Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#சிவராமன் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Wed, 18 Oct 2023 04:00:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’முதுகில் எவருக்கானதோவான தூக்குச்சட்டியை சுமந்து செல்பவனின் பசியை ’அநீதி’ நமக்குப் பரிமாறுகிறது..!’’ மருத்துவர் சிவராமன் https://madrasmurasu.com/6947-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6947-2 https://madrasmurasu.com/6947-2/#respond Wed, 18 Oct 2023 03:39:28 +0000 https://madrasmurasu.com/?p=6947 ஜி.வசந்த பாலன் இயக்கத்தில் அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஜுலை 21 அன்று வெளியானது. இந்த படம் பற்றி நிறைய பேர் விமர்சனம் எழுதியுள்ளனர். அச்சு ஊடகம், டிஜிட்டல் என்று பல்வேறு தளங்களில் விமர்சனங்கள் வநதுவிட்டன. இந்த  அனைவராலும் நன்கு அறியப்பெற்ற மருத்துவ கு.சிவராமன், தனது முகநூல் பக்கத்தில் ’அநிதி’ படம் குறித்து எழுதியுள்ளார். படியுங்கள். உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்கள். ‘’கைகளில் காதலைச் […]

The post ’’முதுகில் எவருக்கானதோவான தூக்குச்சட்டியை சுமந்து செல்பவனின் பசியை ’அநீதி’ நமக்குப் பரிமாறுகிறது..!’’ மருத்துவர் சிவராமன் first appeared on Madras Murasu.

]]>
ஜி.வசந்த பாலன் இயக்கத்தில் அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஜுலை 21 அன்று வெளியானது. இந்த படம் பற்றி நிறைய பேர் விமர்சனம் எழுதியுள்ளனர். அச்சு ஊடகம், டிஜிட்டல் என்று பல்வேறு தளங்களில் விமர்சனங்கள் வநதுவிட்டன. இந்த  அனைவராலும் நன்கு அறியப்பெற்ற மருத்துவ கு.சிவராமன், தனது முகநூல் பக்கத்தில் ’அநிதி’ படம் குறித்து எழுதியுள்ளார். படியுங்கள். உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்கள்.

‘’கைகளில் காதலைச் சொல்ல முடியும்
தோள்சாய்வதில் தொலைவதைச் சொல்லமுடியும்
கண்களில் வலியைச் சொல்ல முடியும்
கவியில் மலர்தலைச் சொல்ல முடியும்”

என பாலன் சக மனிதனின் வாழ்வைச் சொல்லியிருப்பது அநீதியில்!

மானுடத்தின் அநீதியில் இந்த மொத்த உலகமும் விக்கித்த நின்ற போது, சக மனிதனின் வாழ்வின் அநீதியை பாலன் சிந்தித்து படைத்துள்ளார். நடு இரவில், தன் முதுகில் எவருக்கானதோவான தூக்குச்சட்டியை சுமந்து செல்பவனின் பசியை அநீதி நமக்குப் பரிமாறுகிறது.

“எனக்குத் தெரியும் சுப்பு. அப்பவே தெரியும் சுப்பு.‘தூறலில் நனையாதே என்கிற குரலும் ; துவட்டிக்கொள்ள துண்டு கொடுக்கும் கைகளும்’ ஒருபோதும் முதலாளியுடையதாக இருக்கவே இருக்காது ” என்கிற அர்ஜுன்தாசின் கரகரத்த குரல் காட்சிப்படுகையில் அந்தப்பின்னிரவில் பிவீஆர் தியேட்டரின் தன் பகலெல்லாம் பணி செய்து தன் வலி நிறைந்த கைகளால், கைதட்டிக் கொண்டே என் பக்கத்து சீட்டு இளைஞன் கண்ணில் மட்டும் துளி கண்ணீர் ஒட்டி இருந்தது உண்மை.

கதவுக்கு அந்தப்பக்கம் “அவ்வளவுதானா?” என்ற ஒற்றைச் சொல்லில் வழிந்த காதலும் “ஏன் சுப்பு இப்டி பண்ணிட்டே?” ங்கிற இடத்தில் வழிந்த கண்ணீரும் அங்காடித் தெருவின் அழியாத ஞாபகங்கள்.

ஆம்! அநீதியின் அவலக் குரலில், மதயானைக் காட்டில், ஈசலின் இறக்கைக்கும் இருக்கைக்குமான இடத்தை வரைந்திருக்கின்றீர்கள் வசந்தபாலன் சார். வாழ்த்துக்கள்!

சாக்லேட்டின் நெகிழி உறையில் மட்டுமல்ல, படம்பார்த்து வெளிவரும் பலரின் மனசிலும் யாரோ எறிந்த மயோனைசும் கொஞ்சம் குருதியும் ஒட்டிக்கொண்டு இருந்தது.!

The post ’’முதுகில் எவருக்கானதோவான தூக்குச்சட்டியை சுமந்து செல்பவனின் பசியை ’அநீதி’ நமக்குப் பரிமாறுகிறது..!’’ மருத்துவர் சிவராமன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/6947-2/feed/ 0
”இது அரசு அதிகாரிகளுக்கும் மிகச் சிறந்த சிந்தனைத் திறப்பாக உள்ளது..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#respond Fri, 22 Sep 2023 08:02:11 +0000 https://madrasmurasu.com/?p=6490 முதலமைச்சரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (22.9.2023) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் நான்காவது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சியின் கொள்கை வகுப்புக்கு அடித்தளமாக இருக்கிற திட்டக் குழுவினருடன் கலந்துரையாடல் நடத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களோடு உரையாடுவது எனக்கு மனநிறைவாகவும் இருக்கிறது. ஏன், வழிகாட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. இந்த ஆட்சி செல்ல வேண்டிய பாதையையும், செல்லும் பாதை சரியானது தானா? என்பதையும் அறிவுறுத்தும் அமைப்பாக திட்டக்குழு மிகச் […]

The post ”இது அரசு அதிகாரிகளுக்கும் மிகச் சிறந்த சிந்தனைத் திறப்பாக உள்ளது..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
முதலமைச்சரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (22.9.2023) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் நான்காவது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுக ஆட்சியின் கொள்கை வகுப்புக்கு அடித்தளமாக இருக்கிற திட்டக் குழுவினருடன் கலந்துரையாடல் நடத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களோடு உரையாடுவது எனக்கு மனநிறைவாகவும் இருக்கிறது. ஏன், வழிகாட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.
இந்த ஆட்சி செல்ல வேண்டிய பாதையையும், செல்லும் பாதை சரியானது தானா? என்பதையும் அறிவுறுத்தும் அமைப்பாக திட்டக்குழு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக திட்டக்குழு துணை தலைவர் திரு.ஜெயரஞ்சன் அவர்களுக்கும், திட்டக்குழுவின் முழு நேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்களுக்கும், என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிலும் குறிப்பாக ஜெயரஞ்சன், அரசின் வழிகாட்டிகளில் ஒருவராகச் செயல்பட்டு வருகிறார். முக்கிய கொள்கைகளை வகுப்பதற்கு முனைப்புடன் வழிகாட்டுதல் வழங்குகிறீர்கள். முக்கியத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த துணை நிற்கிறீர்கள். அரசுக்கும் – மக்களுக்கும் இடைவெளி ஏற்பட்டுவிடாமல் – அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதற்கு திட்டக்குழு சீர்மிகு பணியாற்றி வருகிறது என திட்டக்குழுவின் தலைவர் என்ற முறையில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
சில முக்கியமான கொள்கைகளை வகுக்கும் பணி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மின் வாகன கொள்கை, 
தொழில் – 4.0 கொள்கை, 
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை, 
துணி நூல் கொள்கை, 
கைத்தறிக் கொள்கை, 
சுற்றுலாக் கொள்கை 
தமிழ்நாடு மருத்துவ உரிமைக் கொள்கை 
தமிழ்நாடு பாலின மாறுபாடு உடையோருக்கான நலக் கொள்கை – ஆகியவற்றைத் தயாரித்து நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள். 
கழிவு மேலாண்மை கொள்கை, 
தமிழ்நாட்டின் நிலையான நிலப் பயன்பாட்டுக் கொள்கை, 
நீர்வள ஆதாரக் கொள்கை, 
வேலைவாய்ப்பு மற்றும் திறன் கொள்கை, 
வீட்டு வசதிக் கொள்கை
என்பன போன்றவற்றையும் விரைந்து இறுதி செய்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
நான் மிக முக்கியமாகக் கருதுவது அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களுக்கு எந்த வகையில் பயனளித்து வருகிறது என்பது தொடர்பாக நீங்கள் தரும் ஆய்வறிக்கைகள் தான்.
மகளிருக்கு இலவச விடியல் பயணத் திட்டத்தை நாம் நிறைவேற்றினோம். இந்த திட்டத்தின் மூலமாக பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மாற்றங்கள், உயர்வுகள் என்னென்ன என்பதை திட்டக் குழு அறிக்கையாகக் கொடுத்த பிறகு தான் அந்த திட்டத்தின் விரிந்த பொருள் அனைவரையும் சென்றடைந்தது. மாதம் தோறும் 800 ரூபாய் முதல் 1200 வரை சேமிக்கிறார்கள் என்பதைவிட – பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது. சமூகத்தில் அவர்களது பங்களிப்பு அதிகமாகி இருக்கிறது. வேலைகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இதன் மூலமாக சமூக உற்பத்தியும் – உழைப்பும் உற்பத்திக் கருவிகளும் அதிகமாகி இருக்கிறது. இவை பற்றி எல்லாம் ஆங்கில ஊடகங்கள் அதிகமாக எழுதத் தொடங்கியது.
இல்லம் தேடிக் கல்வி என்பது கல்வியை பரவலாக்கவும், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பள்ளிக்குள் கொண்டு வரவும் பயன்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டமானது அனைவருக்கும் சுகாதாரம் என்பதை உறுதி செய்துள்ளது. வீட்டுக்கே அரசு செல்கிறது என்ற நிர்வாகப் பரவலாக்கல் நடந்துள்ளது. மருத்துவ உரிமை நிலைநாட்டப்பட்டு உள்ளது.
‘நான் முதல்வன்’ திட்டமானது – தமிழ்நாட்டு மாணவர்களை கல்வியில் – அறிவாற்றலில் – திறமையில் – தன்னம்பிக்கையில் சிறந்தவர்களாக மாற்றி வருகிறது. பத்து லட்சம் பேருக்கு என்று சொன்னோம். ஆனால் 13 லட்சம் பேருக்கு இந்த ஆண்டு பயிற்சி வழங்கி இருக்கிறோம். மிகப் பெரிய பயிற்சி நிறுவனங்கள் மூலமாக பல்லாயிரக்கணக்கில் பணம் கட்டி அறிந்து கொள்ள வேண்டிய திறமைகளை அரசு கட்டணமின்றி வழங்கி வருகிறது.
இதன் மூலம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 183 மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை இன்னும் எப்படி செழுமைப்படுத்தலாம் என நீங்கள் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
‘விடியல் பயணம் திட்டம்’, ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ ஆகியவை சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தியது என நீங்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
அதேபோல, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் தாக்கம் குறித்தும் நீங்கள் அறிக்கை வழங்க வேண்டும். ஒவ்வொரு திட்டத்தின் பயன்பாடு என்பதும் மிகமிக அதிகம். செலவினத்தின் அடிப்படையில் எந்தவொரு திட்டத்தையும் அளவிடாமல், பயன்பாட்டின் அடிப்படையில் அளவிட வேண்டும் என்பதை திட்டக்குழு வழிகாட்டி வருகிறது. இது அரசு அதிகாரிகளுக்கும் மிகச் சிறந்த சிந்தனைத் திறப்பாக உள்ளது.
இப்போது மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கி வருகிறோம்.
ஒவ்வொரு மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைப்பது எத்தகைய மகிழ்ச்சியை வழங்கி வருகிறது என்பதை ஊடகங்களில் வரும் செய்திகள் மூலமாக அறிகிறேன். அனைத்து ஊடகங்களும் பெண்களிடம் பேட்டிகள் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். பேட்டி அளிக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன்தான் பேட்டி தருகிறார்கள்.
முகநூலில் ஒருவர் எழுதி இருக்கிறார். “எங்கள் கிராமத்தில் 300 பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. அப்படியானால் எங்கள் கிராமத்திற்குள் 3 லட்சம் ரூபாய் வந்துள்ளது. 3 லட்சம் ரூபாய் எங்கள் கிராமத்திற்குள் வந்திருப்பதன் மூலமாக எங்கள் கிராமத்தில் பணப்புழக்கம் அதிகமாகி இருக்கிறது. எங்கள் கிராமத்து வளர்ச்சிக்காக 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் எழுதி இருக்கிறார்.
கிராமப்புற ஆய்வில் ஆர்வம் கொண்ட துணைத் தலைவர் நம்முடைய ஜெயரஞ்சன் இப்படி, பல கோணங்களிலும் ஆராய்ந்து ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ சமூகத்தில் ஏற்படுத்துகிற தாக்கம் குறித்து அறிக்கைகள் கொடுக்கலாம். மேலும், மிக முக்கியமான 2 வேண்டுகோள்களை உங்களிடம் வைக்க விரும்புகிறேன்.
பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை இருக்கிறது. மதிப்பீடு மற்றும் ஆய்வுத் துறை இருக்கிறது. இவற்றையும் இணைத்துக் கொண்டு மாநில திட்டக்குழு செயல்படவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த ஒருங்கிணைப்பு மிக மிக அவசியம்.
பல்வேறு ஆலோசனைகளை நீங்கள் வழங்கி வருகிறீர்கள். இவற்றை அரசுத் துறைகள் முழுமையாகவும் சரியாகவும் பயன்படுத்துகிறதா, பின்பற்றுகிறதா என்ற ஆய்வையும் நீங்கள் செய்ய வேண்டும். புள்ளி விவரங்களாக மட்டுமல்ல கள ஆய்வுகளின் மூலமாகவும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இத்துடன் நிறைவு செய்கிறேன். நன்றி! வணக்கம்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இக்கூட்டத்தில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை   அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன்,  தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் / முதலமைச்சரின் செயலாளர் நா. முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், நிதித்துறை செயலாளர் (செலவினம்) எஸ். நாகராஜன், மாநிலத் திட்டக் குழு உறுப்பினர்கள் – பேராசிரியர் இராம. சீனுவாசன்,  பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், கே. தீனபந்து, பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நட்ராஜ், உறுப்பினர் செயலர் எஸ். சுதா ராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ”இது அரசு அதிகாரிகளுக்கும் மிகச் சிறந்த சிந்தனைத் திறப்பாக உள்ளது..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/ 0
’’டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் சிறந்த மருந்து..!’’ சித்த மருத்துவர் கு.சிவராமன் https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259f%25e0%25af%2586%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25a8 https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8/#respond Mon, 18 Sep 2023 12:29:18 +0000 https://madrasmurasu.com/?p=6362 ’’டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் சிறந்த மருந்து. எனவே, நிலவேம்பு குடிநீரைக் குடித்து டெங்கு காய்சலை விரட்டலாம்’’ என்று சித்த மருத்துவர் கு.சிவராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மருத்துவர் கு.சிவராமன் கூறியதாவது: டெங்கு காய்ச்சல் என்பது வைரஸ் நோய், பிற புளூ காய்ச்சல்கள் போல உடலுக்குள் வந்து சில தினங்கள் இருந்து விட்டு செல்லக் கூடியதுதான். ஆனால், ரத்த தட்டுக்களையும், வெள்ளை அணுக்களையும் வேகமாக குறைத்து மரணத்தை நோக்கி இட்டுச் செல்லும் ஆபத்து இருப்பதால் டெங்கு காய்ச்சலுக்கு […]

The post ’’டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் சிறந்த மருந்து..!’’ சித்த மருத்துவர் கு.சிவராமன் first appeared on Madras Murasu.

]]>
’’டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் சிறந்த மருந்து. எனவே, நிலவேம்பு குடிநீரைக் குடித்து டெங்கு காய்சலை விரட்டலாம்’’ என்று சித்த மருத்துவர் கு.சிவராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மருத்துவர் கு.சிவராமன் கூறியதாவது:

டெங்கு காய்ச்சல் என்பது வைரஸ் நோய், பிற புளூ காய்ச்சல்கள் போல உடலுக்குள் வந்து சில தினங்கள் இருந்து விட்டு செல்லக் கூடியதுதான். ஆனால், ரத்த தட்டுக்களையும், வெள்ளை அணுக்களையும் வேகமாக குறைத்து மரணத்தை நோக்கி இட்டுச் செல்லும் ஆபத்து இருப்பதால் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது.

சுருக்கி பயன்படுத்த வேண்டும்.

நிலவேம்பு குடிநீரில் நிலவேம்பு, மிளகு, சுக்கு, கோரைக்கிழங்கு, வெட்டிவேர், விலாமிச்சைவேர், சந்தனத்தூள், பற்படாகம், பேய்ப்புடல் ஆகிய 9 மூலிகைகள் சேர்ந்துள்ளன. இந்தக் காய்ச்சல் வந்த அனைவரும் நிலவேம்பு குடிநீர் பருகலாம். பெரியவர்கள் காலை, மாலை இரு வேளையும் உணவுக்கு முன்னர் 50 மிலி வரை எடுத்துக் கொள்ளலாம். 3 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உடல் எடையைப் பொறுத்து 15 முதல் 30 மிலி வரை கொடுக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட நிலவேம்பு பொடியை வாங்கி அதில் 5 கிராம் பொடியை 200 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து 50 மிலி சுருக்கி பயன்படுத்த வேண்டும்.

நிலவேம்பு குடிநீர் பருகினால் 3 நாட்களில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிடும். அதன்பிறகு காய்ச்சல் அறிகுறிகள் தோன்றினால் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அதில் ரத்த தட்டுக்கள் குறைந்திருப்பது தெரிய வந்தால் ஆடாதொடை இலைச் சாறு அல்லது பப்பாளி இலைச் சாறு 10 முதல் 30 மிலி வரை 3 நாட்களுக்கு பருகலாம். இவை இரண்டும் ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை 2 நாள்களில் இரு மடங்காக அதிகரிக்கச் செய்யும் வல்லமை கொண்டவை. இதுவும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

தவிர்க்க வேண்டிய உணவுகள்!

உடலில் வேறு குறைபாடுகள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படியே நிலவேம்பு குடிநீர் பருக வேண்டும். 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதனை கொடுக்கக் கூடாது. டெங்கு காய்ச்சல் இருப்பவர்கள் இனிப்புகளை குறைத்து கசப்பு அதிகம் சேர்க்க வேண்டும். காரம் தேவைப்படின் மிளகாய்க்கு பதில் மிளகு சேர்க்கவும்.

காய்ச்சல் வருவதற்கு மிக முக்கிய காரணம் நீர்ச்சத்து குறைவது. எனவே, தினமும் இரண்டரை முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பழச்சாறுகள், இளநீர், சீரகத் தண்ணீர் ஆகியவற்றையும் குடிக்கலாம். காய்ச்சல் வந்தவர்களுக்கு அரிசி மற்றும் தானிய கஞ்சி, கீரை சூப் கொடுக்கலாம், மீன் தவிர மற்ற அசைவ உணவுகள், பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு மருத்துவர் கு.சிவராமன் கூறினார்.

இம்காப்ஸ்: சென்னை திருவான்மியூரில் இம்காப்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகள் கிடைக்கும். இவர்களின், மொத்த விற்பனை நிலையம் உள்ளது. ஆன்லைன் மூலமாகவும் மருந்துகளை ஆர்டர் செய்யலாம். உங்கள் வீடுகளுக்கே நேரில் டெலிவரி செய்யும் வசதி அவர்களிடம் உள்ளது. மருந்துகள் ஆர்டர் செய்வது தொடர்பாக +91- 24521029, 24520189, 24520244,  9710105678 / 9710205678, (044) 24523313 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். https://impcops.org.in/ என்ற தளத்தை பாருங்கள். ரூ.1000-க்கு மேல் வாங்கினால் இலவச டெலிவரி உண்டு.

The post ’’டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் சிறந்த மருந்து..!’’ சித்த மருத்துவர் கு.சிவராமன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8/feed/ 0