Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#யோகா - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Thu, 22 Jun 2023 03:57:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’தினமும் யோகா செய்வதால் உடல் உறுப்புக்கள் பலமடைந்து புத்துணர்ச்சி ஏற்படும்..!’’ பாஜக தலைவர் கே.அண்ணாமலை https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25af%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25ae%25be-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/#respond Thu, 22 Jun 2023 03:50:58 +0000 https://madrasmurasu.com/?p=4330 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டைக்கல் புல்வெளி வளாகத்தில் தமிழக பா.ஜ.க. சார்பில் சர்வதேச யோகா தினவிழா நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகனராஜா தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னிலை வகித்தார். மாமல்லபுரம் நகர செயலாளர் தணிகைவேல் வரவேற்றார். இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்று சுற்றுலா பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஆட்டோ, கார் டிரைவர்கள், பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்களுடன் பங்கேற்று […]

The post ’’தினமும் யோகா செய்வதால் உடல் உறுப்புக்கள் பலமடைந்து புத்துணர்ச்சி ஏற்படும்..!’’ பாஜக தலைவர் கே.அண்ணாமலை first appeared on Madras Murasu.

]]>
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டைக்கல் புல்வெளி வளாகத்தில் தமிழக பா.ஜ.க. சார்பில் சர்வதேச யோகா தினவிழா நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகனராஜா தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னிலை வகித்தார்.
மாமல்லபுரம் நகர செயலாளர் தணிகைவேல் வரவேற்றார். இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்று சுற்றுலா பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஆட்டோ, கார் டிரைவர்கள், பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்களுடன் பங்கேற்று தடாசனம், ஹலாசனம், சிரசாசனம், வீரபத்ராசனம், ஏகபாதாசனம், சக்ராசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களில் யோகாசனம் செய்து அசத்தினார்.
யோகா கலை குறித்து தலைவர் கே.அண்ணாமலை கூறியதாவது:
யோகக்கலை ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. யோகாசனம்= யோகா+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள்.
பதஞ்சலி முனிவரால் எழுதப்பட்ட பதஞ்சலி யோக சூத்திரம் நூலே யோகக்கலைக்கு அடிப்படையாக அமைந்தது. தினமும் யோகா செய்வதால் உடல் உறுப்புக்கள் பலமடைந்து புத்துணர்ச்சி ஏற்படுவதோடு நோய்கள் வராமல் தடுத்தும் நோய்களின் தீவிரத்தை குறைத்தும் கட்டுக்குள் கொண்டு வருகிறது.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த இந்த யோகக் கலையின் பெருமை உலகம் முழுவதும் பரவச் செய்த பெருமை நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையே சேரும். இவ்வளவு மதிப்பு நிறைந்த யோகக்கலை உலகம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று, வருடத்தில் ஒரு நாள் சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27-இல் கோரிக்கையை முன்வைத்து, அதற்காக ஜூன் 21ஆம் நாளை பரிந்துரைத்தார்.
அமெரிக்கா, கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஆதரித்து 2014 டிசம்பர் 11அன்று 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 21ஆம் நாளை பன்னாட்டு யோகா தினமாக அறிவித்து தீர்மானத்தை நிறைவேற்றியது.
அவரது சீரிய முயற்சியால் வெற்றிகரமாக 9-ஆவது சர்வதேச யோகா தினத்தினை நாம் கொண்டாடி வருகிறோம். அதோடு மட்டுமின்றி நாட்டு மக்களுக்கு யோகக்கலையின் பயன்களை உணர்த்தும் வகையில் ஆண்டு தோறும் யோகா தினத்தன்று பல விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
கிராமப்புறங்களில் உள்ள மகப்பேறு பெண்களும் பயனடையும் வகையில் கர்ப்பகாலங்களில் செய்ய வேண்டிய யோகாசனங்களை ministry of ayush மூலம் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக்கியுள்ளார்.
தேசிய ஆரோக்கிய திட்டத்தின் மூலம் 12500 ஆரோக்கிய உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையம் (ayush health and wellness centers ) அனைத்து மாநிலங்களிலும் அமைத்து மக்களுக்கு பயன் பெரும் வகையில் யோகாசனம் பற்றிய அவசியத்தையும், விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இவ்வளவு மதிப்பு மிக்க யோகாசனத்தை தினமும் நாம் பயிற்சி செய்து நம் உடல் மற்றும் ஆரோக்கியத்தை பேணிப்பாதுகாப்போம் என்று சர்வதேச யோகா தினமான இன்று ஜூன் 21 ல் உறுதி மொழி எடுப்போம்.

The post ’’தினமும் யோகா செய்வதால் உடல் உறுப்புக்கள் பலமடைந்து புத்துணர்ச்சி ஏற்படும்..!’’ பாஜக தலைவர் கே.அண்ணாமலை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
”ஆரோக்கியமான  குடிமக்கள், வலுவான தேசம்..!” – இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Thu, 22 Jun 2023 03:35:45 +0000 https://madrasmurasu.com/?p=4325 ”பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக யோகாவிற்கு  உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார்.   அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டாக்டர் எல்.முருகன், இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு போர்ட்ப்ளேரில் யோகா தொடர்பான முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காஷ்மீர் முதல் லட்சத்தீவுகள் வரை இன்று அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொள்கிறார்கள் […]

The post ”ஆரோக்கியமான  குடிமக்கள், வலுவான தேசம்..!” – இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் first appeared on Madras Murasu.

]]>
”பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக யோகாவிற்கு  உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார்.

 

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டாக்டர் எல்.முருகன், இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு போர்ட்ப்ளேரில் யோகா தொடர்பான முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காஷ்மீர் முதல் லட்சத்தீவுகள் வரை இன்று அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொள்கிறார்கள் என்றால் அது பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சியால் தான் என்று குறிப்பிட்டார்.

அந்தமான் நிகோபார் தீவுகளிலும் நாம் யோகாவை கடைபிடித்து வருகிறோம், இது யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பொருள்படக் கூடிய வசுதைவ குடும்பகம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று அமைச்சர் கூறினார். யோகா என்பது நமது நாட்டின் பெருமிதம் என்றும், நமது நாட்டிற்கு புகழ் சேர்க்கக் கூடிய இயக்கமாக அது மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.     

யோகாசனங்கள் மூலமாக நமது மனதையும் உடலையும் ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் வைத்துக் கொள்ள இயலும் என்று குறிப்பிட்ட அமைச்சர், அனைவரும் யோகாவை  கடைபிடித்து அன்றாட வாழ்வில் உடலைக் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  ஆரோக்கியமான  குடிமக்கள், வலுவான தேசத்திற்கு வழி வகுக்கிறார்கள் என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

போர்ட் ப்ளேரில் உள்ள  மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஆயுஷ் துறையினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், அந்தப் பகுதியின் துணை நிலை ஆளுநர்  அட்மிரல் டி கே ஜோஷி மற்றும் அந்தமான் நிகோபார் நிர்வாக அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். அந்தமான் நிகோபார் தீவுகளில் 42 இடங்களி்ல் யோகா தினக் கொண்டாட்டங்கள் உற்சாகத்துடன் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து போர்ட் ப்ளேரில் உள்ள தொழில்துறை பிரதிநிதிகளை டாக்டர் எல்.முருகன் சந்தித்துப் பேசினார்.  இந்த தீவுப் பகுதியில் வர்த்தகத்துறையின் வளர்ச்சிக் குறித்து அவர்கள், தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்த கொண்டதோடு பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

     

மத்திய அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், அரசின் சாதனைகள் குறித்து அமைச்சர் எடுத்துரைத்தார். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை என்ற குறிக்கோளின் அடிப்படையில் அரசு முன்னேறிச் செல்வதாக   அமைச்சர் அப்போது கூறினார்.

வளர்ச்சி என்பது பெருநகரங்களுக்கு மட்டுமானது அல்ல என்றும், தொலைதூரப் பகுதிகளுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு மத்திய அரசு அனைத்துவிதமான ஆதரவையும் அளித்து வருவதாக கூறிய அமைச்சர், இந்த தீவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் முன்னேற்றமும் சாட்சிகளாக அமைந்துள்ளன என்றார்.

     

மாவட்ட அளவிலான மருத்துவமனைக் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாகவும், விரைவில் அதன் பணிகள் முடிவடைந்து மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச விமான நிலைய முனையம் இங்கே சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது போன்ற வளர்ச்சிப் பணிகள் தென்கிழக்கு நாடுகளுடன் சமூக பொருளாதார உறவுகளை மேம்படுத்த உதவும் என்றும் கூறினார்.

இதற்கிடையே, உள்ளூர் மீனவர்களை சுவராஜ்தீப்பில் (ஹேவ்லாக்) சந்தித்த அமைச்சர், அந்தப் பகுதியில், பனிக்கட்டி தொழிற்சாலையை ஏற்படுத்தவும், குளிர்பதன வசதிகள் கொண்ட சேமிப்புக் கிடங்கை ஏற்படுத்தவும் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று டாக்டர் எல்.முருகன் தெரிவித்தார்.

The post ”ஆரோக்கியமான  குடிமக்கள், வலுவான தேசம்..!” – இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
“உடல் வலிமையும், மன வளர்ச்சியும் தான் இந்தியாவின் அடித்தளமாக விளங்கும்..!” பிரதமர் மோடி https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%259f%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25a9-%25e0%25ae%25b5%25e0%25ae%25b3%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%259a https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a/#respond Wed, 21 Jun 2023 12:26:56 +0000 https://madrasmurasu.com/?p=4321 தேசிய அளவிலான 2023 சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களின் போது, காணொளி செய்தி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார். 9-வது சர்வதேச யோகா தினம் 2023-ஐ முன்னிட்டு மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையேற்றார். காணொளி செய்தி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, கடந்த ஆண்டுகளைப் […]

The post “உடல் வலிமையும், மன வளர்ச்சியும் தான் இந்தியாவின் அடித்தளமாக விளங்கும்..!” பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
தேசிய அளவிலான 2023 சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களின் போது, காணொளி செய்தி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார். 9-வது சர்வதேச யோகா தினம் 2023-ஐ முன்னிட்டு மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையேற்றார்.

காணொளி செய்தி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல் இந்த வருடம் பல்வேறு பணிகளின் காரணமாக அமெரிக்காவிற்குத் தாம் பயணம் மேற்கொண்டிருப்பதால் காணொளி செய்தி மூலம் மக்களுடன் உரையாற்றுவதாக விளக்கமளித்தார்.

ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் தாம் கலந்து கொள்ளவிருப்பதாக அறிவித்த பிரதமர், “இந்தியாவின் அழைப்பை ஏற்று இதுவரை இல்லாத அளவில் 180க்கும் அதிகமான நாடுகள் இணைந்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது” என்று கூறினார். கடந்த 2014-ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினம் மூலம் யோகாவை உலகளாவிய இயக்கமாகவும், சர்வதேச உணர்வாகவும் மாற்றுவது தொடர்பாக ஐ.நா பொது சபையில் யோகா தினம் அனுசரிப்பது குறித்த முன்மொழிவு முன்வைக்கப்பட்ட போது ஏராளமான நாடுகள் அதற்கு ஆதரவளித்ததை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

யோகா தினத்தை மேலும் சிறப்பானதாக்கும் ‘யோகாவின் பெருங்கடல் வளையம்’ என்ற கருத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், யோகாவின் தாத்பரியம் மற்றும் பெருங்கடலின் நீட்சிக்கு இடையேயான பரஸ்பர தொடர்பின் அடிப்படையில் இது அமைந்திருப்பதாகக் கூறினார். நீர் வளங்களைப் பயன்படுத்தி ராணுவ வீரர்கள் யோக பாரத்மாலா மற்றும் யோக சாகர்மாலா அமைத்தது பற்றியும் அவர் பேசினார். அதேபோல ஆர்டிக் முதல் அண்டார்டிகா வரையிலான இந்தியாவின் இரண்டு ஆராய்ச்சி தளங்கள் அமைந்துள்ள பூமியின் இரண்டு துருவங்கள் கூட யோகாவினால் இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். நாடு மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் இந்த தனித்தன்மை வாய்ந்த கொண்டாட்டங்களில் பெருமளவு கலந்து கொண்டிருப்பது, யோகாவின் புகழை எடுத்துரைக்கிறது என்றார் அவர்.

“யோகா நம்மை இணைக்கிறது”, என்று துறவிகளை மேற்கோள் காட்டி பிரதமர் விளக்கினார். ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் தான் என்ற கருத்தின் விரிவாக்கம் தான் யோகா பற்றிய விழிப்புணர்வு என்று அவர் மேலும் தெரிவித்தார். ‘ஒரு பூமி, ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம்’ என்ற கருப்பொருளுடனான இந்தியா தலைமையிலான ஜி20 அமைப்பு குறித்து பேசுகையில், யோகா குறித்த பிரச்சாரம் என்பது, ‘வசுதைவ குடும்பகம்’ என்ற உணர்வை எடுத்துரைப்பதாகும் என்று கூறினார். “ ‘வசுதைவ குடும்பகத்திற்காக யோகா’ என்ற கருப்பொருளில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து யோகா பயிற்சியை மேற்கொள்கிறார்கள்”, என்று பிரதமர் தெரிவித்தார்.

பழங்கால யோகா நூல்களை மேற்கோள் காட்டிய பிரதமர், யோகாவின் மூலமாக ஆரோக்கியம், மன உறுதி மற்றும் வலிமை கிடைப்பதாகவும், பல ஆண்டுகளாக இந்தப் பயிற்சியை முறையாக செய்பவர்கள், இந்த சக்தியை உணர்ந்திருக்கிறார்கள் என்றும் கூறினார். தனிநபர் மற்றும் குடும்ப அளவில் உடல் நலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் வாய்ந்த சமூகத்தை உருவாக்கும் யோகாவில், கூட்டு சக்தி அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார். நாட்டின் கலாச்சார அடையாளத்தைப் புதுப்பித்து, தற்சார்பு இந்தியாவைக் கட்டமைக்க தூய்மை இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற பிரச்சாரங்கள் உதவி வருவதாகவும், நாடும், அதன் இளைஞர்களும் இந்த புத்துணர்விற்கு பெருமளவு பங்களித்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். “இன்று நாட்டின் மனநிலை மாறியுள்ளது, மக்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதற்கும் அது வழிவகை செய்துள்ளது”, என்று பிரதமர் கூறினார்.

ஒன்றிணைக்கும், ஏற்றுக் கொள்ளும் மற்றும் அரவணைக்கும் பாரம்பரியங்களை இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சமூக கட்டமைப்பு, அதன் ஆன்மீக உணர்வு மற்றும் கோட்பாடுகள் மற்றும் அதன் தத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவை எப்போதும் வளர்த்து வந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் போற்றத்தக்க வளமான பன்முகத்தன்மையை சுட்டிக் காட்டிய திரு மோடி, இந்தியர்கள் புதிய சிந்தனைகளுக்கு ஆதரவளித்து, அவற்றைப் பாதுகாக்கிறார்கள் என்று தெரிவித்தார். இதுபோன்ற உணர்வுகளை வலுப்படுத்தி, சக உயிரினம் மீதான அன்பின் அடிப்படையில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் உள்ளுணர்வுடன் நம்மை இணைத்து, உள்ளார்ந்த பார்வையை யோகா விரிவுபடுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். எனவே, யோகா மூலமாக நமது முரண்பாடுகள், தடைகள், எதிர்ப்புகளை நாம் நீக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். “ ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை உலகிற்கு எடுத்துக்காட்டாக நாம் முன் வைக்க வேண்டும்”, என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தமது உரையின் நிறைவு பகுதியில், யோகா குறித்த ஸ்லோகத்தை மேற்கோள் காட்டி, செயல் திறன் தான் யோகா என்று பிரதமர் தெரிவித்தார். விடுதலையின் அமிர்த பெருவிழாவில் இந்த தாரக மந்திரம் அனைவருக்கும் அவசியம் என்று வலியுறுத்தி, ஒருவர் தமது பணிகளை மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யும்போது யோகா முழுமை பெறுகிறது என்று அவர் கூறினார். யோகாவினால் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தி இந்த உறுதிப்பாடுகளை உள்வாங்கிக் கொள்வோம் என்ற தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி, “யோகாவின் மூலம் தன்னலமற்ற செயலை நாம் அறிகிறோம், கர்மா முதல் கர்மயோகா வரையிலான பயணத்தை நாம் முடிவு செய்கிறோம்” என்று திரு மோடி கூறினார். “நமது உடல் வலிமையும், மன வளர்ச்சியும் தான் வளர்ந்த இந்தியாவின் அடித்தளமாக விளங்கும்” என்று தெரிவித்து பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

The post “உடல் வலிமையும், மன வளர்ச்சியும் தான் இந்தியாவின் அடித்தளமாக விளங்கும்..!” பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a/feed/ 0
’’யோகக் கலை, சர்வ ரோக நிவாரணி..!’’ கொடைக்கானல் வன அலுவலர் பி.கே.திலீப் https://madrasmurasu.com/%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25af%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5-%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%2595-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be/#respond Wed, 21 Jun 2023 12:09:58 +0000 https://madrasmurasu.com/?p=4316 ’’சர்வ  ரோக நிவாரணியான யோகக் கலை, இந்தியா உலகிற்கு வழங்கிய பெருங்கொடை’’ என்று கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் பி.கே.திலீப் கூறினார். மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின்  சென்னை மண்டல அலுவலகம், கொடைக்கானலில் மூன்று நாள் புகைப்படக் கண்காட்சியை நடத்துகின்றது.      மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் 9 ஆண்டு சாதனை, சர்வதேச யோகா தினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை […]

The post ’’யோகக் கலை, சர்வ ரோக நிவாரணி..!’’ கொடைக்கானல் வன அலுவலர் பி.கே.திலீப் first appeared on Madras Murasu.

]]>

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின்  சென்னை மண்டல அலுவலகம், கொடைக்கானலில் மூன்று நாள் புகைப்படக் கண்காட்சியை நடத்துகின்றது.

    

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் 9 ஆண்டு சாதனை, சர்வதேச யோகா தினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை (உலக சுற்றுச்சூழல் தினம்) ஆகிய மையக்கருத்துக்களில் இந்த ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் புகைப்படக் கண்காட்சி கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறுகின்றது.

இந்த கண்காட்சியை சிறப்பு விருந்தினர் திலிப் திறந்து வைத்துப் பார்வையிட்டார். தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசிய அவர், யோகாவை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் வகையில், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி ஐ நா பொதுச் சபையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் ஆண்டு தோறும் ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்க வழிவகை ஏற்பட்டது. உலக மக்களை ஒரே குடும்பமாக கருதி, எல்லோரும் எல்லா நலமும் பெற வேண்டும் என்ற ஒப்பற்ற நோக்கில், சர்வ  ரோக நிவாரணியான யோகக் கலையை இந்தியா உலகிற்கு  பெருங்கொடையாக வழங்கியுள்ளது. அதனடிப்படையில் நாம் இன்று இந்த சிறப்பு நிகழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றோம்.

     

தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு யோகா பெரிதும் உதவுகிறது. குறிப்பாக மாணவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் யோகாவைப் பயின்று அன்றாட வாழ்வில் கடைபிடித்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்ய வேண்டும். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மாணவர்கள் அறிந்து கொண்டு பயன் பெறுவதோடு பிறருக்கும் எடுத்துரைக்க வேண்டும். ஆரோக்கியமான, விழிப்புணர்வு மிகுந்த,வளமான சமுதாயம் மூலமே நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என திலிப் வலியுறுத்தினார்.

முன்னதாக சர்வதேச யோகா தினம், லைஃப் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் (உலக சுற்றுச்சூழல் தினம்) குறித்த விழிப்புணர்வு கையேடுகளை அவர் வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். பின்னர் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டம் சார்பில் தயாரிக்கப்பட்ட எடை குறைந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துமிக்க ஜாம்-ஐ பயனாளிகளுக்கு திலிப் விநியோகித்தார்.

நிகழ்ச்சியில் மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை மண்டல இயக்குநர் ஜெ.காமராஜ் தலைமையுரை ஆற்றினார்.

     

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக விளையாட்டுத் துறை இயக்குநர் அ.ராஜம், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கு.மரியதாஸ் வாழ்த்துரை வழங்கினர்.

மக்கள் தொடர்பக கள விளம்பர அலுவலர் கே.ஆனந்த பிரபு வரவேற்புரை ஆற்றினார்.

கண்காட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து அரங்கு, இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆதார் திருத்த அரங்கு, சமூக நலத்துறை அரங்கு, தோட்டக்கலைத் துறை அரங்கு, சுற்றுலாத் துறை அரங்கு ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிடலாம்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பக தொழில்நுட்ப உதவியாளர் எம். முரளி மற்றும் கள விளம்பர உதவி அலுவலர் ஜெ. போஸ்வெல் ஆசீர் ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் அன்றாட வாழ்வியல் முறையில் உடனடி மாற்றங்களைக் கொண்டு வரும் எளிய யோகா செய்முறை விளக்கங்கள் நிகழ்த்தப்பட்டது.

The post ’’யோகக் கலை, சர்வ ரோக நிவாரணி..!’’ கொடைக்கானல் வன அலுவலர் பி.கே.திலீப் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be/feed/ 0
’’யோகா தினம் – ஊடகங்களுக்கு 33 விருதுகள்..!’’ தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் https://madrasmurasu.com/%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25af%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25ae%25be-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%258a%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/#respond Sat, 10 Jun 2023 10:15:08 +0000 https://madrasmurasu.com/?p=3676 ’’சர்வதேச யோகா தினத்தையொட்டி ஊடக விருதுகள் வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் யோகாவை பரப்புவதில் ஊடகங்கள் வகிக்கும் முக்கியப் பங்கை இந்த விருது அங்கீகரித்துப் பாராட்டுகிறது’’ என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார். மொத்தம் 33 விருதுகள் : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இரண்டாவது ஊடகத் துறை விருதுகள் தொடர்பான அறிவிப்பை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 09.06.2023 அன்று வெளியிட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான விருதுகளில், 22 இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் செயல்படும் அச்சு, தொலைக்காட்சி […]

The post ’’யோகா தினம் – ஊடகங்களுக்கு 33 விருதுகள்..!’’ தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் first appeared on Madras Murasu.

]]>
’’சர்வதேச யோகா தினத்தையொட்டி ஊடக விருதுகள் வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் யோகாவை பரப்புவதில் ஊடகங்கள் வகிக்கும் முக்கியப் பங்கை இந்த விருது அங்கீகரித்துப் பாராட்டுகிறது’’ என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

மொத்தம் 33 விருதுகள் :

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இரண்டாவது ஊடகத் துறை விருதுகள் தொடர்பான அறிவிப்பை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 09.06.2023 அன்று வெளியிட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான விருதுகளில், 22 இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் செயல்படும் அச்சு, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகிய மூன்று பிரிவுகளில் 33 விருதுகள் வழங்கப்படுகின்றன.

1) செய்தித்தாள்களில் யோகா தொடர்பாக சிறப்பாக வெளியிடப்படும் தகவல்களுக்காக செய்தித் தாள் பிரிவின் கீழ் 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் செய்தித் தாள்களுக்கு 11 விருதுகள் வழங்கப்படுகிறது.

2) மின்னணு ஊடகங்களில் (தொலைக்காட்சி) யோகா தொடர்பாக சிறப்பாக வெளியிடப்படும் தகவல்களுக்காக தொலைக்காட்சிப் பிரிவின் கீழ் 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு 11 விருதுகள் வழங்கப்படுகிறது.

3) மின்னணு ஊடகங்களில் (வானொலி) யோகா தொடர்பாக சிறப்பாக வெளியிடப்படும் தகவல்களுக்காக வானொலிப் பிரிவின் கீழ் 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் வானொலி நிறுவனங்களுக்கு 11 விருதுகள் வழங்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டிற்கான விருதுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி அன்று கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்றும் இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

தேசங்களின் எல்லைகள் மற்றும் கலாச்சாரங்களைத் தாண்டி, யோகா கோடிக் கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கான அணுகுமுறை காரணமாக யோகா பலரது ஆர்வத்தை ஈர்த்து, உலகளாவிய நிகழ்வாக இந்த யோகா தினம் மாறியுள்ளது என்று அவர் கூறினார்.

யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதிலும், யோகாவின் திறன்களை வெளிப்படுத்துவதிலும் ஊடகங்களின் பங்கு முக்கியமானது என்றும் அவற்றின் முயற்சி இல்லாமல் யோகா தொடர்பான தகவல்களை பெரிய அளவில் பிரபலப்படுத்தி இருக்கும் இந்த முயற்சி சாத்தியமாகியிருக்காது என்றும் அவர் தெரிவித்தார். இதை அங்கீகரிக்கும் வகையில், சர்வதேச யோகா தின விருதுகளை இரண்டாவது முறையாக வழங்கத் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் யோகா தொடர்பான தகவல்களைப் பரப்புவதில் ஊடகங்கள் வகிக்கும் பங்கை இந்த விருது அங்கீகரித்துப் பாராட்டுவதாக அவர் கூறினார். யோகா என்ற பழமையான கலையையும் அதன் பல நன்மைகளையும் ஊக்குவிப்பதில் ஊடகங்களுக்கு உள்ள மகத்தான சக்தியையும் பொறுப்பையும் அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

யோகா தொடர்பான புரிதலை ஏற்படுத்தவும், அதை ஊக்குவிக்கவும், ஊடகங்கள் ஒரு ஊக்க சக்தியாக விளங்குவதாகவும் அவர் கூறினார். அனைத்து வயதினரும், எல்லா பின்னணி கொண்டவர்களும், பின்பற்றக் கூடிய உலகளாவிய நடைமுறையாக யோகாவைக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் வெற்றி பெற்றுள்ளன என்று திரு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

இந்த விருதுகள் ஒரு சுதந்திரமான நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

10.06.2023 முதல் 25.06.2023 வரையில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் யோகா தொடர்பான கட்டுரைகள் அல்லது ஒளிபரப்பப்படவுள்ள ஆடியோ/வீடியோ உள்ளடக்கங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். விருதுக்கு விணன்ணப்பிக்கும்போது அவை தொடர்பான காட்சிகள் மற்றும் விவரங்களை, குறிப்பிட்ட வடிவத்தில் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். விருது தொடர்பான படைப்புகளைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கக் கடைசி தேதி 2023 ஜூலை 1 (01.07.2023) ஆகும்.

இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் இணையதளமான https://pib.gov.in/indexd.aspx மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதளமான https://mib.gov.in/ ஆகியவற்றில் காணலாம்.

சர்வதேச யோகா தின ஊடக விருதுகள்

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் யோகாவை பரப்புவதில் ஊடகங்களின் சிறந்த பங்களிப்பைப் பாராட்டும் வகையில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் 2019-ம் ஆண்டில் முதலாவது சர்வதேச யோகா தின ஊடக விருதுகளை (AYDMS) அறிவித்தது. அந்த விருது 07.01.2020 அன்று வழங்கப்பட்டது. அதன் பின்னர் கொவிட் பெருந்தொற்று பாதிப்புக் காரணமாக இந்த விருதில் இடைவெளி ஏற்பட்டது. தற்போது அந்த விருதுகளை மீண்டும் வழங்க தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

The post ’’யோகா தினம் – ஊடகங்களுக்கு 33 விருதுகள்..!’’ தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/feed/ 0