acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும்..!’’ அமைச்சர் பி.கே.சேகர்பாபு first appeared on Madras Murasu.
]]>சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்திலுள்ள அண்ணா கனி அங்காடிகளை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, ஆய்வு செய்தார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரால் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கோயம்பேடு அங்காடியில் சுமார் 86 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கின்ற காய்கறி அங்காடி, மலர் அங்காடி, கனி அங்காடி மற்றும் உணவு தானிய அங்காடி என்று மொத்தமாக 3941 கடைகள் அமைந்திருக்கின்ற இந்த கோயம்பேடு மார்கெட்டில் இன்றைக்கு கனி அங்காடியை ஆய்வு செய்தோம். அதில் இருக்கின்ற 992 கடைகள், அந்த கடைகளிலே ஏற்படுகின்ற கழிவுகள் அந்த கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்ந்து அந்த அங்காடி பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்வது என்று பல்வேறு நிலைகளில் இன்று ஆய்வினை மேற்கொண்டுள்ளோம்.
கண்காணிப்பு கேமரா
மழைக்காலங்களில் ஏற்படுகின்ற மழைநீர் தேக்கத்தை நிறந்தரமாக தீர்வு காணுவதற்கு சுமார் 2.5 கிலோ மீட்டர் அளவிற்கு மழைநீர் கால்வாய் புதியதாக கட்ட வேண்டும் என்று பொறியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் இருந்தாலும் முதல் கட்டமாக அந்த கால்வாய் அமைந்திருக்கின்ற முழுவதுமாக தூர் வாரப்பட வேண்டுமென்று அறிவுறுத்திருக்கின்றோம். அந்த வழியிலே விரைவாக இந்த பணிகளை மேற்கொள்வதற்கு முழுவீழ்ச்சில் நடவடிக்கை எடுப்பதற்கு இப்பொழுது பணிகள் துவங்கப்பட இருக்கின்றது. அதேபோல் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு கோயம்போடு அங்காடி மேம்பாட்டிற்காக சுமார் 20 கோடி ரூபாய் ஒதிக்கீடு செய்யப்பட்டது. அதில் புதியதாக நுழைவு வாயில் அதேபோல் நீரோட்டு நிலையம் அறிவிப்பது பொது அறிவிப்பு சாதனங்கள், கண்காணிப்பு கேமரா பொருத்துகின்ற பணி, உயர்மட்ட மின் விளக்குகள் அமைக்கின்ற பணிகள், சிதலமடைந்த மின் விளக்குகளை புதுப்பித்தல், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் பொருந்தும் பணிகள் மொத்தமாக ரூபாய் 13 கோடி அளவில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளுக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு, கூடிய விரைவில் அந்த பணிகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும், 2023 -2024 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையில் கோயம்பேடு அங்காடியை நவீனப்படுத்துவதற்கு ரூபாய் 10 கோடியை ஒதுக்கீடு செய்தோம். இவ்வகையில் கோயம்பேடு மலர் அங்காடிக்கு அருகே எழில்மிகு பூங்கா அமைத்தல், அங்காடியில் சூரியஒளி மின்சார கட்டமைப்பை உருவாக்குதல், 24 மணி நேர ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைத்தல், அங்காடிக்கென பிரத்யேக இணைய வலைதளம் உருவாக்குதல் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணியாணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிரந்திர நடவடிக்கை
அதேபோல், நம்முடைய கோயம்பேடு அங்காடியில் பல கடைகள் உணவு தானிய பகுதிகளிலே கடைகள் சில காலியாக இருக்கின்றன. அவைகளை மறு ஏலத்திற்கு கொண்டு வரவும், அதேபோல் பழ அங்காடிகளில் காலியாக இருக்கின்ற கடைகளை மறு ஏலத்திற்கு கொண்டு வந்து வியாபரத்துக்கு அந்த கடைகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம். கோயம்பேடு மார்க்கெட்டில் சேருகின்ற தினசரி கழிவுகளை அகற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருக்கின்ற ஒப்பந்ததாரர் பணி செய்கின்ற ஆட்களின் எண்ணிக்கையை மேலும் கூட்டுவதென்று முடிவு செய்திருக்கின்றோம்.
கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசல் அவ்வபோது ஏற்படுகிறது. அதை ஒழுங்கு படுத்திக்கொண்டுதான் வருகின்றோம். நிரந்திர நடவடிக்கை எடுப்பதற்கு அங்காடி நிர்வாக குழுவின் முதன்மை நிர்வாக அலுவலரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருங்காலங்களில் போக்குவரத்திற்கும் பாதகம் இல்லாமல் அந்த கடைகளை வைத்திருப்பவர்களுக்கும் வாழ்வாதாரமும் எந்தவித பாதிப்பும் இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
ஏ.எம்.வி.பிரபாகர ராஜா எம்.எல்.ஏ
இந்த ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, அங்காடி நிர்வாக குழுவின் முதன்மை நிர்வாக அலுவலர் எம்.இந்துமதி, கண்காணிப்பு பொறியாளர் என்.சீனிவாச ராவ் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post ’’கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும்..!’’ அமைச்சர் பி.கே.சேகர்பாபு first appeared on Madras Murasu.
]]>The post “திராவிடம் என்றால் என்ன என்று சிலரைக் கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம்..!” முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>சென்னையில் இன்று (27.10.2023) நடைபெற்ற வழக்கறிஞர் ஏ.என். புருஷோத்தம் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை:
இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று மணவிழாவை நடத்திவைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.
சீர்திருத்தத் திருமணங்கள்
இன்று நடைபெற்றிருக்கக்கூடிய இந்த திருமணம், சீர்திருத்தத் திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணமாக நடந்தேறியிருக்கிறது. இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெறுகிற நேரத்தில், அதிலும் குறிப்பாக நாம் வாழ்த்துகிற நேரத்தில் ஒன்றை தவறாமல், மறக்காமல், வழக்கமாக, வாடிக்கையாக வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய ஒரு செய்தியை நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். என்ன அந்த செய்தி என்று கேட்டால், இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால், அந்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை நாம் பெற்றிருக்கவில்லை. சட்டம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
ஒரு தமிழ் திருமணம்
அந்த நிலையை மாற்றிட வேண்டும் என்பதற்காகத்தான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் 1967-இல் ஆட்சிப் பொறுப்பேற்று ஆட்சியின் தலைவனாக தமிழக முதல்வராக சட்டமன்றத்திற்கு உள்ளே முதன்முதலாக நுழைந்து, சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அன்றைக்கு அண்ணா அவர்கள் பெற்றுத்தந்தார். ஆகவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்தத் திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது. இது சீர்திருத்தத் திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணம் மட்டுமல்ல, ஒரு தமிழ் திருமணம். இன்னும் பெருமையோடு சொல்லவேண்டும் என்று சொன்னால், நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். எனவே அந்த அங்கீகாரத்தோடு இது ஒரு தமிழ்த் திருமணமாக நடந்தேறியிருக்கிறது. அது எல்லோருக்கும் மகிழ்ச்சி. அப்படிப்பட்ட இந்தத் திருமணத்தில் நாம் எல்லாம் கலந்து கொண்டு மகிழ்ச்சியோடு மணமக்களைத் தமிழ் உணர்வோடு வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
கலைஞர் பார்த்து மகிழ்ச்சி
நம்முடைய கழக வழக்கறிஞராக அருமை சகோதரர் புருஷோத்தம் அவர்கள் அவரைப் பற்றிப் பேசும்போது இங்கே குறிப்பிட்டுச் சொன்னார்கள். புருஷோத்தம் அவர்கள் தன்னை இந்த இயக்கத்தோடு இணைத்துக் கொண்டு இயக்கப்பணிகளை எப்படியெல்லாம் ஆற்றிக்கொண்டிருக்கிறார் என்பதை அவரை அறிந்தவர்கள், அவரைப் புரிந்தவர்கள் குறிப்பாக இந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மிகத் தெளிவாக உணர்வார்கள், அறிவார்கள்.
1981-ஆம் ஆண்டு மாணவர் அமைப்பை ஏற்படுத்தி, அந்த மாணவர்களை எல்லாம் வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, அப்படி நடத்திய நிகழ்ச்சிக்குத் தலைவர் கலைஞரை அழைத்து வந்து, அதைத் தலைவர் கலைஞர் பார்த்து மகிழ்ச்சி அடையக்கூடிய அளவுக்கு நடத்திக் காட்டியவர் நம்முடைய அருமை சகோதரர் புருஷோத்தம்.
10 மேம்பாலங்கள் கட்டினோம்
1991-இல் இருந்து உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞராகப் பொறுப்பேற்றார். அப்படி பொறுப்பேற்றிருந்த நேரத்தில்தான் வரலாற்றில் யாரும் மறந்திடாத ஒரு கொடுமையான செய்தி. என்ன செய்தி என்று கேட்டால், அப்போது தமிழ்நாட்டில் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அதிமுக ஆட்சி. இன்றைக்கு சென்னை மாநகரத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள். நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது, 10 மேம்பாலங்கள் கட்டினோம். இதுவரைக்கும் சென்னையைப் பொறுத்தவரைக்கும் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய எந்த மாநகரமாக இருந்தாலும், மேம்பாலங்கள் கட்டுவது என்பது மாநகராட்சியின் வேலையல்ல. அது பொதுப்பணித் துறைதான் கட்டவேண்டும். ஒன்றிய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் தான் கட்டவேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கட்டுவார்கள். மாநகராட்சி கட்டிய வரலாறே கிடையாது.
சிறிது தடைபட்டது
ஆனால் 1996-லிருந்து 2001 வரைக்கும், அதற்குப் பிறகு 2006-இல் இருந்து தொடர்ந்து நான் இந்த மாநகரத்தின் மேயராக இருந்தபோது 10 மேம்பாலங்களைப் போக்குவரத்தின் நெரிசலின் அடிப்படையில் கட்டவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டோம். வேகப்படுத்தினோம், விரைவுப்படுத்தினோம். அந்தப் பாலங்களைக் கட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்பட்டு, அந்தக் காலத்திற்குள் 10 பாலங்களையும் கட்டி முடிக்கவேண்டும் என்று முடிவெடுத்தோம். ஆனால் 10 பாலங்களில் ஒரு பாலம் பெரம்பூரில் இருக்கக்கூடிய மேம்பாலம். அதில் சிறிது டெக்னிக்கல் பிரச்சினை இருந்தது. அதனால், விரைவாக குறித்த நேரத்தில் கட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் சிறிது தடைபட்டது. ஆனால் மீதம் இருக்கக்கூடிய 9 மேம்பாலங்களைக் குறித்த காலத்தில் மட்டுமல்ல, குறித்த காலத்திற்கு முன்பே கட்டிமுடித்த பெருமை நமக்குண்டு.
பிரச்சனை வந்துவிடும்
அதற்குப் பிறகு, ஆட்சி மாற்றம் வந்தது. ஆட்சி மாற்றம் வந்த காரணத்தினால், அந்தப் பெரம்பூர் பாலம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதை ஏன் கிடப்பில் போட்டார்கள் என்ற விஷயத்தை நான் சொல்கிறேன். அது ஒரு பெரிய விஷயம். ஆனால் அதற்குப் பிறகு நாம் மீண்டும் ஆட்சிக்கு வருகிறோம். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, நாம் ஆட்சியிலிருந்தபோது அடிக்கல் நாட்டிப் பாதி பணியை முடித்து டெக்னிக்கல் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தப் பாலம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு நம்முடைய தலைவர்தான், எந்தத் தலைவர் அடிக்கல் நாட்டினாரோ அதே தலைவர் கலைஞர் அவர்கள் அந்தப் பாலத்தைத் திறந்து வைத்தார். இதுதான் ரெக்கார்டு. அதோடு இன்னொரு அதிசயம் என்ன என்று கேட்டால், அரசு சார்பிலோ அல்லது மாநகராட்சி சார்பிலோ ஏதாவது கட்டிடம் கட்டுகிறோம், பாலங்கள் கட்டுகிறோம், ரோடு போடுகிறோம், தெருவிளக்கு போடுகிறோம், கால்வாய் கட்டுகிறோம் இதுபோன்ற பணிகளைச் செய்கின்றபோது ஒரு காலத்தை நிர்ணயிப்போம். காலத்தை நிர்ணயிப்பது மட்டுமல்ல, ஒரு மதிப்பீடு போடுவோம், இந்த மதிப்பீட்டுக்குள் கட்டப் போகிறோம் என்று முடிவெடுப்போம். கடைசியில் கணக்கெடுத்துப் பார்த்தால், அந்த மதிப்பீடு போட்டதைவிடத் தாண்டிப் போயிருக்கும். ஏனென்றால் சில டெக்னிக்கல் பிரச்சனை வந்துவிடும், அதனால் காலதாமதமாகும். அப்போது விலைவாசி ஏற்றத்தின் அடிப்படையில், நாம் அதிகமாகச் செலவு செய்யக்கூடிய சூழ்நிலை வந்துவிடும். இது எதார்த்தமான நிலை.
ஜெயலலிதா ஆட்சி
ஆனால் சென்னை மாநகரத்தில் கட்டியபோது எவ்வளவு காலத்திற்குள் கட்டிவிடுவோம் என்று சொன்னோமோ, அந்த காலத்திற்குள் கட்டிமுடித்தோம் என்பது மட்டுமல்ல, எந்த மதிப்பீட்டில் கட்டிமுடிக்கவேண்டும் என்று சொன்னோமோ அதைவிடக் குறைவாக அந்தப் பாலத்தைக் கட்டிமுடித்தோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இடையில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அந்தப் பாலத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று ஒரு வழக்கு போட்டார்கள். ஜெயலலிதா ஆட்சில் அந்த வழக்கு போட்டார்கள்.
இரவோடு இரவாக, தலைவர் கலைஞரைக் கைது செய்த கொடுமையை எல்லாம் பார்த்திருப்பீர்கள். அதையெல்லாம் இங்கே சொல்ல விரும்பவில்லை. ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த சோகமான நிகழ்ச்சியை எல்லாம் இங்கே எடுத்துக் கூற விரும்பவில்லை. கலைஞரைக் கைது செய்தபோது, அன்றைக்கு ஒரு பொதுநல வழக்காக நம்முடைய புருஷோத்தம் அவர்கள் தொடுத்தார். அந்த பொதுநல வழக்கை தொடுத்த காரணத்தினால்தான் அன்றைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.கே. ஜெயின் அவர்கள் அதை விசாரித்து ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனத்தைத் தெரிவித்து உடனடியாக விடுதலை செய்தார். இதுதான் புருசோத்தமனுக்கும், நம்முடைய இயக்கத்திற்கும், இயக்கத்தில் இருக்கக்கூடிய தலைவருக்கும் உள்ள வரலாறு என்பதை நான் பெருமையோடு இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
உரிமை தருகிறோம்
அவருடைய திறமை, அதற்குப் பிறகு படிப்படியாக மாநில அரசு வழக்கறிஞராக நியமனம் பெற்றார். ஒன்றிய அரசின் மூத்த குழு வழக்கறிஞராவும் இரண்டு முறை பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றார். கழகத்தின் சார்பில் நடத்தக்கூடிய எந்தப் போராட்டமாக இருந்தாலும், அதில் வழக்கறிஞர்கள் பங்கேற்கிறார்கள் என்று சொன்னால், அதில் அவரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இன்றைக்கு, அவருடைய மகள், அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான் என்று சொல்வார்கள், அப்பாவுக்குப் பொண்ணு தப்பாமல் பிறந்திருக்கிறார். மணமகளாக வீற்றிருக்கக்கூடிய பூர்ணிமா மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும், மாநகராட்சி மன்ற உறுப்பினராக மட்டுமல்ல, சுகாதார நிலைக்குழு உறுப்பினராக பொறுப்பேற்று அந்த கடமையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றபோது, இங்கே கூட சொன்னார்கள். நம்முடைய டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகிறபோது, பெண்களுக்கு எந்தளவுக்கு உரிமை தருகிறோம், முதன்முதலாக திரு. ராஜீவ்காந்தி அவர்கள் 33 விழுக்காடு ஒதுக்கீட்டை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில் வழங்கவேண்டும் என்று சொன்னபோது எந்த மாநிலமும் நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை, முதல் மாநிலம் தமிழ்நாடுதான் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, நான் சென்னையின் மேயராக இருந்தபோது. இதுதான் திராவிட மாடல்.
இன்றைக்கு பெரிய பெரிய பதவில் உட்கார்ந்து கொண்டு, யார் யாரோ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அந்த பதவி என்பதே வேஸ்ட். அதுவும் பெரிய பெரிய மாளிகையில் உட்கார்ந்து கொண்டு, திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? இப்போது நடந்து கொண்டிருக்கிற கல்யாணம் – இதுதான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன? என்று கேட்கிறாரே அவரே தொடர்ந்து இருக்க வேண்டும். அது இன்னும் நம்முடைய பிரச்சாரத்திற்கு வலு சேர்த்துக்கொண்டே இருக்கிறது.
ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றவேண்டாம்
நான் இங்கே இருக்கக்கூடிய ஒன்றிய அரசில் இருக்கக்கூடிய பிரதமரை, உள்துறை அமைச்சராக இருக்கின்ற அமித் ஷா -வைக் கேட்டுக்கொள்ள விரும்புவது, தயவுசெய்து இங்கே இருக்கக்கூடிய ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றவேண்டாம். இந்த நாடாளுமன்றத் தேர்தல் வரைக்குமாவது இருக்கவேண்டும். அதில் எங்களுக்கு பல சௌகரியங்கள். எது வேண்டுமென்றாலும் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்றைக்குப் பொதுமக்கள் யாரும் இதை பொருட்படுத்தவில்லை. இன்றைக்கு சமூக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கக்கூடிய செய்திகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே, இந்தச் சூழ்நிலையில்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி பொறுப்பேற்று தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறதோ, அந்த உறுதிமொழிகளை எல்லாம் சிறப்பாகத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்த காட்சிகளை எல்லாம் பார்க்கிறீர்கள்.
தயாராக இருக்கவேண்டும்
இன்றைக்குக் கருத்துக்கணிப்பு வரக்கூடிய சூழ்நிலை எல்லாம் பார்க்கிறபோது, எப்படி தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றியைக் கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றோமோ, அதேபோல் வட மாநிலத்தில் நடைபெற இருக்கக்கூடிய 5 மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக, உறுதியாக இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. மோடி அவர்கள் தலைமையில் ஆண்டு கொண்டிருக்கக்கூடிய ஒன்றிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. 2024-ல் நடைபெறவிருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு நீங்கள் எல்லாம் தயாராக இருக்கவேண்டும், தயாராக இருக்கவேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு, மணமக்களை பொறுத்தவரைக்கும் எப்போதும் கோரிக்கைகள் வைக்கமாட்டேன். அதிலும் நம்முடைய மணமகள் டாக்டர், மணமகன் திரு. ராதாகிருஷ்ணன், இன்ஜினியர், BE படித்திருக்கிறார். நாட்டில் இருக்கக்கூடிய நிலவரங்கள் அத்தனையும் அவர்களுக்கு நன்றாக புரியும்.
தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்
அதனால் அவர்களுக்கு அறிவுரைகள், ஆலோசனைகள் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும், ஒரே ஒரு வேண்டுகோள், தமிழ்நாட்டில் இருக்கிறோம், தமிழர்களாக வாழ்கிறோம், தமிழுக்காகவே போராடுகிறோம், தமிழுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, உங்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள், சூட்டுங்கள் என்று அன்போடு கேட்டு, அன்போடு மட்டுமல்ல, உரிமையோடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.
The post “திராவிடம் என்றால் என்ன என்று சிலரைக் கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம்..!” முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ’’பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்..! அமைச்சர் கே.என்.நேரு first appeared on Madras Murasu.
]]>நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:
பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் என்னென்ன பணிகளை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டவுடன், முடிவு செய்யப்பட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும், மழை பெய்வதற்கு முன்பதாக அனைத்து பணிகளையும் தொடங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த வருடம் ஒதுக்கப்பட்ட தொகையில் 5 சதவீதம் தவிர, மற்ற அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.
சென்னைக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அனைத்து சாலைகளும் முழுமையாக போடப்பட்டுள்ளது. மழைக்காலங்களை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணிகள் மாவட்டங்கள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை, சாலைப் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்காக கிட்டத்தட்ட ரூ.2000 கோடியினை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்தார். இவற்றில் முதற்கட்டமாக 5000 சாலைப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான நிவாரண மையங்கள் மற்றும் மையங்களில் தங்குபவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை தயார்நிலையில் உள்ளது.
வடகிழக்குப் பருவமழை
மழையின் காரணமாக விழும் மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் வகையில் மர அறுவை இயந்திரங்கள், மழைநீர் தேங்கினால் அவற்றை அகற்றும் வகையில் 700 க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் ஆகியவை தயார்நிலையில் உள்ளது. நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட்டு மழைநீர் எளிதில் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையிலும், பொதுமக்களும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, ‘’சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து மாதவரம் பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் சரக்குந்து முனையத்திற்கு ரூ.30.30 கோடிக்கான காசோலையும் மற்றும் அதேபேல் சென்னையில் சிறுசிறு தெருக்களில் இருக்கின்ற குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கு மிகுந்த பயனுள்ள இயந்திரமான பாப்கேட் என்று சொல்லக்கூடிய இயந்திரத்தை வாங்குவதற்காக ரூ.12.75 கோடி மதிப்பீட்டில் 51 பாப்கேட் ஸ்கிட் ஸ்டீர் லோடர்கள் (51 Bobcat Skid Steer Loaders) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து மொத்தம் ரூ.43.05 கோடிக்கான காசோலைகள் இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது’’ என்றார்.
The post ’’பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்..! அமைச்சர் கே.என்.நேரு first appeared on Madras Murasu.
]]>The post ’’ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் ஆசைத்தம்பி..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>13.10.2023 அன்று சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற கழகத்தின் மூத்த முன்னோடி வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
‘வாலிபப் பெரியார்’ என்று போற்றப்படும் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவை மிகக் குறுகிய காலத்தில் எழுச்சியுடனும், ஏற்றத்துடனும் இதை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அமைச்சர் சேகர்பாபு -க்கு முதலில் தலைமைக் கழகத்தின் சார்பில் என் நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
யாரும் கணக்குப் போடாத காலத்தில்…
இந்த நூற்றாண்டு விழாவை, ஒரு நிகழ்ச்சியாக மட்டும் நடத்தாமல், புகைப்படக் கண்காட்சியையும், அடுத்து ஆசைத்தம்பி அவர்களுடைய வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு சிறு ஆவணப்படத்தையும் தயாரித்து வழங்கக்கூடிய ஒரு பன்முக விழாவாக இதை நடத்திக் கொண்டிருக்கிறார். எதற்காக கழக முன்னோடிகளைப் போற்றும் இத்தகைய விழாக்களை நடத்துகிறோம்? என்றால், அண்ணன் துரைமுருகன் அவர்கள் எடுத்துச் சொன்னது போல, அவர்களது புகழைப் பரப்புவதற்காக மட்டுமா நடத்துகிறோம்? இல்லை… வரக்கூடிய காலக்கட்டத்தில் வருங்கால சமுதாயத்திலும் ஆற்றல்மிக்க ஆசைத்தம்பிகள் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற விழாக்களை நடத்துகிறோம்!
நீதிக்கட்சியின் தலைவர்!
‘ஒருகாலம் வரும்… சட்டமன்ற உறுப்பினராக ஆவோம்; நாடாளுமன்ற உறுப்பினராக ஆவோம்…’ என்றெல்லாம் யாரும் கணக்குப் போடாத காலத்தில், திராவிட இயக்கத் தூணாக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் நம்முடைய ஆசைத்தம்பி அவர்கள்.
நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞர் அவர்களின் சம காலத்தவரான அண்ணன் ஆசைத்தம்பி அவர்கள், தலைவர் கலைஞரைவிட ஐந்து மாதம் இளையவர்.
1938-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களை, இந்தி எதிர்ப்புப் போராட்டம் திருவாரூர் வீதியில் தமிழ்க் கொடி தாங்கி போராட வைத்தது. அதே ஆண்டில் திராவிட இயக்க எண்ணத்தால் தீவிரமாக உருவானவர்தான் நம்முடைய ஆசைத்தம்பி. அவருடைய தந்தையார் பழனியப்பன், விருதுநகர் மாவட்டத்தில் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.
திராவிட நாடு – சி.பா. ஆதித்தனார்!
விருதுநகர் என்பதே நீதிக்கட்சியின் கோட்டையாக இருந்த நகரம்! அங்கிருந்து உருவானவர்தான் நம்முடைய ஆசைதம்பி அவர்கள். பள்ளிப்பருவ காலத்திலேயே திராவிட இயக்க மாணவர்களை இணைத்து சங்கம் தொடங்கி பல்வேறு அமைப்புகளைத் உருவாக்கி, மேடைகளில் சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.
பேரறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு – சி.பா. ஆதித்தனார் நடத்திய தமிழன் போன்ற இதழ்களில் இளமைக் காலத்திலேயே எழுதத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பிற்காலத்தில் ‘தனி அரசு’ என்ற இதழை அவர் நடத்தினார். முதலில் வார இதழாக வெளிவந்து கொண்டிருந்தாலும், அதற்கு பிறகு சில ஆண்டுகள் நாளிதழாகவும் வந்திருக்கிறது. ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் தினத்தந்தி’ என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது ஆசைத்தம்பியின் தனியரசு நாளிதழ்.
பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞரைப் போல ஏராளமான கதைகள் – நாவல்கள் எழுதியிருக்கிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட கதை நூல்கள் எழுதி இருக்கிறார். கதைகளில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியவர் அவர்.
தலைவர் கலைஞர் திரைக்கதை – வசனம் எழுதிய ’பராசக்தி’ திரைப்படம் எத்தகைய தாக்கத்தை நமது தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படுத்தியதோ அதை அனைவரும் தெளிவாக அறிந்திருக்கக் கூடியவர்கள். அந்த பராசக்தி கதையில் வரும் பாத்திரங்களை வைத்தே ‘கசந்த கரும்பு’ என்ற கதையை எழுதியவர் ஆசைத்தம்பி.
திராவிடர்கள்
திராவிடர் இயக்கம் ஏன்?
தனியரசு ஏன்?
காந்தியார் சாந்தியடைய… போன்ற பல்வேறு கட்டுரைகளை அவர் அந்தக் காலக்கட்டத்தில் எழுதி திராவிட இயக்கத்தவர்களுக்கு உணர்வூட்டிய படைப்புக்களை படைத்திருக்கிறார்! அதிலும் குறிப்பாக ‘காந்தியார் சாந்தியடைய’ என்ற புத்தகம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணல் காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட வேதனையில் எழுதப்பட்ட மிகச்சிறிய புத்தகம் அது. கோட்சே என்ற கொடியவனை – மனதில் இருக்கும் மதவாதத்தைக் கண்டித்து அந்த நூல் எழுதப்பட்டது. இந்த புத்தகம் வகுப்புவாதத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லி அந்த நூலை அன்றைய அரசு தடை செய்தது.
50 ரூபாய் நிதி!
ஆசைத்தம்பியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையும் – 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், அன்றைய தினம் கழகத்தின் அமைப்புக்குழுச் செயலாளராக இருந்த மதிப்பிற்குரிய என்.வி.நடராசன் அவர்களிடம் இந்த வழக்கை கண்காணிக்கும் பொறுப்பை அவரிடத்தில் ஒப்படைத்தார். வழக்கு நடத்துவதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக நிதி திரட்டும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வந்தன. அதில் முதல் ஆளாக 50 ரூபாய் நிதி வழங்கினார் பேரறிஞர் அண்ணா.
ஆசைத்தம்பிக்கு பிணை கிடைத்தது. ஜாமின் கிடைத்தது. சிறையில் இருந்து அவரை விடுவிப்பதற்கு முன்னதாக அவரை கட்டாயப்படுத்தி அவருக்கு மொட்டை அடித்து, கொடுமைப்படுத்தியது சிறைத்துறை. நிர்வாணம் ஆக்கினார்கள். பின்னர் கட்டிக் கொள்ள கோவணம் தரப்பட்டது. துறையூரைச் சேர்ந்த புத்தக வெளியீட்டாளர்களான தங்கவேல், கலியபெருமாள் ஆகியோருடன் சேர்த்து ஆசைத்தம்பிக்கும் மொட்டை அடிக்கப்பட்டது.
சிறைச்சாலை என்ன செய்யும்?
இது கழகத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் அனைவருடைய மனதில் ஒரு வேகத்தை, கோபத்தை, ஆத்திரத்தை உண்டாக்கியது. மொட்டை அடிக்கப்பட்ட இந்த மூவர் படத்தையும் பேரறிஞர் அண்ணா, தனது திராவிடநாடு இதழில் வெளியிட்டார். கண்காட்சியில் இது இடம் பெற்றிருக்கிறது. இதை பார்த்தால் தெரியும். நாடு முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அண்ணா அவர்கள் உத்தரவிட்டார். கோவில்பட்டியில் நடந்த கழக செயற்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்செங்கோட்டில் நடந்த கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசினார், ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற சுந்தராம்பாள் பாட்டை பாடிக் காட்டினார். பாடி விட்டு, சிறைச்சாலை என்ன செய்யும் தெரியுமா? மொட்டை அடிக்கும் என்று முழங்கினார்.
அந்தக் காலத்தில் திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்ட புத்தகங்கள் ஏராளமாக தடை செய்யப்பட்டன. தந்தை பெரியாரின் பொன்மொழிகள் என்ற நூல் தடை செய்யப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் ஆரியமாயை தடை செய்யப்பட்டது. புலவர் குழந்தையின் இராவண காவியம் தடை செய்யப்பட்டது. கலைஞரின் நாடகங்கள் – நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டன.
புத்தகங்களைப் படித்தார்கள்!
அந்த வரிசையில் ஆசைத்தம்பி அவர்களின் ‘காந்தியார் சாந்தியடைய’ என்ற நூலும் தடை செய்யப்பட்டது. கழகத்தைச் சேர்ந்த அனைவர்க்கும் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கட்டளையை பிறப்பித்தார். ‘எந்த புத்தகத்தை தடை செய்கிறார்களோ – அந்த புத்தகத்தை பொது இடத்தில் தெருவிளக்கு கம்பத்தின் கீழ் நின்று கொண்டு கூட்டமாக படியுங்கள்’ என்று அண்ணா கட்டளையிட்டார்.
கூட்டம் கூட்டமாக நமது தொண்டர்கள், அந்த புத்தகங்களைப் படித்தார்கள். இலங்கையில் இந்த புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டார்கள். மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். இது இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அப்போது, சென்னை வண்ணாரப்பேட்டையில் எஸ்.சி.மணி, பி.மணி, ராஜா ஆகிய மூன்று கழகத் தொண்டர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள்.
பேரறிஞர் அண்ணாவின் ஆரியமாயை நூலையும், ஆசைத்தம்பியின் ‘காந்தியார் சாந்தியடைய’ நூலையும் விற்றார்கள் என்று கைது செய்யப்பட்டார்கள். வண்ணாரப்பேட்டையில் நின்றுகொண்டு அஞ்சாமல் முழக்கம் போட்டுள்ளார்கள் இந்த மூவரும். அத்தகைய வண்ணாரப்பேட்டையை உள்ளடக்கிய வடசென்னைப் பகுதியில்தான் இன்றைய தினம் ஆசைத்தம்பிக்கு நூற்றாண்டு விழாவை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி!
அவருடைய புத்தகம் விற்றதால், 1950-ஆம் ஆண்டு கைது செய்தார்கள். ஆட்சிக்கு வந்து அதே பகுதியில் அவருக்கு நூற்றாண்டு விழாவை இன்றைக்கு நாம் கம்பீரத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி!
திராவிட இயக்கத் தோழர்களுக்குக் கிடைத்திருக்கும் பெருமை! இத்தகைய அடக்குமுறையைப் பற்றியோ, கைது செய்யப்படுவதைப் பற்றியோ, சிறைச்சாலை சித்திரவதைகள் பற்றியோ ஆசைத்தம்பி எந்தக் காலத்திலும் கவலைப்பட்டவரல்ல!
மிசாவில் எங்களோடு ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். எண்ணிப் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக, சென்னை சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தார்கள் என்று சொன்னால், அதில் எதற்கும் அஞ்சாமல் ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருந்த நம்பர்-1 கைதி யார் என்று கேட்டால் ஆசைத்தம்பி தான். நான் இப்போதும் சொல்கிறேன், தைரியமாக சொல்கிறேன். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். நாங்கள் எல்லாம் சிறைக்கு புதிது. எங்களைப் போன்றோர் சிறைக்கு புதிது. எங்களுக்கெல்லாம் தைரியம் ஊட்டியவர். சிறை என்றால் என்ன என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர். அவரிடத்தில் பல பேர் சென்று கேட்பார்கள். எப்போது விடுவிப்பார்கள்? கவலைப்படாதீர்கள், 1 year, 1 year என்று சொல்வார். அவ்வளவு கூலாக சொல்வார். அவரைப்போல ஒரு ஜென்டில்மேனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்.
‘திராவிடர் கழகம்’
கணக்குப் போட்டு பார்த்தேன், மொத்தம் 24 முறை, இனம் –மொழி –நாடு காக்கப்போராடி சிறை சென்றவர் நம்முடைய ஆசைத்தம்பி. எப்போதுமே தனது மனதில் பட்டதை அப்படியே யாருக்கும் பயப்படாமல், வெளிப்படையாக எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் பேசுபவர்தான் ஆசைத்தம்பி -க்கு உண்டு.
இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், அன்றைய நீதிக்கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்பதையும் மேடைகளில் பேசி இருக்கிறார். பேரறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் ‘ஜஸ்டிஸ் கட்சிக்கு புதிய அமைப்பு வேண்டும்’ என்று 1943-ஆம் ஆண்டு கட்டுரை தீட்டியவரும் ஆசைத்தம்பி. இதை வைத்துப் பார்த்தால் ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைத்தவரே ஆசைத்தம்பி தான் என்றுகூட சொல்லலாம். அங்கே அண்ணன் திருநாவுக்கரசு உட்கார்ந்திருக்கிறார். நம்முடைய திராவிட இயக்கத்தின் எடுத்தாளர். முரசொலியில் இரண்டு நாட்களாக ஆசைத் தம்பி-யைப் பற்றி தொடர் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் எல்லாம் இடம் பெற்றிருக்கிறது. 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியபோது, தலைவர் கலைஞர் பொறுப்பு வகித்த கழகப் பிரச்சாரக் குழுவில் உறுப்பினராக ஆசைத்தம்பி இடம் பெற்றார்.
இரண்டு அமைச்சர்களை தோற்கடித்தவர்!
விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக தனது மக்கள் பணியைத் தொடங்கினார். கழகம் முதன்முதலாகப் தேர்தல் களத்தில் நின்றபோது 1957-ஆம் ஆண்டு நின்றபோது சட்டமன்றத் தேர்தலில் நாம் 15 தொகுதிகளை வென்றோம். அந்த 15 பேரில் ஒருவர்தான் ஆசைத்தம்பி. ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆயிரம் விளக்கில் பின்னாளில் நான் சட்டமன்ற உறுப்பினராக வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன், அதுதான் எனக்கு பெருமை.
1967-ல் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இதில் என்ன சிறப்பு என்றால், இரண்டு தேர்தலிலும் அந்தக் காலத்தில் செல்வாக்காக இருந்த இரண்டு அமைச்சர்களை தோற்கடித்தவர் ஆசைத்தம்பி. ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்ற அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் வெங்கடசாமி போட்டியிட்டார். அவரை ஆசைத்தம்பி தோற்கடித்தார். அதே போல் எழும்பூர் தொகுதியில், அன்றைய அமைச்சர் ஜோதி வெங்கடாசலம் அவரை எதிர்த்து நின்று அவரையும் தோற்கடித்தார்.
பெரியார் இயக்கம்!
அதற்கு பிறகு 1977-ல் நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் ஒரே ஒருவர் தான், ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு, ஆசைத்தம்பி வடசென்னையிலிருந்து வெற்றி பெற்றார். கழகத்தில் ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் அண்ணன் ஆசைத்தம்பி. அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். நாடாளுமன்றத்தில் இறுதி உரையாற்றும்போது, கடைசியாக, நிறைவாக உரையாற்றும்போது, “இந்தியாவை ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக மாற்றிவிடாதீர்கள்” என்று முழங்கியவர் ஆசைத்தம்பி. அப்போதே முழங்கியிருக்கிறார். “ஒற்றை மொழி – ஒற்றை மத நாடாக மாற்றிவிடாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்தார். அவரது நாடாளுமன்ற உரைகளில் இன்னொன்றையும் வலியுறுத்தி இருக்கிறார். “தமிழ்நாடு இந்தளவுக்கு விழிப்புணர்வு பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம், பெரியார் இயக்கம்! எனவே, வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உங்கள் மாநிலங்களில் பெரியார் இயக்கத்தை உடனே தொடங்குங்கள்!” என்றும் ஆசைத்தம்பி அங்கே பேசி இருக்கிறார்.
தி.மு.க.வில் இருந்தாலும் தி.க-வின் மீது அதிகமான பற்றுக் கொண்டவர் ஆசைத்தம்பி அவர்கள். தி.மு.க. – தி.க. ஆகிய இரண்டு இயக்கங்களும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்தி, கைது செய்யப்பட்டு அத்தனை பேரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
‘வாலிப பெரியார்’
காலையில் அனைத்து கைதிகளையும் நிற்க வைப்பார்கள், Superintendent வந்து செக் செய்வார். தி.மு.க.வினர் தனியாகவும் – தி.க.வினர் தனியாகவும் நின்றுள்ளார்கள். அப்போது கலைஞர் அவர்கள் கேட்கிறார், ஏன் இப்படி பிரிந்து பிரிந்து நிற்கிறீர்கள் என்று ஆசிரியர் வீரமணி கேட்டுள்ளார். “ஜெயிலர்தான் நிற்கச் சொன்னார்” என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார். “ஆசைத்தம்பி எங்கே நிற்கிறார்?” என்று தலைவர் கலைஞர் கேட்டிருக்கிறார். திராவிடர் கழக வரிசையில் நின்று கையை தூக்கி இங்கே இருக்கிறேன் என்று ஆசைத்தம்பி சொல்கிறார். அந்தளவுக்கு பெரியார்வாதியாக இருந்ததால்தான், அவர் இன்றைக்கு ‘வாலிப பெரியார்’ என்று அவர் அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆசைத்தம்பி அவர்களின் திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் நடத்தி வைத்தார். அவரது மகள் காந்தி திருமணத்தையும் தந்தை பெரியார்தான் நடத்தி வைத்தார். மகன் செளந்தரபாண்டியன் திருமணத்தை தலைவர் கலைஞர் நடத்தி வைத்தார்.
கலைஞர் கதறினார்!
திராவிடக் கோட்டையின் தலைமைத் தளபதியாக இருந்தவர் அவர். அத்தகைய ஆசைத்தம்பியை நாம் அந்தமானில் இழந்தோம். அந்தமானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கழகக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது களைப்பாக இருக்கிறது – கண்ணைக் கட்டுவது போல இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். மூளையில் இரத்தக் குழாய் வெடித்து அங்கேயே இறந்தும் போனார். அவரது உடலை அங்கிருந்து எடுத்து வருவதற்கே பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அவரது உடலைப் பார்த்து தலைவர் கலைஞர் கதறினார். ஏனென்றால் தனது இறுதி உரையில் அந்தமானில் பேசுகிறபோது, கலைஞர் சார்பில் உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றுதான் பேசி இருக்கிறார் ஆசைத்தம்பி.
தனது இறுதி உரையில், ‘திராவிட இயக்கம் துவங்காமல் போயிருந்தால் கேட்பாரற்ற அனாதைகளாக ஆகியிருப்போம்’ என்று சொன்னவர் ஆசைத்தம்பி அவர்கள். இதுதான் அவரது மரண சாசனம்! அந்தக் கூட்டத்தில், அந்தமானில் இருக்கக்கூடிய கழகத் தோழர்கள் ஆசைத்தம்பியை பலரும் புகழ்ந்து பேசினார்.
நின்று காத்தவர் ஆசைத்தம்பி!
இறுதியாக அவர் சொன்னார்: “இவை எதுவும் எனக்கு கிடைத்த புகழ் அல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் இருப்பதால் கிடைத்த பெருமை!” என்று சொன்னவர் ஆசைத்தம்பி.
கழகத்தின் ஒவ்வொரு பொறுப்பாளர்களும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான சொற்கள் இவை! ஆசைத்தம்பி பற்றி நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் சொல்கின்றபோது, “கலைஞரின் நெஞ்சில் வேல்பாய்ந்தால் அந்த வேலை எடுத்து எதிரியின் நெஞ்சிலே பாய்ச்சும் வீரம் கலைஞருக்கு உண்டு. கலைஞரின் முதுகில் யாராவது வேல் பாய்ச்சிவிடக் கூடாது என்பதற்காக, நின்று காத்தவர் நம்முடைய ஆசைத்தம்பி” என்று சொன்னார்.
இதுதான் ஒவ்வொரு தொண்டருக்குமான இலக்கணம்! ஆசைத்தம்பி மறைந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் உருக்கமாக எழுதினார்கள்.
“என் அன்பே! ஆசைத்தம்பி! நீ மறையவில்லை. மறைய மாட்டாய். உன்னையும் உன் உறுதியையும் நாங்கள் மறக்க மாட்டோம்” – என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள்!
ஆசைத்தம்பியை நாம் மறக்கவில்லை; அவரது உறுதியை மறக்கவும் முடியாது என்பதன் அடையாளமாகத்தான் இந்த நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ‘வாலிபப் பெரியார்’ ஆசைத்தம்பி அவர்களின் புகழ் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! என்று கூறி விடைபெறுகிறேன்.
நன்றி! வணக்கம்.
The post ’’ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் ஆசைத்தம்பி..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>