acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை..!’’ டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் first appeared on Madras Murasu.
]]>தேசிய மருத்துவர்கள் தினம் (01-07-2023), மனிதகுலத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றிவரும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முதல் நிலை களப்பணியாளர்களாக பணியாற்றி பெருந்தொற்றின் கோரப் பிடியிலிருந்து மனித உயிர்களை காப்பாற்றியதற்காக மருத்துவர்களுக்கு நன்றி சொல்வதற்கு ஏற்ற தருணம் இது.
தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றி மருத்துவர்களின் கடமை உணர்வை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறார்கள். நம் அனைவரது வாழ்விலும் மருத்துவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கொரோனா வெளிப்படுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தன்னலமற்ற, ஈடு இணையில்லாத சேவையைப் போற்றுகின்ற, மதிக்கின்ற அதே வேளை நம்முடைய உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களையும் பாதுகாக்க வேண்டியதும் நம்முடைய கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்
The post ’’உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை..!’’ டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் first appeared on Madras Murasu.
]]>The post புதுச்சேரியில், ‘வாட்டர் பெல்’..!’’ டாக்டர் தமிழிசை மகிழ்ச்சி first appeared on Madras Murasu.
]]>கோடையின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் போதிய அளவு தண்ணீர் அருந்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தேன்.
மாணவர்கள் இரண்டு வேளை தண்ணீர் குடிக்க “வாட்டர் பெல்” ஒலிக்க வேண்டும். மாணவர்கள் தண்ணீர் குடிக்க ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினேன்.

அதன் அடிப்படையில், காலை இரண்டு நேரமும் பிற்பகல் ஒரு நேரமும்
வாட்டர் பெல் ஒலிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. மாணவர்கள் போதிய தண்ணீர் குடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்த அதிகாரிகளுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
The post புதுச்சேரியில், ‘வாட்டர் பெல்’..!’’ டாக்டர் தமிழிசை மகிழ்ச்சி first appeared on Madras Murasu.
]]>The post ”சுந்தரகாண்டத்தைப் படித்தால் தமிழிசை டாக்டராக முடியுமா?” விடுதலை தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>தொழில்முறையில் மருத்துவரான தமிழிசை சவுந்தரராஜன், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதற்கு இணையான ராஷ்ட்ர சேவிகா சங்கத்தின் ஒரு பிரிவான சம்வர்தினி நியாஸ் மூலம் உருவாக்கப்பட்ட `கர்ப்ப சன்ஸ்கார்’ திட்டத்தை மெய்நிகர் மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது தாய்மார்களுக்கு, கர்ப்பம் தரித்தது முதல் குழந்தையின் இரண்டரை வயது வரை பகவத் கீதை, ராமாயணம் போன்ற மத நூல்களைப் படித்தல், சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்தல், யோகா பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவற்றைப் பரிந்துரைக்கிறது.
இந்த நிலையில் கர்ப்ப சன்ஸ்கார் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ’’கிராமங்களில் கர்ப்பிணிகள் ராமாயணம், மகாபாரதம் உள்பட பிற இதிகாசங்கள் மற்றும் நல்ல கதைகளைப் படிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக தமிழ்நாட்டில், கர்ப்பிணிகள் கம்ப ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் சுந்தரகாண்டம் படிப்பது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது” என்று கூறினார். சுந்தரகாண்டம் என்பது ராமாயணத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழிசை கூறும் சுந்தர காண்டம் என்ன கூறுகிறது என்றால், “தோல்கருவி, முட்டாள், சூத்திரன், விலங்கு மற்றும் பெண்கள் இவர்களை எப்போதும் சுதந்திரமாக விடக்கூடாது; இவர்களைக் கண் காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். அதிகாரம் எக்காலத்திலும் இவர்களை நெருங்கக்கூடாது” (ராமாயணம் சுந்தரகாண்டம் அத்.3) ராமாயணம் சுந்தர காண்டத்தில் உள்ள ஸ்லோகம்தான் இது. ஒருவேளை இதற்குத்தான் தெலங்கானா ஆளுநர் தமிழிசை பெண்களைப் படிக்கச் சொல்கிறாரோ?
வேதங்களைப் படித்ததற்காக சம்பூகனை ராமன் கொலை செய்தான். இதனை இன்றும் சத்சங்கம் என்ற பெயரில் வடக்கே சாமியார்கள் கூறிவருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, “மனிதர்கள் அவரவர் வேலைகளைச் செய்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளனர். வேதம் படிப்பது, கற்றுக்கொடுப்பது முதல்வருணத்தாரின் பணி, இந்தப்பணியை ஒரு சத்திரியன் செய்தால் நாட்டைப் பாதுகாப்பது யார்? நாட்டின் பாதுகாப்பு கேள்விக் குறியாகாதா? அதே போல் ஒரு வைசியன் வேதம் படித்தால் வணிகம் குழம்பி நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டு விடும். உள்நாட்டுக் குழப்பம் ஏற்படும். அதே போல் வேதத்தை ஒரு சூத்திரன் படித்தால் மேலே கூறிய மூன்று வருணத்தாருக்கான சேவைகளைச் செய்வது யார்? இதனால் ஒட்டு மொத்த நாட்டின் நிர்வாகமே கெட்டுப் போகும். ஆகையால் தான் சூத்திரனான சம்புகன் அவனது வேலையைப் பார்க்காமல், அவனைச் சேர்ந்தவர்களையும் வேலையைப் பார்க்க விடாமல் வேதம் படித்தான்; சம்பூகன் வேதம் படித்து ஒன்றுமே செய்யப்போவதில்லை, ஆனால் அவனால் இதர வேலைகள் தடைபடும், இதனால் தான் பிரபு ராமர் ஒரு எச்சரிக்கை விடுத்தார்” என்று கூறுகிறார்கள். இதனையே தமிழ்நாட்டில் கூட சில குடுமி பிரசங்கிகள் கதாகாலட்சேபத்தில் கூறியுள்ளனர்.
தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன் கூறும் சுந்தரகாண்டத்தில் பெண்களையும் சுதந்திரமாக விடக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறதே – அதன்படி பார்த்தால் ஒரு பெண்ணான தமிழிசை சவுந்தரராசன் டாக்டர் ஆனது எப்படி? சுந்தரகாண்டக் கூற்றுக்கு எதிரானது தானே!
மதம் தலைக்கேறினால் நாம் என்ன நினைக்கிறோம் – எங்கே போகிறோம் – அதில் முரண்பாடு முண்டாசு கட்டி நிற்கிறதே என்பதெல்லாம் தெரிவதில்லையா?
சுந்தரகாண்டத்தைப் படிக்கச் சொல்லும் டாக்டர் தமிழிசை, அவசரப்பட்டு டாக்டர் பட்டத்தையும் ஆளுநர் பதவியையும் துறந்து போய் விட வேண்டாம்.
தமிழிசை போன்ற பெண்கள் டாக்டராக வேண்டும், பெரும் பதவிகளை அலங்கரிக்க வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் கொள்கை – திராவிடர் கழகத்தின் செயல்பாடு!
ஆனால் இவர்கள் வேறு திசைக்கு ஓடுவது ஏன்?
The post ”சுந்தரகாண்டத்தைப் படித்தால் தமிழிசை டாக்டராக முடியுமா?” விடுதலை தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>The post ”நீட் தேர்வால் நிறைவேறும் கனவு..!” டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் first appeared on Madras Murasu.
]]>நீட் தேர்வில் வெற்றி பெற்ற புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா மாணவ,மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும்…பாராட்டுக்களும்…
அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் மற்றும் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் 4 இடங்களைப் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த
மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நீட் தேர்வில் மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
தமிழக மாணவர்கள் தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று நீட் தேர்வில் சாதனை படைத்திருப்பது வருங்கால மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கின்றது.
நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவு நிறைவேறுகிறது.
தமிழக மாணவர்கள் படைத்துள்ள சாதனை நீட் தேர்வை பற்றிய அவநம்பிக்கையை போக்கி மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாக நீட் தேர்வு பலமாகவும், பாலமாகவும் புதிய நம்பிக்கையை அளிக்கின்றது.
The post ”நீட் தேர்வால் நிறைவேறும் கனவு..!” டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் first appeared on Madras Murasu.
]]>