acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ”சுதந்திர தினம் உணர்த்தும் சுதந்திர நினைவுகள்..!” first appeared on Madras Murasu.
]]>நாம் அனைவரும் எல்லாவற்றிலும் சுதந்திரம் வேண்டுமென நினைப்போம். சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும், சுற்றுலா செல்ல வேண்டும், வாழ வேண்டும் என்று நாம் இன்று நினைக்க 1947 – ஆம் ஆண்டிற்கு முன்பு இந்த பூமியில் வாழ்வதற்கே சுதந்திரம் இல்லாமல் ஆங்கிலேயருக்கு அடிமையாய் வாழ்ந்துள்ளர்கள் நம் இந்தியர்கள்.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வருகை:
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் மிகவும் வளமாகவும் செல்வ செழிப்பாகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருந்தது தான் நம் இந்திய நாடு. வர்த்தகம் செய்வதற்காகவும் கிறித்தவ மதத்தை பரப்புவதற்காகவும் இந்தியாவில் ஆகஸ்ட் 24 ந் தேதி 1608 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வருகை தந்தார்கள்.
பின் மெதுவாக அவர்களின் கலை மற்றும் கலாச்சாரத்தின் விதையை இந்தியாவில் விதைத்தார்கள். ஆங்கிலேயர்களின் பொருளாதாரமும், ஆயுதப் படையும் அவர்களை 1757 ஆம் ஆண்டு இந்தியாவை அடிமைப்படுத்த செய்தது.
இந்தியத் தலைவர்களின் அகிம்சை யுத்தம்:
ஆங்கிலேயர்களின் அடிமையில் இருந்து தப்பித்து இன்று நாம் சுவாசிக்கின்ற சுதந்திர காற்றிற்கு மரங்களாக நின்று பல்வேறு தலைவர்கள் உதவியுள்ளார்கள்.
இன்றைய சுதந்திர தினத்தன்று நமக்காக யுத்தம் செய்து சுதந்திரம் பெற்றுத் தந்த தலைவர்களை நினைவில் நிறுத்துவோம்.
மகாத்மா காந்தி:
இந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் இவர் இந்தியாவிலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை துவங்கினார்.
யுத்தம் என்றாலே ஆயுதங்கள் கொண்டு இரு தரப்பிலும் பல இழப்புகளை பெற்று பின்னரே வெற்றி பெறுவார்கள் வீரர்கள். முதன்முதலில் “அகிம்சை யுத்தம்” என்பதை தொடங்கி எந்த ஆயுதங்களும் இல்லாமல் விடுதலையை வெற்றியாக பெற்ற முதல் வீரர் நம் மகாத்மா காந்தி அவர்கள் தான்.
டாக்டர் அம்பேத்கர்:
இந்திய அரசியலமைப்பின் தந்தை என கூறப்படும் இவர் தான் சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சர். உயர்ந்தோருக்கும் தாழ்ந்தோருக்கும் உள்ள சுவரை உடைத்து அனைவரும் சமம் என தன் சட்டப் புத்தகத்தின் மூலம் அனைவருக்கும் போதித்தார்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத்:
இவர் நம் குடியரசு இந்தியாவின் முதல் ஜனாதிபதியும் பீகார் மாநிலத்தின் முதல் தலைவரும் ஆவார்.
சர்தார் வல்லபாய் பட்டேல்:
இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக சட்ட மறுப்பு இயக்கத்திலும் (civil disobedience movement), இந்தியாவிலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் (Quit India Movement) பெரும் பங்களிப்பை அளித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு:
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவஹர்லால் நேரு 1916 – ஆம் ஆண்டு அன்னி பெசண்ட் தலைமையில் தன்னாட்சி இயக்கத்தில் (Home Rule Movement) பங்கேற்றார். உப்பு சத்யா கிரஹ போராட்டத்திலும் பங்கேற்றார். இவரது லட்சியமே இந்தியா முழு சுதந்திரம் பெற வேண்டும் என்பது தான்.
சுபாஷ் சந்திரபோஸ்:
அனைவராலும் நேதாஜி என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்படும் இவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் தீவிர பிரிவில் சேர்ந்தவர். இவர் ஒரு தீவிர தேசியவாதி ஆவார். நேரு அவர்களை போலவே இவரது லட்சியமும் இந்தியாவின் முழு சுதந்திரம் தான்.
பகத் சிங்:
ஷாஹித் பகத் சிங் என்றழைக்கப்படும் இவர் தீவிர சுதந்திர உணர்வுடைய இந்தியன்.
மங்கள் பாண்டே:
இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக தொடர்ச்சியாக விடாமல் குரல் கொடுத்துள்ளார். அதனால் இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய முதல் போர் வீரர் என போற்றப்படுகிறார்.
வீரபாண்டிய கட்டபொம்மன்:
ஆங்கிலேயர்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து குரல் குடுத்தவர். இவரை ஆங்கிலேயர்கள் சிறைப்பிடித்து தூக்கிலிட்டனர். ராணி கைந்தின்லியு, பிங்களி வெங்கையா, பகத் கான், லாலா லாஜ்பட் ராய், தாதா பாய் நரோஜி, சேத்ரம் ஜாதவ், பஹாதூர் ஷா ஜாஃபர், அசஃப் அலி, மன்மத் நாத் குப்தா, திருப்பூர் குமரன், சித்தரஞ்சன் தாஸ், ஷ்யாம் ஜி கிருஷ்ணா வர்மா, பால கங்காதர திலக், விநாயக் தாமோதர் சாவர்க்கர் போன்ற எண்ணற்ற தலைவர்களும் இந்திய மக்களும் சுதந்திரத்திற்காக பங்களித்து நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்துள்ளனர்.
இந்திய சுதந்திரமும் வீர மங்கைகளும்:
நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தாலும் பெண்களுக்கு இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற கவலை பல பெண்களுக்கு உண்டு. ஆனால் அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ளவில்லை. நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன் வாழ்ந்த பல பெண்கள் தங்களுக்கு மட்டுமல்ல நாட்டிற்கே சுதந்திரத்தை வீரமுடன் போராடி பெற்று தந்துள்ளனர்.
ராணி லக்ஷ்மி பாய்:
வாரணாசியில் பிறந்து ஜான்சியின் ரானியான இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பெரும் போராட்டம் செய்துள்ளார். பல பெண்களுக்கு தன் உரிமைக்காக போராடுவதற்கு கற்றுக் கொடுத்துள்ளார். 1858 – ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் தன் ராஜ்ஜியத்தை முற்றுகையிட்ட பொழுது தன் கைக் குழந்தையுடன் போருக்கு சென்ற வீர மங்கை இவர்.
சரோஜினி நாயுடு:
‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என அழைக்கப்படும் இவர் ஒரு சுதந்திர போராளியும், சிறந்த பேச்சாளரும் ஆவார். இவர் “வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக” வாதாடினார்.
பேகம் ஹஜ்ரத் மஹால்:
இவர் இந்தியாவின் முதல் சுதந்திர போரில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவரை கௌரவிப்பதற்காக இந்திய அரசு 1984 – ஆம் ஆண்டு இவருக்காக முத்திரை வெளியிட்டது.
அன்னி பெசண்ட்:
இவர் காங்கிரஸின் முதல் பெண் ஜனாதிபதி ஆவார். இவர் 1916 ஆம் ஆண்டு தன்னாட்சி இயக்கத்தை (Indian Home Rule Movement) உருவாக்கியவர். “நியூ இந்தியா” நாளிதழை உருவாக்கியவர்.
இவர்களை போலவே கஸ்தூரி பாய் காந்தி, கமலா நேரு, அருணா அசப் அலி, மேடம் பிகாஜி காமா, விஜயா லக்ஷ்மி பண்டிட் போன்ற பல பெண் வீராங்கனைகள் சுதந்திரத்திற்காக போராடியதை நாம் என்றும் நினைவில் கொள்ளவேண்டும்.
சுதந்திரத்திற்கு முன்பு நம் இந்தியர்களால் எதிலும் உரிமை கொண்டாட முடியாது. அவர்களுக்கு கல்வி கற்க்கும் உரிமையும் கிடையாது. சுதந்திரத்திற்கு பின்னரே இவை அனைத்தும் கிடைத்தது. இருப்பினும் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சற்று பின் தங்கி இருப்பதால் வளர்ந்து வரும் நாடாக இந்தியா இருக்கிறது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆசைப்படி வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெறுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிக்கலாமே!……
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
– கோ. தீபா புவனேஸ்வரி
The post ”சுதந்திர தினம் உணர்த்தும் சுதந்திர நினைவுகள்..!” first appeared on Madras Murasu.
]]>The post “ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம்” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>குமரிக் கடல் முதல் இமயப் பெருமலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை ஆகும். அப்போது வாழ்ந்த முப்பது கோடி மக்களும் நாட்டு விடுதலைக்காகப் போராடியதன் விளைவே 1947 ஆகஸ்ட் 15 அன்று கிடைத்த வெற்றிச் செய்தி. இன்று, நாம் இந்தியத் திருநாட்டின் 77-ஆவது விடுதலை நாளைக் கொண்டாடுகிறோம் என்றால், இதற்காகத் தியாகம் செய்த அனைவரது போராட்டத்துக்கும் தலைவணக்கம் செலுத்தவே! போராடிப் பெற்ற விடுதலையை எந்நாளும், எச்சூழலிலும் போற்றிப் பாதுகாப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.
விடுதலை அடைவதற்கு முன்பே, ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்று அனைவரையும் பாடச் சொன்னார் மகாகவி பாரதியார். விடுதலை பெற்ற இந்தியாவானது, அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் இந்தியாவாகத்தான் இருக்கும் என்று அந்தத் தமிழ்க்கவி கனவு கண்டார். நாட்டின் 77 ஆவது விடுதலை நாளைக் கொண்டாடும் நேரத்தில், சில நாட்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி, நம் முன்னோர் தம் இன்னுயிர் ஈந்து நமக்களித்த விடுதலை, எல்லோருக்குமானதா அல்லது வசதி படைத்த வெகு சிலருக்கானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை விலைமதிப்பில்லா பல மாணவச் செல்வங்களின் உயிர்களை, நீட் தேர்வு முறை காரணமாக தமிழ்நாட்டில் நாம் இழந்திருக்கிறோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மீகக் கேள்விகள், நமது மனச்சாட்சியை உலுக்கி வருகிறது.
ஆனால், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோரின் கனவுகளை, எதிர்கால நல்வாய்ப்புகளை இழந்து வரும் நிலையை உணர மறுத்து, தமிழ்நாட்டு ஆளுநர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார். ‘நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்’ என்று பொதுவெளியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது தமிழ்நாட்டு மாணவர்களையும், இளைஞர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வரும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றிப் பேசுகிறார்.
தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளோர், தமிழர் உயிர் துறப்பதைக் கண்டு கலங்குவர். ஆனால், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள், ‘அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை’ என்பது போல உள்ளது. இந்த நிலை மாறவே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டம் இயற்றி, தமிழ்நாடு அரசு, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள், இதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, இன்று (14-8-2023) கடிதம் அனுப்புகிறேன்.
ஆளுநர் அவர்கள், அரசியல் ரீதியாக திராவிடம், ஆரியம், திமுக, திருவள்ளுவர், வள்ளலார், சனாதனம் பற்றிப் பேசி வருவதை நாங்கள் மதிக்கவில்லை.
அது கபட வேடம் என்பதை அறிந்தே இருக்கிறோம்; ஆரியப் புலம்பலாக ஒதுக்கித் தள்ளுகிறோம். ஆனால், ஏழை எளிய, விளிம்பு நிலை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை அப்படித்தான் சிதைப்பேன் என்று நியமனப் பதவியில் இருக்கும் ஒரு ஆளுநர் கொக்கரிப்பார் என்றால், இது கல்வித் துறை மீது நடத்தப்படும் சதியாகவே கருதுகிறோம். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த மாநிலத்திற்கு, இந்த ஆண்டு வந்து, அடுத்த ஆண்டு செல்பவர்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காக என்றென்றும் உரிமைக் குரலை எழுப்பும் ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும் – உயர் கல்வித் துறையைக் குழப்பியும் – தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும் – இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
The post “ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம்” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ’’முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றும் கொடிக்கம்பத்தின் வரலாறு தெரியுமா..!’’ first appeared on Madras Murasu.
]]>The post ’’முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றும் கொடிக்கம்பத்தின் வரலாறு தெரியுமா..!’’ first appeared on Madras Murasu.
]]>