acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ‘’தமிழ்நாட்டையே சமத்துவபுரம் ஆக்குவோம்..!” கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.
]]>நவீன வடிவங்களில் தீண்டாமை
சாதியம் எனும் மக்காத குப்பை புதிய புதிய நவீன வடிவங்களெடுத்து மனித குல நாகரிகத்திற்கே சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் சாதிய பாகுபாடுகள் தமிழ்நாட்டில் நிலவுவதாக ஆய்வுகள் கூறு கின்றன. இப்போதும் கூட பல கிராமங்களில் இரட்டைக் குவளை முறை நடைமுறை யில் உள்ளது. ஆலயங்களுக்குச் சென்று பொது வழிபாடு நடத்த உரிமை மறுக்கப்படுகிறது. காலில் செருப்பு அணிந்து சென்றதற்காக பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்ட கொடுமைகளும் நடந்துள்ளன. சாதிய ஆணவப் படுகொலைகள் இடைவிடாமல் தொடர்கின்றன.
சொந்த மகனையும்- மகளையும் கூட படுகொலை செய்யும் அளவிற்கு சாதிய ஆணவம் கொண்ட பெற்றோர்களை, உறவினர்களை சாதிவெறி ஆட்டிப் படைக்கிறது. கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருந்தார்கள் என்ற காரணத்தால் கச்சநத்தம் கிராமத்தில் 3 தலித்துகள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். தீண்டாமைக் கொடூரத்தின் உச்சகட்ட மாக வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடுமை நாகரீக மனம் கொண்ட அனைவரை யும் தலைகுனியச் செய்துள்ளது.
மடை மாற்றப்படும் நிதி!
பொருளாதார ரீதியாகவும், பட்டியலின, பழங்குடியின மக்கள் கடும் தீண்டாமையை எதிர்கொள்கிறார்கள். பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் மற்றவர்களால் பறிக்கப்பட்டுள்ளன. அந்த நிலங்களை மீட்டு உரியவர்களுக்கு தருவதற்கு பல்வேறு தடைகள் நீடிக்கின்றன. பட்டியலின – பழங்குடி மக்களுக்கான துணைத்திட்டங்கள் ஒன்றிய ஆட்சியாளர்களால் நீர்த்துப் போகச் செய்யப்படுகின்றன. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வேறு திட்டங்களுக்கு மடைமாற்றி விடப்படுகிறது. பழங்குடி மக்கள் வனத்திலிருந்து விரட்டப்படுகிறார்கள்.
மலைவாழ் மக்களை பாதுகாப்பதற்காகவே, இடதுசாரிகளின் நிர்ப்பந்தத் தால் கொண்டு வரப்பட்ட வன உரிமைச் சட்டத்தை அமலாக்க ஆட்சியாளர் கள் மறுக்கிறார்கள். அதே வேளையில் ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள வன பாதுகாப்பு திருத்தச் சட்டம் காடுகளிலிருந்து பழங்குடி மக்களை அகதி களாக விரட்டுகிறது. நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தையும் பெரு முத லாளிகளுக்கு தாரை வார்க்கும் ஆட்சியாளர்கள் வனங்களையும் விட்டு வைக்க வில்லை. பழங்குடி மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியும் கொஞ்சம் கொஞ்சமாக சுருக்கப்படுகிறது. இத்தகைய நிலையில் சட்டமும் நீதியும் பட்டியலின, பழங்குடி யின மக்களுக்கு உரிய தீர்வுகளைத் தரும் விதத்தில் அமலாகவில்லை.
எத்தனை எத்தனை வழக்குகள்!
1990களில் தென் மாவட்டங்களில் நடந்த சாதிய மோதல்கள்- கலவரங் களுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் தலைமையிலான ஆணையம் அளித்த பரிந்துரைகள் இன்னும் அமலுக்கு வரவில்லை. பட்டியலினத்தவரை அர்ச்சகராக நியமித்தது செல்லாது என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட கீழ்க்கண்ட வழக்கு விவரங்களைப் பார்த்தாலே தீண்டாமைக் கொடுமையின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள முடியும். 2016-ஆம் ஆண்டு பட்டியல் சாதியினர் மீதான கொடுமைகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு கள் 40,801, பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் மீதான வழக்குகள் 6,568. ஆக மொத்தத்தில் 47,369 பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டு இவ்வழக்குகள் முறையே 50,900 மற்றும் 8,802. ஆக மொத்தத்தில் 59,702 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்படாத சம்பவங்கள் ஏராளம் ஏராளம்.
வர்ணாசிரம அதர்மம்!
நாகரிக உலகில் மனித மலத்தை மனிதனே அள்ளி சுத்தம் செய்யும் இழிநிலை இன்றும் நடந்து கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் மலக்குழி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 989 பேர் என்பதும், தமிழகத்தில் 55 பேர் என்பதும் மனிதத் தன்மையற்றதாகும். இத்தகைய சாதிவெறி கொடுமை களுக்கு, காலங்காலமாக நீடிக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பதுதான் ‘இந்துத்துவா தர்மம்’ என்று சொல்லப்படுகிற வர்ணாசிரம பயங்கரம். பெரும்பான்மையாக உள்ள உழைப்பாளி மக்களை பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் என்கிற உடமை வர்க்கத்தினர் அடக்கி ஆள்வதற்காக மனுசாத்திரத்தின் பேரில் உருவாக்கப்பட்டதே வர்ணாசிரம அதர்மம்.
பெரும்பான்மையாக உள்ள உழைப்பாளி மக்களை பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் என்கிற உடமை வர்க்கத்தினர் அடக்கி ஆள்வதற்காக மனுசாத்திரத்தின் பேரில் உருவாக்கப்பட்டதே வர்ணாசிரம அதர்மம். சூத்திரர்களையும், பஞ்சமர்களையும் இழிவுபடுத்தி யது மட்டுமின்றி மேலே சொன்ன 3 சாதியினருக் கும் அடிமைகளாக இருப்பதே இவர்களுக்கு தீர் மானிக்கப்பட்டுள்ள விதி என மனுஸ்மிருதி சட்டம் வகுத்தது. காலங்காலமாக இந்து மதத்தின் பேரில் இந்த சாதிய கட்டமைப்பு நீடித்து வருவதன் மூலம் தங்களது மேலாதிக்கத்தை உடைமை வர்க்கங்கள் நிலை நிறுத்தி வருகின்றன.
நொறுக்கப்பட வேண்டிய கட்டமைப்பு!
இந்திய சாதி அமைப்பு பற்றி 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மாமேதை காரல் மார்க்ஸ், “சமூக முன்னேற்றத்திற்கும், மக்கள் அதிகாரம் பெறுவதற் கும் சாதி அமைப்பு பெரும் தடையாக உள்ளது” எனக் குறிப்பிட்டார். வர்ணாசிரம அதர்மத்தை நியாயப் படுத்திய மனு ஸ்மிருதியின் போதனைகளைத்தான் இன்றைக்கு இந்தியாவில் ஆட்சி நடைமுறைக் கொள் கையாக மாற்றிட நரேந்திர மோடி தலைமையிலான மோடி அரசு முயற்சிக்கிறது. பிராமணர்கள், சத்திரியர் கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்ற நால்வருண அதர்மத்தை முன்னிறுத்தும் இவர்கள், ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்களை சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று ஒதுக்கி வைக்கிறார்கள்.
இந்த கொடிய கோட்பாடுகளின் விளைவாகத்தான் இன்றைக்கும் சாதியம் என்பது இந்திய சமூகத்தில் வலுவான ஒன்றாக, தகர்த்து நொறுக்கப்பட வேண்டிய தீமையாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் நிலவுடைமையாளர்கள், உழைப்பாளர்கள் என்ற வர்க்கப் பிரிவினை உருவான நேரத்தில் ‘வர்ணா சிரம தர்மம்’ என்ற நால்வருண முறையை புகுத்தி யுள்ளனர். எனவே, இந்திய சமூகத்தில் நிலவும் சாதியக் கொடுமைகள், சாதிய ஏற்றத்தாழ்வுகள் எதிர்த்த போராட்டமானது நிலவுடைமை மற்றும் முத லாளித்துவ எதிர்ப்பு போராட்டத்துடன் இணைக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
இருவரும் உழைப்பாளி வர்க்கமே!
இத்தகைய சாதிய அமைப்பு முறைக்கு எதிராக வரலாறு நெடுகிலும் எண்ணற்ற போராட்டங்கள், கிளர்ச்சிகள், எழுச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. அப்படிப்பட்ட போராட்டங்களின் விளைவாக, சாதிய அடுக்கின் மேல்தளத்தில் இருந்தவர்களிடமிருந்து நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங் களைச் சேர்ந்த மக்கள் கணிசமான உரிமைகளை யும், அதிகாரத்தையும் கைப்பற்ற முடிந்தது. இன்னும் கூட அது முழுமையடையவில்லை என்ற போதிலும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் குறிப்பிட்ட பல சமூகங்கள் இன்றைக்கு முன்னிலைக்கு வந் துள்ளன.
ஆனால், ஒரு காலத்தில் சாதிய அடுக்கின் காரணமாக அடிமைப்பட்டிருந்த இந்த பிற்படுத்தப் பட்ட சாதிகள், இன்றைக்கு தங்களுக்கு கீழே உள்ள ஒடுக்கப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை, ஒடுக்குமுறையை, தீண்டாமையை ஏவும் வண்ணம் கட்டமைக்கப்பட் டுள்ளார்கள். பிற்படுத்தப்பட்ட சாதிகளாக இருந்தா லும், பட்டியலின மக்களாக இருந்தாலும், இவர்கள் அனைவரும் அடிப்படையில் உழைப்பாளி வர்க்கமே. ஆனால், இவர்களுக்கு இடையே சாதிய வேற்று மையை வலுப்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியை வலு வாக அரங்கேற்றுகிறது மனு அதர்மமும் அதன் அடிப்படையிலான ஆர்எஸ்எஸ் – பாஜகவின் இந்துத்துவா கோட்பாடும்.
தமிழ்நாட்டில் தென் மாவட்டக் கலவரங்களின் போது, இதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. நீதிபதி மோகன் ஆணையத்தின் அறிக்கையின்படி, அந்தக் கலவரங்களின் போது, கொல்லப்பட்ட பட்டியலினத்தவர் 59 பேர்; பிற்படுத்தப்பட்டவர்கள் 27 பேர். இரு தரப்பு உழைப்பாளி மக்களும் சாதியின் பெயரால் மோதிக் கொண்டதால் சிந்திய ரத்தம் இது. இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, தீண்டாமைக்கு எதிராக, சாதிய வன்கொடுமை களுக்கு எதிராக, உழைப்பாளி மக்களின் ஒற்றுமையைக் கட்டமைக்க வேண்டிய அவசியம் இப்போதும் நீடிக்கிறது. ஆனால், உழைப்பாளி மக்கள் என்ற அடையாளத்துடன் சாதி வேறுபாடின்றி ஒன்றுபடுவதற்குப் பதிலாக ஒவ்வொரு சாதியையும் தனித்தனியாக தங்களது அரசியல் லாபத்திற்காக அணி திரட்டுவதும், அவர்களைத் தங்களுக்கு கீழே உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தூண்டி விடுவதும் போன்ற போக்கு அதிகரித்துள்ளது.
பட்டியலின மக்களின் ஒற்றுமை அவசியம்!
பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பல பிரிவுகள் இருந்தா லும் அந்த குறிப்பிட்ட சாதி என்ற அடிப்படையில் ஒருங்கிணைவது நடக்கிறது. ஆனால், அதே வேளை யில் பட்டியலின மக்களிடையே உள்ள பிரிவுகள் தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் கூட ஒன்றிணைந்து ஒரே குரலாக ஒலிக்காமல் பிரிந்து கிடக்கக்கூடிய நிலையும் உள்ளது. பட்டியலின மக்களிடையே ஒற்றுமையை சீர்குலைப்பதற்கும் அவர்களில் கணிசமானவர்களை திசை திருப்பி, அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு காரண மாக உள்ள – வர்ணாசிரம அதர்மத்தை தூக்கிப் பிடிக்கிற ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலிடமே கொண்டு போய்ச் சேர்க்கிற வேலையைக்கூட தமிழ்நாட்டில் சில சக்திகள் செய்து வருகின்றன. இதை முறியடித்து, பட்டியலின – பழங்குடி மக்களின் ஒற்றுமை; பிற்படுத்தப் பட்ட-பட்டியலின-பழங்குடி மக்களின் ஒற்றுமையைக் கட்டமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அதுமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத் தான தலைவர் தோழர் இஎம்எஸ். குறிப்பிட்டதைப் போல “இந்தியாவில் நவீன ஜனநாயக, மதச்சார் பற்ற கொள்கைகளை முன்னெடுக்க வேண்டிய ஒவ்வொருவரும் சாதி அடிப்படையிலான இந்து சமூகத் தையும், அதன் கலாச்சாரத்தையும் எதிர்த்து சமரசமற்ற போராட்டத்தை நடத்த வேண்டும். மேலும், ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்ட மானது சாதியை எதிர்த்த போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது” என கூறியுள்ளதை கவனத்தில் கொள்வதும் அவசியமாகும். கம்யூனிஸ்ட் இயக்கத் தின் மற்றொரு மகத்தான தலைவர் பி.டி.ரணதிவே அவர்கள் “அனைத்து வெகுமக்கள் அமைப்புகளும் தீண்டாமை, சாதிய ஒடுக்குமுறை, பழங்குடி மக்களுக் கான விடுதலை ஆகியவைகளில் தங்களது பிரதான கவனத்தை செலுத்துவதன் மூலமே ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க முடியும்” என குறிப்பிட்டார்.
விழுப்புரம் மாநாடு
இத்தகைய பின்னணியில்தான் தமிழ்நாட்டில் பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைக் குரலை மேலும் வலுப்படுத்தும் விதமாக விழுப் புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே 16 அன்று மாபெரும் சிறப்பு மாநாட்டினை நடத்துகிறது. இந்த மாநாட்டில் சாதிய ஆணவப் படுகொலை களை தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வரவேண் டும் என்பது உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம். சாதி ஆணவ படுகொலைகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் மிக மோசமான சூழல் நிலவுகிறது. தொடர் படு கொலைகள் அரங்கேறுகின்றன.
எனவேதான் அத்தகைய படுகொலைகளில் ஈடுபடுவோரை தண்டனைக்குள்ளாக்குவது மட்டுமல்ல, அதன் பின்னணியில் இருந்தவர்கள், தூண்டிவிட்டவர்கள் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் ஓர் ஒருங்கிணைந்த சட்டமாக சிறப்புச் சட்டம் அமைய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இத்தகைய கோரிக்கைகளோடு நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்துக் கட்சிகளின் தலைவர் களும் பங்கேற்கிறார்கள். உழைப்பாளி வர்க்கமான பட்டியலின, பழங்குடி மக்களின் உரிமைகளை நிலை நாட்ட, தமிழ்நாட்டின் அனைத்து பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் வர்க்க ஒற்றுமையைப் பறைசாற்ற, தீண்டாமைக் கொடுமைகளை வேரறுக்க, தமிழகத்தையே சமத்துவபுரமாக மாற்றிட சபதமேற்கும் இந்த மாநாட்டில் ஆயிரமாயிரமாய் அணி திரள்வீர்.
The post ‘’தமிழ்நாட்டையே சமத்துவபுரம் ஆக்குவோம்..!” கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.
]]>