Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#முரசொலி - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Sat, 11 Nov 2023 06:21:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்.!” ’முரசொலி’ விளாசல் https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%85/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a9-%25e0%25ae%2585 https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%85/#respond Sat, 11 Nov 2023 06:21:26 +0000 https://madrasmurasu.com/?p=7516 ‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்’’ என்று முரசொலி தலையங்கம் எழுதியுள்ளது. அதன் விபரம் வருமாறு: திராவிட மாடலின் சமூக (அ)நீதி’ என்ற தலைப்பில் ‘ஆரிய’ விகடன் அலறி இருக்கிறது. திடீரென பட்டியலின சமூகத்தவர்மீது இவர்களுக்குப் பாசம் பொங்கி வழிகிறது. ‘என்னவாக இருக்கும்’ என்று பார்த்தால், அவர்களால் ‘கொண்டையை’ மறைக்க முடியாதது அந்தத் தலையங்கத்திலேயே இருக்கிறது. தமிழ்நாட்டில் நடந்த மூன்று சம்பவங்களை விவரிக்கும் அந்தத் தலையங்கத்தின் உள்நோக்கம் என்ன தெரியுமா? மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மக்களைப் […]

The post ’‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்.!” ’முரசொலி’ விளாசல் first appeared on Madras Murasu.

]]>
‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்’’ என்று முரசொலி தலையங்கம் எழுதியுள்ளது. அதன் விபரம் வருமாறு:

திராவிட மாடலின் சமூக (அ)நீதி’ என்ற தலைப்பில் ‘ஆரிய’ விகடன் அலறி இருக்கிறது. திடீரென பட்டியலின சமூகத்தவர்மீது இவர்களுக்குப் பாசம் பொங்கி வழிகிறது. ‘என்னவாக இருக்கும்’ என்று பார்த்தால், அவர்களால் ‘கொண்டையை’ மறைக்க முடியாதது அந்தத் தலையங்கத்திலேயே இருக்கிறது.

தமிழ்நாட்டில் நடந்த மூன்று சம்பவங்களை விவரிக்கும் அந்தத் தலையங்கத்தின் உள்நோக்கம் என்ன தெரியுமா?

மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனக் கோட்பாட்டுக்கு எதிராக வலிமையான வாதங்களை எடுத்து வைக்கிறார் அல்லவா? அது விகட ஆரியக் கூட்டத்தை கோபம் கொள்ள வைக்கிறது. “மனிதத் தன்மையற்ற இந்த தாக்குதல்களையும் வன்கொடுமைகளையும் கண்டும் காணாமல் மெளனம் சாதித்து வேடிக்கை பார்க்கிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இது இப்படி இருக்க ‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசுவது வெட்டி அரசியல் பேச்சு. பெரியார், அறிஞர் அண்ணா கோரிய சமூகநீதிக்கு திமுக அரசு செய்யும் துரோகம் இது” என்று ஆரிய விகடன் அலறுகிறது.

மக்களைப் பிளவுபடுத்தும் வர்ண சனாதனக் கோட்பாடுகளுக்கு எதிராகப் பேசியது மட்டுமல்ல; அதைத் திரும்பப் பெற மாட்டேன் என்று துணிச்சலாக நிற்கிறாரே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ற வன்மத்தை ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மீது காட்டுகிறது விகடன்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யும் ‘திராவிட மாடல்’ ஆட்சியால் அலறிக் கொண்டிருக்கிறது ஆரியக் கும்பல். அதனுடைய அலறலைத் தான் ஆளுநர் ரவியின் குரலில் நாம் காண்கிறோம். சில நாட்களுக்கு முன்னால் ரவி என்ன சொன்னாரோ, அதையேதான் விகடனும் ‘தலையங்கம்’ என்ற பெயரால் வாந்தி எடுத்துள்ளது. இந்தக் கும்பலுக்கு ஒட்டுமொத்தமாக ‘ஒரே கண்டெண்ட் எடிட்டர்’ இருக்கிறார் என்பது நமக்குத் தெரியாதா என்ன?

பட்டியலின மக்கள் மீது நடந்த சில சம்பவங்களை எடுத்துப் போட்டு, தாங்கள் ஏதோ ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கைப் போல விகடன் காட்டிக் கொள்கிறது. இந்தச் சம்பவங்களின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை மறைத்து, இவை எதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகிறது அந்தத் தலையங்கம்.

• நெல்லை தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குள், குளித்து விட்டு வந்தவர்களிடம், பணத்தைக் கேட்டும், சாதியைக் கேட்டும் தகராறு செய்து இருவரைத் தாக்கிய சம்பவத்தில் ஆறுபேர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்கள். கொடும் காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் தாக்கிக் காயம் ஏற்படுத்துதல், வழிப்பறியில் ஈடுபடுதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வழங்கப்படும் முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.

• நாங்குநேரியில் மாணவரும், அவரது சகோதரியும் வெட்டப்பட்டார்கள். 3 சிறுவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். 11 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் உடனடியாகத் தரப்பட்டது. உடனடியாக சபாநாயகரும் அமைச்சர்களும் சென்று பார்த்தார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அந்த இருவரையும் சமீபத்தில் பார்த்து ஆறுதல் கூறினார்.

• கிருஷ்ணகிரி அருகே சோக்காடியில் நடந்த சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்துக்குக் காரணமான அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தலைமறைவாக இருக்கிறார். பிரச்சினையே இவரால் வந்தது தான். இவரது பெயரையே சொல்லாமல் தலையங்கம் தீட்டியதுதான் ‘விகடனின்’ பத்திரிக்கா தர்மம்!

• புதுக்கோட்டை கொப்பம்பட்டி மாணவர் தற்கொலையில் வன்கொடுமைச் சட்டப்படி வழக்குப் பதியப்பட்டுள்ளது.

• வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நீதிபதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதுகுறித்து இங்கு எழுதுவது சரியாக இருக்காது.

• பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் சாதிப்பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தகுந்த பரிந்துரைகளை வழங்க, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி அனைத்துக் குற்றச் சம்பவங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யவில்லை என்றாலோ, அல்லது குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டு இருந்தாலோ அதுகுறித்து தலையங்கம் எழுதி அரசுக்கு அறிவுறுத்தலாம். செய்திகளை வரிசைப்படுத்தி, அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தந்திரமாக மறைக்கிறது ‘விகடன்’ தலையங்கம்.

உண்மையில் இவர்களுக்கு சமூகநீதியில் அக்கறை இருக்குமானால், ‘சாதியை ஆதரித்தும் மற்ற சாதிகளை இழிவுபடுத்தியும்’ பேசும் ‘திருச்சி கல்யாணராமன் போன்றவர்களை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேட்க முடியுமா? ‘சனாதனம்’ என்ற பெயரால்தான் இந்த சாதிவன்ம வார்த்தைகள் கொட்டப்படுகின்றன. இதுபோல பல நூறு வீடியோக்கள் இணையத்தளங்களில் வலம் வருகின்றன. ‘திராவிட மாடல் ஆட்சி இந்தச் சாதி வன்மப் பேர்வழிகளை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேட்கும் ‘சமூக நீதி உள்ளம்’ விகடனுக்கு உண்டா? கலைஞர் கேட்பாரே; ‘உள்ளம் இருக்கிறதா? உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருக்கிறதா?’ என்று!

‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாரும் சமூகநீதிப் பாடம் எடுக்கத் தேவையில்லை. யார் சொல்லியும் அல்ல; அவராகவே செய்யும் அக்கறையும், கொள்கைப் பற்றும் அவருக்கு உண்டு.

• ஆட்சிக்கு வந்ததும் ஆதிதிராவிடர் – பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தவர் முதலமைச்சர் அவர்கள்.

• அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டப்படாத மாநில விழிப்புணர்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து கூட்டி வருபவர் முதலமைச்சர் அவர்கள்.

• அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14 ஆம் தேதியை ‘சமத்துவ நாளாக’ அறிவித்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.

• அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில், அவரின் முழு அளவு வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

• அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக அவரின் படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்க இந்த நிதியாண்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

• அண்ணல் அம்பேத்கர் விருதுத் தொகை ரூ.5 லட்சமாக ஆக்கப்பட்டுள்ளது.

• வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தீருதவித் தொகை குறைந்தபட்சம் 85,000 ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் அதிகபட்சம் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகவும் உ யர்த்தப்பட்டது.

• வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சார்ந்த 723 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம், கல்வி உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா ஆகிய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

• வன்முறையால் பாதிக்கப்பட்டோரைச் சமூகக் கண்ணோட்டத்துடன் அணுகி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகின்றன.

• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீருதவிகள் மற்றும் மறுவாழ்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க கூடுதலாக நான்கு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

• சாதி வேறுபாடுகளற்ற மயானங்களை பயன்பாட்டில் கொண்டிருக்கும் முன்மாதிரிச் சிற்றூர்களில், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஊக்கத் தொகையாக தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 70 சிற்றூர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளன.

• தீண்டாமையைக் கடைபிடிக்கப்படாமல் பொதுமக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடும் பொருட்டு ரூ.10 இலட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 37 கிராமங்கள் பயனடைந்துள்ளன.

• பொதுமக்களிடையே தீண்டாமைக்கெதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24––ஆம் தேதி முதல் 30-–ஆம் தேதி வரை “மனிதநேய வார விழா” நடத்தப்படுகிறது.

• ஆண்டுதோறும் ஜனவரி 26, ஆகஸ்டு 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களிலும், அந்தந்த மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் விடுமுறை நாட்களிலும் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.

• ஆதிதிராவிட மக்களின் கல்வியறிவு விகிதம் (73.26%) ஒப்பீட்டளவில் பொதுப் பிரிவினரின் கல்வியறிவு விகிதத்தினை ( 80.09%) விட குறைவாக உள்ளது. எனவே இத்துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.3,512.85 கோடியில்; கல்விசார்ந்த திட்டங்களுக்காக மட்டும் ரூ.2,206.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• ஆதிதிராவிடர் நலத் துறையால் 1138 ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மேம்பாட்டுக்காக ரூ.120 கோடி சென்ற ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• இத்துறையால் நடத்தப்படும் விடுதிகளைப் பழுது பார்க்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• எம்.சி.இராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் 10 தளங்களுடன் நவீன வசதியில் புதிய விடுதிக் கட்டடம் கட்ட முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி இருக்கிறார்கள்.

• முனைவர் பட்டப்படிப்பிற்கான உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் இதுவரை 2,954 மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ருபாய் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

• வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ.8 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு, 18 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

• தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் பயனடைவதற்கான வருமான உச்சவரம்பு மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

• ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்னும் புதிய திட்டம் ரூ.100 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

• ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.

• புதிரை வண்ணார் நல வாரியத்திற்குப் புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நிதியாண்டில் ரூ.10.00 கோடி கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

• இந்த நிதியாண்டில் மாநில திட்ட ஒதுக்கீடான ரூ.77,930.30 கோடியில், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்காக ரூ.17,075.70 கோடி(21.91%) மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக ரூ.1595.89 கோடி (2.05%) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் (20.01%) மற்றும் பழங்குடியின மக்கள் தொகை (1.17%) விகிதாச்சாரத்தை விட அதிகமானதாகும்.

இதுதான் ‘திராவிட மாடல் ஆட்சி’யின் சமூக நீதி ஆகும்.

முதலமைச்சர் அவர்களே குறிப்பிட்டுள்ளதைப் போல, ‘சுயமரியாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்’ என்பதும் உண்மைதான். அதற்கான சட்டங்களையும் முதலமைச்சர் தீட்டி வருகிறார்கள். மனமாற்றப் பரப்புரைகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை ‘ஆரிய’ விகடக் கும்பலால்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது போன்ற சட்டங்களாலும் -– மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனத்துக்கு எதிரான யுத்தங்களாலும் -– நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் ஆரியக் கும்பல், பட்டியலின வேஷம் போடுகிறது. காலம் காலமாக போடப்பட்டு வரும் இந்தக் கபடவேடங்களை உண்மைத் தமிழ் மக்கள் உணர்வார்கள். பார்த்துப் பார்த்து பழகிய ஆரியக் கூத்துகளை நிறுத்தி திருந்தப் பார்க்கவும்.

The post ’‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்.!” ’முரசொலி’ விளாசல் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%85/feed/ 0
’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a4-%25e0%25ae%25aa%25e0%25ae%25be-%25e0%25ae%259c-%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/#respond Wed, 08 Nov 2023 12:29:39 +0000 https://madrasmurasu.com/?p=7456 மலையகத் தமிழர் 200  இலங்­கை­யில் மலை­ய­கத்­தில் தமி­ழர் குடி­யேறி -– அந்த மண்ணை வாழ்­வித்து 200 ஆண்­டு­கள் ஆகி­விட்­டது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமிழ் மக்­க­ளுக்கு தனது மன­மார்ந்த வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொண்­டுள்­ளார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். இத­யத்­தின் அடி­யா­ழத்­தில் இருந்து அன்­பு­ட­னும் அக்­க­றை­யு­ட­னும் தெரி­வித்த வாழ்த்­து­கள் ஆகும் இவை. *மனி­தன் வாழ்ந்­தி­ராத மலைக்­கா­டு­களை மலை­ய­கத் தோட்­டங்­­களாக மாற்­றி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள் ஆவார்­கள். மலை­ய­கத் தமிழ்த் தொழி­லா­ளர்­க­ளின் வர­லாறு இலங்­கை­யில் காப்பி பயிர் செய்­யப்­பட்ட ஆரம்­ப­கட்­டத்­தில் […]

The post ’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.

]]>
மலையகத் தமிழர் 200 

இலங்­கை­யில் மலை­ய­கத்­தில் தமி­ழர் குடி­யேறி -– அந்த மண்ணை வாழ்­வித்து 200 ஆண்­டு­கள் ஆகி­விட்­டது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமிழ் மக்­க­ளுக்கு தனது மன­மார்ந்த வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொண்­டுள்­ளார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். இத­யத்­தின் அடி­யா­ழத்­தில் இருந்து அன்­பு­ட­னும் அக்­க­றை­யு­ட­னும் தெரி­வித்த வாழ்த்­து­கள் ஆகும் இவை.

*மனி­தன் வாழ்ந்­தி­ராத மலைக்­கா­டு­களை மலை­ய­கத் தோட்­டங்­­களாக மாற்­றி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள் ஆவார்­கள்.

மலை­ய­கத் தமிழ்த் தொழி­லா­ளர்­க­ளின் வர­லாறு இலங்­கை­யில் காப்பி பயிர் செய்­யப்­பட்ட ஆரம்­ப­கட்­டத்­தில் இருந்து தொடங்­கு­கி­றது.

*இது இலங்­கைப் பொரு­ளா­தா­ரத்­தில் மகத்­தான மாற்­றத்தை உரு­வாக்­கி­யது. பின்­னர், ரப்­பர், தென்னை என அனைத்­துப் பணப் பயிர்­களது உற்­பத்­தி­யும் மலை­ய­கத் தமி­ழர்­க­ளது உழைப்­பால் உரு­வா­ன­து­தான்.

*பயி­ரி­டப்­ப­டாத நிலத்தை பயி­ரிட்­டும் -– காடு­க­ளாக இருந்த நிலத்தை காசுப் பயிர்­க­ளாக விளை­வித்­தும் பின் தங்­கிய பொரு­ளா­தா­ரத்தை முன்­னணி பொரு­ளா­தா­ர­மாக ஆக்­கி­ய­வர்­கள் மலை­ய­கத் தோட்­டத் தொழி­லா­ளர்­கள் ஆவார்­கள்.

*இலங்கை நாட்­டுக்­காக தங்­க­ளது உழைப்பை வழங்­கி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள். இலங்கை நாடு உயர உழைத்­த­வர்­கள். தங்­க­ளது ரத்­தத்­தை­யும் வியர்­வை­யை­யும் காலத்­தை­யும் கட­மை­யை­யும் அந்த நாட்­டுக்­கா­கவே ஒப்­ப­டைத்­த­வர்­கள்.

– – என்று அந்த மக்­க­ளின் மகத்­தான உழைப்­பைப் பாராட்டி இருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

“இத்­த­கைய மலை­யக மக்­க­ளின் நீதி­யும் உரி­மை­யும் நிலை­நாட்­டப்­பட வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன். கல்வி, சுகா­தா­ரம், வாழிட உரி­மை­கள், பொரு­ளா­தார உத­வி­கள், சமூக உரி­மை­கள் அனைத்­தும் வழங்­கப்­பட வேண்­டும்.”என்­ப­தை­யும் வலி­யு­றுத்தி இருந்­தார் முத­ல­மைச்­சர் அவர்­கள். ஏனென்­றால் அம்­மக்­க­ளின் நிலைமை என்­பது பெரி­தாக மாறி­வி­ட­வில்லை. இலங்­கையை உயர்த்­திய, மேம்­ப­டுத்­திய அவர்­க­ளது வாழ்க்கை மேலும் முன்­னேற வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தும் வித­மாக முதல்­வர் அவர்­கள் வலி­யு­றுத்தி இருந்­தார்.

முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உரை, இலங்­கை­யில் நடை­பெ­றும் விழா­வுக்­காக தயா­ரிக்­கப்­பட்­டது ஆகும். இலங்­கை­யில் குடி­ய­மர்த்­தப்­பட்ட மலை­ய­கத் தமி­ழர்­க­ளது 200 ஆவது ஆண்­டு­வி­ழாவை முன்­னிட்டு ஒரு விழா ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.“நாம் 200 – – ஒற்­றுமை, பன்­மு­கத்­தன்மை மற்­றும் பாரம்­பர்­யத்­தின் முழக்­கம்”என்­பது இந்த நிகழ்ச்­சி­யின் பெயர். இந்த நிகழ்ச்­சியை இலங்கை மலை­ய­கத் தமி­ழர்­க­ளுக்­காக இலங்­கை­யின் உள்­நாட்டு தோட்­டத் தொழில் துறை மற்­றும் அரசு தொழில் துறை அமைச்­ச­கம் முன்­னெ­டுத்­தது. அந்த விழா ஏற்­பாட்­டா­ளர்­கள் கேட்­டுக் கொண்­ட­தால் தயா­ரிக்­கப்­பட்ட உரை இது. ஆனால் அந்த உரை, விழா­வில் ஒளி­ப­ரப்­பப்­ப­ட­வில்லை.

இது குறித்து ‘தி இந்து’ ஆங்­கில நாளி­தழ் வெளி­யிட்­டுள்ள செய்­தி­யில்,‘தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரின் உரையை ஒளி­ப­ரப்­பக் கூடாது என்று இந்­திய பா.ஜ.க. அரசு தடை போட்­டு­விட்­டது’என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதை விட ஜன­நா­யக மறுப்பு, தமி­ழர் விரோ­தச் செய்கை இருக்க முடி­யாது.

முத­ல­மைச்­சர் உரை­யைத் தடை செய்­வ­தன் மூல­மாக, மலை­ய­கத் தமி­ழர்­கள் மீதான தி.மு.க.வின் பற்­று­தலை மறைக்­கும் சதிச் செயலை ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்­துள்­ளது.

இதே நிகழ்­வில் இன்­னொரு சதி­யை­யும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்­துள்­ளதை தமிழ்­நாடு நிதி அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு அவர்­கள் அம்­ப­லப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள்.

“அந்த விழா­வில் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் கலந்­து­கொள்ள வேண்­டும் என்­றும் முறை­யான அழைப்பு தமிழ்­நாடு அர­சிற்கு அனுப்­பப்­­ பட்டது. முத­ல­மைச்­சர் அவர்­கள் அந்த நிகழ்­வில் கலந்து கொள்ள இய­லாத நிலை­யில், என்னை அந்த விழா­வில் கலந்து கொள்­ளு­மாறு அவர்­கள் பணித்­தி­ருந்­தார்­கள். இலங்கை பய­ணம் மேற்­கொள்­வ­தற்­காக ஒன்­றிய அர­சின் வெளி­வி­வ­கா­ரத் துறை­யி­லி­ருந்து உரிய அனு­ம­தி­யினை பெறு­ வ­தற்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி உரிய வழி­மு­றைப்­படி விண்­ணப்­பம் நம்­மு­டைய பொதுத்­து­றை­யால் அனுப்­பப்­பட்­டு­விட்­டது. political clearance என்று சொல்­லக்­கூ­டிய வெளி­வி­வ­கா­ரத்­தின் அனு­மதி கிடைப்­ப­தற்­காக நான் காத்­துக் கொண்­டி­ருந்­தேன்,

அக்­டோ­பர் 28 ஆம் தேதி அன்று பொதுத் துறை­யின் வாயி­லாக ஒன்­றிய அர­சிற்கு அனுப்­பப்­பட்­டது. விழா நவம்­பர் 2-ஆம் தேதி மதி­யம். ஆனால் 1-ஆம் தேதி இரவு எட்­டரை மணி வரை வர­வில்லை. ஒன்­றிய அர­சி­ட­மி­ருந்து அனு­மதி இது­வரை வராத கார­ணத்­தால் நான் பய­ணத்தை மேற்­கொள்ள இய­லாத நிலை­யில் இருப்­பதை சுட்­டிக்­காட்டி, என்­னு­டைய பயண ஏற்­பா­டு­களை நான் இரத்து செய்­து­விட்டு வீடு திரும்­பி­னேன். அதற்­குப்­பி­றகு ஒன்­ப­தரை மணிக்கு மேல் அனு­மதி வந்­தி­ருக்­கி­றது. ஆனால் அதற்கு முன்­ன­தாக நான் பயண ஏற்­பா­டு­களை எல்­லாம் இரத்து செய்­து­விட்ட கார­ணத்­தி­னால், இரவு 8.30 மணிக்கு மேல் அத்­த­கைய அனு­மதி கிடைப்­ப­தற்கு வாய்ப்பு இல்லை என்று கருதி, முறைப்­படி விழா ஏற்­பாட்­டா­ளர்­க­ளி­டம் இதனை தெரி­வித்­து­விட்டு பயண ஏற்­பா­டு­களை எல்­லாம் இரத்து செய்­து­விட்­டோம்.”என்று சொல்லி இருக்­கி­றார் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு.

வெளி­நாட்­டில் நடை­பெ­றும் விழா­வுக்கு அனு­மதி தரு­வ­தில் ஒன்­றிய அரசு எப்­படி நடந்து கொண்­டுள்­ளது என்­ப­தன் மூல­மாக – எத­னால் இப்­படி நடந்து கொண்­டது என்­ப­தை­யும் தெரிந்து கொள்­ள­லாம்.

குடி­யு­ரி­மைச் சட்­டத்­தின் மூல­மாக இலங்­கைத் தமி­ழர்­களை குடி­யு­ரிமை அற்­ற­வர்­க­ளாக ஆக்­கிய பா.ஜ.க., இப்­போது மலை­ய­கத் தமி­ழர்­கள் விழா­வில் எத்­த­கைய சதிச்­செ­யல்­க­ளில் ஈடு­ப­டு­கி­றது என்­பது புரி­கி­றது. இந்த நிலை­யில் மலை­ய­கத் தமி­ழர் மாநாட்­டில் கலந்து கொள்ள பா.ஜ.க. அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் இலங்கை சென்­றி­ருக்­கி­றார்.

இன்­ன­மும் இந்­திய மீன­வர்­கள், படும் துன்ப துய­ரங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளிவைக்­கத் துப்பு இல்­லாத பா.ஜ.க. இலங்­கைக்­குப் போய் மலை­யக மக்­களை ஏமாற்­ற­லாம் என்று நினைப்­பது காலக் கொடு­மையே ஆகும்.

The post ’’துப்பு இல்­லாத பா.ஜ.க..!’’ மலையகத் தமிழர் 200 குறித்து முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95/feed/ 0
’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” முரசொலி https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95/#respond Fri, 03 Nov 2023 08:49:29 +0000 https://madrasmurasu.com/?p=7349 ’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” என்று திமுக அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. அதன் விபரம் வருமாறு: தான் பதில் சொல்ல வேண்டியவை எதற்கும் பதில் சொல்லாமல் –- ஆரிய சனாதன வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவரைச் சட்டத்தின் நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு. இனி ஆளுநர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் அவரது முகம் […]

The post ’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” முரசொலி first appeared on Madras Murasu.

]]>
’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” என்று திமுக அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. அதன் விபரம் வருமாறு:

தான் பதில் சொல்ல வேண்டியவை எதற்கும் பதில் சொல்லாமல் –- ஆரிய சனாதன வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவரைச் சட்டத்தின் நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு. இனி ஆளுநர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் அவரது முகம் கிழித்தெறியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல், தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதையே வழக்கமாக கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளுக்கு உடனுக்குடன் கையெழுத்து போடாமல், ஒவ்வொரு கோப்புக்கும் விளக்கம் கேட்பதையே வழக்கமாக வைத்துள்ளார். அரசியல் எதிரி போன்று செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்றமானது தனது கடமைகளைச் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்.

அரசியல் சாசன பிரிவுகள் 200 மற்றும் 163–-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள தமிழ்நாடு அரசு, ‘நீட்’ விலக்கு மசோதா, பல்கலைக்கழக சட்டங்களை திருத்துவதற்கான மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்கள், 4 நடவடிக்கை உத்தரவுகள், 54 கைதிகளின் முன்கூட்டி விடுதலை தொடர்பான கோப்புகள் உள்ளிட்டவை தமிழ்நாடு ஆளுநரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பதவி ஒரு சம்பிரதாய பதவி என்றும், ஆளுநர் அமைச்சரவை ஆலோசனையின்படி செயல்படக் கடமைப்பட்டவர் எனவும் முந்தைய வழக்குகளில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள தமிழ்நாடு அரசு, மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க சர்க்காரியா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதிப்பதன் மூலம் பேரவை செயல்பாடுகளையே ஆளுநர் தடுக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக அவரது செயல்பாடுகள் அனைத்தும் உள்ளது. பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்கிறார். சரியான காரணங்களை தெரிவிக்காமல், அரசு அனுப்பும் கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளை அரசு உரிய விளக்கத்துடன் மீண்டும் அனுப்பியபோதும் ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார்.

அரசால் அனுப்பப்படும் கோப்புகள், அரசாணைகள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் தாமதிக்கும், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு அவசர சட்டமும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 6 வாரங்களில் அது நிரந்தரச் சட்டமாகியிருக்க வேண்டும். தற்போது வரை 12க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளார். இதனால் பல வகையில் அரசால் துரிதமாகச் செயல்பட முடியவில்லை.

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத்திருத்தம், மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குதல், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தை உருவாக்குவது உள்ளிட்ட மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றை முடக்கி வைத்திருக்கிறார். இதனால் பல்கலைக் கழகங்கள் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தின் நோக்கத்தையே சிதைக்கிறார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த விஜயபாஸ்கர், ரமணா, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீதான ஊழல் புகாரில் வழக்குப்பதிவு செய்ய 2022 செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இதுவரை அனுமதி தராமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார். அமைச்சராக செந்தில்பாலாஜியை நீடிக்கக் கூடாது என்று சொல்லி பெரிய பிரச்சினையைக் கிளப்பிய ஆளுநர் ரவி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் அமைச்சர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதில்தான் அவரது உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வருகிறது.

“நான் திருப்பி அனுப்பவில்லை என்றால் நிராகரித்ததாக அர்த்தம்” என்று ஆணவமாகச் சொன்னவர் இந்த ஆர்.என்.ரவி. அந்தளவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை கரைத்துக் குடித்தவர் அவர். எந்த சட்டமாக இருந்தாலும் ஒரு முறை விளக்கம் கேட்கலாம். திருப்பி அனுப்பலாம். இரண்டாவது முறை அரசு அனுப்பினால், அதனை ஆளுநர் ஏற்கத்தான் வேண்டும். அதைச் செய்வது இல்லை. அப்படியே ஊறுகாய் பானையில் ஊறப்போட்டு விடுவார். இதுதான் அவரது தந்திரம் ஆகும்.

நீட் விலக்கு மசோதாவை அரசியல் உள்நோக்கத்தோடு நிறுத்தி வைத்தார் என்றால், ஆன்லைன் ரம்மி மசோதாவையும் நிறுத்தி வைத்தார். ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து பேசினார். இதை விட வெட்கக்கேடு இருக்க முடியுமா? ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு முன்னதாக பொதுமக்கள் கருத்தை தமிழ்நாடு அரசு கேட்டது. ‘இதற்கெல்லாமா பொதுமக்கள் கருத்தை கேட்பார்கள்?’ என்று கிண்டல் செய்தது பா.ஜ.க. ஆனால், ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களையே சந்தித்து பேசினார் ரவி. அப்போது பா.ஜ.க.வால் வாயைத் திறக்க முடியவில்லை.

ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளன்று ஆளுநர் உரையாற்ற வேண்டும் என்பது ஒரு வழக்கம். அரசு தயாரித்து தரும் உரையை வாசித்து விட்டுச் செல்ல வேண்டும். அதையே மாற்றியும் திருத்தியும் நீக்கியும் சேர்த்தும் தன் இஷ்டத்துக்கு தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டவர் ஆளுநர் என்பதை அகில இந்திய ஊடகங்கள் அனைத்துமே கண்டித்தன. அதன்பிறகும் அவர் திருந்துவதாகத் தெரியவில்லை.

உச்சநீதிமன்ற வழக்குக்குப் பிறகாவது திருந்துவாரா என்பதைப் பார்ப்போம்.

The post ’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” முரசொலி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95/feed/ 0
”அண்­ணன் இருக்­கின்­றார்..!” முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/#respond Fri, 15 Sep 2023 08:54:22 +0000 https://madrasmurasu.com/?p=6317 ’’அண்­ணன் இருக்­கின்­றார்!” என்று முரசொலியில் இன்று (15.09.2023) தலையங்கம் வந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளில் அந்த தலையங்கத்தை நீங்களும் வாசியுங்கள். வராற்றை தெரிந்து வாழுங்கள். அண்­ணன் இருக்­கின்­றார்! சந்­த­னமே! தென் பொதிகை தவழ்ந்து வரும் இளங்­காற்றே! நந்­தாச் சுடர் விளக்கே! நறு­ம­ணத்­துப் புது­ம­லரே! கண்­ணி­யத்­தைக் கட­மை­யி­னைக் கட்­டுப்­பா­டெ­னும் பண்­பைக் கண்­போ­லக் காத்­தி­டற்­குக் கற்­பித்த பெருந்­த­கையே! சிங்­கத் தமி­ழர்­க­ளின் சிந்­தை­யெ­லாம் பறி­கொண்டு வங்­கக் கட­லோ­ரம் வாய்­மூ­டிக் கண்­மூடி மோனத் தவ­மி­ருக்­கும் முத்­த­மிழே! குடி­சை­யெ­லாம் மேலு­யர்ந்து கோபு­ர­மாய் விளங்­கி­ட­வும் […]

The post ”அண்­ணன் இருக்­கின்­றார்..!” முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் first appeared on Madras Murasu.

]]>
’’அண்­ணன் இருக்­கின்­றார்!” என்று முரசொலியில் இன்று (15.09.2023) தலையங்கம் வந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளில் அந்த தலையங்கத்தை நீங்களும் வாசியுங்கள். வராற்றை தெரிந்து வாழுங்கள்.

அண்­ணன் இருக்­கின்­றார்!

சந்­த­னமே!

தென் பொதிகை தவழ்ந்து வரும் இளங்­காற்றே!

நந்­தாச் சுடர் விளக்கே!

நறு­ம­ணத்­துப் புது­ம­லரே!

கண்­ணி­யத்­தைக் கட­மை­யி­னைக் கட்­டுப்­பா­டெ­னும்

பண்­பைக் கண்­போ­லக் காத்­தி­டற்­குக்

கற்­பித்த பெருந்­த­கையே!

சிங்­கத் தமி­ழர்­க­ளின் சிந்­தை­யெ­லாம் பறி­கொண்டு

வங்­கக் கட­லோ­ரம் வாய்­மூ­டிக் கண்­மூடி

மோனத் தவ­மி­ருக்­கும் முத்­த­மிழே!

குடி­சை­யெ­லாம் மேலு­யர்ந்து

கோபு­ர­மாய் விளங்­கி­ட­வும்

மட­மை­யி­ருள், கொல்­வ­றுமை

மடிந்தே மரு­கி­ட­வும்

எல்­லா­ரும் நல­னெல்­லாம்

எய்தி மகிழ்ந்­தி­ட­வும்

நல்­ல­தோ­ராட்­சி­யி­னைத்

தோற்­று­வித்த நாய­கமே!

எண்­ணக் குறிப்­ப­றிந்தே

ஈடேற்­றும் தம்­பி­ய­ரின் அண்­ணாவே!

எனை­யிங்கே ஆளாக்­கிக்

காத்­திட்ட ஆரு­யிரே!

நும்­க­னவு அத்­த­னை­யும் நன­வாக்­கும்

சீரி­ய­நற் பணி­யி­னையே செய்­கின்­றோம்

நாள்­தோ­றும்!

செய்­ப­ணி­கள் அனைத்­தி­லுந்­தான்

அண்­ணனே! நீ இருக்­கின்­றாய்!

-– என்றே எழு­தி­னார் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்! காஞ்சி தந்த வள்­ளு­வன் பேர­றி­ஞர் அண்ணா,

உத­ய­மான நாள் செப்­டம்­பர் 15 அன்று. அது இன்று!

முதன் முறை சட்­ட­மன்­றத்­துக்கு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அண்ணா அவர்­கள் தனது கன்­னிப் பேச்­சில் கனல் தெறிக்க ஒரு கருத்­தைச் சொன்­னார்­கள். “நாங்­கள் ஒரு விசித்­திர அர­சி­யல் கூட்­டத்­தி­னர் என்று நீங்­கள் அறி­வீர்­கள். இந்­தச் சபை­யும் அறி­யும். நாங்­கள் ஒரு விசித்­திர அர­சி­யல் கூட்­டத்­தி­னர் என்­றால் எங்­க­ளைத் தோற்­று­வித்­த­தும் இந்த நாட்­டி­லுள்ள ஒரு விசித்­தி­ர­மான தலை­மை­தான் என்­பதை யாவ­ரும் உணர வேண்­டும். விசித்­தி­ர­மான நிலை­மை­கள்­தான் விசித்­தி­ர­மான கட்­சி­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன” என்று அண்ணா அவர்­கள் குறிப்­பிட்­டார்­கள்.

இன்­னொன்­றை­யும் சொன்­னார் அண்ணா தொலை­நோக்­குப் பார்­வை­யு­டன். “இந்த சபைக்கு நாங்­கள் வந்­தது என்­றைக்­கும் எதிர் அங்­கத்­தி­னர்­க­ளா­கவே இருப்­ப­தற்­காக நுழை­ய­வில்லை. இன்­றைக்கு இல்­லா­விட்­டா­லும் என்­றைக்­கா­வது ஒரு­நாள் ஆட்­சிப் பொறுப்பை ஏற்­கத்­தான் போகி­றோம்” –- என்று அண்ணா அவர்­கள் சொன்ன நாள்: 4.7.1957. எண்ணி பத்தே ஆண்­டில் அரி­ய­ணை­யில் அமர்ந்­து­விட்­டார்.

தமிழ்­நாடு என்று பெயர் சூட்­டி­னார். இன்று வரை ‘தமிழ்­நாடு’ என்ற பெயரே அச்­சம் தரு­வ­தாக இருக்­கி­றது. தமி­ழும் ஆங்­கி­ல­மும் என்­பதை வரை­ய­றுத்­தார். இந்­தித் திணிப்­புக்கு தடுப்­புச் சுவர் அப்­ப­டியே இருக்­கி­றது. இன்று மற்ற மாநி­லங்­க­ளும் இந்­தித் திணிப்பை எதிர்க்­கத் தொடங்கி இருக்­கின்­றன. சுய­ம­ரி­யா­தைத் திரு­ம­ணம் செல்­லும் என்­றார் அண்ணா. கடந்த வாரம் கூட உச்­ச­நீ­தி­மன்­றம் இதனை உறுதி செய்­துள்­ளது. ‘விசித்­தி­ர­மான நிலை­மை­களை மாற்ற வந்த விசித்­தி­ர­மான கட்சி’ என்­பதை நிரூ­பித்­தார் அண்ணா!

அண்ணா மறை­வுற்ற போது பெரி­யார் சொன்­னார்: ‘அண்ணா இருப்­பது போலவே காரி­யங்­கள் நடை­பெற வேண்­டும்’ என்று! இந்த சொற்­க­ளுக்­குள்­தான் எத்­தனை பொருள்? அண்ணா இருப்­ப­தைப் போலவே கொள்கை இருக்க வேண்­டும், கோட்­பாடு இருக்க வேண்­டும், கழ­கம் இருக்க வேண்­டும், கண்­ணி­யம் நிலைக்க வேண்­டும், கட்­டுப்­பாடு காக்க வேண்­டும், தமிழ்­நாடு காப்­பாற்­றப்­பட வேண்­டும். இவை அனைத்­தும் சேர்ந்­தது தான், ‘அண்ணா இருப்­பது போலவே காரி­யங்­கள் நடை­பெற வேண்­டும்’ என்­பது ஆகும்.

கலை­ஞ­ராட்சி, அண்­ணா­வின் ஆட்­சி­யாக அப்­ப­டியே தொடர்ந்­தது. மாநில சுயாட்சி இல்­லையே என்று வருந்­தி­னார் அண்ணா. மாநில சுயாட்­சியை இந்­திய அர­சி­ய­லுக்­குள் கொண்டு சென்று அதனை நிலை­நி­றுத்த அய­ராது உழைத்­தார் கலை­ஞர். மாநில சுயாட்­சித் தீர்­மா­னம் போட்ட முதல் இந்­திய மாநி­ல­மாக தமிழ்­நாட்டை மாற்­றி­னார் கலை­ஞர். மாநி­லக் கட்­சி­க­ளின் கருத்­தைக் கேட்டு ஒன்­றிய அரசு செயல்­ப­டும் நிலையை உரு­வாக்­கி­னார். கூட்­டணி ஆட்சி என்­பது கூட்­டாட்­சி­யா­க­வும்– மாநில சுயாட்­சியை உயிர்ப்­பிப்­ப­தா­க­வும் ஆக்­கி­னார் கலை­ஞர். சமூ­க­நீ­திக் கோட்­பாட்டை இந்­தி­ய­வி­யல் கோட்­பா­டாக மாற்ற – மண்­டல் ஆணை­யத்­தின் பரிந்­து­ரை­க­ளைச் செயல்­ப­டுத்த வைத்­தார் கலை­ஞர்.

மாநி­லக் கட்­சி­கள்­தானே, ஒரு மாநி­லத்­தின் முத­ல­மைச்­சர் தானே, ஒரு மாநி­லக் கட்­சித் தலை­வர்­தானே என்ற ஏள­னப் பேச்சை அகற்றி, ‘மாநி­லக் கட்­சித் தலை­வர்­களே, அகில இந்­தி­யத் தலை­வர்­க­ளாக வலம் வர­லாம்’ என்ற நிலையை கலை­ஞர் உரு­வாக்­கி­னார். வடக்­கின் தராசை கொஞ்­சம் இறக்கி, தெற்­கின் தராசை கொஞ்­சம் உயர்த்தி -– ஒன்­றிய முள்­ளின் முனையை கொஞ்­சம் மழுக்­கிக் காட்­டி­னார் கலை­ஞர். ‘விசித்­தி­ர­மான நிலை­மை­களை மாற்ற வந்த விசித்­தி­ர­மான கட்சி’ என்­பதை நிரூ­பித்­தார் கலை­ஞர்!

அந்த உரு­வாக்­கத்­தின் இன்­றைய செயல்­வ­டி­வ­மாக திரா­விட மாடல் ஆட்­சி­யின் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் காட்சி அளிக்­கி­றார்­கள். தமிழ்­நாட்­டுக்­குள் உரு­வான கூட்­டணி பாணியை அகில இந்­தி­யா­வுக்­கும் விரித்­தார் இவர். ‘கரும்பு ஆலை­யில் மீண்­டும் மீண்­டும் பிழி­வ­தைப் போல ஒரு சொட்­டுக் கூட சிந்­தா­மல் பிழிய வேண்­டும்’ என்று கூட்­ட­ணிக்­கான பாணி­யைச் சொன்­னார் அண்ணா. செய்து கொண்­டி­ருக்­கி­றார் இன்­றைய தலை­வர். ‘இந்­தியா’ கூட்­ட­ணி­யின் விதை மட்­டு­மல்ல, பதி­ய­மும் இங்கே போடப்­பட்டு, ஒவ்­வொரு மாநி­லத்­துக்­கும் எடுத்­துச் சென்று நட்­டு­விக்­கப்­பட்­டது. இனி தோப்­பா­கும்.

அண்­ணாவே நினைத்­துப் பாராத உச்­சம் இது!

‘திரா­விட மர­பி­னத்­தைச் சார்ந்­த­வன் நான்’ –- என்று சொன்­னார் அண்ணா. திரா­விட மாடல் ஆட்சி என்ற பெயரே அச்­ச­மூட்­டு­கி­றது. ‘அனைத்­துச் சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கர் ஆக­லாம்’ என்­றார் கலை­ஞர். ஜாதி வேறு­பாடு மட்­டுமே அவ­ரால் நீக்க முடிந்­தது. இதோ பெண் ஓது­வார்­கள் பாடும் காட்­சி­யைப் பார்க்­கும் போது பால் பேத­மும் பஞ்­சாய் பறக்­கி­றது. தமிழ்­நாடு அர­சின் செயல் திட்­டங்­களை பிற மாநி­லங்­கள் பின்­பற்­றும் வண்­ணம் ஒரு கொள்­கை­யாட்­சியை நடத்தி வரு­கி­றார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர். ‘மத­றாசி’ போய்­விட்­டது இப்­போது. ‘இப்­படி ஒரு முத­ல­மைச்­சர் வேண்­டும்’ என்று வங்­கா­ளத்­தி­லும், மலை­யா­ளத்­தி­லும் தெலுங்­கி­லும் குரல் கேட்­கி­றது. ‘விசித்­தி­ர­மான நிலை­மை­களை மாற்ற வந்த விசித்­தி­ர­மான கட்சி’ என்­பதை நிரூ­பித்து வரு­கி­றார் தலை­வர் மு.க.ஸ்டாலின்!

தொடக்­கத்­தில் சொல்­லப்­பட்ட கவி­தைக்கு முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் வைத்த தலைப்பு: ‘அண்­ணன் இருக்­கி­றார்’. ஆமாம்! அண்­ணன் இருக்­கி­றார். வாழ்­கி­றார். ஆள்­கி­றார்.

அண்ணா வாழ்க!

அண்ணா ஆட்சி தொடர்க!

The post ”அண்­ணன் இருக்­கின்­றார்..!” முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
‘’இந்தியா’வின் முதல் வெற்றி..!’’ முரசொலி சொல்கிறது https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b1 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1/#respond Mon, 11 Sep 2023 04:12:53 +0000 https://madrasmurasu.com/?p=6228 ‘இந்தியா’வின் முதல் வெற்றி..! ‘இந்­தியா’ கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றுள்ள கட்­சி­கள் நடந்து முடிந்­துள்ள இடைத் தேர்­தல்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளன. இது ‘இந்­தியா’ கூட்­ட­ணிக்­குக் கிடைத்த முதல் வெற்றி ஆகும். 6 மாநி­லங்­க­ளில் உள்ள 7 சட்­டப்­பே­ர­வைத் தொகு­தி­க­ளுக்கு நடை­பெற்ற இடைத்­தேர்­த­லில் பா.ஜ.க. பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளது. இது பா.ஜ.க.வுக்கு அடுத்­த­டுத்து வரப் போகும் தோல்­வி­யின் தொடக்­க­மாக அமைந்­தி­ருக்­கி­றது. * உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம் கோசி தொகு­தியை சமாஜ்­வாதி கட்சி கைப்­பற்றி இருக்­கி­றது. * கேரள மாநி­லத்­தில் உள்ள புதுப்­பள்ளி தொகு­தியை காங்­கி­ரஸ் […]

The post ‘’இந்தியா’வின் முதல் வெற்றி..!’’ முரசொலி சொல்கிறது first appeared on Madras Murasu.

]]>
‘இந்தியா’வின் முதல் வெற்றி..!

‘இந்­தியா’ கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றுள்ள கட்­சி­கள் நடந்து முடிந்­துள்ள இடைத் தேர்­தல்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளன. இது ‘இந்­தியா’ கூட்­ட­ணிக்­குக் கிடைத்த முதல் வெற்றி ஆகும்.

6 மாநி­லங்­க­ளில் உள்ள 7 சட்­டப்­பே­ர­வைத் தொகு­தி­க­ளுக்கு நடை­பெற்ற இடைத்­தேர்­த­லில் பா.ஜ.க. பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளது. இது பா.ஜ.க.வுக்கு அடுத்­த­டுத்து வரப் போகும் தோல்­வி­யின் தொடக்­க­மாக அமைந்­தி­ருக்­கி­றது.

* உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம் கோசி தொகு­தியை சமாஜ்­வாதி கட்சி கைப்­பற்றி இருக்­கி­றது.

* கேரள மாநி­லத்­தில் உள்ள புதுப்­பள்ளி தொகு­தியை காங்­கி­ரஸ் கட்சி கைப்­பற்றி இருக்­கி­றது.

* மேற்கு வங்க மாநி­லத்­தில் உள்ள துப்­குரி தொகு­தியை திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்சி கைப்­பற்றி இருக்­கி­றது.

* ஜார்­கண்ட் மாநி­லத்­தில் உள்ள தும்ரி தொகு­தியை ஜார்­கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கைப்­பற்றி இருக்­கி­றது.

காங்­கி­ரஸ், சமாஜ்­வாதி, திரி­ணா­மூல் காங்­கி­ரஸ், ஜார்­கண்ட் முக்தி மோர்ச்சா ஆகி­யவை ‘இந்­தியா’ கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றுள்ள முக்­கிய கட்­சி­கள் ஆகும்.

* திரி­புரா மாநி­லத்­தில் பாக்­ஸா­ந­கர், தன்­பூர் ஆகிய இரு தொகு­தி­­களை­யும் பா.ஜ.க. கைப்­பற்றி இருக்­கி­றது.

* உத்­த­ர­கண்ட் மாநி­லத்­தில் பாகேஸ்­வர் தொகு­தி­யை­யும் பா.ஜ.க. கைப்­பற்றி உள்­ளது.

இருப்­பி­னும், உத்­த­ரப்­பி­ர­தே­சம், மேற்கு வங்­கம், கேரளா ஆகி­யவை மிகப் பெரிய மாநி­லங்­கள் என்­ப­தால் ‘இந்­தியா’ கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் வெற்­றிக்கு கூடு­தல் முக்­கி­யத்­து­வம் கிடைத்­துள்­ளது.

6 மாநி­லங்­களை உள்­ள­டக்­கிய 7 தொகு­தி­க­ளுக்கு கடந்த 5 ஆம் தேதி இடைத்­தேர்­தல் நடந்­தது. இந்த தேர்­தல்­கள் அந்­தந்த மாநில

அள­வில் மிக­மிக முக்­கி­ய­மா­ன­வை­யாக கரு­தப்­பட்­டன. ‘இந்­தியா’

கூட்­டணி உரு­வா­ன­தால் அகில இந்­திய அள­வி­லும் கவ­னத்­தைப் பெற்­றன.

இதில் மிக­மிக முக்­கி­ய­மா­னது உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம் கோசி சட்­ட­மன்­றத் தொகு­திக்கு நடந்த இடைத்­தேர்­தல் ஆகும். சமாஜ்­வாதி கட்­சி­

யி­டம்­தான் இந்த தொகுதி இருந்­தது. எம்.எல்.ஏ.வான தாரா­சிங்

செள­கான் என்­ப­வரை, வலுக்­கட்­டா­ய­மாக பா.ஜ.க.வுக்கு இழுத்­துச் சேர்த்­தார் முத­ல­மைச்­சர் யோகி ஆதித்­ய­நாத். அவர் கடந்த ஜூலை மாதம் தனது பத­வியை ராஜி­னாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்­தார். பா.ஜ.க.வில் இணைந்­தால், இடைத்­தேர்­த­லி­லும் நீங்­கள்­தான் பா.ஜ.க. வேட்­பா­ளர் என்று யோகி வாக்­கு­றுதி கொடுத்­தார். பா.ஜ.க.

சார்­பில் தாரா­சிங் செள­கான் போட்­டி­யிட்­டார். சமாஜ்­வாதி கட்சி சார்­பில் சுதா­கர் சிங் போட்­டி­யிட்­டார். இரண்டு கட்­சி­க­ளுக்­கும் கடு­மை­யான மோதல் ஏற்­பட்­டது. பா.ஜ.க. வேட்­பா­ளரை விட 42 ஆயி­ரம் வாக்­கு­கள் அதி­கம் பெற்று சமாஜ்­வாதி வேட்­பா­ளர் வெற்றி பெற்­று­விட்­டார்.

இது யோகிக்கு மிகப் பெரிய சறுக்­க­லாக அமைந்­துள்­ளது. இதன்­­மூலம் எதிர்க்­கட்சி எம்.எல்.ஏ.க்களை வலை­வீசி பிடிக்­கும் பா.ஜ.க. பார்­மு­லா­வுக்கு உத்­தரபிர­தேச மக்­கள் சம்­மட்டி அடி கொடுத்­துள்­ள­னர்.

உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் கடந்த 6 மாதங்­க­ளில் 3 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்கு இடைத்­தேர்­தல் நடை­பெற்­றது. இதில், 3 தொகுதி களி­லும் பா.ஜ.க. படு­தோல்­வி­ய­டைந்­தது. இந்த 3 தொகுதிகளி­லும் மிகப்­பெ­ரிய வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் பா.ஜ.க. தோல்­வி­யைத் தழு­வி­யி­ருக்­கிறது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கேரள மாநி­லம் புதுப்­பள்ளி தொகு­தி­யில் காங்­கி­ரஸ் முன்­னாள் முத­ல­மைச்­சர் உம்­மன் சாண்­டி­யின் மகன் சாண்டி உம்­மன் 37 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­றார். காங்­கி­ரஸ்

வேட்­பா­ளர் 80 ஆயி­ரம் வாக்­கு­க­ளும், அடுத்து வந்த மார்க்­சிஸ்ட் வேட்­பா­ளர் 42 ஆயி­ர­மும் பெற்ற நிலை­யில் பா.ஜ.க. மூன்­றா­வது இடத்­துக்கு தள்­ளப்­பட்­டது. பா.ஜ.க. வேட்­பா­ளர் லிஜின் லால் வாங்­கிய வாக்­கு­கள்

6 ஆயி­ரத்து 558 தான். இவ­ரது டெபா­சிட்டே பறி போய்­விட்­டது. இதே தொகு­திக்கு 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்­த­லில் போட்­டி­யிட்ட பா.ஜ.க. வேட்­பா­ளர் ஹரி வாங்­கிய வாக்­கு­கள் 11 ஆயி­ரத்து 694. இப்­போது இரண்டு ஆண்­டு­க­ளில் 5 ஆயி­ரம் வாக்­கு­கள் பா.ஜ.க.வுக்கு குறைந்­து­ விட்­டது. இது­தான் உன்­னிப்­பாக கவ­னிக்­கத்­தக்­கது ஆகும்.

மேற்­கு­வங்க மாநி­லம் துப்­குரி தொகுதி, பா.ஜ.க. வசம் முன்பு இருந்­தது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான விஷ்­ணு­பத ராய் மர­ணம் அடைந்­தார். எனவே அத்­தொ­கு­தி­யில் நடை­பெற்ற இடை­தேர்­த­லில் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் வெற்றி வாகை சூடி­யுள்­ளது. அக்­கட்சி வேட்­பா­ளர் நிர்­மல் சந்­திர ராய், தன்னை எதிர்த்து போட்­டி­யிட்ட பா.ஜ.க. வேட்­பா­ளரை காட்­டி­லும்

4 ஆயி­ரத்­துக்­கும் அதிக வாக்­கு­கள் பெற்று வெற்­றியை தன­தாக்­கி­னார். காஷ்­மீ­ரில் மர­ணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் மனை­வியை நிறுத்தி அனு­தாப வாக்­கு­களை வாங்க முயற்­சித்­தது பா.ஜ.க. அதி­லும் தோல்­வி­யைத் தழு­வி­யது.

ஜார்க்­கண்ட் மாநி­லம் தும்ரி தொகு­தி­யில் நடை­பெற்ற இடைத்­தேர்­­தலில் ஜார்க்­கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வேட்­பா­ளர் பிபி தேவி, 1 லட்­சத்­துக்­கும் கூடு­த­லான வாக்­கு­களை பெற்­றுள்­ளார். 17 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் பா.ஜ.க. ஆத­ரவு வேட்­பா­ளரை தோற்­க­டித்­தார்.

திரி­புரா மாநி­லத்­தி­லுள்ள 2 தொகு­தி­க­ளி­லும், உத்­த­ர­காண்ட் மாநி­லத்­தி­லுள்ள ஒரு தொகு­தி­யி­லும் பா.ஜ.க. வெற்றி பெற்­றது.உத்­தி­ர­காண்­டில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சந்­தன் ராம் தாஸ் அண்­மை­யில் மர­ணம் அடைந்­தார். அவ­ரது மனை­வி­யையே வேட்­பா­ள­ராக நிறுத்­தி­யது பா.ஜ.க. ஆனா­லும் 2 ஆயி­ரம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில்­தான் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடிந்­தது.

-– இவை அனைத்­தை­யும் வைத்­துப் பார்க்­கும் போது, ‘இந்­தியா’

கூட்­ட­ணியை நோக்கி இந்­திய மக்­கள் அணி திரள்­வதை அறிய முடி­கி­றது.

The post ‘’இந்தியா’வின் முதல் வெற்றி..!’’ முரசொலி சொல்கிறது first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1/feed/ 0
’’மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில்..!” முரசொலி https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/#respond Sat, 09 Sep 2023 04:51:39 +0000 https://madrasmurasu.com/?p=6195 மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில் என்று முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. மணிப்பூருக்கு போய் பார்க்காத -– அதானி ஊழல்கள் பற்றி பதில் சொல்லாத -– 7.5. லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகள் பற்றி விளக்கம் அளிக்காத -–- பிரதமர் நரேந்திரமோடி, சனாதனம் பற்றி வாயைத் திறந்துள்ளார். ஒன்றிய அமைச்சர்களுக்கு சனாதன கதாகாலட்சேபம் நடத்த உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அமைச்சர்கள் பேசுவதற்கு தமிழில் நிறைய வீடியோக்கள் இருக்கிறது. அதனை யாராவது மொழி பெயர்த்து அனுப்பி வைக்கலாம். சனாதனம் குறித்து […]

The post ’’மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில்..!” முரசொலி first appeared on Madras Murasu.

]]>
மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில் என்று முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

மணிப்பூருக்கு போய் பார்க்காத -– அதானி ஊழல்கள் பற்றி பதில் சொல்லாத -– 7.5. லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகள் பற்றி விளக்கம் அளிக்காத -–- பிரதமர் நரேந்திரமோடி, சனாதனம் பற்றி வாயைத் திறந்துள்ளார். ஒன்றிய அமைச்சர்களுக்கு சனாதன கதாகாலட்சேபம் நடத்த உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அமைச்சர்கள் பேசுவதற்கு தமிழில் நிறைய வீடியோக்கள் இருக்கிறது. அதனை யாராவது மொழி பெயர்த்து அனுப்பி வைக்கலாம்.

சனாதனம் குறித்து பிரதமர் மோடி எழுப்பும் கேள்விகளுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் விரிவாக விளக்கமாக பதில் அளித்துவிட்டார். “இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி ரீதியிலான பாகுபாடு இருக்கிறது” என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஒப்புக்கொண்டு விட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசும் போது, “சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த நிலை தொடர்கிறது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும்வரை, இட ஒதுக்கீடு போன்ற சில சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். எனவே, இத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும்” என்றும் மோகன் பகவத் சொல்லி விட்டார். ஒன்றிய அமைச்சர்கள், மோகன் பகவத் பேச்சைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

On reservations, RSS chief Mohan Bhagwat says, “We kept our own fellow human beings behind in the social system…We did not care for them, and this continued for almost 2,000 years…Until we provide them equality, some special remedies have to be done…Reservations are one of them. Reservations should continue till there is such discrimination. The Sangh gives complete support to the reservations provided in the Constitution.” – ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மோகன் பகவத் இப்படி பேசியதும் அவரை இணையத் தளங்களில் திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ‘நீங்களே இப்படிப் பேசலாமா?’ என்று சனாதனத்தை மறைக்கும் சக்திகள் அவரை விமர்சித்து பதிவுகள் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள் பேசியதைத் திரித்தும், ‘சனாதனம் என்றால் ஒற்றுமைதான்’ என்றும் பொய் சொன்ன கூட்டம், இப்போது மோகன் பகவத்தும் அதைச் சொன்னதும் அவரையும் திட்டத் தொடங்கி இருக்கிறது.

இந்தக் கருத்தை மோகன் பகவத் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

மும்பை ரவீந்தர் மந்திர் வளாகத்தில் நடந்த புனிதர் சிரோன்மணி ரோஹிதாஸின் 647 ஆவது பிறந்த நாளில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சொன்னார்:

“இந்து மதத்தில் சாதிகள் கிடையாது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி வேறுபாடுகள் கிடையாது. மேல் சாதி, கீழ் சாதி என்ற அடிப்படை அற்ற பழக்கத்தை உருவாக்கியவர்கள் பண்டிட்டுகளே” (6.2.2023) என்று பேசினார். உடனே மோகன் பகவத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவரது பேச்சை பூரி சங்கராச்சாரியார் கண்டித்தார். பீகார் மாநிலம் முசாபர்பாத் நீதிமன்றத்தில் மோகன் பகவத் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விளக்க அறிக்கை கொடுத்தது. “பண்டிட்டுகள் என்று மோகன் பகவத் குறிப்பிட்டது எந்த ஒரு பிரிவினரையும் அல்ல. ஜாதி படி நிலைகளை ஏற்றுக் கொண்டவர்களைத்தான் அப்படிச் சொன்னார்” என்று விளக்கம் அளித்தார்கள். இவரது பேச்சு முக்கிய இணைய தளங்களிலும் வீடியோவாக உள்ளது.

“நாட்டில் அனைவரும் சாதி வர்ண பேதங்களை மறந்து விட வேண்டும். யாரேனும் இதைப்பற்றிக் கேட்டால் சமுதாய நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் வர்ண மற்றும் சாதி அமைப்புகள் கடந்த கால விஷயம் எனவும், அதை அனைவரும் மறந்து விட வேண்டும்” என்று 8.10.2022 அன்று மோகன் பகவத் பேசி இருக்கிறார். ( தந்தி டி.வி.)

டாக்டர் மதன் குல்கர்னி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் ரேணுகா போகரே ஆகியோர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நாக்பூரில் நடந்தது. அப்போது பேசிய மோகன் பகவத், “இப்போது யாராவது சாதி, வர்ணம் குறித்து கேள்வி கேட்டால் அவை கடந்து போனவை, அவைகள் மறக்கப்பட வேண்டும் என்று சொல்லுங்கள். பாகுபாடுகளை உருவாக்கும் அனைத்தும் மறுக்கப்பட்டு, தடுக்கப்பட வேண்டும். பாகுபாடு செய்பவை அனைத்தும் பூட்டப்பட வேண்டும். உலகின் எல்லா இடங்களிலும் முன்னோர்கள் தவறு செய்திருக்கிறார்கள். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல” என்று பேசினார். (8.10.2022)

அகமதாபாத் ஜி.எம்.டி.சி. மைதானத்தில் சமாஜ் சக்தி சங்கம் விழாவில் கலந்து கொண்டு மோகன் பகவத் பேசினார். “நியாயமான மற்றும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்காமல் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை இந்தியா அடைய முடியாது என்று அம்பேத்கர் சொன்னார். அதை அடைய நம் சமூகத்தில் இருக்கும் வேறுபாடுகளை அகற்ற வேண்டும். நாம் கடந்த காலத்தில் ஒற்றுமையான சமூகமாக இருந்தோம். பின்னர் இந்த சாதிகள் மற்றும் வகுப்புகளை உருவாக்கினோம். இது நமக்குள் வேறுபாடுகளை உருவாக்கியது. இந்தச் சூழலை அன்னிய சக்திகள் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த தீய சுழற்சியில் இருந்து நாம் முழுமையாக வெளியே வந்து ஒன்றுபட வேண்டும்” என்று வெளிப்படையாகவே பேசினார் மோகன் பகவத். (14.4.2023)

வர்ண -– சாதி அமைப்புகள் குறித்து மோகன் பகவத் சொன்னதுதான், பிரதமர் மோடிக்கு நமது பதில்கள் ஆகும். இந்த விளக்கத்தை ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் உள்வாங்கிக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.

The post ’’மோடி கேள்விக்கு மோகன் பகவத் பதில்..!” முரசொலி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
’ஒரே நாட்டில் ஒரே மோடியா?’ முரசொலி விளாசல்  https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2587-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2587-%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/#respond Thu, 07 Sep 2023 05:10:38 +0000 https://madrasmurasu.com/?p=6169 ’ஒரே நாட்டில் ஒரே மோடியா?’ என்று திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.  கடைசி நேரத்தில் அனைத்துத் தவறுகளையும் வரிசையாகச் செய்யத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி! இந்தியாவையே ‘பாரத்’ ஆக்க நினைப்பதும் – ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு குழு போட்டிருப்பதும் – -நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை போட்டு ஏதேதோ செய்யத் திட்டமிட்டு இருப்பதும் – – பதவிக்காலம் முடியும் நேரத்தில் அள்ளித்தெளிக்கும் அவசரக் கோலங்கள் ஆகும். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று […]

The post ’ஒரே நாட்டில் ஒரே மோடியா?’ முரசொலி விளாசல்  first appeared on Madras Murasu.

]]>
’ஒரே நாட்டில் ஒரே மோடியா?’ என்று திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. 

கடைசி நேரத்தில் அனைத்துத் தவறுகளையும் வரிசையாகச் செய்யத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!

இந்தியாவையே ‘பாரத்’ ஆக்க நினைப்பதும் – ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு குழு போட்டிருப்பதும் – -நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை போட்டு ஏதேதோ செய்யத் திட்டமிட்டு இருப்பதும் – – பதவிக்காலம் முடியும் நேரத்தில் அள்ளித்தெளிக்கும் அவசரக் கோலங்கள் ஆகும். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் அனைத்து மாத்திரைகளையும் அள்ளிப் போடுவது ஆகும்.

ஒரே நாடு -– ஒரே தேர்தல் என்பது மோடி என்ற தனிமனிதர் நீங்கலாக அனைவருக்குமே ஆபத்தானது ஆகும். பின்னர் அவருக்கே ஆபத்தும் அதுதான். மோடியை இன்னொருவர் வீழ்த்துவதற்கும் வசதியான வாசல் ஆகும் அது. இந்த ஆபத்து தெரியாமல் தான் அதனைக் கையில் எடுத்துள்ளார்.

ஒரே நாடு -– ஒரே தேர்தல் வந்தால் தி.மு.க. ஆட்சி கலைக்கப்படுவதாகவும் -– தேர்தல் நடப்பதாகவும் –- அனைத்து பாரத அண்ணா தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டதாகவும் -– தான் முதலமைச்சர் ஆகிவிட்டதாகவும் கனவு கண்டு சிரிக்கிறார் பழனிசாமி. அவரிடம் இருக்கும் 60 தொகுதியும் பறி போய் மொத்த சட்டமன்றத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றிவிடும் என்பதே

பகல் கனவு பழனிசாமிக்கு தெரியவில்லை. 60 எம்.எல்.ஏ.க்களுடன் தானும் ஒரு தலைவராக வலம் வரும் பழனிசாமி, சொந்த தொகுதியில் தோற்று –- தரையில் ஊர்ந்து கொண்டிருப்பார் என்பதே யதார்த்தம்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் –- பா.ஜ.க. கொல்லைப் புறமாக ஆளும் மாநிலங்கள் -– எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் –- என இருக்கும் அனைத்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியும் பறி போய்விடும். இது எதையும் அறியும் சுய மூளை கூட இல்லாத ஒரு கூட்டம் தான், ஒரே நாடு – -ஒரே தேர்தல் என்பதைப் பார்த்து பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

‘இனி எனக்கு பா.ஜ.க. என்ற கட்சியும் வேண்டாம் -– ஆர்.எஸ். எஸ்ஸும் வேண்டாம் –- வி.எச்.பி.யும் வேண்டாம் -– எவரும் வேண்டாம்’ என்பதை சொல்லாமல் சொல்லப் போகிறார் நரேந்திரமோடி. அதற்காக அவர் தயார் ஆகிக் கொண்டிருக்கிறார். அவர்கள் விரலால் அவர்களையே குத்தப் போகிறார். அதற்கு தயார் ஆவதற்கான நாடகங்களும் –- ஒத்திகைகளும் தான் இவை.

பத்து ஆண்டுகளாக தான் ஒருவரே என்ற கோதாவில் செயல்பட்டு வந்தார் பிரதமர் மோடி. வெளிநாடு செல்வார். வெளியுறவுத் துறை அமைச்சரை அழைத்துச் செல்ல மாட்டார். ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவார். நிதி அமைச்சர் இருக்க மாட்டார். நாடாளுமன்றத்துக்கு வரமாட்டார். வந்தாலும் பேச மாட்டார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட மாட்டார். சொந்தக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள். மற்றவர் பேச்சை அவர் கேட்க மாட்டார். அத்வானியும் ஜோஷியும் அடக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் தன்னை நோக்கி பிரதமர் வரும் போது மூத்த அமைச்சரான நிதின் கட்கரி முகத்தை திருப்பிக் கொண்டார்.

உலகம் முழுக்கப் போனார் பிரதமர். ஆனால் அவரை உலக நாடுகள் மத்தியில் தலைகுனிய வைத்தது அதானி விவகாரமும் மணிப்பூர் விஷமத்தனங்களும்!

இந்த ஆட்சிக்கு மிகப்பெரிய தலைகுனிவு அதானி விவகாரத்தில் வந்தது. பிரதமரின் நண்பர் என்பதால் அனைவருமே அமைதியாக இருந்தார்கள். மணிப்பூர் பற்றி எரியும் போது பிரதமர் ஏன் போகவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் போது பா.ஜ.க. உறுப்பினர்களே தலைகவிழ்ந்து உட்கார்ந்து இருந்தார்கள். அவர்களால் என்ன செய்ய முடியும்? ‘பிரதமரே செல்லுங்கள்’ என்று சொல்ல முடியுமா?

‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் பேசினார். அவரே வராமல் போனதை அக்கட்சி உறுப்பினர்களால் எப்படி கேட்க முடியும்?

20 ஆயிரம் கோடி போட்டு புதிய நாடாளுமன்றக் கட்டடம் எதற்காக கட்டப்பட்டது? அப்படி கட்டப்பட்ட கட்டடத்தில் எதற்காக கூட்டம் நடத்த முடியவில்லை? என்பதை எதிர்க்கட்சிகளைப் போலவே, பா.ஜ.க.

எம்.பி.கள் சிந்திக்க மாட்டார்களா?

தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்குவதும் –- அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் குறிப்பிட்ட நபர் தான் இருக்க வேண்டும் என்று அரசு சொல்வதை உச்சநீதிமன்றம் நிராகரிப்பதுமான நடத்தைகள் குழப்பமான நாட்டில் தான் நடக்கும். சீரான நிர்வாகம் நடக்கும் நாட்டில் நடைபெறவே நடைபெறாது.

தேர்தல் ஆணையத்தை அரசியல் கட்சி அலுவலகமாக மாற்றுவதும் – உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குலைப்பதும் இந்தியாவின் அரசிய லமைப்பு சட்டத்துக்கு ஏற்படுத்தப்பட்ட கரும்புள்ளிகள் ஆகும்.

‘ஒற்றை மனிதரால் எல்லாம் மாறிவிடும் என்று நினைப்பது தவறு’ என்று திரும்பத் திரும்ப ஆர்.எஸ்.எஸ். சொல்வது யாரை நோக்கிய அம்பு?

இவை அனைத்தும் பிரதமர் நரேந்திரமோடியை சிக்கலுக்கு மேல் சிக்கலுக்கு உள்ளாக்கி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இதில் இருந்து மீள நினைத்தும் -– திசை திருப்பவும் -– புதிய வியூகம் என நினைத்து அவர் உருவாக்கும் சக்கரத்தில் அவரே சிக்கிக் கொள்ளப் போகிறார். இப்போதைக்கு இந்த படுகுழி பா.ஜ.க.வுக்குப் பிரகாசமாகத் தெரிகிறது.

The post ’ஒரே நாட்டில் ஒரே மோடியா?’ முரசொலி விளாசல்  first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed/ 0
’’சனாதனமும் சனாதனிகளும்..!’’ முரசொலி தலையங்கம் https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#respond Tue, 05 Sep 2023 10:28:39 +0000 https://madrasmurasu.com/?p=6137 ’’சனாதனமும் சனாதனிகளும்’’ என்ற தலைப்பில் முரசொலியில் வெளிவந்துள்ள தலையங்கம் வருமாறு:  சனா­த­னம் – என்­பது என்ன? வேறு­பா­டும் – பாகு­பா­டும் காட்­டு­வ­து­தான் சனா­த­னம். உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்ற பேதத்தை உரு­வாக்­கு­வது சனா­த­னம். ஜாதி­யில் மட்­டு­மல்ல ஆண் உயர்ந்­த­வன் – பெண் தாழ்ந்­த­வள் என்ற பேதத்தை உரு­வாக்­கு­வ­து­தான் சனா­த­னம். சனா­த­னி­கள் – என்­ப­வர்­கள் யார்? இந்த பாகு­பாட்­டை­யும் வேற்­று­மை­யை­யும் காப்­பாற்­று­ப­வர்­கள். அவர்­க­ளது மொழி­யில் தாழ்ந்­த­வர்­க­ளாக அடை­யா­ளம் காட்­டப்­ப­டு­ப­வர்­க­ளை­யும் – பெண்­க­ளை­யும் முன்­னே­ற­வி­டா­மல் தடுப்­ப­வர்­கள்­தான் சனா­த­னி­கள். […]

The post ’’சனாதனமும் சனாதனிகளும்..!’’ முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.

]]>
’’சனாதனமும் சனாதனிகளும்’’ என்ற தலைப்பில் முரசொலியில் வெளிவந்துள்ள தலையங்கம் வருமாறு: 

சனா­த­னம் – என்­பது என்ன? வேறு­பா­டும் – பாகு­பா­டும் காட்­டு­வ­து­தான் சனா­த­னம். உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்ற பேதத்தை உரு­வாக்­கு­வது சனா­த­னம். ஜாதி­யில் மட்­டு­மல்ல ஆண் உயர்ந்­த­வன் – பெண் தாழ்ந்­த­வள் என்ற பேதத்தை உரு­வாக்­கு­வ­து­தான் சனா­த­னம்.

சனா­த­னி­கள் – என்­ப­வர்­கள் யார்? இந்த பாகு­பாட்­டை­யும் வேற்­று­மை­யை­யும் காப்­பாற்­று­ப­வர்­கள். அவர்­க­ளது மொழி­யில் தாழ்ந்­த­வர்­க­ளாக அடை­யா­ளம் காட்­டப்­ப­டு­ப­வர்­க­ளை­யும் – பெண்­க­ளை­யும் முன்­னே­ற­வி­டா­மல் தடுப்­ப­வர்­கள்­தான் சனா­த­னி­கள். ஒட்­டு­மொத்த இந்­துப் பெண்­க­ளை­யும், பெரும்­பான்மைஇந்து ஆண்­க­ளை­யும் இழி­வு­ப­டுத்­தும் கொள்­கை­தான் சனா­த­னம். மனுஸ்­மி­ரு­தி­யின் ஒவ்­வொரு சூத்­தி­ர­மும் இத­னைத்­தான் சொல்­கி­றது.

இத்­த­கைய சனா­த­னத்­துக்­கும் – சனா­த­னி­க­ளுக்­கும் எதி­ரான போராட்­டம் தமிழ்ச் சமூ­கத்­தில் பல்­லாண்­டு­க­ளாக நடந்து வரு­கி­றது. அதில் முத­லா­ம­வர் வான்­பு­கழ் வள்­ளு­வர். அடுத்து வரு­கி­றார் அருட்­பி­ர­காச வள்­ள­லார். இதனை அர­சி­யல் இயக்­க­மாக ஆக்­கி­ய­வர் தந்தை பெரி­யார். இது­தான் இன்­று­வரை ஒலித்­துக் கொண்டு இருக்­கி­றது.

சங்க காலத்­தி­லேயே துளிர் விட்டு – நிலப்­பி­ர­புத்­துவ காலத்­தில் வேர் பதித்து – அன்­னி­யப் படை­யெ­டுப்­பு­க­ளால் ஆதிக்க சக்­தி­யா­கவே மாறி – கால­னி­யக் காலத்­தி­லும் அவர்­க­ளுக்கு அடி­மைச் சேவ­கம் செய்­தும் அச்­சு­றுத்­தி­யும் பணிய வைத்து – விடு­தலை பெற்ற இந்­தி­யா­வி­லும் அந்­தச் சிந்­த­னை­களைமுழுக்க முழுக்க விதைத்து சனா­த­ன­மும் – சனா­த­னி­க­ளும் தங்­க­ளது ஆட்­டத்தைநிறுத்­தா­மல் தொடர்ந்து கொண்டே இருக்­கி­றார்­கள் என்­பது உண்­மை­தான்.

இத்­த­கைய சனா­த­னத்­தை­யும் – சனா­த­னி­க­ளை­யும் தொடக்­கக் காலத்­தில் இருந்து அம்­ப­லப்­ப­டுத்­தி­ய­தில் பெரும் பங்கு வகித்­தது திரா­விட இயக்­கம். அத­னால்­தான் திரா­விட இயக்­கத்­தின் மீது அவர்­க­ளுக்கு அடங்­காத கோபம். ‘சனா­தன – வர்­ணா­சி­ர­மத்­தில்’ மட்­டும் கை வைக்­கா­மல் இருந்­தி­ருந்­தால்மற்ற இயக்­கத்­துக்­குள் ஊடு­ரு­வி­ய­தைப் போல திரா­விட இயக்­கத்­துக்­குள்­ளும் அவர்­கள் ஊடு­ருவி இருப்­பார்­கள். இயக்­கத்­தையே அழித்­தி­ருப்­பார்­கள். சிதைத்­தி­ருப்­பார்­கள்.

பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யா­ருக்கு ஆற­றி­வும் கடந்த பகுத்­த­றிவுஇருந்­தது. பட்­ட­றிவு இருந்­தது. அத­னால்­தான் இயக்­கத்­தின் நோக்­கத்­தைச் சரி­யாக வரை­ய­றுத்­தார். மேல் கட்­டு­மா­னத்தை மாற்­றி­னால் போதாது, அடிக்­கட்­டு­மா­னத்தை சரி­யாக உரு­வாக்க வேண்­டும் என்­றார். அவ­ரால் உரு­வாக்­கப்­பட்ட இயக்­கத்­துக்­குள் ஆரிய சக்­தி­கள் – சனா­தன சக்­தி­க­ளால் ஊடு­ருவ முடி­ய­வில்லை.

அர­சி­யல் இயக்­கம் கண்­டா­லும், ‘ஆரிய மாயை’ உணர்ந்­த­வ­ராக பேர­றி­ஞர்அண்ணா அவர்­கள் இருந்­தார்­கள். ‘நான் மிக மிக மிக பிற்­ப­டுத்­தப்­பட்­ட­வன், எத்­தனை மிக மிக மிக வேண்­டு­மா­னா­லும் போட்­டுக் கொள்­ளுங்­கள்’ என்­றார் தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர். ‘ஆரி­யத்தை வீழ்த்த வந்த திரா­வி­டத்­தின் வாரி­சு­கள் நாங்­கள்’ என்று நெஞ்சு நிமிர்த்­திச் சொல்லி வரு­கி­றார் ‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யின் முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள். ‘சனா­த­னத்தை எதிர்க்க முடி­யாது, ஒழிக்­கத்­தான் முடி­யும்’ என்று சொல்­லத் தொடங்கி இருக்­கி­றார் மாண்­பு­மிகு அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள்.

‘பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும்’ என்ற வள்­ளு­வர் வாக்­கின் இன்­றைய வடி­வம்­தான் மாண்­பு­மிகு அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் உரை­யா­கும். ஈரா­யி­ரம் ஆண்­டு­க­ளாக நடை­பெற்று வரும் போராட்­டத்­தின் இன்­றைய வடி­வம் இது.

‘ஒழித்­தல்’ என்­றால் சனா­தன எண்­ணங்­களை ஒழித்­தலே தவிர, சனா­த­னி­களை ஒழித்­தல் ஆகாது. 100 ஆண்­டு­க­ளாக இயக்­கம் நடத்­திய பெரி­யார் அவர்­கள் எந்­தக் கோவி­லை­யும் இடிக்­க­வில்லை. எந்த எதி­ரி­யை­யும் அழிக்­க­வில்லை. பெரி­யா­ரும் அண்­ணா­வும் கலை­ஞ­ரும் எழு­தி­ய­தற்­காக – பேசி­ய­தற்­காக கைது செய்­யப்­பட்டு சிறை இருந்­தி­ருக்­கி­றார்­களே தவிர வன்­மு­றை­க­ளில் அல்ல. அது திரா­விட இயக்­கத்­தின் பாணி­யும் அல்ல. கொள்கை வர­லாறு உண்டே தவிர, கொலை வர­லா­று­கள் கிடை­யாது.

‘அழித்­தொ­ழித்­த­லின் வர­லாறு’ சுதந்­திர இந்­தி­யா­வில் மகாத்மா காந்­தி­யில் தொடங்­கு­கி­றது. அத­னைச் செய்­தது யார்? ‘இனப்­ப­டு­கொ­லை­யின் வர­லாறு’ 2002 குஜ­ராத்­தில் நடந்­தது. அத­னைச் செய்­தது யார்? மசூ­தியை கடப்­பா­ரை­யைக் கொண்டு தகர்த்­தது யார்? குடி­யு­ரி­மைச் சட்­டத்­தின் நோக்­க­மும்,பொது சிவில் சட்­டத்­தின் நோக்­க­மும் இனச் சுத்­தி­க­ரிப்பு அல்­லா­மல் வேறென்ன?

“சனா­த­னக் கோட்­பாட்­டைத்­தான் நான் விமர்­சித்­தேன். எது­வுமே மாறக்­­ கூடாது என்று சனா­த­னி­கள் சொல்­கி­றார்­கள். எல்­லார்க்­கும் எல்­லாம் கிடைக்க வேண்­டும் என்­பது நமது நோக்­கம்” என்று மிக­மி­கச் சரி­யாக தீர்­மா­னப் பதி­ல­ளித்து விட்­டார் கொள்கை வாரி­சான மாண்­பு­மிகு உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள். இதற்கு பதி­ல­ளிக்க நினைப்­ப­வர்­கள், சனா­த­னம் என்­பது அனை­வ­ருக்­கும்பொது­வா­ன­து­தான் என்று வாதிட்­டால் வர­வேற்­க­லாம். அது அவர்­க­ளால் முடி­யாது.

‘சனா­த­னத்தை’ வரி­வ­ரி­யாய் உரித்து தொங்க விட்­ட­வர் அண்­ணல் அம்­பேத்­கர் அவர்­கள்.‘சமூக உரி­மைச் சட்­டங்­க­ளி­லேயே மிகக் கொடூ­ர­மான சட்­டமே மனு­தான்’ என்­ற­வர் அவர். “இந்த சதுர்­வர்ண முறையை நான் அறவே வெறுக்­கி­றேன். எனது முழு இயற்­கை­யும் அதை எதிர்த்து எழு­கி­றது. வெறும் உணர்ச்­சி­யின் அடிப்­ப­டை­யில் மட்­டும் நான் இதனை எதிர்க்­க­வில்லை. ஒரு சமூக அமைப்பு என்ற முறை­யில் சதுர்­வர்­ணம் நடை­முறை சாத்­தி­ய­மற்­றது. தீமை நிறைந்­தது. இழிந்த தோல்­வியை கண்­டது. சதுர்­வர்ண முறை என்­பது மிகக் கொடூ­ர­மான முறை­யா­கும்”என்­றார் அண்­ணல் அம்­பேத்­கர். எனவே சனா­த­னத்­துக்கு பொய் புனுகு பூசி எடுத்து வர சனா­த­னி­கள் முயற்­சிக்­கி­றார்­கள்.

பத்­தாண்டு கால ஆட்­சி­யில் சொல்­லிக் கொள்­வ­தற்கு எந்­தச் சாத­னை­யும் செய்­யாத பா.ஜ.க., எதிர்க்­கட்­சி­கள் சொல்­லும் கருத்­து­க­ளில் இருந்து ஏதா­வது ஒரு வார்த்­தையை எடுத்து – திரித்து அதன் மூல­மாக திசை திருப்­பப் பார்க்­கி­றது. ‘சனா­த­னத்தை ஒழித்­தல்’ என்­பதை இன அழிப்பு என்று அவர்­­களாக – அவர்­க­ளது புத்­திக்கு ஏற்ப திரித்­துக் கொள்­கி­றார்­கள்.

வோட்டு வாங்க பா.ஜ.க.விடம் சொல்­வ­தற்கு எது­வும் இல்லை. அத­னால் பொய்யை எடுத்து வரு­கி­றார்­கள். ‘பேச நா இரண்­டு­டை­யாய் போற்றி போற்றி’ என்று எழு­தி­ய­வர் பேர­றி­ஞர் அண்ணா!

The post ’’சனாதனமும் சனாதனிகளும்..!’’ முரசொலி தலையங்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
’’ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் அதைப்பற்றி இம்மியளவும் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2587-%25e0%25ae%2586%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/#respond Mon, 10 Jul 2023 06:11:24 +0000 https://madrasmurasu.com/?p=4957 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் 09.07.2023 அன்று நடைபெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு இல்ல திருமண விழாவில் ஆற்றிய உரை: திராவிட இயக்கத்தின் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு புதல்வர் சிற்றரசு -க்கும், நினைவில் வாழும் தொழிற்சங்கத்தின் தலைவர் வி.எம்.ஆர். சபாபதி – சாவித்திரி அம்மாள் இணையருடைய பெயர்த்தி, நினைவில் வாழும் தயாமூர்த்தி – இராணி இணையருடைய மூத்த புதல்வி த.எழிலரசி -க்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது. மணவிழா […]

The post ’’ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் அதைப்பற்றி இம்மியளவும் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் 09.07.2023 அன்று நடைபெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு இல்ல திருமண விழாவில் ஆற்றிய உரை:

திராவிட இயக்கத்தின் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு புதல்வர் சிற்றரசு -க்கும், நினைவில் வாழும் தொழிற்சங்கத்தின் தலைவர் வி.எம்.ஆர். சபாபதி – சாவித்திரி அம்மாள் இணையருடைய பெயர்த்தி, நினைவில் வாழும் தயாமூர்த்தி – இராணி இணையருடைய மூத்த புதல்வி த.எழிலரசி -க்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.

மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, மணவிழாவை நடத்தி வைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது. வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றியுரை ஆற்றிய அண்ணன் திருநாவுக்கரசு எப்பொழுதும் – எதையுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். உள்ளொன்று வைத்து வெளியொன்று பேச மாட்டார். அதனால்தான் நன்றியுரை ஆற்றுகிறபோது இந்த அழைப்பிதழில் வெளியிடப்பட்டிருக்கக் கூடியவர்கள் பெரும்பாலும் வரவில்லை என்பதை மனதில் ஏற்றுக்கொண்டு அந்த வருத்தத்தை கொஞ்சம் இங்கு வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்.

அவர் எனக்கு சால்வை அணிவித்தபோது, பட்டாடை அணிவித்தபோது நான் சொன்னேன். “நீங்கள் வருத்தப்பட வேண்டாம்… எல்லோருக்கும் சேர்த்துதான் நாங்கள் வந்திருக்கிறோமே, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்“. சரி… சரி என்று தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அது மட்டுமல்ல, இன்றைக்குத் திருமண நிகழ்ச்சிகள் நிரம்ப நடந்து கொண்டிருக்கிறது. பல அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பல நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியத்திற்கு ஆளாகி அவர்களும் சென்றிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சியும் இருக்கிறது. கவலைப்படாதீர்கள். வராதவர்கள் எல்லாம் மாலையில் வருவார்கள். மணமக்களை வாழ்த்துவார்கள். நீங்களே இரண்டாகப் பிரித்துப் போட்டிருக்கிறீர்கள். அதனால் அவர் கவலைப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நம்முடைய திராவிட இயக்கத்தின் எழுத்தாளர் அண்ணன் திருநாவுக்கரசு பற்றி இங்கே வாழ்த்தியவர்கள் எல்லாம் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
விழா அழைப்பிதழிலேயே திராவிட இயக்க எழுத்தாளர் என்று தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறார். இன்றைக்கு வெளிப்படையாக அதை யாரும் வெளிப்படுத்துவதற்கு அச்சத்தின் காரணமாக கொஞ்சம் யோசிப்பார்கள். ஆனால் திருநாவுக்கரசு போன்றவர்களுக்குத்தான் அந்தத் துணிவு உண்டு, துணிச்சல் உண்டு. அந்த அடிப்படையில்தான் அவருடைய அடையாளத்தை அவர் இந்த அழைப்பிதழில் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்.

அதனால்தான் தலைவர் கலைஞர் ‘திராவிட இயக்கத்தில் பூத்த மலர்‘ திருநாவுக்கரசு அவர்கள் என்று மனதாரப் பாராட்டியிருக்கிறார்கள். அதேபோல நம்முடைய இனமான பேராசிரியர் பெருந்தகை ஒரு முறை திருநாவுக்கரசு அவர்களைப் பாராட்டி பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். ‘‘தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தொண்டைத் தொடர்பவர் நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள்“ என்று பெருமையோடு பாராட்டியிருக்கிறார்.

எனவே நடமாடும் ஒரு அறிவுக்கருவூலமாக – திராவிட இயக்கத்தின் கணினியாக – திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பக்கங்களைத் தலைமுறைகள் கடந்து தனது பேனாமுனையில் எடுத்துச் சொல்லும் ஆற்றலைப் பெற்றவராக நம்முடைய எழுத்தாளர் திருநாவுக்கரசு அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார். நீதிக்கட்சியை பற்றி – அதன் வரலாற்றைப் பற்றி இரண்டு பாகங்களாக நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றை முதல் மூன்று பாகங்களாக எழுதி அதனை இந்த அடியேன்தான், இதே அரங்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன் என்பதைப் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இதேபோல திராவிட இயக்கத்தைப் பற்றி பல நூல்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், திராவிட இயக்கத்தின் வேர்கள், திராவிட இயக்கத்தின் தூண்கள், திராவிட இயக்கமும் – திராவிட நாடும், திராவிட இயக்கமும் – திரைப்பட உலகமும், திராவிட இயக்க சாதனைகள், திராவிட இயக்கமும் – கலைத் துறையும், திருக்குறளும் – திராவிட இயக்கமும், திராவிட இயக்கமும் – பொதுவுடைமையும் – இவ்வாறு திராவிட இயக்கம் பற்றி அவர் எழுதிக் குவித்திருக்கிறார். அதனால்தான் அவரை இன்றைக்கு எல்லோரும் திராவிட இயக்கத்தின் கணினி என்று பெருமையோடு குறிப்பிட்டுச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

தலைவர் கலைஞருடைய மூத்த பிள்ளை முரசொலி என்பதைப் பல நேரங்களில் அவரே பெருமையோடு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கலைஞருடைய மூத்த பிள்ளையாக விளங்கும் முரசொலியில் நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள் பல ஆண்டுகளாகப் பணியாற்றி, அந்த முரசொலியை வளர்த்தெடுத்தவர்களில் ஒருவராக நம்முடைய ஐயா திருநாவுக்கரசு அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கும் கட்டுரைகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.

இதுவரை கணக்கெடுத்துப் பார்த்தீர்கள் என்றால் 4000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர் நம்முடைய அண்ணன் திருநாவுக்கரசு. திராவிட இயக்கத்தையோ, தலைவர் கலைஞரைப் பற்றியோ யாராவது லேசாக விமர்சித்தால் போதும், பொறுத்துக் கொள்ள மாட்டார் அண்ணன் திருநாவுக்கரசு அவர்கள். உடனே அதற்குத் தகுந்த பதிலை, தகுந்த விமர்சனத்தை எழுதினால்தான் அவருக்கு நிம்மதி வரும். அந்த அளவிற்கு ஒரு தீவிரத்தைத் தனது மனதில் ஏற்படுத்திக் கொண்டவர். அதனால்தான் திராவிட இயக்கத்தின் தீரர் என்று இன்றைக்கு நம்மால் அவர் அழைக்கப்படுகிறார்.

அவருடைய புதல்வர் – இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கும் நம்முடைய சிற்றரசு, அப்பாவைப்போல ஒரு கொள்கைவாதியாக, ஒரு இலட்சியவாதியாக விளங்கிக் கொண்டிருப்பவர். அண்ணன் திருநாவுக்கரசு ‘நக்கீரன்‘ என்கிற ஒரு பதிப்பகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதேபோல அவருடைய மகன் சிற்றரசு ‘தளபதி‘ என்ற பதிப்பகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதன் மூலமாக 20 புத்தகங்களை அவர் வெளியிட்டுயிருக்கிறார்.

அவ்வாறு வெளியிட்டிருக்கும் புத்தகங்களில் மிக முக்கியமான நூல் எது என்றால், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் வரலாற்றைத் திருநாவுக்கரசு எழுதி நம்முடைய சிற்றரசு வெளியிட்டிருக்கிறார்கள். இதில் ஒரு சிறப்பு என்னவென்று கேட்டீர்கள் என்றால், அந்த நூல் வெளியிட்டு 3 மாத காலத்தில் 11 ஆயிரம் படிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. இதைக்கூட விமர்சனம் செய்யலாம். அப்பா எழுதிய நூலை பிள்ளை எவ்வாறு வெளியிடலாம் என்று கேட்கலாம். அதனால்தான் அய்யா ஆசிரியர் தகுந்த விளக்கத்தை தந்தார்கள். இது ஒரு கொள்கைக் குடும்பம். திராவிட இயக்கத்தின் குடும்பம்.

இன்றைக்கு ‘திராவிட மாடல் ஆட்சி‘ தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் நாம் என்னென்ன உறுதிமொழிகளை – வாக்குறுதிகளைத் தந்தோமோ, அவைகள் எல்லாம் இன்றைக்கு எந்த அளவிற்கு நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம், தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், பசியோடு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் – மாணவ – மாணவிகள் அவர்களுக்காக ‘காலை உணவு திட்டம்‘.
பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்ய அறிவித்த அந்தத் திட்டம்.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் நுழையும் மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை. வருகிற செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அண்ணா  பிறந்தநாள் அன்று கலைஞர் பெயரால் உருவாகியிருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவிருக்கிறது என்ற செய்தியையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு கோடிப் பேர் அதைப் பெற இருக்கிறார்கள். எனவே சிலருக்கு இன்றைக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரம் வந்திருக்கிறது. பொறாமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் இன்றைக்கு விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சூழ்நிலை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு இந்தியாவிற்கு ஆபத்து வந்திருக்கிறது. ஆபத்து என்று சொல்வதைவிட பேராபத்து வந்திருக்கிறது. எனவே, அப்படிப்பட்ட அந்த பேராபத்திலிருந்து நாம் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு நாம் அறிவித்திருக்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அந்தத் திட்டங்களைப் பார்த்து விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்புவது, இதே பி.ஜே.பி. ஆட்சி 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்பதற்கு முன்னால் – தேர்தலுக்கு முன்னால் அறிவித்த உறுதிமொழிகளில் ஏதாவது ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?

நான் ஆட்சிக்கு வந்தால், இன்றைக்குப் பிரதமராக இருக்கும் மோடி சொன்னது, வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணங்களை எல்லாம் நான் மீட்டுக் கொண்டு வந்து, அவற்றை எல்லாம் நாட்டில் இருக்கும் மக்களுக்கு ஒரு தலைக்கு – ஒரு நபருக்கு 15 லட்சம் ரூபாய் வழங்குவேன் என்று உறுதிமொழி தந்தார். பதினைந்து லட்சம் வேண்டாம், பதினைந்து ஆயிரமாவது வழங்கியிருக்கிறாரா? பதினைந்து ஆயிரம் வேண்டாம், 15 ரூபாயாவது வழங்கியிருக்கிறாரா? கிடையாது. இதுவரை அதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை, அதைப் பற்றிக் கேட்கவே இல்லை. அதைப் பற்றி பேசவே இல்லை.

மாதம் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்தித் தருவோம் என்றெல்லாம் உறுதிமொழி தந்தார்கள். ஆனால் அந்த உறுதிமொழிகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல் விவசாயிகள் நலனை பாதுகாப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இதே டெல்லி மாநகரத்தில் – இந்தியாவின் தலைநகரத்தில் விவசாயிகள் ஒன்றுகூடி மிகப்பெரிய போராட்டத்தை, ஆண்டுக்ணக்கில் நடத்தி, நூற்றுக்கணக்கான உயிரிழந்த அந்த கொடுமைகள் எல்லாம் நடந்தது. கடுமையான குளிரில் – கொடுமையான வெயிலில் – மழையில் – பல்வேறு சித்திரவதை ஏற்றுக்கொண்டு அந்த போராட்டத்தை நடத்தியபோது அதை பற்றி கண்டும் காணாமல் இருந்த ஆட்சி பி.ஜே.பி. ஆட்சி. அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் ஓரளவிற்கு அதை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையை அவர்கள் பெற்றார்கள்.

எனவே இதையெல்லாம் உணர்ந்துதான், இப்படிப்பட்ட ஒரு மோசமான – சர்வாதிகார ஆட்சி அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல முடிவை இந்திய நாட்டிற்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தோடு, அண்மையில் பீகார் மாநிலத்தில் – பாட்னாவில் அங்கிருக்கும் முதலமைச்சர் நிதிஷ் குமார் அவர்கள் முயற்சியின் காரணமாக எதிர்கட்சிகளை சார்ந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் தீர்மானங்கள் எல்லாம் வழித்தெடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரே ஒரு முக்கியம் என்ன என்று கேட்டீர்கள் என்றால், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்ற அந்த ஒரு கருத்தை அடிப்படையாக வைத்து அந்த கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

தொடர்ந்து வருகின்ற 17, 18 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலத்தில் – பெங்களூர் நகரத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
எனவே இதைல்லாம் பார்த்து எரிச்சல் பட்டுக் கொண்டிருக்கும் பி.ஜே.பி. ஆட்சி, குறிப்பாக அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரதமர் மோடி, இன்றைக்கு பிரதமர் என்ற அந்த நிலையிலிருந்து மறந்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். உளறிக் கொண்டிருக்கிறார்.

அதைப்பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதனால் எந்த சூழ்நிலை வந்தாலும், ஏன் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் அதைப்பற்றி இம்மியளவும் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கொள்கை – நம்முடைய இலட்சியம் ஒரே ஒரு கொள்கையாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான முயற்சிகளில் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு நாம் இந்த களத்தில் இறங்கி இருக்கிறோம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இன்றைக்கு இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த மணவிழா நிகழ்ச்சியில் மணமக்களாக வீற்றிருக்கும் நம்முடைய மணமக்கள் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும்.  அய்யா ஆசிரியர் நினைவுபடுத்தி எடுத்துச் சொன்னார். ஒவ்வொரு திருமணவிழா நிகழ்ச்சிக்கும் நான் போகிறபோது மணமக்களுக்கு வைக்கின்ற வேண்டுகோள்தான். ஆனால் இந்த மணமக்களை பொறுத்த வரைக்கும் வேண்டுகோள் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் அவர்களுடைய பெயர்களே அழகான தமிழ் பெயர்கள்தான். சிற்றரசு – எழிலரசி. நிச்சயமாக அவர்களும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு நிரம்ப இருக்கிறது.

அந்த வகையில் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டு, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், “வீட்டிற்கு விளக்காய்… நாட்டிற்கு தொண்டர்களாய்“ இருந்து பணமக்கள் வாழ்க… வாழ்க… வாழ்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.  நன்றி. வணக்கம்.

The post ’’ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் அதைப்பற்றி இம்மியளவும் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/feed/ 0