acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்.!” ’முரசொலி’ விளாசல் first appeared on Madras Murasu.
]]>திராவிட மாடலின் சமூக (அ)நீதி’ என்ற தலைப்பில் ‘ஆரிய’ விகடன் அலறி இருக்கிறது. திடீரென பட்டியலின சமூகத்தவர்மீது இவர்களுக்குப் பாசம் பொங்கி வழிகிறது. ‘என்னவாக இருக்கும்’ என்று பார்த்தால், அவர்களால் ‘கொண்டையை’ மறைக்க முடியாதது அந்தத் தலையங்கத்திலேயே இருக்கிறது.
தமிழ்நாட்டில் நடந்த மூன்று சம்பவங்களை விவரிக்கும் அந்தத் தலையங்கத்தின் உள்நோக்கம் என்ன தெரியுமா?
மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனக் கோட்பாட்டுக்கு எதிராக வலிமையான வாதங்களை எடுத்து வைக்கிறார் அல்லவா? அது விகட ஆரியக் கூட்டத்தை கோபம் கொள்ள வைக்கிறது. “மனிதத் தன்மையற்ற இந்த தாக்குதல்களையும் வன்கொடுமைகளையும் கண்டும் காணாமல் மெளனம் சாதித்து வேடிக்கை பார்க்கிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இது இப்படி இருக்க ‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசுவது வெட்டி அரசியல் பேச்சு. பெரியார், அறிஞர் அண்ணா கோரிய சமூகநீதிக்கு திமுக அரசு செய்யும் துரோகம் இது” என்று ஆரிய விகடன் அலறுகிறது.
மக்களைப் பிளவுபடுத்தும் வர்ண சனாதனக் கோட்பாடுகளுக்கு எதிராகப் பேசியது மட்டுமல்ல; அதைத் திரும்பப் பெற மாட்டேன் என்று துணிச்சலாக நிற்கிறாரே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ற வன்மத்தை ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மீது காட்டுகிறது விகடன்.
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யும் ‘திராவிட மாடல்’ ஆட்சியால் அலறிக் கொண்டிருக்கிறது ஆரியக் கும்பல். அதனுடைய அலறலைத் தான் ஆளுநர் ரவியின் குரலில் நாம் காண்கிறோம். சில நாட்களுக்கு முன்னால் ரவி என்ன சொன்னாரோ, அதையேதான் விகடனும் ‘தலையங்கம்’ என்ற பெயரால் வாந்தி எடுத்துள்ளது. இந்தக் கும்பலுக்கு ஒட்டுமொத்தமாக ‘ஒரே கண்டெண்ட் எடிட்டர்’ இருக்கிறார் என்பது நமக்குத் தெரியாதா என்ன?
பட்டியலின மக்கள் மீது நடந்த சில சம்பவங்களை எடுத்துப் போட்டு, தாங்கள் ஏதோ ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கைப் போல விகடன் காட்டிக் கொள்கிறது. இந்தச் சம்பவங்களின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை மறைத்து, இவை எதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகிறது அந்தத் தலையங்கம்.
• நெல்லை தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குள், குளித்து விட்டு வந்தவர்களிடம், பணத்தைக் கேட்டும், சாதியைக் கேட்டும் தகராறு செய்து இருவரைத் தாக்கிய சம்பவத்தில் ஆறுபேர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்கள். கொடும் காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் தாக்கிக் காயம் ஏற்படுத்துதல், வழிப்பறியில் ஈடுபடுதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வழங்கப்படும் முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.
• நாங்குநேரியில் மாணவரும், அவரது சகோதரியும் வெட்டப்பட்டார்கள். 3 சிறுவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். 11 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் உடனடியாகத் தரப்பட்டது. உடனடியாக சபாநாயகரும் அமைச்சர்களும் சென்று பார்த்தார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அந்த இருவரையும் சமீபத்தில் பார்த்து ஆறுதல் கூறினார்.
• கிருஷ்ணகிரி அருகே சோக்காடியில் நடந்த சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்துக்குக் காரணமான அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தலைமறைவாக இருக்கிறார். பிரச்சினையே இவரால் வந்தது தான். இவரது பெயரையே சொல்லாமல் தலையங்கம் தீட்டியதுதான் ‘விகடனின்’ பத்திரிக்கா தர்மம்!
• புதுக்கோட்டை கொப்பம்பட்டி மாணவர் தற்கொலையில் வன்கொடுமைச் சட்டப்படி வழக்குப் பதியப்பட்டுள்ளது.
• வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நீதிபதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதுகுறித்து இங்கு எழுதுவது சரியாக இருக்காது.
• பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் சாதிப்பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தகுந்த பரிந்துரைகளை வழங்க, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படி அனைத்துக் குற்றச் சம்பவங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யவில்லை என்றாலோ, அல்லது குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டு இருந்தாலோ அதுகுறித்து தலையங்கம் எழுதி அரசுக்கு அறிவுறுத்தலாம். செய்திகளை வரிசைப்படுத்தி, அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தந்திரமாக மறைக்கிறது ‘விகடன்’ தலையங்கம்.
உண்மையில் இவர்களுக்கு சமூகநீதியில் அக்கறை இருக்குமானால், ‘சாதியை ஆதரித்தும் மற்ற சாதிகளை இழிவுபடுத்தியும்’ பேசும் ‘திருச்சி கல்யாணராமன் போன்றவர்களை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேட்க முடியுமா? ‘சனாதனம்’ என்ற பெயரால்தான் இந்த சாதிவன்ம வார்த்தைகள் கொட்டப்படுகின்றன. இதுபோல பல நூறு வீடியோக்கள் இணையத்தளங்களில் வலம் வருகின்றன. ‘திராவிட மாடல் ஆட்சி இந்தச் சாதி வன்மப் பேர்வழிகளை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேட்கும் ‘சமூக நீதி உள்ளம்’ விகடனுக்கு உண்டா? கலைஞர் கேட்பாரே; ‘உள்ளம் இருக்கிறதா? உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருக்கிறதா?’ என்று!
‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாரும் சமூகநீதிப் பாடம் எடுக்கத் தேவையில்லை. யார் சொல்லியும் அல்ல; அவராகவே செய்யும் அக்கறையும், கொள்கைப் பற்றும் அவருக்கு உண்டு.
• ஆட்சிக்கு வந்ததும் ஆதிதிராவிடர் – பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தவர் முதலமைச்சர் அவர்கள்.
• அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டப்படாத மாநில விழிப்புணர்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து கூட்டி வருபவர் முதலமைச்சர் அவர்கள்.
• அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14 ஆம் தேதியை ‘சமத்துவ நாளாக’ அறிவித்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
• அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில், அவரின் முழு அளவு வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
• அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக அவரின் படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்க இந்த நிதியாண்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
• அண்ணல் அம்பேத்கர் விருதுத் தொகை ரூ.5 லட்சமாக ஆக்கப்பட்டுள்ளது.
• வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தீருதவித் தொகை குறைந்தபட்சம் 85,000 ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் அதிகபட்சம் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகவும் உ யர்த்தப்பட்டது.
• வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சார்ந்த 723 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம், கல்வி உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா ஆகிய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
• வன்முறையால் பாதிக்கப்பட்டோரைச் சமூகக் கண்ணோட்டத்துடன் அணுகி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகின்றன.
• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீருதவிகள் மற்றும் மறுவாழ்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க கூடுதலாக நான்கு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
• சாதி வேறுபாடுகளற்ற மயானங்களை பயன்பாட்டில் கொண்டிருக்கும் முன்மாதிரிச் சிற்றூர்களில், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஊக்கத் தொகையாக தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 70 சிற்றூர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளன.
• தீண்டாமையைக் கடைபிடிக்கப்படாமல் பொதுமக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடும் பொருட்டு ரூ.10 இலட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 37 கிராமங்கள் பயனடைந்துள்ளன.
• பொதுமக்களிடையே தீண்டாமைக்கெதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24––ஆம் தேதி முதல் 30-–ஆம் தேதி வரை “மனிதநேய வார விழா” நடத்தப்படுகிறது.
• ஆண்டுதோறும் ஜனவரி 26, ஆகஸ்டு 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களிலும், அந்தந்த மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் விடுமுறை நாட்களிலும் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.
• ஆதிதிராவிட மக்களின் கல்வியறிவு விகிதம் (73.26%) ஒப்பீட்டளவில் பொதுப் பிரிவினரின் கல்வியறிவு விகிதத்தினை ( 80.09%) விட குறைவாக உள்ளது. எனவே இத்துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.3,512.85 கோடியில்; கல்விசார்ந்த திட்டங்களுக்காக மட்டும் ரூ.2,206.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
• ஆதிதிராவிடர் நலத் துறையால் 1138 ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மேம்பாட்டுக்காக ரூ.120 கோடி சென்ற ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
• இத்துறையால் நடத்தப்படும் விடுதிகளைப் பழுது பார்க்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
• எம்.சி.இராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் 10 தளங்களுடன் நவீன வசதியில் புதிய விடுதிக் கட்டடம் கட்ட முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி இருக்கிறார்கள்.
• முனைவர் பட்டப்படிப்பிற்கான உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் இதுவரை 2,954 மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ருபாய் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
• வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ.8 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு, 18 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
• தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் பயனடைவதற்கான வருமான உச்சவரம்பு மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
• ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்னும் புதிய திட்டம் ரூ.100 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
• ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.
• புதிரை வண்ணார் நல வாரியத்திற்குப் புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நிதியாண்டில் ரூ.10.00 கோடி கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
• இந்த நிதியாண்டில் மாநில திட்ட ஒதுக்கீடான ரூ.77,930.30 கோடியில், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்காக ரூ.17,075.70 கோடி(21.91%) மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக ரூ.1595.89 கோடி (2.05%) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் (20.01%) மற்றும் பழங்குடியின மக்கள் தொகை (1.17%) விகிதாச்சாரத்தை விட அதிகமானதாகும்.
இதுதான் ‘திராவிட மாடல் ஆட்சி’யின் சமூக நீதி ஆகும்.
முதலமைச்சர் அவர்களே குறிப்பிட்டுள்ளதைப் போல, ‘சுயமரியாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்’ என்பதும் உண்மைதான். அதற்கான சட்டங்களையும் முதலமைச்சர் தீட்டி வருகிறார்கள். மனமாற்றப் பரப்புரைகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை ‘ஆரிய’ விகடக் கும்பலால்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது போன்ற சட்டங்களாலும் -– மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனத்துக்கு எதிரான யுத்தங்களாலும் -– நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் ஆரியக் கும்பல், பட்டியலின வேஷம் போடுகிறது. காலம் காலமாக போடப்பட்டு வரும் இந்தக் கபடவேடங்களை உண்மைத் தமிழ் மக்கள் உணர்வார்கள். பார்த்துப் பார்த்து பழகிய ஆரியக் கூத்துகளை நிறுத்தி திருந்தப் பார்க்கவும்.
The post ’‘ஆரிய’ விகடனின் ‘சனாதன’ அலறல்.!” ’முரசொலி’ விளாசல் first appeared on Madras Murasu.
]]>The post ”மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம்..!” மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கூடுதல் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழாவில் ஆற்றிய உரை:
கடந்த சில நாட்களாக காய்ச்சலும், தொண்டை வலியும் எனக்கு இருந்தது. இப்போது காய்ச்சல் குறைந்துவிட்டாலும், தொண்டை வலி மட்டும் இருக்கிறது. என்னுடைய குரலை கேட்கும்போதே உங்களுக்கு நன்றாக தெரியும். அதனால்தான், சில நாட்களாக வீட்டிலேயே முழு ஓய்வு எடுத்துக்கொண்டேன். இந்த வாரம் முழுக்க ஓய்வெடுக்கவேண்டும் என்று என்னுடைய மருத்துவர்கள் சொன்னாலும், என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியவில்லை! அதனால்தான், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி மூலமாக இணைந்திருக்கின்ற உங்களை எல்லாம் நான் பார்க்க வந்துவிட்டேன். தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது! அதனால்தான் வந்துவிட்டேன். உங்களை பார்க்கும்போது என்னுடைய உடல் வலி எல்லாம் குறைந்து மனது மகிழ்ச்சியில் நிறைந்துவிட்டது!
இந்த ஆயிரம் ரூபாயை வாங்கும்போது உங்களுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியைவிட, கொடுக்கும்போது, எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியைவிட சிறந்த மருந்து எதுவாக இருக்க முடியும்? அதனால்தான், மருத்துவர்கள் அறிவுரையையும் மீறி இந்த விழாவுக்கு வந்துவிட்டேன்.
குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பாகவே சொன்னோம். அப்போது சிலர் என்ன சொன்னார்கள், என்ன சொன்னார்கள் என்றால், “இதையெல்லாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி”, “இவர்கள் ஆட்சிக்கு வரவே மாட்டார்கள்” இதுமாதிரி ஒவ்வொருவரும் நிறைய சொன்னார்கள். கட்டம் எல்லாம் பார்த்தார்கள். ஆனால், நீங்கள் எல்லோரும் என்ன சொன்னீர்கள்? “தி.மு.க.தான் ஆட்சிக்கு வரவேண்டும்” “தி.மு.க. சொன்னால், சொன்னதை நிறைவேற்றும். கலைஞர் மகன் ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரவேண்டும்” என்று ஓட்டு போட்டு பதிலடி தந்தீர்கள். உங்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டவன் நான்! இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னால், சொன்னதை நிச்சயம் செய்வேன்! அதற்கு அடையாளமாகதான், மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்குகிறோம். அதனால்தான் உங்கள் முன்னால் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன்!
கடந்த செப்டம்பர் 15-ஆம் நாள் பேரறிஞர் பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சிபுரத்தில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தேன். செப்டம்பர் 15, அக்டோபர் 15 என்று இரண்டு மாதங்களுக்கான 2000 ரூபாயை, ஒரு கோடியே ஆறு இலட்சம் சகோதரிகள் வாங்கிவிட்டார்கள். இந்த முறை முன்கூட்டியே இன்றைக்கு மாலைக்குள் அடுத்த ஆயிரம் ரூபாயும் உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.
மகளிருக்கு, சொத்துரிமை, கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு கொடுத்து உங்களுடைய உரிமைகளுக்காக, பாதுகாவலராக இருந்த தமிழினத் தலைவர் கலைஞருடைய நூற்றாண்டில் தொடங்கி கொடுக்கப்படுகிற இந்த தொகை, உதவித்தொகை இல்லை; உரிமைத்தொகை! இந்த உரிமைத் தொகை உண்மையிலேயே தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதில் நம்முடைய அரசு மிகவும் கவனமாக இருந்தது.
வி.ஏ.ஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் என்று எங்கேயும் செல்லாமல் அலைச்சலில்லாமல், பொதுமக்களுக்கு எந்தச் சிரமமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று அரசே உங்களிடம் வந்து விண்ணப்பங்களை வாங்க எப்படி வாங்கினார்களோ அதேபோல, அந்த விண்ணப்பங்களை வாங்குகின்ற முகாம்களை அமைக்க சொன்னேன். கடந்த ஜூலை 24-ந் தேதி, தருமபுரி மாவட்டம் தொப்பூரில் அந்த முகாமை, நானே நேரில் சென்று தொடங்கி வைத்தேன். ஏறக்குறைய ஒரு கோடியே 63 இலட்சம் மகளிர் விண்ணப்பித்தார்கள். இதற்கும் சிலர் விமர்சனம் செய்தார்கள்!
தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சொன்னதை, தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக செய்கிறார்கள் என்று பேசினார்கள்! நாம் தொடக்கத்தில் இருந்தே தெளிவாக சொன்னோம். தகுதி உள்ளவர்கள் யார் யாரென்று நேர்மையான, பாரபட்சமற்ற விதிமுறைகளின் அடிப்படையில், அரசு சார்பில் வெளியிடப்பட்டு, தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை குடும்ப அட்டைதாரர்களையும் விண்ணப்பிக்க சொன்னோம்.
இந்தத் திட்டத்தின் நோக்கத்தையும், விதிமுறைகளின் குறிக்கோளையும் மக்கள் உள்ளார்ந்து புரிந்து கொண்ட காரணத்தால்,
2 கோடியே 24 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களில், 1 கோடியே 63 இலட்சம் மகளிர் மட்டும் விண்ணப்பித்தார்கள்!
மக்களுடைய இந்த புரிதல், இந்தத் திட்ட விதிமுறைகளுக்கான நியாயத்தை காண்பித்தது. விமர்சித்தவர்கள் அமைதி ஆகிவிட்டார்கள். இப்படி விண்ணப்பத்தவர்களிலிருந்து, 1 கோடியே 6 இலட்சத்து 58 ஆயிரத்து 375 தகுதியுள்ள மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு, எல்லோருக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்கில், இந்தத் திட்டம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாகவே, அதாவது, செப்டம்பர் 14-ந் தேதியே, அந்த மாதத்திற்கான உரிமைத்தொகையான 1000 ரூபாயை நாம் வரவு வைத்தோம். அந்த மாதம், வங்கிக் கணக்கு இல்லாத 2 இலட்சத்து 42 ஆயிரத்து 956 பயனாளிகளுக்கு, மணியார்டர் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
அடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி வங்கிக் கணக்குகளில் வரவு வைத்தோம். மணியார்டர் மூலம் உரிமைத்தொகை வழங்கப்பட்ட மகளிருக்கு, வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வளவு பெரிய திட்டம்! ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள்! அவர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய்! ஆனால், எந்தச் சிறிய புகாருக்கும் இடமில்லை! அதுதான், இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி! அந்தப் பெருமிதத்துடன் சொல்கிறேன், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்திருக்கக்கூடிய திட்டம்!
ஒரு திட்டம் பெற்ற வெற்றியை தொடர வேண்டுமென்றால், அதை தொடர்ந்து கவனிக்கவேண்டும்! அதனால், முகாம்களில் விண்ணப்பித்து, தகுதி இருந்தும் தேர்ந்தெடுக்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கும், முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், பதிவாகாமல் போன விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களும் தரவுகளை தொடர்ந்து சரிபார்க்கப்பட்டது. இதற்காக மட்டுமே அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏறக்குறைய 54,220 அலுவலர்கள் மாவட்ட அளவிலும், கிராம அளவிலும் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சரி பார்த்து ஒரு பட்டியலை எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அதில் இந்த மாதத்திலிருந்து, 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
புதிய பயனாளிகளான என் அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் முதலில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்! உங்களுக்கான 1000 ரூபாயை நேற்றே உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது! உங்களுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ‘1000 ரூபாய் இனி பெறப்போகிறார்கள். நீங்கள் மட்டுமல்ல, தகுதியுள்ள யாரும் விடுபட்டுவிட கூடாது என்று கவனமாக இருக்கிறோம். அதானல்தான், விண்ணப்பித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற காரணத்தை, குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தோம். அந்தக் காரணம் ஏற்புடையதாக இல்லையென்றால், மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு கொடுத்தோம். அதை பயன்படுத்தி, மேல்முறையீடு செய்தார்கள். அவர்களுடைய விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம்.
சரிபார்ப்பு அலுவலர்கள் களஆய்வு செய்து, தகுதிபெறும் மகளிருக்கு, வருகிற டிசம்பர் மாதத்தில் இருந்து, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ மூலமாக 1000 ரூபாய் வழங்கப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்கின்ற வரைக்கும், திராவிட மாடல் அரசின் இந்தப் பணி நிச்சயம் தொடரும்! கடந்த மார்ச் 27-ந்தேதி சட்டமன்றத்தில் இந்தத் திட்டத்தைப் பற்றி பேசும்போது, ஏறத்தாழ 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1000 ரூபாய் வழங்கிடும் வகையில் இந்தத் திட்டம் அமையும் என்று நான் சொன்னேன். ஆனால், இன்றைக்கு, 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 பயனாளிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி!
இதே மாதிரியான திட்டம், வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டபோது, பொதுமக்கள் கூட்ட நெரிசல்களில் எப்படிப்பட்ட இன்னல்களுக்கும், அலைக்கழிப்புக்கும் ஆளாகினார்கள் என்று ஊடகங்களில் வந்தது. அதுமாதிரி எந்த நிகழ்வும் இல்லாமல் அமைதியான முறையில் அனைத்து தகுதியுள்ள மகளிரையும் இந்தத் திட்டம் சென்று சேர்ந்திருக்கிறது. எந்தவிதமான சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்திக்காட்டிய பெருமை, அரசு அலுவலர்களையும், பணியாளர்களையும்தான் போய்ச் சேரும்!
இந்தத் திட்டத்திற்குப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் தம்பி உதயநிதி, அரசு அலுவலர்களுடன் இந்தத் திட்டச் செயல்பாடு குறித்து தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள நடத்திக்கொண்டே இருப்பார். அவருக்கும் என்னோட வாழ்த்துகள். தொடர்ந்து களத்திலும் ஆய்வு செய்துகொண்டு இருக்கிறார். அது இனியும் தொடரும். அதில் எந்தவித சந்தேகமும் உங்களுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர், நிதித் துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கடந்த சில மாதங்களாக, ஏறக்குறைய 50 முறைக்கும் மேலாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி இந்தத் திட்டத்தில் எந்தவித குறைபாடும் ஏற்படாமல் செயல்படுத்துவது குறித்து விவாதித்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டும் என்றால், மாண்புமிகு அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் முதல், தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் என அனைத்து நிலை பணியாளர்களும் தொடர்ந்து உழைத்ததின் விளைவுதான், இந்த மாபெரும் வெற்றி! இது, ஊர் கூடி, ‘இழுத்த தேர்!’ ஊருக்காக நம்முடைய திராவிட மாடல் அரசு, ‘உருவாக்கிய தேர்!’ ’மக்களின் தேர்’ இது! தேசிய ஊடகங்களும், பிற மாநில அரசுகளும் கூட நம்முடைய இந்த திட்டமிடல், நிர்வாக நடைமுறையை வியந்து பார்க்கிறார்கள். அந்த வகையில், இந்தத் திட்டம் இவ்வளவு பெரிய இமாலய வெற்றி பெற உழைத்திட்ட அனைவருக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகளையும், என் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான மாநிலமாக, தமிழ்நாடு தொடர்ந்து வளரும்! வளரும்!
நிறைவாக, தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலினுடைய வாழ்த்துகளை தெரிவித்து விடைபெறுகிறேன்.
The post ”மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம்..!” மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ‘’அச்சுறுத்தல்களுக்கும் – மிரட்டல்களுக்கும் பயப்படும் இயக்கமல்ல தி.மு.க.!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்று (5–-11-–2023) திருவள்ளூரில் நடைபெற்ற சென்னை மண்டல வாக்குச்சாவடி பாக முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் உடல்நிலை காரணமாகக் காணொலி மூலமாகக் கலந்துகொண்டு கீழ்க்காணுமாறு பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:–
திடீரென்று காய்ச்சலும் – தொண்டை வலியும் எனக்கு ஏற்பட்டுவிட்ட காரணத்தால் இந்த நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து உங்களை எல்லாம் சந்தித்து உரையாற்றாமல் போனதற்காக நான் முதலில் என்னுடைய வருத்தத்தை மிகுந்த பணிவோடு உங்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் – தனித்தனியாக சொல்ல வேண்டும் என்று ஆசை, ஆனால்தொண்டை சரியில்லை. ஒட்டுமொத்தஅத்தனை பேருக்கும், இதில் உண்மையாக பாடுபட்டு பணியாற்றிய நம்முடைய கட்சி உடன்பிறப்புகள், சகோதரர்கள், நண்பர்கள், நிர்வாகிகள், பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்கள், மாவட்டச் செயலாளர்கள் எல்லாவற்றிற்கும் மேல் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகள் அத்தனை பேருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தை நான் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் அங்கு வரவில்லை என்று சொன்னாலும் என்னுடைய நினைவுகள் எல்லாம் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது… எப்படி சென்று கொண்டிருக்கிறது என்றுதான் என்னுடைய சிந்தனை எல்லாம் இருந்தது. தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தேன். அதனால் நீங்கள் யாரும் என்னைத் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று கருதுகிறேன். அதிகம் பேசக்கூடாது என்று மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அதை எல்லாம் மீறி வந்து இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேன். இப்போது என்னுடைய பேச்சைச் சுருக்கமாக தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
நிகழ்வில் கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் படித்த கழகத் தலைவர் அவர்களின் உரை பின்வருமாறு:–
காத்திருக்கும் நாடாளுமன்றக் களத்தில்,கனிந்து வரும் வெற்றிக் கனியைப் பறிக்க – விளைந்து நிற்கும் வெற்றியை வீடு சேர்க்க –நாடாளுமன்றத் தேர்தல் பணிக்கான தொடக்கப்புள்ளியான இந்த வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம், திருச்சி – இராமநாதபுரம் – திருப்பூர் – – திருவண்ணா மலையைத் தொடர்ந்து, இன்று திருவள்ளூ ரில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார் ராணிப்பேட்டை காந்தி அவர்கள். ராணிப்பேட்டை காந்தி அவர்களை திருவள்ளூர் காந்தி என்றே இன்றைக்கு சொல்லலாம். அந்தளவிற்கு இங்கேயே இருந்து பணியாற்றிக் கொண்டி ருக்கிறார்.
அமைச்சர் காந்தி!
காந்தி அவர்களிடம் ஒரு பணியைக் கொடுத்தால், அதைச் சிறப்பாகத்தான் செய்வார். இதனை இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகப் பார்த்து பாராட்டிக்கொண்டு வருகிறேன். அவர் மனதில் பட்டதை பட்டென்று சொல்வார்; என் மனதில் நினைப்பதை சட்டென்று செய்வார். அதுதான் காந்தி! அவருக்கு உறுதுணையாக இருந்த திருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள்.
இன்று காலை முதல்,
* ‘வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்களின் கடமைகளும் பணிகளும்’ என்ற தலைப்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அவர்களும்,
* ‘வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் மற்றும் அதன் முக்கியத்துவம்’ குறித்து,செயல்வீரர் தா.மோ. அன்பரசன் அவர்களும்,
* ‘சமூக வலைத்தளங்களின் பயன்பாடு, செயல்படுத்த வேண்டிய முறைகள்’ குறித்து, திராவிட இயக்க எழுத்தாளர் சகோதரர் லெனின் அவர்களும்,
* கழகத்தின் வரலாறு, அடிப்படைக் கொள்கைகள், திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள், நவீன தமிழ்நாட்டை உருவாக்க நாம் எடுத்த முயற்சிகள், திராவிட மாடல் ஆட்சி ஆகியவை குறித்து,
நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களும், எதார்த்த பேச்சாளர் – திராவிடப் பற்றாளர் இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்களும் – என காலை முதல் இவர்கள் மூலமாக கொள்கை வழிகாட்டுதலும், தேர்தல் பயிற்சியும் வழங்கப்பட்டிருக்கிறது.
இவையெல்லாம் இந்தத் தேர்தலுக்கு மட்டுமல்ல, எல்லாத் தேர்தலுக்கும் பயன்படும். இது எல்லாவற்றையும் மனதில் வைத்து நீங்கள் செயல்பட வேண்டும்
செயலாளர்களுக்குப் பாராட்டு!
இன்று 11 மாவட்டக் கழகங்களில் இருந்து, 11 ஆயிரத்து 569 பேர், ஆற்றல்மிகு மாவட்டக் கழகச் செயலாளர்களால் அழைத்துவரப்பட்டுள்ளீர்கள். இதனை ஒருங்கிணைத்த,
* திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் சா.மு.நாசர்
* திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன்
* திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.சந்திரன்
* சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு
* சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
* சென்னை தென்மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் – மயிலை த.வேலு
* சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் – நே.சிற்றரசு
* சென்னை வடகிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் – மாதவரம் எஸ்.சுதர்சனம்
* சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் – தா.இளையஅருணா
* காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் – அமைச்சர் தா.மோ. அன்பரசன்
* காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் – க.சுந்தர்
– ஆகிய அனைவருக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள்!
கம்பீரத்தோடு பணியாற்றுங்கள்!
வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களான நீங்கள்தான் உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்காளர்களுக்கும், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் முழுப் பொறுப்பு!
உங்களை நம்பித்தான் ’நாற்பதும் நமதே! நாடும் நமதே!’ என்று கம்பீரமாக முழங்குகிறோம்! அதே கம்பீரத்தோடு இன்றில் இருந்தே நீங்களும் தேர்தல் பொறுப்பாளராகக் கடமையாற்ற வேண்டும்!
அதற்கு,
* வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பது,
* முறையான வாக்காளரை நம்மை நோக்கி ஈர்ப்பது,
* வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு வரவழைப்பது என உங்களுடைய கடமைகளைச் சரியாக – முறையாகச் செய்ய வேண்டும்!
உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். கழகத்துக்காக தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்க வேண்டும். அரசின் திட்டங்களையும் முழுமை யாகத் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களிடம் இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கும் புத்தகத்தைப் படித்துப் பார்த்தாலே, அரசின் திட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்துவிடும். அதை வைத்து, மக்களுக்கு உதவி செய்யுங்கள்.
வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களான நீங்கள் கொண்டு வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று அமைச்சர்களிடமும், மாவட்டக் கழகச் செயலாளர்களிடமும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் உத்தரவாகவே நான் சொல்லியிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். இதனால் மக்கள் நம் ஆட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என நமது திராவிட மாடல் அரசின் எல்லாத் திட்டங்களையும் நான் விளக்கமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவையெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும்!
இதே மாதிரியான சாதனைகள் ஒன்றிய அளவிலும் நிகழ்த்தப்பட வேண்டும் என்றுதான் இந்தியா கூட்டணியை நாம் உருவாக்கியிருக்கிறோம்.
பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது!
இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்றால், நாம் செய்த – செய்கிற சாதனைகளை மட்டும் சொல்லாமல், பா.ஜ.க.வின் உண்மை முகத்தை வெளிப்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டுக்காக எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொண்டு வராமல் தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது. பா.ஜ.க.வின் இந்தத் துரோகத்தையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
பா.ஜ.க.வின் கைப்பாவையாக அத்தனை துரோகத்துக்கும் சுயநலத்துடன் துணை நின்றது, அடிமை அ.தி.மு.க.! இன்றைக்குப் பிரிந்தது போல நாடகம் நடத்தும் இந்த கும்பலின் துரோகங்களைப் பட்டியல்போட்டு மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்!
தி.மு.க.வும் இந்தியா கூட்டணியும் பா.ஜ.க.வின் மக்கள் விரோதத் தன்மையை அம்பலப்படுத்துகிறது என்றுதான், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. அதனால்தான், வருமான வரித்துறை ரெய்டு எல்லாம் நடைபெறுகிறது.
ரெய்டுகள் மூலமாக அ.தி.மு.க.வை மிரட்டி, நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியதுபோல் நம்மையும் மிரட்டலாம் என்று பகல்கனவு காண்கிறார்கள். இந்த சலசலப்புகளுக்கும் – அச்சுறுத்தல்களுக்கும் – மிரட்டல்களுக்கும் பயப்படும் இயக்கமல்ல தி.மு.க.!
75 ஆண்டுகாலமாக இதையெல்லாம் எதிர்த்து நின்றுதான் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்; அந்த வெற்றி என்றைக்கும் தொடரும்! வருமான வரித் துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்களுக்குத் தெரிகிறது.
மாநிலங்கள் மட்டும் தெரிகிறது!
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வருமான வரித்துறை யும், அமலாக்கத்துறையும் அவரவர் அலுவலகத்தைவிட்டு வெளியேகூட வருவதில்லை.
ஆனால், இங்கு நம் தமிழ்நாட்டில், நம்முடைய இயக்கத்தினர் ஒவ்வொருவரையாகச் சோதனை செய்கிறார்கள். இப்போது அமைச்சர் சகோதரர் வேலு அவர்களைச் சோதனை செய்கிறார்கள். இப்படி, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையின் ரெய்டுகளில், வழக்குகளில் – Conviction Rate எவ்வளவு என்று பார்த்தால், அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் ஒரு விழுக்காடு கூட இல்லை.
வெறும் அரசியல் பழிவாங்கலுக்கான – பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகள்தான் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும்! அதனால்தான் வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மிக மிக முக்கியம் என்று சொல்கிறேன். இந்தத் தேர்தலில் நாம் பெறப்போகிற வெற்றி என்பது, மகத்தான வெற்றியாக இருக்க வேண்டும்.
கொள்கை என்று எதுவுமே இல்லாமல், ஊழல் மட்டுமே அச்சாணி என்று ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை நாசப்படுத்திய அடிமை அ.தி.மு.க.வும் – தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் பறித்து தமிழ்நாடு என்ற அடையாளத்தையே சிதைக்க நினைக்கும் பா.ஜ.க.வும் –சுயநலத்தின் காரணமாக இந்த இரு கட்சிகளுக்கும் துணை போகும் அதன் கூட்டணிக் கட்சிகளும் – வெளிப்படையான கூட்டணியாக வந்தாலும் சரி – மறைமுகக் கூட்டணியாக வந்தாலும் சரி, தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது!
இது, கலைஞரின் உடன்பிறப்புகளான உங்கள் கையில்தான் இருக்கிறது. நாற்பதுக்கும் நாற்பது என்கிற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும். கழக உடன்பிறப்புகளாக நம்முடைய இலக்கு இதுதான். அதற்கு இன்று முதல் உழைத்தாக வேண்டும்! இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடித்தாக வேண்டும்! வளமிகு இந்தியாவை உருவாக்க வேண்டும்! அடுத்து வெற்றி விழா கூட்டத்தில் சந்திப்போம்! வாழ்க இந்தியா! வெல்க இந்தியா கூட்டணி!
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படித்தார்.
The post ‘’அச்சுறுத்தல்களுக்கும் – மிரட்டல்களுக்கும் பயப்படும் இயக்கமல்ல தி.மு.க.!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி உங்கள் ஊருக்கு எப்போது வருகிறது தெரியுமா..? first appeared on Madras Murasu.
]]>“முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி, கன்னியாகுமரியில் இருந்து இன்று சென்னை நோக்கி புறப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறது இந்த முத்தமிழ்த்தேர். இறுதியாக சென்னை வந்தடைகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முத்தமிழ்த்தேர் எப்போது வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படவேண்டும் என்பதற்காக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்து அறிவித்தார்.

அதில், “எழுத்தாளர்-கலைஞர்” குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்திவருகிறது.
கன்னியாகுமரி முக்கோணப் பூங்கா
அந்தவகையில், முத்தமிழறிஞர் கலைஞர் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பன்முகத்தன்மையினை எடுத்து செல்லும் வகையில், எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி தயார் செய்யபட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தி 04.11.2023 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கன்னியாகுமரி, காந்தி மண்டபம் அருகில் உள்ள முக்கோணப்பூங்காவில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடக்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் “முத்தமிழ்த்தேர்” என்ற அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் 04.11.2023 அன்று முக்கோணப்பூங்கா, பழத்தோட்டம், ஜீரோ பாய்ண்ட் ஆகிய இடங்களிலிலும், 05:11.2023 அன்று முதல் 05:12.2023 வரை கீழ்கண்ட நாட்களில் அந்தந்த மாவட்டங்களிலும் காட்சிப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக முத்தமிழ்த்தேர் வருகை
04.11.2023 -கன்னியாகுமரி
05:11.2023 – திருநெல்வேலி
06.11.2023 -தூத்துக்குடி
07.112023 – விருதுநகர்
08.11.2023 – தேனி
09.11.2023 – மதுரை
10.11.2023 – மதுரை
11.11.2023 – இராமநாதபுரம்
12.11.2023 – தீபாவளி விடுமுறை
13.11.2023- புதுக்கோட்டை
14.11.2023- சிவகங்கை
15.11.2023 – நாகப்பட்டினம்
16.11.2023 – மயிலாடுதுறை
17.11.2023 – திருவாரூர்
18.11.2023 – தஞ்சாவூர்
19.11.2023 – திருச்சிராப்பள்ளி
20.11.2023 – திண்டுக்கல்
21.11.2023 – கோயம்புத்தூர்
22.11.2023 – திருப்பூர்
23.11.2023 – ஈரோடு
24.11.2023 – கரூர்
25.11.2023 – நாமக்கல்
26.11.2023 – சேலம்
27.11.2023 – தருமபுரி
28.11.2023 – கிருஷ்ணகிரி
29.11.2023 – திருப்பத்தூர்
30.11.2023 – திருவண்ணாமலை
01.12.2023 – விழுப்புரம்
02.12.2023 – செங்கல்பட்டு
03.12.2023 – காஞ்சிபுரம்
04.12.2023 – சென்னை

The post “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி உங்கள் ஊருக்கு எப்போது வருகிறது தெரியுமா..? first appeared on Madras Murasu.
]]>The post ’’மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன வானதி சீனிவாசன்..!’’ first appeared on Madras Murasu.
]]>’தென்னாட்டு ஜான்சி ராணி’ என அண்ணல் காந்தியடிகளால் வியந்து பாராட்டப்பட்ட விடுதலைப் போராட்ட வீராங்கனையும், சென்னை மாகாண சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கடலூர் அஞ்சலை அம்மாளுக்குக் கடலூரில் உள்ள காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிலையைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அக்டோபர் 2 ஆம் தேதி திறந்து வைத்தார்.
’’தமிழ்நாட்டுப் பெண்களின் வீரத்துக்கும் துணிச்சலுக்கும், இந்திய விடுதலைப் போரில் அவர்கள் ஆற்றிய பங்குக்கும் அடையாளமாக விளங்கும் அஞ்சலை அம்மாளின் தியாக வாழ்வைப் பெருமையோடு போற்றுவோம்’’என்று முதலமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில், வானதிசீனிவாசன் (கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்) அறிக்கையில், ‘’ சுதந்திர போராட்ட வீராங்கனை மு.அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு திருவுருவச் சிலையை திறந்துவைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
சட்டமன்றத்தில் இதுகுறித்து நான் வைத்த கோரிக்கையில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு கடலூரில் மணிமண்டபம் அமைப்பதுடன், அவா் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரையும் தமிழக அரசு சூட்ட வேண்டும் என குறிப்பிட்டிருந்தேன்.
மேலும் அவரது குடும்பத்தினருக்கு சுதந்திரபோராட்ட வீரர்களுக்கான உதவித்தொகை கிடைக்கவில்லை என்று கூறினார்கள். அவர்களுக்கு உதவி தொகை கிடைப்பதற்கான வழி வகை செய்யவேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

The post ’’மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன வானதி சீனிவாசன்..!’’ first appeared on Madras Murasu.
]]>The post ’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” முரசொலி first appeared on Madras Murasu.
]]>தான் பதில் சொல்ல வேண்டியவை எதற்கும் பதில் சொல்லாமல் –- ஆரிய சனாதன வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவரைச் சட்டத்தின் நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு. இனி ஆளுநர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் அவரது முகம் கிழித்தெறியப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல், தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதையே வழக்கமாக கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளுக்கு உடனுக்குடன் கையெழுத்து போடாமல், ஒவ்வொரு கோப்புக்கும் விளக்கம் கேட்பதையே வழக்கமாக வைத்துள்ளார். அரசியல் எதிரி போன்று செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்றமானது தனது கடமைகளைச் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்.
அரசியல் சாசன பிரிவுகள் 200 மற்றும் 163–-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள தமிழ்நாடு அரசு, ‘நீட்’ விலக்கு மசோதா, பல்கலைக்கழக சட்டங்களை திருத்துவதற்கான மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்கள், 4 நடவடிக்கை உத்தரவுகள், 54 கைதிகளின் முன்கூட்டி விடுதலை தொடர்பான கோப்புகள் உள்ளிட்டவை தமிழ்நாடு ஆளுநரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பதவி ஒரு சம்பிரதாய பதவி என்றும், ஆளுநர் அமைச்சரவை ஆலோசனையின்படி செயல்படக் கடமைப்பட்டவர் எனவும் முந்தைய வழக்குகளில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள தமிழ்நாடு அரசு, மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க சர்க்காரியா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதிப்பதன் மூலம் பேரவை செயல்பாடுகளையே ஆளுநர் தடுக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக அவரது செயல்பாடுகள் அனைத்தும் உள்ளது. பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்கிறார். சரியான காரணங்களை தெரிவிக்காமல், அரசு அனுப்பும் கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளை அரசு உரிய விளக்கத்துடன் மீண்டும் அனுப்பியபோதும் ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார்.
அரசால் அனுப்பப்படும் கோப்புகள், அரசாணைகள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் தாமதிக்கும், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
எந்தவொரு அவசர சட்டமும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 6 வாரங்களில் அது நிரந்தரச் சட்டமாகியிருக்க வேண்டும். தற்போது வரை 12க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளார். இதனால் பல வகையில் அரசால் துரிதமாகச் செயல்பட முடியவில்லை.
கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத்திருத்தம், மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குதல், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தை உருவாக்குவது உள்ளிட்ட மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றை முடக்கி வைத்திருக்கிறார். இதனால் பல்கலைக் கழகங்கள் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தின் நோக்கத்தையே சிதைக்கிறார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த விஜயபாஸ்கர், ரமணா, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீதான ஊழல் புகாரில் வழக்குப்பதிவு செய்ய 2022 செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இதுவரை அனுமதி தராமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார். அமைச்சராக செந்தில்பாலாஜியை நீடிக்கக் கூடாது என்று சொல்லி பெரிய பிரச்சினையைக் கிளப்பிய ஆளுநர் ரவி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் அமைச்சர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதில்தான் அவரது உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வருகிறது.
“நான் திருப்பி அனுப்பவில்லை என்றால் நிராகரித்ததாக அர்த்தம்” என்று ஆணவமாகச் சொன்னவர் இந்த ஆர்.என்.ரவி. அந்தளவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை கரைத்துக் குடித்தவர் அவர். எந்த சட்டமாக இருந்தாலும் ஒரு முறை விளக்கம் கேட்கலாம். திருப்பி அனுப்பலாம். இரண்டாவது முறை அரசு அனுப்பினால், அதனை ஆளுநர் ஏற்கத்தான் வேண்டும். அதைச் செய்வது இல்லை. அப்படியே ஊறுகாய் பானையில் ஊறப்போட்டு விடுவார். இதுதான் அவரது தந்திரம் ஆகும்.
நீட் விலக்கு மசோதாவை அரசியல் உள்நோக்கத்தோடு நிறுத்தி வைத்தார் என்றால், ஆன்லைன் ரம்மி மசோதாவையும் நிறுத்தி வைத்தார். ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து பேசினார். இதை விட வெட்கக்கேடு இருக்க முடியுமா? ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு முன்னதாக பொதுமக்கள் கருத்தை தமிழ்நாடு அரசு கேட்டது. ‘இதற்கெல்லாமா பொதுமக்கள் கருத்தை கேட்பார்கள்?’ என்று கிண்டல் செய்தது பா.ஜ.க. ஆனால், ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களையே சந்தித்து பேசினார் ரவி. அப்போது பா.ஜ.க.வால் வாயைத் திறக்க முடியவில்லை.
ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளன்று ஆளுநர் உரையாற்ற வேண்டும் என்பது ஒரு வழக்கம். அரசு தயாரித்து தரும் உரையை வாசித்து விட்டுச் செல்ல வேண்டும். அதையே மாற்றியும் திருத்தியும் நீக்கியும் சேர்த்தும் தன் இஷ்டத்துக்கு தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டவர் ஆளுநர் என்பதை அகில இந்திய ஊடகங்கள் அனைத்துமே கண்டித்தன. அதன்பிறகும் அவர் திருந்துவதாகத் தெரியவில்லை.
உச்சநீதிமன்ற வழக்குக்குப் பிறகாவது திருந்துவாரா என்பதைப் பார்ப்போம்.
The post ’’ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்” முரசொலி first appeared on Madras Murasu.
]]>The post ’’நாட்டு மக்களின் விடுதலைக்காக களம் காணட்டும் கழகப் படை..!’’ மு.க.ஸ்டாலின் சூளுரை first appeared on Madras Murasu.
]]>முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், ’’நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்’ என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கை:
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சி செய்கின்ற வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிற வகையில் நாள்தோறும் சாதனைத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் பின்பற்றக்கூடிய வகையில் நம்முடைய அரசின் திட்டங்கள் மக்களுக்குப் பயனளித்து வருகின்றன.
அதேநேரத்தில், மாநிலங்களின் வளர்ச்சியை விரும்பாத – மாநிலங்களின் உரிமைகளை மதிக்காத – மாநிலங்களுக்குப் போதிய நிதியளிக்காத – மாநிலங்கள் என்ற கட்டமைப்பே இருக்கக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டவர்களின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து Speaking for India என்ற நிகழ்வின் மூன்றாவது பகுதியில் பேசியிருக்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சிக் கொள்கையையும் அதன் இன்றைய தேவையையும் அந்த உரையில் குறிப்பிட்டிருக்கிறேன். தமிழிலும் இந்திய மொழிகள் பலவற்றிலும் வெளியாகியுள்ள அந்த உரையை உடன்பிறப்புகளாகிய நீங்கள் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அதனை எல்லாரிடமும் எடுத்துச் செல்ல வேண்டிய பணியையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இந்தியா கூட்டணி
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான மதவாதக் கொள்கை கொண்ட ஆட்சியை அகற்றிட இந்தியா கூட்டணி உருவாகி, நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. அதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு மகத்தானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றிட, தமிழ்நாடு, புதுவை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கான கட்டமைப்பை இந்தியா கூட்டணி உருவாவதற்கு முன்பே நாம் தொடங்கிவிட்டோம்.
கடந்த மார்ச் 22-ஆம் நாள் நடந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என பூத் கமிட்டி அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் மகளிர், இளைஞர், சமூக வலைத்தளச் செயல்பாட்டாளர்கள் இருக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முழுவதுமுள்ள வாக்குச்சாவடிகளுக்கு பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் பங்கேற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதும் உறுதி செய்யப்பட்டது.
புதிய உறுப்பினர் அட்டைகள்
அதே மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், தி.மு.கழகத்தில் ஏற்கனவே உள்ள ஒரு கோடி உறுப்பினர்களுடன் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, ஒரு தொகுதிக்கு எத்தனை உறுப்பினர்கள் என்ற விவரமும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு, அதன்படி புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு நிறைவடைந்துள்ளது. புதிய உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆதாரங்களும் சரிபார்க்கப்பட்டுள்ளன. நவம்பர் 7-ஆம் நாள் முதல் கழகத்தின் புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகள் வழங்கப்படவிருக்கின்றன.
அதுபோலவே, பூத் கமிட்டிக்குரிய பாக முகவர்களின் (BLA2) கூட்டம் மண்டலவாரியாக நடைபெற்று வருகிறது. 26-07-2023 அன்று திருச்சியில் டெல்டா மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும், 17-08-2023 அன்று இராமநாதபுரத்தில் தென்மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும், 24-09-2023 அன்று காங்கேயத்தில் மேற்கு மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும், 22-10-2023 அன்று திருவண்ணாமலையில் வடக்கு மண்டல பாக முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டமும் சிறப்பான முறையில் நடந்தேறிய நிலையில், நவம்பர் 5 அன்று சென்னை மண்டலத்திற்கான பாக முகவர்களுக்குரிய பயிற்சிக் கூட்டம் திருவள்ளூரில் நடைபெறவிருக்கிறது.
வெறும் கூடிக் கலையும் கூட்டமா?
மாநாடுகள் போல நடைபெற்ற ஒவ்வொரு கூட்டத்திலும், பாக முகவர்களும் பூத் கமிட்டி உறுப்பினர்களும் எத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் எப்படி செயல்படவேண்டும் என்பதையும், கழகத்தின் சார்பிலான செயலிகளைப் பயன்படுத்தும் முறையையும் தெளிவாக விளக்கி, ஒவ்வொரு வாக்கையும் சிந்தாமல் சிதறாமல் கழக அணிக்குக் கொண்டு வருவதற்குரிய வகையில் பயிற்சிகள் அமைந்தன. வெறும் கூடிக் கலையும் கூட்டமாக இல்லாமல், கொள்கைத் தெளிவுடனும் அந்தக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சியுடனும் இந்தக் கூட்டங்கள் மிகச் சிறந்த பயிலரங்குகளாக நடைபெற்றிருக்கின்றன.
100 வாக்காளர்களுக்கு ஓர் உறுப்பினர்
பூத் கமிட்டிகளை அமைப்பதற்காகவும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை மேற்கொள்வதற்காவும் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கழகத்தின் சார்பில் தொகுதிப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தங்கள் பணியை நிறைவேற்றியுள்ளனர். 100 வாக்காளர்களுக்கு ஓர் உறுப்பினர் என்ற அளவில் நியமிக்கப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களின் விவரங்களை இந்தப் பார்வையாளர்கள் சரிபார்த்ததுடன், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு நிகழ்வுகளையும் வீடு வீடாகச் சென்று மேற்கொள்வதை உறுதி செய்தனர். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகும், வாரம் ஒரு நாளேனும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிக்கு நேரில் சென்று களப்பணியாற்றி, வாக்காளர்களின் ஆதரவை உறுதி செய்யும் பணியும் தொகுதிப் பார்வையாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
உங்களில் ஒருவனான நானும்
கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் வரை களத்தில் பணியாற்றும்போது, கழகத் தலைவர் என்ற பொறுப்பை உங்களால் அடைந்த கழகத்தின் மூத்த தொண்டனான உங்களில் ஒருவனான நானும் – தமிழ்நாடு முழுவதும் பயணித்து வருகிறேன். அரசு அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு எந்தளவில் பயன்களைத் தருகின்றன, எந்தெந்த திட்டங்களில் சுணக்கம் தெரிகிறது, அவற்றை மேம்படுத்த வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை நான் மாவட்டந்தோறும் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கி, பணிகளை விரைந்து நிறைவேற்றச் செய்து வருகிறேன். கழகத்தின் மூத்த அமைச்சர்களும் இதே போல ஆய்வுப் பணியை மேற்கொண்டு, இளைய அமைச்சர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள்.
கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன்-விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சருமான தம்பி உதயநிதியும் தமிழ்நாடு முழுவதும் கழக நிகழ்வுகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்பதுடன், கழக அரசின் திட்டங்கள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் பணிகளிலும் முனைப்பாகச் செயல்பட்டு வருவதை நான் செல்லும் மாவட்டங்களில் என்னைச் சந்திக்கும் மூத்த அமைச்சர்களும் மாவட்டக் கழகச் செயலாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.
தம்பி உதயநிதி
கழகத்தில் எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞருக்காகவும், கருப்பு-சிவப்பு கொடியின் நிறமே தங்கள் குருதி நிறம் என்ற உணர்வுடனும் தங்கள் இளமை வாழ்வை இயக்கத்திற்கு அர்ப்பணித்து, இன்று மூத்த உறுப்பினர்களாகத் திகழ்பவர்களுக்கு மாவட்டந்தோறும் பொற்கிழி வழங்குகிறார் தம்பி உதயநிதி. கழகம் என்றென்றும் வலிமையுடன் திகழ்ந்து, ஆதிக்க சக்தியினரையும், அவர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் கூட்டத்தினரையும் ஒருசேர வீழ்த்த வேண்டும் என்பதற்காக அயராது பாடுபடும் மூத்த உறுப்பினர்களைத் தம்பி உதயநிதி மதித்துப் போற்றுகின்ற விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இதைத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒன்றியத்திலும், நகரத்திலும், பேரூர்களிலும் பொறுப்பில் இருக்கும் கழகத்தினர் செய்ய வேண்டும். மூத்த உடன்பிறப்புகளின் அர்ப்பணிப்பையும் நெஞ்சுறுதியையும் இளைய உடன்பிறப்புகள் பெற வேண்டும் என்பதை இளைஞரணிச் செயலாளர் பங்கேற்கும் இந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
உங்களுடைய பங்களிப்பு
அதுபோலவே, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை உருக்குலைத்து, தமிழ்நாட்டு மாணவமணிகளின் மருத்துவப் படிப்புக் கனவைச் சிதைக்கும் நீட் எனும் கோடரிக்கு எதிராகத் தம்பி உதயநிதி அவர்கள் கழக இளைஞரணி-மாணவரணி-மருத்துவ அணியை இணைத்து தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கமும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நீட்டை விரட்டும் இயக்கத்திற்கான முதல் கையெழுத்தைக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி நடத்திய நிகழ்வில் உங்களில் ஒருவனான நான் போட்டேன். இந்தக் கையெழுத்து இயக்கத்தில், கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் பங்கேற்று கையெழுத்திடுவது மட்டுமின்றி, அவரவர் பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் நீங்கள் கையெழுத்தைப் பெற வேண்டும். 50 இலட்சம் என நிர்ணயித்திருக்கின்ற இலக்கையும் தாண்டி உங்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவக் கனவு சிதைகின்ற அச்சத்தில் உள்ள மாணவர்கள், நீட் தேர்வினால் பெரும் அவதிக்கு உள்ளாகும் பெற்றோர் ஆகியோரிடம் கையெழுத்து பெற வேண்டும்.
இளைஞரணி சார்பில் வருகின்ற டிசம்பர் 17-ஆம் நாள் சேலம் மாநகரில் இளைஞரணியின் மாநில மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற இருக்கிறது. மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன், இந்தியாவின் தென் திசையிலிருந்து எத்திசைக்கும் பரவுகின்ற வகையில் நடைபெறவுள்ள எழுச்சி மாநாட்டைக் கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மேற்கொள்ள வேண்டும்
தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமையையும் திராவிட முன்னேற்றக் கழகம் தன் தோளில் சுமந்துள்ளது. அதற்குப் பாக முகவர்களும், பூத் கமிட்டியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தொகுதிப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருப்போரும் வாரம் ஒரு முறையேனும் தொகுதிக்குச் சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரின் பணிகளையும் மூத்த தொண்டன் என்ற முறையில் கழகத்தின் தலைவனான நான் கண்காணித்து, ஒவ்வொரு தொகுதியின் நிலவரத்தையும் பெற்றுக் கொண்டுதான் இருப்பேன்.
அரசின் திட்டங்களின் பயன்கள்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் புரட்சித் திட்டம், பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாத விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட மகத்தான திட்டங்களின் பயன்கள் மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவேண்டும். அது பற்றி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அரசின் திட்டங்கள் எவருக்கேனும் கிடைக்காமல் இருந்தால், அவர்கள் தகுதியான விண்ணப்பதாரர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அரசின் திட்டங்களின் பயன்கள் கிடைக்கும்படி செய்திட வேண்டியது தொகுதிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய – நகரச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.
ஏழரை லட்சம் கோடி ஊழல்
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியினைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் நாட்களில் நம்முடைய கழகத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்து, யார் யார் உண்மையான வாக்காளர்கள், யார் யார் போலியானவர்கள், இறந்துபோனவர்கள் எத்தனை பேர், இடம் மாறியவர்கள் எத்தனை பேர், இரண்டு இடங்களில் பெயர் கொடுத்திருப்போர் யார் என்பது உள்ளிட்டவற்றைக் கவனித்திட வேண்டும்.
சென்னை மண்டல பாக முகவர்கள் கூட்டம் நடைபெறும் நாளான நவம்பர் 5-ஆம் நாளன்று கூட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடைபெறவிருக்கிறது. தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் இருக்கக்கூடிய பூத் கமிட்டி உறுப்பினர்களைக் கொண்டு அந்தப் பணியைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக! ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்ததாக சி.ஏ.ஜி.யால் குற்றம்சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க.வின் கைகளிலிருந்து காப்பாற்றும் வகையிலும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் எண்ணற்ற துரோகங்கள் செய்துவிட்டு, இப்போது கூட்டணி முறிந்துவிட்டதாக வேடம் போடும் அ.தி.மு.க.வின் கள்ளக்கூட்டணியை அம்பலப்படுத்தும் வகையிலும் வீடு வீடாக உங்கள் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
மகத்தான வெற்றி
நாற்பதும் நமதே, நாடும் நமதே என்று கடந்த 2022-ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் என் முழக்கத்தை முன்வைத்தேன். அதைச் செயல்படுத்தும் வியூகங்கள் வலுப்பெற்று, இன்று இந்தியா முழுவதும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான அலை கடுமையாக வீசிக்கொண்டிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம்தான்! ஜனநாயகம் காப்பதில் உறுதியாக உள்ள தோழமை சக்திகளுடன் இணைந்து மகத்தான வெற்றியைப் பெறுவோம். அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியாகக் களம் காணட்டும் கழகப் படை. வெற்றியை உறுதி செய்யும் உழைப்பை வழங்கட்டும்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!
அன்புடன்
மு.க. ஸ்டாலின்
திருவள்ளுவர் ஆண்டு 2054
ஐப்பசி 16
02-11-2023
The post ’’நாட்டு மக்களின் விடுதலைக்காக களம் காணட்டும் கழகப் படை..!’’ மு.க.ஸ்டாலின் சூளுரை first appeared on Madras Murasu.
]]>The post ’’வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை மிரட்டும் பிஜேபி ஆட்சி..!’’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.
]]>முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.11.2023) சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி இல்ல திருமண விழாவில் பேசியதாவது:
மணமக்களே, மணமக்களுடைய பெற்றோர்களே, உற்றார் உறவினர்களே, நண்பர்களே, திரளாக திரண்டிருக்கக்கூடிய என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
நம்முடைய கிருஷ்ணசாமி அருமை மகள் தாரணி-க்கும், முருகன் – மஞ்சுளா தம்பதியின் மகன் மருத்துவர் எம். பரத் கௌசிக் -கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது. இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பை பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
சீர்திருத்த திருமணங்கள்
நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம் என்பது ஒரு சீர்திருத்த திருமணம். சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம். இதுபோன்ற திருமணங்களில் நாம் பங்கேற்கின்ற நேரத்தில் வாழ்த்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக ஒரு செய்தியை பதிவு செய்யாமல் நான் இருந்தது இல்லை. அந்த வரலாற்றுச் செய்தி என்னவென்று கேட்டால், இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த சீர்திருத்த திருமணம் 1967-க்கு முன்னால் நடைபெற்றிருக்கும் என்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெறமுடியாத நிலையில் இருந்தது. ஆனால் 1967-ல் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆட்சியின் தலைவனாக தமிழக முதல்வராக அறிஞர் அண்ணா அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முதலமைச்சராக முதன்முதலில் சட்டமன்றத்தில் நுழைந்து சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கின்ற அந்த தீர்மானத்தை கொண்டு வந்து அவர் நிறைவேற்றி தந்தார்.
ஆகவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த சீர்திருத்த திருமணம் முறைப்படி, சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது. இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம். இன்னும் பெருமையோடு சொல்லவேண்டுமென்றால், தமிழ் திருமணம், இந்த தமிழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நாடு மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட தமிழ் திருமணமாக, சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணமாக நம்முடைய அருமை சகோதரர் கிருஷ்ணசாமி தன்னுடைய அன்பு மகளுக்கு இன்றைக்கு சிறப்போடு நடத்தியிருக்கிறார்.
இது எங்கள் வீட்டு திருமணம்
‘பூந்தண்மல்லி’ என்பதுதான் அதன் உண்மை பெயராக இருந்தது. இன்றைக்கு பூந்தமல்லி, பூந்தமல்லி என்று நாம் அழைக்கிறோம். ஆனால் உண்மையில் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அது பூந்தண்மல்லி என்றுதான் அழைத்துக் கொண்டிருந்த காலம். அது நாளடைவில் மாறிப்போய் இன்றைக்கு பூந்தமல்லி என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம். பூந்தண் என்றால் அந்த ‘தண்’ என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் குளிர்ச்சி! அந்த குளிர்ச்சிமயமான மலர்களுடைய பெயர்கள் மட்டுமல்ல, கொள்கை பிடிப்புள்ள உடன்பிறப்புகளும், பிறந்திருக்கக்கூடிய பகுதியாகதான் பூந்தமல்லி இருந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கிறபோது நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். அதில் ஒருவராக இன்றைக்கு நம்முடைய கிருஷ்ணசாமி திகழ்ந்து கொண்டிருக்கிறார். கிருஷ்ணசாமி இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் பழகுவதற்கு இனிமையானவர். இனிமையானர் மட்டுமல்ல, உறுதியானவர் அதுதான் முக்கியம். தம்பி, உதயநிதி இங்கே குறிப்பிட்டுச் சொன்னார். இந்த திருமணத்தை அவர்கள் வீட்டு திருமணமாக நாங்கள் கருதவில்லை, இது எங்கள் வீட்டு திருமணமாக, இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இது நம்முடைய வீட்டு திருமணமாக கருதிதான் இந்த விழாவில் பங்கேற்று மணமக்களை நாமெல்லாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் எதிர்க்கக்கூடாது
கிருஷ்ணசாமி, நன்றியுரையாற்றுகின்ற போது குறிப்பிட்டுச் சொன்னார். அவருடைய தந்தையை அடையாளம் காட்டினார். தந்தைக்கு உரிய வணக்கத்தை எடுத்துச் சொன்னார். அப்படி சொல்கின்ற நேரத்தில் அவருடைய வரலாற்றையும் அவர் நினைவுபடுத்தி எடுத்துச் சொன்னார். அவருடைய தந்தை ஆதிசதாசிவம்.
1976-ஆம் ஆண்டில் நாம் ஒரு நெருக்கடி நிலையை சந்தித்தோம். நாட்டிற்கே நெருக்கடி வந்தது. அந்த நேரத்தில் எமர்ஜென்ஸியை நாம் எதிர்த்தோம். தலைவர் கலைஞர் -க்கு தூதுவர்கள் டில்லியிலிருந்து வருகிறார்கள். அம்மையார் இந்திராகாந்தி கொண்டு வந்திருக்கக்கூடிய அவசர நிலையை, எமர்ஜென்ஸியை நீங்கள் எதிர்க்கக்கூடாது. ஆதரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் எதிர்க்கக்கூடாது. அப்படி மீறி எதிர்த்தால், உங்கள் ஆட்சி உடனடியாக கவிழ்க்கப்படும். நீங்கள் எதிர்க்காமல் இருந்தால், இன்னும் உங்கள் ஆட்சி சில ஆண்டு காலம் தொடரும் என்று வந்த தூதுவர்கள், கோபாலபுரத்தில் உள்ள கலைஞரிடத்தில் சொன்னார்கள். அப்போது நான், அண்ணன் துரைமுருகன், டி.ஆர்.பாலு எல்லாம் அருகில் இருக்கிறோம். அப்போது கலைஞர் ஒரு வார்த்தையை சொன்னார். எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும், நாட்டிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடி சூழ்நிலையை நாங்கள் ஆதரிக்கமாட்டோம். நாங்கள் ஜனநாயகத்தைதான் நம்பியிருக்கிறோம். ஆட்சி அல்ல, எங்கள் உயிரே போனாலும், நாங்கள் இதற்கு சம்மதிக்கமாட்டோம் என்று தலைவர் கலைஞர், வந்த தூதுவரிடத்தில் சொல்லி அனுப்பினார்கள். இது வரலாறு.
கழக ஆட்சி கலைக்கப்படுகிறது
சொல்லி அனுப்பிவிட்டு, அடுத்த நாள் சென்னை கடற்கரையில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தை திரட்டி, திரண்டிருந்த அந்த மக்கள் கூட்டத்தில் தலைவர் கலைஞர் முன்மொழிந்தார்கள். அம்மையார் இந்திராகாந்தி அவர்களே, நீங்கள் கொண்டு வந்திருக்கக்கூடிய அவசர கால நிலையை உடனடியாக திரும்ப பெறவேண்டும். எமர்ஜென்ஸியை இரத்து செய்யவேண்டும். மிசா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் வைத்திருக்கக்கூடிய தலைவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும், பல்வேறு இந்திய நாட்டின் தலைவர்கள் எல்லாம் வாடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று சொல்லி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை தலைவர் கலைஞர் முன்மொழிய குழுமியிருந்த மக்கள் அனைவரையும் எழுந்திருக்க வைத்து வழிமொழிய வைத்தார். தீர்மானம் நிறைவேற்றிய அடுத்த வினாடி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்படுகிறது. கலைக்கப்பட்டதற்கு பிறகு பலபேர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் எல்லாம் கைது செய்யப்படுகிறார்கள். அந்த வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியும். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு அதுவும் சென்னை சிறையில் நடந்த கொடுமைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். அதைப்பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.
சிறையில் அடைத்தார்கள். இதுதான் வரலாறு..!
எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால், அந்த சூழ்நிலையில், நம்முடைய கிருஷ்ணசாமி அவர்களுடைய தந்தை ஆதிசதாசிவம் துணிச்சலானவர். பல பேர் வேட்டிக் கட்டுவதற்கே பயப்பட்டார்கள். அப்படியே வேட்டிக் கட்டினாலும், கருப்பு, சிவப்பு பார்டர் வைத்த வேட்டியை சிலபேர் கட்டமாட்டார்கள். அவ்வளவு பயம் சில பேருக்கு இருந்தது. உடனே கருப்பு, சிவப்பு உள்ள வேட்டியை பார்த்தால் கைது செய்து விடுவார்கள். அவ்வளவு கொடுமைப்படுத்தக்கூடிய நிகழ்ச்சியெல்லாம் நடந்தது. அந்த நேரத்தில் துணிச்சலோடு நம்முடைய கிருஷ்ணசாமி தந்தை ஆதிசதாசிவம் கழுத்தில் கருப்பு, சிவப்பு துண்டை அணிந்துகொண்டு காவல்நிலையத்திற்கு முன்பு நின்றுகொண்டு எமர்ஜென்ஸியை எதிர்க்கக்கூடிய அந்த வாதங்களை எல்லாம் எடுத்துச் சொல்லக்கூடிய அந்த நிலையை பார்த்து அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இதுதான் வரலாறு.
அப்போது சிறையில் இருந்த நேரத்தில் நம்முடைய கிருஷ்ணசாமி அவர்களே சொன்னார், அப்போது அவருக்கு வயது 10. அந்த 10 வயது சிறுவனாக இருந்து கிருஷ்ணசாமி தன்னுடைய தந்தையை பார்க்க சிறைக்கு சென்றபோது அவருக்கு ஏற்பட்ட கொடுமைகள் எல்லாம் தன்னுடைய தந்தை சொல்கின்றபோது, அவருக்கு கோபம் வரவில்லை, அதற்கு நேர்மாறாக என்ன வந்தது என்றால், உணர்ச்சி வந்தது. அந்த உணர்ச்சி எல்லாம் கடந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பற்று வந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவருக்கு ஈடுபாடு வந்ததற்கு காரணம் என்ன என்று கேட்டால், அவர் தந்தை கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த காட்சிதான் அவர் திமுக மீது இன்றைக்கு ஈடுபாடு கொண்டு, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சியில் பல பொறுப்புகளை ஏற்று, செயல்படுத்தக்கூடிய நிலையில் இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறார்.
அந்த 10 வயதில், நம்முடைய கிருஷ்ணசாமி
இளைஞர் அணி தொடங்கப்பட்டபோது நான்தான் அந்த பொறுப்பில் இருந்தேன் உங்கள் எல்லாருக்கும் தெரியும். அப்போது இளைஞர் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு நம்முடைய கிருஷ்ணசாமி அந்த பகுதியில் கிளைக் கழகத்தின் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றிய அந்த நிகழ்ச்சி. அவரே பேசுகின்றபோது சொன்னார், என்னை அழைத்துக்கொண்டு கொடியேற்று விழா நடத்திய நேரத்தில், கொடியை ஏற்றிவிட்டு, ஏன் கல்வெட்டு இல்லை என்று கேட்டேன். கல்வெட்டு மட்டும் கேட்கவில்லை, நிதியும் கேட்டேன். அப்போது நிதியும் கொடுக்கவில்லை. இன்றைக்கும் அவர் கடனாளியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால், எப்படி வசூலிப்பது என்று எனக்கு தெரியும். அது அல்ல முக்கியம். எதற்காக இதை சொல்கிறேன் என்று சொன்னால், அந்த 10 வயதில், நம்முடைய கிருஷ்ணசாமி இயக்கத்தில் பற்று கொண்டு அந்த வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றி, படிப்படியாக வளர்ந்து, அவர் சட்டக் கல்லூரியில் மாணவரணி பொறுப்பேற்று பணியாற்றி, அதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர் அணியில் தன்னை இணைத்துக்கொண்டு. ஆதிதிராவிடர் நலக்குழுவில் அவர் பொறுப்பேற்று பணியாற்றி, அதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு முறை, அதாவது நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றக்கூடியவர்கள் என்று சிலரை குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. அந்த குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருவராக இருந்தவர்தான் நம்முடைய கிருஷ்ணசாமி.
உங்களுக்கு நன்றாக தெரியும்
இதை தலைவர் கலைஞர் சொன்னால் கூட நான் பெரிதுபடுத்தியிருக்க மாட்டேன். ஆனால், நம்முடைய மறைந்த ஒன்றிய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் பலமுறை சொல்லியிருக்கிறார். அவர் வாயில் இருந்து வருவது என்பது சாதாரண விஷயமல்ல. அவரே சொல்லியிருக்கிறார். பலமுறை என்னிடத்தில் சொல்லியிருக்கிறார். தலைவரிடத்திலும் சொல்வார், மாமா, கிருஷ்ணசாமி, நாடாளுமன்றத்தில் உட்கார்ந்தால், உட்கார்ந்ததுதான், எழுந்து போகமாட்டார். அவ்வளவு உன்னிப்பாக கவனித்து அனைத்து பிரச்சனைகளையும் கூர்ந்து கவனிக்கக்கூடிய ஆற்றலை பெற்றிருக்கக்கூடியவராக இருக்கிறார் என்று பலமுறை சொல்லியிருக்கிறார். நானும் அதை கேட்டிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் நூல் நிலையம் இருக்கிறது. அந்த நூல்நிலையத்தை பலபேர் பயன்படுத்த மாட்டார்கள். சிலபேர் தான் பயன்படுத்துவார்கள். அதையும் முறையாக பயன்படுத்தியவர்தான் நம்முடைய கிருஷ்ணசாமி. அவர்தான் இன்றைக்கு பூவிருந்தவல்லி தொகுதியில் இடைத்தேர்தல் வந்தபோது அவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தோம். தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். அதற்குப் பின்னால் இப்போதும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆகவே, இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் பணியாற்றக்கூடிய வாய்ப்பை பெற்றிக்கின்றபோது நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது இன்றைக்கு நாட்டில் உள்ள நிலைமை எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.
இது என்ன கேலிகூத்து!
ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா? என்ற நிலையில்தான் இன்றைய சூழ்நிலை அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பிஜேபி ஆட்சி, தனக்கெதிராக யார் எந்த கருத்தைச் சொன்னாலும், அவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது, அதற்காக IT-ஐ, EDஐ அதாவது அமலாக்கத்துறையை, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தொலைபேசியை டேப் செய்கின்ற முயற்சியை கையாண்டிருக்கிறார்கள். ஆப்பிள் என்ற ஒரு பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களே எச்சரித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கெல்லாம் இதுபோல ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று அவர்களே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். கடிதம் எழுதியிருக்கிறார்கள். இப்படி செய்தி வந்தவுடனே, ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் என்ன பதில் சொல்லியிருக்கிறார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார். இது என்ன கேலிகூத்து! செய்வது எல்லாம் செய்துவிட்டு இன்றைக்கு விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று செய்தியை வெளியிடுகிறார் என்று சொன்னால், அந்த அளவுக்கு நாட்டில் இன்றைக்கு ஒரு கொடுமையை சந்திக்கக்கூடிய நிலையில் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு அவர்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணியைப் பார்த்து தோல்வி பயம் வந்துவிட்டது.
பயம் வந்துவிட்டது.
இங்கே இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் உட்கார்ந்திருக்கிறோம். இந்தியா கூட்டணி இன்றைக்கு எதிர்பாராத வகையில் அவர்கள் எதிர்பாராத வகையில் அமைந்திருக்கிறது. இன்றைக்கு மக்களிடம் சென்று, மோடி ஆட்சியின் கொடுமைகளை, அக்கிரமங்களை, அநியாயங்களை, அவலநிலைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஐந்து மாநில தேர்தல்கள் வர இருக்கிறது. நமக்கு கிடைக்கக்கூடிய செய்திகள் எல்லாம் ஐந்து மாநிலத்திலும் பிஜேபி தோல்வியை தழுவப் போகிறது என்ற செய்திதான் வந்து கொண்டிருக்கிறது. அதனால் அவர்களுக்கு அச்சம் வந்துவிட்டது. பயம் வந்துவிட்டது. அந்த பயத்தின் காரணமாகத்தான், இன்றைக்கு இதுபோன்ற செயல்களில் எல்லாம் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் முறியடித்து, நாட்டிற்கு ஒரு நல்ல விமோசனத்தை உருவாக்கித் தருவதற்கு, இந்தியாவை காப்பாற்றுவதற்கு, இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அத்தனை பேரும் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியை தேடித்தர வேண்டுமென்று உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு, அந்த வெற்றியை தேடி தரக்கூடிய படைவரிசையில் கிருஷ்ணசாமி இன்றைக்கு செயலாற்றிக் கொண்டிருக்கிறார். அவருடைய செயல்பாடு வெற்றி பெறவேண்டும்.
வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்..!
அவருடைய அன்புச் செல்வங்கள் இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கிறார்கள். மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்” வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று வாழ்த்தி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.
The post ’’வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை மிரட்டும் பிஜேபி ஆட்சி..!’’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.
]]>The post ’’ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் ஆசைத்தம்பி..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>13.10.2023 அன்று சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற கழகத்தின் மூத்த முன்னோடி வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
‘வாலிபப் பெரியார்’ என்று போற்றப்படும் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவை மிகக் குறுகிய காலத்தில் எழுச்சியுடனும், ஏற்றத்துடனும் இதை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அமைச்சர் சேகர்பாபு -க்கு முதலில் தலைமைக் கழகத்தின் சார்பில் என் நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
யாரும் கணக்குப் போடாத காலத்தில்…
இந்த நூற்றாண்டு விழாவை, ஒரு நிகழ்ச்சியாக மட்டும் நடத்தாமல், புகைப்படக் கண்காட்சியையும், அடுத்து ஆசைத்தம்பி அவர்களுடைய வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு சிறு ஆவணப்படத்தையும் தயாரித்து வழங்கக்கூடிய ஒரு பன்முக விழாவாக இதை நடத்திக் கொண்டிருக்கிறார். எதற்காக கழக முன்னோடிகளைப் போற்றும் இத்தகைய விழாக்களை நடத்துகிறோம்? என்றால், அண்ணன் துரைமுருகன் அவர்கள் எடுத்துச் சொன்னது போல, அவர்களது புகழைப் பரப்புவதற்காக மட்டுமா நடத்துகிறோம்? இல்லை… வரக்கூடிய காலக்கட்டத்தில் வருங்கால சமுதாயத்திலும் ஆற்றல்மிக்க ஆசைத்தம்பிகள் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற விழாக்களை நடத்துகிறோம்!
நீதிக்கட்சியின் தலைவர்!
‘ஒருகாலம் வரும்… சட்டமன்ற உறுப்பினராக ஆவோம்; நாடாளுமன்ற உறுப்பினராக ஆவோம்…’ என்றெல்லாம் யாரும் கணக்குப் போடாத காலத்தில், திராவிட இயக்கத் தூணாக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் நம்முடைய ஆசைத்தம்பி அவர்கள்.
நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞர் அவர்களின் சம காலத்தவரான அண்ணன் ஆசைத்தம்பி அவர்கள், தலைவர் கலைஞரைவிட ஐந்து மாதம் இளையவர்.
1938-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களை, இந்தி எதிர்ப்புப் போராட்டம் திருவாரூர் வீதியில் தமிழ்க் கொடி தாங்கி போராட வைத்தது. அதே ஆண்டில் திராவிட இயக்க எண்ணத்தால் தீவிரமாக உருவானவர்தான் நம்முடைய ஆசைத்தம்பி. அவருடைய தந்தையார் பழனியப்பன், விருதுநகர் மாவட்டத்தில் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.
திராவிட நாடு – சி.பா. ஆதித்தனார்!
விருதுநகர் என்பதே நீதிக்கட்சியின் கோட்டையாக இருந்த நகரம்! அங்கிருந்து உருவானவர்தான் நம்முடைய ஆசைதம்பி அவர்கள். பள்ளிப்பருவ காலத்திலேயே திராவிட இயக்க மாணவர்களை இணைத்து சங்கம் தொடங்கி பல்வேறு அமைப்புகளைத் உருவாக்கி, மேடைகளில் சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.
பேரறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு – சி.பா. ஆதித்தனார் நடத்திய தமிழன் போன்ற இதழ்களில் இளமைக் காலத்திலேயே எழுதத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பிற்காலத்தில் ‘தனி அரசு’ என்ற இதழை அவர் நடத்தினார். முதலில் வார இதழாக வெளிவந்து கொண்டிருந்தாலும், அதற்கு பிறகு சில ஆண்டுகள் நாளிதழாகவும் வந்திருக்கிறது. ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் தினத்தந்தி’ என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது ஆசைத்தம்பியின் தனியரசு நாளிதழ்.
பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞரைப் போல ஏராளமான கதைகள் – நாவல்கள் எழுதியிருக்கிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட கதை நூல்கள் எழுதி இருக்கிறார். கதைகளில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியவர் அவர்.
தலைவர் கலைஞர் திரைக்கதை – வசனம் எழுதிய ’பராசக்தி’ திரைப்படம் எத்தகைய தாக்கத்தை நமது தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படுத்தியதோ அதை அனைவரும் தெளிவாக அறிந்திருக்கக் கூடியவர்கள். அந்த பராசக்தி கதையில் வரும் பாத்திரங்களை வைத்தே ‘கசந்த கரும்பு’ என்ற கதையை எழுதியவர் ஆசைத்தம்பி.
திராவிடர்கள்
திராவிடர் இயக்கம் ஏன்?
தனியரசு ஏன்?
காந்தியார் சாந்தியடைய… போன்ற பல்வேறு கட்டுரைகளை அவர் அந்தக் காலக்கட்டத்தில் எழுதி திராவிட இயக்கத்தவர்களுக்கு உணர்வூட்டிய படைப்புக்களை படைத்திருக்கிறார்! அதிலும் குறிப்பாக ‘காந்தியார் சாந்தியடைய’ என்ற புத்தகம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணல் காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட வேதனையில் எழுதப்பட்ட மிகச்சிறிய புத்தகம் அது. கோட்சே என்ற கொடியவனை – மனதில் இருக்கும் மதவாதத்தைக் கண்டித்து அந்த நூல் எழுதப்பட்டது. இந்த புத்தகம் வகுப்புவாதத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லி அந்த நூலை அன்றைய அரசு தடை செய்தது.
50 ரூபாய் நிதி!
ஆசைத்தம்பியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையும் – 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், அன்றைய தினம் கழகத்தின் அமைப்புக்குழுச் செயலாளராக இருந்த மதிப்பிற்குரிய என்.வி.நடராசன் அவர்களிடம் இந்த வழக்கை கண்காணிக்கும் பொறுப்பை அவரிடத்தில் ஒப்படைத்தார். வழக்கு நடத்துவதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக நிதி திரட்டும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வந்தன. அதில் முதல் ஆளாக 50 ரூபாய் நிதி வழங்கினார் பேரறிஞர் அண்ணா.
ஆசைத்தம்பிக்கு பிணை கிடைத்தது. ஜாமின் கிடைத்தது. சிறையில் இருந்து அவரை விடுவிப்பதற்கு முன்னதாக அவரை கட்டாயப்படுத்தி அவருக்கு மொட்டை அடித்து, கொடுமைப்படுத்தியது சிறைத்துறை. நிர்வாணம் ஆக்கினார்கள். பின்னர் கட்டிக் கொள்ள கோவணம் தரப்பட்டது. துறையூரைச் சேர்ந்த புத்தக வெளியீட்டாளர்களான தங்கவேல், கலியபெருமாள் ஆகியோருடன் சேர்த்து ஆசைத்தம்பிக்கும் மொட்டை அடிக்கப்பட்டது.
சிறைச்சாலை என்ன செய்யும்?
இது கழகத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் அனைவருடைய மனதில் ஒரு வேகத்தை, கோபத்தை, ஆத்திரத்தை உண்டாக்கியது. மொட்டை அடிக்கப்பட்ட இந்த மூவர் படத்தையும் பேரறிஞர் அண்ணா, தனது திராவிடநாடு இதழில் வெளியிட்டார். கண்காட்சியில் இது இடம் பெற்றிருக்கிறது. இதை பார்த்தால் தெரியும். நாடு முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அண்ணா அவர்கள் உத்தரவிட்டார். கோவில்பட்டியில் நடந்த கழக செயற்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்செங்கோட்டில் நடந்த கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசினார், ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற சுந்தராம்பாள் பாட்டை பாடிக் காட்டினார். பாடி விட்டு, சிறைச்சாலை என்ன செய்யும் தெரியுமா? மொட்டை அடிக்கும் என்று முழங்கினார்.
அந்தக் காலத்தில் திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்ட புத்தகங்கள் ஏராளமாக தடை செய்யப்பட்டன. தந்தை பெரியாரின் பொன்மொழிகள் என்ற நூல் தடை செய்யப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் ஆரியமாயை தடை செய்யப்பட்டது. புலவர் குழந்தையின் இராவண காவியம் தடை செய்யப்பட்டது. கலைஞரின் நாடகங்கள் – நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டன.
புத்தகங்களைப் படித்தார்கள்!
அந்த வரிசையில் ஆசைத்தம்பி அவர்களின் ‘காந்தியார் சாந்தியடைய’ என்ற நூலும் தடை செய்யப்பட்டது. கழகத்தைச் சேர்ந்த அனைவர்க்கும் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கட்டளையை பிறப்பித்தார். ‘எந்த புத்தகத்தை தடை செய்கிறார்களோ – அந்த புத்தகத்தை பொது இடத்தில் தெருவிளக்கு கம்பத்தின் கீழ் நின்று கொண்டு கூட்டமாக படியுங்கள்’ என்று அண்ணா கட்டளையிட்டார்.
கூட்டம் கூட்டமாக நமது தொண்டர்கள், அந்த புத்தகங்களைப் படித்தார்கள். இலங்கையில் இந்த புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டார்கள். மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். இது இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அப்போது, சென்னை வண்ணாரப்பேட்டையில் எஸ்.சி.மணி, பி.மணி, ராஜா ஆகிய மூன்று கழகத் தொண்டர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள்.
பேரறிஞர் அண்ணாவின் ஆரியமாயை நூலையும், ஆசைத்தம்பியின் ‘காந்தியார் சாந்தியடைய’ நூலையும் விற்றார்கள் என்று கைது செய்யப்பட்டார்கள். வண்ணாரப்பேட்டையில் நின்றுகொண்டு அஞ்சாமல் முழக்கம் போட்டுள்ளார்கள் இந்த மூவரும். அத்தகைய வண்ணாரப்பேட்டையை உள்ளடக்கிய வடசென்னைப் பகுதியில்தான் இன்றைய தினம் ஆசைத்தம்பிக்கு நூற்றாண்டு விழாவை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி!
அவருடைய புத்தகம் விற்றதால், 1950-ஆம் ஆண்டு கைது செய்தார்கள். ஆட்சிக்கு வந்து அதே பகுதியில் அவருக்கு நூற்றாண்டு விழாவை இன்றைக்கு நாம் கம்பீரத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி!
திராவிட இயக்கத் தோழர்களுக்குக் கிடைத்திருக்கும் பெருமை! இத்தகைய அடக்குமுறையைப் பற்றியோ, கைது செய்யப்படுவதைப் பற்றியோ, சிறைச்சாலை சித்திரவதைகள் பற்றியோ ஆசைத்தம்பி எந்தக் காலத்திலும் கவலைப்பட்டவரல்ல!
மிசாவில் எங்களோடு ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். எண்ணிப் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக, சென்னை சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தார்கள் என்று சொன்னால், அதில் எதற்கும் அஞ்சாமல் ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருந்த நம்பர்-1 கைதி யார் என்று கேட்டால் ஆசைத்தம்பி தான். நான் இப்போதும் சொல்கிறேன், தைரியமாக சொல்கிறேன். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். நாங்கள் எல்லாம் சிறைக்கு புதிது. எங்களைப் போன்றோர் சிறைக்கு புதிது. எங்களுக்கெல்லாம் தைரியம் ஊட்டியவர். சிறை என்றால் என்ன என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர். அவரிடத்தில் பல பேர் சென்று கேட்பார்கள். எப்போது விடுவிப்பார்கள்? கவலைப்படாதீர்கள், 1 year, 1 year என்று சொல்வார். அவ்வளவு கூலாக சொல்வார். அவரைப்போல ஒரு ஜென்டில்மேனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்.
‘திராவிடர் கழகம்’
கணக்குப் போட்டு பார்த்தேன், மொத்தம் 24 முறை, இனம் –மொழி –நாடு காக்கப்போராடி சிறை சென்றவர் நம்முடைய ஆசைத்தம்பி. எப்போதுமே தனது மனதில் பட்டதை அப்படியே யாருக்கும் பயப்படாமல், வெளிப்படையாக எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் பேசுபவர்தான் ஆசைத்தம்பி -க்கு உண்டு.
இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், அன்றைய நீதிக்கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்பதையும் மேடைகளில் பேசி இருக்கிறார். பேரறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் ‘ஜஸ்டிஸ் கட்சிக்கு புதிய அமைப்பு வேண்டும்’ என்று 1943-ஆம் ஆண்டு கட்டுரை தீட்டியவரும் ஆசைத்தம்பி. இதை வைத்துப் பார்த்தால் ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைத்தவரே ஆசைத்தம்பி தான் என்றுகூட சொல்லலாம். அங்கே அண்ணன் திருநாவுக்கரசு உட்கார்ந்திருக்கிறார். நம்முடைய திராவிட இயக்கத்தின் எடுத்தாளர். முரசொலியில் இரண்டு நாட்களாக ஆசைத் தம்பி-யைப் பற்றி தொடர் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் எல்லாம் இடம் பெற்றிருக்கிறது. 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியபோது, தலைவர் கலைஞர் பொறுப்பு வகித்த கழகப் பிரச்சாரக் குழுவில் உறுப்பினராக ஆசைத்தம்பி இடம் பெற்றார்.
இரண்டு அமைச்சர்களை தோற்கடித்தவர்!
விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக தனது மக்கள் பணியைத் தொடங்கினார். கழகம் முதன்முதலாகப் தேர்தல் களத்தில் நின்றபோது 1957-ஆம் ஆண்டு நின்றபோது சட்டமன்றத் தேர்தலில் நாம் 15 தொகுதிகளை வென்றோம். அந்த 15 பேரில் ஒருவர்தான் ஆசைத்தம்பி. ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆயிரம் விளக்கில் பின்னாளில் நான் சட்டமன்ற உறுப்பினராக வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன், அதுதான் எனக்கு பெருமை.
1967-ல் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இதில் என்ன சிறப்பு என்றால், இரண்டு தேர்தலிலும் அந்தக் காலத்தில் செல்வாக்காக இருந்த இரண்டு அமைச்சர்களை தோற்கடித்தவர் ஆசைத்தம்பி. ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்ற அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் வெங்கடசாமி போட்டியிட்டார். அவரை ஆசைத்தம்பி தோற்கடித்தார். அதே போல் எழும்பூர் தொகுதியில், அன்றைய அமைச்சர் ஜோதி வெங்கடாசலம் அவரை எதிர்த்து நின்று அவரையும் தோற்கடித்தார்.
பெரியார் இயக்கம்!
அதற்கு பிறகு 1977-ல் நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் ஒரே ஒருவர் தான், ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு, ஆசைத்தம்பி வடசென்னையிலிருந்து வெற்றி பெற்றார். கழகத்தில் ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் அண்ணன் ஆசைத்தம்பி. அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். நாடாளுமன்றத்தில் இறுதி உரையாற்றும்போது, கடைசியாக, நிறைவாக உரையாற்றும்போது, “இந்தியாவை ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக மாற்றிவிடாதீர்கள்” என்று முழங்கியவர் ஆசைத்தம்பி. அப்போதே முழங்கியிருக்கிறார். “ஒற்றை மொழி – ஒற்றை மத நாடாக மாற்றிவிடாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்தார். அவரது நாடாளுமன்ற உரைகளில் இன்னொன்றையும் வலியுறுத்தி இருக்கிறார். “தமிழ்நாடு இந்தளவுக்கு விழிப்புணர்வு பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம், பெரியார் இயக்கம்! எனவே, வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உங்கள் மாநிலங்களில் பெரியார் இயக்கத்தை உடனே தொடங்குங்கள்!” என்றும் ஆசைத்தம்பி அங்கே பேசி இருக்கிறார்.
தி.மு.க.வில் இருந்தாலும் தி.க-வின் மீது அதிகமான பற்றுக் கொண்டவர் ஆசைத்தம்பி அவர்கள். தி.மு.க. – தி.க. ஆகிய இரண்டு இயக்கங்களும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்தி, கைது செய்யப்பட்டு அத்தனை பேரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
‘வாலிப பெரியார்’
காலையில் அனைத்து கைதிகளையும் நிற்க வைப்பார்கள், Superintendent வந்து செக் செய்வார். தி.மு.க.வினர் தனியாகவும் – தி.க.வினர் தனியாகவும் நின்றுள்ளார்கள். அப்போது கலைஞர் அவர்கள் கேட்கிறார், ஏன் இப்படி பிரிந்து பிரிந்து நிற்கிறீர்கள் என்று ஆசிரியர் வீரமணி கேட்டுள்ளார். “ஜெயிலர்தான் நிற்கச் சொன்னார்” என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார். “ஆசைத்தம்பி எங்கே நிற்கிறார்?” என்று தலைவர் கலைஞர் கேட்டிருக்கிறார். திராவிடர் கழக வரிசையில் நின்று கையை தூக்கி இங்கே இருக்கிறேன் என்று ஆசைத்தம்பி சொல்கிறார். அந்தளவுக்கு பெரியார்வாதியாக இருந்ததால்தான், அவர் இன்றைக்கு ‘வாலிப பெரியார்’ என்று அவர் அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆசைத்தம்பி அவர்களின் திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் நடத்தி வைத்தார். அவரது மகள் காந்தி திருமணத்தையும் தந்தை பெரியார்தான் நடத்தி வைத்தார். மகன் செளந்தரபாண்டியன் திருமணத்தை தலைவர் கலைஞர் நடத்தி வைத்தார்.
கலைஞர் கதறினார்!
திராவிடக் கோட்டையின் தலைமைத் தளபதியாக இருந்தவர் அவர். அத்தகைய ஆசைத்தம்பியை நாம் அந்தமானில் இழந்தோம். அந்தமானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கழகக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது களைப்பாக இருக்கிறது – கண்ணைக் கட்டுவது போல இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். மூளையில் இரத்தக் குழாய் வெடித்து அங்கேயே இறந்தும் போனார். அவரது உடலை அங்கிருந்து எடுத்து வருவதற்கே பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அவரது உடலைப் பார்த்து தலைவர் கலைஞர் கதறினார். ஏனென்றால் தனது இறுதி உரையில் அந்தமானில் பேசுகிறபோது, கலைஞர் சார்பில் உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றுதான் பேசி இருக்கிறார் ஆசைத்தம்பி.
தனது இறுதி உரையில், ‘திராவிட இயக்கம் துவங்காமல் போயிருந்தால் கேட்பாரற்ற அனாதைகளாக ஆகியிருப்போம்’ என்று சொன்னவர் ஆசைத்தம்பி அவர்கள். இதுதான் அவரது மரண சாசனம்! அந்தக் கூட்டத்தில், அந்தமானில் இருக்கக்கூடிய கழகத் தோழர்கள் ஆசைத்தம்பியை பலரும் புகழ்ந்து பேசினார்.
நின்று காத்தவர் ஆசைத்தம்பி!
இறுதியாக அவர் சொன்னார்: “இவை எதுவும் எனக்கு கிடைத்த புகழ் அல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் இருப்பதால் கிடைத்த பெருமை!” என்று சொன்னவர் ஆசைத்தம்பி.
கழகத்தின் ஒவ்வொரு பொறுப்பாளர்களும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான சொற்கள் இவை! ஆசைத்தம்பி பற்றி நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் சொல்கின்றபோது, “கலைஞரின் நெஞ்சில் வேல்பாய்ந்தால் அந்த வேலை எடுத்து எதிரியின் நெஞ்சிலே பாய்ச்சும் வீரம் கலைஞருக்கு உண்டு. கலைஞரின் முதுகில் யாராவது வேல் பாய்ச்சிவிடக் கூடாது என்பதற்காக, நின்று காத்தவர் நம்முடைய ஆசைத்தம்பி” என்று சொன்னார்.
இதுதான் ஒவ்வொரு தொண்டருக்குமான இலக்கணம்! ஆசைத்தம்பி மறைந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் உருக்கமாக எழுதினார்கள்.
“என் அன்பே! ஆசைத்தம்பி! நீ மறையவில்லை. மறைய மாட்டாய். உன்னையும் உன் உறுதியையும் நாங்கள் மறக்க மாட்டோம்” – என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள்!
ஆசைத்தம்பியை நாம் மறக்கவில்லை; அவரது உறுதியை மறக்கவும் முடியாது என்பதன் அடையாளமாகத்தான் இந்த நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ‘வாலிபப் பெரியார்’ ஆசைத்தம்பி அவர்களின் புகழ் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! என்று கூறி விடைபெறுகிறேன்.
நன்றி! வணக்கம்.
The post ’’ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் ஆசைத்தம்பி..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ’’அதே நாளேட்டில்தான் பிரதமர் சொன்ன பொய்யை தலைப்புச் செய்தியாக போட்டிருக்கிறார்கள்..!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>“ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்” என்பதை அறநெறியாகக் கொண்டு வாழ்ந்து காட்டிய, அருட்திரு வள்ளலார் அவர்களின் 200-ஆவது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், ”தனிப்பெரும் கருணை நாளில்” இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இனிய விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
பொதுவாக நூற்றாண்டு விழா என்றாலோ, பிறந்தநாள் விழாக்கள் என்றாலோ, அந்த குறிப்பிட்ட நாளில் மட்டுமே கொண்டாடுவார்கள். ஆனால் ‘செயல்பாபு’ என்று என்னால் அன்போடு அழைக்கப்படக்கூடிய மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு அவர்களோ, மாதம் முழுவதும் – ஆண்டு முழுவதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களது நூற்றாண்டு விழாவை நாள்தோறும் நடத்திக் கொண்டு இருக்கிறார். மாதந்தோறும் விழாக்கள் நடத்தினால்தான் அவருக்கு திருப்தி!
ஏதோ கணக்குக்காக – கடமைக்காக அல்ல; எதையும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் நடத்துவார். அவரிடம் எந்தப் பணியை ஒப்படைத்தாலும், உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் – மற்றவர்களை விட வித்தியாசம் தெரிவது போல நடத்திக் காட்டுவார் அதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த விழா!
தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்த நமது திராவிட மாடல் அரசு, அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாளை தனிப்பெரும் கருணைநாளாக அறிவித்தது. வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள், அவர் தொடங்கிய தரும சாலைக்கு 156 ஆண்டுகள், அவர் ஏற்றிய தீபத்துக்கு 152 ஆண்டுகள் – ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக, கடந்த ஆண்டு அக்டோபர் 5-ஆம் நாள் கொண்டாடினோம்.
அந்த விழாவில் கலந்துகொண்டு, ‘வள்ளலார் – 200’ விழாவுக்கான இலச்சினையை வெளியிட்டோம். அஞ்சல் உறை மற்றும் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.
ஆண்டுதோறும், அன்னதானம் வழங்குவதற்கான நிகழ்ச்சியையும் நான் அன்றைக்கு தொடங்கி வைத்தேன். அதற்காக 3 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. அது ஒருநாள் விழாவாக மட்டும் நடத்தி முடித்துவிடவில்லை. ஆண்டு முழுவதும் நடைபெறும் என்று அமைச்சர் திரு.சேகர் பாபு அறிவித்தார். ஆண்டு முழுவதும் எப்படி நடத்துவார்கள் என்பதை அறிய நானும் ஆர்வமாக இருந்தேன். அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்த பிறகுதான் எனக்கே மலைப்பாக இருந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான 52 வாரங்களும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக முனைவர் பி.கே.கிருட்டிணராஜ் வானவராயர் தலைமையில் 14 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்களது ஆலோசனைப்படி 52 வாரங்களும் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்திருக்கிறது.
சென்னையில், நான் கலந்து கொண்டது முதல் நிகழ்ச்சி. இதன் தொடர்ச்சியாக 50 வாரங்களாக 50 நகரங்களில் வள்ளலார் – முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது. இப்போது இங்கு நான் கலந்து கொள்ளும் இந்த நிறைவு விழா, 52-ஆவது நிகழ்ச்சி!
என்னைப் பொறுத்தவரையில் இது நிறைவு விழா மட்டுமல்ல; நிறைவான விழா!
வள்ளல் பெருமானாருக்கு நாம் ஆற்றவேண்டிய கடமையை – மரியாதையை நிறைவாக ஆற்றி இருக்கிறோம். தொடர் அன்னதானங்கள் 21 மண்டலங்களில் நடைபெற்றுள்ளன.
பசிப்பிணி போக்க அணையா அடுப்பை உருவாக்கிய அண்ணல் பெயரால் அரசின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வள்ளலார் வாழ்க்கை தொடர்பாக கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
அறிவுப் பசியையும் – வயிற்றுப் பசியையும் போக்கும் விழாக்களாக இவை அமைந்துள்ளன. இதனை ஆர்வத்துடன் செய்து காட்டியுள்ள மாண்புமிகு அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்களையும், இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் திரு. மணிவாசன் அவர்களையும், சிறப்புப் பணி அலுவலர் திரு. குமரகுருபரன் அவர்களையும், ஆணையர் திரு. முரளீதரன் அவர்களையும், கூடுதல் ஆணையர் திரு. சங்கர் அவர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களையும் நான் பாராட்டுகிறேன். உங்கள் அனைவரின் சார்பில் அவர்களுக்கெல்லாம் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று இந்தக் காலக்கட்டத்துக்குத் தேவையான மிகமுக்கியமான வழிகாட்டிதான் அருட்திரு வள்ளலார் அவர்கள். இறையியல் என்பது அவரவர் விருப்பம்! அவரவர் தனிப்பட்ட உரிமை! ஆனால் அந்த இறையியலை – ஆன்மீக உணர்வை ஒரு கூட்டம் அரசியலுக்கு பயன்படுத்தி, அதன் மூலமாக குளிர்காயப் பார்க்கிறது.
அரசியல் வேறு – ஆன்மீகம் வேறு என்பதை பகுத்தறிந்து பார்க்கும் பகுத்தறிவாளர்கள்தான் தமிழ்நாட்டு மக்கள். அந்த மக்களைக் குழப்ப சிலர் முயற்சித்து வரும் காலத்தில், வள்ளலார் அவர்கள் நமக்கு அறிவுத் திறவுகோலாகக் காட்சி அளிக்கிறார்கள்.
சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்தியவர் அருட்பெருஞ்சோதி இராமலிங்க வள்ளலார் அவர்கள், கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக எனப் பாடியவர் அவர்.
“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே” – என்று பாடியவர் வள்ளலார் பெருமான் அவர்கள்.
அனைத்துயிரும் ஒன்று என்ற வள்ளல் பெருமானாரின் எண்ணத்தை இன்று நாம் விதைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 419-ஆவது வாக்குறுதியாக ‘வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்று சொல்லி இருந்தோம்.
”சாதி சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அருட்பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கப் போதனைகளைப் போற்றும் வகையில், இது அமையும்” என்று சொல்லப்பட்டது. அந்த மையத்தின் ஆணையினை இன்று உங்கள் முன்னால் வழங்கியிருக்கிறோம். விரைவாக அந்தப் பணிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டு மிகச் சிறப்பாக அது கட்டிமுடிக்கப்படும்.
சென்னையில் முதன்முதலாக வள்ளலார் நகரை உருவாக்கியவர் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர். நாம் ஆட்சிக்கு வந்ததும் வள்ளலார் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்துக் கொண்டாடி வருகிறோம்.
வள்ளலாரின் அறிவு ஒளியில் இதுபோன்ற பிளவுசக்திகள் மங்கிப் போவார்கள். நாம் வள்ளலாரை உயர்த்திப் பிடிப்பது, சிலருக்கு பிடிக்கவில்லை. பெரியாரையும் போற்றுகிறோம், வள்ளலாரையும் கொண்டாடுகிறார்களே! என்பதுதான் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. திராவிட மாடல் அரசு என்று சொல்லிக் கொள்கிறார்கள். கோவில்கள் அனைத்தையும் பொன்போல போற்றிப் பாதுகாக்கிறார்களே – இவர்களை என்ன சொல்லி குற்றம் சாட்டுவது என்று சிலருக்கு குழப்பமாக இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை செய்ய வருகை வந்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் – தமிழ்நாட்டுக் கோவில்களைப் பற்றிப் பேசி இருக்கிறார்கள். அவர் மத்தியப் பிரதேசத்திற்கு சென்று பேசினாலும் – அந்தமானில் பேசினாலும் – தெலங்கானாவில் பேசினாலும் – தமிழ்நாட்டைப் பற்றித் தான் பேசுகிறார். அவரால் மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
“தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில் சொத்துகள் மற்றும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது” என்று பகிரங்கமாக அவர் பேசி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.
மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நான் எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை ஒரு தமிழ் நாளிதழ் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அந்த நாளிதழின் நிர்வாகி ஒருவர், புகழ்பெற்ற திருக்கோவில் ஒன்றில் அறங்காவலர்களில் ஒருவராக இருக்கிறார். அப்படியானால் அவர், அந்த கோவிலை ஆக்கிரமித்துள்ளார் என்று அர்த்தமா? அதே நாளிதழில் கடந்த ஜுன் மாதத்தில் அறநிலையத் துறையின் சிறப்பான செயல்பாடு பற்றி ஒரு கட்டுரையும் வந்திருக்கிறது.
அந்த கட்டுரையை நான் படிக்கிறேன். அந்தக் கட்டுரைக்கு வைக்கப்பட்டிருக்கக் கூடிய தலைப்பு: “கோவில் உண்டியல் பணம் எங்கும் போகாது”! யூகப் பேச்சுக்களும், உண்மை நிலையும் அதில் அடங்கும். கோவில்களில் உண்டியல் வைக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை பக்தர்களின் காணிக்கைகள் பத்திரமாகத்தான் இருக்கின்றன. மிகுந்த முன்னெச்சரிக்கையுடனே கையாளப்படுகின்றன. காணிக்கை குறித்த பதிவேடுகள் எண்ணி முடிக்கப்பட்ட மறுநாளே அறநிலையத் துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு – அங்குள்ள பதிவேடுகளில் ஏற்றப்படுகின்றன. அதிலிருந்து ஒரு நகல் தணிக்கைப் பிரிவுக்கும் அனுப்பப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் இல்லாத அளவுக்குக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் கடைப்பிடிக்கப் படுகின்றன”- இப்படிச் சொல்வது இந்த ஸ்டாலின் அல்ல, அந்த நாளிதழின் வெளியீட்டாளரே சொல்லி இருக்கிறார்.
இன்னொன்றையும் சொல்கிறார் அவர்… எந்த நாளிதழ் என்று பெயர் சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கே புரியும். அதில் என்ன சொல்கிறார் என்றால், “ஒரு சிலர் அவரவர் கற்பனைச் சிந்தனைக்கு ஏற்றாற்போல உண்டியல் காணிக்கைகள் இந்த அமைச்சருக்கு பத்து சதவிகிதம் போகிறது – அந்த அமைச்சருக்கு 10 சதவிகிதம் போகிறது எனச் சொல்வது – அவர்களின் அறியாமையன்றி வேறில்லை” – என்று சொல்வதும் இந்த ஸ்டாலின் அல்ல, அந்த நாளிதழின் வெளியீட்டாளரே சொல்லி இருக்கிறார்.
அதே நாளேட்டில்தான் பிரதமர் சொன்ன பொய்யை தலைப்புச் செய்தியாக போட்டிருக்கிறார்கள்.
பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் அவர்கள் – தவறான அவதூறு செய்தியை சொல்வது சரியா? ஒரு மாநிலத்தின் செயல்பாடு குறித்து – இன்னொரு மாநிலத்தில் போய் – பேசுவது முறையா? தர்மமா? திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும் – வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது போலவும் பொய்யான செய்தியை இந்திய நாட்டின் பிரதமர் கட்டமைக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் யாருக்காக பேசுகிறார்? யாருடைய குரலை எதிரொலிக்கிறார்? இந்த இரண்டு ஆண்டு காலத்தில் 3,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இது தவறா? சொல்லுங்கள் இது தவறா? 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம். இது தவறா?
1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவறா?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 1250 திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தவறா?
எதைத் தவறு என்கிறார் பிரதமர்? பிரதமர் அவர்களின் பார்வையில்தான் தவறு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையும் – ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற பொதுத் தன்மையுடனான ஆட்சியை நடத்தி வருகிறோம். கருணையுள்ள ஆட்சியை நடத்தி வருகிறோம். அதனால்தான் கருணை வடிவிலான வள்ளலாரைப் போற்றுகிறோம்.
அதற்கு அடையாளமாக வள்ளலார் – 200 நிகழ்ச்சியில் ஓர் அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன்.
கடலூர் மாவட்டத் தலைநகரில் 17 ஏக்கரில் அமைக்கப்பட இருக்கின்ற புதிய பேருந்து நிலையத்திற்கு “அருள்பிரகாச வள்ளலார்” அவர்களின் பெயர் சூட்டப்படும் என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வழியில், வாடிய உயிர்கள் அனைத்தையும் வாழ வைக்கும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்றைக்கும் செயல்படும்! இது உறுதி!
நன்றி! வணக்கம்!
The post ’’அதே நாளேட்டில்தான் பிரதமர் சொன்ன பொய்யை தலைப்புச் செய்தியாக போட்டிருக்கிறார்கள்..!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>