Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#நீட்தேர்வு - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 13 Nov 2023 11:55:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ”சமூக நீதிக்கு முன்­னோடி மாநி­லம் தமிழ்­நாடு..!” அமைச்சர் எ.வ.வேலு https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25af%2582%25e0%25ae%2595-%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf/#respond Mon, 13 Nov 2023 11:55:45 +0000 https://madrasmurasu.com/?p=7575 ”இந்­தி­யா­வி­லேயே விழிப்­பு­ணர்வு கொண்ட மாநி­லம் தமிழ்­நாடு. சமூக நீதிக்கு முன்­னோடி மாநி­லம் தமிழ்­நாடு என்று திரு­வண்­ணா­ம­லை­யில் தி.மு.க. இளை­ஞர் அணி, மாண­வர் அணி, மருத்­துவ அணி சார்­பில் நீட் தேர்வு ரத்து செய்­யக் கோரி மாண­வர்­க­ளி­டம் டிஜிட்­டல் கையெ­ழுத்து இயக்­கத்தை பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் எ.வ. வேலு தொடங்கி வைத்து பேசும் போது குறிப்­பிட்­டார். நீட் தேர்வை ரத்து செய்­யக் கோரி தி.மு.க. இளை­ஞர் அணி, மருத்­துவ அணி, மாண­வர் அணி மற்­றும் பொறி­யா­ளர் அணி சார்­பில் கையெ­ழுத்து […]

The post ”சமூக நீதிக்கு முன்­னோடி மாநி­லம் தமிழ்­நாடு..!” அமைச்சர் எ.வ.வேலு first appeared on Madras Murasu.

]]>
”இந்­தி­யா­வி­லேயே விழிப்­பு­ணர்வு கொண்ட மாநி­லம் தமிழ்­நாடு. சமூக நீதிக்கு முன்­னோடி மாநி­லம் தமிழ்­நாடு என்று திரு­வண்­ணா­ம­லை­யில் தி.மு.க. இளை­ஞர் அணி, மாண­வர் அணி, மருத்­துவ அணி சார்­பில் நீட் தேர்வு ரத்து செய்­யக் கோரி மாண­வர்­க­ளி­டம் டிஜிட்­டல் கையெ­ழுத்து இயக்­கத்தை பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் எ.வ. வேலு தொடங்கி வைத்து பேசும் போது குறிப்­பிட்­டார்.

நீட் தேர்வை ரத்து செய்­யக் கோரி தி.மு.க. இளை­ஞர் அணி, மருத்­துவ அணி, மாண­வர் அணி மற்­றும் பொறி­யா­ளர் அணி சார்­பில் கையெ­ழுத்து இயக்­கம் நடத்­தப்­ப­டு­கி­றது. அதனை தொடர்ந்து 10.11.2023 வெள்­ளிக்­கி­ழமை காலை 9.00 மணி­ய­ள­வில், திரு­வண்­ணா­மலை தெற்கு மாவட்ட தி.மு.க. இளை­ஞர் அணி, மாண­வர் அணி, மருத்­துவ அணி சார்­பில், திரு­வண்­ணா­மலை கம்­பன் மக­ளிர் கலை அறி­வி­யல் கல்­லூரி கலை­ய­ரங்­கில் நீட் தேர்வு ரத்து செய்­யக் கோரி மாண­வர்­க­ளி­டம் டிஜிட்­டல் கையெ­ ழுத்து இயக்­கம் நடை­பெற்­றது.

பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் எ.வ.வேலு

நிகழ்ச்­சிக்கு மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் சி.என்.அண்­ணா­துரை எம்.பி தலைமை வகித்­தார். கழக பொறி­யா­ளர் அணி செய­லா­ளர் கு.கரு­ணா­நிதி, மாவட்ட மருத்­துவ அணி அமைப்­பா­ளர் பிர­வீன்­ஸ்ரீ­த­ ரன், மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் எஸ்.கண்­ண­தா­சன், கோ.ராஜ­சே­கர், எம்.ரமேஷ், எஸ்.சதீஷ்­கு­மார், டி.திலீப்­கு­மார், மாவட்ட மாண­வர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் மு.க.கௌத­மன், இரா.மின்­னல்­ க­மல், ஏ.வெங்­க­டா­ஜ­ல­பதி, ஆ.மாதேஸ்­வ­ரன், தேவி­ம­கேந்­தி­ரன், மாவட்ட மருத்­துவ அணி நிர்­வா­கி­கள் டாக்­டர் சவீ­தா­க­தி­ர­வன், டி.எம்.கலை­ய­ரசு, டாக்­டர் முத்­தை­யா­சி­வ­ராஜ், சக்­தி­வேல், டாக்­டர் எஸ்.விக்­னேஷ், டாக்­டர் யோகேஸ்­வ­ரன், டாக்­டர் வி.தமி­ழ­ர­சன், டாக்­டர் சதீஷ்­கு­மார், டாக்­டர் ரவிக்­கு­மார் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.

மாவட்ட மாண­வர் அணி அமைப்­பா­ளர் காலேஜ் கு.ரவி அனை­வ­ரை­யும் வர­வேற்­றுப் பேசி­னார். நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு டிஜிட்­டல் கையெ­ழுத்து இயக்­கத்தை, பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ரும், கழக உயர்­நிலை செயல்­திட்­டக்­குழு உறுப்­பி­ன­ரு­மான எ.வ. வேலு தொடங்கி வைத்து சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.

அப்­போது அமைச்­சர் எ.வ.வேலு பேசி­ய­தா­வது:–

சரஸ்­வதி அம்­மாள் அறக்­கட்­ட­ளை­யில் தான் பொறுப்­பில் இருந்த போது கம்­பன் கலை மற்­றும் அறி­வி­யல் மக­ளிர் கல்­லூ­ரி­யில் தான் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளில் கலந்து கொண்­டதை நினை­வு­ப­டுத்தி பேசி­ய­வர் இந்த கல்­லூ­ரி­யில் படித்து சென்ற மாண­வி­க­ளின் பலர் அர­சுத்­துறை அதி­கா­ரி­க­ளா­க­வும், பல்­வேறு கல்­லூ­ரி­க­ளில் தலை­வ­ரா­க­வும் பேரா­சி­ரி­யர்­க­ளா­க­வும் இருக்­கி­றார்­கள்.

உத­ய­நிதி ஸ்டாலின் முயற்சி வர­வேற்­கத்­தக்­கது!

பலர் என்னை பல இடங்­க­ளில் பார்க்­கும் பொழுது தாங்­கள் கல்­லூ­ரி­யில் படிக்­கின்ற காலத்­தில் எங்­களை மாண­வி­க­ளாக நீங்­கள் பார்க்­கா­மல் தங்­க­ளு­டைய மகள்­க­ளாக பார்த்து பாது­காத்து படிக்க வைத்­தீர்­கள் என்று கூறு­வது எனக்கு மிகுந்த பெருமை அளிப்­ப­தாக உள்­ளது. எனக்கு பெண் பிள்­ளை­கள் இல்லை என்ற கவ­லையை போக்­கி­யது கம்­பன் கலை மற்­றும் அறி­வி­யல் மக­ளிர் கல்­லூ­ரி­யில் படிக்­கும் மாண­வி­கள்­தான்.

‘இதனை இத­னால் இவன்­மு­டிக்­கும் என்­றாய்ந்து அதனை அவன்­கண் விடல்’ என்ற வள்­ளு­வ­ரின் பொன்­மொ­ழிக்கு ஏற்ப நீட் தேர்­வுக்கு எதி­ராக விளை­ யாட்டு துறை அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் எடுத்­தி­ருக்­கும் இந்த முயற்சி பெரும் வர­வேற்பை பெற்­றுள்­ள­தா­க­வும், ஒரு இலக்கை அடைய வேண்­டும் என்­றால் ஆற்­றல் அறிவு மக்­க­ளி­டம் செல்­வாக்கு இருப்­ப­வர்­க­ளால் தான் முடி­யும் இவை அனைத்­தும் அமைச்­சர் உத­ய­ நிதி ஸ்டாலி­னி­டம் உள்­ளது.

தமிழ்­நாட்­டில் உள்ள இளை­ஞர்­கள், மாணவ, மாண­வி­கள் யார் பேச்சை, கேட்­கி­றார்­கள் என்­றால் அனை­வ­ரும் அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சை கேட்­கி­றார்­கள் என்­ப­தால் தான் தமிழ்­நாட்­டில் பல்­வேறு அமைச்­சர்­கள் இருந்­தா­லும் நீட் எதிர்ப்பு கையெ­ழுத்து இயக்­கத்தை உத­ய­நிதி ஸ்டாலின் கையில் எடுத்­துள்­ளார். இதற்கு திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தில் உள்ள அனைத்து மக்­க­ளும் மாணவ, மாண­வி­க­ளும் முழு ஒத்­து­ழைப்பு கொடுத்து உத­விட வேண்­டும்.

மாணவ, மாண­வி­க­ளா­கிய உங்­களை மருத்­து­வத்­து­றை­யில் தற்­பொ­ழுது படிக்க வைக்க ஈன்­றெ­டுத்த பெற்­றோர்­க­ளுக்கு தடை­யாக இருப்­பது நீட் தேர்வு என்­றும், 28க்கும் மேற்­பட்ட மாநி­லங்­க­ளைக் கொண்ட மிகப்­பெ­ரிய நாடு இந்­தியா என்­றும் ஆனால், தமிழ்­நாட்­டில் மட்­டும் தமி­ழக முதல்­வர் மட்­டும் ஏன் தமிழ்­நாட்­டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்­டும் என்று ஏன் கேட்­கி­றார்­கள் என்­றால் இந்­தி­யா­வி­லேயே விழிப்­பு­ணர்வு அதி­கம் உள்ள மாநி­லம் தமிழ்­நாடு என்­றும், திரா­விட இயக்­கங்­கள் தான் தமிழ்­நாட்­டின் அடை­யா­ளம்.

விழிப்­பு­ணர்வை உரு­வாக்­கிய இயக்­கம்!

ஒரு காலத்­தில் ஆண்­க­ளுக்கு மட்­டும்­தான் வாக்­கு­ரிமை இருந்த காலங்­கள் உண்டு என்­றும் சொத்து வைத்­தி­ருந்­தா­லும், வரி கட்டி இருந்­தா­லும் கூட பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­காத காலங்­கள் இருந்­ததை சுட்­டிக்­காட்டி பேசிய அவர் நீதிக் கட்சி தான் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரி­மையை தமிழ்­நாட்­டில் முதன் முத­லில் கொண்டு வந்­தது என்று பேசிய அவர் இந்­தி­யா­வில் விழிப்­பு­ணர்வு உரு­வாக்­கிய இயக்­கம் திரா­விட இயக்­கம்.

ஒரு காலத்­தில் ஆஸ்­திக்கு ஆண் குழந்தை, ஆசைக்கு பெண் குழந்தை மூட­நம்­பிக்­கை­கள் இருந்த காலத்தை, மூட­நம்­பிக்­கை­களை தூக்கி எறிந்து ஒரே வயிற்­றில் பிறந்த ஆணாக இருந்­தா­லும், பெண்­ணாக இருந்­தா­லும் சொத்­தில் சம உரிமை அளித்து சட்­டத்தை நிறை­வேற்­றி­யது தந்தை பெரி­யா­ரும், தலை­வர் கலை­ஞ­ரும் தான்.

தமிழ்­நாட்­டில் பெண்­களுக்கு சொத்­தில் சம உரிமை உண்டு என்று சட்­டத்தை இப்­பொ­ழு­து­தான் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்றி அனைத்து மாநி­லங்­க­ளும் பின்­பற்­று­கின்­ற­னர். தந்தை பெரி­யார் பேர­றி­ஞர் அண்ணா முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆகிய மும்­மூர்த்­தி­ க­ளும் பெண்­கள் படித்­தால் தான் நாட்­டின் சமு­தா­யம் முன்­னே­றும் என்­றும், பெண்­க­ளுக்­குத்­தான் குடும்ப பொரு­ளா­தா­ரத்தை உயர்த்த தெரி­யும்.

ஒத்துழைப்புத் தாரீர்!

பெண்­கள் கையில் நாட்டை கொடுத்­தால் தான் நாடு வளர்ச்சி அடை­யும் என்ற அடிப்­ப­டை­யில் பெண்­களை படி, படி, படி என்று சொன்ன இயக்­கம் திரா­விட இயக்­கம் இது­போல பல்­வேறு வர­லா­று­கள் திரா­விட இயக்­கத்­திற்கு உண்டு.

பல்­வேறு வர­லா­று­க­ளைக் கொண்ட திரா­விட இயக்­கம் தற்­பொ­ழுது நீட் தேர்­விற்கு விலக்கு வேண்­டும் என்று தொடர்ந்து அமைச்­சர் உத­ய­நிதி தலை­மை­யில் போராடி வரு­கி­றது நாட்­டில் பல­ரும் பல்­வேறு வகை­யில் அவர் அவர்­கள் சக்­திக்கு ஏற்­றார் போல வரி­களை கட்­டிக்­கொண்டு வரு­வ­தா­க­வும் இத­னால் தான் அரசு நடை­பெற்று கொண்டு இருக்­கி­றது.

திரா­விட மாடல் ஆட்­சி­யில் தமிழ்­நாடு முதல்­வர் கல்­வித்­துறை, மருத்­து­வத்­துறை, கட்­டு­மா­னத் துறை ஆகிய மூன்று துறை­க­ளை­ யும் தனது கண்­க­ளாக பாவித்து பல்­வேறு திட்­டங்­களை நிறை­வேற்றி வரு­கி­றார் என்­றும் கல்­வித்­து­றைக்­காக 20 ஆயி­ரம் கோடிக்கு மேல் ஒதுக்கி கல்­வித்­து­றையை மேம்­ப­டுத்த பல்­வேறு திட்­டங்­களை தமிழ்­நாடு முதல்­வர் நிறை­வேற்றி வரு­கி­றார். திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், ஒன்­றிய அர­சுக்கு எதி­ரா­க­வும், தமிழ்­நாட்டு மாண­வர்­க­ளின் நலன் கரு­தி­யும் கையில் எடுத்­துள்ள நீட் தேர்வு கையெ­ழுத்து இயக்­கத்­திற்கு அனை­வ­ரும் ஒத்­து­ழைக்க வேண்­டும்.

இவ்­வாறு அமைச்­சர் எ.வ.வேலு பேசி­னார்.

நிகழ்ச்­சி­யில் சட்­டப்­பேரவை துணைத்­த­லை­வர் கு.பிச்­சாண்டி, மாநில மருத்­து­வர் அணி துணைத்­த­லை­ வர் டாக்­டர் எ.வ.வே.கம்­பன், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் இரா.ஸ்ரீதரன், பொன்.முத்து, சட்ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சர­வ­ணன், மாவட்­டப் பொரு­ளா­ளர் எஸ்.பன்­னீர்­செல்­வம், மாவட்ட துணைச் செய­லா­ளர் ப்ரியா­வி­ஜ­ய­ ரங்­கன், நகர செய­லா­ளர் ப.கார்த்­தி­வேல்­மா­றன்,

மாவட்ட அமைப்­பா­ளர்­கள் டி.வி.எம்.நேரு, மங்­கலம் பிர­பா­க­ரன், ஏ.ஏ.ஆறு­மு­கம், பொன்.தனுசு, சி. ராம்­காந்த், பால­மு­ர­ளி­கி­ருஷ்ணா, ஒன்­றி­யச் செய­லா­ளர் பெ.கோவிந்­தன், கோ. ரமேஷ், கி.ஆறு­மு­கம், த.செந்­தில்­கு­மார், பேரூர் செய­லா­ளர் சி.கே.அன்பு, மாவட்ட துணை அமைப்­பா­ளர்­கள் எம்.ஆர்.கலை­மணி, கே.கந்­தன், எம்.வெங்­க­டேஷ் உட்­பட மாண­ வர்­கள், இளை­ஞர்­கள் என பலர் கலந்து கொண்­ட­னர்.

நிறை­வாக மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர் சு.ராஜாங்­கம் நன்றி கூறி­னார்.

The post ”சமூக நீதிக்கு முன்­னோடி மாநி­லம் தமிழ்­நாடு..!” அமைச்சர் எ.வ.வேலு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf/feed/ 0
’’சமூக நீதியைக் காப்பதில் அக்கறை இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்க..! பண்ருட்டி தி.வேல்முருகன் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9c%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%259c%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9c%e0%af%8d/#respond Fri, 22 Sep 2023 10:27:49 +0000 https://madrasmurasu.com/?p=6500 ‘’சமூக நீதியைக் காப்பதிலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் ஒன்றிய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக்குவதற்கு மாற்றாக, அத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று ஒன்றிய அரசை பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2017-ஆம் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தனியார் பயிற்சி மையங்களில் […]

The post ’’சமூக நீதியைக் காப்பதில் அக்கறை இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்க..! பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.

]]>
‘’சமூக நீதியைக் காப்பதிலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் ஒன்றிய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக்குவதற்கு மாற்றாக, அத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று ஒன்றிய அரசை பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 2017-ஆம் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது பயிற்சி பெற்றால் தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும். அதற்காக குறைந்தது ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். அதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாதவர்கள் மருத்துவம் பயில்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.

இவ்வாறு பணத்தைக் கொட்டிக் கொடுத்து படித்து, நீட் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் அனைவருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. ஏனெனில், பல இலட்சம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், இந்தியா முழுவதும் சில ஆயிரம் இடங்கள்தான் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. நீட் தேர்வில் அனைத்திந்திய தரவரிசை பட்டியலில் இருக்குமிட எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல தரவரிசையில் இடம்பெறுவோர் மட்டுமே இப்படிப்புகளில் சேர முடியும்.

சான்றாக, 2019ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய 14.10 லட்சம் பேரில் 7.04 லட்சம் பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். அரசுக் கல்லூரிகளில் 30,455 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 36,165 இடங்களும் என மொத்தம் 66 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

இதில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் 30 ஆயிரம் தரவரிசை வரை உள்ளவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அடுத்து 36 ஆயிரம் பேர் அடுத்த ரேங்க் வரிசைப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் பிடிப்பார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதியுள்ள 6 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு இடம் கிடையாது. அவர்கள் செலவு செய்த பல லட்சம் ரூபாயும் வீண்தான்.

இந்தியா முழுவதுமுள்ள அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 3,947 எம்.பி.பி.எஸ். மற்றும் 985 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அனைத்திந்திய தேர்வான நீட் வழியாகத் தேர்வு செய்யப்படும்போது, கிட்டத்தட்ட மாவட்டத்திற்கு ஒன்றாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திக்காரர்களும், பிற மாநிலத்தவரும் எளிதில் இடம் பெற்று விடுவார்கள்.

தமிழ்நாட்டு மாணவர்கள், நீட் தேர்வில் பயிற்சி பெற்ற பலர் உட்பட புறக்கணிக்கப்படுவார்கள். உயர்கல்வியில் வெளி மாநிலத்தவர் ஆதிக்கத்திற்கு நீட் தேர்வு வழிவகுக்கிறது.

நீட் தேர்வு என்பது அநீதி என்பதால் தான், அத்தகைய நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்பதால் தான், அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்காக, 2021 செப்டம்பர் 13 ஆம் தேதி சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. அதை ஆளுனர் திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் அதே சட்டம் மீண்டும் இயற்றி, மே மாதத் தொடக்கத்தில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.

நீட் விலக்கு சட்டம் பேரவையில் இயற்றப்பட்டு 20 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அந்த சட்டம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு 17 மாதங்களாகி விட்டன. ஆனால், நீட் விலக்கு சட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

இத்தகைய அறிவிப்பு வரவேற்கதக்கதாக இருந்தாலும், எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டிய நாடகமாக என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. ஏனெனில், ஆட்சியின் கடைசி தருணத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தான் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

தற்போது நீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியம் என்று அறிவித்துள்ளதால், தனியாரில் காலியாகவுள்ள அனைத்து இடங்களையும் நிரப்பலாம். இதற்கு ஏன் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இதைவிட தமிழ்நாடு அரசு ஏற்கெனவே முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்திய தேர்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

எனவே, சமூக நீதியைக் காப்பதிலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் ஒன்றிய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக்குவதற்கு மாற்றாக, அத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.

அதாவது, நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியம் என்பதற்கு பதிலாக, அத்தேர்வு முறையை அடியோடு ஒழிப்பதே சிறந்த தீர்வாகும் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்தாகும். இதனை தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

The post ’’சமூக நீதியைக் காப்பதில் அக்கறை இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்க..! பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9c%e0%af%8d/feed/ 0
’’நீட் தேர்வின் பலன் என்ன என்றால் ‘0’ தான்..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b2%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/#respond Thu, 21 Sep 2023 05:57:13 +0000 https://madrasmurasu.com/?p=6444 ’’நீட் தேர்வின் பலன் என்ன என்றால் ‘0’ தான் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் ‘0’ தான் என்று வரையறுப்பதன் மூலமாக NEET என்றால் National Eligibility Cum Entrance Test என்பதில் உள்ள Eligibilityக்குப் பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். கோச்சிங் செண்டர்களில் சேருங்கள், நீட் தேர்வுக்கு பணம் […]

The post ’’நீட் தேர்வின் பலன் என்ன என்றால் ‘0’ தான்..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
’’நீட் தேர்வின் பலன் என்ன என்றால் ‘0’ தான் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் ‘0’ தான் என்று வரையறுப்பதன் மூலமாக NEET என்றால் National Eligibility Cum Entrance Test என்பதில் உள்ள Eligibilityக்குப் பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். கோச்சிங் செண்டர்களில் சேருங்கள், நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள், போதும் என்றாகி விட்டது.

NEET = 0 என்றாகி விட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

NEET என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிர்களைப் பறிப்பதற்காகவே இந்த பா.ஜ.க ஆட்சியை அகற்றியாக வேண்டும்.

The post ’’நீட் தேர்வின் பலன் என்ன என்றால் ‘0’ தான்..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
’’11 ஆம் வகுப்பு முதல் ’நீட் தேர்வு’ பயிற்சி தொடங்க வேண்டும்..!’’ டாக்டர் ராமதாஸ் https://madrasmurasu.com/11-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=11-%25e0%25ae%2586%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%259f https://madrasmurasu.com/11-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f/#respond Wed, 06 Sep 2023 04:56:31 +0000 https://madrasmurasu.com/?p=6145 ’’நீட் பயிற்சியை அரசு பள்ளி மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு முதல் தொடங்க வேண்டும்’’ என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுத விரும்பும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதது ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆண்டுகளில் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்ட நீட் பயிற்சியால் எந்த பயனும் விளையாத நிலையில், நடப்பாண்டிலாவது பயிற்சியை முன்கூட்டியே […]

The post ’’11 ஆம் வகுப்பு முதல் ’நீட் தேர்வு’ பயிற்சி தொடங்க வேண்டும்..!’’ டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.

]]>
’’நீட் பயிற்சியை அரசு பள்ளி மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு முதல் தொடங்க வேண்டும்’’ என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுத விரும்பும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதது ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆண்டுகளில் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்ட நீட் பயிற்சியால் எந்த பயனும் விளையாத நிலையில், நடப்பாண்டிலாவது பயிற்சியை முன்கூட்டியே தொடங்குவது தான் சரியான செயலாக இருக்கும்.

சமூகநீதிக்கு எதிரான நீட் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; 12&ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. எனினும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள், குறிப்பாக தனியார் நிறுவனங்களில் நீட் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாத அரசு பள்ளிகளின் மாணவர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்வது தான் அரசின் கடமை ஆகும். அந்த கடமையை நிறைவேற்றுவது கடந்த காலங்களில் இருந்ததை விட, இப்போது சவாலானதாக மாறியிருக்கிறது என்பது தான் ஆய்வுகள் சொல்லும் உண்மை.

நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வது கடினமானதாக மாறியுள்ளது. நடப்பாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.50% ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களைத் தவிர, பொதுப்பிரிவில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட சேரவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.50% ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்தவர்களில் கூட 20% மாணவர்கள் மட்டும் தான் முதல் முயற்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள். மீதமுள்ள 80% மாணவர்கள் அரசு பள்ளிகளில் 12&ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனியார் பயிற்சி மையங்களில் சிறப்பு பயிற்சி பெற்ற பிறகே நீட் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கும் மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் 7.50% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்றாலும் கூட தனியார் பயிற்சி மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது நல்வாய்ப்புக்கேடானது ஆகும். இந்த நிலையை மாற்றுவதற்கான ஒரே தீர்வு, தனியார் பயிற்சி மையங்களில் அளிப்பதை விட தரமான பயிற்சியை தமிழக அரசு பள்ளிகளில் வழங்குவது தான். ஆனால், தவிர்க்கவே முடியாத இந்தத் தீர்வை செயல்படுத்த வேண்டியதன் தேவையை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உணர்ந்ததாக தெரியவில்லை.

அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலில் தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடியாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பின் 2021&22ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு ஹைடெக் ஆய்வகங்களிலும், 15 மாதிரி பள்ளிகளில் எலைட் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேற்கண்ட இரு வகை பயிற்சிகளிலும் பல குறைபாடுகள் இருந்தன என்பதை எவரும், எங்கும், எப்போதும் மறுக்க முடியாது. இந்தக் குறைகளை களையும் வகையில் கடந்த ஆண்டு வட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் 415 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு, அவற்றில் மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்தமாக 14 நாட்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டதால் அதுவும் பயனளிக்கவில்லை.

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் வசதி படைத்த மாணவர்கள் குறைந்தது இரு ஆண்டுகள் முதல் நான்கு ஆண்டுகள் வரை தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர். அந்தப் பயிற்சிக்குப் பிறகு முதல் முயற்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால், மீண்டும் ஓரிரு ஆண்டுகள் பயிற்சி பெறுகின்றனர். இவ்வாறாக நீட் தேர்வில் வெற்றி பெற பலரும் 6 ஆண்டுகள் வரை பயிற்சி பெற வேண்டியிருக்கும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 14 நாட்கள் பயிற்சி கொடுப்பது எந்த வகையில் போதுமானதாக இருக்கும். அதனால் தான் அரசு பள்ளி மாணவர்களால் பொதுப்பிரிவு இடங்களில் தகுதி பெற முடியவில்லை என்பதுடன், 7.50% ஒதுக்கீட்டிலும் 80% இடங்களை தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தாரை வார்க்க வேண்டியிருக்கிறது.

நீட் விலக்கு பெறும் வரை, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீண்ட காலம் பயிற்சி அளிக்க வேண்டியதன் தேவையை தமிழக அரசு இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை வாரத்தில் ஒரு நாள் பெயரளவில் பயிற்சி அளிக்கும் முறையை கைவிட்டு, அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தது இரு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுவதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும். அதற்காக 11 ஆம் வகுப்பு தொடங்கிய வாரம் முதல், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்து நீட் தொடங்குவதற்கு முந்தைய வாரம் வரை இரு ஆண்டுகளுக்கு முழுமையான பயிற்சியை திறமையான ஆசிரியர்கள், வல்லுனர்களைக் கொண்டு அரசு வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டில் வட்டத்திற்கு ஒரு மையத்தில் மட்டுமே நீட் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் வட்டத்திற்கு இரு மையங்களில் பயிற்சி வழங்கப்பட வேண்டும். பயிற்சியில் சேர விருப்பமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு கையேடு மற்றும் வினா – விடை தொகுப்பை இலவசமாக வழங்க வேண்டும். நடப்பாண்டிற்கான பயிற்சி வகுப்புகளை அடுத்த வாரத்திலேயே தொடங்குவதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post ’’11 ஆம் வகுப்பு முதல் ’நீட் தேர்வு’ பயிற்சி தொடங்க வேண்டும்..!’’ டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/11-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f/feed/ 0