Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#மணிப்பூர் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Thu, 10 Aug 2023 04:43:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’இரட்டை இன்­ஜின் அரசு – இரட்டை பேர­ழிவு அரசு..!’’ மோடி அரசை விளாசிய கனிமொழி எம்பி., https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%259c%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0/#respond Thu, 10 Aug 2023 04:43:10 +0000 https://madrasmurasu.com/?p=5898 ‘‘சாமா­னி­யர்­க­ளின் கோபத்­தால் சரிந்த பாண்­டி­யன் செங்­கோ­லைப் பற்றி அறி­வீர்­களா? தேசத்­தின் அனைத்து மக்­க­ளை­யும் ஒன்­றாக மதிக்­கத் தெரி­யாத நீங்­கள் தேசிய­வா­தி­களா?’’ என்று நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யில் திமுக குழுத் தலை­வர் கனிமொழி கரு­ணா­நிதி மத்திய அரசை கடு­மை­யாக சாடி­ பேசினார். பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான மத்திய அர­சுக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்பிக்கை இல்லா தீர்­மா­னத்­தின் மீது நாடா­ளு­மன்ற தி.மு.க. குழு துணைத் தலை­வர் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. பேசி­ய­தா­வது : “இந்த சுதந்­தி­ரம் நம் மீது பெரும் பொறுப்­பு­களை […]

The post ’’இரட்டை இன்­ஜின் அரசு – இரட்டை பேர­ழிவு அரசு..!’’ மோடி அரசை விளாசிய கனிமொழி எம்பி., first appeared on Madras Murasu.

]]>
‘‘சாமா­னி­யர்­க­ளின் கோபத்­தால் சரிந்த பாண்­டி­யன் செங்­கோ­லைப் பற்றி அறி­வீர்­களா? தேசத்­தின் அனைத்து மக்­க­ளை­யும் ஒன்­றாக மதிக்­கத் தெரி­யாத நீங்­கள் தேசிய­வா­தி­களா?’’ என்று நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யில் திமுக குழுத் தலை­வர் கனிமொழி கரு­ணா­நிதி மத்திய அரசை கடு­மை­யாக சாடி­ பேசினார்.

பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான மத்திய அர­சுக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்பிக்கை இல்லா தீர்­மா­னத்­தின் மீது நாடா­ளு­மன்ற தி.மு.க. குழு துணைத் தலை­வர் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. பேசி­ய­தா­வது :

“இந்த சுதந்­தி­ரம் நம் மீது பெரும் பொறுப்­பு­களை சுமத்­தி­விட்­டுச் சென்­றுள்­ளது. ஏதே­னும் தவறு நேர்ந்­தால் இதற்கு பிரிட்­டீஷ் ஆட்­சி­யா­ளர்­கள் கார­ண­மா­க­மாட்­டார்­கள் என்ற டாக்­டர் பாபா­சா­கிப் அம்­பேத்­க­ரின் கருத்­து­டன் இந்த உரையை தொடங்­கு­கி­றேன். இந்த நம்­பிக்கை இல்லா தீர்­மா­னத்தை தி.மு.க. சார்­பா­க­வும், நான் சார்ந்த இந்­தியா கூட்­டணி சார்­பா­க­வும் ஆத­ரிக்­கி­றேன்.

ஒரு மாநி­லத்­தைக் காப்­பாற்ற நீதித்­துறை தலை­யிட வேண்­டி­யி­ருக்­கி­றது. இது ஒன்­றிய அர­சுக்கு வெட்­கக் கேடான செயல் இல்­லையா? ஒன்­றி­யத்­தி­லும் பாஜக அரசு மாநி­லத்­தி­லும் பாஜக அரசு என்­பதை டபுள் இன்­ஜின் அரசு என்று சொல்­லிக் கொள்­ளும் பாஜக இதை மணிப்­பூ­ரி­லும் சொல்லி பெரு­மைப்­ப­டுக் கொண்­டது. ஆனால், இந்த டபுள் இன்­ஜின் அரசு டபுள் எட்­ஜுடு அதா­வது இரு முனை­யி­லும் கூரான ஆயு­த­மாக மணிப்­பூரை தாக்­கிக் கொண்­டி­ருக்­கி­றது. அது­மட்­டு­மல்ல இரட்­டைப் பேர­ழிவு, இரட்டை முடக்­கம் என்ற நிலை­யில் மணிப்­பூ­ரைக் கொண்டு சென்­றி­ருக்­கி­றது.

வெளி­நாட்டு சுற்­றுப் பய­ணத்தை முடித்­து­விட்டு திரும்­பிய பிர­த­மர் மோடி அரி­தான நிகழ்­வாக நாடா­ளு­மன்­றத்­துக்கு வெளியே செய்­தி­யா­ளர்­களை சந்­தித்­தார். ஆனால் நாடா­ளு­மன்­றத்­துக்கு உள்ளே வந்து மதிப்­புக்­கு­ரிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் முன்­னி­லை­யில் பேச மறுக்­கி­றார்.

மூத்த தலை­வர் யஷ்­வந்த் சின்ஹா அவர்­கள் நேற்று முன் தினம் எழு­திய கட்­டு­ரை­யில் ஜன­நா­ய­கம் என்­பது நாடா­ளு­மன்­றக் கட்­டி­டத்­தின் அழ­கால் வரை­ய­றுக்­கப்­ப­டு­வ­தில்லை… தேசத்­தின் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­களை நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திப்­ப­தில்­தான் ஜன­நா­ய­கத்­தின் தரம் இருக்­கி­றது என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

’இந்­தியா’ கூட்­டணி இதற்­கா­கத்­தான் மணிப்­பூர் பற்றி நாடா­ளு­மன்­றத்­தில் விவா­தம் நடத்த வேண்­டும் என்று அழைப்பு விடுத்­தது. பாஜக அதை எதிர்க்­கி­றது.

மணிப்­பூ­ரில் 170 பேர் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் காய­ம­டைந்­தி­ருக்­கி­றார்­கள். அறு­ப­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் தங்­கள் இருப்­பி­டங்­க­ளில் இருந்து இடம் பெயர்ந்­தி­ ருக்­கி­றார்­கள். 3500 வீடு­கள் எரிக்­கப்­பட்­டு­விட்­டன. இரு தரப்­பி­லும் மக்­கள் கொடூ­ர­மாக கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்­கள், பெண்­கள் பாலி­யல் வன்­மு­றைக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.

மூன்று மாதங்­க­ளாக நடக்­கும் இந்த கல­வ­ரத்தை ஏன் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை என்று மணிப்­பூர் மாநில முதல்­வ­ரி­டம் கேட்­டால், ‘இரண்டு சகோ­த­ரர்­கள் சண்­டை­யிட்­டுக் கொள்­கி­றார்­கள். அரசு தந்­தையை போல செயல்­பட்டு இரு­த­ரப்­புக்­கும் இடையே பேசிக் கொண்­டி­ருக்­கி­றது’ என்­கி­றார். இப்­படி சொல்­வ­தற்கு உங்­க­ளுக்கு வெட்­க­மாக இல்­லையா?

மணிப்­பூர் மாநி­லம் பொது­மக்­கள்-­போ­லீஸ் விகி­தத்­தில் இந்­தி­யா­வி­லேயே உயர்ந்த நிலை­யில் இருக்­கி­றது. 161 மத்­திய கம்­பெனி போலீ­சார், அசாம் ரைபிள் படை­யி­னர் உட்­பட மணிப்­பூ­ரில் இருக்­கி­றார்­கள். ஆனா­லும் அரசு மக்­க­ளைக் காப்­பாற்­றத் தவ­ற­விட்­டது. பிர­த­ம­ரின் மவு­ன­மும், மணிப்­பூர் அர­சின் செய­லற்ற தன்­மை­யும் மணிப்­பூ­ரில் வீடு­கள் எரிக்­கப்­ப­ட­வும், போலீ­ஸாரே சூறை­யா­ட­லில் ஈடு­ப­டு­வ­தை­யும், மக்­களே ஒரு­வரை ஒரு­வர் அடித்­துக் கொண்டு சாவ­தை­யும் தொட­ரச்செய்­தி­ருக்­கி­றது. பெண்­களை ஆணவஅணி­வ­குப்பு நடத்தி பாலி­யல் வன்­மு­றைக்கு ஆளாக்­கி­யி­ருக்­கி­றது.

இந்த டபுள் இன்­ஜின் அரசு கைக­ளைக் கட்­டிக் கொண்டு சகோ­த­ரர்­கள் சண்­டை­யி­டுவதைப் பார்த்­துக் கொண்டே இருந்­தி­ருக்­கி­றது.

மணிப்­பூ­ரில் இரு பெண்­கள் பாலி­யல் வன்­மு­றைக்கு ஆளாக்­கப்­பட்டு நிர்­வா­ண­மாக இழுத்­துச் செல்­லப்­பட்ட அந்த வீடி­யோ­தான் தேசத்­தின் மன­சாட்­சி­யை­யும் உல­கத்­தின் மன­சாட்­சி­யை­யும் ஒரு சேர உலுக்­கி­யது. 21 வயது இளம்­பெண்­ணின் தந்­தை­யும், சகோ­த­ர­ரும் அவ­ளைக் காப்­பாற்ற போரா­டி­ய­போது கொல்­லப்­பட்­ட­னர். வன்­முறை கும்­பல் அந்த குடும்­பத்தை பிடித்­த­போது அந்த குடும்­பத்­தி­னர் அங்­கி­ருந்த போலீஸ் ஜிப்­சியை நோக்கி ஓடி­யி­ருக்­கி­றார்­கள். அவர்­கள் போலீஸ்­கா­ரர்­க­ளி­டம், ‘எங்­களை போலீஸ் ஜிப்­சி­யில் ஏற்றி எங்­கா­வது பாது­காப்­பான இடத்­தில் கொண்டு போய் விட்­டு­வி­டுங்­கள்’ என்று பிச்­சை­யெ­டுப்­ப­தைப் போல போலீ­சா­ரி­டம் கெஞ்­சி­யி­ருக்­கி­றார்­கள். ஆனால் போலீஸ் அந்த குடும்­பத்­தி­ன­ருக்கு உதவ மறுத்­து­விட்­டது. மாறாக அந்த பெண்ணை வன்­முறை கும்­ப­லி­டமே ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றது போலீஸ். அதன் பிற­கு­தான் அந்த பெண்­ணின் தந்­தை­யும் கொல்­லப்­பட்­டார், சகோ­த­ரும் கொல்­லப்­பட்­டார்.

The post ’’இரட்டை இன்­ஜின் அரசு – இரட்டை பேர­ழிவு அரசு..!’’ மோடி அரசை விளாசிய கனிமொழி எம்பி., first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0/feed/ 0
‘’பெண்கள் பாதுகாப்பு என்று கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே..?” அமைச்சர் பெ.கீதாஜீவன் https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/#respond Fri, 21 Jul 2023 10:07:38 +0000 https://madrasmurasu.com/?p=5513 சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் அறிக்கை: இதயம் உள்ள எவராக இருந்தாலும் மணிப்பூர் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரத்தை வெளிப்படுத்திய வீடியோ காட்சிகளைத் தொடர்ந்து பார்க்க முடியாது. அந்தளவுக்கு நெஞ்சத்தை உலுக்கி எடுக்கிறது. ஒரு பெண்ணாக, இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலைக் கண்டு பதறுகிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன். மணிப்பூரில் வாழும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, மதவெறியைத் தூண்டி, மாநிலத்தை கலவரக் காடாக்கி, ரத்த ஆறு ஓடும்படி செய்திருக்கின்றன மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசும், ஒன்றிய பா.ஜ.க […]

The post ‘’பெண்கள் பாதுகாப்பு என்று கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே..?” அமைச்சர் பெ.கீதாஜீவன் first appeared on Madras Murasu.

]]>
சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் அறிக்கை:

இதயம் உள்ள எவராக இருந்தாலும் மணிப்பூர் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரத்தை வெளிப்படுத்திய வீடியோ காட்சிகளைத் தொடர்ந்து பார்க்க முடியாது. அந்தளவுக்கு நெஞ்சத்தை உலுக்கி எடுக்கிறது. ஒரு பெண்ணாக, இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலைக் கண்டு பதறுகிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மணிப்பூரில் வாழும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, மதவெறியைத் தூண்டி, மாநிலத்தை கலவரக் காடாக்கி, ரத்த ஆறு ஓடும்படி செய்திருக்கின்றன மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசும், ஒன்றிய பா.ஜ.க அரசும்!

மூன்று மாதங்களாக மணிப்பூரில் கலவரம் பற்றி எரியும் நிலையில், நாட்டின் பிரதமர் அந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. உண்மை நிலவரம், எத்தனை கொடூரமாக இருக்கிறது என்பதைத் தொடர்ந்து வெளியாகும் வீடியோ காட்சிகள் வெளிப்படுத்தி வரும் நிலையில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் நாளில் செய்தியாளர்களிடம் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

Better late than never என்பது போல இனியாவது உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுகுறித்து பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் அனுமதி மறுக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இந்நிலையில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு, நட்டு வைக்கப்பட்டிருக்கும் கொடூரமும் வெளிப்பட்டுள்ளது.

இத்தகைய கொடூரங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, மணிப்பூர் மாநில பா.ஜ.க. முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, இது போல பல நிகழ்வுகள் நடந்துள்ளன. எத்தனை வழக்குகள் பதிவு செய்வது என்று மனிதாபிமானமற்ற முறையில் அலட்சியத்துடன் பதிலளித்திருக்கிறார். பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் மணிப்பூரில் நிலவுகிறது. இதுபோன்ற கொடூர நிகழ்வுகளில் பெண்களின் நம்பிக்கையும் பாதுகாப்பும், தேசிய மகளிர் ஆணையம்தான்.

மேடைகளில் பேசுபவர்கள், ஊடகங்களில் விவாதிப்பவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் உள்ளிட்டோர் பொதுவான முறையில் பெண்களைக் குறித்துப் பேசினாலும், தனிப்பட்ட முறையில் விமர்சித்தாலும் உடனடியாக, தானாக முன்வந்து அதனை விசாரிக்கிறது தேசிய மகளிர் ஆணையம். இதுவும் அதன் கடமைதான்.

பேசுவதற்கே இத்தனை கடமையுணர்ச்சியுடனான செயல்பாடு என்றால், மணிப்பூரில் மாதக்கணக்கில் பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரப் பாலியல் தாக்குதல் மீதான நடவடிக்கை என்ன? இத்தனை நாளாக கண்டும் காணாதுதுமாக இருந்தது ஏன்?

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு, பெண்கள் பாதுகாப்பு என்று கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே போனார்? பா.ஜ.க.விலும் மகளிர் பிரிவு இருக்கிறது. அதன் தேசிய அளவிலான தலைவராக இருக்கக்கூடியவர் என்ன செய்து கொண்டிருந்தார்?

நாட்டில் வாழும் அத்தனைப் பெண்களின் நெஞ்சிலும், தங்களால் இனி பாதுகாப்பாக வாழ முடியுமா என்ற அச்ச உணர்வை விதைத்திருக்கின்றன மணிப்பூர் கொடூர நிகழ்வுகள். ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் நலனைக் கருதியும், மணிப்பூர் மாநிலப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் தேசிய மகளிர் ஆணையம் தன் கண்களைத் திறந்து பார்த்து, கடமையை விரைந்து மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கையில் கூறியுள்ளார்.

The post ‘’பெண்கள் பாதுகாப்பு என்று கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே..?” அமைச்சர் பெ.கீதாஜீவன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
’’மணிப்பூரில் கடுமையான நடவடிக்கை தேவை..!’’ தலைமை நீதிபதி சந்திரசூட் https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25a8 https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8/#respond Fri, 21 Jul 2023 07:57:17 +0000 https://madrasmurasu.com/?p=5494 மணிப்பூர் மாநிலத்தில் கலவரக்காரர்களிடமிருந்து தப்பிய ஒரு குடும்பத்தில் இரண்டு ஆண்கள் கொலை செய்யப்பட்டு, 3 இளம் பெண்களை ஆடைகளின்றி அடித்து இழுத்துச்சென்று வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் காட்சிப் பதிவுகளாக பரவி மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை தெரிவித்துள்ளார். அரசுக்குக் கால அவகாசம்..! தலைமை நீதிபதி சந்திரசூட், ”இந்தக் காட்சி மிகவும் கொடூரமானது. அரசு இதுபோன்ற வன்முறைகளைத் தடுக்க மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்க […]

The post ’’மணிப்பூரில் கடுமையான நடவடிக்கை தேவை..!’’ தலைமை நீதிபதி சந்திரசூட் first appeared on Madras Murasu.

]]>
மணிப்பூர் மாநிலத்தில் கலவரக்காரர்களிடமிருந்து தப்பிய ஒரு குடும்பத்தில் இரண்டு ஆண்கள் கொலை செய்யப்பட்டு, 3 இளம் பெண்களை ஆடைகளின்றி அடித்து இழுத்துச்சென்று வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் காட்சிப் பதிவுகளாக பரவி மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை தெரிவித்துள்ளார்.

அரசுக்குக் கால அவகாசம்..!

தலைமை நீதிபதி சந்திரசூட், ”இந்தக் காட்சி மிகவும் கொடூரமானது. அரசு இதுபோன்ற வன்முறைகளைத் தடுக்க மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். ஒன்றிய மற்றும் மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையினை அடுத்த வெள்ளிக்கிழமைக்-குள் (28.7.2023) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்தக் காணொலி என்னை மிகவும் பாதித்துவிட்டது. நாங்கள் கவலையடைந்துள்ளோம்.

அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்குப் பதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. குற்றவாளிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ஊடகங்களில் இந்தக் காட்சிகள் பகிரப்படுவது வேதனை அளிக்கிறது. ஒன்றிய அரசுக்குக் கால அவகாசம் தருகிறோம். அப்போதும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்தால், மணிப்பூர் தொடர்பான முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டி இருக்கும்” என்றும் குறிப்பிட்டார்.

ராகுல்காந்தி..!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: “மணிப்பூரில் மனிதம் மாண்டு விட்டது. மோடி அரசும், பா.ஜ.க.வும் ஜன நாயகத்தையும், சட்டத்தையும் வன்முறை வெறி ஆட்டமாக மாற்றி உள்ளனர். பிரதமர் மோடியின் ஆழ்ந்த அமைதியை இந்தியா மறக்காது, மன்னிக்காது. இப்போதும் அடுத்தவர்கள் மீது குற்றம் சுமத்தாமல் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களுக்கு எடுத் துரைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வு தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் முடிவு செய்துள்ளனர். பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி: “பிரதமரின் அமைதி மற்றும் செயலற்றத் தன்மைதான் மணிப்பூரை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்தியா அமைதியாக காக்காது. மணிப்பூர் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம். சமாதானம் ஒன்றே முன்னோக்கி செல்லும் வழி” என்று தெரிவித்துள்ளார்.

The post ’’மணிப்பூரில் கடுமையான நடவடிக்கை தேவை..!’’ தலைமை நீதிபதி சந்திரசூட் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8/feed/ 0
’’மணிப்பூர் இரட்டை எஞ்சின் கொடூரம்..!’’ கே.பாலகிருஷ்ணன் https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%258e%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/#respond Fri, 21 Jul 2023 06:27:39 +0000 https://madrasmurasu.com/?p=5478 மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: மணிப்பூர் மாநிலத்தில், வன்முறைக் கும்பலால் பழங்குடி பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கும், வல்லுறவுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன் குற்றத்தை தடுக்க முயன்ற தந்தையும், சகோதரரும் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். எவரையும் பதைபதைக்கச் செய்யும் இந்தக் கொடூரம் காணொளியாக வெளியாகி காண்போரை மனம் கொந்தளிக்கச் செய்துள்ளது. இப்போது வரை குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை பயன்படுத்தி வெறுப்பு அரசியலை வேகப்படுத்தும் பாஜகவிற்கு எதிராக அனைத்து மக்களும் கண்டனக் குரல் […]

The post ’’மணிப்பூர் இரட்டை எஞ்சின் கொடூரம்..!’’ கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.

]]>
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மணிப்பூர் மாநிலத்தில், வன்முறைக் கும்பலால் பழங்குடி பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கும், வல்லுறவுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன் குற்றத்தை தடுக்க முயன்ற தந்தையும், சகோதரரும் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். எவரையும் பதைபதைக்கச் செய்யும் இந்தக் கொடூரம் காணொளியாக வெளியாகி காண்போரை மனம் கொந்தளிக்கச் செய்துள்ளது. இப்போது வரை குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை பயன்படுத்தி வெறுப்பு அரசியலை வேகப்படுத்தும் பாஜகவிற்கு எதிராக அனைத்து மக்களும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென சி.பி.ஐ(எம்) அறைகூவி அழைக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மே 3 ஆம் தேதி வன்முறைகள் தொடங்கின. மே 4 ஆம் தேதியன்றே பல்வேறு இடங்களில் பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் வல்லுறவு மற்றும் கும்பல் கொலைகளும் நடந்தேறியுள்ளன. இதுவரை அந்த மாநிலத்தில் 160க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றுள்ளனர்; சுமார் 50 ஆயிரம் பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் சூறையாடப்பட்டுள்ளன.  இந்தக் கொடூரங்களை கண்டித்து பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும், பாஜக மாநில அரசு பதவி விலக வேண்டும்; உடனடியாக அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென எதிர் கட்சிகள் பலமுறை வலியுறுத்தின.

ஆனால், பிரதமர் மோடியோ கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டினார், மணிப்பூரின் மக்கள் பிரதிநிதிகள் அவரை சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்த போதிலும், அவர்களைச் சந்திப்பதை தவிர்த்துவிட்டு அமெரிக்காவிற்கு பயணப்பட்டார், வந்தே பாரத் ரயில்களுக்கு கொடியசைத்து பகட்டான விழாக்களை நடத்தினார், பிறகு பிரான்சு நாட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது நாடாளுமன்ற கூட்டம் நடக்கவுள்ள சூழலில் மணிப்பூரின் கொடூர நிலைமை பற்றிய வீடியோ வெளியாகியது. இந்த சூழலிலேயே இரண்டரை மாதங்களுக்கு பின் பிரதமர் வாய் திறந்து பேசியிருக்கிறார்.

இப்போது வெளியாகியிருக்கும் காணொளி கடந்த மே மாதம் 4 ஆம் தேதி பதிவானதாகும். இந்த சம்பவம் தொடர்பாக மே 18 ஆம் தேதியே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் குற்றமிழைத்த எவருடைய பெயரும் அதில் இடம்பெறவில்லை. அங்கு நடைபெற்றுவரும் கொடூரங்கள் எதுவும் அரசு நிர்வாகத்திற்கு தெரியாமலில்லை. சூழலை விளக்குவதற்காக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்த மக்கள் பிரதிநிதிகளிடம் பேச மறுத்துவிட்டார்.

சி.பி.ஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் உண்மை நிலையை விசாரித்து வெளிப்படுத்தினார்கள். அதில் பாஜக/ஆர்.எஸ்.எஸ் வெறுப்பு அரசியல் திட்டம் எந்த அளவுக்கு மக்களை மோதிக்கொள்ளச் செய்திருக்கிறது என்பது வெளிப்படையாக தெரியவந்தது. எல்லாவற்றையும் பாராமுகமாக கடந்து சென்ற பிரதமர், மூடி மறைக்க முயன்ற கொடூரத்தில் ஒரு சிறு பகுதி அம்பலப்பட்டுவிட்டதே என்ற அதிர்ச்சியில்தான் இப்போது பேசியுள்ளார். இதன் பின்னரும் கூட மணிப்பூர் மக்களுக்கு அமைதியான சூழலை உறுதி செய்து, வாழ்வாதாரங்களை மறுகட்டமைக்க எந்த உருப்படியான முயற்சியும் பாஜக/ஆர்.எஸ்.எஸ் அரசால் முன்னெடுக்கப்படவில்லை.

மணிப்பூரில் உள்ள மாநில பாஜக அரசு, பதவியில் நீடித்திருக்க எள்ளளவும் அருகதையாற்றதாகும். இதுவரை நடந்துள்ள கொடூரங்களுக்கு மணிப்பூர் முதலமைச்சரும், பிரதமர் மோடியுமே பொறுப்பேற்க வேண்டும். இப்படிப்பட்ட இரட்டை எஞ்சின் கொடூரத்திற்கு எதிராக ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் குரல்கொடுக்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. ஜனநாயக இயக்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை ஆதரித்து, வெறுப்பு அரசியலுக்கு எதிரான உறுதியை வெளிப்படுத்த வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்.

The post ’’மணிப்பூர் இரட்டை எஞ்சின் கொடூரம்..!’’ கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/ 0
’’மணிப்பூரில் பெண்களுக்கு நடந்தது கொடிய குற்றங்கள்..!’’ டாக்டர் அன்புமணி https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/#respond Thu, 20 Jul 2023 12:06:36 +0000 https://madrasmurasu.com/?p=5459 பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஒரு வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும், ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார். நாகரிகத்தின் கால் தடம் கூட பதியாத பகுதிகளில் கூட இத்தகைய […]

The post ’’மணிப்பூரில் பெண்களுக்கு நடந்தது கொடிய குற்றங்கள்..!’’ டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.

]]>
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஒரு வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும், ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார். நாகரிகத்தின் கால் தடம் கூட பதியாத பகுதிகளில் கூட இத்தகைய கொடுமைகள் அரங்கேற்றப்பட்டிருக்காது. மணிப்பூரில் நடந்த இந்த கொடிய குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரானவை; மனிதர்கள் அனைவரையும் தலைகுனியச் செய்பவை.

மே மாதம் 4-ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு 35 கி.மீ தொலைவில் நடந்த இந்த குற்றங்கள் இப்போது காணொலியாக வெளியாகியிருப்பதன் மூலம் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களும், கொல்லப்பட்ட இளைஞர்களும் எந்த குற்றமும் செய்யவில்லை. கலவரத்தில் தொடர்புடைய இன்னொரு பிரிவினரால் ஆயுதங்களுடன் சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்திலிருந்து தப்பிச் சென்றது தான் அவர்கள் செய்த குற்றம் ஆகும். இப்படி ஒரு குற்றம் நடந்ததே இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான் உலகிற்கு தெரிகிறது என்றால், அங்கு சட்டம் ஒழுங்கு நிலைமை எவ்வளவு மோசமடைந்திருக்கிறது என்பதை உணரலாம்.

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெடித்த கலவரம் உடனடியாக கட்டுப்படுத்தப்படாதது தான் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைவதற்கு காரணம் ஆகும். இதற்கு காரணமாக குற்றவாளிகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக மணிப்பூரில் நடைபெறும் கலவரங்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களின் அச்சம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்க உளவியல் கலந்தாய்வுகளும் வழங்கப்பட வேண்டும்.

The post ’’மணிப்பூரில் பெண்களுக்கு நடந்தது கொடிய குற்றங்கள்..!’’ டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/feed/ 0
”நமது கூட்டு மனசாட்சி எங்கே போனது?” மணிப்பூர் வன்முறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%258e%25e0%25ae%2599%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d/#respond Thu, 20 Jul 2023 08:49:44 +0000 https://madrasmurasu.com/?p=5449 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு: மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையால் முற்றிலும் மனமுடைந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளேன். நமது கூட்டு மனசாட்சி எங்கே போனது? வெறுப்புணர்ச்சியும் நச்சும் மனிதத்தன்மையின் ஆன்மாவையே அசைத்துப் பார்க்கின்றன. இதுபோன்ற கொடுஞ்சியல்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இரக்கமும், மரியாதையும் கொண்ட ஒரு சமூகத்தை வளர்த்தெடுப்பதை நோக்கிப் பணியாற்ற வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.

The post ”நமது கூட்டு மனசாட்சி எங்கே போனது?” மணிப்பூர் வன்முறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு:

மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையால்
முற்றிலும் மனமுடைந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளேன்.

நமது கூட்டு மனசாட்சி எங்கே போனது? வெறுப்புணர்ச்சியும் நச்சும் மனிதத்தன்மையின் ஆன்மாவையே அசைத்துப் பார்க்கின்றன.

இதுபோன்ற கொடுஞ்சியல்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இரக்கமும், மரியாதையும் கொண்ட ஒரு சமூகத்தை வளர்த்தெடுப்பதை நோக்கிப் பணியாற்ற வேண்டும்.

மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்
ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.

The post ”நமது கூட்டு மனசாட்சி எங்கே போனது?” மணிப்பூர் வன்முறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d/feed/ 0