acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் ‘பரம்பொருள்’ திரைப்படம்..!’’ சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் த்ரில்லர் ஸ்டோரி first appeared on Madras Murasu.
]]>கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான ‘பரம்பொருள்’ திரைப்படத்தை இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரோடு இளம் நடிகர் அமிதாஷ் இணைந்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார்.
சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர்.
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, ‘ரிச்சி’ படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ‘டான்’, ‘சாணிக் காயிதம்’, ‘ராக்கி’, ‘எட்டு தோட்டாக்கள்’ படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.
கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக தினேஷ் சுப்பராயன், நடன இயக்குநராக சதீஷ் கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
‘பரம்பொருள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. முன்னோட்டத்தை இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகையும் இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டனர்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
தயாரிப்பாளர்கள் மனோஜ் & கிரிஷ், ‘பரம்பொருள்’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம். இந்த விழாவுக்கு வந்து சிறப்பித்துள்ள அனைவருக்கும் நன்றி. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறோம்.
இயக்குநர் மணிரத்னம், இந்நிகழ்ச்சிக்கு அழைத்ததற்காக மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘பரம்பொருள்’ திரைப்படம் வெற்றிபெற அனைவரும் வாழ்த்துவோம்.
சுஹாசினி மணிரத்னம், இங்கு வந்ததில் மகிழ்ச்சி. ‘பரம்பொருள்’ குழுவிற்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நடிகர் பாலகிருஷ்ணன், இத்திரைப்படம் மிகவும் நன்றாக உருவாகியுள்ளது. அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரவளிக்க வேன்டும்.
கலை இயக்குநர் குமார் கங்கப்பன், ‘பரம்பொருள்’ கதை எல்லாருக்கும் பிடிக்கும். இப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளனர். சரத்குமார் சார், யுவன் சார் என அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஒளிப்பதிவாளர் பாண்டிகுமார், உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். அந்த வரிசையில் ‘பரம்பொருள்’ திரைப்படமும் இணையும் என்பதில் ஐயமில்லை.
ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி, தயாரிப்பாளர்கள், இயக்குநர், அமிதாஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி. படத்தின் தலைப்பு மற்றும் கதையைக் கேட்டதிலிருந்தே இதில் பணியாற்ற மிகவும் ஆவலாக இருந்தேன். சரத்குமார் சார் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கும் நன்றி.
சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன், இத்திரைப்படத்தை பார்த்து மிகவும் ரசித்து இதை வெளியிட விரும்பினேன். சரத்குமார் சார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘போர்த்தொழில்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ‘பரம்பொருள்’ படத்தை பார்த்து அதில் என்னை இணைத்துக் கொண்டேன். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. அனைவரும் பெரும் பங்களிப்பை அளித்துள்ளனர். கதையை அடிப்படையாகக் கொண்டது இப்படம். அமிதாஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம். ‘பரம்பொருள்’ நிச்சயம் வெற்றியடையும்.
நடிகர் வின்சன்ட் அசோகன், இப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் சிறப்பு அதன் திரைக்கதை. சரத்குமார் சார் மற்றும் அமிதாஷ் நன்றாக நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டுகிறேன்.
நடிகரும் இயக்குநருமான பாலாஜி சக்திவேல், ‘பரம்பொருள்’ படத்தின் கதையை கேட்டு மிகவும் ரசித்தேன். அமிதாஷ் மற்றும் சரத் சார் சிறப்பாக நடித்துள்ளனர். அனைவரின் சிறப்பான ஒத்துழைப்புடன் படம் உருவாகியுள்ளது.
நடன இயக்குநர் சதீஷ், இந்தப் படம் யுவன் ஷங்கர் ராஜா சாருக்கு மிக முக்கியமான படமாக அமையும். சரத்குமார் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அமிதாஷ் மற்றும் கிரிஷ் சாருக்கு நன்றி. படம் வெற்றி பெற, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.
இயக்குநர் சி. அரவிந்த் ராஜ், இக்கதையை சொன்னவுடன் சரத்குமார் சாருக்கும் அமிதாஷுக்கும் மிகவும் பிடித்தது. சின்ன பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாளர்களின் ஆதரவால் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் ‘பரம்பொருள்’ திரைப்படத்தை பார்த்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து ஆதரவை தர வேண்டும். தயாரிப்பாளர்களுக்கும், படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நடிகர் அமிதாஷ், பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவு ஒரு படத்தின் வெற்றிக்கு மிகவும் முக்கியம். ‘பரம்பொருள்’ படத்திற்கு மேலான ஆதரவை வழங்குமாறு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரை கேட்டுக்கொள்கிறேன். சரத்குமார் சார் இந்த கதைக்கு தனது முழு ஒத்துழைப்பை கொடுத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா சார் மற்றும் தயாரிப்பாளர் மனோஜ் கிரிஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்திற்கு ஒத்துழைத்த ஒவ்வொருவருக்கும் மிகவும் நன்றி. அனைவரும் படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டும். குறிப்பாக எனது பெற்றோருக்கு நன்றி’’ என்று பேசினார்.
இப்படம் செப்டம்பர் 01 முதல் திரையரங்கில் வெளியாகிறது.
– தே.சுகன்யா
The post ’’சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் ‘பரம்பொருள்’ திரைப்படம்..!’’ சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் த்ரில்லர் ஸ்டோரி first appeared on Madras Murasu.
]]>The post ’’சேரன் நடிப்பில், ‘தமிழ்க்குடிமகன்’ இசை, டிரெய்லர் வெளினானது..!’’ first appeared on Madras Murasu.
]]>லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.
முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, ‘மிக மிக அவசரம்’ புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொண்டுள்ளார்.
‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது.
படத்தின் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்..!
சாதி சார்ந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இப்படத்தில் காட்டுகிறோம். நான் சந்தித்த அனுபவங்களை படமாக எடுத்திருக்கிறேன். பிறக்கும் போது அனைத்து குழந்தைகளும் சமமே. வளர்ந்த பிறகு தான் சாதி என்ற ஏற்றத்தாழ்வு வருகிறது. சாதியம், குலத்தொழில் குறித்து இப்படத்தில் கூறியுள்ளோம்.
பாடலாசிரியர் விவேகா..!
அனைவரது வாழ்க்கையிலும் தாலாட்டு முதல் ஒப்பாரி வரை இசை கூடவே வரும். இப்படத்தில் ஒப்பாரி பாடல் ஒன்றை நான் எழுதியுள்ளேன். சாம் சி.எஸ். உணர்ச்சிப்பூர்வமாக இசையமைத்துள்ளார். இசக்கி கார்வண்ணன் திறம்பட இயக்கியுள்ளார். இவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
நடிகை தீபிக்ஷா..!
இப்படம் சாதி சமந்தப்பட்ட கதை, இந்தக் கதை சமத்துவத்தையும் பேசும், மதத்தையும் பேசும். சேரன் சார் மற்றும் சாம் சாரின் மிகப்பெரிய ரசிகை நான். இவர்களுடன் பணியாற்றியது சந்தோஷம்.
நடிகர் துருவா..!
மூத்த கலைஞர்களுடன் நடிப்பதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அன்புக்கும் ஆதரவுக்கும் அனைவருக்கும் நன்றி.
எழுத்தாளர் ராமசுவாமி..!
இயக்குநர் இசக்கி கார்வண்ணன் முதல் முறையாக கதை சொல்லும்பொழுது நான் வேறு விதமாக புரிந்து கொண்டேன். ஆனால், இந்த இயக்குநர் சிறந்த எழுத்தாளர் என்பதை இவரின் படைப்பை பார்க்கும்போது அறிந்துகொண்டேன். எனக்கு இப்படத்தில் வசனங்களும் குறைவு. இப்படத்தில் நிறைய காட்சிகளில் பிணமாகத்தான் நடித்துள்ளேன்.
நடிகரும் இயக்குநருமான ரவிமரியா..!
அனைத்து படங்களையும் கலைப் படமாகவும் சமூகப் படமாகவும் உருவாக்கமுடியும். ‘தமிழ்க்குடிமகன்’ நல்ல படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இது தமிழ் மண்ணின் பெருமை பற்றி பேசும் படம்.
நடிகர் அருள்தாஸ்..!
இசக்கி கார்வண்ணன் இப்படத்தை வெற்றிப்படமாக உருவாக்கியுள்ளதுடன், பார்வையாளர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்துவார் என்று வாழ்த்துகளை சொல்லி விடைபெறுகிறேன்.
நடிகர் பொன்வண்ணன்..!
எனக்கு இசக்கி கார்வண்ணனை பல வருடங்களாக தெரியும். சினிமாவைப் பற்றி பேசுவோம். ஒரு நாள் தொலைபேசி மூலம் என்னை தொடர்புகொண்டு ‘ஒரு கதை இருக்கு வாங்க சொல்லணும்’ என்று கூறி இக்கதையை கூறினார். அதன் பிறகு இந்த திரைப்படத்தில் நடிக்க சேரன், லால் என சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்தார். இயக்குநருக்கு மிக முக்கியமானது கதைக்கான நடிகர்களை தேர்ந்தெடுப்பது தான். அதற்கடுத்து இசையமைப்பாளர் முக்கியம். இந்த படத்தில் பாடல்கள் மிகக் குறைவு. ஆனால் பின்னணி இசை மிக முக்கியம் என்று சொல்லலாம். கதையில முதல் ஃபிரேமில் இருந்து கடைசி ஃபிரேம் வரை நம்மை எங்கேஜிங்காக வைப்பது மிகவும் அவசியம். அது இந்த படத்தில் முழுமையாக வொர்க் ஆகியுள்ளது என்று நான் நினைக்கிறேன். ஒரு பார்வையாளனாக, ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை நான் ரசித்து பார்த்தேன்.
நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி..!
படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் ‘தமிழ்க் குடிமகன்’ என்ற தலைப்பே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது. தமிழக அரசியல் சூழலில் சாதி பற்றி இப்படம் பேசுகிறது. வெற்றிகரமான படமாக இது அமையும் என வாழ்த்துகிறேன்.
நடிகர் சரத்குமார்..!
என் அன்பு சகோதரர் சேரன் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ அனைவரும் பார்க்க வேண்டிய படம். உண்மை நிலையை எடுத்து கூறும் படமாக ‘தமிழ்க்குடிமகன்’ இருக்கும். குலத்தொழில் பற்றி இதில் பேசி இருக்கிறார்கள். அந்த முறையை உடைக்கின்ற படமாக ‘தமிழ்க்குடிமகன்’ இருக்கப்போகிறது. இப்படம் வெற்றி திரைப்படமாக அமையும் என வாழ்த்துகிறேன்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்..!
நிறைய திரைப்படங்களுக்கு நான் இசையமைத்திருக்கிறேன். ஆனால் இந்த படத்திற்கு இசையமைத்தது குறித்து மிகவும் பெருமை அடைகிறேன். நல்ல கதை என்பது வெளி உலகத்திற்கு தெரிய வேண்டும், கண்டிப்பாக இத்திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும். இயக்குநர் இசக்கி கார்வண்ணன் அவர்களுக்கு நன்றி.
இயக்குநர் மாரிசெல்வராஜ்..!
‘தமிழ்க்குடிமகன்’ ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும், இதில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். கண்டிப்பாக இப்படம் பெரிதாக பேசப்படும்.
இயக்குநர் அமீர்..!
இப்படம் உங்களுடைய சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கும் என்றால் அது கண்டிப்பாக சாதியை ஒழிக்க பங்காற்றும். என்றும் மனிதனாக வாழ்கிறேன் என்று கூறி விடைபெறுகிறேன்.
இயக்குநர், நாயகன் சேரன்..!
அனைவரும் திரையரங்குகளில் வந்து திரைப்படத்தை பார்க்க வேண்டும். புத்திசாலித்தனமான திரைப்படம் இது. சாதிகளை ஒழிக்க வேண்டும் போன்ற நிறைய நல்ல விஷயங்களை இத்திரைப்படத்தில் சொல்லி இருக்கிறோம்.
The post ’’சேரன் நடிப்பில், ‘தமிழ்க்குடிமகன்’ இசை, டிரெய்லர் வெளினானது..!’’ first appeared on Madras Murasu.
]]>