acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’மத்திய – மாநில உறவுகளை ஆய்வுசெய்ய ஆணையம் அமைக்க வேண்டும்..!’’ தொல். திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர்- தலைவர், தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:
மாநில உரிமைகள் பெருமளவில் பறிக்கப்படும் இன்றைய சூழலில் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவை ஆராய்ந்து பரிந்துரைகள் செய்வதற்கு ஆணையம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் தராததோடு மாநில நிர்வாகத்தையே முடக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருவதால் இப்போது தமிழ்நாடு அரசு அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளை அதிகாரமற்றவையாக ஆக்குவதன்மூலம் ‘ஒரே நாடு ஒரே ஆட்சி’ என ஆக்குவதற்கு ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது.
இந்திய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம்-11இல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டதற்கு மாறாக அப்போதிருந்த இந்திய ஒன்றிய அரசு மாநில உரிமைகளைப் பறிக்கத் தொடங்கியது. அதற்கு எதிரான குரல்கள் 1960-களிலேயே ஒலிக்கத் தொடங்கின. அதனால் மத்திய- மாநில உறவுகளை ஆய்வுசெய்வதற்காக நிர்வாக சீர்திருத்த ஆணையத்தை (1966) ஒன்றிய அரசு அமைத்தது. அந்த ஆணையமும் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் செயல்பாட்டில் மன நிறைவுகொள்ளாத அன்றைய தமிழ்நாடு அரசு 1969 ஆம் ஆண்டு நீதிபதி பி.வி. இராஜமன்னார் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநில சுயாட்சிக்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசு இயற்றிய மாநில சுயாட்சி தீர்மானம் இந்தியா முழுவதும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது.
பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சி அனந்தபூர் சாகிப் தீர்மானத்தை (1973) இயற்றவும்; மேற்குவங்கத்தை ஆட்சி செய்துவந்த இடதுசாரி அரசாங்கம் மத்திய மாநில உறவு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிடவும் (1977) அதுவே தூண்டுகோலாக அமைந்தது. அவற்றின் காரணமாக மத்திய – மாநில உறவுகளை ஆராய 1983 ஆம் ஆம் ஆண்டில் சர்க்காரியா ஆணையமும் 2007 ஆம் ஆண்டு நீதிபதி பூஞ்ச்சி ஆணையமும் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டன. அவற்றின் பரிந்துரைகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே கிடப்பில் உள்ளன.
தற்போதைய ஒன்றிய பாஜக அரசின் அதிகாரக் குவிப்பு நடவடிக்கை இதுவரை அமைதி காத்து வந்த மாநிலங்களிலும்கூட உரிமைக்கான வேட்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு மாநில உரிமைகள் குறித்த புரிதலை இந்திய அளவில் எடுத்துச்செல்ல வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது.
மத்திய – மாநில உறவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களின் புதிய பரிமாணங்களை அடையாளம் காணவும், மாநிலங்களின் அதிகாரங்களை மீட்டெடுக்கவுமான பரிந்துரைகளைச் செய்வதற்கு 1969 இல் இராஜமன்னார் குழு அமைக்கப்பட்டதுபோல் தற்போதும் குழு ஒன்றை அமைத்திட தமிழக அரசு முன்வரவேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
The post ’’மத்திய – மாநில உறவுகளை ஆய்வுசெய்ய ஆணையம் அமைக்க வேண்டும்..!’’ தொல். திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>The post ’’மாஸ் காட்டும் விடுதலை சிறுத்தைகள்..!’’ நாடாளுமன்ற தேர்தல் வேலையை தொடங்கி விட்டது first appeared on Madras Murasu.
]]>
நவீன யுக்தி… இளம்தலைமுறைக்கும் வாய்ப்பை உருவாக்குதல் போன்ற திட்டங்களை கையில் எடுத்து ,அடுத்த பாய்ச்சலுக்கு அணியமாவோம் என்ற முனைப்போடு 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது விசிக. அதன்படி தமிழ்நாட்டை நான்கு மண்டலமாக பிரித்து அதில் ஒரு பகுதியாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி,பெரம்பலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர் உள்ளிட்ட 13 நாடாளுமன்ற தொகுதிகளை இணைத்து வடக்கு மண்டலமாக அறிவித்து, 13 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் முகவர்களை நியமனம் செய்து அவர்களுக்கான பயிற்சி முகாமை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைத்தியது.

இதுவரை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகள் மட்டுமே தேர்தலுக்காக வாக்குச்சாவடி முகவர்களை நியமித்து அவர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்தியது. இப்பொழுது திமுக,அதிமுகவிற்கு இணையாக அல்ல அதைவிட ஒரு படி கூடவே மாஸ் காட்டி சென்னையில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பட்டறையை சக்சஸ்ஃபுல்லாக நடத்தியுள்ளது விசிக. சுமார் 10 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களை அடையாள அட்டையுடன் சரிபாரத்து அவர்களை பிரமாண்ட அரங்கில் கூட்டி திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் வியக்கும் அளவிற்கு பயிற்சி முகாம் நடத்தியுள்ளது.
விசிக என்றாலே மேடை ஒழுங்கு இருக்காது என்கிற கருத்தை முழுமையாக ஒழித்துள்ளது விசிக. திட்டமிட்ட நிகழ்வு, தலைவரின் ராம்ப் வாக், முறையான இருக்கை அமைப்பு என அசத்தியிருக்கிறார்கள். இது மற்ற அரசியல் கட்சிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமில்லையாம் வரும் டிசம்பர் மாதம் 23 தேதி திருச்சியில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்கிற தலைப்பில் பிரமாண்ட மாநாட்டை தடத்த உள்ளார்கள். நூறு ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் பேரை இந்த மாநாட்டில் ஒன்று கூட்டி இனி விசிக-வை தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக காட்ட முணைந்துள்ளார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் ஜுரம் ஆரம்பித்துவிட்டது..!
The post ’’மாஸ் காட்டும் விடுதலை சிறுத்தைகள்..!’’ நாடாளுமன்ற தேர்தல் வேலையை தொடங்கி விட்டது first appeared on Madras Murasu.
]]>The post ’’ஒற்றை அங்குசம்..!’’ வீரசோழன் க.சோ. திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>வனமேறிய உடலை
மதிய சூட்டை கால்களில் தந்தோம்
வறண்ட நாவில்
சொம்பு நீரை தீர்த்தமாக்கினோம்
பத்து ரூபாய் ஆசிகளில்
நம்பிக்கை பெற்றோம்
ஊருக்குள் நடக்கையில்
ஓடு வீடுகளும் நிலை தடுமாறும்
ஓய்யார வீதியில்
காதுகளையளந்து கதை சொல்லும்
கோயில் வாயிலில்
மதங்களிட்டோம் “மதம்” பிடித்து
மண்டியிட்டும் கூக்குரலிடும்
அங்குசம் பேசும் சத்தியங்களில்
வனத்தை அடகு வைத்தோம்
மானுட கூட்டிற்கு வந்ததும்
வனக்கூடு இதயமிழந்த கதை
காது வளர்த்த பாட்டி கதைகள்
வெற்றிலையில் புதைத்து வைக்கும்
மழை வெயில் பட்டுத்தெறிக்க
கலையாத உடலை கட்டழகாய்
நீண்ட கையால் நீடு துயிலை
சரிசெய்யும் காற்றுக்குழல்..
பிளிறும் குரலில்
வனங்கள் தலையசைக்கும்
ஆண்டின் நாளெல்லாம் நகர்வலம்தான்
மீதியிருக்கும் நிமிடமெல்லாம்
கூர்க்காவப்போல காவல் செய்யும் தொழிலாளிதான்
சுதந்திரப்பிடி மறுத்து கட்டளையால்
காட்சிகளில் மடியும்
கால்களின் ஒரங்களில்
வருடங்கள் கணக்குகள் செய்திருக்கும்
கண்களினூடே சிதைவிடத்து
வெளிச்சப் பரல்களை
பட்டுப் பாடூன்றும் களிறாய்
பார்த்தவிடங்களிலாம் பரவசம் செய்யும்
மொழிக் கூட்டைக் கற்றப் பாகன்
இதயக்கூட்டைக் கற்க மறந்த கதை
கோவில்களில் வலம் வருகிறது
ஒற்றை அங்குசம்!
#யானைகள் #தினம் #இன்று !
– வீரசோழன் க.சோ. திருமாவளவன்
The post ’’ஒற்றை அங்குசம்..!’’ வீரசோழன் க.சோ. திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>The post ’’நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்..!’’ வீரசோழன் க.சோ.திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>அப்படியில்லையென்றால் எப்போதாவது தென்மலை பாலமுருகன் திரையரங்கம் ஒன்று முன்பு இருந்தது. அங்கு எங்கள் தந்தையுடன் குடுபத்தோடு சென்று பார்த்திருக்கிறேன்.
அப்படி முதன் முதலாக சைக்கிள் இருந்த காலத்தில் “நடராசா” வண்டியில் சென்று பார்க்க புறப்பட்டு போய்ப்பார்த்தோம். ஒரே மண்தரைதான் அதில் குவித்து அதன் மேல் உட்கார்ந்து கொண்டு பார்த்ததாக ஞாபகம். அந்தப்படம் முடிந்தது வீட்டிற்கும் வந்து விட்டோம். இதோ அப்படி அந்தப்படம் பார்த்து முப்பது வருடங்களை கடந்து விட்டது. ஆனால் அழியாமல் அந்தப்படம் இன்னும் ஞாபகமாய்.
காலத்தை காவியமாய் தன் முகச்சுருக்கங்கள் வழி ஒவியமாய் பல குடும்பங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் அந்தப்படம். பாகப்பிரிவினை!!!
நம் வாழ்வை நம் கிராமத்தை நம் ஒவ்வொரு நாளின் அழகியலையும் வாழ்வு தந்த பாடத்தையும் அற்புதமாக பதிவு செய்திருப்பார்கள்.
“தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா….”
என்ற பாடல் வரியும்
ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் எப்படி அமைய வேண்டும் ஒரு மண வாழ்வு என்பதை அற்புதமாக பதிவு செய்திருப்பார்கள்.
“தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்….”
என்ற பாடல் வரிகளில் விவசாயிகள் பற்றி அவ்வளவு அற்புதமாக எழுதப்பட்ட பாடல்….விவசாய பூமியை எழுத்து வரிகளால் உழவு செய்திருப்பார்கள்.
“தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ”
என்ற வரிகளில் இன்றும் நம் மனதை பறி கொடுத்து விடலாம். அப்பபடித்தான் நம் வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கிறது.
“நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை
தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே”
இந்தப்படல் மட்டும் நம்மை தட்டியெழுப்பிக்கொண்டேயிருக்கும். நாம் சோர்ந்த போகின்ற நேரமெல்லாம் சுடராய் நம்மை வெளிச்சம் பாய்ச்சுகிறது நம்மின் முகவரிகளை.
“அவன்தான் மனிதன்” எனும் திரைப்படம் ஒரு வாழ்க்கை காவியம் என்றே சொல்லலாம். படத்தின் ஒவ்வொரு பிரேமும் வாழ்வியலின் நிஜ மனிதர்களை கண்ணாடி போட்டு காண்பிக்கும். அதில் அற்புதமான வள்ளல் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இப்படத்தில் வரும் காலத்தையும் பேசும் காலத்திற்கும் பேசும். அதில் அந்த பாடல் வரியில் முகபாவனைகளில் என்ன என்னமோ செய்திருப்பார்.
//பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்..
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்?
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும், உள்ளம் கேட்பேன்..
நன்மை செய்து துன்பம் வாங்கும், உள்ளம் கேட்பேன்..!//
“பாசமலரில்” வரும் அண்ணனாகட்டும், “திருமால் பெருமை”யில் வரும் சுந்தரராகட்டும், ராஜபார்ட் ரங்கதுரையாகட்டும், என ஒவ்வொன்றிலும் வாழ்ந்திருப்பார்.
திருவியைாடல் படத்தில் கொஞ்சும் தமிழாக ஆட்சி செய்திருப்பார். நேரடியாக நடப்பது போன்றும அந்த அமைச்சரவையும் மன்னர் அவையும் தருமியும் சிவனும் பேசுகின்ற பேசுசும் எத்தனையோ காலங்களை கடந்தும் எத்தனையோ படங்களை கடந்தும் இன்றும் காலத்தில் வாழ்கிறது இப்படம்.
ரஜினியின் ‘படிக்காதவன்’ படத்தில் கோர்ட் சீனில் ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார்.
அதிலும் நீதிபதியாக வரும் இடத்தில்.
ரஜினி குற்றவாளிக் கூண்டிற்குள் இருப்பார். செந்தாமரை வழக்கை விளக்கும்போது இவர் பெயர் மற்றும் அவரின் முகவரியை சொல்ல சொல்ல நீதிபதியாக அமர்ந்திருக்கும் சிவாஜி கண்கள் கலங்கி இதயம் நொறுங்கையில் கண்ணாடியில் வைக்கப்பட்டிருக்கும் நீரோடு கை பட்டு விழ, தி கோர்ட் அட்ஜர்ன்டு என சொல்லும்போது யாருக்குத்தான் கண்ணீர் சிந்தாது.
பின்னர் சிறைக்கொட்டத்தில் வந்து சொல்லுவார் அண்ணன் நீதிபதி, தம்பி குற்றவாளி, இன்னொரு தம்பி சாட்சி, காலம் எப்படி வந்து விட்டது பார்த்தாயா? என்பார்.
கண்ணீர் துடைத்து விட்டு சொல்வார்.
உங்க அண்ணன் இனிமேல் எழுதப்போறதுதான் உண்மையான பரீட்சை என்பார்.
“ஒரு கூட்டுக்கிளியாக ஒரு தோப்புக்குயிலாக பாடு” எனும் பாடல் வரிகள் பின்புலமாய் ஒலிக்கும்.
எத்தனை அண்ணன் தம்பிகள் கண்ணீர் சிந்திப்பார்கள்…!
நம்மை உலுக்கிய படம் பாசத்தால் அன்பால் அண்ணன் ஒருவன் தன் தம்பிகளை தேடும் அற்புதமான படம்..!
அவரின் எந்தப் படங்களை விடுவது பேசுவது. எல்லாமும் எல்லாமுமாக நிற்கிறார்…!
பராசக்தியில் கலைஞர் வசனத்தை உச்சரித்து திரை உலகை மின்னச் செய்த நட்சத்திரம்.
துருவ நட்சத்திரம் சிவாஜி கணேசன்!
இப்படி நம் வாழ்வின்;
அண்ணனாக
தம்பியாக
தந்தையாக
மாமாவாக
சித்தப்பாவாக
வழக்கறிஞராக
காவல்துறை அதிகாரியாக
டாக்டராக
மருத்துவராக
ஆசிரியராக
பூசாரியாக
பாஸ்டராக
இதையெல்லாம் தாண்டி;
சுதந்திரபோராட்ட தியாகியாக தனது நடிப்பால் அவர்களை நம் கண் முன் கொண்டுவந்து வாழ்ந்த காவியத்தலைவன்.
“சிவாஜி கணேசன்” நினைவுதினம் இன்று!!
– வீரசோழன் க.சோ.திருமாவளவன் – முகநூல் பதிவு
The post ’’நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்..!’’ வீரசோழன் க.சோ.திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>The post ”அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைக் கூடுதலாகத் திறக்கவேண்டும்..!” தொல்.திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாட்டில் ஆகமக் கோயில்களில் அவற்றுக்குப் பொருத்தமான ஆகமம் மற்றும் சடங்குகள் தெரிந்த எவரையும் அர்ச்சகராக நியமிக்கலாம்; அதற்கான விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட அந்தக் கோயிலின் நிர்வாக அலுவலருக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
அத்தீர்ப்பின் அடிப்படையில், அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை அவர்களுக்குப் பொருத்தமான ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பதற்குத் தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
சேலம் சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர்களாகப் பணிபுரிய தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என 2018 ஆம் ஆண்டு அக்கோயிலின் நிர்வாக அலுவலர் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து அக்கோயிலில் அர்ச்சகராக இருந்த முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பரம்பரை பரம்பரையாகத் தமது குடும்பத்தினரே அக்கோயிலில் அர்ச்சகர்காளாக இருந்து வருவதாகவும்; எனவே, அர்ச்சகராக தானே நீடிக்கவேண்டும் எனவும் கோரினார்.
திருக்கோயில்களில் சாதி பேதங்களை அகற்றும் விதமாக அர்ச்சகர்களைத் தகுதியின் அடிப்படையில் நியமிக்கும் சட்டம் தமிழ்நாடு அரசால் 1970 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அது தொடர்பான வழக்கில் ( Seshammal & others Versus State of Tamilnadu (1972) தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ‘ அர்ச்சகர் நியமனம் என்பது சமயச் சார்பற்ற ஒரு நடவடிக்கை’ எனவே அரசு அதைச் செய்யமுடியும் எனவும்; ஆகமங்களிலும் சடங்குகளிலும் முறையாகப் பயிற்சி பெற்ற எவரும் அர்ச்சகராக நியமிக்கப்படலாம் எனவும் உறுதிசெய்தது.
“என்.ஆதித்யன் -எதிர்- திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு (2002) ” – என்ற வழக்கில் வழங்கப்பட்ட இன்னொரு தீர்ப்பில், பிராமணர்கள் மட்டும்தான் பூசை செய்யவேண்டும் என்ற வாதத்தை நிராகரித்துவிட்டதோடு பயிற்சி பெற்ற எவரும் அதைச் செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், [முத்துசுப்ரமணிய குருக்கள் -எதிர்- ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பிறர்; [ W.P No 3997 of 2018 & WMP Nos 4916 and 4948 of 2018 & 12136 of 2022; நாள்- 26.06.2023 ]- என்னும் வழக்கில், ஆகமப்படி கட்டப்பட்டது தான் என உறுதியாகத் தெரியும் கோயில்களில் ஆகமங்கள், சடங்குகள் முதலானவற்றில் பயிற்சி பெற்றவர்களை அரசாங்கம் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
ஒரு கோயில் ஆகமக் கோயிலா அல்லது ஆகமக் கோயில் இல்லையா என்பதைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ‘கமிட்டி’ தற்போது செயல்படவில்லை என்பதால், அவ்வாறு கண்டறியும் வரையில் அர்ச்சகர் இல்லாமல் கோயில் இருக்க முடியாது. எனவே ஒரு கோயில் எந்த ஆகமத்தின் கீழ் உள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தால் அந்த ஆகமத்தில் பயிற்சி பெற்ற எவரையும் அக்கோயிலில் அர்ச்சகராக நியமிக்கலாம் என உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
“எல்.இளையபெருமாள் கமிட்டி” அறிக்கையின் பரிந்துரை அடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் மேற்கொண்ட சட்ட முயற்சிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி இது. 2023 ஜூன் மாதத்தில் நூற்றாண்டு கண்டிருக்கும் அந்த இரு ஆளுமைகளுக்கும் கிடைத்த பரிசாக இதைக் கருதுவது மிகையல்ல.
இந்தத் தீர்ப்பு கலைஞர் மேற்கொண்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றி ஆகும். இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை அவர்களுக்குப் பொருத்தமான திருக்கோயில்களில் நியமிக்கத் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைக் கூடுதலாகத் திறக்கவேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
The post ”அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைக் கூடுதலாகத் திறக்கவேண்டும்..!” தொல்.திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>The post ’’குரூப் 4 காலிப்பணியிடம் அதிகரிக்க வேண்டும்..!’’ தொல். திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>The post ’’குரூப் 4 காலிப்பணியிடம் அதிகரிக்க வேண்டும்..!’’ தொல். திருமாவளவன் first appeared on Madras Murasu.
]]>