Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#நீட் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Thu, 21 Sep 2023 05:57:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’நீட் தேர்வின் பலன் என்ன என்றால் ‘0’ தான்..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b2%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/#respond Thu, 21 Sep 2023 05:57:13 +0000 https://madrasmurasu.com/?p=6444 ’’நீட் தேர்வின் பலன் என்ன என்றால் ‘0’ தான் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் ‘0’ தான் என்று வரையறுப்பதன் மூலமாக NEET என்றால் National Eligibility Cum Entrance Test என்பதில் உள்ள Eligibilityக்குப் பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். கோச்சிங் செண்டர்களில் சேருங்கள், நீட் தேர்வுக்கு பணம் […]

The post ’’நீட் தேர்வின் பலன் என்ன என்றால் ‘0’ தான்..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
’’நீட் தேர்வின் பலன் என்ன என்றால் ‘0’ தான் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் ‘0’ தான் என்று வரையறுப்பதன் மூலமாக NEET என்றால் National Eligibility Cum Entrance Test என்பதில் உள்ள Eligibilityக்குப் பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். கோச்சிங் செண்டர்களில் சேருங்கள், நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள், போதும் என்றாகி விட்டது.

NEET = 0 என்றாகி விட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

NEET என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிர்களைப் பறிப்பதற்காகவே இந்த பா.ஜ.க ஆட்சியை அகற்றியாக வேண்டும்.

The post ’’நீட் தேர்வின் பலன் என்ன என்றால் ‘0’ தான்..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
”மருத்துவக் கல்வியையை வணிகமாக்கும் முயற்சியில் நீட் வெற்றி பெற்றுள்ளது..!” டாக்டர் அன்புமணி https://madrasmurasu.com/5510-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5510-2 https://madrasmurasu.com/5510-2/#respond Fri, 21 Jul 2023 09:03:35 +0000 https://madrasmurasu.com/?p=5510 பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: மருத்துவப் படிப்பை ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்குவது, மருத்துவக் கல்வியை வணிகமயமாக்குவது ஆகியவற்றில் நீட் தேர்வு முழு வெற்றி பெற்றிருக்கிறது என்பது தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீட் தேர்வுக்கான நோக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்ட நிலையில், அத்தேர்வை தொடருவது பெரும் சமூக அநீதியாகவே அமையும். தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கான கலந்தாய்வு அடுத்த வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான […]

The post ”மருத்துவக் கல்வியையை வணிகமாக்கும் முயற்சியில் நீட் வெற்றி பெற்றுள்ளது..!” டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.

]]>
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:

மருத்துவப் படிப்பை ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்குவது, மருத்துவக் கல்வியை வணிகமயமாக்குவது ஆகியவற்றில் நீட் தேர்வு முழு வெற்றி பெற்றிருக்கிறது என்பது தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீட் தேர்வுக்கான நோக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்ட நிலையில், அத்தேர்வை தொடருவது பெரும் சமூக அநீதியாகவே அமையும்.
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கான கலந்தாய்வு அடுத்த வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. மருத்துவக் கல்வி என்பது ஏழைகளுக்கானது அல்ல என்பதை தரவரிசை சார்ந்த புள்ளிவிவரங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக தகுதி பெற்றுள்ள 28,849 பேரில் வெறும் 31 விழுக்காட்டினர், அதாவது 9056 பேர் மட்டும் தான் முதல் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் ஆவர். மீதமுள்ள 19,793 (69%) இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான முயற்சியில் வெற்றி பெற்றவர்கள். அதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் தகுதி பெற்ற 2993 பேரில் 630 பேர் (21%) மட்டுமே முதல் முயற்சியில் வென்றவர்கள்; மீதமுள்ள 2,363 பேர் (79%) இரண்டு அல்லது கூடுதலான முயற்சிகளில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து, அதை எதிர்ப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்து வரும் காரணங்களில் முதன்மையானவை 1. நீட் தனிப்பயிற்சி கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது, 2. நீட் சமவாய்ப்பை வழங்குவதில்லை, 3. நீட் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவில்லை, 4. நீட் மருத்துவக் கல்வியை வணிகமயமாக்குகிறது என்பன தான். பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நான்கு குற்றச்சாட்டுகளுமே உண்மை என்பதை தமிழ்நாட்டில் நீட் குறித்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்துள்ளன.

எந்த ஒரு போட்டித் தேர்வும்/ தகுதித் தேர்வும் சமவாய்ப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். நீட் தேர்வு அத்தகைய சமவாய்ப்பை வழங்குவதில்லை. நீட் தேர்வை தனியார் மையங்களில் தனிப்பயிற்சி பெறாமல் எதிர்கொள்ள முடியாது என்பது சமவாய்ப்பை பறிக்கும் முதல் காரணி ஆகும். ஆனால், ஒரு முறையல்ல… இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான முறை பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதினால் தான் மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதை என்னவென்று சொல்வது? ஒரு முறை நீட் பயிற்சி பெறுவதற்கே வாய்ப்பும், வசதியும் இல்லாத ஏழை மக்களால் இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான முறை எவ்வாறு பயிற்சி பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர முடியும்? இத்தகைய அப்பட்டமான சமூக அநீதி தொடர வேண்டுமா?

இந்த சமூக அநீதியிலிருந்து அரசு பள்ளி மாணவர்களைக் காக்க வேண்டும் என்பதற்காகத் தான் மருத்துவப் படிப்புகளில் அவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான தகுதி பெறுவோரிலும் 79 விழுக்காட்டினர் நீட் தேர்வை இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட முறை எழுதியவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் என்பதால், அவர்களால் நீட் பயிற்சி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுடன் போட்டியிடமுடியாது என்பதால் தான் 7.5% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. ஆனால், அவர்களிலேயே ஒரு பிரிவினர் மீண்டும், மீண்டும் நீட் பயிற்சி பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பது சமூகநீதிக்கு பின்னடைவு. ஏழை கிராமப்புற மாணவர்களிடையேயும் சமவாய்ப்பற்ற நிலையை ஏற்படுத்தியதில் நீட் வென்றிருக்கிறது. இது சமூகநீதியில் அக்கறை கொண்டோருக்கு மகிழ்ச்சி தரும் செய்தியல்ல… வேதனையளிக்கும் செய்தி.

12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்ற போதும், மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்வதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தேர்வு எழுதும் வழக்கம் இருந்தது. ஆனால், அது சமவாய்ப்புக்கு எதிரானது என்பதால், மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளும் தேர்வுகள் கடந்த 2006-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டன. அதன்படி மாநில பாடத்திட்ட மாணவர்கள் முதல் முயற்சியில் எடுத்த மதிப்பெண்கள் மட்டும் தான் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்பட்டன. அது தான் சமூகநீதி ஆகும். ஆனால், மீண்டும், மீண்டும் தேர்வு எழுதுவதை ஊக்குவிக்கும் நீட், அதன் மூலம் சமவாய்ப்பை பறிக்கிறது; சமூகநீதியை அழிக்கிறது.
இதேநிலை தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் நீட் தேர்வில் முதல் முயற்சியில் தகுதி பெற்று மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 10%க்கும் கீழே குறைந்து விடும். மருத்துவப் படிப்பை ஐந்து ஆண்டுகள் படிக்க வேண்டும் என்றால், அதற்கு தகுதி பெறுவதற்காக 5 ஆண்டுகளுக்கு திரும்பப் திரும்ப நீட் எழுத வேண்டிய நிலை உருவாகக் கூடும். அப்படி ஒரு நிலை உருவானால், அது தான் மருத்துவக் கல்வியின் அதிவிரைவான சீரழிவின் தொடக்கமாக அமையும். அது தடுக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் மீண்டும், மீண்டும் தனிப்பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதும் சூழலை உருவாக்கியிருப்பதன் மூலம் மருத்துவக் கல்வியையை வணிகமாக்கும் முயற்சியில் நீட் வெற்றி பெற்றுள்ளது. மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுப்பதற்காகவும், தரத்தை உயர்த்துவதற்காகவும் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் ஒரு தேர்வு, அந்த நோக்கங்களுக்கு எதிராக இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும் போது, அதை ரத்து செய்வது தானே சமூகநீதியாக இருக்க முடியும்? எனவே, சமூகநீதியைக் காப்பதிலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால், நீட் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது.

The post ”மருத்துவக் கல்வியையை வணிகமாக்கும் முயற்சியில் நீட் வெற்றி பெற்றுள்ளது..!” டாக்டர் அன்புமணி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/5510-2/feed/ 0
”நீட் தேர்வால் நிறைவேறும் கனவு..!” டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/#respond Wed, 14 Jun 2023 03:47:50 +0000 https://madrasmurasu.com/?p=3819 தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துச் செய்தி: நீட் தேர்வில் வெற்றி பெற்ற புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா மாணவ,மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும்…பாராட்டுக்களும்… அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் மற்றும் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் 4 இடங்களைப் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீட் தேர்வில் […]

The post ”நீட் தேர்வால் நிறைவேறும் கனவு..!” டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் first appeared on Madras Murasu.

]]>
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துச் செய்தி:

நீட் தேர்வில் வெற்றி பெற்ற புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா மாணவ,மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும்…பாராட்டுக்களும்…

அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் மற்றும் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் 4 இடங்களைப் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த
மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீட் தேர்வில் மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

தமிழக மாணவர்கள் தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று நீட் தேர்வில் சாதனை படைத்திருப்பது வருங்கால மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கின்றது.

நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவு நிறைவேறுகிறது.

தமிழக மாணவர்கள் படைத்துள்ள சாதனை நீட் தேர்வை பற்றிய அவநம்பிக்கையை போக்கி மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாக நீட் தேர்வு பலமாகவும், பாலமாகவும் புதிய நம்பிக்கையை அளிக்கின்றது.

The post ”நீட் தேர்வால் நிறைவேறும் கனவு..!” டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/feed/ 0
’’ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே கலந்தாய்வு..!’’ எம்.பி.பி.எஸ் சேர்க்கையில் புதிய சிக்கல் https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2587-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2587-%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf-%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2587-%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95/#respond Mon, 12 Jun 2023 11:31:45 +0000 https://madrasmurasu.com/?p=3771 ’’ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே கலந்தாய்வு என ஒற்றைத் தன்மையை திணிப்பதை அனுமதிக்க முடியாது. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதால் கலந்தாய்விலும் பன்மைத்தன்மை தொடர அனுமதிக்க வேண்டும்’’ என்று டாக்டர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்கள் தவிர […]

The post ’’ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே கலந்தாய்வு..!’’ எம்.பி.பி.எஸ் சேர்க்கையில் புதிய சிக்கல் first appeared on Madras Murasu.

]]>
’’ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே கலந்தாய்வு என ஒற்றைத் தன்மையை திணிப்பதை அனுமதிக்க முடியாது. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதால் கலந்தாய்விலும் பன்மைத்தன்மை தொடர அனுமதிக்க வேண்டும்’’ என்று டாக்டர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்கள் தவிர மீதமுள்ள 85% இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் இந்தக் கலந்தாய்வின் மூலமாகவே நிரப்பப்படுகின்றன. அதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்பிலும் அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கான 50% இடங்கள் தவிர மீதமுள்ள இடங்களை தமிழக அரசே நேரடியாக நிரப்புகிறது.

இவை தவிர்த்து, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கையை மட்டும் மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் மூலம் மத்திய அரசு நடத்துகிறது. இந்த நடைமுறைகளில் இதுவரை எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இந்த முறையை மாற்றி விட்டு, அனைத்து இடங்களுக்குமான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்படும் இளைநிலை மருத்துவக் கல்வி வாரியம் (Under-Graduate Medical Education Board-UGMEB) மூலம் இனி நடத்தலாம் என்று மருத்துவ ஆணையம் கூறியுள்ளது. இதை ஏற்க இயலாது.

கடந்த மே மாதமே இப்படி ஒரு யோசனை முன்வைக்கப்பட்ட போது அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாடு அரசும் இதை எதிர்க்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. அதையேற்று, தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தும் உரிமையை பறிக்கக்கூடாது என்று தமிழக அரசு தேசிய மருத்துவ ஆணையத்திடம் வலியுறுத்தியது. ஆனால், அந்த எதிர்ப்பையெல்லாம் பொருட்படுத்தாமல் மத்திய அரசின் மூலமாகவே மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதற்கான முன்மொழிவை கடந்த 2-ஆம் நாள் மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.

மாநில அரசுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடத்தப்படுவதால் கால தாமதம் ஏற்படுவதாகவும், மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் கூறியுள்ள மருத்துவ ஆணையம், இதைப் போக்குவதற்காகவே அனைத்து இடங்களுக்கும் மத்திய அரசு மூலம் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக விளக்கமளித்திருக்கிறது. இது ஏற்க முடியாத வாதம்.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் மருத்துவப் படிப்புக்காக விண்ணப்பிப்பவர்களில் 80 விழுக்காட்டினர் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாநில மருத்துவப் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள இடங்களுக்கான கலந்தாய்வுகளில் தான் பங்கேற்கின்றனர். மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டும் நடத்தும் கலந்தாய்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 20 விழுக்காட்டுக்கும் குறைவு தான். இந்த அளவிலானவர்கள் இரு கலந்தாய்வுகளிலும் பங்கேற்பதால் சில குழப்பங்களும், தாமதமும் ஏற்படுவது வழக்கம் தான். அதை தவிர்க்க முடியாது. அது தான் ஜனநாயகம்.

மாணவர் சேர்க்கைகள் மாநில அளவில் நடத்தப்படுவது தான் சிக்கல் இல்லாமல் இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வகையான இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசு நடத்தும் மாணவர் சேர்க்கையிலும் அதே இடஓதுக்கீட்டு முறை தான் கடைபிடிக்கப்படும் என்றாலும் கூட, 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அந்தந்த மாநிலத்தின் இட ஒதுக்கீட்டு முறையை கடைபிடித்து மத்திய அரசே கலந்தாய்வை நடத்துவது சாத்தியமல்ல. அதனால் ஏராளமான குழப்பங்களும், முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் 69% செங்குத்து இட ஒதுக்கீடு மட்டுமின்றி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% கிடைக்கோட்டு இட ஒதுக்கீடு என ஏராளமான இட ஒதுக்கீடுகள் உள்ளன. இவற்றை தமிழகத்தின் சமூக, கல்விச் சூழலை நன்றாக புரிந்தவர்களால் மட்டும் தான் செயல்படுத்த முடியும். அதுமட்டுமின்றி, பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் பெற்று சேர முயல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநில அளவில் கலந்தாய்வு நடந்தால் மட்டும் தான் அத்தகையவர்களை கண்டுபிடித்து தடுத்து நிறுத்த முடியும். ஒற்றைக் கலந்தாய்வால் இதை செய்ய முடியாது.

இவை அனைத்தையும் கடந்து ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே கலந்தாய்வு என ஒற்றைத் தன்மையை திணிப்பதை அனுமதிக்க முடியாது. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதால் கலந்தாய்விலும் பன்மைத்தன்மை தொடர அனுமதிக்க வேண்டும். முதலில் தேசிய அளவில் நீட் தேர்வை அறிமுகம் செய்து மாநில அரசின் அதிகாரத்தையும், உரிமைகளையும் பறித்த மத்திய அரசு, அடுத்தக்கட்டமாக ஒற்றைக் கலந்தாய்வு என்ற பெயரில் மாநில அரசுகளின் மீதமுள்ள அதிகாரத்தையும் பறிக்கக்கூடாது.

ஒருபுறம் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம் பேசிக் கொண்டு படிப்படியாக மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பது நியாயமற்றது. எனவே, 100% மருத்துவ இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அனைத்து இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் முன்மொழிவாக மட்டுமே வைத்திருப்பதால், அதை கைவிடும்படி மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கடுமையாக வலியுறுத்த வேண்டும்.

The post ’’ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே கலந்தாய்வு..!’’ எம்.பி.பி.எஸ் சேர்க்கையில் புதிய சிக்கல் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95/feed/ 0