acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’பருத்தி விவசாயிகளின் கண்ணீர் கதை..!’’ வியாபாரிகளின் கனிவான கவனத்திற்கு first appeared on Madras Murasu.
]]>பருத்தியின் கொள்முதல் விலை குறைந்து விட்டது. ஆனால் ஜவுளி கடைகளில் ஆடைகளின் விலை குறையவில்லை. Poomex பனியன் கடந்த ஆண்டு விற்ற அதே ₹115 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இது ஒரு புறம் இருக்கட்டும்.
கொள்முதல் செய்யும் வியாபாரிகள், விவசாயிகளின் உழைப்பை எப்படி எல்லாம் பறிக்கிறார்கள் என்று பாருங்கள்.
வயலில் பருத்திச் செடியில் இருந்து நெட்டியுடன் பறித்து அதை வீட்டிற்கு கொண்டு வந்து நெட்டி தனியாக பஞ்சு தனியாக எடுத்து அந்தப் பஞ்சை சாக்கு மூட்டைகளில் அடைத்து காற்றுப் புகாத அறையில் சேமித்து வைப்போம்.
முழுவதும் அறுவடை செய்து முடிந்து, விற்பனைக்கு தயாராகும் போது வியாபாரி தராசுடன் வீட்டிற்கு வந்து மூட்டை மூட்டையாக எடை போடுவார். அதில் ஒரு மூட்டையை தூக்கி தராசில் வைத்தால், 85 கிலோ 650 கிராம் எடை காட்டுகிறது என்று அதில் 85 கிலோவை மட்டும் கணக்கில் எழுதுவார்கள் 650 கிராம் கழித்து விட்டு கணக்கில் சேர்க்க மாட்டார்கள். காரணம் கேட்டால் அமைதியாக இருப்பார்கள்.
அதாவது 85 கிலோ 850 கிராம் இருந்தால் மட்டுமே 86 கிலோ என்று கணக்கில் எழுதுவார்கள்.
இதை எதிர்த்து நாம் கொஞ்சம் அழுத்தமாக கேட்க முடியாது. காரணம், அனைத்து விவசாயிகளிடமும் இதே போலத்தான் கொள்முதல் செய்கிறார்கள். இதையும் மீறி நாம் கேட்டால் அடுத்த ஆண்டு நம்மிடம் உள்ள விளை பொருட்களை கொள்முதல் செய்ய வர மாட்டார்கள்.
கொள்முதல் செய்யும் பருத்தியை ஏற்றி, இறக்குவது , லாரி போக்குவரத்து, டோல்கேட் என்று வியாபாரிகளுக்கும் பல்வேறு சிக்கல்கள் உள்ளது என்பதை நாம் அறிவோம். அதற்காக விவசாயிகளிடம் கண் முன்னே ஏமாற்றாமல், சரியான முறையில் எடையை வைத்துக் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை நமது விருப்பம்.
இதை எதற்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை சேர்ந்த ஒருவர் தான் வாங்கிய பிஸ்கட் பாக்கெட்டில் 16 பிஸ்கட்டிற்கு ‘1 குறைவாக இருந்ததால், அதற்காக அவர் தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டு உள்ளது.
The post ’’பருத்தி விவசாயிகளின் கண்ணீர் கதை..!’’ வியாபாரிகளின் கனிவான கவனத்திற்கு first appeared on Madras Murasu.
]]>The post ”பருத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம்..!” மோடிக்கு கடிதம் எழுதினார் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>அக்கடிதத்தில், நடப்பு அறுவடைப் பருவத்தில், பருத்தியின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பருத்தி விவசாயிகள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலை குறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பருத்தி விவசாயிகள், குவிண்டால் ஒன்றுக்கு 12,000 ரூபாய் என்ற வீதத்தில் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனை செய்து அதிக இலாபம் ஈட்ட முடிந்தது என்றும், அதனால் உற்சாகமடைந்த பெரும்பாலான விவசாயிகள், இந்த ஆண்டும் பருத்தி சாகுபடியைத் தேர்வு செய்தனர் என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தற்போது பருத்தியின் விலை, குவிண்டால் ஒன்றுக்கு 5,500 ரூபாய் எனக் கடுமையாக சரிந்துள்ளதால், விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் விளைபொருட்களின் சந்தை விலையை நிலைப்படுத்துவதில், ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை முக்கியப் பங்கு வகிப்பதாகவும், தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய பருத்திக் கழகத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் நடவடிக்கைகள் பருத்தி விலையை நிலைப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அரசு 2023-2024 ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக நடுத்தர இழை பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு 6,620/- ரூபாய் எனவும், நீண்ட இழை பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு 7,020/- எனவும் நிர்ணயித்துள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் பருத்தி சாகுபடிக்கு நஞ்சைத் தரிசு, கோடை இறவை, என இரண்டு தனித்துவமான பருவங்கள் உள்ளன என்றும், அதன்படி பிப்ரவரி-மார்ச் மாதங்களில் விதைப்பு செய்யப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் இருந்து பருத்தி அறுவடை செய்யப்படுகிறது என்றும், இந்த இரண்டு பருவங்களிலும் சுமார் 84,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நஞ்சைத் தரிசுப் பருத்தி அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள பருத்தி விவசாயிகள், பருத்தி விலை குவிண்டால் ஒன்றுக்கு 5,500 ரூபாயாகக் குறைந்துள்ளதைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டில் பருத்திக் கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய பருத்திக் கழகம் உடனடியாகத் தொடங்கிட வேண்டுமென்றும், பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை இனி ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து அமல்படுத்தக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு குறுவை நெல் பருவம் ஒரு மாதம் முன்னதாகவே தொடங்கியபோது நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு மாதம் முன்னதாகவே நடைமுறைப்படுத்தி அளித்த ஆதரவை நன்றியுடன் இத்தருணத்தில் நினைவுகூர்வதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை உடனடியாகத் தொடங்கிட இந்திய பருத்திக் கழகத்திற்கு உத்தரவிடுமாறும், பருத்திக்கான காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை இனி வருங்காலங்களில் ஜூன் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டுவர வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும் பிரதமர் நரேந்திர மோடி -யைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பருத்தி விலையினை நிலைப்படுத்துவதன் மூலமும், விவசாயிகளுக்கு அவர்கள் விளைவித்த விளைபொருட்களுக்கு நியாயமான வருமானத்தை உறுதி செய்வதன் மூலமும், மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்றும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post ”பருத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம்..!” மோடிக்கு கடிதம் எழுதினார் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>