acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’ ரயில்வேயில் ஜுனியர் என்ஜினியர் 7951 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வேயில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7951 இடங்களுக்கு ஆள் சேர்க்கை அறிவிப்பினை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலிக்கம்யூனிக்கேஷன், கெமிக்கல், மெட்டுராலஜி ஆகிய படிப்புகளை படித்து இருக்க வேண்டும். அதாவது, B.Sc., Chemistry and Physics, Degree or its equivalent in Chemical Technology , Degree or its equivalent in Metallurgical Engineering மற்றும் Mechanical and Allied Engineering, Electrical and Allied Engineering, Electronics and Allied Engineering, Civil and Allied Engineering (Three years Diploma in Engineering or Bachelor’s degree in Engineering /Technology). அதாவது, இந்த வேலைக்கு பட்டதாரிகளும் டிப்ளமோ பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 36-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிகளின் படி, உச்சபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
Candidates must have a Three Years Diploma or BE/B.Tech in the relevant Engineering Stream to be eligible for Junior Engineer (JE), Chemical & Metallurgical Assistant (CMA), Junior Engineer (IT), and Depot Material Superintendent (DMS) positions. Final-year students are not eligible to apply.

RRB Junior Engineer (JE), Depot Material Superintendent (DMS) , Chemical & Metallurgical Assistant (CMA) என்ற பணிகளில் 7934 பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், Metallurgical Supervisor / Researcher, Chemical Supervisor / Researcher என்ற பணிக்கு தேர்வாகும் 17 பேர், மெற்குவங்காளத்தில் உள்ள கொரக்பூர் மண்டலத்தில் பணியில் அமர்த்தப்படுவர்.
வேலைக்கான எழுத்து தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தேர்வில் Mathematics 30 கேள்விகள், General Intelligence & Reasoning 25 கேள்விகள், General Awareness 15 கேள்விகள், General Science 30 கேள்விகள் என்று மொத்தம் 100 கேள்விகள் கேட்க்கப்படும். 90 நிமிடம் தேர்வு நடைபெறும். கேள்வி ஒன்றுக்கு, நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
இதில், General Awareness 15 கேள்விகள், Physics & Chemistry 15 கேள்விகள், Computer Application Basics 10 கேள்விகள், Environment & Pollution (Basics) 10 கேள்விகள், Technical Ability 100 கேள்விகள் என்று மொத்தம் 150 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். மொத்தம் இரண்டு மணி நேரம் தேர்வு நடைபெறும். இந்த போட்டித்தேர்வில் சரியான விடைக்கு மதிப்பெண் தரப்படும். குறிக்கப்பட்ட விடை தவறு என்றால் மூன்றில் ஒரு பங்கு (Wrong responses will decrease the 1/3rd mark) குறைக்கப்படும்.
தேர்வுக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு ரு.250.

இத்தேர்வுக்கு ஜுலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை https://www.rrbchennai.gov.in/ வழியாக தமிழ்நாட்டு தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான வேலைவாய்ப்பு அறிவிக்கையும் இந்த இணையத்தில் காணலாம். இவ்வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியோர் அதற்கான சான்றுகளை பெற உடனே விண்ணப்பித்து விடுங்கள். அப்ளிக்கேஷ்சன் போட இந்த சான்றிதழ் ரொம்ப அவசியம்.
வேலைவாய்ப்பு குறித்த ஆங்கில அறிவிக்கையை முழுமையாக படிக்க இங்கே CEN_03_2024_JE_English கிளிக் செய்யவும். ஒவ்வொரு விண்ணப்பதாரரும் விண்ணப்பம் போடுவதற்கு முன்னர், இந்த வேலைவாய்பு அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ’’ கல்வி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு கட்டணம், விண்ணப்பத்தை திருத்தும் முறை, தேவையான சான்றுகள், போட்டோ அப்லோடு செய்வது, தேர்வின் நிலைகள், மார்க் போடும் முறைகள், வயது சலுகைகள்’’ என அனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்து தெரிந்து கொண்டு, அதன்பிறகே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பாடத்திட்டத்தை முழுமையாக பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டு படியுங்கள்.
இந்த தேர்வுக்கான அனைத்து பாடங்களின் விடியோக்கள் www.youtube.com/@MadrasMurasu என்ற யூடியூப் சேனலில் உள்ளது. அதை பார்த்து குறிப்பெடுத்து ரயில்வே வேலையில் எளிதில் சேரமுடியும். எனவே, ரயில்வே தேர்வு பாடத்திட்டத்தில் உள்ள Mathematics , General Intelligence & Reasoning , General Awareness , General Science வீடியோக்கள் மெட்ராஸ்முரசு யூடியூப் சேனலில் உள்ளது. உடனே www.youtube.com/@MadrasMurasu சப்ஸ்கிரைப் செய்து அரசு வேலையில் சேருங்கள்.
The post ’’ ரயில்வேயில் ஜுனியர் என்ஜினியர் 7951 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’ ரயில்வேயில் 2,438 காலிப்பணியிடம் !’’ ஐ.டி.ஐ., எம்.எல்.டி., சுருக்கெழுத்து படித்தோர் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>நாட்டிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்தியன் ரயில்வே. அதில் தெற்கு ரெயில்வே மிகவும் முக்கியமானது. சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள பெரம்பூர் கேரேஜ் ஒர்க்-கில் பணிபுரியம் 1337 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

அதுபோல, திருச்சி பொன்மலை செண்ட்ரல் ஒர்க்ஷா-ப்பில் 379 பேரும் போதனூர் சிக்னல் மற்றும் டெலிகாம் ஒர்க்ஷா-ப்பில் பணிபுரிய 722 பேரும் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். எழுத்து தேர்வு எதுவும் கிடையாது. சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவுடன் வேலையில் சேரும் அறிவிப்பு கடிதம், வீடு தேடி வரும்.
இந்த வேலை அப்ரண்டீஸ் சட்டப்படி கிடைக்க இருக்கிறது. மத்திய அரசின் அப்ரண்டீஸ் விதிகளின் படி மாதம் தோறும் ஊதியம் தரப்படும். இவ்வேலைக்கு ஜுலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன் பெண் என்று இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம். 10 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்தோர், எம்.எல்.டி (லேப் டெக்னீஷியன்), ஸ்டெனோகிராபர் (சுருக்கெழுத்தர்) விண்ணப்பிக்க முடியும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் ஐம்பது சதவீத மதிப்பெண் எடுத்து பாஸ் ஆகி இருக்க வேண்டும்.
https://sr.indianrailways.gov.in/ தளத்தில் Personnel Branch Information என்ற பக்கத்தில் முழு விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ படிப்பினை முடித்திருக்க வேண்டும். இவர்களுக்கு இரண்டு ஆண்டு தொழில் பழுகுநர் பயிற்சி வழங்கப்படும். வெல்டர் (காஸ் மற்றும் எலெக்ட்ரிக் ), மெடிக்கல் லேபரட்டரி டெக்னீசியன் (MLT) படித்தவர்களுக்கு 15 மாதங்கள் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்படும். இவை தவிர மற்ற பிரிவுகளில் தொழில் பழகுநர் பணியில் சேர்க்கப்படுவோருக்கு அப்ரண்டீஸ் விதிகளின் படி ஓராண்டு பயிற்சி தரப்படும்.
டிப்ளமோ, இன்ஜினியரிங் என்று உயர் கல்வி படித்தோர் விண்ணப்பிக்க வேண்டாம். கண்பார்வை, உடல் மாற்றுத்திறன் என்று மத்திய அரசின் விதிகளின் படி, இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு முறைகள் பின்பற்றப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
இந்த வேலைக்கு ஜுலை 22 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை https://sronline.iroams.com/rrc_sr_apprenticev1/recruitmentIndex வழியாக மட்டுமே விண்னப்பிக்க வேண்டும். தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம். ஆந்திராவில் எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களை சேர்ந்தோரும் கர்நாடகாவில் தட்சண கர்நாடகா பகுதியை சேர்ந்தோரும் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்புப் குறித்த முழு அறிவிக்கையை Southern_Railway_Apprentices_notification_2024-2025 இங்கே கிளிக் செய்து படிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அறிவிக்கையை முழுமையாக படித்த பின்னர், விண்ணப்பிக்க வேண்டும்.

தொழில் பழகுநர் விதிகளின்படி, மாத ஊதியம் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி மார்க் ஷீட், சாதி சான்றிதழ், வங்கி பாஸ் புத்தகம், ஆதார், பான் கார்டு ஆகியவற்றில் விண்ணப்பத்தாரர் பெயரும் தந்தை பெயரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஏதாவது மாற்றம் இருந்தால் அதனை உடனே சரி செய்து கொள்ள வேண்டும். இந்த தொழில் பழகுநர் வேலைக்கு விண்ணப்பிப்போர், https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து அதற்கான ஐடி-ஐ பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
The post ’’ ரயில்வேயில் 2,438 காலிப்பணியிடம் !’’ ஐ.டி.ஐ., எம்.எல்.டி., சுருக்கெழுத்து படித்தோர் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’ரயில்வேயைத் தனியார்மயமாக்குவது பேரழிவினை ஏற்படுத்திடும்..!’’ மார்க்சிஸ்ட் எச்சரிக்கை first appeared on Madras Murasu.
]]>புதுதில்லியில் உள்ள ஹர்கிசன்சிங் சுர்ஜித் பவனில் 2023 ஜூலை 18 அன்று மின்வாரியம் மற்றும் ரயில்வே ஆகியவற்றைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கு எதிராக சிஐடியு சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது ரயில்வே தனியார்மயப் பிரச்சனை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குறிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
அதன் முக்கிய சாராம்சங்கள் வருமாறு:
இந்திய ரயில்வே நம் பொருளாதாரத்தின் உயிர் நாடியாகும். நம் மக்களில் பெரும்பாலானவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். நாடு முழுதும் சுமார் 13452 பயணிகள் ரயில்கள் 7,300 ரயில்வே நிலை யங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த ரயில்களில் ஒவ்வொரு நாளும் 2 கோடியே 40 லட்சம் பயணிகள் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இத்துடன் இந்திய ரயில்வேயில் 9141 சரக்கு ரயில்கள் (goods trains) மூலமாக, சுமார் 1.42 பில்லயன் மெட்ரிக் டன் அளவுள்ள, உணவு தானியங்கள் மற்றும் இதர பொருள்கள்; சாமானிய மக்களுக்கும், விவசாயம் மற்றும் தொழில்துறைக்கும் தேவையான சரக்குகள் மற்றும் இதர பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் இத்தகைய சிறப்புமிகு பொதுப் போக்குவரத்துத் துறையைத்தான் ஒழித்துக்கட்ட விரும்புகிறது. இதனை பெரும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திட தீர்மானித்திருக்கிறது. தனியார் கார்ப்ப ரேட்டுகள் எவருமே இதன் உள்கட்டமைப்பு வசதி களை உருவாக்கியதில் எவ்விதமான முதலீட்டையும் இதுவரை செலுத்தாதவர்கள். மக்களின் பணத்தில் கட்டப்பட்ட ரயில்வேயைக் கொண்டே மக்களைச் சூறையாடவும், கொள்ளை லாபம் ஈட்டவும் அவர்களுக்கு வழிவகை செய்துதர மோடி அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. தனியார்மயம் என்பது நவீன தாராளமயக் கொள்கையின் முக்கியமான கூறுகளில் ஒன்று.
இந்திய ரயில்வேயைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் முயற்சிகளும் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியேயாகும். மோடி ஆட்சிக்கு வந்த பின் அமைக்கப்பட்ட விவேக் தேவ்ராய் குழு (Bibek Debroy Committee) அளித்திட்ட பரிந்துரை களின்படி ரயில்வே செங்குத்தாகவும் நீள்வாட்டத்தி லும் (vertically and horizontally) துண்டாகும் செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ரயில்வேயைத் தனியாருக்குப் பகுதி பகுதியாக தருவதற்கு வசதி செய்து தருவதற்காகவே இந்த ஏற்பாடுகள் அனைத்தும். மேலும், இந்திய ரயில்வே மேற்கொண்டு வந்த அனைத்துச் செயல்களும், அதா வது கட்டுமானம், இயக்கப்படுதல், நிர்வகித்தல், ரோலிங் ஸ்டாக், முக்கிய ரயில்பாதைகள், ரயில் பெட்டி கள் தயாரித்தல் போன்ற அனைத்திலும் அந்நிய நேரடி முதலீடு 100 விழுக்காடு அறிவிக்கப்பட்டி ருக்கிறது.
சொத்துக்களை விற்று காசாக்கத் திட்டம்
மோடி அரசாங்கம், நாட்டின் சொத்துக்களை விற்றுக் காசாக்கும் திட்டமான தேசியப் பண மாக்கல் திட்டத்தின் (National Monetisation Pipeline) மூலமும் ரயில்வேயின் சொத்துக்களை விற்றுக் காசாக்கும் திட்டத்தையும் பிரதானமாகக் கொண்டிருக்கிறது. ரயில்வேக்குச் சொந்தமாக இப்போது இருந்துவரும் ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள ரயில்வேக்குச் சொந்த மான இடங்கள், ரயில்வே பாதைகள், ரயில்கள், சரக்கு ஷெட்டுகள், ரயில்வே குடியிருப்புப் பகுதிகள் (காலனிகள்), ரயில்வே ஸ்டேடியம்கள் முதலான வற்றையும் தனியாரிடம் நீண்ட கால குத்தகைக்குத் தாரை வார்த்திட முடிவு செய்திருக்கிறது.
இந்திய ரயில்வே இப்போது உலகில் மிகப்பெரிய வலைப்பின்னலுடன், முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது. இதனை ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக, துண்டு துண்டாக்கி, பாதுகாப்பு அம்சங்களைப் பற்றியோ, பயணிகளின் பாதுகாப்பு பற்றியே கிஞ்சிற்றும் கவலைப் படாமல், தனியாரிடம் தாரை வார்த்திட முடிவு செய்திருக்கிறது மோடி அரசு. தனியாரிடம் தாரைவார்த்திடும் நடவடிக்கைகளை மக்களிடமிருந்து மறைப்பதற்காக, தனியார்மயம் ‘உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை அளித்தி டும்’ (‘world class travel experience’) என்றும், இது சாமானிய மக்களுக்குப் பயனளிக்கும் என்றும், ரயில்வேயில் தனியார் முதலீடு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் என்றெல்லாம் கூறி, மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இவர்களின் கூற்றுகளுக்கும் உண்மை நிலைமைகளுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.
தனியார்மயமானால் என்னவாகும்?
ரயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டால் ‘உலகத் தரம்வாய்ந்த ரயில் நிலையங்களை உருவாக்குகிறோம்’ என்ற பெயரில், ஒட்டுமொத்த ரயில் நிலையமும் அதனைச் சுற்றியுள்ள நிலங்களும் தனியார்வசமாகும். ரயில் டிக்கெட்டுகள், இயங்கும் பணி மட்டும் ரயில்வேயிடம் இருந்திடும். பிளாட்பாரம் டிக்கெட்டுகள் விற்பது, உணவுப் பண்டங்கள் விற்பது, வாகனங்கள் நிறுத்துமிடம், விளம்பரங்கள் செய்யும் உரிமைகள் முதலானவை தனியாரிடம் ஒப்படைக்கப் படும். இதனை அமல்படுத்துவதற்காக அரசாங்கம் இந்தியன் ரயில்வே ஸ்டேஷன் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (IRSDC-Indian Railway Station Development Corporation) என்னும் நிறு வனத்தை உருவாக்கி இருக்கிறது. தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ரயில்வேயின் நிலங்களை அவர்கள் தங்கள் விருப்பம் போல் வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள லாம். ஓட்டல்கள் கட்டலாம், ஷாப்பிங் மால்கள் கட்டலாம், என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள சேரிகளில் காலங்காலமாக வாழ்ந்துவரும் ஏழை மக்கள் அந்த இடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்படு வார்கள். அவர்கள் வீடற்றவர்களாக வீதிகளில் நிற்பார்கள். ஏழை ரிக்சாக்காரர்கள், ஆட்டோ டிரைவர்கள் ரயில் நிலையங்கள் அருகே தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாது. சாமானிய பயணிகளும்கூட உள்ளூரில் தங்களுக்குத் தேவைப்படும் போக்குவரத்திற்காக, கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் வாகனங் களை அமைத்துக் கொள்ள முடியாது.
வெகு தூரங்களிலிருந்து வரும் பயணிகள் ரயில் நிலையங்களின் நடைமேடைகளில் காத்துக் கொண்டிருப்பதற்கும் அனுமதிக்கப்படமாட்டார் கள். அவர்கள் இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ள இடங்களில் கட்டணம் செலுத்தித்தான் காத்திருக்க வேண்டும். ரயில்களில் ஏறுவதற்கு மட்டுமே அவர்களுக்கு நடைமேடை பயன் படுத்திட அனுமதிக்கப்படும்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஹபிப்கஞ்ச் ரயில் நிலையம் (இப்போது ராணி கமலாபதி நிலையம் என பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), பன்சால் குழு மத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டி ருக்கிறது. குஜராத்தில் காந்தி நகர் ரயில் நிலையமும் அதானி மற்றும் எல்டெகோ உள்கட்டமைப்பு நிறு வனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதுபோல் ‘உலகத்தரம்’ வாய்ந்த நிலையங் களாக மாற்றிட மோடி அரசாங்கம் 400 ரயில் நிலை யங்களை அடையாளம் கண்டிருக்கிறது. இவற்றிற் காக டெண்டர்கள் விடப்பட்டிருக்கின்றன. இந்த ரயில் நிலையங்களில் புதுதில்லி, மும்பை, ஹவுரா, சென்னை, பெங்களூரு, செகந்திராபாத், விஜயவாடா முதலானவையும் அடங்கும்.
சாமானிய மக்கள் ரயில்களைப் பயன்படுத்த முடியாது
ரயில் கட்டணங்கள் இனி அதற்கான செலவினத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். தற்சமயம் பயணிகளின் ரயில் கட்டணங்களில் 53 விழுக்காடு அதன் செலவினத்தையும் (cost), 47 விழுக்காடு அரசின் மான்யத் தொகையையும் கொண்டிருக்கின்றன. இனி இந்த மானியத்தொகை இருக்காது. அது விலக்கிக்கொள்ளப்படும். இத னால் இப்போதுள்ள ரயில் கட்டணங்கள் உடனடி யாக இரட்டிப்பாகும். இத்துடன் கார்ப்பரேட்டுகளைக் குஷிப்படுத்துவதற்காகவும் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படும். ஏற்கனவே பல ரயில்நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் விலை 50 ரூபாய்க்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. பல வழித்தடங்களில் தனியார் ரயில்கள் விடப்பட இருக்கின்றன.
இவ்வாறு விடப்படும்போது அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், ஒரு மணி நேரத்தி ற்குப் பின்பும் அரசு ரயில்கள் விடப்படமாட்டாது. இதனால் அவசரமாகச் செல்ல வேண்டும் என்றுள்ள பயணிகள் தனியார் ரயிலில்தான் அதிகக் கட்டணங்கள் கொடுத்துப் பயணிக்க வேண்டும். இப்போது ஐஆர்சிடிசி மூலமாக தனியார் மூலமாக, தில்லிக்கும் லக்னோவிற்கும் இடையே ‘தேஜாஸ் ரயில்’ விடப்பட்டுள்ளது. இதன் ரயில் கட்டணம் 700 ரூபாயிலிருந்து 900 ரூபாயாகும். இதன் கட்ட ணங்கள் 4,700 ரூபாயாக உயர்த்தப்படஇருக்கின்றன. இப்போது விமானப் பயணங்களில் உள்ளது போன்று விரும்பும் இடத்திற்கும், லக்கேஜுகளுக்கும் தனித்தனியே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இவையெல்லாம் டிக்கெட் கட்டணத்தில் இடம் பெறாது. ரயிலில் உணவு, படுக்கை வசதிகள், வைஃபி வசதிகளுக்குத் தனியே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
சலுகைகள் ரத்து
சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக பாரத் கவுரவ் ரயில்கள் விடப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தனியார் நிறுவனங்களே இயக்கிக் கொண்டிருக்கின்றன. கட்டணங்கள் மற்றும் வழிகள் முதலானவை அவர்கள் வைத்ததுதான். ரயில் கட்டணங்களில், மூத்த குடிமக்கள், குழந்தை கள், மாற்றுத் திறனாளிகள், புற்று நோயாளிகள், மாணவர்கள் முதலானவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும், தனியாரிடம் ரயில் போக்குவரத்து தாரைவார்க்கப்பட்டபின் இயற்கையாகவே, ரத்து செய்யப்பட்டுவிடும். ஏற்கனவே மூத்த குடிமக்கள் பெற்றுவந்த சலுகைகள் ரத்தாகிவிட்டன. இப்போதே ரயில்வே நிர்வாகம் பயணிகளை பல வழிகளில் சூறையாடும் நடவடிக்கைகளில் இறங்கி விட்டது. ரிசர்வ் பெர்த்துகள் கடுமையாகக் குறைக்கப்பட்டுவிட்டன. தட்கல் கோட்டா மூலம் அளிக்கப்படும் பெர்த்துகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. மோடி அரசாங்கம் 2014இல் பிரிமியம் தட்கல் என்னும் முறையைக் கொண்டுவந்தது. இது தட்கல் கட்டணத்தைப்போல் இரண்டு மடங்காகும்.
2016இல் ‘டைனமிக் பிரைசிங்’ (‘dynamic pricing’) என்னும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு 10 விழுக்காடு பெர்த்துகள் நிறைந்த பின்னும், 10 விழுக்காடு கட்டணம் உயர்த்தப்படும். இப்போது ஸ்லீப்பர் கோச்சுகளாக இருப்பவை யெல்லாம் படிப்படியாக ஏசி கோச்சுகளாக மாற்றப்படும். சாமானிய பயணிகள் பயணம் செய்வதற்கான பொதுப் பட்டியல் (ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டுகள்), ஜெனரல் ரிசர்வ் பெர்த்துகள் படிப்படியாகக் குறைக்கப்படும். இதனால் பொது பெட்டிகளில் பயணிகள் பயணம் செய்வது மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும். ரயில் விபத்துகள் அதிகம் நடைபெறு வதற்கும் இதில் ஏராளமானவர்கள் இறப்பதற்கும் இது ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் இதைப்பற்றியெல்லாம் மோடி அரசாங்கம் கவலைப்படவில்லை.
ரயில்வே ஊழியர்கள் நிலை
நவீன தாராளமயக் கொள்கையின் மிகவும் முக்கியமான முடிவுகளில் ஒன்று, ரயில்வே ஊழி யர்களின் எண்ணிக்கையை வெட்டிக் குறைப்பது என்பதாகும். நிரந்தரப் பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்தப் பணியிடங்களாக மாற்றப்படும். வேலைகள் வெளியில் கொடுத்து (outsourcing) வாங்கப்படும். பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த சுமார் 3 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டிருக்கின்றன. வேலையில் இருக்கும் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்திருக்கிறது. ஓடும் ரயில்களில் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் 14-16 மணி நேரம் வேலை செய்யக் கட்டாயப் படுத்தப்படுகிறார்கள்.
விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாறு மோடி அரசாங்கத்தின் ரயில்வேயைத் தனியார்மயமாக்கும் கொள்கை மக்களுக்கும், ரயில்வே ஊழியர்களுக்கும், நாட்டுக்கும் பேரழிவினை ஏற்படுத்திடும். ஆயினும் மோடி அரசாங்கம் தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதிலேயே சுகம் காணுகிறது. நாட்டை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள தொழிலாளர் வர்க்கமும், உழைக்கும் மக்களும் இந்த அநியாயங்களையெல்லாம் கண்டும் காணாமல் இருந்துவிட முடியாது. இதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்திட வேண்டும். ரயில்வேயைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டையும் நாட்டு மக்களையும் ரயில்வே ஊழியர்களையும் பாது காத்திட வேண்டும்.
The post ’’ரயில்வேயைத் தனியார்மயமாக்குவது பேரழிவினை ஏற்படுத்திடும்..!’’ மார்க்சிஸ்ட் எச்சரிக்கை first appeared on Madras Murasu.
]]>