acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல; தேர்வுகளை நடத்துவதிலும் டிஎன்பிஎஸ்சி செயல்திறன் இன்மை..! டாக்டர் அன்புமணி குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.
]]>பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசுத் துறைகளில் தொகுதி 2, 2 ஏ பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் இன்று வரையிலும் வெளியிடப்படவில்லை. தமிழக அரசின் முக்கியப் பணிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது ஆகும்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இரண்டாம் தொகுதி பணியிடங்கள் 121, தொகுதி 2ஏ பணியிடங்கள் 5097 ஆகியவற்றை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அத்தேர்வுகளில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்த 11.78 லட்சம் பேரில், 9.94 லட்சம் பேர் கடந்த ஆண்டு மே மாதம் 21-ஆம் நாள் நடத்தப்பட்ட முதனிலைத் தேர்வை எழுதினார்கள். அவர்களில் இருந்து ஒரு பணிக்கு 10 பேர் வீதம் 52,180 பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த பிப்ரவரி 25-ஆம் நாள் நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வுகளை அவர்களில் பெரும்பான்மையினர் எழுதினர். அத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப் படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 மாதங்களாகியும் இன்று வரை வெளியிடப்படவில்லை.
தொகுதி 2, 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை 9 மாதங்களாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. முதன்மைத் தேர்வை எழுதியவர்கள் வெறும் 52,000 பேர் மட்டும் தான். முதன்மைத் தேர்வில் ஒவ்வொரு போட்டியாளரும் 2 தாள்களை எழுத வேண்டும்; அதன்படி மொத்தம் 1.04 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டும். அவை அனைத்தும் இரண்டே வகைப்பட்டவை தான். அவற்றை மிக எளிதாக திருத்தி விட முடியும். ஆனாலும், அப்பணியை அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்யவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2 பணிகளுக்கு முதன்மைத் தேர்வு நடத்தி 7 மாதங்கள் கழித்து கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தான், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை நடத்தியது. அந்தத் தேர்வுகளில் 14,624 தேர்வர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் 9 தாள்களை எழுதினார்கள். அதன்படி, மொத்தம் 1 லட்சத்து 34,616 தாள்கள் திருத்தப்பட வேண்டும். அந்த தாள்கள் மொத்தம் 4 வகையானவை. அனைத்துத் தாள்களையும் அக்டோபர் மாதத்தில் திருத்தி கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முடிவை அறிவித்திருக்கிறது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஆனால், அதைவிட குறைவான பணிச்சுமை கொண்ட தொகுதி 2 முதன்மைத் தேர்வுகளின் முடிவுகளை 9 மாதங்களாகியும் வெளியிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். இதிலிருந்தே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாட்டு வேகத்தை மக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல; தேர்வுகளை நடத்துவதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் செயல்திறன் இன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. கடந்த பிப்ரவரி 25 ஆம் நாள் நடைபெற்ற முதன்மைத் தேர்வுகளின் போது, பெரும்பான்மையான மையங்களில் மிகவும் தாமதமாக தேர்வு தொடங்கப்பட்டதுடன், பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குழப்பம், மன உளைச்சலால் பல தேர்வர்கள் சரியாக தேர்வு எழுத முடியவில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை பொழுதுபோக்குக்காக எழுதுவதில்லை. அதில் தான் தங்களின் எதிர்காலம் இருப்பதை உணர்ந்து பல ஆண்டுகள் உழைத்து தேர்வுக்கு தயாராகின்றனர். அந்தத் தேர்வுகளை நடத்துவதிலும், முடிவுகளை வெளியிடுவதிலும் செய்யப்படும் தாமதமும், குளறுபடிகளும் தேர்வர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.
இந்தியாவின் மிகக் கடுமையான குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எந்தக் குழப்பமுமின்றி 10 மாதங்களில் நடத்தி முடிவை வெளியிடுகிறது. ஆனால், நான்காம் தொகுதி தேர்வுகளை நடத்தி முடிக்க இரு ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அறிவிக்கப்பட்டு 21 மாதங்களாகியும் தொகுதி 2 தேர்வு நடைமுறைகளை முடிக்க வில்லை. கண்ணுக்குத் தெரியக் கூடிய இக்குறைகளை ஆணையம் சரி செய்து கொள்ள வேண்டும்.
தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொகுதி 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில், தொகுதி 1, தொகுதி 2, 2ஏ ஆகிய தேர்வுகளை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 10 மாதங்களுக்குள்ளாகவும், பிற தேர்வுகளை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களிலும் நடத்தி முடித்து, முடிவுகளை வெளியிட பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post ’’முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல; தேர்வுகளை நடத்துவதிலும் டிஎன்பிஎஸ்சி செயல்திறன் இன்மை..! டாக்டர் அன்புமணி குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.
]]>The post ’’போட்டித் தேர்வில் இனி ஈசியா பாஸ் ஆகலாம்..!’’ தனியார் கோச்சிங் செண்டர்களுக்கு செல்ல வேண்டம் first appeared on Madras Murasu.
]]>இந்த வினாக்கள் அனைத்தும் 21 பாடங்களில் 293 நுண் தலைப்புகளில் (Micro topics) வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடத்தில் உடனடியாக பயிற்சி செய்யும் விதமாக Study mode, Practice mode, Mock test ஆகிய மூன்று விதங்களில் இந்த வினாக்களை பயிற்சி செய்து தங்களது தேர்வு தயாரிப்பை மேம்படுத்திக் கொள்ளலாம். Practice mode, Mock test ஆகியவற்றில் பிறர் போட்டித் தேர்வு மாணவர்களுடன் தங்களது கற்றல் நிலை எந்த நிலையில் உள்ளது என்பதை ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாணவரும் தங்களது கற்றல் முன்னேற்றத்தை பார்த்துக் கொள்வதற்கான Progress Report வழங்கப்பட்டுள்ளது.
எந்த மாணவர் எந்தப் பாடம் படித்துக் கொண்டு இருந்தாலும் அந்தப் பாடத்தில் இருக்கும் வினாக்களைத் தேடி எடுத்து பயிற்சி செய்வதற்கான சிறப்பான தேடுதல் வசதி (Searching ) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் மின்னணு கற்றல் மேலாண்மை முறை அனைத்து பொது நூலக வாசகர்களுக்கும் விரிவு செய்யப்படுகிறது.
இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள போட்டித் தேர்வு மாணவர்கள் அணுக வேண்டிய இணையதளம் மற்றும் இணையதளத்தில் பதிவு செய்வதற்காக இணைப்புகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன https://elms.annacentenarylibrary.org/?redirect=%2Fusers%2Fdashboard . இந்த மின்னணு கற்றல் மேலாண்மை முறையைப் பயன்படுத்தி எவ்வாறு போட்டித் தேர்வு தயாரிப்பில் ஈடுபடுவது என்பதற்கான வீடியோ விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இணையதளத்தில் பதிவு செய்து கொண்ட பிறகு மாணவர்கள் தங்களது கைபேசி செயலி வழியாகவோ அல்லது கணினி வழியாகவோ இந்த மின்னணு கற்றல் மேலாண்மை முறையை முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொது நூலக இயக்ககம் சார்பில் வழங்கப்படும் இந்த வசதியை நூலகத்தைப் பயன்படுத்தும் அனைத்து போட்டித் தேர்வு மாணவர்களையும் சென்றடையும் வகையில் ஒவ்வொரு போட்டி தேர்வு மாணவர் படிக்கும் மேசைகளிலும் இடம்பெறும் வகையில் இணையதள இணைப்பு மற்றும் இணையதளத்தை அணுகுவதற்கான க்யூ ஆர் கோடு ஆகியவை உள்ள கையேடுகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றன.
இந்த அறிவிப்பை அனைத்து மாவட்ட நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள், கிளை நூலகங்கள், மற்றும் ஊர்ப் புற நூலகங்களின் தகவல் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும். நூலகத்தில் உள்ள போட்டித் தேர்வு மாணவர்கள் பிரிவின் ஒவ்வொரு மேசையிலும் இந்த அறிவிப்பு இடம் பெற்று இருக்க வேண்டும்.
இந்த அறிவிப்பினை அனைத்து மாவட்ட நூலக அலுவலர்களும் நூலகர்களுக்கு அனுப்பி வைத்து மாணவர்கள் பயன்பெறுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மின்னணு கற்றல் மேலாண்மை முறை குறித்து மாணவர்கள் அளிக்கும் கருத்துக்களைப் பொது நூலக இயக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம். இது இந்த வசதியை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். இத்தகவலை பொது நூலக இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
The post ’’போட்டித் தேர்வில் இனி ஈசியா பாஸ் ஆகலாம்..!’’ தனியார் கோச்சிங் செண்டர்களுக்கு செல்ல வேண்டம் first appeared on Madras Murasu.
]]>The post ’’தலைமைச் செயலாளர் இறையன்பு செய்த தரமான செயல்..!’’ போட்டித் தேர்வெழுதுவோர் உற்சாக வரவேற்பு first appeared on Madras Murasu.
]]>தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு, சென்ற மாதம் சென்னையில், செய்தித் துறை கட்டுப்பாட்டின் கீழ் மணிமண்டபங்கள் மற்றும் நூலகங்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவு சார்ந்த புத்தகங்கள் அதிகமாக இடம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன் அடிப்படையில், இந்த நூலகங்களில் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு வெற்றியடைய பாடுபடும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு, தனக்கு வழங்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட அறிவு சார்ந்த புத்தகங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மரு.இரா.செல்வராஜ், மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன், ஆகியோர்களிடம் தலைமைச் செயலகத்தில் இன்று (07.06.2023) வழங்கினார்.
தலைமைச் செயலாளர் இறையன்பு வழங்கிய புத்தகங்களை மணிமண்டபங்களில் உள்ள நூலகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளது. டிஎன்பிஎஸ்சி, எஸ்.எஸ்.சி, வங்கித்தேர்வு, ஆசிரியர் தேர்வு என்று பல்வேறு போடித்தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இந்நூலகங்களை பயன்படுத்திட வேண்டுமாறு கேட்டகொள்ளப்படுகிறது என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தலைமைச் செயலாளர் இறையன்பு-வின் இந்த தரமானச் செயலை போட்டித் தேர்வெழுதுவோர் உற்சாகமுடன் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு வருகிறனர்.
The post ’’தலைமைச் செயலாளர் இறையன்பு செய்த தரமான செயல்..!’’ போட்டித் தேர்வெழுதுவோர் உற்சாக வரவேற்பு first appeared on Madras Murasu.
]]>