acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’அடக்குமுறைகளை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டுவோம்..!’’ டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.
]]>பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, கடலூரில் நாளை நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை திடீரென தடை விதித்திருப்பதும், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது பா.ம.க. மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. மக்களை பாதிக்கும் சிக்கல்கள் குறித்து பொதுக்கூட்டம் நடத்துவதற்கு கூட அனுமதிக்காமல் அடக்குமுறைகளை அரசு கட்டவிழ்த்து விடுவது ஜனநாயகப் படுகொலை ஆகும்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு, 34 ஆண்டுகள் நிறைவடைந்து 35-ஆம் ஆண்டு தொடங்கி உள்ளது. அதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலூர் மாவட்டம் வடலூரில் நாளை (ஆகஸ்ட் 30) மாலை பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான எல்லா ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், எந்த காரணமும் இல்லாமல், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று நேற்று காலை கடலூர் மாவட்டக் காவல்துறை அறிவித்துள்ளது. கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு கூட அனுமதி மறுப்பது நியாயமற்றது.
காவல்துறையின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பாட்டாளி மக்கள் கட்சி மீது அடிப்படை ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டுகளை தமிழக அரசு முன்வைத்தது. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் கூட்டத்தை விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடத்திக் கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளாத பாமக, அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
பொதுக்கூட்டம் நடத்துவதென்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ((Indian Constitution) அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமை ஆகும். மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதற்கான சிறந்த வழி பொதுக்கூட்டம் ஆகும். அடக்குமுறை ஆட்சி நடைபெற்ற ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட இந்த உரிமை பறிக்கப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து பொதுக்கூட்டம் நடத்துவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி பிரச்சினை குறித்து பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தி விடும் என்று அரசு அஞ்சுவதையே இது காட்டுகிறது.
பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டு, பல்வேறு சவால்களை சந்தித்த கட்சியான திமுக, இப்போது என்.எல்.சி நிறுவனத்திற்கு ஏன்? அடிமையாகிக் கிடக்கிறது என்பது தான் எனக்கு புரியாத புதிராக உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்த அதே வடலூர் நகரில், கடந்த ஜூலை 7&ஆம் நாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அதே வடலூர் நகரில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி இன்று காலை நடத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் அனுமதியளிக்கும் காவல்துறை, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மட்டும் அனுமது மறுக்கிறது என்றால், அதன் பின்னணியில் பொது நலன் இல்லை, அரசியலும் காழ்ப்புணர்ச்சியும் தான் இருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டால், அதில் என்.எல்.சி விவகாரம் குறித்து பேசப்படும் என்று என்று அரசும், காவல்துறையும் கூக்குரலிடுகின்றன. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி பிரச்சினை மட்டுமல்ல… சிப்காட் சுற்றுச்சூழல் சிக்கல், சைமா சாயப்பட்டறை கழிவு விவகாரம், தமிழ்நாட்டில் நெல் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தின் வளமையை பாதுகாப்பது, முந்திரி விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கச் செய்வது, கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடல்நீர் உள்ளே புகும் சிக்கலுக்கு தீர்வு காண தடுப்பணைகளை கட்டுவது, கொள்ளிடம், வெள்ளாறு, திருமணிமுத்தாறு ஆகியவற்றில் தடுப்பணை கட்டுவது, கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவுகளை அமைப்பது உள்ளிட்ட மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என ஏராளமான மக்கள் பிரச்சினைகள் உள்ளன. அவை அனைத்தையும் பற்றி பொதுக் கூட்டத்தில் பேசித் தான் ஆக வேண்டும், அது தான் ஒரு பொறுப்பான அரசியல் கட்சியின் கடமை.
கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் இந்த பிரச்சினைகள் குறித்து கடலூர் மாவட்டத்தில் தான் பொதுக்கூட்டம் நடத்தி பேச வேண்டும். கடலூர் மாவட்டத்தின் இந்த பிரச்சினைகள் குறித்து விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்பது எந்த வகையில் நியாயம்? அதனால் தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஏற்க பா.ம.க. மறுத்திருக்கிறது. இத்தீர்ப்பை மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடலூர் மாவட்ட மண்ணையும், மக்களையும் காக்க பாட்டாளி மக்கள் கட்சி உறுதி பூண்டிருக்கிறது. அதற்காக எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு முறியடிக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக இருக்கிறது. அதன்படி, கடலூர் மாவட்டத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்திலேயே நடத்துவதற்கான அனுமதியை சட்டப் போராட்டத்தின் மூலம் வென்றேடுப்போம். கடலூர் மாவட்டத்தை பாதிக்கும் என்.எல்.சி உள்ளிட்ட அனைத்து சிக்கல்கள் குறித்தும், அதற்கு திமுக அரசு துணை போவது குறித்தும் முழங்குவோம் என்று உறுதியளிக்கிறேன். அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியை அடக்குமுறைகளின் மூலம் பணிய வைக்க முடியாது என்பதை உலகிற்கு நாம் நிரூபிப்போம்.
The post ’’அடக்குமுறைகளை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டுவோம்..!’’ டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.
]]>The post ’’நெய்வேலியில் நடப்பது என்ன..?’’ நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம் first appeared on Madras Murasu.
]]>(i) விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் (25.08.2022 தேதியிட்ட சிறப்பு அரசாணை நிலை எண் 185, குறைந்தபட்ச நில இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.23 லட்சம் மற்றும் மீதமுள்ள ரூ.2 லட்சம் முன்பணமாக வழங்கப்படுகிறது)
(ii)ஊரகப் பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்படும் வீட்டுமனை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 லட்சம்.
(iii)நகர்ப்புறங்களிலிருந்து கையகப்படுத்தப்படும் வீட்டு நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.75 லட்சம்.
என்.எல்.சி.ஐ.எல். திட்டங்களுக்கு, நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி பொருந்தக்கூடிய மொத்த நில இழப்பீட்டுத் தொகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையின் அடிப்படையில் டெபாசிட் செய்யப்படுகிறது. நில உரிமையாளர்களிடமிருந்து தேவையான விளக்கங்களைப் பெற்ற பின்னர் நில எடுப்பு அலுவலர் தனிப்பட்ட நில உரிமையாளர்களுக்கு மின்னணு பரிவர்த்தனை (இ- மெண்ட்) மூலம் நில இழப்பீட்டை வழங்குகிறார். இவை தவிர புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ஏற்பாடுகளின் கீழ் பணப்பயன்களும் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளின்படி வழங்கப்படுகின்றன.
நெய்வேலி மண்டலத்தில் திட்ட பாதிப்பு நபர் (பிஏபி) களுக்கு வழங்கப்பட்ட மொத்த வேலை வாய்ப்புகள் பின்வருமாறு:
| வ.எண் | ஆண்டு | நிரந்தர பணி | ஏஎம்சி அல்லாத வேலை | ஏஎம்சி வேலை | மொத்தம் |
| 1 | 2009க்கு முன் | 1827 | 1510 | — | 3337 |
| 2 | 2009-2019 | — | 1214 | — | 1214 |
| 3 | 2019-2021 | — | 706 | — | 706 |
| 4 | 2021-22 | — | 265 | — | 265 |
| 5 | 2022-23 | — | 180 | 42 | 222 |
| 6 | 2023-24 | — | — | 154 | 154 |
| மொத்தம் | 1827 | 3875 | 206 | 5898 | |
இதுவரை 5126 ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அடையாள அட்டைச் சட்டம் 1947-ன் கீழ் 12(3) ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேலும் 517 ஒப்பந்தத் தொழிலாளர்களை நிறுவனத்தின் பணிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெய்வேலியில் ஒப்பந்ததாரர்களால் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். நெய்வேலியில் உள்ள சுரங்கங்களுக்கு 192 சுரங்க சர்தார், சர்வேயர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை என்.எல்.சி.ஐ.எல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ளூர் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதில் விண்ணப்பித்த 39 திட்ட பாதிப்பு நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.எம்.இ ஆபரேட்டர் உதவியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு (3 ஆண்டு பயிற்சி திட்டத்தின் கீழ்) முறையே 238 பயிற்சி இடங்கள் மற்றும் 262 பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பை என்.எல்.சி.ஐ.எல் வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16.08.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ஒன்று வீதம், 1000 பி.ஏ.பி.க்களுக்கு தொடர்ச்சியான ஒப்பந்த வேலை. இதில் 206 ஏ.எம்.சி வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. குரூப் சி மற்றும் டி பிரிவுகளில் நிரந்தர பணிக்கான எழுத்துத் தேர்வில் பி.ஏ.பி.க்களுக்கு போனஸ் 20 மதிப்பெண்கள். டி.என்.பி.எஸ்.சி.யில் (குரூப்-1, குரூப்-2, குரூப்-4) போட்டித் தேர்வுகளுக்கு பி.ஏ.பி.க்களுக்கு சிறப்பு பயிற்சி. தொழில்நுட்ப ரீதியாக தகுதிவாய்ந்த பி.ஏ.பி.க்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்கள்.
அமைச்சர்கள் தலைமையில் என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்துடன் இணைந்து திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ஊராட்சித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கூட்டங்களை நடத்தி நில உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது
மேலும், கிராம மக்களுடன் முறைசாரா கூட்டங்கள் பல முறை நடத்தப்பட்டன. தலைமைச் செயலாளர் மற்றும் தொழில் துறை ஏ.சி.எஸ்., தலைமையில், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் கூட்டம் நடைபெற்றது .
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், நில உரிமையாளர்கள் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்கு இவ்வளவு இழப்பீடு வழங்கும் இந்தியாவின் ஒரே பொதுத்துறை நிறுவனம் என்.எல்.சி இந்தியா மட்டுமே. முதல் முறையாக, ஒரு ஏக்கர் நிலம் மற்றும் ஒரு வீடு இழந்தால், நில உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தால் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு திருத்தப்பட்ட புதிய சலுகைகளை பெரும்பாலான நில உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், என்.எல்.சி.ஐ.எல் தங்கள் நிலங்கள் மற்றும் வீடுகளை இழக்கும் உரிமையாளர்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை சரி செய்யவும், அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரச்னைகளை சுமூகமாக தீர்க்கவும், நெய்வேலியில் குறை தீர்க்கும் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, நிலம் கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
The post ’’நெய்வேலியில் நடப்பது என்ன..?’’ நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம் first appeared on Madras Murasu.
]]>The post ”அத்துமீறும் என்.எல்.சி – பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்..!” வேல்முருகன் எம்.எல்.ஏ எச்சரிக்கை first appeared on Madras Murasu.
]]>கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இரு அனல் மின் மின் நிலையங்கள் மற்றும் அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் வழியே 3000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களிலிருந்து 12,126 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஒன்றிய அரசும், என்.எல்.சி நிர்வாகமும் முடிவு செய்திருக்கிறது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்கனவே தங்கள் நிலங்களைக் கொடுத்த மக்களுக்கு இதுவரை உரிய வேலை வாய்ப்புகளோ, அடிப்படை வசதிகளோ செய்து தரப்படாத நிலையில், தங்களின் நிலங்களைத் தர முடியாது என கடந்த 2018ஆம் ஆண்டிலேயே நிலம் எடுப்புத் தொடர்பாக நடந்த கருத்துக்கேட்பு கூட்டங்களில், பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இச்சூழலில், சேத்தியாதோப்பு அருகே மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கத்தாழை ஆகிய 3 ஊராட்சிகளிலும், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதனை சிறிதும் மதிக்காமல், அப்பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பில், விளை நிலங்கள் கையகப்படுத்த என்.எல்.சி நிர்வாகம் முயன்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
வளையமாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பல்லாயிரம் ஏக்கரில், நடவு செய்யப்பட்டு, நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், அதனை பொருட்படுத்தாமல், விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி, நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை என்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
நிலம் வழங்கியோர்க்கு உரிய இழப்பீட்டை மறுப்பது, தமிழர்களுக்கு வேலை வழங்க மறுப்பது, ஏற்கெனவே உள்ள பணியாளர்களை நிரந்தரமாக்க மறுப்பது, பணிப்பயிற்சி மாணவர்களுக்குப் பணி வழங்க மறுப்பது என தொடர்ந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தற்போது நிலங்களை கையகப்படுத்த முயல்வதை ஒரு போது ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கான பணிகளுக்கு விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தக் கூடாது. குறிப்பாக, வாழ்வாதார இழப்பு, வேலை மறுப்பு, சூழலியல் அழிப்பு போன்ற காரணங்களுக்காக இத்திட்டத்தை அடியோடு எதிர்க்க வேண்டும்.
ஏற்கனவே, நிலம் வழங்கியோர்க்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், தற்போது பணியாற்றி வரும் தமிழர்களுக்கு பணி நிரந்தரம், பணி உறுதி ஆகியவற்றை உறுதிப்படுத்த, ஒன்றிய அரசு மற்றும் என்.எல்.சி நிர்வாகத்திடம், தமிழ்நாடு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தற்போது, விளைநிலங்களை கையகப்படுத்த முயன்று வரும் என்.எல்.சி நிர்வாகத்தையும், காவல்துறையையும், தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இனி வரும் காலங்களில், விவசாயிகளிடம், என்.எல்.சி நிர்வாகம் அத்துமீறி செயல்படுமானால், எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது.
முக்கியமாக, நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்று கூறி வரும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு, மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.
The post ”அத்துமீறும் என்.எல்.சி – பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்..!” வேல்முருகன் எம்.எல்.ஏ எச்சரிக்கை first appeared on Madras Murasu.
]]>The post ’’விளைந்த பயிர்களை அழித்து என்எல்சிக்கு நிலம் எடுப்பு: உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்..!’’ டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.
]]>கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத எந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டிருக்கின்றன. மக்கள்நலன் காக்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்தின் அடியாளைப் போன்று செயல்பட்டு நிலங்களை பறிப்பது கண்டிக்கத்தக்கது.
என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி பகுதியில் உள்ள கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல நூறு ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி நிறுவனம் பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. அந்த நிலங்களை கையகப்படுத்த உழவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பரப்புரை தீவிரம் அடைந்திருப்பதாலும் அது சாத்தியமாகவில்லை. இந்த நிலையில், 2000-க்கும் மேற்பட்ட காவலர்களைக் குவித்து வளையமாதேவி பகுதியை சுற்றி வளைத்துள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம், அங்கு 30&க்கும் மேற்பட்ட இராட்சத எந்திரங்களைக் கொண்டு வந்து வேளாண் விளைநிலங்களில் இறக்கி, பயிர்களை சேதப்படுத்தி, அந்த நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. கதிர்விடும் நிலையில் உள்ள பயிர்களை அழிப்பது என்பது, குழந்தைகளை கருவில் கொல்வதற்கு இணையாக கொடுமையாகும்.
இத்தகையக் கொடுமைகள் உலகில் மக்களாட்சி நடைபெறும் எந்த நாட்டிலும் நடப்பதில்லை. ஆனால், விளைந்த பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு அழிக்கும் கொலைபாதகச் செயலை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் கூலிப்படையைப் போல, உழவர்நலத்துறை அமைச்சர் என்று கூறிக்கொள்ளும் உள்ளூர் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள் என்.எல்.சியின் நிலக்கொள்ளைக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நிலம் கையகப்படுத்தப்படுவதை தடுக்க முயன்ற உழவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்; விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மையான உழவர்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.
பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களை கையகப்படுத்துவதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பதை அறிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் பா.ம.க. நிர்வாகிகள் நேற்று இரவே மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, உழவர்களின் ஒப்புதல் இல்லாமல் ஒரு செண்ட் நிலம் கூட கையகப்படுத்தப்படாது என்று உறுதியளித்த மாவட்ட ஆட்சியர், அடுத்த நாள் காலையில் அதற்கு நேர் எதிராக பயிர்களை அழித்து விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு துணை போயிருக்கிறார். பா.ம.க.வினரால் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, பல ஊர்களில் இரவோடு, இரவாக பா.ம.க நிர்வாகிகள் கைது செய்திருக்கின்றனர். இது அடக்குமுறையின் உச்சமாகும்.
கடலூர் மாவட்டத்தின் ஆட்சியராக முன்பு பதவி வகித்த பாலசுப்பிரமணியன் என்பவர் என்.எல்.சி நிறுவனத்தின் ஏஜன்டை விட மிக மோசமாக நடந்து கொண்டார். அவர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்; அவர் மக்களின் ஆட்சியராக நடந்து கொள்ள முயல வேண்டும்.
உழவர்களின் நண்பன் என்று தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு கூறிக்கொள்கிறது. வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதை சாதனையாகக் காட்டிக் கொள்கிறது. வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதன் நோக்கமே உழவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் என்பது தான். ஆனால், ஒருபுறம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டு இன்னொருபுறம் விவசாயிகளின் நிலங்களை அவர்களிடமிருந்து பறிப்பது எந்த வகையில் நியாயம்?
மக்களா…. பெரு நிறுவனங்களா? என்றால், மக்களின் பக்கம் தான் அரசுகள் நிற்க வேண்டும். ஆனால், சுற்றுச்சூழலை சீரழித்து மின்சாரம் தயாரித்து, அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை வட மாநிலங்களில் முதலீடு செய்யும் என்.எல்.சி நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது. அதற்காக மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவும் தயாராக இருக்கிறது. தமிழக அரசுக்கு இவ்வளவு துடிப்பும், ஆர்வமும் ஏன்?
தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியிருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. தமிழகத்தின் அதிகபட்ச மின்தேவை 18,000 மெகாவாட் மட்டும் தான். ஆனால், தமிழகத்தின் மின் உற்பத்தித் திறன் 36,000 மெகாவாட் ஆகும். தமிழத்தின் மிகை மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு விற்கப்பட்டதாக மின்துறை அமைச்சர் அண்மையில் கூறியிருந்தார். என்.எல்.சியின் பங்களிப்பு இல்லாமலேயே தமிழகத்தின் மின்தேவையை சமாளிக்க முடியும் எனும் போது என்.எல்.சிக்கு ஆதரவாக தமிழக அரசு துடிப்பது ஏன்? இந்த அளவுக்கு என்.எல்.சிக்கு ஆதரவாக திமுக அரசு, உள்ளூர் அமைச்சர், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து செயல்படுவதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது? என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிந்துள்ளனர்.
இந்தியாவில் நிலப்பறிப்புகளுக்கும், அதற்கு காரணமானவர்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளுக்கும் வாழும் எடுத்துக்காட்டாக விளங்குபவை மேற்கு வங்க மாநிலத்தின் சிங்கூர், நந்தி கிராமம் தான். அங்கு நடந்ததை விட மிகக் கொடிய அடக்குமுறைகளை உழவர்கள் மீது திமுக அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதை கடலூர் மாவட்ட உழவர்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள். உள்ளூர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும். அனைத்தையும் இழந்து விட்டு, கொதித்து நிற்கும் உழவர்கள் வெகுண்டெழுந்து போராடும் நிலையையும், அதனால் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சிக்கல் ஏற்படக்கூடிய நிலையையும் தமிழக அரசும், என்.எல்.சி நிறுவனமும் ஏற்படுத்தி விடக் கூடாது. உழவர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் காக்க எந்த எல்லைக்கும் சென்று போராட பாட்டாளி மக்கள் கட்சி தயாராக இருக்கிறது.
The post ’’விளைந்த பயிர்களை அழித்து என்எல்சிக்கு நிலம் எடுப்பு: உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்..!’’ டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.
]]>The post ’’நெய்வேலி என்.எல்.சி-யில் 500 காலிப்பணியிடம்..!’’ டிப்ளமோ, இன்ஜினியரிங், ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>தொழில் துறை பயிற்சியாளர் (நிலக்கரி சுரங்கம் தோண்டும் எந்திரம் கையாளுதல்): 238.
பணிக் காலம்: 3 ஆண்டுகள்
கல்வித் தகுதி: டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள் (* All Diploma / Degree in Engineering should have been acquired through Full Time mode of study, recognized by the AICTE/UGC/State Board of Technical Education).
பயிற்சி காலத்தில் மாத ஊதியம்: முதல் ஆண்டு ரூ.18,000. இரண்டாம் ஆண்டு ரூ.20,000. மூன்றாம் ஆண்டு ரூ.2,000.
தொழில் துறை பயிற்சியாளர் (சுரங்கம் மற்றும் சுரங்கம் தோண்டுபவர்களுக்கு உதவிடும் பணி): 262.
கல்வித்தகுதி: ஐடிஐ பிட்டர், ட்டர்னர், எலெக்ட்ரிசியன், வெல்டிங், டீசல் மெக்கானிக், டிராக்டர் மெக்கானிக், சிவில், பவுண்டரி, கேபிள் இணைப்பு (ITI – Fitter or Turner or Electrician or Welding or MMV or Diesel Mechanic or Tractor Mechanic or Civil or Foundry or Cable Jointing Trades with NAC Certification)
காலம்: 3 ஆண்டுகள்
பயிற்சி காலத்தில் மாத ஊதியம்: முதல் ஆண்டு ரூ.14,000. இரண்டாம் ஆண்டு ரூ.16,000. மூன்றாம் ஆண்டு ரூ.18,000.

வயது வரம்பு: பொதுப்பிரிவு/பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர்-37 வயது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) 40 வயது. எஸ்சி/எஸ்டி 42 வயது.
மத்திய அரசின் இடஒதுக்கீடு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பம்: 09.06.2023 முதல் 08.07.2023 வரை ஆன்லையில் விண்ணப்பிக்க வேண்டும்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், நிலம் எடுப்பில் பாதிக்கப்பட்டவர்கள் (exclusively from Project Affected Persons (PAPs) of NLCIL, Neyveli Units) மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். நெய்வேலி நிலகரி நிறுவனத்தின் கிளைகள் அனைத்திலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் பணி அமர்த்தப்படுவர். வேலைவாய்ப்பு விளம்பரத்தை முழுமையாக படித்து இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். முழு விபரங்களுக்கு https://www.nlcindia.in/n என்ற இணையத்தை பார்க்கவும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு உண்டு. அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் வேலைக்கு ஆள் தேர்வு நடக்கும். மேலும், மத்திய அரசு பணிகளில் உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில் பணி நாடுநரின் இறுதிபட்டியல் வெளியிடப்படும்.
கூடுதல் விபரங்களுக்கு: REGD. OFFICE: NLC India Limited, No. 135, EVR Periyar High Road, Kilpauk, Chennai- 600010
CORPORATE OFFICE: Block-1, Neyveli-607 801, Cuddalore District, Tamil Nadu.
Website: www.nlcindia.in / email: help.recruitment@nlcindia.in / Phone: 04142-255135 என்ற விலாசத்திற்கு தொடர்பு கொள்ளலாம்.
The post ’’நெய்வேலி என்.எல்.சி-யில் 500 காலிப்பணியிடம்..!’’ டிப்ளமோ, இன்ஜினியரிங், ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>