Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#பாமக - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Wed, 08 Nov 2023 04:14:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல; தேர்வுகளை நடத்துவதிலும் டிஎன்பிஎஸ்சி செயல்திறன் இன்மை..! டாக்டர் அன்புமணி குற்றச்சாட்டு https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf/#respond Wed, 08 Nov 2023 04:14:19 +0000 https://madrasmurasu.com/?p=7432 ’’முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல; தேர்வுகளை நடத்துவதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் செயல்திறன் இன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது’’ என்று டாக்டர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசுத் துறைகளில் தொகுதி 2, 2 ஏ பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் இன்று வரையிலும் வெளியிடப்படவில்லை. தமிழக அரசின் முக்கியப் பணிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையில் அரசுப் பணியாளர் […]

The post ’’முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல; தேர்வுகளை நடத்துவதிலும் டிஎன்பிஎஸ்சி செயல்திறன் இன்மை..! டாக்டர் அன்புமணி குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.

]]>
’’முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல; தேர்வுகளை நடத்துவதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் செயல்திறன் இன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது’’ என்று டாக்டர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசுத் துறைகளில் தொகுதி 2, 2 ஏ பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் இன்று வரையிலும் வெளியிடப்படவில்லை. தமிழக அரசின் முக்கியப் பணிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது ஆகும்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இரண்டாம் தொகுதி பணியிடங்கள் 121, தொகுதி 2ஏ பணியிடங்கள் 5097 ஆகியவற்றை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அத்தேர்வுகளில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்த 11.78 லட்சம் பேரில், 9.94 லட்சம் பேர் கடந்த ஆண்டு மே மாதம் 21-ஆம் நாள் நடத்தப்பட்ட முதனிலைத் தேர்வை எழுதினார்கள். அவர்களில் இருந்து ஒரு பணிக்கு 10 பேர் வீதம் 52,180 பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த பிப்ரவரி 25-ஆம் நாள் நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வுகளை அவர்களில் பெரும்பான்மையினர் எழுதினர். அத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப் படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 மாதங்களாகியும் இன்று வரை வெளியிடப்படவில்லை.

தொகுதி 2, 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை 9 மாதங்களாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. முதன்மைத் தேர்வை எழுதியவர்கள் வெறும் 52,000 பேர் மட்டும் தான். முதன்மைத் தேர்வில் ஒவ்வொரு போட்டியாளரும் 2 தாள்களை எழுத வேண்டும்; அதன்படி மொத்தம் 1.04 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டும். அவை அனைத்தும் இரண்டே வகைப்பட்டவை தான். அவற்றை மிக எளிதாக திருத்தி விட முடியும். ஆனாலும், அப்பணியை அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்யவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2 பணிகளுக்கு முதன்மைத் தேர்வு நடத்தி 7 மாதங்கள் கழித்து கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தான், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை நடத்தியது. அந்தத் தேர்வுகளில் 14,624 தேர்வர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் 9 தாள்களை எழுதினார்கள். அதன்படி, மொத்தம் 1 லட்சத்து 34,616 தாள்கள் திருத்தப்பட வேண்டும். அந்த தாள்கள் மொத்தம் 4 வகையானவை. அனைத்துத் தாள்களையும் அக்டோபர் மாதத்தில் திருத்தி கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முடிவை அறிவித்திருக்கிறது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஆனால், அதைவிட குறைவான பணிச்சுமை கொண்ட தொகுதி 2 முதன்மைத் தேர்வுகளின் முடிவுகளை 9 மாதங்களாகியும் வெளியிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். இதிலிருந்தே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாட்டு வேகத்தை மக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல; தேர்வுகளை நடத்துவதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் செயல்திறன் இன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. கடந்த பிப்ரவரி 25 ஆம் நாள் நடைபெற்ற முதன்மைத் தேர்வுகளின் போது, பெரும்பான்மையான மையங்களில் மிகவும் தாமதமாக தேர்வு தொடங்கப்பட்டதுடன், பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குழப்பம், மன உளைச்சலால் பல தேர்வர்கள் சரியாக தேர்வு எழுத முடியவில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை பொழுதுபோக்குக்காக எழுதுவதில்லை. அதில் தான் தங்களின் எதிர்காலம் இருப்பதை உணர்ந்து பல ஆண்டுகள் உழைத்து தேர்வுக்கு தயாராகின்றனர். அந்தத் தேர்வுகளை நடத்துவதிலும், முடிவுகளை வெளியிடுவதிலும் செய்யப்படும் தாமதமும், குளறுபடிகளும் தேர்வர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.
இந்தியாவின் மிகக் கடுமையான குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எந்தக் குழப்பமுமின்றி 10 மாதங்களில் நடத்தி முடிவை வெளியிடுகிறது. ஆனால், நான்காம் தொகுதி தேர்வுகளை நடத்தி முடிக்க இரு ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அறிவிக்கப்பட்டு 21 மாதங்களாகியும் தொகுதி 2 தேர்வு நடைமுறைகளை முடிக்க வில்லை. கண்ணுக்குத் தெரியக் கூடிய இக்குறைகளை ஆணையம் சரி செய்து கொள்ள வேண்டும்.

தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொகுதி 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில், தொகுதி 1, தொகுதி 2, 2ஏ ஆகிய தேர்வுகளை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 10 மாதங்களுக்குள்ளாகவும், பிற தேர்வுகளை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களிலும் நடத்தி முடித்து, முடிவுகளை வெளியிட பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post ’’முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல; தேர்வுகளை நடத்துவதிலும் டிஎன்பிஎஸ்சி செயல்திறன் இன்மை..! டாக்டர் அன்புமணி குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0
’’மண்ணைக் காக்க போராடும் மக்கள் மீது அடக்குமுறையா..?’’ டாக்டர் அன்புமணி https://madrasmurasu.com/7397-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=7397-2 https://madrasmurasu.com/7397-2/#respond Sat, 04 Nov 2023 11:26:55 +0000 https://madrasmurasu.com/?p=7397 ‘’செய்யாறு தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்து உழவர்களின் வாழ்க்கையில் அரசு விளக்கேற்ற வேண்டும். மண்ணைக் காக்க போராடும் மக்கள் மீது அடக்குமுறையா? வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கக் கூடாது” என்று டாக்டர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்திற்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதை எதிர்த்து 125 நாட்களாக உழவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்கள் […]

The post ’’மண்ணைக் காக்க போராடும் மக்கள் மீது அடக்குமுறையா..?’’ டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.

]]>
‘’செய்யாறு தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்து உழவர்களின் வாழ்க்கையில் அரசு விளக்கேற்ற வேண்டும். மண்ணைக் காக்க போராடும் மக்கள் மீது அடக்குமுறையா? வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கக் கூடாது” என்று டாக்டர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்திற்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதை எதிர்த்து 125 நாட்களாக உழவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்கள் மீது அரசும், காவல்துறையும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன. மண்ணைக் காக்க போராடும் மக்களின் உணர்வுகளை மதிப்பதற்கு பதிலாக, அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைத்தால் வீழ்ச்சியே பரிசாக கிடைக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. மொத்தம் 2,937 ஏக்கர் பரப்பளவிலான இந்த தொழிற்பூங்காவில் இரு அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது அலகை அமைப்பதற்காக 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருக்கிறது. அதில் 361 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் தவிர மீதமுள்ள 2700-க்கும் கூடுதலான ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு சொந்தமான வளமான வேளாண் விளைநிலங்கள் ஆகும்.

செய்யாற்றை ஒட்டிய வட ஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த பின் விளையும் பூமியை இழக்க விரும்பாத, நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து மேல்மா கூட்டுச் சாலையில் முகாம் அமைத்து கடந்த ஜூலை 2&ஆம் நாள் முதல் ஆயிரக்கணக்கான உழவர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது.

போராட்டத்தின் 125-ஆம் நாளான நேற்று உழவர்கள் அனைவரும் தங்களின் ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள் ஆகியவற்றை செய்யாறு கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் நோக்குடன், டிராக்டரில் பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால், அதை முறியடிக்க பல்வேறு வழிகளில் முயன்ற காவல்துறை, அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து விட்ட நிலையில், 200-க்கும் மேற்பட்ட உழவர்களை கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர். அதுமட்டுமின்றி, உழவர்களின் அறப்போராட்டத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வெள்ளிக்கிழமை இரவு முதல் இன்று அதிகாலை வரை போராட்டக் குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரான இந்த சோதனைகளுக்கு அவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போராட்டம் நடைபெறும் பந்தலில் தங்கியிருந்த 27 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் என்ன ஆனார்கள்? என்பது கூட இதுவரை தெரியவில்லை. அத்துடன் போராட்டம் நடைபெற்று வந்த பந்தலை காவல்துறையினர் சட்டவிரோதமாக பிரித்து எரிந்துள்ளனர். இது அப்பட்டமான அடக்குமுறை ஆகும்.

சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் முப்போகம் விளையும் பூமி ஆகும். இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அவற்றின் உரிமையாளர்கள், அந்த நிலங்களை நம்பியுள்ள தொழிலாளர்களும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து விடுவர். அதனால், தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளை மதித்து நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுவது தான் மக்கள் நல அரசிற்கு அழகு ஆகும். ஆனால், தமிழக அரசோ, அதனிடமுள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நிலத்தைப் பறிக்க துடிக்கிறது.

மண்ணைக் காக்கும் உழவர்கள் மீது அடக்குமுறையை திமுக அரசு கட்டவிழ்த்து விடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், வெளியாட்களை அழைத்து வந்து திட்டத்திற்கு ஆதரவாக பேச வைத்தனர். ஆனால், அதை எதிர்த்து உழவர்கள் வெளிநடப்பு செய்ததால், நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் அப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இப்போது நிலங்களை பறிக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக உழவர்களின் அறப்போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைக்கின்றனர். இது ஒரு போதும் வெல்லது; தோல்வியே பரிசாக கிடைக்கும்.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்குவதற்கும், வறுமை ஒழிப்பதற்கும் உதவும் தொழில் வளர்ச்சித் திட்டங்களில் சிப்காட் தொழிற்பூங்கா திட்டம் மிகவும் சிறந்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அந்த வகையில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், ஒரு பிரிவினருக்காக அமைக்கப்படும் தொழிற்பூங்கா, விளைநிலங்களைப் பறித்து இன்னொரு பிரிவினரின் வாழ்வாதாரங்களை முடக்கக் கூடாது. தொழிலுக்காக உழவு ஒருபோதும் அழிக்கப்படக் கூடாது.

தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப் படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும். செய்யாறு தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்து உழவர்களின் வாழ்க்கையில் அரசு விளக்கேற்ற வேண்டும். மண்ணைக் காக்க போராடி, காவல்துறையால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட 27 உழவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். மாறாக, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தில் அரசு உறுதியாக இருந்தால், அதை எதிர்த்து மக்களைத் திரட்டி நானே போராட்டம் நடத்துவேன்.

The post ’’மண்ணைக் காக்க போராடும் மக்கள் மீது அடக்குமுறையா..?’’ டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/7397-2/feed/ 0
’’ரூ.10,000 கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குக..!’’ டாக்டர் ராமதாஸ் https://madrasmurasu.com/%e0%ae%b0%e0%af%82-10000-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%ae%99/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b0%25e0%25af%2582-10000-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25ae%2599 https://madrasmurasu.com/%e0%ae%b0%e0%af%82-10000-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%ae%99/#respond Thu, 12 Oct 2023 11:08:23 +0000 https://madrasmurasu.com/?p=6801 ’’தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்காக வழங்க வேண்டிய ரூ.10,000 கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி அவை முழு அளவில் செயல்படவும், அனைத்து சங்கங்களும் லாபம் ஈட்டும் நிலையை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்காததால், அவை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், கூட்டுறவு சங்கங்களின் […]

The post ’’ரூ.10,000 கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குக..!’’ டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.

]]>
’’தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்காக வழங்க வேண்டிய ரூ.10,000 கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி அவை முழு அளவில் செயல்படவும், அனைத்து சங்கங்களும் லாபம் ஈட்டும் நிலையை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்காததால், அவை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், கூட்டுறவு சங்கங்களின் மனித வளத்தையும், நிதியையும் உறிஞ்சக் கூடிய வகையிலான திட்டங்களை செயல்படுத்த அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. கூட்டுறவு சங்கங்களின் இயக்கத்தையே நிறுத்தக்கூடிய இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதவை கூட்டுறவு அமைப்புகள் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்புகள் மூடுவிழாவை நோக்கி பயணிக்கின்றன. அதற்குக் காரணம் தமிழக அரசின் தவறான அணுகுமுறை தான். தமிழ்நாட்டில் கடந்த 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பயிர்க்கடன் தள்ளுபடி நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நகைக்கடன் மற்றும் மகளிர் கடனாக ரூ.7573 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதில் ரூ.3415 கோடியை மட்டுமே தமிழக அரசு திரும்பக் கொடுத்திருக்கிறது. இன்னும் ரூ.4158 கோடி கடன் தொகையை திரும்பத் தர வேண்டியுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப் பட்டதில் இன்னும் ரூ.5000 கோடிக்கும் மேல் அரசிடமிருந்து திரும்பப் பெற வேண்டியுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் நிதி சுமார் ரூ.10,000 கோடி திரும்ப வராததால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் கூட்டுறவு சங்கங்களை பல்சேவை மையங்களாக மாற்றி, விவசாய உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் டிராக்டர், அறுவடை எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், சரக்குந்துகள் ஆகியவற்றை உழவர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. போதிய முன்னேற்பாடுகளும், முதலீடுகளும், கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தால் கூட்டுறவு சங்கங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.

உழவர்களுக்கு டிராக்டர், அறுவடை எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், சரக்குந்துகள் ஆகியவற்றை குறைந்த வாடகையில் வழங்கும் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய திட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்னும் கேட்டால் 2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போதே இந்தக் கருவிகள் உழவர்களுக்கு வாடகையின்றி இலவசமாக வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இப்போதும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், வெறுங்கைகளால் முழம் போடுவது போல அதை செயல்படுத்தும் விதம் தான் தவறானதாகும்.

உழவர்களுக்கு வேளாண் கருவிகளை வாடகைக்கு வழங்க விரும்பும் தமிழக அரசு, அவற்றை அதன் சொந்த நிதியில் கொள்முதல் செய்து கூட்டுறவு அமைப்புகளுக்கு வழங்கியிருக்க வேண்டும்; அவற்றை கையாளுவதற்கான பணியிடங்களை உருவாக்கி, அதற்கான தொடர் செலவினங்களை அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இவை எதையும் செய்யாத அரசு, கூட்டுறவு சங்கங்கள் அவற்றின் சொந்த செலவில் இந்தக் கருவிகளை வாங்கி வாடகைக்கு விட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தான் சிக்கலாகும்.

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 4500 கூட்டுறவு சங்கங்களில் 2500 சங்கங்கள் பல ஆண்டுகளாகவே இழப்பில் தான் இயங்கி வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கான நிதி சுமார் ரூ.10,000 கோடியை அரசு இன்னும் வழங்காததால் மேலும் பல நூறு கூட்டுறவு சங்கங்கள் இழப்பில் செயல்படத் தொடங்கியுள்ளன. அவற்றில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்குக் கூட நிதி இல்லாத நிலையில், வேளாண் கருவிகளை வாங்குவதற்கு அந்த சங்கங்கள் எங்கே போகும்? மத்தியக் கூட்டுறவு வங்கிகளிடமிருந்து கடன் பெற்று வேளாண் கருவிகளை வாங்கினால், அவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் அவற்றைக் கையாளும் பணியாளர்களின் ஊதியத்திற்குக் கூட போதுமானதாக இருக்காது. அதனால் ஒரு சில ஆண்டுகளில் அந்த கூட்டுறவு சங்கங்கள் கடனில் மூழ்கி மூடப்படும் நிலை உருவாகும். அதனால் பல்லாயிரம் பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும்.

கூட்டுறவு சங்கங்களை பல்சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளை சுட்டிக் காட்டி, கூட்டுறவு சங்க பணியாளர் அமைப்புகள் கடந்த சில வாரங்களில் இரு முறை போராட்டம் நடத்தின. ஆனாலும், இந்தத் திட்டத்தைத் திணிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் உழவர்களுக்கு கடன் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. அதை விடுத்து அவற்றை வாடகைக்கு கருவிகளை வழங்கும் அமைப்புகளாக மாற்றக் கூடாது. இது கூட்டுறவின் நோக்கத்தை சிதைத்து விடும்.

எனவே, வேளாண் கருவிகளை அரசே அதன் செலவில் கொள்முதல் செய்ய வேண்டும். அவற்றை வாடகைக்கு கொடுப்பதற்காக தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் அவற்றின் இப்போதைய வடிவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்காக வழங்க வேண்டிய ரூ.10,000 கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி அவை முழு அளவில் செயல்படவும், அனைத்து சங்கங்களும் லாபம் ஈட்டும் நிலையை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post ’’ரூ.10,000 கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குக..!’’ டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b0%e0%af%82-10000-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%ae%99/feed/ 0
’’தண்டனை முடித்த இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க டாக்டர் அன்புமணி சொல்லும் அதிரடி யோசனை https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2587%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/#respond Wed, 11 Oct 2023 10:21:51 +0000 https://madrasmurasu.com/?p=6770 ’’தண்டனை முடித்த இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க போர்க்கால நடவடிக்கை தேவை’’ என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறைகளில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த இஸ்லாமியக் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது வருத்தமளிக்கிறது. அனைத்துக் கட்சிகளின் சார்பில் அழுத்தம் கொடுத்தும் இந்த சிக்கலில் ஆக்கப்பூர்வமான விடையோ, உத்தரவாதமோ அரசுத் தரப்பிலிருந்து கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. […]

The post ’’தண்டனை முடித்த இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க டாக்டர் அன்புமணி சொல்லும் அதிரடி யோசனை first appeared on Madras Murasu.

]]>
’’தண்டனை முடித்த இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க போர்க்கால நடவடிக்கை தேவை’’ என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறைகளில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த இஸ்லாமியக் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது வருத்தமளிக்கிறது. அனைத்துக் கட்சிகளின் சார்பில் அழுத்தம் கொடுத்தும் இந்த சிக்கலில் ஆக்கப்பூர்வமான விடையோ, உத்தரவாதமோ அரசுத் தரப்பிலிருந்து கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

எனினும் எந்த பயனும் ஏற்படவில்லை

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அதிக அளவாக 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவர். நன்னடத்தை அடிப்படையில் பலர் 7 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டதும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. ஆனால், வேறு சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியக் கைதிகள், அவர்களின் தண்டனைக் காலம் நிறைவடைந்தும் கூட, 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சிறைகளில் வாடிக் கொண்டுள்ளனர். கோவை மத்திய சிறையில் மட்டும் 38 கைதிகள் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனைக் காலத்தை நிறைவு செய்த அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. எனினும் எந்த பயனும் ஏற்படவில்லை.

நீதியரசர் ஆதிநாதன் குழு

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில் நம்பிக்கையளிக்கும் செய்தி இருக்கும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்தது. ஆனால், அத்தகைய நம்பிக்கை அளிக்கும் உத்தரவாதம் எதுவும் அரசு சார்பில் அளிக்கப்படவில்லை.
நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்வது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நீதியரசர் ஆதிநாதன் குழு, ஒட்டுமொத்தமாக 264 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரைத்தது. ஆனால், அவர்களில் 49 பேரை மட்டுமே, முதல்கட்டமாக, விடுதலை செய்ய ஆளுனருக்கு தமிழக அரசு பரிந்துரைத்திருக்கிறது. அவர்களின் 20 பேர் இஸ்லாமியர்கள் என்பது மனநிறைவளிக்கும் செய்தியாகும். அவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரை ஆகஸ்ட் 28&ஆம் நாள் அனுப்பப்பட்டு, 45 நாட்களாகியும் இதுவரை ஆளுனரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அது தொடர்பாக அரசின் சார்பில் ஆளுனருக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்பது தான் கூடுதல் வருத்தமளிக்கிறது.

ஆளுனருக்கு அழுத்தம்

ஆளுனருக்கு பரிந்துரை அளித்ததுடன் தங்களின் பணி முடிவடைந்து விட்டது என்பதைப் போல, இந்த விவகாரத்தில் ஆளுனர் முடிவெடுத்த பிறகு இஸ்லாமியக் கைதிகள் உள்ளிட்ட 49 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். கைதிகளை விடுதலை செய்ய ஆளுனருக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தைக் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்கவில்லை.

49 கைதிகள் விடுதலை

தமிழ்நாட்டிற்கு கடந்த பத்தாண்டுகளாக ஆளுனர்களாக வருபவர்கள், தண்டனைக் காலத்தை முடித்த கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்யும் விஷயத்தில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து கடந்த 09.09.2018&ஆம் நாள் அமைச்சரவைத் தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்த போதிலும் கூட அப்போதிருந்த ஆளுனர் அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த அநீதி நடந்தது. அதன்பிறகு பேரறிவாளனே உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி 1346 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு மே மாதத்தில் விடுதலை செய்யப்பட்டார்.
இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 49 கைதிகள் விடுதலை விவகாரத்திலும், அரசுத் தரப்பில் அழுத்தம் கொடுக்கப் படாவிட்டால், அவர்களின் விடுதலைக்கான பரிந்துரை ஆளுனர் மாளிகையின் அலமாரிகளில் உறங்கிக் கொண்டே தான் இருக்கும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியக் கைதிகளின் விடுதலை கானல் நீராகவே இருக்கும். அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தான் அவர்களுக்கு நீதி வழங்க முடியும்.

நிபந்தனை இல்லாத சிறை விடுப்பு

எனவே, உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, நீதியரசர் ஆதிநாதன் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 264 கைதிகளில், ஏற்கனவே ஆளுனருக்கு பரிந்துரைக்கப்பட்ட 49 பேர் தவிர மீதமுள்ளவர்களையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மூத்த அமைச்சர்கள் குழுவினர் ஆளுனரை நேரில் சந்தித்து இஸ்லாமியக் கைதிகள் உள்ளிட்ட நீண்ட காலமாக சிறைகளில் வாடும் 264 பேரின் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுக்க வலியுறுத்த வேண்டும். ஆளுனர் தரப்பில் தாமதம் செய்யப்பட்டால், அவர்கள் அனைவரையும் நிபந்தனை இல்லாத சிறை விடுப்பில் அவர்களின் இல்லங்களுக்கு அனுப்ப வேண்டும்.

The post ’’தண்டனை முடித்த இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க டாக்டர் அன்புமணி சொல்லும் அதிரடி யோசனை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/feed/ 0
’’ஐந்தரை லட்சம் அரசு வேலை வாக்குறுதி அப்படியே தான் உள்ளது..!’’ டாக்டர் அன்புமணி https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2590%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b0%25e0%25af%2588-%25e0%25ae%25b2%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25b2 https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2/#respond Fri, 29 Sep 2023 06:19:25 +0000 https://madrasmurasu.com/?p=6604 ’’திமுக வாக்குறுதி அளித்த ஐந்தரை லட்சம் அரசு வேலை குறித்த வாக்குறுதி அப்படியே தான் உள்ளது. அதை நிறைவேற்றுவதை நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்கப்படவில்லை” என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த பிறகு கடந்த இரு ஆண்டுகளில் 12,576 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 10,205 பேருக்கு நேற்று பணி ஆணைகள் […]

The post ’’ஐந்தரை லட்சம் அரசு வேலை வாக்குறுதி அப்படியே தான் உள்ளது..!’’ டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.

]]>
’’திமுக வாக்குறுதி அளித்த ஐந்தரை லட்சம் அரசு வேலை குறித்த வாக்குறுதி அப்படியே தான் உள்ளது. அதை நிறைவேற்றுவதை நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்கப்படவில்லை” என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த பிறகு கடந்த இரு ஆண்டுகளில் 12,576 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 10,205 பேருக்கு நேற்று பணி ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படவிருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் கடந்த இரு ஆண்டுகளில் வழங்கப்பட்டதாக கூறப்படும் அரசு வேலைகளின் எண்ணிக்கையும், அடுத்த இரு ஆண்டுகளில் வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் தமிழக அரசு வேலைகளின் எண்ணிக்கையும் போதுமானவை அல்ல.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 22,781 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததை விட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது சாதனை அல்ல.

தமிழ்நாட்டில் அனைத்து அரசுத் துறைகளிலும் சேர்த்து 4 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்களால் அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. நடப்பாண்டில், 6553 இடைநிலை ஆசிரியர்கள், 3587 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 10,140 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தும் இதுவரை ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை கூட இன்னும் வெளியிடப்படாததால் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகக் கூட அவர்கள் நியமிக்கப்பட வாய்ப்பில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், புதிதாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் கூட இன்னும் நிரப்பவில்லை. எந்தத் துறையிலும் புதிய பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. அந்த வகையில் திமுக வாக்குறுதி அளித்த ஐந்தரை லட்சம் அரசு வேலை குறித்த வாக்குறுதி அப்படியே தான் உள்ளது. அதை நிறைவேற்றுவதை நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்கப்படவில்லை.

பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும், தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும் பத்தாண்டுகளைக் கடந்தும் இன்னும் பணி நிலைப்பு செய்யப்படவில்லை. அதை விட ஆபத்தான போக்காக அனைத்து அரசுத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தொழிலாளர்கள் உரிமைக்கு எதிரானது என்பதைக் கடந்து அரசுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டையும், பொறுப்புடைமையையும் கடுமையாக பாதிக்கும்.

சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியவாறு,’’அரசாங்க வேலைக்கு இருக்கின்ற மவுசு, எந்தக் காலத்திலும் குறையாது. போட்டித் தேர்வுகளில் தேர்வு பெற்று, எப்படியாவது ஒரு அரசுப் பணியை வாங்கிவிட வேண்டும் என்பது, படித்த இளைஞர்களுடைய ஒரு பெரிய கனவு” என்பது மிகவும் உண்மை. தமிழ்நாட்டு இளைஞர்களின் இந்தக் கனவை நனவாக்கும் கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அதற்கான நடவடிக்கைகளை அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையிலும், திமுக ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் நடப்பு நிதியாண்டில் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா இரு லட்சம் வீதம் 4 லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

The post ’’ஐந்தரை லட்சம் அரசு வேலை வாக்குறுதி அப்படியே தான் உள்ளது..!’’ டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2/feed/ 0
”வன்னியர் 10.50% இட ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசுக்கு கெடு..!’’ டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-10-50-%e0%ae%87%e0%ae%9f-%e0%ae%92%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%258d-10-50-%25e0%25ae%2587%25e0%25ae%259f-%25e0%25ae%2592%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-10-50-%e0%ae%87%e0%ae%9f-%e0%ae%92%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4/#respond Mon, 18 Sep 2023 05:23:30 +0000 https://madrasmurasu.com/?p=6350 ’’10.50% வன்னியர் இட ஒதுக்கீடு: இலவு காத்த கிளி அல்ல பா.ம.க. – அடுத்த மாதத்திற்குள் சட்டம் இயற்ற வேண்டும்’’ என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டிற்காக எனது தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 ஈகியர்களின் 36-ஆம் நினைவுநாளும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சமூகநீதி நாளும் இன்று கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால், வன்னியர்களுக்கு […]

The post ”வன்னியர் 10.50% இட ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசுக்கு கெடு..!’’ டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை first appeared on Madras Murasu.

]]>
’’10.50% வன்னியர் இட ஒதுக்கீடு: இலவு காத்த கிளி அல்ல பா.ம.க. – அடுத்த
மாதத்திற்குள் சட்டம் இயற்ற வேண்டும்’’ என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டிற்காக எனது தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 ஈகியர்களின் 36-ஆம் நினைவுநாளும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சமூகநீதி நாளும் இன்று கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால், வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்குவதற்கான வாய்ப்புகள் மின்மினிப்பூச்சியின் வெளிச்சத்திற்கு இணையாகக் கூட தெரியவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது; இதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது.

வன்னியர்களின் சமூகநீதிப் போராட்ட வரலாற்றில் இன்றைய நாள் முதன்மைத்துவம் வாய்ந்த நாள். பல நூற்றாண்டுகளாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த வன்னியர்களுக்கு சமூக நீதி கோரி 1980 ஆம் ஆண்டு முதல் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் பலனில்லாமல் போன நிலையில், அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, 36 ஆண்டுகளுக்கு முன் 1987-ஆம் ஆண்டில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று தான் ஒரு வார சாலைமறியல் போராட்டத்தை தொடங்கினோம்.

போராட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத காவல்துறையினர் கட்டவிழ்த்து விட்ட துப்பாக்கிச் சூடு, தாக்குதல் உள்ளிட்ட அடக்குமுறைகளுக்கு 21 சொந்தங்களை பலி கொடுத்தோம். அதைத் தொடர்ந்து தான் வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதிகளை ஒருங்கிணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய பிரிவை 1989-ஆம் ஆண்டு ஏற்படுத்திய அப்போதைய முதலமைச்சர் கலைஞர், அந்தப் பிரிவுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினார். 21 உயிர்களை பலி கொடுத்து வாங்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதால் தான் மீண்டுமொரு சமூகநீதி போராட்டம் நடத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான கடந்த ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் கூட, உரிய தரவுகளை திரட்டி இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் கிடையாது என்று கடந்த ஆண்டு மார்ச் 31-ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆனாலும் கூட, அதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் இருந்து 3 மாதங்களில் உரிய தரவுகளைத் திரட்டி, சட்டம் இயற்றி கடந்த கல்வி ஆண்டிலேயே உள் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், 9 மாதங்கள் தாமதமாக கடந்த நவம்பர் 17-ஆம் நாள் தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டது. அதன்பின் இரு மாதங்கள் கடந்து 2023-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாளில் தான், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்கான கூடுதல் ஆய்வு வரம்பை (Additional Terms of Reference)பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அதன்படி, ஏப்ரல் 11-ஆம் நாளுக்குள் இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கான எந்த பணியையும் ஆணையம் மேற்கொள்ளாத நிலையில், அதன்பின் மேலும் 6 மாதங்களுக்கு காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசு ஆணையிட்டது. அதுவே பெரும் சமூக அநீதி தான்.

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட காலக்கெடுவும் நிறைவடைவதற்கு இன்னும் 24 நாட்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த முன்னெடுப்புகளும் செய்யப் பட்டதாக தெரியவில்லை. தமிழக அரசு நினைத்தால் ஒரு மாதத்தில் அனைத்துத் தரவுகளையும் திரட்டி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தையே நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிக்க ஆணையிட்டு 9 மாதங்கள் ஆகவிருக்கும் நிலையிலும் இதுவரை எதுவுமே நடக்கவில்லை எனும் போது, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு விருப்பம் இல்லையோ? இட ஒதுக்கீடு வழங்குவதாக ஆசை வார்த்தை கூறியே காலத்தை கடத்தி விட அரசு நினைகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இது நியாயமானது தான்.

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த இரு ஆண்டுகளில் 03.11.2021, 08.04.2022, 04.07.2022, 10.09.2022, 17.02.2023, 03.04.2023, 10.05.2023 ஆகிய நாள்களில் மொத்தம் 7 முறை கடிதங்கள் எழுதியிருக்கிறேன். பலமுறை தொலைபேசி வழியாக உரையாடியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் எனக்கு அளித்த வாக்குறுதி,‘‘ வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்’’ என்பது தான். ஆனால், அதற்கான அறிகுறிகள் மின்மினிப் பூச்சியின் ஒளி அளவுக்குக் கூட தென்படவில்லை என்பது தான் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்ட போதே, அதற்கு பா.ம.க. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக பா.ம.க. குழுவை அழைத்துப் பேசிய அரசுத் தரப்பு, ‘‘ 6 மாதங்கள் என்பது அதிகபட்ச கால அவகாசம் தான். ஒரு மாதத்திற்குள்ளாகவே பணிகள் முடிந்து இட ஒதுக்கீடு வழங்கப்பட வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தனர். அமைச்சர்கள் சிலரும் இதே கருத்தை தெரிவித்தனர். ஆனால், 6 மாத கெடுவே முடிவடையவுள்ள நிலையில் இன்னும் ஆக்கப்பூர்வமாக எதுவும் நடைபெற வில்லை எனும் போது, இந்த விவகாரத்தில் அரசை இன்னும் எப்படி நம்பிக் கொண்டிருக்க முடியும்?

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவம் அன்புமணி இராமதாஸ், இருமுறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். பா.ம.க.வின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான மூத்த நிர்வாகிகளும் கட்சித் தலைமையின் பிரதிநிதிகளாக அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்துத்து பேசினார்கள். அவர்களிடமும் இதே கருத்தைத் தான் தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், வாக்குறுதிகள் அனைத்தும் வாக்குறுதிகளாகவே உள்ளனவே தவிர, அவற்றுக்கு செயல்வடிவம் தரப்படவில்லை. வாக்குறுதிகளை மட்டும் வைத்துக் கொண்டு சமூக நீதியை வென்றெடுக்க முடியாது. இதை அரசு உணர வேண்டும்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதன்பின் இரு நாள்கள் கழித்து ஏப்ரல் 2&ஆம் நாள் சென்னையில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தில் நான் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதை நினைவு கூற விரும்புகிறேன். ‘‘சமூகநீதியை எப்போதும் நாம் போராடித் தான் வென்றெடுத்து வந்துள்ளோம், ஆனால், இந்த முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போராடாமலேயே இட ஒதுக்கீட்டை வழங்குவார்’’ என்று நான் கூறினேன். அதற்காகவே இதுவரை எந்த போராட்டமும் நடத்தப்படவில்லை. தேவைப்பட்டால் தீவிர போராட்டங்களை நடத்தி சமூகநீதியை வென்றெடுக்க பாமக தயாராக உள்ளது.

சமூகநீதியை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான இளைஞர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர்; போராட்டத்தில் பங்கேற்க அவர்கள் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். சமூகநீதியைப் பெறுவதில் தாங்கள் ஏமாற்றப்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள், சமூகநீதியை வென்றெடுப்பதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராகவே உள்ளனர். அத்தகைய மாபெரும் போராட்டத்தை தலைமையேற்று நடத்த நானும் தயாராகவே உள்ளேன்.

வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் பா.ம.க. இனியும் இலவுகாத்த கிளியாக இருக்க முடியாது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் வன்னிய இளைஞர்கள் என்னைப் பார்த்து, 10.50% இட ஒதுக்கீடு என்ன ஆனது? என்று கேட்கிறார்கள். அதற்கான பதில் என்னிடம் இல்லை. வன்னிய இளைஞர்களை நீண்ட காலம் கட்டுப்படுத்தியும் வைக்க முடியாது. இதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். சமூகநீதி நாளான இன்று இதுகுறித்த நிலைப்பாட்டை தமிழக அரசு உறுதியாக அறிவிக்க வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிகிறது. அதற்கு முன்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையைப் பெற்று, அதனடிப்படையில் வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் செயல்படுத்தபட்டு வரும் 69% இட ஒதுக்கீட்டின் ஒவ்வொரு பிரிவிலும், அதில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எத்தனை விழுக்காடு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது? அதை தவிர்த்து பொதுப்போட்டிப் பிரிவுக்கான 31 விழுக்காட்டில் எந்தெந்த சமுதாயங்களுக்கு எத்தனை விழுக்காடு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது? என்பது குறித்தும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

The post ”வன்னியர் 10.50% இட ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசுக்கு கெடு..!’’ டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-10-50-%e0%ae%87%e0%ae%9f-%e0%ae%92%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4/feed/ 0
’’கூவம் மற்றும் அடையாற்றின் கரைகளில் மக்கள் காற்று வாங்கியபடி பொழுதுபோக்குவது எப்போது?’’ டாக்டர் அன்புமணி https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%82%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2582%25e0%25ae%25b5%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%82%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/#respond Sat, 16 Sep 2023 09:01:46 +0000 https://madrasmurasu.com/?p=6346 ’’சென்னையில் கூவம், அடையாறு சீரமைப்பின் நிலை என்ன? வெள்ளை அறிக்கை வேண்டும்’’ என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட் அறிக்கை: சென்னையில் ஓடும் கூவம் மற்றும் அடையாற்றை சீரமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு, 8 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அத்திட்டத்திற்காக இதுவரை ரூ.790 கோடி செலவழிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 54 விழுக்காட்டுக்கும் கூடுதலான நிதி செலவிடப்பட்டு விட்ட நிலையில், அதற்கு இணையான முன்னேற்றம் கண்களுக்கு […]

The post ’’கூவம் மற்றும் அடையாற்றின் கரைகளில் மக்கள் காற்று வாங்கியபடி பொழுதுபோக்குவது எப்போது?’’ டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.

]]>
’’சென்னையில் கூவம், அடையாறு சீரமைப்பின் நிலை என்ன? வெள்ளை அறிக்கை வேண்டும்’’ என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட் அறிக்கை:

சென்னையில் ஓடும் கூவம் மற்றும் அடையாற்றை சீரமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு, 8 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அத்திட்டத்திற்காக இதுவரை ரூ.790 கோடி செலவழிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 54 விழுக்காட்டுக்கும் கூடுதலான நிதி செலவிடப்பட்டு விட்ட நிலையில், அதற்கு இணையான முன்னேற்றம் கண்களுக்கு தென்படவில்லை.

சென்னையின் விரும்பத்தகாத அடையாளங்களாக திகழும் அடையாறு, கூவம் ஆகிய ஆறுகளை சீரமைப்பதற்காக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதற்காக அந்த அறக்கட்டளைக்கு 2015&16ஆம் ஆண்டு முதல் ரூ.1479 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியில் இதுவரை ரூ.790 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின்படி, தூர் வாருதல், அகலப்படுத்துதல், கரைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக மட்டும் ரூ.129.22 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த இரு ஆறுகளின் கரைகளில் வாழ்ந்த மக்களை அப்புறப்படுத்தி வேறு இடங்களில் குடியமர்த்துவதற்காக ரூ.290.13 கோடி, ஆறுகளில் கழிவுநீரைக் கொட்டும் குழாய்களை அடைப்பதற்காக ரூ.129.83 கோடி, சுற்றுச்சுவர் மற்றும் வேலிகளை அமைப்பதற்காக ரூ.122.99 கோடி, மரம் வளர்ப்பு மற்றும் அழகுபடுத்துதல் பணிக்காக ரூ.20.75 கோடி செலவிடப்பட்டிருப்பதாக தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பணிகள் நடைபெற்றிருந்தால் அடையாறு மற்றும் கூவம் ஆறு ஓரளவாவது அழகாகியிருக்க வேண்டும்.

ஆனால், அதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. கூவம், அடையாற்றை அழகுபடுத்த சுமார் 800 கோடி செலவழிக்கப்பட்டிருந்தால், அவற்றை கண்களை அகலவிரித்து பார்க்கும் நிலை உருவாகி இருக்க வேண்டும்; மாறாக, இப்போதும் இந்த இரு ஆறுகளின் அருகில் சென்றாலே மூக்கை மூட வேண்டிய நிலை தான் உள்ளது. ஆறுகளை சீரமைக்கும் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடான ரூ.1479 கோடியில் இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை என்பது 54 விழுக்காடு ஆகும். ஒரு திட்டத்திற்கான ஒதுக்கீட்டில் 54% செலவழிக்கப்பட்டிருந்தால், அந்த அளவுக்கு பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கூவம் மற்றும் அடையாற்றை சீரமைக்கும் பணிகளில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை; அதிகாரிகளிடமும் இதற்கு பதில் இல்லை.
அடையாற்றில் நந்தம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட சில இடங்களிலும், கூவம் ஆற்றில் அமைந்தகரை, எத்திராஜ் சாலை உள்ளிட்ட சில இடங்களிலும் சீரமைப்புப் பணிகள் ஓரளவு நடந்திருப்பது உண்மை. அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் மதிப்பு சில லட்சங்களில் வேண்டுமானால், இருக்கலாமே தவிர, அரசால் குறிப்பிடப்படும் அளவுக்கு இருக்காது. கூவம் ஆற்றை சீரமைக்கும் பணி 2015&ஆம் ஆண்டிலும், அடையாற்றை சீரமைக்கும் பணி 2017&ஆம் ஆண்டிலும் தொடங்கியது.
இந்த பணிகள் தொடங்குவதற்கு முன்பாக இந்த இரு ஆறுகளை பார்த்தவர்கள், இப்போது இந்த ஆறுகளை பார்த்தால் அதிக அளவாக 6 வேறுபாடுகளைக் கூட காண முடியாது. இந்த இரு ஆறுகளும் தொடங்கிய இடம் முதல் கடலில் கலக்கும் இடம் வரை பெரும்பான்மையான பகுதிகளில் சகிக்கவே முடியாத அளவுக்கு நாற்றம் வீசுகிறது. அப்படியானால், ஆறுகள் சீரமைப்புத் திட்டத்தின்படி என்னென்ன பணிகள் தான் மேற்கொள்ளப்பட்டன? என்ற வினா எழுகிறது. ஆனால், விடை தான் கிடைக்கவில்லை.

அடையாறும், கூவமும் ஒரு காலத்தில் சென்னையின் புனித ஆறுகளாகத் தான் இருந்தன. வள்ளல் பச்சையப்ப முதலியார் போன்றவர்கள் கூவம் ஆற்றில் குளித்து ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். கோயில்களின் வழிபாட்டுக்கு இந்த இரு ஆறுகளில் இருந்து தான் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் சென்னை மாநகர மக்களின் 60 ஆண்டு கால கனவாக இருந்து வருகிறது. அதற்காக பல தருணங்களில் ஆயிரக்கணக்கான கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டனவே தவிர, கூவம் மற்றும் அடையாற்றின் நாற்றம் மட்டும் குறையவில்லை. இந்த நிலை எப்போது மாறும்? எனத் தெரியவில்லை.

அடையாறு மற்றும் கூவத்தை சீரமைப்பது சாத்தியமில்லாத இலக்கு அல்ல. உலகின் பல நாடுகளில் இதை விட மோசமான ஆறுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அடையாறு தொடங்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரையிலான நீளம் 42 கி.மீ மட்டும் தான். அதேபோல், கூவம் ஆற்றின் நீளம் 65 கி.மீ தான். அரசியல் துணிச்சல் மற்றும் மன உறுதியுடன் பணிகள் தொடங்கப்பட்டால், 5 ஆண்டுகளில் கூவத்தையும், அடையாற்றையும் அழகு மிகுந்த சுற்றுலாத் தலங்களாக மாற்றி விட முடியும். ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கூவம், அடையாறு சீரமைப்பு என்பது தேர்தல் காலத்து பேசு பொருளாக இருக்கிறதே தவிர, அதை செயல்படுத்தும் துணிச்சல் எந்த அரசுக்கும் இதுவரை வரவில்லை.

அடையாறு மற்றும் கூவத்தை சீரமைப்பதற்காக செலவிடப்பட்ட தொகையை ஆற்றில் கொட்டியதாக நினைத்து கடந்து போய்விட முடியாது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. எனவே, சென்னை நதிகள் சீரமைப்புத் திட்டத்தில் இதுவரை என்னென்ன பணிகள் நடைபெற்றுள்ளன? அனைத்து பணிகளும் எப்போது முடியும்? கூவம் மற்றும் அடையாற்றின் கரைகளில் மக்கள் காற்று வாங்கியபடி பொழுதுபோக்குவது எப்போது? என்பன போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

The post ’’கூவம் மற்றும் அடையாற்றின் கரைகளில் மக்கள் காற்று வாங்கியபடி பொழுதுபோக்குவது எப்போது?’’ டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%82%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/feed/ 0
’’நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்..!’’ டி.என்.பி.எஸ்.சி-க்கு டாக்டர் ராமதாஸ் வைத்த கோரிக்கை https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/#respond Thu, 14 Sep 2023 07:55:01 +0000 https://madrasmurasu.com/?p=6288 ’’தமிழக அரசில் அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’’ என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் போது, அதற்காக நடத்தப்படும் நேர்முகத்தேர்வு தகுதியும், திறமையும் கொண்ட பலரின் வாய்ப்புகளை பறித்து விடுகிறது. அனைவருக்கும் சம நீதியும், சமுகநீதியும் கிடைக்க நேர்முகத்தேர்வு பெருந்தடையாக உள்ளது. அந்தத் தடை […]

The post ’’நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்..!’’ டி.என்.பி.எஸ்.சி-க்கு டாக்டர் ராமதாஸ் வைத்த கோரிக்கை first appeared on Madras Murasu.

]]>
’’தமிழக அரசில் அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’’ என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் போது, அதற்காக நடத்தப்படும் நேர்முகத்தேர்வு தகுதியும், திறமையும் கொண்ட பலரின் வாய்ப்புகளை பறித்து விடுகிறது. அனைவருக்கும் சம நீதியும், சமுகநீதியும் கிடைக்க நேர்முகத்தேர்வு பெருந்தடையாக உள்ளது. அந்தத் தடை விரைவாக நீக்கப்பட வேண்டும்.

ஆந்திரத்தில் முதல் தொகுதி பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் 2019-ஆம் ஆண்டு முதல் நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இங்கும் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும்; வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்; முறைகேடுகளைத் தடுக்கும். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

The post ’’நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்..!’’ டி.என்.பி.எஸ்.சி-க்கு டாக்டர் ராமதாஸ் வைத்த கோரிக்கை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/ 0
’’கருகிய குறுவை நெற்பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம்..!” டாக்டர் ராமதாஸ் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2588-%25e0%25ae%25a8%25e0%25af%2586%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0/#respond Sat, 09 Sep 2023 04:36:56 +0000 https://madrasmurasu.com/?p=6192 ’’காவிரியில் போதிய அளவு தண்ணீர் வரவில்லை. குறுவை நெற்பயிர்கள் போதிய அளவுக்கு நீர் இல்லாமல் கருகிவிட்டன. எனவே, ஏக்கருக்குரூ.40,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: காவிரியில் போதிய அளவு தண்ணீர் வராததால், காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு கண்களுக்கு எட்டிய வரை எந்த வாய்ப்புகளும் தென்படாததால், அரும்பாடுபட்டு வளர்த்த குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற […]

The post ’’கருகிய குறுவை நெற்பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம்..!” டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.

]]>
’’காவிரியில் போதிய அளவு தண்ணீர் வரவில்லை. குறுவை நெற்பயிர்கள் போதிய அளவுக்கு நீர் இல்லாமல் கருகிவிட்டன. எனவே, ஏக்கருக்குரூ.40,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

காவிரியில் போதிய அளவு தண்ணீர் வராததால், காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு கண்களுக்கு எட்டிய வரை எந்த வாய்ப்புகளும் தென்படாததால், அரும்பாடுபட்டு வளர்த்த குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற முடியாதோ? என்ற கவலையிலும், வேதனையிலும் காவிரி படுகை உழவர்கள் ஆழ்ந்துள்ளனர்.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக, மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஜூன் 12&ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டதால், வழக்கத்தை விட அதிகமாக 5.10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை பருவ நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டன. ஆனால், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், கர்நாடக அணைகளில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாததால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே குறுவைப் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. இயற்கை கை கொடுத்தாலோ, உச்சநீதிமன்றம் நீதி வழங்கினாலோ, குறுவை பயிர்களை பெரிய அளவில் பாதிப்பின்றி காப்பாற்றி விடலாம் என்று உழவர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில் எல்லா வாய்ப்புகளும் நழுவி விட்டன; நம்பிக்கைகள் பொய்த்து விட்டன.

மேட்டூர் அணையிலிருந்து கடந்த சில வாரங்களாகவே வினாடிக்கு 8000 கன அடிக்கும் குறைவாக தண்ணீர் தான் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த அளவு 6503 கன அடியாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. இன்றைய நிலையில், குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், வினாடிக்கு குறைந்தது 15,000 கன அடி வீதம் காவிரியில் நீர் திறந்து விட வேண்டும். ஆனால், அதற்கு சிறிதளவு கூட வாய்ப்பு இல்லை.

மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று காலை 46 அடிக்கு கீழாகவும், அணையின் நீர் இருப்பு 15 டி.எம்.சிக்கு கீழாகவும் குறைந்து விட்டன. மேட்டூர் அணையின் நீர்வரத்தும் வினாடிக்கு 3000 கன அடிக்கும் கீழ் சென்று விட்டது. இத்தகைய சூழலில் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் இன்னும் ஒரு சில நாட்களுக்குக் கூட தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை. கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளிலும் சேர்த்து 64 டி.எம்.சி தண்ணீர் இருப்பதால் அம்மாநில அரசு மனம் வைத்தால் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால், வினாடிக்கு 5000 கன அடி வீதம் திறக்கப்படும் தண்ணீரையே, செப்டம்பர் 12&ஆம் நாளுக்குப் பிறகு வழங்க முடியாது என்று கர்நாடகம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. காவிரி சிக்கலில் கடைசி நம்பிக்கையாக இருந்த உச்சநீதிமன்றமும், காவிரி வழக்கை இம்மாதம் 21&ஆம் நாளுக்கு ஒத்திவைத்து விட்டதால், இப்போதைக்கு குறுவை பயிர்களைக் காப்பாற்ற அரசிடமும், உழவர்களிடமும் எந்த தீர்வும் இல்லை.

காவிரி பாசன மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அறுவடை நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு வழியே இல்லை. குறுவைப் பயிர்கள் காப்பாற்றப்படாவிட்டால், உழவர்களுக்கு பேரிழப்பு ஏற்படக்கூடும். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஓரளவு வெற்றியாக நடைபெற்று வருகிறது. அதற்கு முன் காவிரியில் தண்ணீர் கிடைக்காததால் தொடர்ந்து 8 ஆண்டுகள் உழவர்கள் பேரிழப்பை எதிர்கொண்டனர். காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்களுக்கு அதேநிலை மீண்டும் ஏற்படக்கூடாது.

உழவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படாமல் அரசு தான் தடுக்க வேண்டும்.
காவிரியில் தண்ணீர் இல்லாததால் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர்கள் கருகும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட பகுதிகளிலும் கூட தண்ணீர் பற்றாக்குறை காரணமாக போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வரும் வேளாண்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும் கூட, உறுதியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு ஏமாற்றமளித்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் என்.எல்.சி நிறுவனத்தால் குறுவை பயிர்கள் அழிக்கப்பட்ட போது ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதையே அளவுகோலாகக் கொண்டு தண்ணீர் இல்லாமல் கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். விளைச்சல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், பாதிப்பின் மதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post ’’கருகிய குறுவை நெற்பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம்..!” டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0/feed/ 0
’’11 ஆம் வகுப்பு முதல் ’நீட் தேர்வு’ பயிற்சி தொடங்க வேண்டும்..!’’ டாக்டர் ராமதாஸ் https://madrasmurasu.com/11-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=11-%25e0%25ae%2586%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%259f https://madrasmurasu.com/11-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f/#respond Wed, 06 Sep 2023 04:56:31 +0000 https://madrasmurasu.com/?p=6145 ’’நீட் பயிற்சியை அரசு பள்ளி மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு முதல் தொடங்க வேண்டும்’’ என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுத விரும்பும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதது ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆண்டுகளில் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்ட நீட் பயிற்சியால் எந்த பயனும் விளையாத நிலையில், நடப்பாண்டிலாவது பயிற்சியை முன்கூட்டியே […]

The post ’’11 ஆம் வகுப்பு முதல் ’நீட் தேர்வு’ பயிற்சி தொடங்க வேண்டும்..!’’ டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.

]]>
’’நீட் பயிற்சியை அரசு பள்ளி மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு முதல் தொடங்க வேண்டும்’’ என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுத விரும்பும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதது ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆண்டுகளில் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்ட நீட் பயிற்சியால் எந்த பயனும் விளையாத நிலையில், நடப்பாண்டிலாவது பயிற்சியை முன்கூட்டியே தொடங்குவது தான் சரியான செயலாக இருக்கும்.

சமூகநீதிக்கு எதிரான நீட் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; 12&ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. எனினும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள், குறிப்பாக தனியார் நிறுவனங்களில் நீட் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாத அரசு பள்ளிகளின் மாணவர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்வது தான் அரசின் கடமை ஆகும். அந்த கடமையை நிறைவேற்றுவது கடந்த காலங்களில் இருந்ததை விட, இப்போது சவாலானதாக மாறியிருக்கிறது என்பது தான் ஆய்வுகள் சொல்லும் உண்மை.

நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வது கடினமானதாக மாறியுள்ளது. நடப்பாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.50% ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களைத் தவிர, பொதுப்பிரிவில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட சேரவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.50% ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்தவர்களில் கூட 20% மாணவர்கள் மட்டும் தான் முதல் முயற்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள். மீதமுள்ள 80% மாணவர்கள் அரசு பள்ளிகளில் 12&ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனியார் பயிற்சி மையங்களில் சிறப்பு பயிற்சி பெற்ற பிறகே நீட் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கும் மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் 7.50% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்றாலும் கூட தனியார் பயிற்சி மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது நல்வாய்ப்புக்கேடானது ஆகும். இந்த நிலையை மாற்றுவதற்கான ஒரே தீர்வு, தனியார் பயிற்சி மையங்களில் அளிப்பதை விட தரமான பயிற்சியை தமிழக அரசு பள்ளிகளில் வழங்குவது தான். ஆனால், தவிர்க்கவே முடியாத இந்தத் தீர்வை செயல்படுத்த வேண்டியதன் தேவையை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உணர்ந்ததாக தெரியவில்லை.

அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலில் தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடியாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பின் 2021&22ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு ஹைடெக் ஆய்வகங்களிலும், 15 மாதிரி பள்ளிகளில் எலைட் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேற்கண்ட இரு வகை பயிற்சிகளிலும் பல குறைபாடுகள் இருந்தன என்பதை எவரும், எங்கும், எப்போதும் மறுக்க முடியாது. இந்தக் குறைகளை களையும் வகையில் கடந்த ஆண்டு வட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் 415 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு, அவற்றில் மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்தமாக 14 நாட்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டதால் அதுவும் பயனளிக்கவில்லை.

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் வசதி படைத்த மாணவர்கள் குறைந்தது இரு ஆண்டுகள் முதல் நான்கு ஆண்டுகள் வரை தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர். அந்தப் பயிற்சிக்குப் பிறகு முதல் முயற்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால், மீண்டும் ஓரிரு ஆண்டுகள் பயிற்சி பெறுகின்றனர். இவ்வாறாக நீட் தேர்வில் வெற்றி பெற பலரும் 6 ஆண்டுகள் வரை பயிற்சி பெற வேண்டியிருக்கும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 14 நாட்கள் பயிற்சி கொடுப்பது எந்த வகையில் போதுமானதாக இருக்கும். அதனால் தான் அரசு பள்ளி மாணவர்களால் பொதுப்பிரிவு இடங்களில் தகுதி பெற முடியவில்லை என்பதுடன், 7.50% ஒதுக்கீட்டிலும் 80% இடங்களை தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தாரை வார்க்க வேண்டியிருக்கிறது.

நீட் விலக்கு பெறும் வரை, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீண்ட காலம் பயிற்சி அளிக்க வேண்டியதன் தேவையை தமிழக அரசு இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை வாரத்தில் ஒரு நாள் பெயரளவில் பயிற்சி அளிக்கும் முறையை கைவிட்டு, அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தது இரு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுவதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும். அதற்காக 11 ஆம் வகுப்பு தொடங்கிய வாரம் முதல், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்து நீட் தொடங்குவதற்கு முந்தைய வாரம் வரை இரு ஆண்டுகளுக்கு முழுமையான பயிற்சியை திறமையான ஆசிரியர்கள், வல்லுனர்களைக் கொண்டு அரசு வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டில் வட்டத்திற்கு ஒரு மையத்தில் மட்டுமே நீட் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் வட்டத்திற்கு இரு மையங்களில் பயிற்சி வழங்கப்பட வேண்டும். பயிற்சியில் சேர விருப்பமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு கையேடு மற்றும் வினா – விடை தொகுப்பை இலவசமாக வழங்க வேண்டும். நடப்பாண்டிற்கான பயிற்சி வகுப்புகளை அடுத்த வாரத்திலேயே தொடங்குவதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post ’’11 ஆம் வகுப்பு முதல் ’நீட் தேர்வு’ பயிற்சி தொடங்க வேண்டும்..!’’ டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/11-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f/feed/ 0