Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#செந்தில்பாலாஜி - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Wed, 12 Jul 2023 11:47:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’ஆதாரம் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும்..!’’ மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/#respond Wed, 12 Jul 2023 11:47:34 +0000 https://madrasmurasu.com/?p=5054 ஒருவர் குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே அம லாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உள்ளது. விசாரணை நடத்தி, அதன்பிறகு ஆதாரத்தை திரட்டும் புலனாய்வு அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்படவில்லை என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தனது வாதத்தை முன்வைத்துள்ளார். அதேபோல, சோதனை நடத்தி பறிமுதல் செய்வதற்குத்தான் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, காவலில் எடுத்து விசாரிப்ப தற்கும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் என்று கபில் சிபல் கூறியுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் […]

The post ’’ஆதாரம் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும்..!’’ மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் first appeared on Madras Murasu.

]]>
ஒருவர் குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே அம லாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உள்ளது. விசாரணை நடத்தி, அதன்பிறகு ஆதாரத்தை திரட்டும் புலனாய்வு அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்படவில்லை என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தனது வாதத்தை முன்வைத்துள்ளார். அதேபோல, சோதனை நடத்தி பறிமுதல் செய்வதற்குத்தான் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, காவலில் எடுத்து விசாரிப்ப தற்கும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் என்று கபில் சிபல் கூறியுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை, விசாரித்த நீதிபதி ஜெ. நிஷா பானு, நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்புக்களை வழங்கிய தால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அதன்படி மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் செவ்வாயன்று வழக்கை விசாரித்தார்.

இந்த விசாரணையின்போது, “எந்த ஆவணமும் இல்லாதபோது அமலாக்கத் துறைக்கு எங்கிருந்து ஆதாரம் கிடைத்தது? எந்த ஆதாரமும் இல்லாத போது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்தது எப்படி? செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை நிலையில்தான் உள்ளது. நீதிமன்ற காவ லில் வைக்க நீதிமன்றத் துக்கு அதிகாரம் உள்ள போது ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்கும்படி அம லாக்கத்துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?” என்று இரண்டு தரப்பிற்கும் கேள்வி களை முன்வைத்தார். அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தில்லியிலிருந்தபடியே, காணொலி மூலம் ஆஜராகி வாதாடினார். அப்போது, செந்தில் பாலாஜியை அம லாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டார்.

“ஒருவர் குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே அம லாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டின் அடிப்ப டையில், அவர் பெற்ற பணத்தை மறைத்து வைத்திருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டம் பிரிவு 19-இன்படி, குற்றம் புரிந்துள்ளார் என நம்பு வதற்கான காரணங்களும், ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே அமலாக்கப்பிரிவு துணை இயக்குநர், உதவி இயக்குநர் கைது நடவடிக்கை எடுக்கலாம். கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரங்களை சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கைதுக்கான காரணங்களை தெரிவித்து நீதிமன்ற காவலில் வைக்க கோரலாம். ஆனால், இந்த வழக்கில், கைதுக்கான காரணத்தை அமலாக்கத்துறையினர் தெரியப்படுத்தவில்லை. கைதுக்கான எந்த ஆதாரமும் இல்லை. எதற்காக கைது செய்கிறோம் என்ற விவரங்களை அவரது உறவினர்களுக்குக் கூட தெரியப்படுத்தவில்லை.

இந்த வழக்கில் 2 கேள்விகள் எழுகின்றன. ஒன்று கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? மற்றொன்று இந்த ஆட் கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? என்பது. இதில், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என ஆணித்தரமாக கூறுகிறேன்” என்று கபில் சிபல் தனது வாதங்களை அடுக்கினார். அப்போது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் குறுக்கிட்டு, “பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பிரிவு 19-இன் படி, கைது செய்யும் அதி காரம் அமலாக்கத் துறைக்கு உள்ளபோது, அதை இல்லை என்கிறீர்களா? அல்லது காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு, “’சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது’ என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது” என்பதை சுட்டிக் காட்டிய கபில் சிபல், “இந்த வழக்கை பொருத்த மட்டில், ஏற்கனவே, செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில், போலீஸ் அதிகாரிகள் போல, அமலாக்கத் துறையினர் செயல்பட முடியாது. சட்டப்படி சம்மன் அனுப்ப அவர்களுக்கு அதிகாரம் இல்லை. சட்டப் பிரிவு 17, 18- ன்படி அவர்கள் சோதனை செய்து பறிமுதல் செய்ய தான் அதிகாரம் உள்ளது. கைது செய்து காவ லில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை” என்று கூறினார்.

“நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜியை விடுதலை செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா?” என்ற நீதி பதி சி.வி. கார்த்திகேயனின் அடுத்த கேள்விக்கும் பதிலளித்த கபில் சிபல், “நீதிமன்ற காவலில் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை” என்றார். “அப்படியானால், கைது செய்வதற்கு முன்பு வரை வைத்துள்ள ஆதாரங்களே போதுமானது. கைதுக்கு பின், மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை என்கிறீர்களா?” என்ற மற்றொரு கேள்வியை நீதிபதி முன்வைத்தார்.

அதற்கு “ஆமாம்” என்று கூறிய கபில் சிபல், “செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்கு சேர்க்க அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர் நீதிமன்ற காவலில் தொடர வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், மறுநாள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்தது குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கி றது. குற்றம் சாட்டப்பட்ட எவரும் நீதிமன்ற நடை முறைகளை விரக்தியடையச் செய்ய முடியாது என அமலாக்கத் துறை, அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தது தவறானது. கிரிமினல் நடை முறைச் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. சி.ஆர்.பி.சி சட்டத்தின் படி, அதிகாரத்தை எடுக்க அமலாக்கத்துறைக்குத்தான் அதிகாரமில்லை.

அமலாக்கத்துறை என்பது போலீஸ் கிடையாது. அவர்களுக்கு இருக்கும் கைது அதிகாரம் என்பது வேறு மாதிரியானது. மணி லாண்டரி செய்து இருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும். மணி லாண்டரி என்பது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது. அதாவது அழுக்கு துணியை மிஷி னில் போட்டு துவைப்பது போன்றது. பொதுவாக போலீஸ் ஒருவரை விசாரிக்கிறது என்றால், அந்த நபரைக் குற்றம் செய்தவராக கருதினாலே போதும். அவரை கைது செய்ய முடியும். அதன்பிறகு ஆதாரத்தை கண்டுபிடிக்க அவரை விசாரிக்க முடியும். ஆனால் அமலாக்கத்துறை, தனது விசாரணைக்காக ஒருவரைக் கைது செய்ய வேண்டும் என்றால், அதற்கு முதலில் ஆதாரம் வேண்டும். கைக்கு ஆதாரம் வந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஆதாரத்தை திரட்டுவதற்காக ஒருவரை கைது செய்து, அதன்பின் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் கிடையாது. அதுமட்டுமல்ல, செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு வரை என்ன ஆதாரங்கள் இருந்ததோ, அதனை மட்டுமே அவர்கள் நீதிமன்றத்தில் பயன்படுத்த முடியும். கைது செய் யப்பட்ட பின், கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை நீதிமன்றத்தில் பயன்படுத்தவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை” என்று கபில் சிபல் விளக்கினார்.

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத் துறை, அதை ஏன் அமல்படுத்தவில்லை? அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் விசாரிக்க முடிய வில்லை என்றால், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடாதது ஏன்? என்றும் கபில் சிபல் கேள்விகளை எழுப்பினார். கபில் சிபலைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவும் தனது வாதங்களை எடுத்து வைத்தார்.

செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற விசாரணையின்போது, அமலாக்கத்துறை தரப்பு ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகவில்லை. அவர் புதன்கிழமையன்று தனது வாதங்களை எடுத்து வைக்க உள்ளார். இதனிடையே, செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்தால் அல்லது இடையீட்டு மனு தாக்கல் செய்தால் தங்கள் தரப்பின் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப் பிக்கக்கூடாது என அமலாக்கத்துறையினர் திடீரென உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை செவ்வாயன்று தாக்கல் செய்துள்ளனர்.

The post ’’ஆதாரம் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும்..!’’ மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/feed/ 0
’’செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு..!’’ அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%258e%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4/#respond Tue, 20 Jun 2023 07:06:33 +0000 https://madrasmurasu.com/?p=4226 சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, நெஞ்சு வலி ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பைபாஸ் அறு வைச் சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதன்படி செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21 அன்று அறுவைச் சிகிச்சை செய்வதென காவேரி மருத்துவ மனை திட்டமிட்டுள்ளது. இதற்கு அனு மதி அளித்துள்ள […]

The post ’’செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு..!’’ அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு first appeared on Madras Murasu.

]]>
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, நெஞ்சு வலி ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பைபாஸ் அறு வைச் சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதன்படி செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21 அன்று அறுவைச் சிகிச்சை செய்வதென காவேரி மருத்துவ மனை திட்டமிட்டுள்ளது. இதற்கு அனு மதி அளித்துள்ள சென்னை உயர் நீதி மன்றம், சிகிச்சைக்கு இடையூறு இல்லாமல், மருத்துவர்களின் ஆலோசனை அடிப்படையில், மருத்துவ மனை வளாகத்திற்கு உள்ளேயே செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

ஆனால், செந்தில் பாலாஜியை தங்கள் இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யவும் வலியுறுத்தி, அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு, மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜென ரல் துஷார் மேத்தா, இம்மனுவை உட னடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

“சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது தவறு. அவர் ஓர் அதிகாரமிக்க அமைச்சர் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி யிருந்தோம். அது நிராகரிக்கப்பட்டது.

மேலும், அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் 8 நாட்கள் மருத்துவ மனைக்கு வெளியே அழைத்து செல் லாமல் அங்கேயே வைத்து விசா ரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்றா கும். எனவே, செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.

மேலும், உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு இன்றே விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். ஆனால், இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறை கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ‘அமலாக்கத்துறை மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். ஆனால், இது கோடைக்கால சிறப்பு அமர்வு என்பதால், அவசர வழக்காக எடுத்து உடனே விசாரிக்க முடியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெற்று, நாளை அல்லது நாளை மறுநாள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று நீதிபதிகள் கூறி விட்டனர்.

The post ’’செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு..!’’ அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4/feed/ 0
’’அழிவின் காலம் முன் வருவது மதிகேடு..!’’ பீட்டர் அல்போன்ஸ் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81/#respond Wed, 14 Jun 2023 05:25:26 +0000 https://madrasmurasu.com/?p=3843 தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இந்நிலையில், சென்னையில் […]

The post ’’அழிவின் காலம் முன் வருவது மதிகேடு..!’’ பீட்டர் அல்போன்ஸ் first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்தனர். அமைச்சரின் இல்லத்திற்கு வழக்கறிஞர்கள், திமுக தொண்டர்கள் வந்திருப்பதால் பரபரப்பான சூழல் நிலவியது. விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் அமலாக்கத்துறையினர் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு சிறுபாண்மை ஆணையத்தின் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸ் சமூக வலைத்தள பதிவு:

தமிழக அரசின் தலைமை செயலகத்தில் வருவாய் புலனாய்வு துறையினர் ஒன்றிய அரசின் ஆயுதம் தாங்கிய காவலர்களோடு வந்து சோதனை செய்வது பல எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும்.

அதைப்போல ஒன்றிய அரசின் ஆளுகைக்குள் இருக்கும் வளாகங்களில் மாநில அரசின் காவல்துறையும் சோதனைகளை நடத்த முடியும்.

வரும் ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் நடக்க இருக்கும் எதிர்கட்சி தலைவர்களது கூட்டத்தை நினைத்து அரண்டுபோயிருக்கும் டெல்லி பாதுஷாக்கள் எதிர்கட்சித் தலைவர்களை மிரட்டி பயமுறுத்தும் திட்டத்தின் ஒருபகுதிதான் இந்த சோதனை என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.

இதற்கெல்லாம் முதலமைச்சர் பயப்படுவார் என சங்கிகள் நினைத்தால், அய்யோ பாவம் அவர்கள் ஏமாந்துபோவது நிச்சயம்.

வில்லின் நாண் முறுக்கேற முறுக்கேற அம்பின் வேகமும், வீச்சும் அதிகரிக்கும் என்பதை விரைவில் அறிவார்கள்.

அழிவின் காலம் முன் வருவது மதிகேடு.

The post ’’அழிவின் காலம் முன் வருவது மதிகேடு..!’’ பீட்டர் அல்போன்ஸ் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81/feed/ 0