acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது..!’’ கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கட்சியை வளர்ப்பதற்காக பல கட்டங்களாக விட்டுவிட்டு பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பெரும் பணத்தை செலவு செய்து கட்சியினரை திரட்டி, குறிப்பிட்ட நகர வீதிகளில் அந்தப் பாத யாத்திரை நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றுகிற அண்ணாமலை, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்கிற மமதையில் காழ்ப்புணர்ச்சியோடு சர்ச்சைக்குரிய விஷமத்தனமான கருத்துகளை கூறி வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோர் குறித்து மிக மிக இழிவான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்துகிறார்.
இவரைப் போல இழிவாக கருத்துக் கூறியவர்கள் கடந்த காலங்களில் வரலாற்றிலிருந்து துடைத்தெறிய ப்பட்டது திடீர் அரசியல்வாதியான அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அண்ணாமலையை பொறுத்தவரை ஆட்டைக்கடித்து, மாட்டை கடித்து தற்போது மனிதனை கடிக்க வந்திருக்கிறார்.
தமிழகத்தில் ஈராயிரம் ஆண்டுகளாக ஊறிப் போன சமூக அடக்குமுறைகளை, அநீதிகளை, சாதிய ஏற்றத் தாழ்வுகளை, தீண்டாமை கொடுமைகளை துடைத்தெறிவதற்காக தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டு தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அற்புதமான தலைவர் தந்தை பெரியார். கடவுள் மறுப்பு கொள்கையை பகுத்தறிவின் அடிப்படையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தந்தை பெரியார் பரப்புரை மேற்கொண்டு வந்தார். இதில் மாற்றுக்கருத்து கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.
ஆனால், அண்ணாமலையைப் போல நாகரீகமற்ற முறையில் பெரியாரை விமர்சனம் செய்தது கிடையாது. ரங்கம் கோயிலுக்கு முன்புள்ள பெரியார் சிலையை அகற்றுவது தான் நோக்கம் என்று கூறுகிறார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மகாத்மா காந்தி படுகொலையில் குற்றவாளியான சாவர்க்கர் படத்தை பா.ஜ.க. திறந்து வைத்ததற்கு கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால், அந்தப் படத்தை அகற்ற வேண்டுமென்று கோரி எவரும் போராட்டம் நடத்த முன்வரவில்லை.
காந்தியடிகளை கொன்ற கோட்சேவை தியாகி என்று பிரக்யாசிங் தாகூர் கூறியதற்காக பா.ஜ. அவர் மீது நடவடிக்கை எடுத்ததா? இந்திய விடுதலையைப் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியை இழிவுபடுத்துகிற பா.ஜ.க.வுக்கு என்ன தண்டனை கொடுப்பது ? இதற்கெல்லாம் அண்ணாமலை விளக்கம் கூறுவாரா? சமூகநீதியை பாதுகாத்த பெரியாரையும், காமராஜரையும் இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது.
இத்தகைய அருவெறுக்கத்தக்க அநாகரீக பேச்சுகளினால் பா.ஜ. குழிதோண்டி புதைக்கப்படுவது உறுதி. தமிழக அரசியல் வரலாற்றில் இவர்களது பங்களிப்பை வரலாற்று நூல்கள் மூலம் அறிந்து கொண்டு பேசுவது நல்லது.
இத்தகைய பேச்சுகளினால் கடுமையாக பாதிக்கப்படப்போவது அண்ணாமலை அல்ல. மாறாக, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில்39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே அண்ணாமலையின் பேச்சுகள் உதவப் போகிறது. எனவே, தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் அண்ணாமலை ஆளாவதை எவராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ’’அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது..!’’ கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.
]]>The post ’’ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் ஆசைத்தம்பி..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>13.10.2023 அன்று சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற கழகத்தின் மூத்த முன்னோடி வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
‘வாலிபப் பெரியார்’ என்று போற்றப்படும் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவை மிகக் குறுகிய காலத்தில் எழுச்சியுடனும், ஏற்றத்துடனும் இதை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அமைச்சர் சேகர்பாபு -க்கு முதலில் தலைமைக் கழகத்தின் சார்பில் என் நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
யாரும் கணக்குப் போடாத காலத்தில்…
இந்த நூற்றாண்டு விழாவை, ஒரு நிகழ்ச்சியாக மட்டும் நடத்தாமல், புகைப்படக் கண்காட்சியையும், அடுத்து ஆசைத்தம்பி அவர்களுடைய வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு சிறு ஆவணப்படத்தையும் தயாரித்து வழங்கக்கூடிய ஒரு பன்முக விழாவாக இதை நடத்திக் கொண்டிருக்கிறார். எதற்காக கழக முன்னோடிகளைப் போற்றும் இத்தகைய விழாக்களை நடத்துகிறோம்? என்றால், அண்ணன் துரைமுருகன் அவர்கள் எடுத்துச் சொன்னது போல, அவர்களது புகழைப் பரப்புவதற்காக மட்டுமா நடத்துகிறோம்? இல்லை… வரக்கூடிய காலக்கட்டத்தில் வருங்கால சமுதாயத்திலும் ஆற்றல்மிக்க ஆசைத்தம்பிகள் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற விழாக்களை நடத்துகிறோம்!
நீதிக்கட்சியின் தலைவர்!
‘ஒருகாலம் வரும்… சட்டமன்ற உறுப்பினராக ஆவோம்; நாடாளுமன்ற உறுப்பினராக ஆவோம்…’ என்றெல்லாம் யாரும் கணக்குப் போடாத காலத்தில், திராவிட இயக்கத் தூணாக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் நம்முடைய ஆசைத்தம்பி அவர்கள்.
நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞர் அவர்களின் சம காலத்தவரான அண்ணன் ஆசைத்தம்பி அவர்கள், தலைவர் கலைஞரைவிட ஐந்து மாதம் இளையவர்.
1938-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களை, இந்தி எதிர்ப்புப் போராட்டம் திருவாரூர் வீதியில் தமிழ்க் கொடி தாங்கி போராட வைத்தது. அதே ஆண்டில் திராவிட இயக்க எண்ணத்தால் தீவிரமாக உருவானவர்தான் நம்முடைய ஆசைத்தம்பி. அவருடைய தந்தையார் பழனியப்பன், விருதுநகர் மாவட்டத்தில் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.
திராவிட நாடு – சி.பா. ஆதித்தனார்!
விருதுநகர் என்பதே நீதிக்கட்சியின் கோட்டையாக இருந்த நகரம்! அங்கிருந்து உருவானவர்தான் நம்முடைய ஆசைதம்பி அவர்கள். பள்ளிப்பருவ காலத்திலேயே திராவிட இயக்க மாணவர்களை இணைத்து சங்கம் தொடங்கி பல்வேறு அமைப்புகளைத் உருவாக்கி, மேடைகளில் சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.
பேரறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு – சி.பா. ஆதித்தனார் நடத்திய தமிழன் போன்ற இதழ்களில் இளமைக் காலத்திலேயே எழுதத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பிற்காலத்தில் ‘தனி அரசு’ என்ற இதழை அவர் நடத்தினார். முதலில் வார இதழாக வெளிவந்து கொண்டிருந்தாலும், அதற்கு பிறகு சில ஆண்டுகள் நாளிதழாகவும் வந்திருக்கிறது. ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் தினத்தந்தி’ என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது ஆசைத்தம்பியின் தனியரசு நாளிதழ்.
பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞரைப் போல ஏராளமான கதைகள் – நாவல்கள் எழுதியிருக்கிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட கதை நூல்கள் எழுதி இருக்கிறார். கதைகளில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியவர் அவர்.
தலைவர் கலைஞர் திரைக்கதை – வசனம் எழுதிய ’பராசக்தி’ திரைப்படம் எத்தகைய தாக்கத்தை நமது தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படுத்தியதோ அதை அனைவரும் தெளிவாக அறிந்திருக்கக் கூடியவர்கள். அந்த பராசக்தி கதையில் வரும் பாத்திரங்களை வைத்தே ‘கசந்த கரும்பு’ என்ற கதையை எழுதியவர் ஆசைத்தம்பி.
திராவிடர்கள்
திராவிடர் இயக்கம் ஏன்?
தனியரசு ஏன்?
காந்தியார் சாந்தியடைய… போன்ற பல்வேறு கட்டுரைகளை அவர் அந்தக் காலக்கட்டத்தில் எழுதி திராவிட இயக்கத்தவர்களுக்கு உணர்வூட்டிய படைப்புக்களை படைத்திருக்கிறார்! அதிலும் குறிப்பாக ‘காந்தியார் சாந்தியடைய’ என்ற புத்தகம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணல் காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட வேதனையில் எழுதப்பட்ட மிகச்சிறிய புத்தகம் அது. கோட்சே என்ற கொடியவனை – மனதில் இருக்கும் மதவாதத்தைக் கண்டித்து அந்த நூல் எழுதப்பட்டது. இந்த புத்தகம் வகுப்புவாதத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லி அந்த நூலை அன்றைய அரசு தடை செய்தது.
50 ரூபாய் நிதி!
ஆசைத்தம்பியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையும் – 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், அன்றைய தினம் கழகத்தின் அமைப்புக்குழுச் செயலாளராக இருந்த மதிப்பிற்குரிய என்.வி.நடராசன் அவர்களிடம் இந்த வழக்கை கண்காணிக்கும் பொறுப்பை அவரிடத்தில் ஒப்படைத்தார். வழக்கு நடத்துவதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக நிதி திரட்டும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வந்தன. அதில் முதல் ஆளாக 50 ரூபாய் நிதி வழங்கினார் பேரறிஞர் அண்ணா.
ஆசைத்தம்பிக்கு பிணை கிடைத்தது. ஜாமின் கிடைத்தது. சிறையில் இருந்து அவரை விடுவிப்பதற்கு முன்னதாக அவரை கட்டாயப்படுத்தி அவருக்கு மொட்டை அடித்து, கொடுமைப்படுத்தியது சிறைத்துறை. நிர்வாணம் ஆக்கினார்கள். பின்னர் கட்டிக் கொள்ள கோவணம் தரப்பட்டது. துறையூரைச் சேர்ந்த புத்தக வெளியீட்டாளர்களான தங்கவேல், கலியபெருமாள் ஆகியோருடன் சேர்த்து ஆசைத்தம்பிக்கும் மொட்டை அடிக்கப்பட்டது.
சிறைச்சாலை என்ன செய்யும்?
இது கழகத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் அனைவருடைய மனதில் ஒரு வேகத்தை, கோபத்தை, ஆத்திரத்தை உண்டாக்கியது. மொட்டை அடிக்கப்பட்ட இந்த மூவர் படத்தையும் பேரறிஞர் அண்ணா, தனது திராவிடநாடு இதழில் வெளியிட்டார். கண்காட்சியில் இது இடம் பெற்றிருக்கிறது. இதை பார்த்தால் தெரியும். நாடு முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அண்ணா அவர்கள் உத்தரவிட்டார். கோவில்பட்டியில் நடந்த கழக செயற்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்செங்கோட்டில் நடந்த கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசினார், ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற சுந்தராம்பாள் பாட்டை பாடிக் காட்டினார். பாடி விட்டு, சிறைச்சாலை என்ன செய்யும் தெரியுமா? மொட்டை அடிக்கும் என்று முழங்கினார்.
அந்தக் காலத்தில் திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்ட புத்தகங்கள் ஏராளமாக தடை செய்யப்பட்டன. தந்தை பெரியாரின் பொன்மொழிகள் என்ற நூல் தடை செய்யப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் ஆரியமாயை தடை செய்யப்பட்டது. புலவர் குழந்தையின் இராவண காவியம் தடை செய்யப்பட்டது. கலைஞரின் நாடகங்கள் – நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டன.
புத்தகங்களைப் படித்தார்கள்!
அந்த வரிசையில் ஆசைத்தம்பி அவர்களின் ‘காந்தியார் சாந்தியடைய’ என்ற நூலும் தடை செய்யப்பட்டது. கழகத்தைச் சேர்ந்த அனைவர்க்கும் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கட்டளையை பிறப்பித்தார். ‘எந்த புத்தகத்தை தடை செய்கிறார்களோ – அந்த புத்தகத்தை பொது இடத்தில் தெருவிளக்கு கம்பத்தின் கீழ் நின்று கொண்டு கூட்டமாக படியுங்கள்’ என்று அண்ணா கட்டளையிட்டார்.
கூட்டம் கூட்டமாக நமது தொண்டர்கள், அந்த புத்தகங்களைப் படித்தார்கள். இலங்கையில் இந்த புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டார்கள். மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். இது இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அப்போது, சென்னை வண்ணாரப்பேட்டையில் எஸ்.சி.மணி, பி.மணி, ராஜா ஆகிய மூன்று கழகத் தொண்டர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள்.
பேரறிஞர் அண்ணாவின் ஆரியமாயை நூலையும், ஆசைத்தம்பியின் ‘காந்தியார் சாந்தியடைய’ நூலையும் விற்றார்கள் என்று கைது செய்யப்பட்டார்கள். வண்ணாரப்பேட்டையில் நின்றுகொண்டு அஞ்சாமல் முழக்கம் போட்டுள்ளார்கள் இந்த மூவரும். அத்தகைய வண்ணாரப்பேட்டையை உள்ளடக்கிய வடசென்னைப் பகுதியில்தான் இன்றைய தினம் ஆசைத்தம்பிக்கு நூற்றாண்டு விழாவை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி!
அவருடைய புத்தகம் விற்றதால், 1950-ஆம் ஆண்டு கைது செய்தார்கள். ஆட்சிக்கு வந்து அதே பகுதியில் அவருக்கு நூற்றாண்டு விழாவை இன்றைக்கு நாம் கம்பீரத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி!
திராவிட இயக்கத் தோழர்களுக்குக் கிடைத்திருக்கும் பெருமை! இத்தகைய அடக்குமுறையைப் பற்றியோ, கைது செய்யப்படுவதைப் பற்றியோ, சிறைச்சாலை சித்திரவதைகள் பற்றியோ ஆசைத்தம்பி எந்தக் காலத்திலும் கவலைப்பட்டவரல்ல!
மிசாவில் எங்களோடு ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். எண்ணிப் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக, சென்னை சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தார்கள் என்று சொன்னால், அதில் எதற்கும் அஞ்சாமல் ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருந்த நம்பர்-1 கைதி யார் என்று கேட்டால் ஆசைத்தம்பி தான். நான் இப்போதும் சொல்கிறேன், தைரியமாக சொல்கிறேன். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். நாங்கள் எல்லாம் சிறைக்கு புதிது. எங்களைப் போன்றோர் சிறைக்கு புதிது. எங்களுக்கெல்லாம் தைரியம் ஊட்டியவர். சிறை என்றால் என்ன என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர். அவரிடத்தில் பல பேர் சென்று கேட்பார்கள். எப்போது விடுவிப்பார்கள்? கவலைப்படாதீர்கள், 1 year, 1 year என்று சொல்வார். அவ்வளவு கூலாக சொல்வார். அவரைப்போல ஒரு ஜென்டில்மேனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்.
‘திராவிடர் கழகம்’
கணக்குப் போட்டு பார்த்தேன், மொத்தம் 24 முறை, இனம் –மொழி –நாடு காக்கப்போராடி சிறை சென்றவர் நம்முடைய ஆசைத்தம்பி. எப்போதுமே தனது மனதில் பட்டதை அப்படியே யாருக்கும் பயப்படாமல், வெளிப்படையாக எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் பேசுபவர்தான் ஆசைத்தம்பி -க்கு உண்டு.
இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், அன்றைய நீதிக்கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்பதையும் மேடைகளில் பேசி இருக்கிறார். பேரறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் ‘ஜஸ்டிஸ் கட்சிக்கு புதிய அமைப்பு வேண்டும்’ என்று 1943-ஆம் ஆண்டு கட்டுரை தீட்டியவரும் ஆசைத்தம்பி. இதை வைத்துப் பார்த்தால் ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைத்தவரே ஆசைத்தம்பி தான் என்றுகூட சொல்லலாம். அங்கே அண்ணன் திருநாவுக்கரசு உட்கார்ந்திருக்கிறார். நம்முடைய திராவிட இயக்கத்தின் எடுத்தாளர். முரசொலியில் இரண்டு நாட்களாக ஆசைத் தம்பி-யைப் பற்றி தொடர் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் எல்லாம் இடம் பெற்றிருக்கிறது. 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியபோது, தலைவர் கலைஞர் பொறுப்பு வகித்த கழகப் பிரச்சாரக் குழுவில் உறுப்பினராக ஆசைத்தம்பி இடம் பெற்றார்.
இரண்டு அமைச்சர்களை தோற்கடித்தவர்!
விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக தனது மக்கள் பணியைத் தொடங்கினார். கழகம் முதன்முதலாகப் தேர்தல் களத்தில் நின்றபோது 1957-ஆம் ஆண்டு நின்றபோது சட்டமன்றத் தேர்தலில் நாம் 15 தொகுதிகளை வென்றோம். அந்த 15 பேரில் ஒருவர்தான் ஆசைத்தம்பி. ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆயிரம் விளக்கில் பின்னாளில் நான் சட்டமன்ற உறுப்பினராக வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன், அதுதான் எனக்கு பெருமை.
1967-ல் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இதில் என்ன சிறப்பு என்றால், இரண்டு தேர்தலிலும் அந்தக் காலத்தில் செல்வாக்காக இருந்த இரண்டு அமைச்சர்களை தோற்கடித்தவர் ஆசைத்தம்பி. ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்ற அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் வெங்கடசாமி போட்டியிட்டார். அவரை ஆசைத்தம்பி தோற்கடித்தார். அதே போல் எழும்பூர் தொகுதியில், அன்றைய அமைச்சர் ஜோதி வெங்கடாசலம் அவரை எதிர்த்து நின்று அவரையும் தோற்கடித்தார்.
பெரியார் இயக்கம்!
அதற்கு பிறகு 1977-ல் நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் ஒரே ஒருவர் தான், ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு, ஆசைத்தம்பி வடசென்னையிலிருந்து வெற்றி பெற்றார். கழகத்தில் ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் அண்ணன் ஆசைத்தம்பி. அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். நாடாளுமன்றத்தில் இறுதி உரையாற்றும்போது, கடைசியாக, நிறைவாக உரையாற்றும்போது, “இந்தியாவை ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக மாற்றிவிடாதீர்கள்” என்று முழங்கியவர் ஆசைத்தம்பி. அப்போதே முழங்கியிருக்கிறார். “ஒற்றை மொழி – ஒற்றை மத நாடாக மாற்றிவிடாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்தார். அவரது நாடாளுமன்ற உரைகளில் இன்னொன்றையும் வலியுறுத்தி இருக்கிறார். “தமிழ்நாடு இந்தளவுக்கு விழிப்புணர்வு பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம், பெரியார் இயக்கம்! எனவே, வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உங்கள் மாநிலங்களில் பெரியார் இயக்கத்தை உடனே தொடங்குங்கள்!” என்றும் ஆசைத்தம்பி அங்கே பேசி இருக்கிறார்.
தி.மு.க.வில் இருந்தாலும் தி.க-வின் மீது அதிகமான பற்றுக் கொண்டவர் ஆசைத்தம்பி அவர்கள். தி.மு.க. – தி.க. ஆகிய இரண்டு இயக்கங்களும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்தி, கைது செய்யப்பட்டு அத்தனை பேரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
‘வாலிப பெரியார்’
காலையில் அனைத்து கைதிகளையும் நிற்க வைப்பார்கள், Superintendent வந்து செக் செய்வார். தி.மு.க.வினர் தனியாகவும் – தி.க.வினர் தனியாகவும் நின்றுள்ளார்கள். அப்போது கலைஞர் அவர்கள் கேட்கிறார், ஏன் இப்படி பிரிந்து பிரிந்து நிற்கிறீர்கள் என்று ஆசிரியர் வீரமணி கேட்டுள்ளார். “ஜெயிலர்தான் நிற்கச் சொன்னார்” என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார். “ஆசைத்தம்பி எங்கே நிற்கிறார்?” என்று தலைவர் கலைஞர் கேட்டிருக்கிறார். திராவிடர் கழக வரிசையில் நின்று கையை தூக்கி இங்கே இருக்கிறேன் என்று ஆசைத்தம்பி சொல்கிறார். அந்தளவுக்கு பெரியார்வாதியாக இருந்ததால்தான், அவர் இன்றைக்கு ‘வாலிப பெரியார்’ என்று அவர் அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆசைத்தம்பி அவர்களின் திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் நடத்தி வைத்தார். அவரது மகள் காந்தி திருமணத்தையும் தந்தை பெரியார்தான் நடத்தி வைத்தார். மகன் செளந்தரபாண்டியன் திருமணத்தை தலைவர் கலைஞர் நடத்தி வைத்தார்.
கலைஞர் கதறினார்!
திராவிடக் கோட்டையின் தலைமைத் தளபதியாக இருந்தவர் அவர். அத்தகைய ஆசைத்தம்பியை நாம் அந்தமானில் இழந்தோம். அந்தமானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கழகக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது களைப்பாக இருக்கிறது – கண்ணைக் கட்டுவது போல இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். மூளையில் இரத்தக் குழாய் வெடித்து அங்கேயே இறந்தும் போனார். அவரது உடலை அங்கிருந்து எடுத்து வருவதற்கே பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அவரது உடலைப் பார்த்து தலைவர் கலைஞர் கதறினார். ஏனென்றால் தனது இறுதி உரையில் அந்தமானில் பேசுகிறபோது, கலைஞர் சார்பில் உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றுதான் பேசி இருக்கிறார் ஆசைத்தம்பி.
தனது இறுதி உரையில், ‘திராவிட இயக்கம் துவங்காமல் போயிருந்தால் கேட்பாரற்ற அனாதைகளாக ஆகியிருப்போம்’ என்று சொன்னவர் ஆசைத்தம்பி அவர்கள். இதுதான் அவரது மரண சாசனம்! அந்தக் கூட்டத்தில், அந்தமானில் இருக்கக்கூடிய கழகத் தோழர்கள் ஆசைத்தம்பியை பலரும் புகழ்ந்து பேசினார்.
நின்று காத்தவர் ஆசைத்தம்பி!
இறுதியாக அவர் சொன்னார்: “இவை எதுவும் எனக்கு கிடைத்த புகழ் அல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் இருப்பதால் கிடைத்த பெருமை!” என்று சொன்னவர் ஆசைத்தம்பி.
கழகத்தின் ஒவ்வொரு பொறுப்பாளர்களும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான சொற்கள் இவை! ஆசைத்தம்பி பற்றி நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் சொல்கின்றபோது, “கலைஞரின் நெஞ்சில் வேல்பாய்ந்தால் அந்த வேலை எடுத்து எதிரியின் நெஞ்சிலே பாய்ச்சும் வீரம் கலைஞருக்கு உண்டு. கலைஞரின் முதுகில் யாராவது வேல் பாய்ச்சிவிடக் கூடாது என்பதற்காக, நின்று காத்தவர் நம்முடைய ஆசைத்தம்பி” என்று சொன்னார்.
இதுதான் ஒவ்வொரு தொண்டருக்குமான இலக்கணம்! ஆசைத்தம்பி மறைந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் உருக்கமாக எழுதினார்கள்.
“என் அன்பே! ஆசைத்தம்பி! நீ மறையவில்லை. மறைய மாட்டாய். உன்னையும் உன் உறுதியையும் நாங்கள் மறக்க மாட்டோம்” – என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள்!
ஆசைத்தம்பியை நாம் மறக்கவில்லை; அவரது உறுதியை மறக்கவும் முடியாது என்பதன் அடையாளமாகத்தான் இந்த நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ‘வாலிபப் பெரியார்’ ஆசைத்தம்பி அவர்களின் புகழ் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! என்று கூறி விடைபெறுகிறேன்.
நன்றி! வணக்கம்.
The post ’’ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் ஆசைத்தம்பி..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ’’பெரியார் – மணியம்மை பற்றிய பேச்சு – ’வருத்தம் தெரிவித்தார்’ அமைச்சர் துரைமுருகன்..!’’ first appeared on Madras Murasu.
]]>வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் பவள விழா மாநாடு கடந்த 17- ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசும்போது, தந்தை பெரியார், மணியம்மை யார் பற்றி பேசிய கருத்து சர்ச்சைக்குரிய வகையில் அமைந்தது. சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில் தனது பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வேலூரில் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க.வின் முப்பெரும் விழா மற்றும் பவள விழா மாநாட்டில், தி.மு.க.வுக்கும் ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்துக்கும் இருந்த தொடர்புகளை பற்றி நான் பேசிக்கொண்டு வரும்போது, தி.மு.க. தோன்றியதற்கு வேலூர் மாநகரம்தான் காரணம்.
வேலூருக்கு பிரசாரத்துக்கு வந்த தந்தை பெரியார், மணியம்மையார் வீட்டில் தங்குவது வழக்கம் என்பார்கள். மணியம்மையாருடைய கட்சிப் பணிகளை பார்த்த பெரியார், மணியம்மையாரை கட்சிப் பணி ஆற்றுவதற்காக உடன் அழைத்துச் சென்றார். எதிர்காலத்தில் கட்சியை காப்பாற்ற ஒரு புத்திசாலி பெண் கிடைத்துவிட்டார் என்கிற வகையில் மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்துகொண்டார். இது பொருந்தா திருமணம் என்று திராவிட கழகத்தில் இருந்து அண்ணா வெளியேறினார்.
அன்றைய தினம் நான் பேசிய பேச்சின் சாரம். இதில் ஒரு தவறு எங்கே நடந்தது என்றால், ‘பெரியார் மணியம்மையாரை கட்சிப் பணிக்காக அழைத்துச் சென்றார்’ என்று சொல்லவேண்டிய இடத்தில், ‘பெரியார் மணியம்மையாரை கூட்டிக்கொண்டு போய்விட்டார்’ என்று பேசிவிட்டேன். ‘அழைத்துக்கொண்டு போனார்’ என்பதற்கும், ‘கூட்டிக்கொண்டு போனார்’ என்பதற்கும் பலத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னுடைய இந்த பேச்சு, அண்ணன் வீரமணிக்கும், பெரியார் மற்றும் மணியம்மையார் மீது அடங்கா பற்றுக்கொண்ட தோழர்களுக்கும் வருத்தம் தந்திருப்பதாக எனக்கு செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் என் பேச்சில், அந்தக் கூட்டத்தில் உபயோகப்படுத்தியதற்காக என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார் இடத்திலும், வீரமணியார் இடத்திலும் நான் எவ்வளவு கொள்கைப் பிடிப்பு கொண்டவன் என்பதை வீரமணியாரே அறிவார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ’’பெரியார் – மணியம்மை பற்றிய பேச்சு – ’வருத்தம் தெரிவித்தார்’ அமைச்சர் துரைமுருகன்..!’’ first appeared on Madras Murasu.
]]>The post ’’புதுமைப் பெண் மூவலூர் இராமாமிர்தம்..!’’ first appeared on Madras Murasu.
]]>பிராமணர்களின் வேத ஆகமம்
அம்மட்டோ! பிற்காலச் சோழர் ஆட்சியில்தான் பல கோயில்கள் எழுப்பப்பட்டன. அந்தக் கோயில்களில் பணி செய்வதற்கென்று ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களைச் சிறுவயதிலேயே கடவுளுக்குக் காணிக்கை யென்று பொட்டுகட்டி நேர்ந்துவிட்டு விடுவார்கள். அவர்கள் இசையும் நாட்டியமும் நன்கு பயின்றிருந்தனர். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உரிமையற்று இருந்தனர். அவர்கள் ஊர்ப் பெரிய மனிதர்களின் அல்லது செல்வந்தர்களின் ஆசை நாயகிகளாக வலுக்கட்டாயமாக ஆக்கப்பட்டனர்.
சோழப் பேரரசில் ஆலயங்கள் அனைத்துமே சனாதன பிராமணர்களின் வேத ஆகம ஆதிக்கத்துக்கு உட்படுத்தப் பட்டன. பிராமணர்களுக்கு தேவதானங்களாகவும் பிரமதேயங்களாகவும் ஏராளமான நிலங்கள் வழங்கப் பட்டன. அதனால் அவர்கள் செல்வச் சீமான்களாக- குட்டி ஜமீந்தார்களாக மனம் போன போக்கில் வாழ்ந்து வந்துள்ளனர். அத்தகைய கொடிய நாள்களில், பெண்ணடிமைத் தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே என்றுணர்ந்த தமிழ்நாட்டுப் பெண்மணி ஒருவர் பெண்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்கும் குரல் கொடுத்தார்.
பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்த அந்தப் பெண் இசைவேளாளர் குடும்பத்தில் திருவாரூர் மாவட்டம் கீரனூர் என்ற ஊரின் அருகில் இருந்த பாலூர் என்ற சிற்றூரில் 1883ஆம் ஆண்டு பிறந்தார். அந்தக் குழந்தையின் பெயர் இராமாமிர்தம். தந்தை கிருஷ்ணசாமி, தாய் சின்னம்மாள். பிறந்த ஊர் பாலூர் என்ற போதிலும் அவர் தன் இளமைக் காலத்தில் வாழ்ந்த ஊர் மூவலூர் ஆதலால் பிற்காலத்தில் மூவலூர் மூதாட்டி என அழைக்கப்பட்டார்.
இளமைக் காலம்
கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை – என்பதற்கிணங்க இராமாமிர்தம் அம்மையார் இளமைக் காலத்தில் வறுமையில் வாடினார். இசை வேளாளர் குடியில் பிறந்து வறுமையில் வாடிய போதிலும், இராமாமிர்தம் பெற்றோர், தங்களின் மகளை தேவதாசி வாழ்க்கையை மேற்கொள்ள அனுமதிப்பதில்லை என்று உறுதியுடன் இருந்தனர். அதனால் தம் மகளுக்கு இசையையும் நாட்டியத்தையும் கற்றுக் கொடுப்பதில்லை என்று உறுதி கொண்டனர். உறவினரும், மற்றவர்களும் எவ்வளவோ சொல்லியும் தம் முடிவிலிருந்து மாறாமல் இருந்தனர். அதனால் ஊராரின் பகைக்கு ஆளானார்கள்.
அவர்களை அவர்களின் சமூகமும் கூட விலக்கி வைத்துவிட்டது. பொருளாதார ரீதியில் கிருஷ்ணசாமி தனிமைப்படுத்தப்பட்டார். வருமானத்திற்கு வழியில்லை; குடும்பத்தைக் காப்பாற்ற வழிவகை தெரியாமல் திகைத்தார். வாழ்க்கையில் வெறுப்புற்று மனைவியையும் மகளையும் தவிக்கவிட்டு விட்டு, விலகி வேலை தேடி சென்னை நோக்கிப் போய்விட்டார்.
குழந்தையுடன் மூவலூர் சென்றார்.
ஐந்து வயது குழந்தையுடன் தாய் சின்னம்மாள் ஆதரவற்ற நிலையில் தவித்தாள், தன் மகன் காணவில்லை என்றதும் கிருஷ்ணசாமியின் தாய் நோயுற்றாள்; அதே ஏக்கத்தில் மாண்டு விட்டார். கணவனும் இல்லை; மாமியாரும் இறந்துவிட்டார். குழந்தையோடு தனிமரமாய் நின்றார் சின்னம்மாள். வறுமை அவர்களை வாழ விடவில்லை. குழந்தையை யாரிடமாவது கொடுத்து விடலாம்; குழந்தையாவது நலமாக வளரட்டும் என்று தாய் சின்னம்மாள் தீர்மானித்து விட்டார். இந்த எண்ணத்தோடு குழந்தையுடன் மூவலூர் சென்றார். அங்கே ஒரு தேவதாசியிடம் பத்து ரூபாயும் ஒரு பழைய புடவையையும் பெற்றுக் கொண்டு அகவை ஐந்தே ஆன குழந்தை இராமாமிர்தத்தை அவரிடம் கொடுத்து விட்டார்.
ஐந்தே வயதான குழந்தை இராமாமிர்தத்தைப் பெற்றுக் கொண்ட தேவதாசி ஆச்சிக்கண்ணு, தன் குலத்தொழிலுக்குத் தேவையான கல்வியைத் தர விரும்பி, அதற்காக ஏற்பாடு செய்தார். கர்நாடக இசையையும் நாட்டியமும் கற்பிக்க பேரளம் சுயம்பு பிள்ளையை ஏற்பாடு செய்தார். அவரிடம் பயின்றதால், இராமாமிர்தம் அகவை பத்தில் இசையிலும் நாட்டியத்திலும் நன்கு தேர்ச்சி பெற்று விளங்கினார். அவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார்.
சாட்சி வேணுபடையாட்சி
பதினேழாவது வயதில் இராமாமிர்தத்துக்குக் கோயிலில் பொட்டுக் கட்ட ஆச்சிக்கண்ணு விண்ணப்பம் செய்தார். அந்தக் கோயிலில் இருந்த தேவதாசிகள், இராமாமிர்தம் வெளியூரிலிருந்து வந்த ஆண்வழி வாரிசு என்று கூறி பொட்டுக் கட்ட எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் இராமாமிர்தம் தேவதாசியா வதிலிருந்து தப்பிப் பிழைத்தார்.
அதன்பின் வளர்ப்புத் தாய் ஆச்சிக்கண்ணு, எண்பது வயதான முதியவருக்கு இராமாமிர்தத்தை மணமுடிக்க முயற்சிகள் மேற்கொண்டார். இந்த விருப்பமில்லா கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பிக்கத் துணிவோடு வீட்டிலிருந்து வெளியேறி, இசையும் நாட்டியமும் கற்பித்த ஆசிரியர் பேரளம் சுயம்புப் பிள்ளையைச் சந்தித்துத் தன் நிலையை எடுத்துக் கூறியும், அவரைத் தான் மணந்து கொள்ள விரும்பு வதையும் எடுத்துக் கூறினார். அதன் பின் இருவரும் வழுவூர் ஆலயம் சென்று நெய் விளக்கேற்றி, இருவரும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டு இணைந்தனர். இத்திருமணத்திற்கு சாட்சியாக இருந்தவர் மூவலூர் மார்க்கசகாய சுவாமி கோயிலின் காப்பாளராக இருந்த வேணுபடையாட்சி ஒருவர் மட்டுமே.
கொலைக் குற்றச்சாட்டு
இந்தத் திருமணத்தில் சாதி சமயச் சடங்குகளை யும் மூடப் பழக்கங்களையும் மேற்கொள்ளாமல் இருவரும் மனமொத்த வாழ்க்கைத் துணைவர் களாக இணைந்தனர், இத்திருமணம் சுயமரியாதைத் திருமணங்களுக்கு முன்னோடியாக அமைந்தது.
இந்தத் திருமணத்தை ஏற்க விரும்பாத தாசி வகுப்பார் அவர்களின் வாழ்வைச் சிதைக்க வழிசெய்தனர். இராமாமிர்தம் ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்துவிட்டார் என்று பழி சுமத்தி வழக்குத் தொடர்ந்தனர். காதல் கணவர் துணையுடன் வழக்கினை எதிர்கொண்டார். கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட பெண்ணைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்; சதிச் செயல் புரிந்தவர்களை இனங்கண்டு தண்டனையும் பெற்றுத் தந்தார் இராமாமிர்தம்.
இராமாமிர்தத்தின் வளர்ப்புத் தாய் ஆச்சிக்கண்ணு காலரா கண்டு இறந்துவிட்டார். அவர் தன்னுடைய சொத்துக்களை இராமாமிர்தம் பெயரில் எழுதி வைத்திருந்தார். அதனால், பொருளாதாரத்தில் சிறிது முன்னேற்றம் கண்டதும் தன் தாயையும் தந்தையையும் அழைத்துக் கொண்டார். அப்போது இராமாமிர்தத்துக்கு வயது இருபத்தைந்து (1908).
நாகபாசத்தார் சங்கம்
1917ஆம் ஆண்டுமுதல் கணவரின் துணையோடு மயிலாடுதுறையில் தேவதாசி முறைக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடங்கினார். தேவதாசி முறைக்கு எதிராகத் தெருவோரப் பரப்புரைகளில் ஈடுபட்டார். தேவதாசி வாழ்க்கை இழிவானது. அந்த இழிவான வாழ்விலிருந்து தேவதாசிப் பெண்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று பரப்புரையாற்றினார். தேவதாசிகள் வாழ்வியல் நெறிகள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், புராண இதிகாசங்கள் அடிப்படையில் அமைந்துள்ளன. ஆதலால் அவற்றின் மீது கொண்ட மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டு, தேவதாசிப் பெண்கள் விடுதலை பெறுதல் வேண்டும் என்றும் முழக்கமிட்டு வந்தார்.
அல்லும் பகலும் இராமாமிர்தம் அம்மையார் வழுக்கி விழுந்த பெண்களின் நிலை குறித்தே சிந்தித்துச் செயலாற்றி வந்தார். அந்தப் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட நாகபாசத்தார் சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கினார். அச்சங்கத்தின் முக்கிய நோக்கம், தேவதாசிப் பெண்களை விடுவித்து அவர்களை திருமண வாழ்வில் ஈடுபடுத்துவதாகும். இச்சங் கத்தின் சார்பில் இரண்டு மாநாடுகளை நடத்தினார். இச்சங்கத்தின் பெயர் பின்னர் இசை வேளாளர் சங்கம் என மாற்றப்பட்டது. இதனால் அவர் சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம்.
தெருவோர மேடைப் பேச்சு
காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி போன்ற பெருஞ்செல்வந்தர்கள், கோயில் அர்ச்சகர்கள் என்று பல தரப்பினரும் இராமாமிர்தத்தின் போராட்டத்தை ஒடுக்கவே முயன்றனர். யாரின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டாரோ, அந்தத் தேவதாசி இனத்தவரேகூட அவருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தெருவோர மேடைப் பேச்சோடு நாடகக் கலையின் மூலமும் தன் கருத்துகளை வலியுறுத்தி வந்துள்ளார். அதனைப் பொறுக்காத பழைய பஞ்சாங்கங்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். வன்முறையாளர் மேடை மீது ஏறி அவர் கூந்தலை அறுத்தனர். பின்னொரு முறை பாலில் நஞ்சு கலந்து கொலை செய்திடவும் முயன்றனர்.
ஆனாலும் அவர் மலை குலைந்தாலும் மனம் குலையா உறுதியுடன் தன் கொள்கைப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
பெரியார், திரு.வி.க
அரசியல் பின்னணி இல்லாமல் சமூக மாற்றங்களைக் கொண்டுவருவது கடினம் என்று அம்மையார் புரிந்து கொண்டார். கணவர் சுயம்புப் பிள்ளை காங்கிரசுப் பற்றுடையவர் என்பதால் காங்கிரசு இயக்கங்களில் பங்கு கொண்டார். அம்மையாருக்கு விடுதலை வேட்கை நிரம்ப இருந்த போதிலும் பெண் விடுதலையையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தார். முதன்மைப் பணியாகவும் கொண்டு செயல்பட்டார். தமது முப்பத்து எட்டாவது அகவையின் போது காங்கிரசில் சேர்ந்தார் (1921). அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், திரு.வி.க., வரதராஜூலு போன்றவர்கள் தேவதாசி முறை ஒழிப்புக்காகக் குரல் கொடுத்து வந்தனர். அவர்களால் ஈர்க்கப்பட்டதும் காங்கிரசில் இராமாமிர்தம் இணைந்ததற்கு ஒரு காரணம்.
பேரளத்தில் காங்கிரசு மாவட்ட மாநாடு திரு.வி.க. தலைமையில் நடைபெற்றது. அந்நாளில் காங்கிரசின் ஒரே பெண் பேச்சாளரான இராமாமிர்தம் கலந்து கொண்டு தேவதாசிகளை மீட்டு அவர்களுக்கு நல் வாழ்வினை வழங்க வேண்டுமென்று சிறப்பாகச் சொற்பொழிவாற்றினார். அவர் பேச்சைக் கேட்ட தாசிகள் சிலர், தாசித் தொழிலை விட்டுவிட முன்வந்தனர். அம்மையார் மெத்த மகிழ்ந்தார்.
வகுப்புவாதத் தீர்மானம்
காந்தியார், வீட்டு வேலைகளுக்கு ஆதித்திராவிடர்களைப் பணியில் அமர்த்த வேண்டும், என்று அறிவித்தார். இராமாமிர்தம் அம்மையார் தன் வீட்டுப் பணிகளுக்கு இரத்தினம் என்ற ஆதித்திராவிடப் பெண்ணை அமர்த்திக் கொண்டார். காங்கிரசில் பிராமணர்கள் ஆதிக்கம் மிகுந்திருந்தது. அவர்கள் தேவதாசி முறை ஒழிப்பிற்கு எதிராக இருந்தனர்.
பெரியாரின் வகுப்புரிமைத் தீர்மானம் அவர்களுக்கு எட்டிக்காயாக இருந்தது. 1919 முதல் 1925 வரை தொடர்ந்து காங்கிரஸ் மாநாடுகளிலும் கமிட்டிக் கூட்டங் களிலும் வகுப்புரிமைக்காகப் போராடி வந்தார் பெரியார். தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராகவும் தலைவரா கவும் திகழ்ந்த பெரியாரின் வகுப்புரிமை கோரிக்கை 1919 (திருச்சி), 1920 (திருநெல்வேலி), 1921 (தஞ்சை), 1922 (திருப்பூர்), 1923 (மதுரை, திருச்சி, சேலம்) ஆண்டுகளில் ஏற்கப்படவில்லை. பின்னர் 22-11-1925 இல் காஞ்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாகாண காங்கிரசு மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொணர்ந்தார். அத்தீர்மானம் வகுப்புவாதத் தீர்மானம் என்று சொல்லி நிராகரிக்கப்பட்டது. மாநாட்டுப் பந்தலிலேயே, காங்கிரசால் பிராமணர் அல்லாதார் நன்மை பெற முடியாது, காங்கிரசை ஒழிப்பதே தம் வேலை என்று கூறி காங்கிரஸிலிருந்து பெரியார் வெளியேறினார். அவருடன் இராமாமிர்தம் அம்மையாரும் விலகினார்.
அன்றிலிருந்து சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாவற்றிலும் முறையே பணியாற்றி வந்திருக்கிறார். மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அவர்களும் நல்ல நண்பர்கள்.
தாசிக்குலம் தோன்றியது எப்போது?
மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும், பெரியாரும், சுயமரியாதை இயக்கத்தாரும் தேவதாசி முறையை ஒழிக்கத் தீவிரமாக மக்களிடம் பரப்புரையாற்றி வந்த காலத்தில் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அவர்களும் சட்டமன்றத்தில், தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட மசோதாவை 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றினார். இந்த மசோதாவை எதிர்த்து அன்றைய காங்கிரசு தலைவர் சத்தியமூர்த்தி ஐயர் பேசியது :
“தாசிக்குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல; நாமும் அந்தக் குலத்தைத் தோற்றுவிக்க வில்லை. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் இருந்து கொண்டிருக்கிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக்கள்ளன் என்றும் அழைக்கலாம். அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. தாசிகள் இல்லையென்றால் சமூகத்தின் ஒழுக்கம் கெட்டுவிடும்.
சாஸ்திரம் சம்பந்தமானது
எனவே, இச்சமூகம் கெட்டுச் சீரழியாமல் இருக்க, தாசிகள் தேவை என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகின்றேன். தாசிகள் கோயில் பணிக்கென்று ஆண்டவனால் படைக்கப்பட்டவர்கள்.
அது சாஸ்திர சம்பந்தமானது. தாசிகளை ஒழித்துவிட்டால், பரதநாட்டியக் கலையும், சங்கீதமும் அழிந்துவிடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயமாகும். இன்று தேவதாசித் தொழிலை நிறுத்தினால், இராமசாமி நாயக்கர் அர்ச்சகர் தொழிலை நிறுத்தச் சட்டம் செய்ய வந்துவிடுவாரே” என்று பேசினார்.
சத்தியமூர்த்தி, அந்நாளில் நாடறிந்த புகழ்பெற்ற, பேச்சாற்றல் மிக்க காங்கிரசு இயக்கத் தலைவர். அவர் இவ்விதம் கேவலமாகப் பேசுவார் என்று எவரும் நினைத்திருக்கவில்லை.
பொட்டுக் கட்டினால் மகிழ்ச்சி
இவர் பேச்சுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மிகத் தெளிவாகப் பதிலுரைத்தார். “கனம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தேவதாசி ஒழிப்புத் தீர்மானத்தைத் தீவிரமாக எதிர்த்துப் பேசியுள்ளார். உங்களுக்கு அக்கா, தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்திலிருந்து எந்தப் பெண் களையாவது இதுபோன்ற தொழிலுக்கு அனுப்புவீர்களா? இதுநாள்வரை, பிற்பட்ட சமூகப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து கடவுளுக்குப் பணியாற்றியது போதும். இனி கோயில் பணிக்காக ஆண்டவனுக்குச் சேவை செய்திட மேல்சாதிப் பெண்கள் பொட்டுக் கட்டிக்கொள்ள முற்பட்டால், மகிழ்ச்சி” என்றார். அப்போது சட்டசபை அதிர்ந்து ஸ்தம்பித்து நின்றுவிட்டது.
இவ்வாறு 1929இல் தொடங்கிய தேவதாசி முறை ஒழிப்புக்கான முயற்சி 1947ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் சட்டமாக்க தீர்மானித்து இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பேசியும் எழுதியும் வந்தார்
இராமாமிர்தம் அம்மையார் 1937 முதல் 1940 வரை நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டார்; அதற்காக 1938 நவம்பரில் ஆறு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரசு மேடைகளில் அந்த நாளில் ஒரே ஒரு பெண் மேடைப் பேச்சாளராக இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறை, குழந்தை மணம், உடன்கட்டை ஏறுதல் ஆகிய சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் பேசி வந்துள்ளார்; போராடி வந்துள்ளார்.
சுயமரியாதை இயக்கத்தில் பெரியாருடன் இணைந்து சமூகக் கொடுமைகளையும், சாதிய வேற்றுமைகளையும் கொடுமைகளையும், எதிர்த்துக் களமாடியுள்ளார்; மேலும் மூடநம்பிக்கைகள், மூடப்பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்துள்ளார்.
தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர்
1936 இல் தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர் என்ற புதினத்தை எழுதி வெளியிட்டார். இந்தப் புதினம் தேவதாசிகளின் அவல வாழ்வையும், தன் பட்டறிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட நூலாகும். இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணமாகும்.
அவர் அண்ணா, சிவாஜி கணேசன், டி.வி. நாராயணசாமி ஆகியோரின் நாடகங்களில் அன்னை வேடத்தில் தொடர்ந்து நடித்தார். அவர் குடியரசு இதழில் பல பகுத்தறிவு கட்டுரைகள் எழுதியுள்ளார். அண்ணாவின் திராவிட நாடு இதழில் தமயந்தி என்றொரு சிறுகதையும் எழுதியுள்ளார். இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும் என்ற நூலையும் எழுதியுள்ளார்.
அரசியலிலும், கலைத்துறையிலும், சமுதாய சீர்கேடுகளை ஒழிப்பதிலும் அம்மையார் தளராது இறுதி வரை பணியாற்றியுள்ளார். கண்பார்வை மங்கி விட்ட நிலையில், மயிலாடுதுறையில் தன் மகனுடன் சிறுவர்களுக்குப் பாடம் போதித்தப்படித் தன் இறுதிக் காலத்தைக் கழித்தார்.
அந்த உறக்கமறியா பெண் விடுதலைப் போராளி தன் எண்பதாவது அகவையில் 26-6-1962 அன்று மறைவுற்றார்.
நினைவுத் திட்டங்கள்
1989ஆம் ஆண்டு கலைஞர் திரு. மு. கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு 8ஆம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களின் திருமண நிதித் தொகை ரூபாய் 5,000/-த்தை 1500 பெண்களுக்கு வழங்க முடிவு செய்தது. அதற்கு மூவாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் நினைவாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வித் திட்டத்தின்கீழ், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலேயே படித்து தற்போது கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 உதவித்தொகையாக வழங்கும் `புதுமைப் பெண் திட்டத்தை‘ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
வாழ்க மூவலூர் மூதாட்டி புகழ்!
The post ’’புதுமைப் பெண் மூவலூர் இராமாமிர்தம்..!’’ first appeared on Madras Murasu.
]]>The post ’’தகைசால் தமிழர் விருது – கி.வீரமணி பெறுகிறார்..! முதலமைச்சர் தலைமையிலான குழு அறிவித்தது first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021 – ஆம் ஆண்டில் இருந்து தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
தகைசால் தமிழர் கி.வீரமணி:
அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, ‘சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு’ ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருகிறார்.
உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist – (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும்,திராவிடர் கழகத் தலைவருமான முனைவர். கி. வீரமணி அவர்களுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது” வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
“தகைசால் தமிழர்”விருதிற்குத்தேர்ந்தெடுக்கப்பட்டமுனைவர். கி. வீரமணி அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2023 ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:
இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவரும் விடுதலை ஏட்டின் ஆசிரியருமான கி.வீரமணி “தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
The post ’’தகைசால் தமிழர் விருது – கி.வீரமணி பெறுகிறார்..! முதலமைச்சர் தலைமையிலான குழு அறிவித்தது first appeared on Madras Murasu.
]]>