Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#டெஸ்ட் கிரிக்கெட் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Wed, 19 Jul 2023 10:55:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ”கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்குமா இந்திய கிரிக்கெட் அணி..?” https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0/#respond Wed, 19 Jul 2023 10:55:18 +0000 https://madrasmurasu.com/?p=5390 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட இந்தக் காயம்பட்ட சிங்கம், தனது பந்துவீச்சின் மூலம் தான் யார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. குறைவேகம் கொண்ட டொமினிக்கா ஆடுகளத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டர்களுக்கு சவக்குழி வெட்டியவர்களில் முக்கியமானவர் ரவிச்சந்திரன் அஸ்வின். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் என ஒட்டுமொத்தமாக 12 விக்கெட்டுகளைக் கொத்தாகக் கைப்பற்றினார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டை மூன்று நாள்களில் வென்று உலக […]

The post ”கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்குமா இந்திய கிரிக்கெட் அணி..?” first appeared on Madras Murasu.

]]>
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட இந்தக் காயம்பட்ட சிங்கம், தனது பந்துவீச்சின் மூலம் தான் யார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. குறைவேகம் கொண்ட டொமினிக்கா ஆடுகளத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டர்களுக்கு சவக்குழி வெட்டியவர்களில் முக்கியமானவர் ரவிச்சந்திரன் அஸ்வின். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் என ஒட்டுமொத்தமாக 12 விக்கெட்டுகளைக் கொத்தாகக் கைப்பற்றினார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டை மூன்று நாள்களில் வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெற்றியுடன் இந்தியாதொடங்கியிருக்கிறது. பொதுவாக சுழலுக்குச் சாதகமான ஆடுகளங்களில் ஸ்டம்ப் டு ஸ்டம்ப் லைனில் ஃபிளாட்டாக வீசி இடவலமாகத் திருப்பவது தான் ஆஃப் ஸ்பின்னர்களின் வழக்கமான உத்தி. ஆனால் அஸ்வினோ பேட்டர்களின் பார்வைக் கோட்டிற்கு (eye line) மேல் பந்தைப் பறக்கவிட்டு சாகசம் புரிந்தார். அஸ்வின் – ஜடேஜா இணையின் பந்துவீச்சுப் பாணி 50களின் மேற்கிந்தியத் தீவுகள் சுழலர்கள் சன்னி ராமதீன் – ஆல்ஃப் வாலண்டைன் கூட்டணியை அச்சில் வார்த்தது போல இருந்தது. அஸ்வின் காற்றில் ஃபிலைட் (flight) கொடுத்து வீசி பேட்டர்களுக்கு வலை விரித்தார் என்றால் ஜடேஜா தனது அதிவேக ஃபிளாட்டர்களில் (flatter) துவம்சம் செய்தார். அஸ்வினின் மேதமைக்கு உதாரணம் தாறுமாறாகத் திரும்பிய ஆடுகளத்தை அரவுண்ட் த விக்கெட்டில் பந்துவீசித் தனது வசதிக்காக அவர் வளைத்துக் கொண்ட விதம்.

இரண்டாவது இன்னிங்ஸில் பிளாக்வுட் விக்கெட்டுக்கு அவர் பொறிவைத்த விதத்தை எடுத்துக் கொள்வோம். பந்து இடவலமாகத் தாறுமாறாகத் திரும்புகிறது. ஓவர் த விக்கெட்டில் இருந்து வீசினால் உள்ளே வரும் பந்தை பிளாக்வுட் எளிதில் தடுத்தாடி விடுவார். மேலும் பந்து லெக் ஸ்டம்ப் பக்கம் திரும்பிச் செல்லவும் அதிக வாய்ப்புள்ளது. அதுவே அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து வீசும்போது தனது கடினமான சுழலின் (hard spun) மூலம் பந்தை வெளியே டிரிஃப்ட் (drift) செய்து சுழலின் எதிர்த்திசையில் செல்வதாகப் போக்குக் காட்டி அஸ்வினால் உள்ளே கொண்டுவர முடியும். அஸ்வினின் பொறியில் சிக்கிய பிளாக்வுட் தவறான லைனில் விளையாடி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் போட்டியில் அதிக தொடர் நாயகன் விருது பெற்றவர்கள் வரிசையில் இரண்டாம் இடம், டெஸ்டுகளில் ஓர் ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் ஐந்தாவது இடம், டெஸ்டில் அதிவேகமாக 200, 300, 350 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் முதல் இடம், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் வரிசையில் இரண்டாம் இடம் (709 விக்கெட்டுகள்), ஐசிசி பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் தற்போது முதல் இடம் என அஸ்வினுக்குப் பெருமை சேர்க்கின்றன இத்தகைய சாதனைகள். ஆனால் இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வினுக்கு இன்றும் கூட நிரந்தர இடம் உறுதி செய்யபடவில்லை. குறிப்பாக சேனா (SENA) நாடுகளில் நடக்கும் ஆட்டங்களில். கேப்டன்சியில் மாற்றம் ஏற்பட்டாலும் அஸ்வின் நடத்தப்படும் விதத்தில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை.

இந்தியச் சுழற்பந்துவீச்சுப் பாரம்பரியத்தில் அஸ்வினின் இடம் என்ன? இந்தியச் சுழலர்களை ஒரு வசதிக்காக இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். இந்தியச் சுழல் ஜாம்பவான்களில் ஒரு தரப்பினர் மிகவும் டாம்பீகம் கொண்டவர்கள். தங்களுடைய திறமை மீது அவர்களுக்கு ஒரு மிதமிஞ்சிய கர்வம் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சு என்பது தீட்டுப்பட்டு விடக்கூடாத ஒரு சமாச்சாரம்.

”பந்தை ஃபிளாட்டாக வீசி விக்கெட் எடுப்பதை விட பந்தை ஃபிளைட் செய்து வீசி பவுண்டரி கொடுப்பது மேலானது” என பிஷன் சிங் பேடி கர்ஜித்தார். இவர்கள் எல்லாரும் நிறுவனங்கள் மீதான தங்களுடைய அதிருப்தியை வெளிப்படையாகப் போட்டு உடைப்பவர்கள். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் லட்சியவாதிகள். அப்பாவின் இறுதி ஆசையை நிறைவேற்ற ஐந்து வருடங்கள் கிரிக்கெட்டை ஒதுக்கி வைத்துவிட்டுப் பொறியியல் படிப்பில் கவனம் செலுத்தியவர் எரப்பள்ளி பிரசன்னா.

இன்னொரு தரப்பினர் மிகவும் கொண்டாட்டம் நிறைந்தவர்கள். எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல சாதனைகளை செய்ய முடியாதவர்கள். தங்களுடைய போதாமைகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்குபவர்கள். தவறான குற்றச்சாட்டில் சிக்கி கிரிக்கெட் வாழ்க்கையைத் தொலைத்த சுபாஷ் குப்தா உடனடியாக நினைவுக்கு வருகிறார். தூஸ்ராவை அளவுக்கதிகமாக உபயோகித்து தன்னுடைய ரிதத்தை கெடுத்துக் கொண்ட ஹர்பஜன் சிங் இன்றுவரைக்கும் பொறுமிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அஸ்வின் இவ்விரு தரப்பினரிடம் இருந்தும் ஒதுங்கியே நிற்கிறார். கிரிக்கெட்டை கருப்பு – வெள்ளையாக அவர் என்றைக்குமே எளிமையாகப் புரிந்துகொள்வதில்லை. பேடி, பிரசன்னாவை போல அஸ்வினும் ஒரு கிளாசிக்கல் சுழற்பந்து வீச்சாளர்தான். ஆனால் ஃபிளைட் செய்து தான் விக்கெட் எடுப்பேன் என்றெல்லாம் அவர் அடம் பிடிப்பதில்லை. தூஸ்ரா பந்து வீச்சை அருவருப்பாக கருதும் அளவுக்கு அவர் ஒரு லட்சியவாதி. ஆனால், பேட்டர் எல்லை தாண்டும் போது மான்கட் செய்ய அவர் தயங்குவதில்லை.

அஸ்வின் எப்படிப்பட்ட ஒரு சுழலர்? கிரிக்கெட் வரலாற்றின் அறிவார்ந்த ஆஃப் ஸ்பின்னர்கள் வரிசையில் அஸ்வினுக்கும் ஓர் இடமுண்டு. ஜிம் லேக்கர், முரளிதரன், கிரேம் ஸ்வான் வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர் அவர். ஆனால் அஸ்வினிடம் அழகியல் அம்சங்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது. எரப்பள்ளி பிரசன்னா, பிஷன்சிங் பேடி போன்ற தூய்மைவாதிகள் பரிந்துரைக்குன் சைட் ஆன் (Side on) ஆக்‌ஷன் கொண்டவரல்ல. செஸ்ட் ஆன் (chest on) ஆக்‌ஷன் கொண்டவர். “தனது உடலைப் பெரிதாக வளைக்காமல் பந்தில் எப்படி இவ்வளவு சுழலை (revolutions) அஸ்வின் கொண்டு வருகிறார் என்பது உண்மையிலேயே ஆச்சர்யமாக இருக்கிறது.” என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் ராம் நாரயண்.

அஸ்வினைப் போல மோசமாக நடத்தப்பட்ட ஓர் இந்திய வீரர் இல்லை என்று இந்திய முன்னாள் வீரர் காவஸ்கர் மனம் வெதும்புகிறார். ஆனால் அஸ்வினோ புகார்களைத் தூக்கிக் கொண்டுத் திரியாமல் நம்பிக்கையுடன் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்துகிறார். எது அஸ்வினை உந்தித் தள்ளுகிறது? மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டின் போது அவர் கொடுத்த ஒரு பேட்டியில் இப்படிச் சொல்கிறார். “ஒரு கிரிக்கெட் வீரர் வாழ்க்கையில் தாழ்வுகள் இல்லாமல் எந்த உயரமும் இல்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நான் விளையாடாதது துரதிர்ஷ்டமே. இதற்காக வருத்ததுடனே நான் இருக்க மாட்டேன். அதுதான் எனக்கும் இன்னொருவருக்குமான வித்தியாசம். என்னுடைய அணியினருக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் என்னுடைய சிறந்த பங்களிப்பையே அளிக்க விரும்புகிறேன்.” என்றார்.

ஆதவனின் சாகாவரம் பெற்ற வரிகளில் ஒன்று ,”நாம் பூரணத்துவத்திற்காக முயன்று தோற்றவாறு இருக்கிறோம்”. இதற்கு இணையான எண்ணற்ற முத்துக்களை அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் உதிர்த்திருக்கிறார். அதே பேட்டியில் அணியில் தனக்கு நிரந்தர இடமில்லாமல் இருப்பது பற்றி பேசிய அவர், “பூரணத்துவதற்கான தேடல் தான் எல்லா நேரத்திலும் என்னை நல்ல நிலையில் வைத்திருக்கிறது, அதே சமயம், அது தாங்கொணா பாரத்தையும் அளிக்கிறது” என்றார்.

சமீபகாலத்தில் அஸ்வின் அளவுக்குப் பந்துவீச்சு ஆக்‌ஷனைத் தொடர்ந்து மாற்றியமைத்த ஒரு பந்துவீச்சாளரைப் பார்க்க முடியாது. இதற்கு அடிப்படைக் காரணம் அவருடைய கல்விப் பின்புலம். அடிப்படையில் இன்ஸ்ட்ருமென்டல் என்ஜினியர் என்பதால் பயோ மெக்கானிக்ஸ், ஏரோடைனமிக்ஸ் போன்ற துறைகளில் அவருக்கு ஓர் ஆழ்ந்த புரிதல் இருக்கிறது. பந்துவீச்சு முறையில் ஏதாவது தவறாகப் போனால் உடனடியாக அதில் இருந்து மீண்டு வந்துவிட முடிகிறது. இதையெல்லாம் தாண்டி அஸ்வின் ஒரு மதிநுட்பம் கொண்டவர்.

2018 தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் வாசிப்பதற்கு என்று அஸ்வினுக்குப் புத்தகங்களைப் பரிந்துரை செய்து கட்டுரை எழுதினார் சுரேஷ் மேனன். “அஸ்வின் ஓர் அறிவுஜீவி, தெளிவான மனிதர்” என்று ஹிந்து நாளிதழில் வெளியாகும் தனது பிட்வீன் விக்கெட்ஸ் (Between wickets) பத்தியில் புகழாரம் சூட்டினார்

இந்த மதிநுட்பமே அவருக்குப் பல நேரங்களில் பாதகமாகவே முடிந்துள்ளது. சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த விரிவான நேர்காணலில், தன் மீது அதிகமாக சிந்திப்பவர் என்ற பிம்பம் எப்படிக் கட்டப்பட்டது என்பது குறித்து அஸ்வின் பேசியுள்ளார். “தனக்கு இரண்டு ஆட்டங்கள் மட்டுமே கிடைக்கும் என்பதைத் தெரிந்த ஒருவர் அதிர்ச்சியடையவும் அதிகமாகச் சிந்திக்கவும் தான் செய்வார். சிந்திப்பது என் பணி. ஆனால் இந்தப் பிம்ப உருவாக்கம் எனக்கு எதிராகத் திட்டமிட்டு சந்தைப்படுத்தப்படுகிறது” என்றார்.

தன் ரசனைக்கு உட்பட்ட எல்லாவற்றையும் செய்து பார்க்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் அஸ்வின். எதையும் பூசி மொழுகாமல் வெளிப்படுத்தும் குணம் அவருடையது. சக வீரர்கள் உடனான தனது உறவு குறித்து அந்தப் பேட்டியில் அஸ்வின் பேசினார். “ஒரு காலத்தில் கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்தார்கள். இப்போது, ​​அவர்கள் வெறுமனே சக வீரர்கள். அவ்வளவு தான். தனது பக்கத்தில் இருக்கும் நபர்களை எப்படியாவது முந்திவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்றார்.

2021 சிட்னி டெஸ்டின் போது அஸ்வின் – டிம் பெய்ன் இடையிலான வார்த்தைப் போர் அந்தத் தொடரின் முக்கிய பேசுபொருளாக மாறியது. அஸ்வினை நோக்கிக் கடுமையாக வசைமாறிப் பொழிந்த பெய்ன், இந்திய அணி வீரர்கள் எப்படி அஸ்வினைப் பார்க்கிறார்கள் என்பதைப் போட்டுடைத்தார் “உன்னை விட எனக்கு இந்திய அணியில் எனக்கு நண்பர்கள் அதிகம். உன் சக வீரர்கள் அனைவரும் உன்னை ஏளனமாகப் பார்க்கிறார்கள்” என்றார். இது உண்மையா இல்லையா என்பதை அஸ்வின் தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றாலும் எளிதாகப் புறக்கணிக்கக் கூடிய குற்றச்சாட்டு அல்ல இது.

அஸ்வினுக்கு இப்போது 36 வயது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஒயினைப் போன்றவர்கள். வயது கூட கூடத்தான் ஆட்டத்தில் உச்சம் தொடுவார்கள். உலகின் முதல் நிலைப் பந்துவீச்சாளராக இருந்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெளியே உட்கார வைக்கப்பட்டவர் அஸ்வின். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலாவது கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்குமா இந்திய அணி?

The post ”கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்குமா இந்திய கிரிக்கெட் அணி..?” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0/feed/ 0
’’இங்கிலாந்தில் 2025-2031 ஆண்டுகளில்  இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட்..!’’ மைதானங்கள் பெயர் வெளியீடு https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2025-2031-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-2025-2031-%25e0%25ae%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2025-2031-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/#respond Thu, 15 Jun 2023 04:28:34 +0000 https://madrasmurasu.com/?p=3905 இங்கிலாந்தில் 2025-2031 ஆண்டுகளில்  இங்கிலாந்து- இந்தியா இடையே நடைபெற இருக்கு டெஸ்ட் மேட்ச் போட்டி மைதானம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. சௌதாம்ப்டனில் ஏஜஸ் பௌல் மைதானத்தில் 2027-ல் முதன்முறையாக ஆஷஸ் ஆட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக வருகிற ஜூலை 17-ம் தேதி மகளிர் ஆஷஸ் ஆட்டம் முதன்முறையாக இந்த மைதானத்தில் நடைபெறுகிறது. 2027 மகளிர் ஆஷஸ் தொடர், ஹெடிங்க்லி மைதானத்தில் நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதே போல, 2027 ஆஷஸ் […]

The post ’’இங்கிலாந்தில் 2025-2031 ஆண்டுகளில்  இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட்..!’’ மைதானங்கள் பெயர் வெளியீடு first appeared on Madras Murasu.

]]>
இங்கிலாந்தில் 2025-2031 ஆண்டுகளில்  இங்கிலாந்து- இந்தியா இடையே நடைபெற இருக்கு டெஸ்ட் மேட்ச் போட்டி மைதானம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. சௌதாம்ப்டனில் ஏஜஸ் பௌல் மைதானத்தில் 2027-ல் முதன்முறையாக ஆஷஸ் ஆட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக வருகிற ஜூலை 17-ம் தேதி மகளிர் ஆஷஸ் ஆட்டம் முதன்முறையாக இந்த மைதானத்தில் நடைபெறுகிறது.

2027 மகளிர் ஆஷஸ் தொடர், ஹெடிங்க்லி மைதானத்தில் நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதே போல, 2027 ஆஷஸ் தொடருக்கான மைதான விவரங்களையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. லார்ட்ஸ், கியா ஓவல், டிரென்ட் பிரிட்ஜ், ஏஜஸ் பௌல் ஆகிய மைதானங்களில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

2031 ஆஷஸ் தொடர் லார்ட்ஸ், கியா ஓவல், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரஃபோர்டு, ஹெடிங்க்லி, டிரென்ட் பிரிட்ஜ் ஆகிய மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. ஏஜஸ் பௌல் மைதானத்தில் 2011-ல் முதல் டெஸ்ட் ஆட்டம் நடத்தப்பட்டது. அதில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் விளையாடின. 2014, 2018 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கு காலத்தில் 2020-ல் பயோ-செக்யூர் (Bio-secure) முறையில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் ஆட்டங்கள் இங்கு நடைபெற்றன.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மைதான விவரங்களையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 2025-ல் நடைபெற உள்ள ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் லார்ட்ஸ், கியா ஓவல், எட்ஜ்பஸ்டன், ஹெடிங்க்லி, எமிரேட்ஸ் ஓல்ட் டிரஃபோர்ட் ஆகிய மைதாங்களில் நடைபெற உள்ளன. 2029-ல் நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் லார்ட்ஸ், கியா ஓவல், எட்ஜ்பஸ்டன், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரஃபோர்ட், ஏஜஸ் பௌல் ஆகிய மைதானங்களில் நடைபெறுமென இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

The post ’’இங்கிலாந்தில் 2025-2031 ஆண்டுகளில்  இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட்..!’’ மைதானங்கள் பெயர் வெளியீடு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2025-2031-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/feed/ 0
“ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள் – இந்திய ரசிகர்களுக்கு முதல் நாள் ஏமாற்றம்..!” https://madrasmurasu.com/%e0%ae%b9%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-146-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-95-%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b9%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d-146-%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d-95-%25e0%25ae%25b0%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%b9%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-146-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-95-%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/#respond Thu, 08 Jun 2023 01:49:54 +0000 https://madrasmurasu.com/?p=3601   ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள்: முதல் நாளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்! இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் முதல் நாள் மிகவும் ஏமாற்றமாக அமைந்துள்ளது டெஸ்ட் ஆட்டங்களுக்கான தரவரிசையில் முதலிரண்டு இடங்களில் உள்ள இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடுகின்றன. ஓவல் மைதானத்தின் புற்கள் நிரம்பிய ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. அதன்படியே, டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார் (இந்த […]

The post “ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள் – இந்திய ரசிகர்களுக்கு முதல் நாள் ஏமாற்றம்..!” first appeared on Madras Murasu.

]]>
 

ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள்: முதல் நாளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்!
இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் முதல் நாள் மிகவும் ஏமாற்றமாக அமைந்துள்ளது

டெஸ்ட் ஆட்டங்களுக்கான தரவரிசையில் முதலிரண்டு இடங்களில் உள்ள இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடுகின்றன. ஓவல் மைதானத்தின் புற்கள் நிரம்பிய ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. அதன்படியே, டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார் (இந்த முடிவே முதல் நாள் இறுதியில் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது என்பது வேறு விஷயம்).

4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்குவதாக ரோஹித் தெரிவித்தார். அணியில் அஸ்வின் தேர்வாகவில்லை. ஒடிசா ரயில் விபத்துத் துயரத்தை முன்னிட்டு இரு அணி வீரர்களும் கருப்பு நிறப் பட்டையுடன் களமிறங்கினார்கள். ஷமி, சிராஜின் முதலிரண்டு ஓவர்களில் ஆஸ்திரேலியத் தொடக்க வீரர்கள் சற்றே தடுமாறினார்கள்.

சிராஜின் அட்டகாசமான வாபிள் ஸீமில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டனார் உஸ்மான் கவாஜா. முதல் 13 ஓவர்களில் ஷமியும் சிராஜும் 60 சதவீத பந்துகளை குட் லெங்தில் வீசினார்கள். இதனால் சொற்பமாகவே ஆஸி வீரர்களால் ரன் எடுக்க முடிந்தது. இதன் காரணமாக உமேஷ் யாதவைக் குறிவைத்து அடிக்கத் தொடங்கினார்கள் வார்னரும் லபுஷேனும்.

உமேஷ் வீசிய 15-வது ஓவரில் நான்கு பவுண்டரிகளைப் பறக்கவிட்டார் வார்னர். ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்குக் காத்திருந்த வார்னருக்கு அதிர்ச்சி கொடுத்தார் தாக்குர். 60 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த வார்னர், லெக் சைடில் கீப்பர் கே.எஸ். பரத்தின் அற்புதமான கேட்சில் ஆட்டமிழந்தார். முதல் பகுதியில், இரு விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.

உணவு இடைவெளிக்குப் பிறகு நம்பிக்கையுடன் ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியா. 2 எல்பிடபிள்யூ ரெவ்யூக்களில் தப்பித்த லபுஷேன் 26 ரன்கள் எடுத்து ஷமி வீசிய கச்சிதமான ஸ்விங்கில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். தொடக்கத்தில் வானிலை மேகமூட்டத்துடன் இருந்தாலும் சில மணி நேரங்களில் நல்ல வெயில் அடிக்கத் தொடங்கியது. இது பேட்டர்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த ரோஹித் சர்மா, முதல் நாளிலேயே விமர்சனங்களை எதிர்கொண்டார்.

டிராவிஸ் ஹெட் வேகமாக ரன்களைச் சேர்த்தார். ஸ்மித்துடனான கூட்டணிக்கு நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். நிறைய பந்துகள் பேட்டின் விளிம்பில் பட்டாலும், அவை நேரடியாக ஃபீல்டரிடம் செல்லவில்லை. ரன் குவிப்புக்கு மத்தியில் ஆடுகளம் இன்னும் பந்துவீச்சாளர்களுக்கு உதவுகிறது என்பதை இவை உணர்த்தின. ஆனால் ஹெட் – ஸ்மித் கூட்டணி முதல் நாள் ஆட்டத்தை முழுவதுமாக ஆஸ்திரேலியா பக்கம் திருப்பியது.

39-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா அறிமுகமானார். இது ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஒருநாள் ஆட்டம் போல விளையாடிய ஹெட் தனது 60-வது பந்தில் அரை சதத்தை அடித்தார்.

தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு 97 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவுக்கு இது சிறப்பான பகுதியாக அமைந்தது.

ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக மாறுவதை உணர்ந்த ஹெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 99 ரன்களில் இருந்த போது ஷமி மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் பவுன்சர்களாக வீசினர். சமாளித்து விளையாடிய ஹெட் 106 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இருவரது திட்டமும் தெளிவாக இருந்தது. தவறான பந்துகளுக்குக் காத்திருந்து அடித்தனர். ரோஹித் சர்மா பந்து வீச்சாளர்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தார். ஆனால், ஸ்மித் – ஹெட் இணை நங்கூரமிட்டது போல நிலைத்து நின்றது.

முதல் நாள் ஆட்டத்தைப் பொறுத்தவரையில் டாஸைத் தவிர ஆஸ்திரேலிய அணி வேறு எதிலும் சரிவை சந்திக்கவில்லை என வர்ணனையில் தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டார். ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 327 ரன்களைக் குவித்தது. ஸ்மித் 95 ரன்களுடனும் டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் முதல் நாள் மிகவும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஆனால் டி20 பவர்பிளேயில் முடிவு செய்யப்படுவது போல டெஸ்ட் கிரிக்கெட்டைக் கருத முடியாது. முதல் நாளில் மோசமாக விளையாடிய அணிகள், அடுத்தடுத்த நாள்களில் புதுவேகம் பெற்று வெற்றிகளைப் பெற்றுள்ளன. முதல் நாளில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் 109 தவறான ஷாட்களை ஏற்படுத்தியுள்ளார்கள். அவற்றில் மூன்று மட்டுமே விக்கெட்டுகளாகக் கிடைத்துள்ளன.

முதல் 77 பந்துகளில் 17 பந்துகளைச் சரியாக விளையாடவில்லை ஹெட். கடைசிப் பகுதியில் தான் இந்தியப் பந்துவீச்சாளர்கள் நிறைய ரன்களைக் கொடுத்தார்கள். ஷமியும் சிராஜும் நன்குப் பந்துவீசினார்கள். இந்திய அணி புதிய நம்பிக்கையுடன் 2-ம் நாளில் களமிறங்க வேண்டும்.

The post “ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள் – இந்திய ரசிகர்களுக்கு முதல் நாள் ஏமாற்றம்..!” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b9%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-146-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-95-%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed/ 0
“நல்லதோ கெட்டதோ, கடந்த காலம் வேண்டாமே..!”அஜிங்கியா ரஹானே https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25a4%25e0%25af%258b-%25e0%25ae%2595%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258b-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2 https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2/#respond Sun, 04 Jun 2023 06:37:36 +0000 https://madrasmurasu.com/?p=3366 காயம் காரமாக ஓய்வில் இருந்த அஜிங்கியா ரஹானே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். டெஸ்ட் போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ள அஜிங்கியா ரஹானே, பிசிசி டிவியிடம் மனம் திறந்து பேசியுள்ளார். ஜுன் 7 ஆம் தேதி தொடங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதற்காக ஐபிஎல் 2023 போட்டி முடிவடைந்த சில நாட்களில் இந்திய அணி இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் பிசிசிஐ டிவியிடம் ரஹானே […]

The post “நல்லதோ கெட்டதோ, கடந்த காலம் வேண்டாமே..!”அஜிங்கியா ரஹானே first appeared on Madras Murasu.

]]>
காயம் காரமாக ஓய்வில் இருந்த அஜிங்கியா ரஹானே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். டெஸ்ட் போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ள அஜிங்கியா ரஹானே, பிசிசி டிவியிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஜுன் 7 ஆம் தேதி தொடங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதற்காக ஐபிஎல் 2023 போட்டி முடிவடைந்த சில நாட்களில் இந்திய அணி இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றது.

இந்நிலையில் பிசிசிஐ டிவியிடம் ரஹானே பேசியதாவது: 18-19 மாதங்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பும்போது, நல்லது அல்லது கெட்டது என எது நடந்திருந்தாலும் எனது கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்க நான் விரும்பவில்லை. நான் புதிதாகத் தொடங்க விரும்புகிறேன்.

நான் என்ன செய்கிறேனோ அதை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன். ஐபிஎல் போட்டிக்கு முன்பாக உள்ளூர் போட்டிகளில் நான் சிறப்பாகவே விளையாடினேன். அதனால் இந்த மீள் வருகை உணர்ச்சிகரமாகவே இருந்தது” என்றார்.

பேட்டிங் செய்யும் விதம் குறித்துப் பேசிய அவர்,”ஐ.பி.எல். மற்றும் ரஞ்சி டிராபியில் நான் விளையாடிய அதே மனநிலையுடன் இப்போதும் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். டி20 அல்லது டெஸ்ட் என எந்தவிதமான போட்டி என்பது பற்றி யோசிக்க விரும்பவில்லை.

நான் இப்போது பேட்டிங் செய்யும் விதம் போன்ற விஷயங்களை மேலும் சிக்கலாக்கவும் விரும்பவில்லை. நான் அதை எவ்வளவு எளிமையாக வைத்திருக்கிறேனோ அதுவே எனக்கு நல்லது என நினைக்கிறேன்” என்றார்.

ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்துப் பேசிய ரஹானே,” இப்போது அணியில் வீரர்களுக்கிடையே பிணைப்பு நன்றாக இருக்கிறது. ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அணியை மிகவும் சிறப்பாக கையாளுகின்றனர். அணியின் சூழ்நிலை மிகவும் முக்கியம். அணி வீரர்கள் நல்ல புரிதலுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது” எனறு மனம் திறந்து பேசினார்.

The post “நல்லதோ கெட்டதோ, கடந்த காலம் வேண்டாமே..!”அஜிங்கியா ரஹானே first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2/feed/ 0