Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#பொது சிவில் சட்டம் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 17 Jul 2023 08:58:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்..?’’ 22-ஆவது சட்ட ஆணையத்திற்கு பா.ம.க. கருத்துரை https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8e-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%258e-2 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8e-2/#respond Mon, 17 Jul 2023 08:58:14 +0000 https://madrasmurasu.com/?p=5255 இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்டோரிடம் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையிலான இந்தியாவின் 22-ஆம் சட்ட ஆணையம் கருத்துகளை கேட்டிருக்கிறது. அதனடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சட்ட ஆணையத்திடம் 15.07.2023 அன்று தாக்கல் செய்த கருத்துரை: இந்தியாவின் 22-ஆம் சட்ட ஆணையம் கடந்த 14.06.2023 அன்று வெளியிட்ட பொது அறிவிப்பில் கோரியிருந்தவாறு, […]

The post ’’பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்..?’’ 22-ஆவது சட்ட ஆணையத்திற்கு பா.ம.க. கருத்துரை first appeared on Madras Murasu.

]]>
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்டோரிடம் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையிலான இந்தியாவின் 22-ஆம் சட்ட ஆணையம் கருத்துகளை கேட்டிருக்கிறது. அதனடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சட்ட ஆணையத்திடம் 15.07.2023 அன்று தாக்கல் செய்த கருத்துரை:

இந்தியாவின் 22-ஆம் சட்ட ஆணையம் கடந்த 14.06.2023 அன்று வெளியிட்ட பொது அறிவிப்பில் கோரியிருந்தவாறு, பொது சிவில் சட்டம் தொடர்பான பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துகளை அந்தக் கட்சியின் தலைவர் என்ற முறையில் இந்திய சட்ட ஆணையத்திடம் தாக்கல் செய்கிறேன்.

மருத்துவர் ச.இராமதாசு அவர்களால் 16.07.1989-ஆம் நாளில் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டின் தனித்துவ அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கமே தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்பபடுத்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற தமிழர், மொழி&இன&மதவாரி சிறுபான்மையர் ஆகிய அனைத்து இன மக்களின் உரிமைகள் மற்றும் பெருமைகளை நிலைநிறுத்தும் வகையிலும், சமூகநீதி தழைத்தோங்கும் வகையிலும் தன்னுரிமையுடன் கூடிய தமிழ்ச் சமத்துவ சமுதாயத்தை அமைப்பது தான். இத்தகைய உன்னத நோக்கம் கொண்ட கட்சியால் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எந்த ஒரு மதத்தினரின்/சிறப்புப் பிரிவினரின் உரிமைகளும் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது. இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரின் திருமணங்கள், மண விலக்குகள், குழந்தைகளை தத்தெடுத்தல், சொத்துரிமை ஆகியவை தொடர்பாக தனித்தனியான சிவில் சட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மதப்பிரிவினரின் பாரம்பரியத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கப் பட்ட அத்தகைய சட்டங்கள் அப்படியே தொடர வேண்டும்; பல்வேறு மதப்பிரிவினரின் சிவில் உரிமைகளில் அரசு தலையிடக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பல்வேறு மாநாடுகள், பொது அமைப்புகள் ஆகியவற்றில் இந்த நிலையை பா.ம.க. தெளிவுபடுத்தியுள்ளது.

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்திய சட்ட ஆணையம் கருத்துகளைக் கேட்பதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதன் நோக்கம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை விட, சில பிரிவினரின், குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க வேண்டும் என்பதாகவே தோன்றுகிறது. இதை பொறுப்புள்ள, மதச்சார்பற்ற கட்சி என்ற முறையில் பா.ம.க.வால் ஏற்க முடியாது. சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது. அதன் காரணமாகவே பா.ம.க.வில் பொருளாளர் பதவி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. அவர்களின் உரிமைகளைக் காக்க பல போராட்டங்களை நடத்தியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளை எதிர்த்து போராடி வருகிறது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் அதை எதிர்த்து பா.ம.க. போராடி வந்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் உட்பட பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்த போதும் கூட, பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே பா.ம.க எடுத்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூட,‘‘பல மதங்களையும் மாறுபட்ட பழக்க வழக்கங்களையும் கொண்ட இந்திய நாட்டில் எல்லோருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டம் தேவையில்லை. ஒவ்வொரு பிரிவும் தத்தமது மத நம்பிக்கைகளை பின்பற்றும் வகையில் மாறுபட்ட சிவில் சட்டங்களை பின்பற்றுவது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு அடிப்படை உரிமைதான். இந்த உரிமை காக்கப்பட பாடுபடும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 2019 தேர்தலிலும் இதையே பா.ம.க. வலியுறுத்தியது. இதே நிலைப்பாடு இப்போதும் தொடருகிறது.

இந்திய அரசியலில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவரான வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் 1998 முதல் 2004 வரை பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகித்தது. அப்போதும் பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தான் கூட்டணிக்கு தலைமை வகித்த பாரதிய ஜனதாவின் நோக்கமாக இருந்தது. ஆனால், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப் படுத்தக்கூடாது என்ற நிபந்தனையை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் சேர்க்கச் செய்து அதனடிப்படையில் தான் கூட்டணி அரசுக்கு பா.ம.க. ஆதரவு அளித்தது.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றியமைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அம்முயற்சி வெற்றி பெறவில்லை. காரணம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மிகவும் வலிமையாக உள்ளது. இந்திய மக்களிடையிலான மத நல்லிணக்கம் அதை விட மிகவும் வலிமையாக உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட இந்தியர்கள் அதை சிதைக்கும் வகையிலான எந்தத் திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சிறுபான்மை சமூகங்களுக்கான சிவில் சட்டங்களில் குறைகளே இல்லை என்று கூற முடியாது. எடுத்துக்காட்டாக இஸ்லாமிய மக்களிடம் நடைமுறையில் இருந்த முத்தலாக் போன்ற வழக்கங்கள் இஸ்லாமிய பெண்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் பறிக்கும் வகையில் இருந்தன. அதில் தலையிட்ட உச்சநீதிமன்றம் முத்தலாக் முறையை ரத்து செய்தது. அதேபோல், வேறு ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றைக் குறிப்பிட்டு கருத்து கேட்கலாம். அவ்வாறு ஏதேனும் குறைகள் இருந்தாலும் கூட, அவற்றை இந்திய ஜனநாயத்தின் மூன்று தூண்களில் ஒன்றான உச்சநீதிமன்றம் சரி செய்யும். அவ்வாறு இருக்கும் போது எந்தக் காரணத்தையும் கூறாமல், எந்தத் தேவையும் இல்லாமல் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆணையம் கருத்துக் கேட்பது தேவையற்றதாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-ஆம் பிரிவில்,‘‘ இந்திய நிலப்பரப்பு முழுவதிலும் வாழும் அனைத்துக் குடிமக்களுக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருப்பது தான் பல்வேறு சட்ட ஆணையங்கள் பொது சிவில் சட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கும், கருத்து கேட்பதற்கும் அடிப்படை ஆகும். ஆனால், உண்மையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-ஆம் பிரிவு என்பது வழிகாட்டி பிரிவு தானே தவிர கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய பிரிவு அல்ல என்ற உண்மையை இந்திய சட்டம் ஆணையம் நன்றாக அறிந்திருக்கும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 47–ஆம் பிரிவு ஒன்று உள்ளது. அதுவும் அரசுக்கு வழிகாட்டும் பிரிவு தான். அதில்,‘‘ஓர் அரசின் கடமை என்பது மக்களின் ஊட்டச் சத்து அளவு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும், பொது சுகாதாரத்தையும் மேம்படுத்துவது ஆகும். மக்களின் ஊட்டச் சத்து அளவு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும், பொது சுகாதாரத்தையும் மேம்படுத்துவதை அரசு முதன்மைக் கடமையாக கருத வேண்டும். குறிப்பாக மதுவையும் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் போதைப் பொருட்களையும் மருத்துவப் பயன்பாட்டைத் தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்’’ என்று மதுவிலக்குக் கொள்கை மிகவும் தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

44-ஆம் பிரிவின்படி பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்தும் சட்ட ஆணையங்கள், இன்று வரை 47-ஆம் பிரிவின்படி இந்தியாவில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து எந்த ஆய்வும் நடத்தாமல் இருப்பது பெரும் புதிராகவே இருக்கிறது. இத்தனைக்கும் தனித்தனி சிவில் சட்டங்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை. ஆனால், மதுவால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்கின்றனர். ஆண்டுதோறும் 20 லட்சம் மக்கள் உயிரிழப்பதை தடுப்பதற்கான மதுவிலக்கு குறித்து எந்த விவாதமும் நடத்தப்படாத நிலையில், பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்திற்கு மட்டும் இந்திய சட்ட ஆணையம் இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதே ஐயங்களை ஏற்படுத்துகிறது.

தனி சிவில் சட்டங்களால் இஸ்லாமியர்கள் மட்டும் பயனடைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வதே தவறாகும். தனி சிவில் சட்டங்கள் பெரும்பான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்துப் பிரிவினருக்கும் தனித்தனியாக உள்ளன. பெரும்பான்மை இந்து மதத்தைச் சார்ந்த பட்டியலினம் மற்றும் பழங்குடியின மக்கள் காலம் காலமாக கடைபிடித்து வரும் திருமணம் தொடர்பான சடங்குகளையும் பொது சிவில் சட்டம் சிதைத்து விடும் என்பதை சட்ட ஆணையம் உணர வேண்டும்.

பொதுசிவில் சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21-ஆம் சட்ட ஆணையம் விவாதித்து பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டது. அதன் முடிவில் 185 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை 2018&ஆம் ஆண்டில் வெளியிட்டது. அதில், இன்றைய சூழலில் பொதுசிவில் சட்டம் தேவையும் அல்ல; விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவித்திருந்தது.
‘‘ஒருங்கிணைந்த நாடு என்பதற்காகவே அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. மதச்சார்பற்ற தன்மை என்பது நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் பன்முகத்தன்மையுடன் முரண்பட்டதாக இருக்கக்கூடாது. கலாச்சார பன்முகத்தன்மை என்பதில் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளக் கூடாது. ஒற்றைத் தன்மை அல்லது ஒரே மாதிரியான தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான வெறி தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தலாக மாறுகிறது’’ என்று 21-ஆம் சட்ட ஆணையம் அதன் அறிக்கையில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது.

இவ்வளவுக்குப் பிறகும், 4 ஆண்டு இடைவெளியில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை 22-ஆம் சட்ட ஆணையம் தொடங்கியிருப்பது சரியல்ல என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் என்று கூறிவிட்டு, ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும் என்று பா.ம.க. கேட்டுக் கொள்கிறது.

The post ’’பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்..?’’ 22-ஆவது சட்ட ஆணையத்திற்கு பா.ம.க. கருத்துரை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8e-2/feed/ 0
’’பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8e/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%258e https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8e/#respond Thu, 13 Jul 2023 11:15:36 +0000 https://madrasmurasu.com/?p=5089 பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்தி-க்குக் கடிதம் எழுதியுள்ளார். அதன் விபரம் வருமாறு: பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டுமென்று கோரி, இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்தி -க்கு இன்று (13-7-2023) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், பன்முகச் சமூகக் கட்டமைப்பிற்குப் பெயர் பெற்ற […]

The post ’’பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் first appeared on Madras Murasu.

]]>
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்தி-க்குக் கடிதம் எழுதியுள்ளார். அதன் விபரம் வருமாறு:

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டுமென்று கோரி, இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்தி -க்கு இன்று (13-7-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், பன்முகச் சமூகக் கட்டமைப்பிற்குப் பெயர் பெற்ற இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்திட இக்கடிதத்தினை எழுதுவதாகவும், சில சீர்திருத்தங்களின் அவசியத்தைப் தாம் உணரும் அதேவேளையில், பொது சிவில் சட்டம் ஒரு கடுமையான அச்சுறுத்தலை முன்வைக்கிறது என்றும், நமது சமூகத்தின் பல்வேறுபட்ட சமூகக் கட்டமைப்பிற்கு சவால் விடுப்பதாகவும் உள்ளது எனவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், பொது சிவில் சட்டத்தினை அமல்படுத்துவதை தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்ப்பதற்கான காரணங்களைப் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்புகள்:

மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் முக்கிய பகுதி என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 25-ன்படி, “ஒருவர், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையை” உறுதி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர், அந்தந்த சமூகங்களின் பெரும்பாலான தனிப்பட்ட சட்டங்களுக்கு மத நடைமுறைகள் அடிப்படையாக உள்ளன என்றும், அத்தகைய தனிப்பட்ட சட்டங்களில் எந்த மாற்றத்தையும், மத சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். ஒரே மதத்தைப் பின்பற்றும் மக்களிடையே கூட, பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் இடத்திற்கு இடம் மற்றும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும் நிலையில், அவர்களிடையே ஒருமித்த கருத்தை எட்டாமல் அத்தகைய ஒப்புதல் சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதன் காரணமாகவும், மேலும் பல காரணிகளுடன், அரசியலமைப்பின் 44-வது பிரிவில் ஒரு முக்கிய இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் மீண்டும் மீண்டும் எதிர்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தனது, 31.8.2018 நாளிட்ட அறிக்கையினை விவாதிப்பதற்காக சமீபத்தில் கூடிய இந்தியாவின் 21-வது சட்ட ஆணையமும், பொது சிவில் சட்டம் விரும்பத்தக்கது அல்ல என்று கூறியுள்ளதை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், அவசர கதியில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது அரசியலமைப்பு சட்டநெறிமுறைகளுக்கு முரணாக அமைவதோடு மட்டுமல்லாமல், நாட்டில் வகுப்புவாத ஒற்றுமையின்மைக்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தனிநபர் சட்டங்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு சில பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வழங்குவதாகவும், பொது சிவில் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் பழங்குடியினர் உட்பட சிறுபான்மையினரின் தனித்துவமான மத, கலாச்சார அடையாளத்தை அழித்து, செயற்கையாக ஒரேமாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகவே கருதுவதாக மேலும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கலாச்சார மற்றும் மதப் பன்முகத்துவம்:

வேற்றுமையில் ஒற்றுமைக்கும், கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கும் பெயர் பெற்ற நாடு இந்தியா என்றும், பொது சிவில் சட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதன் மூலம், இந்த பன்முகத்தன்மை புறக்கணிக்கப்படுவதோடு, நமது நாட்டின் பன்முகக் கட்டமைப்பின் சாராம்சத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கு இது வழிவகுக்கும் என கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர், பழங்குடி சமூகங்கள் உட்பட பல்வேறு சமூகங்களின் தனித்துவமான மரபுகள், நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட சட்டங்களை மதித்து பாதுகாப்பது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மதக் குழுவுக்கும், அதன் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்கும் பிரிவு 25-ன்கீழ் அரசியலமைப்பால் வழங்கப்பட்ட சுதந்திரத்தை பொது சிவில் சட்டம் மீறுவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், பிரிவு 29, பல்வேறு மதக் குழுக்கள் தங்கள் தனித்துவமான கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் உரிமையை வழங்குவதாகவும், பொது சிவில் சட்டம் போன்ற ஒரு சட்டத்தைத் திணிக்கும் எந்தவொரு முயற்சியும், மத விவகாரங்களில் அரசின் அத்துமீறலாக கருதப்படும் என்றும், இது எதிர்காலத்தில் தனிமனித சுதந்திரங்கள் மீதான ஆக்கிரமிப்புகளுக்கு கவலைக்குரிய ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கிடும் என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

கூட்டாட்சி அமைப்பு:

இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மாநிலங்களுக்கு தன்னாட்சியை வழங்குகிறது மற்றும் அவற்றின் தனித்துவமான சமூக-கலாச்சார அடையாளங்களை மதிக்கிறது என்று தெரிவித்துள்ள அவர், தனிநபர் சட்டங்களை மையப்படுத்துவதன் மூலமும், மாநிலங்கள் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிப்பதற்கான உரிமைகளை அழிப்பதன் மூலமும், பொது சிவில் சட்டம் இந்தக் கோட்பாட்டை மீறுவதாகத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாநிலங்களின் செயலூக்கமான பங்கேற்பு மற்றும் ஒப்புதல் இல்லாமல் தனிநபர் சட்டங்களில் எந்தவொரு சீர்திருத்தமும் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்றும், தனிநபர் சட்டங்களில் உள்ள சீரான தன்மை ஒன்றுபட்ட தேசத்தை உருவாக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமூக ஒருங்கிணைப்பு:

பொது சிவில் சட்டம், பல்வேறு மத சமூகங்களிடையே ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், பலவகையான மத, பண்பாட்டு, மொழி வேறுபாடுகள் உள்ள நமது நாட்டில், மத நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியமானது என்றும், முரண்பாடுகளை உருவாக்கி பகைமையை வளர்க்கக்கூடிய ஒரே வகையான சிவில் சட்டத்தை திணிப்பதைவிட, மக்களிடையே பரஸ்பர புரிதலையும், மரியாதையையும் மேம்படுத்துவது முக்கியம் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுப் பின்னணி:

இந்தியாவில் தனிநபர் சட்டங்கள் பல நூற்றாண்டுகளாக பரிணமித்துள்ளன என்றும், பல்வேறு சமூகங்களின் வரலாற்று, கலாச்சார மற்றும் மத சூழல்களில் ஆழமாக வேரூன்றியுள்ளன என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், பொது சிவில் சட்டத்திற்கான முன்மொழிவு இந்த வரலாற்று அம்சத்தை அங்கீகரிக்கத் தவறுவதுடன், பல்வேறு மதக் குழுக்களின் மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகாத ஒரு சட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினர் உரிமைகள்:

அரசியலமைப்பின் 29-வது பிரிவின்மூலம், சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்துப் பாதுகாக்கும் மதச்சார்பற்ற நாடு என்பதில் இந்தியா பெருமை கொள்வதாகவும், அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை, மாநிலங்களின் பழங்குடிப் பகுதிகள், மாவட்ட மற்றும் வட்டாரக் கவுன்சில்கள் மூலம் தங்கள் பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், பொது சிவில் சட்டம் இயல்பிலேயே, அத்தகைய பழங்குடி சமூகங்களை அதிக அளவில் பாதிக்கும் மற்றும் அவர்களின் பாரம்பரிய நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அடையாளங்களைப் பின்பற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும், அவர்களின் உரிமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆற்றலை உள்ளடக்கியதாக பொது சிவில் சட்டம் அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சமூகப் பொருளாதார தாக்கங்கள்:

நமது சமூகத்தில் நிலவும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கருத்தில் கொள்ளாமல், ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவது, பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், வெவ்வேறு சமூகங்கள் வளர்ச்சி, கல்வி மற்றும் விழிப்புணர்வின் வெவ்வேறு நிலைகளைக் கொண்டுள்ளன என்றும், அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரேமாதிரியான அணுகுமுறை தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கக்கூடும் என்றும்  முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இணக்கமான வாழ்வுக்கு முன்னுரிமை:

எல்லாவற்றிற்கும் மேலாக, நமது மகத்தான தேசத்தின் கட்டமைப்பை உருவாக்கும் பல்வேறு சமூகங்களிடையே இணக்கமான வாழ்வை வளர்ப்பதே நமது முதன்மை குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஒரே மாதிரியான சட்டத்தைத் திணிப்பதற்குப் பதிலாக, மதங்களுக்கிடையிலான உரையாடல்களை வலுப்படுத்துவதிலும், சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதிலும், இந்தியாவை வரையறுக்கும் வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துவோம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போதைய நிலையில், மாநில அரசுகள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் இச்சட்டம் தொடர்பான விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கு முக்கியமானது என இந்திய சட்ட ஆணையத் தலைவரிடம் கோரியுள்ளார்.

நமது பன்முகத்தன்மை:

மேற்காணும் கருத்துகளைத் தீவிரமாகப் பரிசீலித்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையத் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்தி அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டங்களில், ஒரேமாதிரியான தன்மையை கொண்டுவர முயற்சிப்பதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரேமாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளதோடு, பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் தன்மை வழிவகுக்காது என்ற அடிப்படைக் கோட்பாட்டை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நமது நாட்டின் பலம், அதன் பன்முகத்தன்மையில் உள்ளதாகவும், பொது சிவில் சட்டத்தின் மூலம் அதை ஒருமுகப்படுத்த முயற்சிப்பதை விட, நாம் நமது பன்முகத்தன்மையை நிலைநிறுத்திக் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post ’’பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8e/feed/ 0
’’பொது சிவில் சட்டம்..!’’ எச்சரிக்கும், ‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%258e https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e/#respond Mon, 19 Jun 2023 05:49:56 +0000 https://madrasmurasu.com/?p=4135 தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை: இந்தியாவின் சட்ட ஆணையமானது பொது சிவில் சட்டம் பற்றிய கருத்து கேட்புக்கு ஜுன் 14 அன்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. முப்பது நாட்களுக்குள் அது பற்றிய கருத்துக்களை அதற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கெடு விடுத்தள்ளது. ஆர்எஸ்எஸ்சின் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்தும் வேலையில் சட்ட ஆணையம் இறங்கியிருப்பதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. பாபர் மசூதியை இடித்து அங்கே ராமர் […]

The post ’’பொது சிவில் சட்டம்..!’’ எச்சரிக்கும், ‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ first appeared on Madras Murasu.

]]>
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை:

இந்தியாவின் சட்ட ஆணையமானது பொது சிவில் சட்டம் பற்றிய கருத்து கேட்புக்கு ஜுன் 14 அன்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. முப்பது நாட்களுக்குள் அது பற்றிய கருத்துக்களை அதற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கெடு விடுத்தள்ளது. ஆர்எஸ்எஸ்சின் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்தும் வேலையில் சட்ட ஆணையம் இறங்கியிருப்பதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது.

பாபர் மசூதியை இடித்து அங்கே ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு-காஷமீரின் 370-ஆவது பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவது என்பதே ஆர்எஸ்எஸ்சின் திட்டமாகும். அதில் முதல் இரண்டை முடித்துவிட்டவர்கள், இப்போது மூன்றாவதையும் செயல்படுத்த துணிந்திருக்கிறார்கள். இதற்காகத்தான் சட்ட ஆணையத்தை தங்களது மோடி அரசின் மூலம் தூண்டியிருக்கிறார்கள்.

இதற்கு முந்தைய சட்ட ஆணையம் இது பற்றி மக்களின் கருத்து கேட்டு, தனது முடிவை 2018-ல் தந்திருக்கிறது என்பதை தற்போதய அறிவிக்கை ஒப்புக்கொள்கிறது. அந்த முடிவு, “பொது சிவில் சட்டம் அவசியமானதும் அல்ல, தற்போதய சூழலில் விரும்பத்தக்கதும் அல்ல” என்பதுதான். அதைச் சொல்லாமல் அது வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் மீண்டும் மக்களிடம் கருத்து கேட்கிறோம் என்கிறது தற்போதய சட்ட ஆணையம்.

இது போன்ற அடிப்படையான விஷயங்களில் சில ஆண்டுகளிலேயே நிலைமை நிச்சயம் மாறாது. ஆனாலும் ஆணையம் மீண்டும் விஷயத்தை கிளப்புவது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் பாஜக அரசின் இழிசெயலுக்கு துணை போவதே என்பதை சுட்டிக் காட்டுகிறது மேடை.

இந்துச் சட்டத்தில் முற்போக்கான திருத்தங்களை அண்ணல் அம்பேத்கரும், பிரதமர் நேருவும் 1950-களில் முன்மொழிந்த போது அவற்றை கடுமையாக எதிர்த்தது ஆர்எஸ்எஸ். இப்போது பொது சிவில் சட்டம் என்று இவர்கள் கிளம்புவது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களது தனி சட்டங்களை பறிக்கும் வேலையே. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டின் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களின் சட்ட அங்கீகாரத்தையும் ரத்து செய்து புரோகித திருமண முறையை அனைவர் மீதும் திணிக்கிற காரியமுமாகும்.

இந்தக் கருத்துக் கேட்கும் அறிவிக்கை தேன்கூட்டைக் கலைக்கிற செயல். இதை உடனடியாக சட்ட ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் ஒற்றுமை மேடை வலியறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

The post ’’பொது சிவில் சட்டம்..!’’ எச்சரிக்கும், ‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e/feed/ 0