acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ”சென்னையில் நடைபெற்ற ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023..!” அமைச்சர் அனுராக் தாக்கூர் first appeared on Madras Murasu.
]]>ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி, சென்னை 2023 போட்டி 2023 ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, கொரியா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன.
விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் சென்னை மிகச் சிறந்து விளங்குவதாகவும், தங்கள் அரசு கூட்டாட்சி முறையை நம்புவதாகவும், இது விளையாட்டிலும் பொருந்தும் என்றும் அவர் கூறினார். அனைவரது ஒத்துழைப்பும் சேர்ந்து இந்த நிகழ்வை மிகப்பெரிய அளவில் வெற்றியடையச் செய்யும் எனவும், அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இந்தியாவில் இருந்து நல்ல நினைவுகளுடன் திரும்பிச் செல்வர் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்குப் பிறகு, டெல்லி, சண்டிகர், கவுகாத்தி, பாட்னா, புவனேஸ்வர், ராஞ்சி, பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களுக்கும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் கோப்பை எடுத்துச் செல்லப்படவுள்ளது.
The post ”சென்னையில் நடைபெற்ற ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023..!” அமைச்சர் அனுராக் தாக்கூர் first appeared on Madras Murasu.
]]>The post ”பணம் கொட்டும் தொழில்கள்..!” சென்னையில் ஜுன் 26-ம் தேதி வழிகாட்டி முகாம் first appeared on Madras Murasu.
]]>மேற்கண்ட முகாம் காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.
முதற்கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு:
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் எண்: 044-22252081, 22252082, 7418304939
The post ”பணம் கொட்டும் தொழில்கள்..!” சென்னையில் ஜுன் 26-ம் தேதி வழிகாட்டி முகாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’பேரழிவால் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது..!’’ உள்த்துறை அமைச்சர் அமித்ஷா first appeared on Madras Murasu.
]]>மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை அமைச்சர்களுடன் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஜூன் 13- ம் தேதி ஆலோசனை நடத்தினார். 2047-ம் ஆண்டு அடிப்படையிலான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, பேரழிவைத் தாங்கக்கூடிய வல்லமை கொண்ட நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கில் நாட்டில் பேரழிவு அபாயக் குறைப்பு முறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் அது குறித்து விவாதிக்கும் நோக்கிலும் இன்றைய (13-06-2023) கூட்டம் நடைபெற்றது.
நாட்டில் பேரிடர் மேலாண்மை தொடர்பாக ரூ.8,000 கோடி மதிப்பிலான மூன்று முக்கியத் திட்டங்களை இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அறிவித்தார்:
1. மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்தவும், நவீனப்படுத்தவும் ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டம்.
2) மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய ஏழு அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள அபாயத்தைக் குறைக்க ரூ.2,500 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்படும்.
3. 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலச்சரிவு ஆபத்தைத் தணிப்பதற்காக தேசிய நிலச்சரிவு அபாய தணிப்புத் திட்டம் ரூ. 825 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
ஆகிய முக்கிய அறிவிப்புகளை உள்துறை அமைச்சர் வெளியிட்டார்.

பேரழிவால் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கை எனவும் இந்த இலக்கை அடைவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் திரு அமித் ஷா கூறினார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் பேரிடர் மேலாண்மையில் பல மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஆனால் நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று கூறினார். பேரழிவுகளின் தன்மை மாறிவிட்டதாகவும் தற்போது அவற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இவற்றைச் சமாளிக்க தயார்நிலையை நாம் மேலும் அதிகரித்து விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
கொவிட் -19 தொற்றுபாதிப்பு, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டில் 220 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டதையும், கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 9 ஆண்டுகளில், பேரிடர் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள், தயார்நிலை அடிப்படையிலான பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் புதிய அணுகுமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதிக ஆபத்துகளை எதிர்கொள்ளக் கூடிய 350 மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் இளைஞர் தன்னார்வலர்களை தயார்படுத்துவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

2005-06 முதல் 2013-14 வரையிலான 9 ஆண்டுகளையும், 2014-15 முதல் 2022-23 வரையிலான 9 ஆண்டுகளையும் ஒப்பிடுகையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். முந்தைய 9 ஆண்டுகளில் ரூ.35,858 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தற்போது அது ரூ.1,04,704 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரூ.354 கோடி செலவில் குறுஞ்செய்தி மூலம் பொது எச்சரிக்கை வழங்கும் நடைமுறையை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பேரிடர் மேலாண்மைத் துறையில் பங்களித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் வெள்ளத் தடுப்பு மற்றும் மேலாண்மைக்காக வடகிழக்கு மாநிலங்களில் 271 சதுப்பு நிலங்கள் இஸ்ரோவால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். முந்தைய காலங்களில், இந்திய வானிலை ஆய்வு மையம் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் மழை மற்றும் வெள்ளம் குறித்து மூன்று நாட்கள் முன்கூட்டியே முன்னறிவிப்பு அளித்து வந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், இப்போது 5 நாட்களுக்கு முன்பே அந்த முன்னறிவிப்புகள் வெளியிடப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இது தயார் நிலைக்கு கூடுதல் கால அவகாசத்தை வழங்குகிறது என்று கூறிய அவர், அடுத்த ஆண்டுக்குள் 7 நாட்களுக்கு முன்பே முன்னெச்சரிக்கைத் தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வெள்ளம் ஏற்படக்கூடிய 13 முக்கிய நதிகளின் கரைகளில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருநிலை மாற்ற அமைச்சகம் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக உள்துறை அமைச்சர் கூறினார்.
8 மாநிலங்களில் உள்ள 87 மாவட்டங்களில் மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிக்கும் பணிகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகக் கூறிய அவர் அதை விரைவில் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மின்னல் காரணமாக உயிர்கள் எதுவும் பறிபோகாத வகையில் மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கடும் குளிர் மற்றும் மூடுபனி போன்றவை குறித்த மாநில அளவிலான செயல் திட்டத்தை மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
இக்கூட்டத்தில், பேரிடர் தடுப்பு முன்னேற்பாடு, அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு, முன் எச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நிதியைப் பயன்படுத்துதல், மாநில பேரிடர் மீட்புப் படைகள் (எஸ்.டி.எம்.ஏ), மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (எஸ்.டி.எம்.ஏ), மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை நியமித்தல் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், பேரிடர் மேலாண்மைத் துறையின் மூத்த அதிகாரிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ’’பேரழிவால் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது..!’’ உள்த்துறை அமைச்சர் அமித்ஷா first appeared on Madras Murasu.
]]>