Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#துஷாரா விஜயன் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Tue, 11 Jul 2023 06:20:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ஜுலை 21-ஆம் தேதி ‘அநீதி’ படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள்..!’’ நடிகை வனிதா விஜயகுமார் https://madrasmurasu.com/%e0%ae%9c%e0%af%81%e0%ae%b2%e0%af%88-21-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259c%25e0%25af%2581%25e0%25ae%25b2%25e0%25af%2588-21-%25e0%25ae%2586%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%2585%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%9c%e0%af%81%e0%ae%b2%e0%af%88-21-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/#respond Tue, 11 Jul 2023 06:20:14 +0000 https://madrasmurasu.com/?p=4998 தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்  நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் கார்த்திக் […]

The post ஜுலை 21-ஆம் தேதி ‘அநீதி’ படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள்..!’’ நடிகை வனிதா விஜயகுமார் first appeared on Madras Murasu.

]]>
தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்  நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா கூறியதாவது:

“இயக்குநர் வசந்தபாலன் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நா. முத்துக்குமார் அவர்கள் வசந்தபாலன் பற்றி நிறைய சொல்லுவார். நா. முத்துக்குமாரின் நீட்சியாகத்தான் இந்த திரைப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி உள்ளேன். ஒன்று காதல் பாடலாகவும் மற்றொன்று நீதி, அநீதி பற்றி விவரிக்கும் பாடலாகவும் அமைந்துள்ளது. ஜி வி பிரகாஷ் மிகவும் பிரமாதமாக இசையமைத்துள்ளார்.”

இத்திரைப்படத்தின் வசனகர்த்தா ’இயக்குநர்’ எஸ்.கே.ஜீவா பேசியதாவது:

“‘புதுமைப்பித்தன்’ மற்றும் ‘லவ்லி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள நான் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் எழுத்தாளராக பணியாற்றினேன். இடைப்பட்ட காலத்தில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய ‘ஜெயில்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தை இயக்குநர் வசந்த பாலன் எனக்கு வழங்கினார். ஒரு நாள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், ‘அநீதி’ திரைப்படத்திற்கு வசனம் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். எனக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது, ஏனென்றால் வசந்த பாலன் அவர்களே மிகச் சிறந்த எழுத்தாளர். அது மட்டும் இல்லாது தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளர்கள் அனைவருடனும் அவர் நெருங்கிய தொடர்பில் உள்ளார். அப்படி இருக்கும்போது என்னை நம்பி படத்தின் வசனப் பொறுப்பை அவர் ஒப்படைத்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் குழுவினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மனமுவந்து செய்து கொடுத்தார்கள். நடிகர்கள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவரும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்கள். நடிகவேள் எம் ஆர் ராதா மற்றும் கலைஞர் ஆகியோருக்கு பிறகு தனித்துவமான குரலை அர்ஜுன் தாஸ் கொண்டிருக்கிறார். இந்த ‘அநீதி’ நீதிக்கானது. அனைவரும் ஆதரவளிக்குமாறு வேண்டுகிறேன், நன்றி.”

நடிகர் பரணி பேசியதாவது:

“இயக்குநர் வசந்த பாலனோடு பணியாற்ற வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. சமூக பொறுப்பு மிகவும் கொண்ட படைப்பாளி அவர். ‘அநீதி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டுமென்று நான் வணங்கும் முருகனிடம் மனமார வேண்டுகிறேன். நன்றி.”

நடிகர் அர்ஜுன் சிதம்பரம் பேசியதாவது:

“‘அநீதி’ திரைப்படத்தில் நடிப்பதற்காக என்னை வசந்த பாலன் அவர்கள் அழைத்த போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்படத்திற்காக முடியை மிகவும் நீளமாக வளர்த்து வைத்திருந்தேன். பெருந்தன்மையுடன் அதே தோற்றத்தில் என்னை இப்படத்தில் நடிக்க அனுமதித்ததற்காக வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. ‘அநீதி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.”

ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய் பேசியதாவது:

“‘எந்திரன்’ திரைப்படத்தில் மேக்கிங் கேமராமேனாக எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு மிக்க நன்றி. ‘அநீதி’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வசந்த பாலன் அவர்கள் என்னை அழைத்த போது கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனால் முதல் சந்திப்பிலேயே அவர் மிகவும் நட்பாக பேசி திரைப்படம் குறித்து விவரித்தார். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.”

எடிட்டர் ரவிக்குமார் பேசியதாவது:

“இந்த திரைப்படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்காக இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கு இதுவரை நான் நன்றி தெரிவிக்கவில்லை. இந்த மேடையில் அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த படத்திற்கு நல்லதொரு டீம் தானாக அமைந்து விடும் என்பார்கள், அது ‘அநீதி’ திரைப்படத்திற்கு நடந்துள்ளது.”

நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது:

“இத்திரைப்படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரை உலகில் நான் மீண்டும் பிரவேசிக்கிறேன். இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம். இதில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஒன்றை எனக்கு அளித்த வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. திரைத்துறையின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளி அளவு கர்வம் கூட இல்லை. அத்தனை எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார். அர்ஜுன் தாசை தமிழ் திரை உலகின் ஷாருக்கான் என்று கூறலாம். மிகைப்படுத்துவதற்காக நான் இதை கூறவில்லை. ‘அநீதி’ படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள். துஷரா விஜயன் மிகவும் திறமையான நடிகை. இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். ‘அநீதி’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறும்.”

‘அநீதி’ திரைப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ் பேசியதாவது:

“இதுவரை விநியோகஸ்தராக இருந்த நான் ஒரு படத்தை தமிழகமெங்கும் வெளியிடுவது இதுவே முதல் முறை. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த ‘அநீதி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.”

தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் பேசியதாவது:

“இயக்குநர் வசந்த பாலன் மற்றும் அவரது நண்பர்களின் முதல் தயாரிப்பு ‘அநீதி’ திரைப்படம். தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக இது இருக்கும். இதில் எனக்கும் ஒரு கதாபாத்திரத்தை வழங்கியுள்ள வசந்த பாலன் அவர்களுக்கு நன்றி. அவரது எதிர்பார்ப்பை எவ்வாறு பூர்த்தி செய்யப் போகிறேன் என்று நினைத்தேன், ஆனால் எனது வேலையை அவர் மிகவும் சுலபமாக்கினார். ஒரு குடும்பம் போல ஒட்டுமொத்த குழுவினரையும் அவர் அழகாக வழிநடத்தி சென்றார். அர்ஜுன் தாஸ் மிகவும் திறமை வாய்ந்தவர், நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.”

அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எம். கிருஷ்ணகுமார் பேசியதாவது:

“வசந்த பாலன் உள்ளிட்ட இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்தோம். பின்னர் வெவ்வேறு துறைகளுக்கு நாங்கள் சென்று விட்டோம். வசந்த பாலன் மட்டும் பள்ளி காலம் முதலே கலை மற்றும் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். இப்படத்தின் மூலம் நாங்கள் இணைவது மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்தை நாங்கள் உற்சாகத்துடன் தயாரித்துள்ளோம், உங்கள் அனைவரது ஆதரவையும் வேண்டுகிறோம்.”

அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முருகன் ஞானவேல் பேசியதாவது:

“வசந்த பாலனும் நாங்களும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர் வெற்றி பெற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன், அவரது படங்கள் தோல்வி அடைந்தால் நான் துவண்டு போவேன். அர்பன் பாய்ஸ் நிறுவனத்தை நண்பர்கள் நாங்கள் இணைந்து விளையாட்டாக ஆரம்பித்தோம். ஆனால் இன்று மிகவும் சிறந்த ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளோம் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு ரசிகனாக சொல்கிறேன், ‘அநீதி’ திரைப்படம் உங்களை கதைக்குள் ஈர்த்து விடும். ஒவ்வொரு நடிகரும் தொழில்நுட்ப கலைஞரும் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்கள், அனைவருக்கும் நன்றி.”

நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி பேசியதாவது:

“வசந்தபாலன் ஒரு துருவ நட்சத்திரம் போன்றவர். ஆஸ்திரேலியாவில் நான் வசித்த காலத்தில் அவரது படங்களை தொடர்ந்து பார்த்து ரசிப்பேன். அவரது இயக்கத்தில் நான் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்தில் நடித்த பின்னர் அர்ஜுன் தாசின் ரசிகனாக நான் மாறி விட்டேன், சிறு வயதிலேயே மிகுந்த திறமையோடு அவர் திகழ்கிறார். ‘அநீதி’ திரைப்படம் மிகவும் செம்மையாக உருவெடுத்துள்ளது, பத்திரிகையாளர்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவளித்து மாபெரும் வெற்றி அடைய செய்ய வேண்டும், நன்றி.”

அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வரதராஜன் மாணிக்கம் பேசியதாவது:

“ஒரு திரைப்பட நிறுவனம் ஆரம்பித்து படங்களை தயாரிக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கனவு, அது ‘அநீதி’ மூலம் நிறைவேறி உள்ளது. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு ஆதரவளிக்குமாறு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.”

நடிகை துஷாரா விஜயன் பேசியதாவது:

“இயக்குநர் வசந்த பாலன் மிகுந்த அர்ப்பணிப்பு மிக்கவர், அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக அவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. ஒப்பனை இல்லாமலேயே இப்படத்தில் என்னை மிகவும் அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. அர்ஜுன் தாசுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது, அவர் ஒரு சிறந்த நடிகர். இப்படத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.”

நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது:

“இயக்குநர் வசந்தபாலன் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறிய போது வில்லன் பாத்திரத்தில் நடிக்க தான் கூப்பிடுகிறார் என்று எண்ணினேன். ஆனால் அவர் சுமார் 3:30 மணி நேரம் எனக்கு கதையை பொறுமையாக விவரித்ததுடன் மட்டுமில்லாமல் இதில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கூறி என்னை மகிழ்ச்சியில் ஆற்றினார். அடுத்த நாளே இந்த படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானேன். அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம், மீண்டும் ஒருமுறை அவரது படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இப்படத்தில் அனுபவமிக்க பல நடிகர்களுடன் நடித்தது நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. ‘அநீதி’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.”

நிர்வாகத் தயாரிப்பாளர் பிரபாகர் பேசியதாவது:

“இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கும் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘அநீதி’ திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அர்ஜுன் தாஸ், துஷாரா, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். வசந்த பாலன் ஒரு தலைசிறந்த இயக்குநர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதராகத் திகழ்கிறார். இது அவரை இன்னும் உயரங்களுக்கு இட்டு செல்லும். ‘அநீதி’ திரைப்படத்திற்கு உங்களது முழு ஆதரவை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”

இயக்குநர் வசந்த பாலன் பேசியதாவது:

“வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி என்ற இந்த காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல இந்த ‘அநீதி’ திரைப்படம் வருகிறது. நீதி கிடைக்காதவர்கள் குரலாக இப்படம் ஒலிக்கும். எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை இது பிரதிபலிக்கும். மொத்த உலகமும் சிறு அன்பை எதிர்பார்த்தே சுழல்கிறது. அதை இப்படத்தின் மூலம் சொல்ல முயற்சித்துள்ளோம். நண்பர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இப்படத்தை தயாரித்துள்ளோம். இயக்குநர் ஷங்கர் சார் ‘வெயில்’ படத்தை தயாரித்து எனக்கு வாய்ப்பளித்தார். நான் தயாரிப்பாளராக மாறி உள்ள ‘அநீதி’ படம் குறித்து அவருக்கு தெரிவித்த போது, தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் அதை வழங்குவதற்கு வழி முன் வந்தார். அவருக்கு மிக்க நன்றி. இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கி உள்ளார்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி. அர்ஜுன் தாஸ் ஷாருக்கான் போன்று வருவார் என்று இங்கு கூறினார்கள். உண்மையிலேயே அவருக்கு அதற்கான திறமை இருக்கிறது. இந்த படத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் உருவாக்கி இருக்கிறோம், அனைவருக்கும் நன்றி.”

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, வசந்த பாலனின் படைப்பான ‘அநீதி’, இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பாக தமிழ் மற்றும் தெலுங்கு (‘பிளட் அண்டு சாக்லேட்’) மொழிகளில் ஜூலை 21 அன்று வெளியாகவுள்ளது.

அநீதி – குழுவினர்

நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா, இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன், தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா.

பட நிறுவனம்: அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்

எழுத்து & இயக்கம்: வசந்த பாலன்

தயாரிப்பு: எம். கிருஷ்ணகுமார் முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், G. வசந்த பாலன்

ஒளிப்பதிவு: எட்வின் சகாய்

கலை இயக்கம்: சுரேஷ் கல்லேரி

படத்தொகுப்பு: M.ரவிக்குமார்

வசனம்: ’இயக்குநர்’ எஸ்.கே.ஜீவா

நிர்வாகத் தயாரிப்பு: J.பிரபாகர்

சண்டை வடிவம்: ‘டான்’ அசோக்-’பீனிக்ஸ்’ பிரபு

ஒலிக்கலவை: M.R.ராஜாகிருஷ்ணன்

ஸ்டில்ஸ்: R.S.ராஜா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

The post ஜுலை 21-ஆம் தேதி ‘அநீதி’ படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள்..!’’ நடிகை வனிதா விஜயகுமார் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9c%e0%af%81%e0%ae%b2%e0%af%88-21-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
’’அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடிப்பில் ’அநீதி’ திரைப்படத்தின் இசை வெளியீடு..!’’ ஜுலை 21-ல் ரிலீஸ் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9c%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%259c%25e0%25af%2581%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b7%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25be-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9c%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf/#respond Mon, 10 Jul 2023 06:36:13 +0000 https://madrasmurasu.com/?p=4961 தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் […]

The post ’’அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடிப்பில் ’அநீதி’ திரைப்படத்தின் இசை வெளியீடு..!’’ ஜுலை 21-ல் ரிலீஸ் first appeared on Madras Murasu.

]]>
தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ்:

“இயக்குநர் வசந்த பாலன் இயக்குநர் ஷங்கரிடம் இருந்து வந்தவர். ‘அநீதி’ திரைப்படம் எப்படி இருக்கும் என்பதற்கு வசந்தபாலனின் முந்தைய திரைப்படங்களே சான்று. ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று சொல்வார்கள், இங்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தயாரிப்பாளர்கள் ஆகி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்று அதன் வெற்றி விழாவிலும் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.”

தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன்:

“‘ஒருவருக்கு நண்பர்கள் அமைவது என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் இயக்குநர் வசந்த பாலன் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. பள்ளிக்காலம் முதல் ஒன்றாக இருக்கும் நண்பர்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நண்பர்களுக்கு வசந்த பாலன் அளிக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்தை வெளியிடுவதும் அந்த நட்பின் அடிப்படையில் தான். இந்த விழாவுக்கு பல முன்னணி இயக்குனர்கள் வந்திருப்பதும் அந்த நட்பின் அடிப்படையில் தான். ரசிகர்களின் நட்பும் ‘அநீதி’க்கு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு படத்தின் கதையை வசந்த பாலன் விவருக்கும் விதமே அலாதியானது. ‘அநீதி’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.”

இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான சித்ரா லட்சுமணன்:

“வசந்த பாலன் சினிமாவை மிகவும் நேசிப்பவர் என்பது மட்டுமில்லாமல் திரையுலகை பற்றி அறிந்து வைத்திருப்பவர். மிகவும் கடின உழைப்பாளி ஆன அவர் சிறந்த படைப்புகளை ஏற்கனவே தந்துள்ளார். அந்த வரிசையில் ‘அநீதி’யும் இடம்பெறும் என்று நான் நம்புகிறேன். தமிழ் சினிமாவை உலக கவனம் பெற வைத்துள்ள இயக்குநரான ஷங்கர் இப்படத்தை வெளியிடுவது கூடுதல் பலம். அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் தங்கள் நடிப்பின் மூலம் இப்படத்திற்கு வலு சேர்த்துள்ளார்கள். ‘அநீதி’ மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.”

தயாரிப்பாளரும் இயக்குநருமான கதிரேசன்:

“‘மிகச்சிறந்த இயக்குநரான வசந்த பாலன் ஆரம்ப காலம் முதலே வித்தியாசமான படங்களை வழங்கி வருகிறார். ‘அநீதி’யும் அப்படி ஒரு படமாக இருக்கும் என்று நன்றாக தெரிகிறது. வசந்த பாலனுடன் இணைந்து அவரது நண்பர்கள் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களை அவர்கள் தயாரிக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். மிகச் சிறந்த பாடல்களை ஜிவி பிரகாஷ் வழங்கி உள்ளார். அர்ஜுன் தாசின் குரலுக்கு நாம் அனைவருமே ரசிகர்கள்.”

நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதி:

“‘வெயில்’ படத்திலிருந்து நான் இயக்குநர் வசந்த பாலனின் ரசிகன். வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து அவர் வழங்கி வருகிறார். ‘அநீதி’ படத்தின் டிரெய்லரும் பாடல்களும் மிரட்டலாக இருந்தன, இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கு அவையே சான்று. மிகவும் கடின உழைப்பாளரான வசந்த பாலன் தன்னுடன் பணியாற்றுபவர்களிடமிருந்து சிறந்த பங்களிப்பை பெற்று விடுவார். இப்படத்தின் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”

இயக்குநர் எழில்:

“இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மட்டும் பாடல்கள் மிகவும் அருமையாக அமைந்துள்ளன. இப்படத்தை தயாரித்துள்ள வசந்த பாலன் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு வாழ்த்துகள். ‘அநீதி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

இயக்குநர் ஏ. வெங்கடேஷ்:

“ஷங்கர் சாரிடம் பணியாற்றிய காலத்தில் இருந்தே வசந்த பாலனும் நானும் நண்பர்கள். வசந்த பாலனுக்கு நண்பர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதன் காரணம் என்னவென்றால் நண்பர்களின் மீது அவர் மிகவும் பாசம் காட்டுவார். ‘அங்காடி தெரு’வில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி நான் தான் அதில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அவரது அன்புக்கு கட்டுப்பட்டு நான் அப்படத்தில் நடித்தேன். எளிய மனிதர்களின் வாழ்க்கையை திரையில் காட்டுவது அனைவருக்கும் கைவந்ததல்ல, வசந்த பாலனுக்கு இது மிகவும் அழகாக வருகிறது. தொடர்ந்து பல்வேறு மிகச் சிறந்த படங்களை அவர் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

நடிகர் சித்தார்த்:

“இப்படத்தை பணம் செலவிட்டு நீங்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று கட்டாயம் பார்க்கலாம். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒரு படத்தை இயக்குநர் ஷங்கர் வழங்குகிறார் என்றாலே அது மிகவும் சிறந்த படமாகத் தான் கட்டாயம் இருக்கும். வசந்தபாலன் இயக்கத்தில் உருவான படம் என்றால் அது சொல்லப்பட வேண்டிய கதையாக தான் இருக்கும். ஜிவி பிரகாஷின் இசையை பற்றி நிறைய பேசலாம். இவ்வாறு ‘அநீதி’ படத்தை பார்ப்பதற்கான காரணங்கள் பல உள்ளன. வசந்த பாலன் உடன் (‘காவியத்தலைவன்’ திரைப்படத்தில்) பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது எனது பாக்கியம். அநீதி திரைப்படத்தை அனைவரும் ஆதரிக்குமாறு வேண்டுகிறேன், நன்றி.”

இயக்குநர் என். லிங்குசாமி:

“இயக்குநர் வசந்த பாலனும் நானும் சாலிகிராமத்தில் ஒரே அறையில் தங்கி இருந்தது முதல் இப்போது வரை நண்பர்கள். என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வசந்த பாலனுக்கு உண்டு. ஆகையால் இந்த விழாவை இந்த மேடையை எனது விழாவாகவும் எனது மேடையாகவும் தான் நான் பார்க்கிறேன். ‘அநீதி’ திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. இப்படம் மாபெரும் வெற்றியடைய வசந்த பாலனையும், இதை தயாரித்துள்ள அவரது நண்பர்களையும் வாழ்த்துகிறேன், நன்றி.”

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்:

“‘வெயில்’ படம் முதலே வசந்தபாலன் அவர்களின் எழுத்துக்கு நான் ரசிகன். ‘அநீதி’ திரைப்படத்தை காணும் வாய்ப்பை சமீபத்தில் நான் பெற்றேன். மிக மிக விறுவிறுப்பான ஒரு திரைப்படமாக ‘அநீதி’ அமைந்துள்ளது. வசந்த பாலன் படங்களில் சமூக அக்கறையும் கோபமும் எப்போதும் வெளிப்படும். அது இந்த படத்திலும் உள்ளது. அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரின் முழு நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டுவரும் வகையில் இப்படம் அமைந்துள்ளது. காளி வெங்கட்டின் மிகச் சிறப்பான பங்களிப்பு ‘அநீதி’ படத்தில் பேசப்படும். இப்படம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா:

“இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் இரண்டு படங்களில் தற்போது பிஸியாக இருக்கும் வேளையிலும் ‘அநீதி’ படத்தை பார்த்து, ரசித்து, பாராட்டி அதை வெளியிட முன் வந்திருக்கும் இயக்குனர் ஷங்கர் சாருக்கு மனமார்ந்த நன்றி. வசந்த பாலன் சினிமாவை நேசிப்பவர், காதலிப்பவர். அவரது ஒவ்வொரு படத்திலும் இதை நாம் உணர முடியும். ‘அநீதி’ திரைப்படத்தையும் அவ்வாறே அவர் உருவாக்கியுள்ளார். இப்படத்தை தயாரித்துள்ள அவரது நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள். நடிப்பிலும், குரலிலும் உடல்மொழியிலும் நாம் இழந்துவிட்ட ரகுவரன் மீண்டும் வந்தது போல் அர்ஜுன் தாஸ் உள்ளார். அவர் மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துகிறேன். இப்படம் வெற்றியடைய உங்களது மேலான ஆதரவை தாருங்கள், நன்றி.”

இயக்குநர் அறிவழகன்:

“இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. நாங்கள் இரண்டு பேருமே ஷங்கர் சாரிடம் பணிபுரிந்த பின்னர் எங்களது முதல் படத்தை அவரது தயாரிப்பிலேயே இயக்கியவர்கள். ‘அநீதி’ திரைப்படத்தை தயாரித்துள்ள வசந்த பாலனுக்கும் அவரது நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள். மக்களின் வாழ்வியலை திரையில் பிரதிபலிப்பதில் வசந்த பாலன் வல்லவர். இப்படத்திலும் அதை அவர் சிறப்பாக செய்துள்ளார்.”

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்:

“என் மீது நம்பிக்கை வைத்து மிகவும் இள வயதிலேயே இசையமைப்பாளராக என்னை அறிமுகப்படுத்திய வசந்த பாலன் அவர்களுக்கும் ஷங்கர் சாருக்கும் எனது மனமார்ந்த நன்றி. விரைவில் இசையமைப்பாளராக நூறாவது படத்தை தொட உள்ளேன். வசந்த பாலன் ஒரு மிகச் சிறந்த இயக்குநர், நான்கு படங்களில் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. ‘அநீதி’ திரைப்படம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு அனைவரும் உங்களது ஆதரவை தாருங்கள், நன்றி.”

‘அநீதி’ திரைப்படத்தை தனது எஸ் பிக்சர்ஸ் பேனரில் வெளியிடும் இயக்குநர் ஷங்கர்:

“இப்படத்தை நான் பார்த்தேன், ரசித்தேன். எதார்த்தமாகவும் அதே சமயம் விறுவிறுப்பாகவும் இப்படத்தை வசந்த பாலன் எடுத்துச் சென்றிருக்கிறார். உழைக்கும் வர்க்கத்தின் குரலாக ‘அநீதி’ திரைப்படம் ஓங்கி ஒலிக்கிறது. தொழிலாளிகள் எப்படி நடத்தப்பட வேண்டுமென்பதை ஆணித்தரமாக இப்படத்தில் வசந்த பாலன் சொல்லியுள்ளார். தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் முதலாளிகளும் இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், காளி வெங்கட் உள்ளிட்ட அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை இப்படத்திற்கு அளித்துள்ளார்கள். ‘அநீதி’ திரைப்படத்தை தயாரித்துள்ள அர்பன் பாய்ஸ் நிறுவனத்திற்கு எனது வாழ்த்துகள். ஒரு தரமான திரைப்படத்தை வணிகரீதியாகவும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்போடு அவர்கள் பணியாற்றி உள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசை படத்திற்கு மிகவும் பக்கபலமாக உள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி.”

இயக்குநர் வசந்த பாலன்:

“வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி என்ற இந்த காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல இந்த ‘அநீதி’ திரைப்படம் வருகிறது. நீதி கிடைக்காதவர்கள் குரலாக இப்படம் ஒலிக்கும். எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை இது பிரதிபலிக்கும். நண்பர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இப்படத்தை தயாரித்துள்ளோம். நான் தயாரிப்பாளராக மாறி உள்ள ‘அநீதி’ படம் குறித்து இயக்குநர் ஷங்கர் சாருக்கு தெரிவித்த போது, தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் அதை வழங்குவதற்கு வழி முன் வந்தார். அவருக்கு மிக்க நன்றி. இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கி உள்ளார்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.”

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, வசந்த பாலனின் படைப்பான ‘அநீதி’, இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பாக தமிழ் மற்றும் தெலுங்கு (‘பிளட் அண்டு சாக்லேட்’) மொழிகளில் ஜூலை 21 அன்று வெளியாகவுள்ளது.

அநீதி – குழுவினர்

நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா, இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன், தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா

பட நிறுவனம்: அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்

எழுத்து & இயக்கம்: வசந்த பாலன்

தயாரிப்பு: எம். கிருஷ்ணகுமார் முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், G. வசந்த பாலன்

ஒளிப்பதிவு: எட்வின் சகாய்

கலை இயக்கம்: சுரேஷ் கல்லேரி

படத்தொகுப்பு: M.ரவிக்குமார்

வசனம்: ’இயக்குநர்’ எஸ்.கே.ஜீவா

நிர்வாகத் தயாரிப்பு: J.பிரபாகர்

சண்டை வடிவம்: ‘டான்’ அசோக்-’பீனிக்ஸ்’ பிரபு

ஒலிக்கலவை: M.R.ராஜாகிருஷ்ணன்

ஸ்டில்ஸ்: R.S.ராஜா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

The post ’’அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடிப்பில் ’அநீதி’ திரைப்படத்தின் இசை வெளியீடு..!’’ ஜுலை 21-ல் ரிலீஸ் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9c%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf/feed/ 0