acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்’’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் மின்சார வாரியத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலங்களில் நுகர்வோர் சார்பில் மனு அளிக்கும் இயக்கத்தை நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.
2025 டிசம்பர் 31க்குள் இந்தியா முழுவதும் அனைத்து மின் நுகர்வோரும் ஸ்மார்ட் மீட்டர் எனப்படும் மின் மீட்டர்களை பொருத்த வேண்டுமென ஒன்றிய அரசாங்கம் நிர்பந்தப்படுத்தி வருகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் பிரிபெய்ட் மீட்டர்களாகவும் செயல்படும். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் ஒரு மீட்டருக்கு 13 ஆயிரம் ரூபாய் வரை செலுத்துகிறார்கள். இந்த மீட்டர்கள் முன்பணம் செலுத்தி ரீசார்ஜ் கார்டுகளைப் பெற்று பணம் இருக்கும் வரை மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளவும், மணிக்கணக்கில் மின்சார நுகர்வை கணக்கிட்டு அதன் அடிப்படையில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கும் ஏதுவான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடியிருப்பு பகுதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரையில், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மின்சாரம் பயன்படுத்தும் நேரத்தை உச்சபட்ச நேரமாக கூறி கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதற்கும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சாதாரணக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வகையிலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வழக்கமான சாதாரண கட்டணத்தை வசூலிக்கும் முறையிலும் கணக்கிட்டு மின் கட்டணத்தை பிரிபெய்டு அட்டையிலிருந்து எடுத்துக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின் நுகர்வோர், எந்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறாரரோ, அந்த நிறுவனத்திடம் இருந்து முன்பணம் செலுத்தி பிரிபெய்டு அட்டைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இதை பயன்படுத்த முடியும். இதன் மூலம் மின்சார வாரியங்களுக்கு மூடு விழா நடத்தப்படும். பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரசின் உட்கட்டமைப்புகளை பயன்படுத்திக் கொண்டு தங்கள் லாபத்தை பெருக்கிக் கொள்வதற்கு இது வழிவகை செய்யும். இதன் மூலம், தொழில் நிறுவனங்களுக்கு இருப்பது போல, ஒவ்வொரு குடும்பங்களும் பீக் ஹவரில் பயன்படுத்தும் மின்சாரங்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அபாயம் ஏற்படவுள்ளது.
தனியார் நிறுவனங்களிலும் பிரிபெய்டு அட்டைகள் பெறுவதன் மூலம் இப்போது பெறுகிற இலவச மின்சாரமோ, மானியங்களோ இல்லாத நிலை உருவாகும். தவிரவும், மின் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் கூடுதல் கட்டணம் கொடுக்க முன்வருவோருக்கு முன்னுரிமை வழங்கி இதர மக்கள் பாதிக்கப்படும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள திட்டமே இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டமாகும். மேலும், ஆரம்பத்தில் ஸ்மார்ட் மீட்டருக்கு கட்டணம் ஏதும் வசூலிக்காமல் எல்லோரும் ஏற்றபின்பு ஸ்மார்ட் மீட்டரின் விலையை மின் நுகர்வோரிடம் மாதந்தோறும் வசூலிப்பதற்கான சூழ்ச்சியும் இதற்குள் அடங்கியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தவும், வீடுகளுக்கும், விவசாயத்திற்கும், விசைத்தறிக்கும் உள்ள இலவச மின் சலுகைகளை பறிப்பதற்கும் மொத்த மின்சார வாரியத்தை கலைத்து தனியார் வசம் மின் விநியோகத்தை ஒப்படைக்கும் நோக்கங்களோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் மாநிலங்களுக்கு நிதி உதவி செய்வதாகவும் ஒன்றிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதை ஏற்கவில்லையென்றால் அந்த நிதி உதவி கிடைக்காது என்றும், இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கூடுதல் சுமையை ஏற்க வேண்டியிருக்கும் என்றும் ஒன்றிய அரசு பயமுறுத்தி வருகிறது.
மின் நுகர்வோர் மற்றும் மின் ஊழியர்களும் தொழில் அமைப்புகளும் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு இந்த திட்டத்தில் உள்ள சூழ்ச்சிகளை உணர்ந்து இதை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளது. இதனால், ஏற்படும் ரூ. 9 ஆயிரம் கோடி இழப்பை ஈடுகட்டும் வகையில் பிற வழிகளில் நிதி திரட்டவும் உத்தேசித்துள்ளது.
எனவே, இலவச மின்சாரம், மானியங்கள் இவற்றை காவு கொடுப்பதற்காகவும் மின் நுகர்வோரை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கி அதே சமயம், தனியார் பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு ஒன்றிய அரசால் வழிவகை செய்துள்ள இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். மின் நுகர்வோருக்கும் மின்சார வாரியத்திற்கும் பெரும் சுமைகளை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு எந்த காரணம் கொண்டும் அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக மக்களைச் சந்தித்து ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் அபாயத்தை எடுத்துரைத்தும், இதனை கைவிட வலியுறுத்தியும் மக்களைத் திரட்டி அந்தந்த மின் வாரிய அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு தமிழக மக்களும், விவசாய பெருங்குடி மக்களும், நெசவாளர்களும், வணிகப் பெருமக்களும், குறு-சிறு நடுத்தர தொழில் முனைவோர்கள் உள்ளிட்டு அனைத்து ஜனநாயக சக்திகளும் பேராதரவளிக்க வேண்டுமென சிபிஐ (எம்) மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
The post ’’ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்’’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் first appeared on Madras Murasu.
]]>The post ’’அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுவதா? அயோத்தி சாமியாருக்கு சிபிஐ(எம்) கண்டனம்!’’ first appeared on Madras Murasu.
]]>மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிடட் அறிக்கை:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் உள்ளவர்களே உண்மைக்கு மாறாகப் பேசி தேவையற்ற சர்ச்சையை உருவாக்கி வருகின்றனர். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
இந்நிலையில், அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டு எரித்தும் மிரட்டியுள்ளதோடு, அமைச்சரின் தலையை சீவிக்கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பரவலான கண்டனம் எழுந்துள்ளபோதும், தேவைப்பட்டால் பரிசுத்தொகையை அதிகரிக்கத் தயார் என்று அவர் மேலும் மிரட்டியுள்ளார். ஒரு கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக படுகொலை செய்ய அறைகூவல் விடுப்பது பாசிச தன்மை வாய்ந்த கிரிமினல் செயல் ஆகும். ஒரு மடாதிபதியே கொலை வெறியைத் தூண்டும் கிரிமினல் குற்றவாளியாக நடந்து கொள்வது மிக வெட்கக் கேடானது ஆகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு இச்செயலை வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு செய்வது சட்டப்பூர்வமாக தண்டிக்கத்தக்க குற்றமாகும். ஆர்எஸ்எஸ் பாஜகவைச் சேர்ந்த யாரும் இதைக் கண்டிக்க முன்வரவில்லை என்பது இத்தகைய கிரிமினல் நடவடிக்கைக்கு துணைபோகும் செயலாகும். உ.பி. மாநில அரசு, சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டும் அயோத்தி சாமியாருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
The post ’’அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுவதா? அயோத்தி சாமியாருக்கு சிபிஐ(எம்) கண்டனம்!’’ first appeared on Madras Murasu.
]]>The post ’’தேர்தல் வாக்குறுதிப்படி நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்..!’’ first appeared on Madras Murasu.
]]>நடப்பாண்டு நெல்லுக்கான ஊக்கத்தொகையை மாநில அரசு (28.8.2023) அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல் குவிண்டாலுக்கு பொதுரகத்திற்கு மாநில அரசின் ஊக்கத்தொகையாக ரூ.75ம், சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.100ம் வழங்கி வந்தனர். இந்தாண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து கொள்முதல் செய்யக்கூடிய நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு கடந்த ஆண்டு வழங்கியதை விட வெறும் 7 ரூபாய் மட்டுமே உயர்த்தி ஊக்கத்தொகையாக பொதுரகத்திற்கு 82 ரூபாயும், சன்னரகத்திற்கு 107 ரூபாயும் அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நெல் உற்பத்தி செய்யப்படும் இடுபொருட்கள், ஆள் கூலி மிக கடுமையாக உயர்ந்திருக்க கூடிய இந்த சூழலில் ஒரு குவிண்டாலுக்கு 3000 ரூபாய் விலை கொடுத்தாலும் கட்டுபடியாகாத நிலையில், திமுக தேர்தல் வாக்குறுதியில் நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். குறைந்தபட்சம் அந்த அடிப்படையில் இந்த ஆண்டு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2500 விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், மாநில அரசின் ஊக்கத்தொகையாக கடந்த ஆண்டு விட வெறும் ரூ.7 மட்டும் உயர்த்தி வழங்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல.
எனவே, தேர்தல்காலத்தில் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் குவிண்டாலுக்கு ரூ.2500 விலை கொடுக்கக் கூடிய வகையில் மாநில அரசு தன்னுடைய ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து நெல்லையும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் காலதாமதமில்லாமல் கொள்முதல் செய்வதற்கான உத்தரவாதத்தையும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை தேக்காமல் உடனுக்குடன் அங்கிருந்து ஏற்றி குடோன்களுக்கு அனுப்ப தமிழ்நாடு நுகர்வு வாணிப கழகம் ஏற்பாடு செய்வதற்கான உத்தரவையும், கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ கொண்ட மூட்டைக்கு 45 ரூபாய் வரை லஞ்சமாக பெறுவதை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும், கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் குளறுபடிகளை போக்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
The post ’’தேர்தல் வாக்குறுதிப்படி நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்..!’’ first appeared on Madras Murasu.
]]>The post ’’ரயில்வேயைத் தனியார்மயமாக்குவது பேரழிவினை ஏற்படுத்திடும்..!’’ மார்க்சிஸ்ட் எச்சரிக்கை first appeared on Madras Murasu.
]]>புதுதில்லியில் உள்ள ஹர்கிசன்சிங் சுர்ஜித் பவனில் 2023 ஜூலை 18 அன்று மின்வாரியம் மற்றும் ரயில்வே ஆகியவற்றைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கு எதிராக சிஐடியு சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது ரயில்வே தனியார்மயப் பிரச்சனை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குறிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
அதன் முக்கிய சாராம்சங்கள் வருமாறு:
இந்திய ரயில்வே நம் பொருளாதாரத்தின் உயிர் நாடியாகும். நம் மக்களில் பெரும்பாலானவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். நாடு முழுதும் சுமார் 13452 பயணிகள் ரயில்கள் 7,300 ரயில்வே நிலை யங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த ரயில்களில் ஒவ்வொரு நாளும் 2 கோடியே 40 லட்சம் பயணிகள் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இத்துடன் இந்திய ரயில்வேயில் 9141 சரக்கு ரயில்கள் (goods trains) மூலமாக, சுமார் 1.42 பில்லயன் மெட்ரிக் டன் அளவுள்ள, உணவு தானியங்கள் மற்றும் இதர பொருள்கள்; சாமானிய மக்களுக்கும், விவசாயம் மற்றும் தொழில்துறைக்கும் தேவையான சரக்குகள் மற்றும் இதர பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் இத்தகைய சிறப்புமிகு பொதுப் போக்குவரத்துத் துறையைத்தான் ஒழித்துக்கட்ட விரும்புகிறது. இதனை பெரும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திட தீர்மானித்திருக்கிறது. தனியார் கார்ப்ப ரேட்டுகள் எவருமே இதன் உள்கட்டமைப்பு வசதி களை உருவாக்கியதில் எவ்விதமான முதலீட்டையும் இதுவரை செலுத்தாதவர்கள். மக்களின் பணத்தில் கட்டப்பட்ட ரயில்வேயைக் கொண்டே மக்களைச் சூறையாடவும், கொள்ளை லாபம் ஈட்டவும் அவர்களுக்கு வழிவகை செய்துதர மோடி அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. தனியார்மயம் என்பது நவீன தாராளமயக் கொள்கையின் முக்கியமான கூறுகளில் ஒன்று.
இந்திய ரயில்வேயைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் முயற்சிகளும் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியேயாகும். மோடி ஆட்சிக்கு வந்த பின் அமைக்கப்பட்ட விவேக் தேவ்ராய் குழு (Bibek Debroy Committee) அளித்திட்ட பரிந்துரை களின்படி ரயில்வே செங்குத்தாகவும் நீள்வாட்டத்தி லும் (vertically and horizontally) துண்டாகும் செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ரயில்வேயைத் தனியாருக்குப் பகுதி பகுதியாக தருவதற்கு வசதி செய்து தருவதற்காகவே இந்த ஏற்பாடுகள் அனைத்தும். மேலும், இந்திய ரயில்வே மேற்கொண்டு வந்த அனைத்துச் செயல்களும், அதா வது கட்டுமானம், இயக்கப்படுதல், நிர்வகித்தல், ரோலிங் ஸ்டாக், முக்கிய ரயில்பாதைகள், ரயில் பெட்டி கள் தயாரித்தல் போன்ற அனைத்திலும் அந்நிய நேரடி முதலீடு 100 விழுக்காடு அறிவிக்கப்பட்டி ருக்கிறது.
சொத்துக்களை விற்று காசாக்கத் திட்டம்
மோடி அரசாங்கம், நாட்டின் சொத்துக்களை விற்றுக் காசாக்கும் திட்டமான தேசியப் பண மாக்கல் திட்டத்தின் (National Monetisation Pipeline) மூலமும் ரயில்வேயின் சொத்துக்களை விற்றுக் காசாக்கும் திட்டத்தையும் பிரதானமாகக் கொண்டிருக்கிறது. ரயில்வேக்குச் சொந்தமாக இப்போது இருந்துவரும் ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள ரயில்வேக்குச் சொந்த மான இடங்கள், ரயில்வே பாதைகள், ரயில்கள், சரக்கு ஷெட்டுகள், ரயில்வே குடியிருப்புப் பகுதிகள் (காலனிகள்), ரயில்வே ஸ்டேடியம்கள் முதலான வற்றையும் தனியாரிடம் நீண்ட கால குத்தகைக்குத் தாரை வார்த்திட முடிவு செய்திருக்கிறது.
இந்திய ரயில்வே இப்போது உலகில் மிகப்பெரிய வலைப்பின்னலுடன், முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது. இதனை ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக, துண்டு துண்டாக்கி, பாதுகாப்பு அம்சங்களைப் பற்றியோ, பயணிகளின் பாதுகாப்பு பற்றியே கிஞ்சிற்றும் கவலைப் படாமல், தனியாரிடம் தாரை வார்த்திட முடிவு செய்திருக்கிறது மோடி அரசு. தனியாரிடம் தாரைவார்த்திடும் நடவடிக்கைகளை மக்களிடமிருந்து மறைப்பதற்காக, தனியார்மயம் ‘உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை அளித்தி டும்’ (‘world class travel experience’) என்றும், இது சாமானிய மக்களுக்குப் பயனளிக்கும் என்றும், ரயில்வேயில் தனியார் முதலீடு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் என்றெல்லாம் கூறி, மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இவர்களின் கூற்றுகளுக்கும் உண்மை நிலைமைகளுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.
தனியார்மயமானால் என்னவாகும்?
ரயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டால் ‘உலகத் தரம்வாய்ந்த ரயில் நிலையங்களை உருவாக்குகிறோம்’ என்ற பெயரில், ஒட்டுமொத்த ரயில் நிலையமும் அதனைச் சுற்றியுள்ள நிலங்களும் தனியார்வசமாகும். ரயில் டிக்கெட்டுகள், இயங்கும் பணி மட்டும் ரயில்வேயிடம் இருந்திடும். பிளாட்பாரம் டிக்கெட்டுகள் விற்பது, உணவுப் பண்டங்கள் விற்பது, வாகனங்கள் நிறுத்துமிடம், விளம்பரங்கள் செய்யும் உரிமைகள் முதலானவை தனியாரிடம் ஒப்படைக்கப் படும். இதனை அமல்படுத்துவதற்காக அரசாங்கம் இந்தியன் ரயில்வே ஸ்டேஷன் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (IRSDC-Indian Railway Station Development Corporation) என்னும் நிறு வனத்தை உருவாக்கி இருக்கிறது. தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ரயில்வேயின் நிலங்களை அவர்கள் தங்கள் விருப்பம் போல் வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள லாம். ஓட்டல்கள் கட்டலாம், ஷாப்பிங் மால்கள் கட்டலாம், என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள சேரிகளில் காலங்காலமாக வாழ்ந்துவரும் ஏழை மக்கள் அந்த இடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்படு வார்கள். அவர்கள் வீடற்றவர்களாக வீதிகளில் நிற்பார்கள். ஏழை ரிக்சாக்காரர்கள், ஆட்டோ டிரைவர்கள் ரயில் நிலையங்கள் அருகே தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாது. சாமானிய பயணிகளும்கூட உள்ளூரில் தங்களுக்குத் தேவைப்படும் போக்குவரத்திற்காக, கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் வாகனங் களை அமைத்துக் கொள்ள முடியாது.
வெகு தூரங்களிலிருந்து வரும் பயணிகள் ரயில் நிலையங்களின் நடைமேடைகளில் காத்துக் கொண்டிருப்பதற்கும் அனுமதிக்கப்படமாட்டார் கள். அவர்கள் இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ள இடங்களில் கட்டணம் செலுத்தித்தான் காத்திருக்க வேண்டும். ரயில்களில் ஏறுவதற்கு மட்டுமே அவர்களுக்கு நடைமேடை பயன் படுத்திட அனுமதிக்கப்படும்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஹபிப்கஞ்ச் ரயில் நிலையம் (இப்போது ராணி கமலாபதி நிலையம் என பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), பன்சால் குழு மத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டி ருக்கிறது. குஜராத்தில் காந்தி நகர் ரயில் நிலையமும் அதானி மற்றும் எல்டெகோ உள்கட்டமைப்பு நிறு வனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதுபோல் ‘உலகத்தரம்’ வாய்ந்த நிலையங் களாக மாற்றிட மோடி அரசாங்கம் 400 ரயில் நிலை யங்களை அடையாளம் கண்டிருக்கிறது. இவற்றிற் காக டெண்டர்கள் விடப்பட்டிருக்கின்றன. இந்த ரயில் நிலையங்களில் புதுதில்லி, மும்பை, ஹவுரா, சென்னை, பெங்களூரு, செகந்திராபாத், விஜயவாடா முதலானவையும் அடங்கும்.
சாமானிய மக்கள் ரயில்களைப் பயன்படுத்த முடியாது
ரயில் கட்டணங்கள் இனி அதற்கான செலவினத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். தற்சமயம் பயணிகளின் ரயில் கட்டணங்களில் 53 விழுக்காடு அதன் செலவினத்தையும் (cost), 47 விழுக்காடு அரசின் மான்யத் தொகையையும் கொண்டிருக்கின்றன. இனி இந்த மானியத்தொகை இருக்காது. அது விலக்கிக்கொள்ளப்படும். இத னால் இப்போதுள்ள ரயில் கட்டணங்கள் உடனடி யாக இரட்டிப்பாகும். இத்துடன் கார்ப்பரேட்டுகளைக் குஷிப்படுத்துவதற்காகவும் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படும். ஏற்கனவே பல ரயில்நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் விலை 50 ரூபாய்க்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. பல வழித்தடங்களில் தனியார் ரயில்கள் விடப்பட இருக்கின்றன.
இவ்வாறு விடப்படும்போது அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், ஒரு மணி நேரத்தி ற்குப் பின்பும் அரசு ரயில்கள் விடப்படமாட்டாது. இதனால் அவசரமாகச் செல்ல வேண்டும் என்றுள்ள பயணிகள் தனியார் ரயிலில்தான் அதிகக் கட்டணங்கள் கொடுத்துப் பயணிக்க வேண்டும். இப்போது ஐஆர்சிடிசி மூலமாக தனியார் மூலமாக, தில்லிக்கும் லக்னோவிற்கும் இடையே ‘தேஜாஸ் ரயில்’ விடப்பட்டுள்ளது. இதன் ரயில் கட்டணம் 700 ரூபாயிலிருந்து 900 ரூபாயாகும். இதன் கட்ட ணங்கள் 4,700 ரூபாயாக உயர்த்தப்படஇருக்கின்றன. இப்போது விமானப் பயணங்களில் உள்ளது போன்று விரும்பும் இடத்திற்கும், லக்கேஜுகளுக்கும் தனித்தனியே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இவையெல்லாம் டிக்கெட் கட்டணத்தில் இடம் பெறாது. ரயிலில் உணவு, படுக்கை வசதிகள், வைஃபி வசதிகளுக்குத் தனியே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
சலுகைகள் ரத்து
சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக பாரத் கவுரவ் ரயில்கள் விடப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தனியார் நிறுவனங்களே இயக்கிக் கொண்டிருக்கின்றன. கட்டணங்கள் மற்றும் வழிகள் முதலானவை அவர்கள் வைத்ததுதான். ரயில் கட்டணங்களில், மூத்த குடிமக்கள், குழந்தை கள், மாற்றுத் திறனாளிகள், புற்று நோயாளிகள், மாணவர்கள் முதலானவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும், தனியாரிடம் ரயில் போக்குவரத்து தாரைவார்க்கப்பட்டபின் இயற்கையாகவே, ரத்து செய்யப்பட்டுவிடும். ஏற்கனவே மூத்த குடிமக்கள் பெற்றுவந்த சலுகைகள் ரத்தாகிவிட்டன. இப்போதே ரயில்வே நிர்வாகம் பயணிகளை பல வழிகளில் சூறையாடும் நடவடிக்கைகளில் இறங்கி விட்டது. ரிசர்வ் பெர்த்துகள் கடுமையாகக் குறைக்கப்பட்டுவிட்டன. தட்கல் கோட்டா மூலம் அளிக்கப்படும் பெர்த்துகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. மோடி அரசாங்கம் 2014இல் பிரிமியம் தட்கல் என்னும் முறையைக் கொண்டுவந்தது. இது தட்கல் கட்டணத்தைப்போல் இரண்டு மடங்காகும்.
2016இல் ‘டைனமிக் பிரைசிங்’ (‘dynamic pricing’) என்னும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு 10 விழுக்காடு பெர்த்துகள் நிறைந்த பின்னும், 10 விழுக்காடு கட்டணம் உயர்த்தப்படும். இப்போது ஸ்லீப்பர் கோச்சுகளாக இருப்பவை யெல்லாம் படிப்படியாக ஏசி கோச்சுகளாக மாற்றப்படும். சாமானிய பயணிகள் பயணம் செய்வதற்கான பொதுப் பட்டியல் (ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டுகள்), ஜெனரல் ரிசர்வ் பெர்த்துகள் படிப்படியாகக் குறைக்கப்படும். இதனால் பொது பெட்டிகளில் பயணிகள் பயணம் செய்வது மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும். ரயில் விபத்துகள் அதிகம் நடைபெறு வதற்கும் இதில் ஏராளமானவர்கள் இறப்பதற்கும் இது ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் இதைப்பற்றியெல்லாம் மோடி அரசாங்கம் கவலைப்படவில்லை.
ரயில்வே ஊழியர்கள் நிலை
நவீன தாராளமயக் கொள்கையின் மிகவும் முக்கியமான முடிவுகளில் ஒன்று, ரயில்வே ஊழி யர்களின் எண்ணிக்கையை வெட்டிக் குறைப்பது என்பதாகும். நிரந்தரப் பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்தப் பணியிடங்களாக மாற்றப்படும். வேலைகள் வெளியில் கொடுத்து (outsourcing) வாங்கப்படும். பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த சுமார் 3 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டிருக்கின்றன. வேலையில் இருக்கும் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்திருக்கிறது. ஓடும் ரயில்களில் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் 14-16 மணி நேரம் வேலை செய்யக் கட்டாயப் படுத்தப்படுகிறார்கள்.
விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாறு மோடி அரசாங்கத்தின் ரயில்வேயைத் தனியார்மயமாக்கும் கொள்கை மக்களுக்கும், ரயில்வே ஊழியர்களுக்கும், நாட்டுக்கும் பேரழிவினை ஏற்படுத்திடும். ஆயினும் மோடி அரசாங்கம் தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதிலேயே சுகம் காணுகிறது. நாட்டை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள தொழிலாளர் வர்க்கமும், உழைக்கும் மக்களும் இந்த அநியாயங்களையெல்லாம் கண்டும் காணாமல் இருந்துவிட முடியாது. இதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்திட வேண்டும். ரயில்வேயைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டையும் நாட்டு மக்களையும் ரயில்வே ஊழியர்களையும் பாது காத்திட வேண்டும்.
The post ’’ரயில்வேயைத் தனியார்மயமாக்குவது பேரழிவினை ஏற்படுத்திடும்..!’’ மார்க்சிஸ்ட் எச்சரிக்கை first appeared on Madras Murasu.
]]>The post ’’கோசாலை அமைத்தால் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்..?’’ கே.பாலகிருஷ்ணன் கேள்வி first appeared on Madras Murasu.
]]>ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகளால் விலைவாசி கடுமையாக உயர்கிறது. சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஒன்றிய அரசு இதைப் பற்றி கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் தக்காளி சாகுபடி உற்பத்தி பரப்பளவு குறைந்தது. உற்பத்தியும் குறைந்தது. இதனால் தற்போது தக்காளி விலை கிட்டத்தட்ட 300 விழுக்காடு உயர்ந்து விற்கப்படு கிறது. விலை குறைவது, விலை ஏறு வதை கட்டுப்படுத்துவதற்கு அரசு தலையிட்டு கொள்முதல் செய்து விநியோகம் செய்ய வேண்டும். விவ சாயிகளுக்கு நியாய விலை கிடைக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக் கும் நியாயமான விலையில் கிடைக்க வேண்டும். அதற்காக அரசு தக்காளியை கொள்முதல் செய்ய வேண்டும். உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மாநில அரசே பருத்தியை கொள்முதல் செய்க!
பருத்தி அறுவடை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது போதுமான விலை இல்லை. ஒன்றிய அரசு விலையை அறிவிக்கிறது, ஆனால் கொள்முதல் செய்யவில்லை. தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்குத்தான் வாங்குவார்கள். இது தொடர்பாக முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மாநில அரசே பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும்.
மகாராஷ்டிராவில்தான் அதிகளவில் பருத்தி சாகுபடி நடைபெறுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தான் அதிகமான நூற்பாலைகள் உள்ளன. எனவே மாநில அரசே பருத்தியை கொள்முதல் செய்து அந்த நூற்பாலைகளுக்கு கொடுக்கலாம். இந்நிலையில் தனியார் வியாபாரிகள் பருத்தி விலையை கடுமையாக உயர்த்தி விற்கிறார்கள். எங்களால் பருத்தியை வாங்கி நூல் நூற்க முடியவில்லை என்று 600-க்கும் மேற்பட்ட சிறு தொழிலதிபர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள். இந்த தில்லுமுல்லு செய்வது முழுவதும் அதானி-அம்பானி போன்றவர்கள் நடத்தும் நிறுவனங்கள் தான். மோடி இதற்கு மறைமுகமாக ஆதரவு தெரி விக்கிறார்.
அரிசி கொடுக்க மறுப்பதா?
ஒன்றிய பாஜக அரசு மாநில அரசுகளுக்கு அரிசி கொடுக்க மாட்டேன் என்கிறது. உங்களுக்கு அரிசி தேவையென்றால் வெளி மார்க்கெட்டில் போய் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறது ஒன்றிய அரசு. ஓபன் மார்க்கெட் செல்லிங் ஸ்கீம் என்று சொல்லக்கூடிய ஓ.எம்.எஸ்.எஸ்.தனியார் வியாபாரிகளுக்கு டெண்டர் விடுகிறார்கள். அவர்களு க்கு ஒன்றிய அரசு ஒரு கிலோ அரிசி ரூ.31க்கு கொடுக்கிறது. அவர்கள் நமக்கு ரூ.50க்கு விற்பார்கள். அத னால் விலை இல்லா அரிசியை மாநில அரசுகளால் கொடுக்க முடியவில்லை. நெல், கோதுமையை முறைப்படி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கொடுக்க வேண்டும். மாநில அரசு களுக்கு அரிசி கொடுக்க மாட்டோம் என்று சொல்வது பெரும் துரோக மாகும்.
ஆளுநரை எதிர்த்து விரிவான கடிதத்தை முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்கு எழுதியிருக்கிறார். அது நாடு முழுவதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அவ ரது எல்லா வகையான நடவடிக்கை களுக்கு மோடியும், அமித்ஷாவும் பின்புலமாக இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.
பழனி பகுதியில் சிப்காட் அமைந்தால் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். கோசாலை அமைத்தால் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்?. ‘மாடு மேய்க்கத்தான் நீ லாயக்கு’ என்று சொல்வது தான் ஆர்.எஸ்.எஸ் கொள்கை. சாதாரண தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சிப்காட் போன்ற நிறுவனத்திற்கு நல்ல வேலைக்கு போகக் கூடாது; இப்படியே ஆடு மாடு மேய்க்க வேண்டும் என்பதற்காகத்தான் கோசாலை அமைக்க வேண்டும் என்கிறார் பாஜகவின் எச்.ராஜா.
சமூகவிரோதச் சக்திகளுக்கு காவல்துறை தரப்பில் உதவி
பழனி மலையில் கடந்த 2 ஆண்டு களாக முருகன் கோவிலை மையப் படுத்தி பாஜகவினர்அரசியல் செய்து தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். பழனி முருகன் ஆல யத்திற்கு இந்து மதத்தினரைத் தவிர யாரும் வரக்கூடாது என்கிறார்கள். விஞ்ச்சில் ஏறக்கூடாது என்று தகராறு செய்கிறார்கள்.
பழனியை போல சிதம்பரம் நடராஜர் கோவிலையும் கல வர பூமியாக மாற்றுகிறார்கள். அமைதியாக சாமி கும்பிடலாம் என்று வந்தால் அங்கும் அடிதடி தகராறு. பழனி, சிதம்பரத்தை வன்முறைக்களமாக மாற்றுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சேலத்தில் போதை மற்றும் லாட்டரியை எதிர்த்துப் போராடிய வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பெரியசாமி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். போதை மற்றும் சமூகவிரோதச் சக்திகளுக்கு காவல்துறையினர் தரப்பில் உதவி கிடைப்பதால்தான் சமூக விரோதிகள் அச்சமின்றி இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் யாராக இருந்தாலும் முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
பேட்டியின் போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
The post ’’கோசாலை அமைத்தால் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்..?’’ கே.பாலகிருஷ்ணன் கேள்வி first appeared on Madras Murasu.
]]>The post ’’சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்கிட வேண்டும்..!’’ மார்க்சிஸ்ட் first appeared on Madras Murasu.
]]>சிறுபான்மை மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையை கணக்கில் கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி – 1 அரசு சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கான பல்வேறு கல்வி உதவித் தொகைகளை உத்தரவாதப்படுத்தியதோடு புதிதாக ஒன்றாம் வகுப்பு முதல் பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை அளித்தது. இது தவிர, மொத்த எண்ணிக்கையில் 30 சதவிகிதம் பேகம் ஹஸ்ரத் மஹால் பெயரில் மாணவிகளுக்கு ப்ரிமெட்ரிக் கல்வித் தொகையையும் அளித்து வந்தது.
இந்த நிலையில் ஒன்றிய பாஜக அரசாங்கம் சிறுபான்மையினர் மீதான வன்மத்தோடு இந்தாண்டு முதல் 1 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்தியதோடு, மௌலானா அபுல்கலாம் ஆசாத் ஃபெலோஷிப்பையும் வெளிநாட்டில் பயிலும் சிறுபான்மை மாணவர்கள் பெரும் கடனுக்கான வட்டிக்கு அளித்து வந்த மானியத்தையும் ரத்து செய்துவிட்டது.
இந்த நிலையில் சிறுபான்மை மாணவர்களுக்கு தற்போது அமலில் உள்ளபடி, ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப், பேகம் ஹஸ்ரத் மஹால் ஸ்காலர்ஷிப், மெரிட் கம் மீன்ஸ் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட எந்த உதவித்தொகையும் ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து இதுவரை வரவில்லை.
சிறுபான்மையினர் மீதான வன்மத்தினால் ஒன்றிய அரசாங்கம் நயவஞ்சகமாக சிறுபான்மை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் இந்த உதவித்தொகைகளை நிறுத்தி வைப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசு உடனடியாக சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்கிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.
மேலும், மாநில அரசு ஒன்றிய அரசின் உரிய அதிகாரிகளோடு தொடர்புகொண்டு இந்த கல்வி உதவித் தொகைகளை பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
The post ’’சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்கிட வேண்டும்..!’’ மார்க்சிஸ்ட் first appeared on Madras Murasu.
]]>The post ’’சென்னை மாநகராட்சி கூட்டத்திலிருந்து மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு..!’’ first appeared on Madras Murasu.
]]>இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வெள்ளியன்று (ஜூன் 30) மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
அப்போது, நேரமில்லா நேரத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், “5, 6ஆவது மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியார்மயமாக்க ஜூன் 16ஆம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர் களில் பெரும்பான்மையோர் தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிமுக நிர்வாக சீர்கேடு காரணமாகவும், 2016-21 தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளே முடிவு செய்து மேலும் 8 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் அன்றைய ஆணை யரை சந்தித்து மனு அளித்தனர். அதற்கு மாறாக, தேர்ந்தெடுக்கப் பட்ட மாநகராட்சி நிர்வாகம் அதிமுக வழியில் செல்வது சரியல்ல. தனியார் முதலாளிகளுக்கு லாபம்தான் முக்கியம்.
சேவை மனப்பான்மையோடு செயல்பட மாட்டார்கள். தற்போதுள்ள ஊழியர்கள் 500 மீட்டர் தூரம் பெருக்க வேண்டும், 250 வீடுகளில் குப்பை அள்ள வேண்டும் என்று பணிவிதி உள்ளது. தனியார் நிறுவனங்கள், ஒரு ஊழியர் 5 தெருவை (சுமார் 1500 மீட்டர்) சுத்தம் செய்ய வேண்டும் என்று விதி வைத்துள்ளன; தேவையான ஊழியர்களையும் நியமிப்பதில்லை. எனவே, குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு கொடுக்க கூடாது” என்றார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, “தூய்மைப் பணியை தனி யாருக்கு கொடுப்பது அரசின் கொள்கை முடிவு. தற்போது பணி யில் இருக்கும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் பிற மண்டலங் களுக்கு பணிமாறுதல் செய்யப்படு வார்கள். என்யுஎல்எம் தொழி லாளர்களை ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனமே பணிக்கு எடுத்துக் கொள்ளும். இதனால் தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை” என்றார்.
மேயரின் பதிலை ஏற்க மறுத்து சிபிஎம் உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், ப.விமலா, எம்.சரஸ்வதி, ஆ.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் எழுந்து நின்று பேசினர். அப்போது குறுக்கிட்ட ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், “கருத்துக்கேட்பு கூட்டத்தில் வந்த கருத்துக்கள், உறுப்பினர்களின் ஆட்சேபணைகள் ஆகியவை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்றார். இவற்றை ஏற்க மறுத்து சிபிஎம் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஜெயராமன், “6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர துப்புரவு ஊழியர்கள் பணிபுரிந்த மாநகராட்சியில் தற்போது 2 ஆயிரம் பேர்தான் உள்ளனர். துப்புரவு பணி தனியார்மயமானால் புதிய பணியிடங்கள் உருவாகாது. ஒரு நிரந்தர ஊழியரின் ஊதியத்தை எடுத்து 5 பேருக்கு பிரித்து கொடுக்கும் தனியார்மயம் தேவைதானா? ஒப்பந்த ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய மறுக்கின்றனர். தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி துப்புரவு பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம்” என்றார்.
முன்னதாக மன்ற கூட்டத்திற்கு வருகை தந்த மேயர், துணை மேயர், மண்டலக்குழுத் தலை வர்கள், கவுன்சிலர்களிடம் தனியார்மயத்தை கைவிட வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க (சிஐடியு) தலைவர்கள் மனுக்களை அளித்தனர். இதன்பிறகு ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
The post ’’சென்னை மாநகராட்சி கூட்டத்திலிருந்து மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு..!’’ first appeared on Madras Murasu.
]]>The post ”தீக்கதிரின் சுடரொளி திசையெங்கும் பரவட்டும்..!” கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.
]]>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிர் ஏடு வைர விழா கண்ட பெருமிதத் தோடு 60 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 61 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இனிய நாளில் தீக்கதிர் வாசகர்கள், ஆசிரியர் குழு, செய்தியாளர்கள், நிர்வாகப் பிரிவு உள்ளிட்ட மதுரை, சென்னை,கோவை, திருச்சி, எண்மப் பதிப்பு என 5 பதிப்புகளிலும் பணியாற்றும் தொழிலாளர் தோழர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தீக்கதிர் ஏடு கடந்து வந்த 60 ஆண்டுகள் என்பது வெறும் ஆண்டுக் கணக்கல்ல. பாட்டாளி வர்க்கத்திற்காக அயராமல் படை நடத்தி வந்துள்ள வீர வரலாற்றின் வியத்தகு பக்கங்கள். ஊடக உலகில் உண்மையின் பேரொளி என்ற முத்திரை வாசகத்துடன் வெளிவந்து கொண்டிருக்கும் தீக்கதிர், கடந்து வந்த பாதை என்பது மலர்களால் அலங்கரிக்கப்பட்டது அல்ல; நெருப்பு ஆற்றை நீந்திக் கடந்த நீண்ட வரலாறாகும்.
இந்திய பொதுவுடமை இயக்கத்துக்குள் கடந்து வந்த சித்தாந்தப் போராட்டத்தில் உருவானது தீக்கதிர் ஏடு. தோழர் என்.அப்பு என்ற அற்புதசாமியை ஆசிரியராகக் கொண்டு 1963 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதியன்று தீக்கதிர் தனது புரட்சிக்கரப் பயணத்தை துவங்கியது. ‘கோவை தொழிலாளி வர்க்கம் கொடுத்த செந்தீக்கதிரை உயர்த்திப் பிடித்திடுவோம்’ என்ற வாசகத்துடன் முதல் ஏடு வெளியானது. கோவை தொழிலாளர்கள் கொடுத்த நிதியுதவியுடன் சென்னையில் அச்சடிக்கப்பட்டு, முதல் ஏடு வெளியானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான பிறகு, கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக தீக்கதிர் மாறியது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக மாறிய போது, இன்றும் நம்மோடு வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிற தோழர் என்.சங்கரய்யா ஆசிரியராக இருந்தார். நிர்வாகப் பொறுப்பினை வி.பி.சிந்தன் ஏற்றார். 1969 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் மதுரைக்கு மாற்றப்பட்ட போது, தீக்கதிர் அலுவலகமும் மதுரையிலிருந்து செயல்படத் துவங்கியது. 1971 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தீக்கதிர் நாளேடாக மாறியது. அது முதல், தொடர்ந்து நாளேடாக வெளி வந்து கொண்டிருக்கிறது.
1975 இல் அவசரநிலை காலம் அறிவிக்கப்பட்ட நிலையில், தீக்கதிர் ஏடு இரட்டைத் தணிக்கை கொடுமைக்கு ஆளானது. அன்றைக்கு ஜனநாயக தீபத்தை அணையாமல் உயர்த்திப் பிடித்ததில் தீக்கதிருக்கு பெரும் பங்கு உண்டு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, சமூக விரோதிகளால் மதுரை தீக்கதிர் அலுவலகம் தீக்கிரையானது. ஒருமுறை, தீ விபத்துக்கு உள்ளானது. அப்போதும்கூட, ஒருநாள்கூட தடைபடாமல் தீக்கதிரை கொண்டு வந்த பெருமை அதில் பணியாற்றிய தொழிலாளர்களைச் சாரும். கொரோனா முடக்க காலத்திலும்கூட தீக்கதிர் முடங்கி விடவில்லை. சில மாதங்கள் நாளேடுகளே வெளிவராத நிலையில், எண்ம பதிப்பாக தன்னுடைய பணியை இடையறாது தொடர்ந்தது தீக்கதிர் ஏடு. மதுரையைத் தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி என நான்கு பதிப்புகளாக வெளிவரும் தீக்கதிர், தற்போது எண்மப் பதிப்பாகவும், செயலி, முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் ஆப், யூடியூப் என அனைத்து சமூக ஊடக வடிவிலும் உலகம் முழுவதும் உண்மையின் பேரொளியை பரப்பி வருகிறது.
ஊடக உலகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. மாறிவரும் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொண்டு தீக்கதிரும் தன்னை மேம்படுத்திக் கொண்டு வந்துள்ளது. ஆனால், ஒருபோதும் தன்னுடைய வர்க்க நிலைபாட்டில் சமரசம் செய்து கொண்டதில்லை. இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்கள் ஊடக ஜனநாயகத்தை முடக்க முயல்கிறார்கள். கார்ப்பரேட் மயமாகிப் போன ஊடகங்கள் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக தினம் தினம் மாரீச யுத்தம் நடத்தி வருகிறது. பாட்டாளி வர்க்கச் செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன பெரும்பாலான ஊடகங்கள். இந்தப் பின்னணியில் தமிழக உழைக்கும் மக்களின் வாளும் கேடயமுமாக பணியாற்றி வருகிறது நம்முடைய தீக்கதிர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடாக மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக இடதுசாரி சக்திகளின் பெருங்குரலாக பெருமுழக்கம் செய்கிறது தீக்கதிர். கட்சிப் பத்திரிகை கட்சியின் அமைப்பான ‘என்று பிரகடனம் செய்த மாமேதை லெனின் அவர்கள் நடத்திய இஸ்க்ரா’ என்ற ஏட்டின் தாக்கத்தினால் தீக்கதிர் என்று பெயரிடப்பட்ட இந்த ஏடு, அநீதிகளை சுட்டெரிக்கும் நெருப்பாகவும், உழைக்கும் மக்களின் பேரரணாகவும் செயல்படுகிறது. குரலற்றவர்களின் குரல்தான் தீக்கதிர். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர், உரிமைகள் மறுக்கப் பட்டோர், இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பு மக்களின் போராட்டத்திற்கான போர்க்கருவியாக விளங்குகிறது தீக்கதிர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடாக மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக இடதுசாரி சக்திகளின் பெருங்குரலாக பெருமுழக்கம் செய்கிறது தீக்கதிர். கட்சிப் பத்திரிகை கட்சியின் அமைப்பான ‘என்று பிரகடனம் செய்த மாமேதை லெனின் அவர்கள் நடத்திய இஸ்க்ரா’ என்ற ஏட்டின் தாக்கத்தினால் தீக்கதிர் என்று பெயரிடப்பட்ட இந்த ஏடு, அநீதிகளை சுட்டெரிக்கும் நெருப்பாகவும், உழைக்கும் மக்களின் பேரரணாகவும் செயல்படுகிறது. குரலற்றவர்களின் குரல்தான் தீக்கதிர். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர், உரிமைகள் மறுக்கப் பட்டோர், இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பு மக்களின் போராட்டத்திற்கான போர்க்கருவியாக விளங்குகிறது தீக்கதிர்.
கட்சியின் மாநிலத் தலைவர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சந்தா சேர்ப்பு பணியில், இந்த 10 நாளும் மொத்தமாக முழுவீச்சுடன் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு, பணிகள் உற்சாகமாக நடந்து வருகின்றன. பொய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக, மதவெறி சக்திகள் 24 மணி நேரமும் இயங்கி வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், அவர்களது பொய்த் தயாரிப்புப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதை எதிர்கொள்ள வேண்டுமானால், உழைக்கும் மக்கள் கையில் உள்ள உருக்கு போன்ற ஆயுதம்தான் தீக்கதிர். இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, பன்முகத்தன்மை உள்ளிட்ட விழுமியங்களை பாதுகாக்கவும் தமிழ், தமிழ்நாட்டின் நலன் காத்து நிற்கவும் தீக்கதிரின் பணி இன்றியமையாதது. வீதி விதியாக, வீடு வீடாக செல்வோம்! தீக்கதிரின் சந்தாதாரர்களை பன்மடங்காக்குவோம்! தீக்கதிரின் சுடரொளி திசையெங்கும் பரவட்டும்!
The post ”தீக்கதிரின் சுடரொளி திசையெங்கும் பரவட்டும்..!” கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.
]]>The post ’’டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களை 20,000 ஆக உயர்த்துக..!’’ முதமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கடிதம் first appeared on Madras Murasu.
]]>கொரோனா தொற்று காரணமாக 2019, 2020, 2021 ஆகிய மூன்று ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் எந்த தேர்வும் நடைபெறவில்லை. கொரோனா தொற்று குறைந்த பிறகு கடந்தாண்டு தாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியிடப்பட்டு Group -1, Group – 2, Group 2-A, Group – 4 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. Group 4 தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவு இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. Group – 4 க்கான காலிப் பணியிடங்கள் 10,117 என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10,000 என்கிற அளவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல், கடந்த ஆண்டுதான் தேர்வு நடத்தப்பட்டு இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
கடந்த மூன்று ஆண்டுகளில் தேர்வுகள் நடத்தப்படாத காரணத்திலும், ஓய்வு பெற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், கொரேனா ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பினை இழந்த இளைஞர்கள் அரசுப் பணிக்கு முயற்சித்து வருவதாலும் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்பொழுது விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்திற்கு அதிகமாகவும் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்திற்கு அதிகமாகவும் உள்ளது.
அரசுப்பணியில் சேர இளைஞர்களுக்கான பிரதான வாய்ப்பாக இருப்பது டிஎன்பிஸ்சிதான். கொரோனா காலத்தில் அறிவிக்கப்படாத பணியிட வாய்ப்புகள் மற்றும் உருவாகியிருக்கும் கூடுதல் காலிப் பணியிடங்களையும் கணக்கில் கொண்டால் தற்போது மூன்றரை லட்சத்திற்கு மேல் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை தற்போது அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களான மின்சாரம், போக்குவரத்து, ஆவின் போன்ற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், சமீபத்தில் குரூப் 4 தேர்விற்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதில் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் இடம் பெறவில்லை என்பது அந்த இளைஞர்களுக்கு ஏமாற்றத்தையும் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், தமிழகத்தில் 3.5 லட்சத்திற்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், கொரோனா காலத்தில் அறிவிக்கப்படாத பணியிட வாய்ப்புகள் மற்றும் உருவாகியிருக்கும் கூடுதல் காலிப்பணியிடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து காலிப் பணியிடங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்காலத்தில் நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அதேசமயம், தற்போது அறிவிக்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள 10,000 காலிப்பணியிடங்களை குறைந்தபட்சம் 20,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்து அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிட வேண்டும்.
The post ’’டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களை 20,000 ஆக உயர்த்துக..!’’ முதமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கடிதம் first appeared on Madras Murasu.
]]>The post “போதையற்ற தமிழ்நாடு..!” ஒரு கோடி கையெழுத்து first appeared on Madras Murasu.
]]>இந்த பிரச்சாரத்தில் திரைக் கலைஞர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேது பதி, சரத்குமார், யோகி பாபு, ரோகிணி, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள், விளையாட்டு வீரர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் என ஏராளமானோர் கையெழுத்திட்டனர். கையெழுத்து இயக்க பிரச்சார நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, மாநிலம் முழுவதும் போதை ஒழிப்புக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. கஞ்சா ஒழிப்பிற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த பிரச்சார இயக்கத்தின் நிறைவு விழா கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடியதால் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்க தீரர்கள் குமார்-ஆனந்தன் நினைவு நாளையொட்டி நடைபெற உள்ளது.
இதற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் சனிக்கிழமையன்று (ஜூன் 3) சென்னையில் நடைபெற்றது. சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.பி. சரவணதமிழன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர்கள் எஸ்.கே.மகேந்திரன், சி.திருவேட்டை, மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், துணைச் செயலாளர் செல்வ ராஜ், மாவட்டச் செயலாளர்கள் கே.மணிகண்டன் (மத்திய சென்னை), தீ.சந்துரு (தென் சென்னை) உள்ளிட்டோர் பேசினர். இதில், வரவேற்புக்குழுத் தலைவராக எஸ்.கே.மகேந்திரன், கவுரவத் தலைவராக சு.வெங்கடேசன் எம்.பி., செயலாளராக எல்.பி.சரவண தமிழன், பொருளாளராக தீ.சந் துரு, புரவலர்களாக சி.திருவேட்டை, க.பீம்ராவ், பேரா.காளீஸ்வரன், ஆ.பிரியதர்ஷினி எம்.சி, சுசீந்திரா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
The post “போதையற்ற தமிழ்நாடு..!” ஒரு கோடி கையெழுத்து first appeared on Madras Murasu.
]]>