளுநர் மாளிகையில் வள்ளல் பெருமானுக்கு சிலை வைத்தால் மட்டும் போதாது. அவர் பாடல்களின் உட்பொருளை புரிந்து கொள்வதும் அவசியம். ஆளுநர் அந்த விழாவில் என்னை அவமானப்படுத்தினாலும், நான் அவர்களை ஒதுக்க முடியாது. அதுதான் சனாதனம் என்று கூறியுள்ளார். உண்மையில், இதை இவர் நம்புவாரே யானால், வள்ளலாரை அவமானப்படுத்துவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளட்டும்.

‘வேத ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்; வேத ஆகமத்தின் விளைவறிவீர் – சூதாகச் சொன்னவலால் உண்மை வெளித் தோன்ற உரைக்கவில்லை, என்ன பயனோ இவை’ என்பது வள்ளலார் வாக்கு. ஆனாலும் இன்றைக்கும் சிலர் வீண்வாதம் ஆடுகின்றார். அதற்காக வள்ளலாரையே வளைக்கப் பார்க்கிறார்கள்.

வள்ளலார் தனது இறுதிப் பேருரையில் ‘இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடையாகி சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார, சங்கல்ப, விகற்பங்களும், வருணம், ஆசிரம் முதலிய உலகாச்சார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்’ என்று வேண்டியுள்ளார்.

ஆளுநர் அருள்கூர்ந்து வள்ளலாரை விட்டுவிடுமாறு வேண்டுகிறோம்.

தீக்கதிர் – மதுக்கூர் இராமலிங்கம்

The post ’’வள்ளலார் இன்று இருந்திருந்தால் – மதுக்கூர் இராமலிங்கம்..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0