Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#பட்ஜெட் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 29 Jul 2024 04:45:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’ இது எந்த விதத்தில் நியாயம்? ’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%258e%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af/#respond Mon, 29 Jul 2024 04:45:55 +0000 https://madrasmurasu.com/?p=9452 ’’ஒட்டுமொத்தமாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களைத் அறிவிக்கவில்லை என்பதோடு – ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்களுக்கான நிதியையும் குறைக்கும் வஞ்சக முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்த ஒன்றிய அரசு’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: வணக்கம்! இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் – ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் […]

The post ’’ இது எந்த விதத்தில் நியாயம்? ’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் first appeared on Madras Murasu.

]]>
’’ஒட்டுமொத்தமாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களைத் அறிவிக்கவில்லை என்பதோடு – ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்களுக்கான நிதியையும் குறைக்கும் வஞ்சக முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்த ஒன்றிய அரசு’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

வணக்கம்! இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் – ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் நடைபெறும் உங்களின் திராவிட மாடல் அரசு, கடந்த மூன்றாண்டு காலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறதென்று, உங்கள் எல்லோருக்குமே நன்கு தெரியும்!

நமது அரசின் திட்டங்களின் பயன்கள், ஒவ்வொரு குடும்பத்துக்கும் – ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாகக் கிடைக்கிறது! அதனால்தான், தி.மு.க.வுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது! “நாள்தோறும் திட்டங்கள்! மக்கள் மனந்தோறும் மகிழ்ச்சி!” இதுதான் நமது அரசின் எண்ணம்! இப்படிப்பட்ட நமது எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்துகொண்டு வருகிறது! ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை – நான் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகின்றேன். ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல – வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும்!
இப்படித்தான் தமிழ்நாடு அரசு பணியாற்றிக் கொண்டு இருக்கிறது! ஏன், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா ஒன்றிய அரசுகளும்கூட அப்படித்தான் இருந்தன. ஆனால், இந்தப் பெருந்தன்மை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இல்லை! இவர்கள் மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள்.

அதற்கு அடையாளம்தான், கடந்த 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பா.ஜ.க.வைப் பல்வேறு மாநில மக்களும் புறக்கணித்தார்கள்! அப்படி புறக்கணித்த மாநிலங்களை – அந்த மாநில மக்களைப் பழிவாங்குகிற பட்ஜெட்டாகத்தான், ஒன்றிய நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அமைந்துள்ளது! ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை – ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால், அவர் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கே முரணானது!

ஒன்றிய பாஜக அரசானது, தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டைப் புறக்கணித்துக் கொண்டு வருகிறது! தமிழ்நாட்டுக்கு என்று அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டம் என்றால், அது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைதான்! ஆனால் அதுவும் பத்தாண்டுகள் ஆகியும் என்ன நிலைமையில் இருக்கிறதென உங்களுக்கே நன்றாகத் தெரியும்! தமிழ்நாட்டுக்கென எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை!

மூன்றாவது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைத்துள்ளது! ஆனால், இந்திய மக்கள் அந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை அளிக்கவில்லை! ஒரு சில மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லையென்றால், பா.ஜ.க.வால் ஆட்சி அமைத்திருக்க முடியாது! இப்படிப்பட்ட நிலையில், தங்களின் சறுக்கலுக்கு என்ன காரணம் என்று உணர்ந்து, பா.ஜ.க. திருந்தியிருக்கும் என நினைத்தேன்! ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது!

பட்ஜெட்டுக்கு இரண்டு நாளுக்கு முன்பு கூட, நமது தமிழ்நாட்டுக்கான தேவைகள் என்னவென்று, சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஆனால், அதில் இருந்து ஒன்றைக்கூட நிதி அமைச்சர் அறிவிக்கவில்லை! அவ்வளவு ஏன்? ‘தமிழ்நாடு’ என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை! இவ்வளவு ஆண்டுகளாகச் சும்மா ஒப்புக்காகவாவது ஒரு திருக்குறளைச் சொல்லி, பட்ஜெட் வாசிப்பார்கள். இந்த முறை திருவள்ளுவரும் கசந்துவிட்டார் போல… இப்படிப்பட்ட பட்ஜெட்டில், திருக்குறள் இடம்பெறாதது ஒருவகையில் நிம்மதிதான்!

இந்த பட்ஜெட்டில் நாம் மிகவும் எதிர்பார்த்தது… சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதி! 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலேயே – மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், அவசரமாக வந்து அடிக்கல் நாட்டிய திட்டம் அது. “தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இணைந்து, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்” என்று 2021-ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் அறிவித்தார்கள்! ஆனால், இப்போது தமிழ்நாடு அரசுதான் இந்தத் திட்டப்பணிகளை முடுக்கிவிட்டுச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது! ஒன்றிய அரசோ, தன்னோட பங்காக ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல், வேண்டுமென்றே மூன்று ஆண்டுகளாகக் காலம் தாழ்த்திக் கொண்டு இருக்கிறது!

கேட்டால், ‘இது மாநில அரசின் திட்டம்’ என நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்கிறார்கள்… அப்படி என்றால், இரயில்வே துறையை மாநில அரசுக்குக் கொடுத்துவிடுவீர்களா? கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிப்பதைப் பற்றி மூச்சே விடவில்லை! ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இதே ஒன்றிய அரசு, நமது நகரங்களைவிடப் பல சிறிய நகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து – நிதி உதவியும் வாரி வழங்கியிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்?

கடந்த ஆண்டு இரண்டு முறை புயல்கள் தாக்கி, கடும் இயற்கைப் பேரிடர்களைத் தமிழ்நாடு சந்தித்தது! இதற்கு நிவாரணமாக, 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். ஆனால், ஆண்டுதோறும் வழக்கமாக வழங்கப்பட வேண்டிய 276 கோடி ரூபாய் நிதியை அளித்துவிட்டு, ஏமாற்றிவிட்டார்கள். சரி, இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால், தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர்.

ஒட்டுமொத்தமாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களைத் அறிவிக்கவில்லை என்பதோடு – ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்களுக்கான நிதியையும் குறைக்கும் வஞ்சக முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்த ஒன்றிய அரசு. இது எல்லாவற்றையும்விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால்.. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் வகையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ திட்டத்தின்கீழ், வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியைக் கூட நிறுத்தி வைத்துள்ளார்கள். தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது ஒன்றிய அரசு. மாணவ – மாணவிகளின் கல்வி பாழாகுமே… அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே என ஒரு துளி கவலை கூட இல்லாமல், தங்களின் கொள்கைத் திணிப்பையும் இந்தித் திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாகத்தான் பா.ஜ.க. அரசு இருக்கிறது.

அடுத்து, பட்ஜெட் உரையில் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்கள்… மாநிலங்களால் விதிக்கப்படும் முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைப்போம் என மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலேயே பட்ஜெட்டில் அறிவிக்கிறார், ஒன்றிய நிதி அமைச்சர். ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்து, மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையை எடுத்துக்கொண்டார்கள். நான் கேட்பது என்னவென்றால், ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கான 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டையே இன்னும் அளிக்காத இந்த ஒன்றிய அரசுக்கு, மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது?

கடந்த பத்தாண்டுகளாக வருமானச் வரிச்சலுகை இன்றித் தவித்துக்கொண்டு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, வெறும் 17 ஆயிரத்து 500 ரூபாய் சலுகையை மட்டும் வழங்கி, அந்தச் சலுகையும் பெரும்பான்மையோருக்குக் கிடைக்காமல் செய்துகொண்டு, பெரும் வரிச்சலுகை கொடுத்ததாக மார்தட்டிக் கொள்கிறது இந்த ஒன்றிய அரசு. இது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல – ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட்! சுயநலத்துக்காக – நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளப் போட்டுக்கொண்ட பட்ஜெட் இது! ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் குரலாக – ஏன், இந்திய நாட்டு மக்களின் குரலாக ஒன்று சொல்கிறேன்… மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள்! மேலும் மேலும் தோல்விகளைச் சந்திப்பீர்கள்! இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பதுபோல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது! இதற்கு பா.ஜ.க. பதில் சொல்லியே தீர வேண்டும்!

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ’’ இது எந்த விதத்தில் நியாயம்? ’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதா.. ? மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259c%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%95/#respond Mon, 29 Jul 2024 04:31:28 +0000 https://madrasmurasu.com/?p=9444 ”மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் அதற்குரிய பங்கைப் பெறுகிறது. இதில் அரசியலுக்கு இடமில்லை. தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரிப்பு ” என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், ஒவ்வொரு மாநிலமும் அதற்குரிய பங்கைப் பெறுகிறது, இதில் அரசியலுக்கு இடமில்லை என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பொதுமக்கள் குறை […]

The post பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதா.. ? மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் first appeared on Madras Murasu.

]]>
”மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் அதற்குரிய பங்கைப் பெறுகிறது. இதில் அரசியலுக்கு இடமில்லை. தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரிப்பு ” என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், ஒவ்வொரு மாநிலமும் அதற்குரிய பங்கைப் பெறுகிறது, இதில் அரசியலுக்கு இடமில்லை என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பொதுமக்கள் குறை தீர்வு, ஓய்வூதியம் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

2024-25 மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை வெளியிட்டு சென்னையில் 27.07.2024 அன்று செய்தியாளர்களிடம் அவர் உரையாற்றினார். தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டில் உள்ள குறிப்பிடத்தக்க நன்மைகளையும் அவர் எடுத்துரைத்தார். இந்த பட்ஜெட் தொலைநோக்கு பார்வை கொண்டதாகவும், பிரதமர் மோடியின் இந்தியா 2047 தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளதாகவும் அவர் விவரித்தார்.

முன்னதாக, டாக்டர் ஜிதேந்திர சிங், முக்கிய அறிவுஜீவிகள், கருத்து உருவாக்குபவர்கள், வர்த்தகத் தலைவர்கள், பட்டயக் கணக்காளர்கள், பொருளாதார அறிஞர்கள் மற்றும் பலருடன் பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் அமர்வை நடத்தினார்.

ரயில்வே பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம் ரூ.6,362 கோடியை பெற்றுள்ளது. 6 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாலும், 77 மாதிரி அம்ரித் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டதாலும் மாநிலம் பயனடைந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிடுகையில் தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் எட்டு மடங்கு அதிகரித்து, ரூ .879 கோடியிலிருந்து ரூ .6,362 கோடியாக உயர்ந்துள்ளது, இது மாநிலத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர்தெரிவித்தார்.

நீலப் பொருளாதாரத்தின் ஆற்றலைப் பற்றிப் பேசிய அமைச்சர், விரிவான கடற்கரையுடன் கூடிய தமிழ்நாட்டின் கேந்திர அனுகூலத்தை வலியுறுத்தினார். பொருளாதார வளர்ச்சிக்கு மாநிலத்தின் கடல்சார் வளங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மீன்வளத் துறை மற்றும் ஆழ்கடல் இயக்கத்திற்கு கணிசமான ஆதரவை இந்த வரவுசெலவுத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. நீலப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், தமிழ்நாட்டில் நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார பன்முகத்தன்மைக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதற்கும் பாஜக அரசு இந்தத் துறைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பெண்கள் தலைமையிலான நிர்வாகத்துக்கு மோடி அரசு முன்னுரிமை அளித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார். பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதில் இருந்து பெண்கள் தலைமையிலான முயற்சிகளை தீவிரமாக ஆதரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக, இந்த முக்கியமான நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பை கணிசமாக ஊக்குவிக்கும் நடவடிக்கையில், நடப்பு பட்ஜெட்டில் ஏஞ்சல் வரியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்று அமைச்சர் எடுத்துரைத்தார்.

மத்திய பட்ஜெட் 2024-25 இல் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பங்கு நிதி ஆதரவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பிரதிபலிக்கிறது, முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது வரி பகிர்வில் 94.95% அதிகரிப்பு மற்றும் உதவி மானியங்களில் 157.58% அதிகரிப்பு. 50,873.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதில் மத்திய அரசின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

நடப்பு பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாநில அரசு குற்றம்சாட்டியதற்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்திற்கு உரிய பங்கு கிடைத்துள்ளது என்று தெளிவுபடுத்தினார். மாநில அரசு வழங்கப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்று அவர் விமர்சித்தார். நீர் ஆதாரங்களை மாநில அரசு புறக்கணிப்பதையும் அவர் எடுத்துரைத்தார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், மாநிலங்களுக்கு இடையே வளங்களை சமமாக விநியோகிப்பதை நோக்கி ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் வலியுறுத்தினார். பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் பிற மாநிலங்களுக்கு இணையாகவோ அல்லது அதிகமாகவோ தமிழகத்தைப் பெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.

முடிவில், மத்திய பட்ஜெட் 2024-25 தமிழ்நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு ஒரு வலுவான கட்டமைப்பை அமைக்கிறது என்று அமைச்சர் வலியுறுத்தினார், இது இலக்கு வைக்கப்பட்ட நிதி ஆதரவு மற்றும் உருமாறும் முயற்சிகள் மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் பார்வையை வெளிப்படுத்துகிறது.

The post பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதா.. ? மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%95/feed/ 0
’’பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள்..?’’ 23 ஆம் தேதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259c%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25af%2586%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9-%25e0%25ae%259a https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a/#respond Sun, 07 Jul 2024 10:53:56 +0000 https://madrasmurasu.com/?p=9193 பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் புதுதில்லியில் நிறைவடைந்தன. மத்திய நிதித்துறை, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதி அமைச்சகம் சார்பில் 2024, ஜூன் 19 அன்று தொடங்கிய, 2024-25 க்கான மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் 2024, ஜூலை 5 அன்று நிறைவடைந்தன.  இந்த ஆலோசனைக் கூட்டங்களின் போது, 10 குழுக்களைச் சேர்ந்த 120-க்கும் அதிகமான அழைப்பாளர்கள் பங்கேற்றனர். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கங்கள், கல்வித் துறையினர், […]

The post ’’பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள்..?’’ 23 ஆம் தேதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் புதுதில்லியில் நிறைவடைந்தன. மத்திய நிதித்துறை, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதி அமைச்சகம் சார்பில் 2024, ஜூன் 19 அன்று தொடங்கிய, 2024-25 க்கான மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் 2024, ஜூலை 5 அன்று நிறைவடைந்தன. 

இந்த ஆலோசனைக் கூட்டங்களின் போது, 10 குழுக்களைச் சேர்ந்த 120-க்கும் அதிகமான அழைப்பாளர்கள் பங்கேற்றனர். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கங்கள், கல்வித் துறையினர், சுகாதாரத் துறை வல்லுநர்கள், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு வல்லுநர்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினர், வர்த்தகம் மற்றும் சேவைகள் தொழில் துறையினர், பொருளாதார நிபுணர்கள், நிதித் துறை, மூலதனச் சந்தைகளின் நிபுணர்கள், உள்கட்டமைப்பு, எரிசக்தி, நகர்ப்புற துறை பிரதிநிதிகள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன், பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் அஜய் சேத், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் செயலாளர்கள், தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன், மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மதிப்புமிக்க ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டதற்காகப் பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 மத்திய பட்ஜெட்டைத் தயாரிக்கும்போது இக்கூட்டத்தில் பெறப்பட்ட பரிந்துரைகள் கவனமாக பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

7 வது பட்ஜெட் : 

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜுலை 22 ஆம் தேதி கூடுகிறது. ஜூலை 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

இதுகுறித்து, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

”மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், நாடாளுமன்ற அலுவல்களின் தேவைகளுக்கு உட்பட்டு, 2024 ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை பட்ஜெட் கூட்டத்தொடருக்காக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 2024-25-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 2024 ஜூலை 23 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும்”

இவ்வாறு, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பிறகு, தாக்கல் செய்யப்படும் முழு நேர பட்ஜெட் இது. நிர்மலா சீதாராமன் ஏழாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். புதிய பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள், வரிகள் விதிக்கப்பட இருக்கிறது என்பது பட்ஜெட் தாக்கல் செய்தவுடன் முழுமையாக தெரிந்து விடும்.

The post ’’பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள்..?’’ 23 ஆம் தேதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a/feed/ 0