Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#சிவ்தாஸ்மீனா - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 16 Oct 2023 04:07:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும்..!’ தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25b4%25e0%25af%2588%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588 https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/#respond Mon, 16 Oct 2023 04:07:26 +0000 https://madrasmurasu.com/?p=6866 பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு  மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக முடித்திட அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு  மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு […]

The post ’’மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும்..!’ தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா first appeared on Madras Murasu.

]]>
பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு  மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக முடித்திட அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு  மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, 14.10.2023 அன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம்-தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சி, தாம்பரம் சானடோரியம் ஜட்ஜ் காலனியில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 464 படுக்கைகளைக் கொண்ட பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிக்கான கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, கிழக்கு தாம்பரம், வார்டு-48க்குட்பட்ட காளிதாசர் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புர சாலைகள் உட்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ், ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் 1.25 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலையின் தரம் மற்றும் அதன் அளவீடுகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தின் அருகில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பருவமழைக்கு முன்னதாக முடித்திடவும், மழைநீர் வடிகாலுக்கான இணைப்பினை ஏற்படுத்திடவும், உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி பணிகளை மேற்கொள்ளவும் தலைமைச் செயலாளர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நீர்வளத்துறை
நீர்வளத்துறையின் சார்பில் மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட மாதவரம் ரெட்டேரியில் ரூ.43.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆழப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணியினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பார்வையிட்டு, ஏரியின் வடக்கு நீர் வெளியேற்றும் கதவணையினை ஆய்வு மேற்கொண்டு, பருவமழைக்கு முன்னதாக ஏரியில் கழிவுகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருவொற்றியூர் துறைமுகம்
பின்னர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் திருவொற்றியூர் துறைமுகத்தில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செவுள் வலை மற்றும் தூண்டில் மீன்பிடி விசைப்படகுகளுக்கென்று பிரத்யேகமாக கட்டப்பட்டு வரும் சூரை மீன்பிடி துறைமுகத்தின் கட்டுமானப் பணியினை தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டு, அங்கு அமைக்கப்படும் கடல் நீர் தடுப்பணைகள் மற்றும் மீன்பிடி படகுகள் கரையில் கட்டுமிடத்தினை ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை உரிய காலத்திற்குள் உரிய தரத்துடன் மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி
இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட எஸ்பிளனேடு சாலையில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் 463 மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினையும், பிரகாசம் சாலையில் ரூ.5.55 கோடி மதிப்பீட்டில் 1.11 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்  பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பருமழைக்கு முன்னதாக பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மழைநீர் வடிகால்களின் வண்டல் வடிகட்டித் தொட்டிகளை உரிய அளவீடுகளுடன் சுத்தம் செய்வதற்கு ஏதுவாக அமைத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நகர்ப்புர சாலை மேம்பாட்டுத் திட்டம்-2ன் கீழ், சென்னை காவல் ஆணையாளர் அலுவலக பக்கவாட்டில் உள்ள ஜோதி வெங்கடாசலம் சாலையில் ரூ.54.77 இலட்சம் மதிப்பீட்டில் 580 மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சாலையினைப் பார்வையிட்டு, அங்குள்ள மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்து, பக்கவாட்டில் நடைபாதையினை அமைத்திடவும் அறிவுறுத்தினார்.
மேலும், வார்டு-63க்குட்பட்ட பிளாக்கர்ஸ் சாலையில் ரூ.93 இலட்சம் மதிப்பீட்டில்
212 மீ. நீளத்தில் அமைக்ப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி பார்வையிட்டு, மின்சார கேபிள்கள் சேதமடையாமலும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் எச்சரிக்கையுடன் பணியாற்றிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மழைநீர் வழிந்தோடும் வகையிலும், உரிய கால்வாய் இணைப்புகளை ஏற்படுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நெடுஞ்சாலைத்துறை-மழைநீர் வடிகால்
நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் 650 மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 320 மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்றுள்ளது.  இதனைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் அவர்கள் மேலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்திடவும், வண்டல் வடிகட்டித் தொட்டியினை சீராக அமைத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
உயர்கல்வித்துறை – மாணவியருக்கான தங்கும் விடுதி
உயர்கல்வித்துறையின் சார்பில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில்
ரூ.53.10 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் 1. 34 இலட்சம் ச.அ. பரப்பளவில் புதிதாக கட்டப்பட உள்ள சென்னை பல்கலைக்கழக முதுநிலை மாணவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான தங்கும் விடுதிக்கான இடத்தினையும், கட்டட வரைபடத்தினையும் பார்வையிட்டு, பணியினை விரைவில் தொடங்கிட அறிவுறுத்தினார். இந்த விடுதியில் முதுநிலை மாணவிகளுக்கு 352 படுக்கைகள், ஆராய்ச்சியாளர்களுக்கு 134 படுக்கைகள் என மொத்தம் 486 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்த விடுதிக் கட்டடம் சமையலறை, உணவுக்கூடம், கழிப்பறை, மின்தூக்கி உள்ளிட்ட வசதிகளுடன் அமையப்பெற உள்ளது.

The post ’’மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும்..!’ தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/feed/ 0
’’குடிநீர் பிரச்னை : கலெக்டர்களுக்கு தலைமைச்செயலாளர் முக்கிய உத்தரவு..!’’ https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%86%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%2586%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%86%e0%ae%95/#respond Mon, 11 Sep 2023 05:27:33 +0000 https://madrasmurasu.com/?p=6234 அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களைத் தலைமைச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு: அண்மையில் தண்ணீர் மாசுபாடு […]

The post ’’குடிநீர் பிரச்னை : கலெக்டர்களுக்கு தலைமைச்செயலாளர் முக்கிய உத்தரவு..!’’ first appeared on Madras Murasu.

]]>
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களைத் தலைமைச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு:

அண்மையில் தண்ணீர் மாசுபாடு தொடர்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டவும் இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவும் விரும்புகிறேன். அசுத்தமான நீரை அருந்திய பலர் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; ஒருவர் உயிரிழக்கவும் நேரிட்டது.

கடந்த ஆண்டு, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 60 சதவீதம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புக் குழாய்களை (FHTC) அமைத்து, இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டது என இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. இத்தகைய வகையில் சிறந்து விளங்கிய நம் மாநிலத்தில், மாசுபாடான நீரை அருந்தியதால் குடிமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வருவது வருந்தத்தக்கது; இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக, குடிநீர் விநியோகம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களைத் தலைமைச் செயலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குடிமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் தொடர்பாகப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்:

i) சேதமடைந்த மற்றும் நீர்க் கசியும் குழாய்களை அடையாளம் கண்டு சரிசெய்தல்:
உரிய துறையினருடன் ஒன்றிணைந்து சேதமடைந்த மற்றும் நீர்க் கசியும் குழாய்களை உடனடியாகக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் விநியோக உள்கட்டமைப்பு சரியான முறையில் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

ii) மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பாதுகாப்பு: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் தரைமட்ட நீர்த்தேக்கங்களிலும் தேக்கிவைக்கப்படும் நீர் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் உறை அடுக்குகள் (cover slabs) அமைக்கப்பட்டிருப்பதையும் பராமரிப்பு அறைகளில் மூடிகள் பொருத்தப்பட்டிருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் மேல்நிலைத் தொட்டிகளும் தரைமட்ட நீர்த்தேக்கங்களும் உரிய முறையில் பாதுகாக்கப்படுவதையும், அத்துமீறல்கள் நடைபெறாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

iii) மாசுபாட்டுக்கான காரணங்களைக் கண்டறிதல்: குடிநீர்க் குழாய்கள், தொட்டிகள் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்கங்களில் நீர் மாசுபாடு அடைவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அதைச் சரிப்படுத்த வேண்டும். நீர் மாசுபாடு தொடர்பான அபாயங்களைக் களைவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

iv) உரிய வகையில் கிருமிநாசினி தெளித்து நீரைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல்:
மேல்நிலைத் தொட்டிகளிலும் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் தேக்கப்பட்டிருக்கும் நீரில் தேவையான அளவில் பிளீச்சிங் பவுடர் கலந்து நீரின் தரத்தைப் பராமரித்து நீரைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

v) குளோரின் கலத்தல்: நீரைச் சுத்தப்படுத்தப் போதுமான அளவு குளோரின் பொடி நீரில் கலப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குடிப்பதற்காக விநியோகிக்கப்படும் நீரில் கிருமிகள் எவையேனும் கலந்துவிடாத வகையில் நீரைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

vi) மேம்படுத்தப்பட்ட தரக் கண்காணிப்பு: பல்வேறு மூலங்களிலிருந்தும் தண்ணீர் மாதிரிகளை எடுத்து, அதை முறையான பரிசோதனைக்கு உட்படுத்தி நீரின் தரம் உரிய மட்டத்தில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய சோதனைகளை அதிக முறை நடத்தி தரமான கண்காணிப்பு முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

vii) களப்பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்துதல்: களப்பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு (SHG) உறுப்பினர்களை நீரின் தரத்தைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்குப் போதுமான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்; அவர்கள் தண்ணீர் மாதிரிகளை எடுத்துப் பரிசோதனை செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்; தண்ணீர் மாதிரிப் பரிசோதனைகளின் எண்ணிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும்.

viii) குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் ஒருங்கிணைப்பு:
தமிழ்நாடு நீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளுடன் ஒருங்கிணைந்து அதிகப்படியான நீர் மாதிரிகளைச் சேகரித்து, நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ix) தகவல், கல்வி மற்றும் தகவல்தொடர்பு (IEC) பரப்புரை: தண்ணீரின் தரம் குறித்தும், பாதுகாப்பான குடிநீரைப் பொது மக்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்.

x) குறைகளைத் தீர்க்கும் அமைப்பு: குடிநீரின் தரம் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் களையும்வகையில் ஒரு வலுவான குறை தீர்க்கும் அமைப்பை நிறுவுதல் வேண்டும். குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகாரளித்தால் அவை சரியான நேரத்தில் தீர்க்கப்படுகிறது என்ற நம்பிக்கை குடிமக்களுக்கு ஏற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்..!

மேலே குறிப்பிட்ட விரிவான நடவடிக்கைகள் அனைத்தையும் 30.09.2023 க்கு முன் நிறைவேற்றி முடிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான முன்னேற்றத்தையும் ஆக்கபூர்வமான விளைவுகளையும் கண்காணிக்க ஏதுவாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலருக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளருக்கும் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும்.

நமது குடிமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது; சுத்தமானதும் பாதுகாப்பானதுமான குடிநீரைப் பெறுவது அவர்களது அடிப்படை உரிமையாகும். இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் உங்களின் முன்முயற்சியான நடவடிக்கைகள் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதுடன், அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கான நாம் எத்தகைய உறுதிப்பாட்டுடன் செயல்படுகிறோம் என்பதையும் தெளிவுபடுத்தும்.

இந்த முக்கியமான விஷயத்தில் ஆட்சியர்களின் அர்ப்பணிப்பையும் விரைவான நடவடிக்கைகளையும் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள தலைமைச் செயலர், இது தொடர்பான மேல் நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

The post ’’குடிநீர் பிரச்னை : கலெக்டர்களுக்கு தலைமைச்செயலாளர் முக்கிய உத்தரவு..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%86%e0%ae%95/feed/ 0