Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#சுப்ரமணியன் #சுப்பிரமணியன் #மருத்துவமனை #ஆஸ்பத்திரி #சுகாதார்ம் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Thu, 18 May 2023 05:00:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’அரசு மருத்துவமனைகளில் அவசியத் தேவைகள்..!’’ அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போடும் பட்டியல் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85/#respond Thu, 18 May 2023 05:00:11 +0000 https://madrasmurasu.com/?p=2050 தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை மே 16 அன்று, மாதர் சங்கத் தலைவர்கள் சந்தித்து, தமிழ்நாடு முழுவதும் 26 மாவட்டங்களில் நடத்திய சுகாதார ஆய்வு விபரங்கள், மாவட்டங்களில் முன்னுக்கு வந்த கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை அளித்தனர். ஏப்ரல் 7 உலக சுகாதார தினத்தையொட்டி தமிழகத்தின் 25 மாவட்டங்களில், 186 ஆரம்ப சுகாதார நிலை யங்கள், 13 துணை சுகாதார நிலையங்கள், 35 அரசு மருத்துவமனைகள், 6 மகப்பேறு மருத்துவமனைகள், 7 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் […]

The post ’அரசு மருத்துவமனைகளில் அவசியத் தேவைகள்..!’’ அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போடும் பட்டியல் first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை மே 16 அன்று, மாதர் சங்கத் தலைவர்கள் சந்தித்து, தமிழ்நாடு முழுவதும் 26 மாவட்டங்களில் நடத்திய சுகாதார ஆய்வு விபரங்கள், மாவட்டங்களில் முன்னுக்கு வந்த கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை அளித்தனர்.

ஏப்ரல் 7 உலக சுகாதார தினத்தையொட்டி தமிழகத்தின் 25 மாவட்டங்களில், 186 ஆரம்ப சுகாதார நிலை யங்கள், 13 துணை சுகாதார நிலையங்கள், 35 அரசு மருத்துவமனைகள், 6 மகப்பேறு மருத்துவமனைகள், 7 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆய்வு மேற் கொண்டனர். பொதுவாக ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தினம்தோறும் சுமார் 200 முதல் 350 பேர் சிகிச்சைக்கு வருவதாகவும், ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்வதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்

25 மாவட்டங்களில் உள்ள 186 ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்ததில், பகல் 2 மணிக்கு மேல் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் பணியில் இருப்பதில்லை. இதனால் அவசர சிகிச்சைக்கு 10 முதல் 20 கிலோமீட்டர் பயணம் செய்து நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சி டி, எம் ஆர் ஐ, எக்கோ, தைராய்டு ,இசிஜி போன்ற கருவிகள் இல்லாததால் வெளியில் வேறு மருத்துவமனையில் செலவழித்து பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி யுள்ளது. ஒவ்வொரு பரிசோதனைக்கும் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவாகிறது மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துக ளில் சிரப் (Syrup)போன்ற மருந்துகளும் ,விலை உயர்ந்த மருந்துகளும் அங்கு கிடைப்பதில்லை . வெளியில் பணம் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. நச்சு முறிவு மருந்துகள் போதுமானதாக இருப்பில் இல்லை.

ரத்தம், சிறுநீர், சளி பரிசோதனை செய்யும் கூடம் இல்லை .வெளியில் அனுப்பி முடிவை பெற வேண்டி உள்ளதால், மூன்றிலிருந்து நான்கு நாட்கள் என காலதாமதம் ஆகிறது. ஆக்சிஜன், ரத்தம் அவசரத்திற்கு கிடைப்பது இல்லை. ஜெனரேட்டர்கள் இல்லை. இருக்கும் மருத்துவமனைகளில் அவை வேலை செய்யும் நிலை யில் இல்லை. பிரசவ நேரத்திலும், மழைக்காலத்தி லும் இது மிகப் பெரிய சிரமத்தை தருகிறது. வீல் சேர் ஏற்பாடு இல்லை. கழிப்பிட வசதியும், தண்ணீர் வசதியும் அவசியம் தேவை என நோயாளிகள் கூறியுள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் அவசரத்திற்கு கிடைக்கா ததால், ரூ.2 ஆயிரம் வரை செலவழித்து அவசர சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு நோயாளி கள் செல்கிறார்கள். F கர்ப்பிணி பெண்களுக்கான சலுகை, சத்துணவு, குழந்தைகளுக்கான கிட் கிடைப்பதில் பெரும்பாலும் காலதாமதம் ஆகிறது. பிறப்பு சான்றிதழ் பெறுவதில் காலதாமதம் உள்ளது.

சரியான கட்டிடங்கள் இல்லாமல், மோசமான கட்டிடங்களில் சுகாதார நிலையங்கள் இயங்கு கின்றன. பெண் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஓய்வறைகள் இல்லை. குறிப்பாக -திருப்பூர் புளியங்குளம் பகுதியில் திறந்து 4 மாதங்கள் ஆன பிறகும், ஆரம்ப சுகாதார நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு இன்னமும் கொண்டு வரப்படவில்லை.

சமுதாய நலக் கூடத்தில் இயங்கும் சுகாதார நிலையம்

திண்டுக்கல் கோவிலூர், பெருமாள் கோயில் காலனி சுகாதார நிலையம் கட்டிட வசதி இல்லாத தால் சமுதாய நலக் கூடத்தில் இயங்கி வருகிறது. திண்டுக்கல் கோபால்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை முன் எழுந்துள்ளது.

சென்னையில் செயல்படும் நகர சுகாதார நிலை யங்கள் பலவற்றில் சுகாதார ஆய்வாளர்கள் இல்லை. மதுரை புறநகர் செக்கானூரணியில் ஒரே மருத்து வர் ஒரே அறையில் ஆண் -பெண் நோயாளிகளை ஒன்றாக பரிசோதிக்கிறார். பெண் நோயாளிகளை பரிசோதிக்க தனி அறை அவசியம்.

நெல்லை முக்கூடல் சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் அமர இடம், இருக்கைகள் முற்றிலு மாக இல்லை. மதுரை புறநகரில் நோயாளிகளிடம் மருத்துவ ஊழியர்கள் கனிவாக நடந்து கொள்ளவில்லை என்கின்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வட்டார மருத்துவமனைகளில் இரவு நேரத்தில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருப்பதாக நோயாளிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கோரிக்கைகள்

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன், இசிஜி, எக்கோ, தைராய்டு பரி சோதனைகள் வசதிக்கான கருவிகள், ஆப்ரேட்டர்கள் வேண்டும்.
போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், நிரந்தர ஊழியர்களுடன் சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கிட வேண்டும்.

பல் மருத்துவர், குழந்தை மருத்துவர், எலும்பு சிகிச்சைக்கான மருத்துவர் போன்ற சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்திட வேண்டும். அரசு நில திட்டங்கள் முழுமையாக எளிதாக கிடைத்திட வேண்டும் . -திருப்பாப்புலியூரில் 108 ஆம்புலன்ஸ் வேண்டும். அவசர சிகிச்சை பிரிவு உரிய வசதிகளுடன், உபகரணங்களுடன் இயங்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் வெளிச்சமான இடங்களில் அமைந்திருக்க வேண்டும் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் போது மான விளக்குவசதிகள் அமைத்திட வேண்டும்.

13 துணை சுகாதார நிலையங்களை ஆய்வு செய்த தில், ஈரோடு கடம்பூர் சுகாதார நிலையத்தில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி மருத்துவமனையாக அதை தரம் உயர்த்திட வேண்டும் என்கிற கோரிக்கையும், பொதுவாக திண்டுக்கல், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்திட வேண்டும். சிடி ஸ்கேன் உட்பட அனைத்து அடிப்படை கருவிகளும் கொண்ட தாக மருத்துவமனைகளை மேம்படுத்திட வேண்டும். மருத்துவர்கள் எண்ணிக்கையை கூடுதலாக்கிட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளும் முன்னெ ழுந்துள்ளன.

அரசு மருத்துவமனைகள்

35 வட்டார, மாவட்ட தலைமை மருத்துவமனை களில் ஆய்வு மேற்கொண்டதில், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலி யர்கள் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், காத்தி ருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதால், நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் உருவாகிறது. ஆனால் அதற்கான இருக்கைகளோ, அமர்வதற்கு இடவசதியோ மருத்துவமனைகளில் இல்லை.

கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள் சிரமப் படுகின்றனர். நீண்ட நேரம் வரிசையில் நிற்கின்ற அவலம் பல மருத்துவமனைகளில் உள்ளது. 15 வரு டங்களுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்களாகவே மருத்துவ ஊழியர்கள் உள்ளனர். அவர்களை நிரந்தர ஊழியர்களாக அங்கீகரித்திட வேண்டும் என்று பல மாவட்ட மருத்துவமனைகளில் கோரிக்கையாக வந்துள்ளது. குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், காவலர்கள் போன் றோரை நிரந்தர ஊழியர்களாக மாற்றிட வேண்டும்.

நாகையில் மகப்பேறு பிரிவில் கர்ப்பிணிப் பெண்கள் காத்திருக்கும் அறையில் அமரும் வசதி வேண்டும். திண்டுக்கல், நாகையில் பெண் மருத்துவர்கள் கூடுதலாக்கப்பட வேண்டும். நாகையில் எக்ஸ்-ரே (X-ray) தனியாரிடம் உள்ளதால் சிரமம் உள்ளது.

மருத்துவர்கள்

நீலகிரி கூடலூர் அரசு மருத்துவமனையில் மகப் பேறு மருத்துவர் இல்லாததால், பிரசவ நேரத்தில் 50 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியதாக உள்ளது. குமரி அருமனை மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் நியமனம் செய்திட வேண்டும். -திரு வள்ளூர், திருப்பூர், நாகை, தஞ்சை, சேலம் போன்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தலைக் காய சிகிச்சைப் பிரிவு, இதய சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை ,நரம்பு சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, முடக்கியல் சிகிச்சை, மயக்கவியல் சிகிச்சை போன்ற வற்றிற்கு சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படாமல் உள்ளதால், இந்நோய்க்கு தனியார் மருத்துவ மனைகளை நாடி நோயாளிகள் செல்ல வேண்டியுள்ளது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை வசதி இல்லை. பொன்னேரி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் ஒரு பிணத்திற்கு மேல் அங்கு வைக்க இடம் இல்லை. திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிண வறையில் ஊழியர்களின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது
.
கோவை அரசு மருத்துவமனைகளில் ரேடியால ஜிஸ்ட், டெர்மடாலஜிஸ்ட், டென்டல் சர்ஜன்ஸ் உட னடியாக நியமனம் செய்திட வேண்டும். மருத்துவர், செவிலியர், ஊழியர் உட்பட அனைத்து வசதிகளு டனும் தனிப் பிரிவுகள் அமைத்திட வேண்டும் .திருப்பூர் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பற்றாக்குறை உள்ளது. F திண்டுக்கல் கோவிலூர், சித்தையகோட்டை, வத்தலகுண்டு மருத்துவமனைகளில் மருந்தாளு நர்கள் பற்றாக்குறை உள்ளது.

உறுப்பு மாற்று சிகிச்சைத் துறை’

தேனி அரசு மருத்துவமனையில் தலைக் காய சிகிச்சைப் பிரிவு, உறுப்பு மாற்று சிகிச்சை (Trans plantation) துறை துவக்கப்பட வேண்டும். சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்திட வேண்டும். சிறப்பு மருத்துவர்கள் இங்கு இல்லாத தால் நோயாளிகளை மதுரைக்கு அனுப்பும் ஏற்பாடு என்பது உள்ளது. பொதுவாக வட்டார அரசு மருத்துவமனைகளில் சி.டி ஸ்கேன் உள்ளது. ஆனால் எம்ஆர்ஐ இல்லை. ரத்த வங்கி இல்லை.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு செயல்படாத நிலையில் உள்ளது. தூத்துக்குடி உடன்குடி மருத்துவமனையில் 2016 முதலே மகப்பேறு மருத்துவர் இல்லாமல் செயல் பட்டு கொண்டுள்ளது.
தூத்துக்குடி காளன் குடியிருப்பு மருத்துவ மனையை உடன்குடி மருத்துவமனை என பெயர் மாற்றி, தரம் உயர்த்திட வேண்டும்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 17 மருத் துவர்கள் இருக்க வேண்டியதில், 5 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மருத்துவமனை ஊழி யர்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தான் ஊதியம் வழங்கப்படுகிறது. வடசென்னை ,தென் சென்னையில் உள்ள மண்டல மருத்துவமனைகளில் ஸ்கேன், இசிஜி எக்கோ ,தைராய்டு கோவிட் உட்பட அனைத்து பரிசோத னைகளும் வெளியில் எடுக்க சொல்கிறார்கள். இதனால் நோயாளிகள் கூடுதலாக செலவழிக்க வேண்டிய தேவை உள்ளது. Fதிருவாரூர் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவு துவங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வந்துள்ளது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்

கோவை மருத்துவமனையில் படுக்கை வசதி குறைவாக இருப்பதால், நோயாளிகளை நிர்ப்பந்தப்படுத்தி வெளியேற்றுகிறார்கள். அட்டெண் டர் இல்லாமல் வருபவர்களுக்கு எவ்வளவு அவசர சிகிச்சை தேவை என்றாலும் கூட அங்கு சிகிச்சை மறுக்கப்படுகிறது. மருத்துவர்கள் பற்றாக்குறை, உபகரணங்கள் இல்லை. பிரசவத்திற்கு லஞ்சம் தாராளமாக கேட்கப்படுகிறது. தீக்காயம் பிரிவில் குளிர்சாதன வசதி இல்லை. தூத்துக்குடி மருத்துவமனையில் எம்ஆர்ஐ வசதி இல்லாததால் வெளியே எடுக்க அனுப்புகிறார்கள்.

புற்று நோய்க்கான மருந்து, கீமோதெரபி (Che motherapy) போன்ற சிகிச்சைக்கு கூடுதல் செலவா கிறது. இரண்டு பெண் குழந்தைகள் திட்டம் தாமத மாக வழங்கப்படுகிறது. திண்டுக்கல், நீலகிரி, கரூர், சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் உடனடி யாக நியமனம் செய்ய வேண்டி உள்ளது. இதய சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகம், மயக்கவியல் துறைகளில் கூடுதல் மருத்துவர் பணியிடங்கள் காலி யாகவே உள்ளது.
சிவகங்கை மருத்துவமனையில் நோயாளிகளை மரியாதை குறைவாக நடத்துவதை தவிர்த்திட வேண்டும் என்கின்ற கோரிக்கை வந்துள்ளது.
மகப்பேறு மருத்துவமனைகள் ‘

சிவகங்கை மருத்துவமனையில் சுகப்பிரசவம் மட்டுமே பார்க்கப்படுகிறது . அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய பிரசவங்களை வெளியே மதுரை மருத்துவமனைக்கு அனுப்பும் ஏற்பாடு என்பது இங்கு நடந்து வருகிறது. மகப்பேறு மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படு கிறது. மகப்பேறு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கான திட்டம், குழந்தைகளுக்கான கிட் உடனடியாக கிடைத்திட வேண்டும். 24 மணி நேரமும் ஸ்கேன், இசிஜி ,எக்கோ, ரத்தம் டெஸ்ட் போன்ற சோதனை செய்யும் வசதிகள், அனைத்து மருத்துவமனைகளிலும் இருந்திட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வந்துள்ளன.

மேற்கண்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

The post ’அரசு மருத்துவமனைகளில் அவசியத் தேவைகள்..!’’ அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போடும் பட்டியல் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85/feed/ 0