Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#கே.பாலகிருஷ்ணன் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Tue, 07 Nov 2023 04:10:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்’’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் https://madrasmurasu.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f https://madrasmurasu.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/#respond Tue, 07 Nov 2023 04:10:07 +0000 https://madrasmurasu.com/?p=7415 ’’மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் மின்சார வாரியத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலங்களில் நுகர்வோர் சார்பில் மனு அளிக்கும் இயக்கத்தை நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது. 2025 டிசம்பர் 31க்குள் […]

The post ’’ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்’’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் first appeared on Madras Murasu.

]]>
’’மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் மின்சார வாரியத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலங்களில் நுகர்வோர் சார்பில் மனு அளிக்கும் இயக்கத்தை நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.

2025 டிசம்பர் 31க்குள் இந்தியா முழுவதும் அனைத்து மின் நுகர்வோரும் ஸ்மார்ட் மீட்டர் எனப்படும் மின் மீட்டர்களை பொருத்த வேண்டுமென ஒன்றிய அரசாங்கம் நிர்பந்தப்படுத்தி வருகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் பிரிபெய்ட் மீட்டர்களாகவும் செயல்படும். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் ஒரு மீட்டருக்கு 13 ஆயிரம் ரூபாய் வரை செலுத்துகிறார்கள். இந்த மீட்டர்கள் முன்பணம் செலுத்தி ரீசார்ஜ் கார்டுகளைப் பெற்று பணம் இருக்கும் வரை மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளவும், மணிக்கணக்கில் மின்சார நுகர்வை கணக்கிட்டு அதன் அடிப்படையில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கும் ஏதுவான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடியிருப்பு பகுதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரையில், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மின்சாரம் பயன்படுத்தும் நேரத்தை உச்சபட்ச நேரமாக கூறி கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதற்கும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சாதாரணக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வகையிலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வழக்கமான சாதாரண கட்டணத்தை வசூலிக்கும் முறையிலும் கணக்கிட்டு மின் கட்டணத்தை பிரிபெய்டு அட்டையிலிருந்து எடுத்துக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மின் நுகர்வோர், எந்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறாரரோ, அந்த நிறுவனத்திடம் இருந்து முன்பணம் செலுத்தி பிரிபெய்டு அட்டைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இதை பயன்படுத்த முடியும். இதன் மூலம் மின்சார வாரியங்களுக்கு மூடு விழா நடத்தப்படும். பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரசின் உட்கட்டமைப்புகளை பயன்படுத்திக் கொண்டு தங்கள் லாபத்தை பெருக்கிக் கொள்வதற்கு இது வழிவகை செய்யும். இதன் மூலம், தொழில் நிறுவனங்களுக்கு இருப்பது போல, ஒவ்வொரு குடும்பங்களும் பீக் ஹவரில் பயன்படுத்தும் மின்சாரங்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அபாயம் ஏற்படவுள்ளது.

தனியார் நிறுவனங்களிலும் பிரிபெய்டு அட்டைகள் பெறுவதன் மூலம் இப்போது பெறுகிற இலவச மின்சாரமோ, மானியங்களோ இல்லாத நிலை உருவாகும். தவிரவும், மின் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் கூடுதல் கட்டணம் கொடுக்க முன்வருவோருக்கு முன்னுரிமை வழங்கி இதர மக்கள் பாதிக்கப்படும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள திட்டமே இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டமாகும். மேலும், ஆரம்பத்தில் ஸ்மார்ட் மீட்டருக்கு கட்டணம் ஏதும் வசூலிக்காமல் எல்லோரும் ஏற்றபின்பு ஸ்மார்ட் மீட்டரின் விலையை மின் நுகர்வோரிடம் மாதந்தோறும் வசூலிப்பதற்கான சூழ்ச்சியும் இதற்குள் அடங்கியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தவும், வீடுகளுக்கும், விவசாயத்திற்கும், விசைத்தறிக்கும் உள்ள இலவச மின் சலுகைகளை பறிப்பதற்கும் மொத்த மின்சார வாரியத்தை கலைத்து தனியார் வசம் மின் விநியோகத்தை ஒப்படைக்கும் நோக்கங்களோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் மாநிலங்களுக்கு நிதி உதவி செய்வதாகவும் ஒன்றிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதை ஏற்கவில்லையென்றால் அந்த நிதி உதவி கிடைக்காது என்றும், இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கூடுதல் சுமையை ஏற்க வேண்டியிருக்கும் என்றும் ஒன்றிய அரசு பயமுறுத்தி வருகிறது.

மின் நுகர்வோர் மற்றும் மின் ஊழியர்களும் தொழில் அமைப்புகளும் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு இந்த திட்டத்தில் உள்ள சூழ்ச்சிகளை உணர்ந்து இதை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளது. இதனால், ஏற்படும் ரூ. 9 ஆயிரம் கோடி இழப்பை ஈடுகட்டும் வகையில் பிற வழிகளில் நிதி திரட்டவும் உத்தேசித்துள்ளது.

எனவே, இலவச மின்சாரம், மானியங்கள் இவற்றை காவு கொடுப்பதற்காகவும் மின் நுகர்வோரை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கி அதே சமயம், தனியார் பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு ஒன்றிய அரசால் வழிவகை செய்துள்ள இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். மின் நுகர்வோருக்கும் மின்சார வாரியத்திற்கும் பெரும் சுமைகளை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு எந்த காரணம் கொண்டும் அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக மக்களைச் சந்தித்து ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் அபாயத்தை எடுத்துரைத்தும், இதனை கைவிட வலியுறுத்தியும் மக்களைத் திரட்டி அந்தந்த மின் வாரிய அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு தமிழக மக்களும், விவசாய பெருங்குடி மக்களும், நெசவாளர்களும், வணிகப் பெருமக்களும், குறு-சிறு நடுத்தர தொழில் முனைவோர்கள் உள்ளிட்டு அனைத்து ஜனநாயக சக்திகளும் பேராதரவளிக்க வேண்டுமென சிபிஐ (எம்) மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

The post ’’ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்’’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/feed/ 0
’’அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுவதா? அயோத்தி சாமியாருக்கு சிபிஐ(எம்) கண்டனம்!’’ https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25a4%25e0%25ae%25af%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b2 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2/#respond Tue, 05 Sep 2023 10:10:47 +0000 https://madrasmurasu.com/?p=6130 அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுவதா? என்று அயோத்தி சாமியாருக்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிடட் அறிக்கை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் […]

The post ’’அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுவதா? அயோத்தி சாமியாருக்கு சிபிஐ(எம்) கண்டனம்!’’ first appeared on Madras Murasu.

]]>
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுவதா? என்று அயோத்தி சாமியாருக்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிடட் அறிக்கை:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் உள்ளவர்களே உண்மைக்கு மாறாகப் பேசி தேவையற்ற சர்ச்சையை உருவாக்கி வருகின்றனர். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

இந்நிலையில், அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டு எரித்தும் மிரட்டியுள்ளதோடு, அமைச்சரின் தலையை சீவிக்கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பரவலான கண்டனம் எழுந்துள்ளபோதும், தேவைப்பட்டால் பரிசுத்தொகையை அதிகரிக்கத் தயார் என்று அவர் மேலும் மிரட்டியுள்ளார். ஒரு கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக படுகொலை செய்ய அறைகூவல் விடுப்பது பாசிச தன்மை வாய்ந்த கிரிமினல் செயல் ஆகும். ஒரு மடாதிபதியே கொலை வெறியைத் தூண்டும் கிரிமினல் குற்றவாளியாக நடந்து கொள்வது மிக வெட்கக் கேடானது ஆகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு இச்செயலை வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு செய்வது சட்டப்பூர்வமாக தண்டிக்கத்தக்க குற்றமாகும். ஆர்எஸ்எஸ் பாஜகவைச் சேர்ந்த யாரும் இதைக் கண்டிக்க முன்வரவில்லை என்பது இத்தகைய கிரிமினல் நடவடிக்கைக்கு துணைபோகும் செயலாகும். உ.பி. மாநில அரசு, சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டும் அயோத்தி சாமியாருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

The post ’’அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுவதா? அயோத்தி சாமியாருக்கு சிபிஐ(எம்) கண்டனம்!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2/feed/ 0
’’மணிப்பூர் இரட்டை எஞ்சின் கொடூரம்..!’’ கே.பாலகிருஷ்ணன் https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%258e%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/#respond Fri, 21 Jul 2023 06:27:39 +0000 https://madrasmurasu.com/?p=5478 மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: மணிப்பூர் மாநிலத்தில், வன்முறைக் கும்பலால் பழங்குடி பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கும், வல்லுறவுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன் குற்றத்தை தடுக்க முயன்ற தந்தையும், சகோதரரும் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். எவரையும் பதைபதைக்கச் செய்யும் இந்தக் கொடூரம் காணொளியாக வெளியாகி காண்போரை மனம் கொந்தளிக்கச் செய்துள்ளது. இப்போது வரை குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை பயன்படுத்தி வெறுப்பு அரசியலை வேகப்படுத்தும் பாஜகவிற்கு எதிராக அனைத்து மக்களும் கண்டனக் குரல் […]

The post ’’மணிப்பூர் இரட்டை எஞ்சின் கொடூரம்..!’’ கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.

]]>
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மணிப்பூர் மாநிலத்தில், வன்முறைக் கும்பலால் பழங்குடி பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கும், வல்லுறவுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன் குற்றத்தை தடுக்க முயன்ற தந்தையும், சகோதரரும் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். எவரையும் பதைபதைக்கச் செய்யும் இந்தக் கொடூரம் காணொளியாக வெளியாகி காண்போரை மனம் கொந்தளிக்கச் செய்துள்ளது. இப்போது வரை குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை பயன்படுத்தி வெறுப்பு அரசியலை வேகப்படுத்தும் பாஜகவிற்கு எதிராக அனைத்து மக்களும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென சி.பி.ஐ(எம்) அறைகூவி அழைக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மே 3 ஆம் தேதி வன்முறைகள் தொடங்கின. மே 4 ஆம் தேதியன்றே பல்வேறு இடங்களில் பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் வல்லுறவு மற்றும் கும்பல் கொலைகளும் நடந்தேறியுள்ளன. இதுவரை அந்த மாநிலத்தில் 160க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றுள்ளனர்; சுமார் 50 ஆயிரம் பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் சூறையாடப்பட்டுள்ளன.  இந்தக் கொடூரங்களை கண்டித்து பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும், பாஜக மாநில அரசு பதவி விலக வேண்டும்; உடனடியாக அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென எதிர் கட்சிகள் பலமுறை வலியுறுத்தின.

ஆனால், பிரதமர் மோடியோ கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டினார், மணிப்பூரின் மக்கள் பிரதிநிதிகள் அவரை சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்த போதிலும், அவர்களைச் சந்திப்பதை தவிர்த்துவிட்டு அமெரிக்காவிற்கு பயணப்பட்டார், வந்தே பாரத் ரயில்களுக்கு கொடியசைத்து பகட்டான விழாக்களை நடத்தினார், பிறகு பிரான்சு நாட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது நாடாளுமன்ற கூட்டம் நடக்கவுள்ள சூழலில் மணிப்பூரின் கொடூர நிலைமை பற்றிய வீடியோ வெளியாகியது. இந்த சூழலிலேயே இரண்டரை மாதங்களுக்கு பின் பிரதமர் வாய் திறந்து பேசியிருக்கிறார்.

இப்போது வெளியாகியிருக்கும் காணொளி கடந்த மே மாதம் 4 ஆம் தேதி பதிவானதாகும். இந்த சம்பவம் தொடர்பாக மே 18 ஆம் தேதியே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் குற்றமிழைத்த எவருடைய பெயரும் அதில் இடம்பெறவில்லை. அங்கு நடைபெற்றுவரும் கொடூரங்கள் எதுவும் அரசு நிர்வாகத்திற்கு தெரியாமலில்லை. சூழலை விளக்குவதற்காக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்த மக்கள் பிரதிநிதிகளிடம் பேச மறுத்துவிட்டார்.

சி.பி.ஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் உண்மை நிலையை விசாரித்து வெளிப்படுத்தினார்கள். அதில் பாஜக/ஆர்.எஸ்.எஸ் வெறுப்பு அரசியல் திட்டம் எந்த அளவுக்கு மக்களை மோதிக்கொள்ளச் செய்திருக்கிறது என்பது வெளிப்படையாக தெரியவந்தது. எல்லாவற்றையும் பாராமுகமாக கடந்து சென்ற பிரதமர், மூடி மறைக்க முயன்ற கொடூரத்தில் ஒரு சிறு பகுதி அம்பலப்பட்டுவிட்டதே என்ற அதிர்ச்சியில்தான் இப்போது பேசியுள்ளார். இதன் பின்னரும் கூட மணிப்பூர் மக்களுக்கு அமைதியான சூழலை உறுதி செய்து, வாழ்வாதாரங்களை மறுகட்டமைக்க எந்த உருப்படியான முயற்சியும் பாஜக/ஆர்.எஸ்.எஸ் அரசால் முன்னெடுக்கப்படவில்லை.

மணிப்பூரில் உள்ள மாநில பாஜக அரசு, பதவியில் நீடித்திருக்க எள்ளளவும் அருகதையாற்றதாகும். இதுவரை நடந்துள்ள கொடூரங்களுக்கு மணிப்பூர் முதலமைச்சரும், பிரதமர் மோடியுமே பொறுப்பேற்க வேண்டும். இப்படிப்பட்ட இரட்டை எஞ்சின் கொடூரத்திற்கு எதிராக ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் குரல்கொடுக்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. ஜனநாயக இயக்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை ஆதரித்து, வெறுப்பு அரசியலுக்கு எதிரான உறுதியை வெளிப்படுத்த வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்.

The post ’’மணிப்பூர் இரட்டை எஞ்சின் கொடூரம்..!’’ கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/ 0
’’அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது..!’’ கே.பாலகிருஷ்ணன் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%259f https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f/#respond Tue, 18 Jul 2023 04:18:26 +0000 https://madrasmurasu.com/?p=5291 தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்பி ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திங்களன்று நடத்திய சோதனை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஒருபோதும் வெற்றிபெறாது 2011-2012 ஆம் ஆண்டுகளில் ஜெய லலிதா முதலமைச்சராக இருக்கும் போது, பொன்முடி மீது போடப்பட்ட ஒரு வழக்கின் மீது 11 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை மூக்கை நுழைத் திருக்கிறது. ஏற்கனவே, அவர் […]

The post ’’அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது..!’’ கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்பி ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திங்களன்று நடத்திய சோதனை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஒருபோதும் வெற்றிபெறாது

2011-2012 ஆம் ஆண்டுகளில் ஜெய லலிதா முதலமைச்சராக இருக்கும் போது, பொன்முடி மீது போடப்பட்ட ஒரு வழக்கின் மீது 11 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை மூக்கை நுழைத் திருக்கிறது. ஏற்கனவே, அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இரண்டு வழக்குகளில் அவர் விடுதலையும் பெற்றி ருக்கிறார். அமலாக்கத் துறையினர் சோத னை நடத்தும் இந்த வழக்கும் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

திடீரென அமைச்சர் வீட்டில் சோதனை நடத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது. அடுத்து நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்குள் திமுக அமைச்சர்கள் மீது ஏதாவது பழைய வழக்கு இருந்தால் அதை தூசி தட்டி அதன்மூலம் சோதனை நடத்தி தமிழ்நாட்டு மக்களிடையே ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விடலாம். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கலாம் என்றும் திட்டமிட்டுச் செயல்படுகிறது ஒன்றிய பாஜக அரசு. பாஜகவின் இந்த முயற்சி தமிழ்நாட்டில் ஒருபோதும் வெற்றிபெறாது. இந்த சோதனைகள் அனைத்தும் பாஜகவிற்கு எதிராகத்தான் அமையும்.

நடவடிக்கை என்று கூறுவது ஏமாற்று வேலை

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நடைபெறு கிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் கலந்துகொள்கிறார். இந்த சூழ்நிலையில், திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அமலாக்கத் துறையின் மூலம் இந்த சோதனை நடத்தப்படுகிறது. அமலாக்கத் துறை சட்ட ரீதியாக செயல்பட வேண்டிய தனித்துறை என்ற நிலை மாறி, பாஜகவின் கைப்பாவை யாக மாறியுள்ளது. பாஜகவின் துணை அமைப்பு போல் செயல்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறுகிறார்கள். அப்படியானால் இந்த சோதனை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் நடத்தப்படுவது ஏன்? பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் நடைபெறவில்லையா? தமிழ்நாட்டிலுள்ள பாஜக தலைவர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டும் புகாரும் உள்ளது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்து வதில்லையே ஏன்? நமது அண்டை மாநிலமான புதுச்சேரி அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளன. ஏன் அவர்கள் மீது எந்த வழக்கும் பதியவில்லை? சோதனையும் நடத்துவ தில்லை? ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறுவது ஏமாற்று வேலை. அமலாக்கத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை யைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படிப்பட்ட சோதனை நடைபெறுகிறது.

முழுமையாக மூழ்கி விடும்

விலை வாசி உயர்வு, ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை களால் மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காய்கறிகள் உள்ளிட்டு அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்த பிரச்சனை களில் இருந்து மக்களை திசை திருப்பவே இப்படிப்பட்ட சோதனைகளை ஏவி விடுகின்றனர். வருகிற 2024 மக்களவை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவதற்கு தயாராகிவிட்டனர். இதனால், பாஜக என்னும் கப்பல் முழுமையாக மூழ்கி விடும். அது ஒரு போதும், இந்த முறை கரை சேராது என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,“ அமைச்சர் பொன்முடி மீதான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கட்டும். அதுவரைக்கும் பொறுத்திருக்க முடியாமல் அமலாக்கத்துறை மூலம் திமுகவை-யும் அதன் கூட்டணி கட்சிகளையும் மிரட்டலாம் என்று பாஜக நினைக்கிறது. இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது” என்றார்.

சோதனை நடத்தி மிரட்டப் பார்க்கிறார்கள்

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாஜகவிற்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளை பிரித்துவிட்டால் எளிதில் வெற்றிபெற்று விடலாம் என பாஜக நினைக்கிறது. அதனால்தான் இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டும் என பாஜக முயற்சிக்கிறது. தமிழ்நாட்டில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியவில்லை என்பதனால் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தி மிரட்டப் பார்க்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

The post ’’அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது..!’’ கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f/feed/ 0
’’கோசாலை அமைத்தால் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்..?’’ கே.பாலகிருஷ்ணன் கேள்வி https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25a9 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9/#respond Fri, 14 Jul 2023 05:11:27 +0000 https://madrasmurasu.com/?p=5124 மோடி அரசு அமலாக்கும் பொருளாதார கொள்கைகளின் விளைவாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திண்டுக்கல்லில் வியாழனன்று தீக்கதிர் சந்தா வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகளால் விலைவாசி கடுமையாக உயர்கிறது. சாதாரண மக்கள் கடுமையாக […]

The post ’’கோசாலை அமைத்தால் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்..?’’ கே.பாலகிருஷ்ணன் கேள்வி first appeared on Madras Murasu.

]]>
மோடி அரசு அமலாக்கும் பொருளாதார கொள்கைகளின் விளைவாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திண்டுக்கல்லில் வியாழனன்று தீக்கதிர் சந்தா வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகளால் விலைவாசி கடுமையாக உயர்கிறது. சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஒன்றிய அரசு இதைப் பற்றி கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் தக்காளி சாகுபடி உற்பத்தி பரப்பளவு குறைந்தது. உற்பத்தியும் குறைந்தது. இதனால் தற்போது தக்காளி விலை கிட்டத்தட்ட 300 விழுக்காடு உயர்ந்து விற்கப்படு கிறது. விலை குறைவது, விலை ஏறு வதை கட்டுப்படுத்துவதற்கு அரசு தலையிட்டு கொள்முதல் செய்து விநியோகம் செய்ய வேண்டும். விவ சாயிகளுக்கு நியாய விலை கிடைக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக் கும் நியாயமான விலையில் கிடைக்க வேண்டும். அதற்காக அரசு தக்காளியை கொள்முதல் செய்ய வேண்டும். உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாநில அரசே பருத்தியை கொள்முதல் செய்க!

பருத்தி அறுவடை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது போதுமான விலை இல்லை. ஒன்றிய அரசு விலையை அறிவிக்கிறது, ஆனால் கொள்முதல் செய்யவில்லை. தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்குத்தான் வாங்குவார்கள். இது தொடர்பாக முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மாநில அரசே பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும்.

மகாராஷ்டிராவில்தான் அதிகளவில் பருத்தி சாகுபடி நடைபெறுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தான் அதிகமான நூற்பாலைகள் உள்ளன. எனவே மாநில அரசே பருத்தியை கொள்முதல் செய்து அந்த நூற்பாலைகளுக்கு கொடுக்கலாம். இந்நிலையில் தனியார் வியாபாரிகள் பருத்தி விலையை கடுமையாக உயர்த்தி விற்கிறார்கள். எங்களால் பருத்தியை வாங்கி நூல் நூற்க முடியவில்லை என்று 600-க்கும் மேற்பட்ட சிறு தொழிலதிபர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள். இந்த தில்லுமுல்லு செய்வது முழுவதும் அதானி-அம்பானி போன்றவர்கள் நடத்தும் நிறுவனங்கள் தான். மோடி இதற்கு மறைமுகமாக ஆதரவு தெரி விக்கிறார்.

அரிசி கொடுக்க மறுப்பதா?

ஒன்றிய பாஜக அரசு மாநில அரசுகளுக்கு அரிசி கொடுக்க மாட்டேன் என்கிறது. உங்களுக்கு அரிசி தேவையென்றால் வெளி மார்க்கெட்டில் போய் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறது ஒன்றிய அரசு. ஓபன் மார்க்கெட் செல்லிங் ஸ்கீம் என்று சொல்லக்கூடிய ஓ.எம்.எஸ்.எஸ்.தனியார் வியாபாரிகளுக்கு டெண்டர் விடுகிறார்கள். அவர்களு க்கு ஒன்றிய அரசு ஒரு கிலோ அரிசி ரூ.31க்கு கொடுக்கிறது. அவர்கள் நமக்கு ரூ.50க்கு விற்பார்கள். அத னால் விலை இல்லா அரிசியை மாநில அரசுகளால் கொடுக்க முடியவில்லை. நெல், கோதுமையை முறைப்படி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கொடுக்க வேண்டும். மாநில அரசு களுக்கு அரிசி கொடுக்க மாட்டோம் என்று சொல்வது பெரும் துரோக மாகும்.

ஆளுநரை எதிர்த்து விரிவான கடிதத்தை முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்கு எழுதியிருக்கிறார். அது நாடு முழுவதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அவ ரது எல்லா வகையான நடவடிக்கை களுக்கு மோடியும், அமித்ஷாவும் பின்புலமாக இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

பழனி பகுதியில் சிப்காட் அமைந்தால் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். கோசாலை அமைத்தால் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்?. ‘மாடு மேய்க்கத்தான் நீ லாயக்கு’ என்று சொல்வது தான் ஆர்.எஸ்.எஸ் கொள்கை. சாதாரண தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சிப்காட் போன்ற நிறுவனத்திற்கு நல்ல வேலைக்கு போகக் கூடாது; இப்படியே ஆடு மாடு மேய்க்க வேண்டும் என்பதற்காகத்தான் கோசாலை அமைக்க வேண்டும் என்கிறார் பாஜகவின் எச்.ராஜா.

சமூகவிரோதச் சக்திகளுக்கு காவல்துறை தரப்பில் உதவி

பழனி மலையில் கடந்த 2 ஆண்டு களாக முருகன் கோவிலை மையப் படுத்தி பாஜகவினர்அரசியல் செய்து தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். பழனி முருகன் ஆல யத்திற்கு இந்து மதத்தினரைத் தவிர யாரும் வரக்கூடாது என்கிறார்கள். விஞ்ச்சில் ஏறக்கூடாது என்று தகராறு செய்கிறார்கள்.

பழனியை போல சிதம்பரம் நடராஜர் கோவிலையும் கல வர பூமியாக மாற்றுகிறார்கள். அமைதியாக சாமி கும்பிடலாம் என்று வந்தால் அங்கும் அடிதடி தகராறு. பழனி, சிதம்பரத்தை வன்முறைக்களமாக மாற்றுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சேலத்தில் போதை மற்றும் லாட்டரியை எதிர்த்துப் போராடிய வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பெரியசாமி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். போதை மற்றும் சமூகவிரோதச் சக்திகளுக்கு காவல்துறையினர் தரப்பில் உதவி கிடைப்பதால்தான் சமூக விரோதிகள் அச்சமின்றி இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் யாராக இருந்தாலும் முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

பேட்டியின் போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

The post ’’கோசாலை அமைத்தால் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்..?’’ கே.பாலகிருஷ்ணன் கேள்வி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9/feed/ 0
’’சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்கிட வேண்டும்..!’’ மார்க்சிஸ்ட் https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95/#respond Tue, 11 Jul 2023 12:16:25 +0000 https://madrasmurasu.com/?p=5015 மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: சிறுபான்மை மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையை கணக்கில் கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி – 1 அரசு சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கான பல்வேறு கல்வி உதவித் தொகைகளை உத்தரவாதப்படுத்தியதோடு புதிதாக ஒன்றாம் வகுப்பு முதல் பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை அளித்தது. இது தவிர, மொத்த எண்ணிக்கையில் 30 சதவிகிதம் பேகம் ஹஸ்ரத் மஹால் பெயரில் மாணவிகளுக்கு ப்ரிமெட்ரிக் கல்வித் […]

The post ’’சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்கிட வேண்டும்..!’’ மார்க்சிஸ்ட் first appeared on Madras Murasu.

]]>
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

சிறுபான்மை மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையை கணக்கில் கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி – 1 அரசு சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கான பல்வேறு கல்வி உதவித் தொகைகளை உத்தரவாதப்படுத்தியதோடு புதிதாக ஒன்றாம் வகுப்பு முதல் பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை அளித்தது. இது தவிர, மொத்த எண்ணிக்கையில் 30 சதவிகிதம் பேகம் ஹஸ்ரத் மஹால் பெயரில் மாணவிகளுக்கு ப்ரிமெட்ரிக் கல்வித் தொகையையும் அளித்து வந்தது.

இந்த நிலையில் ஒன்றிய பாஜக அரசாங்கம் சிறுபான்மையினர் மீதான வன்மத்தோடு இந்தாண்டு முதல் 1 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்தியதோடு, மௌலானா அபுல்கலாம் ஆசாத் ஃபெலோஷிப்பையும் வெளிநாட்டில் பயிலும் சிறுபான்மை மாணவர்கள் பெரும் கடனுக்கான வட்டிக்கு அளித்து வந்த மானியத்தையும் ரத்து செய்துவிட்டது.

இந்த நிலையில் சிறுபான்மை மாணவர்களுக்கு தற்போது அமலில் உள்ளபடி, ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப், பேகம் ஹஸ்ரத் மஹால் ஸ்காலர்ஷிப், மெரிட் கம் மீன்ஸ் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட எந்த உதவித்தொகையும் ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து இதுவரை வரவில்லை.

சிறுபான்மையினர் மீதான வன்மத்தினால் ஒன்றிய அரசாங்கம் நயவஞ்சகமாக சிறுபான்மை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் இந்த உதவித்தொகைகளை நிறுத்தி வைப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசு உடனடியாக சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்கிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.

மேலும், மாநில அரசு ஒன்றிய அரசின் உரிய அதிகாரிகளோடு தொடர்புகொண்டு இந்த கல்வி உதவித் தொகைகளை பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

 

 

 

The post ’’சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்கிட வேண்டும்..!’’ மார்க்சிஸ்ட் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95/feed/ 0
”தீக்கதிரின் சுடரொளி திசையெங்கும் பரவட்டும்..!” கே.பாலகிருஷ்ணன் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8a%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258a%25e0%25ae%25b3%25e0%25ae%25bf-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%259a https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8a%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a/#respond Thu, 29 Jun 2023 07:15:44 +0000 https://madrasmurasu.com/?p=4529 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிர் ஏடு வைர விழா கண்ட பெருமிதத் தோடு 60 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 61 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இனிய நாளில் தீக்கதிர் வாசகர்கள், ஆசிரியர் குழு, செய்தியாளர்கள், நிர்வாகப் பிரிவு உள்ளிட்ட மதுரை, சென்னை,கோவை, திருச்சி, எண்மப் பதிப்பு என 5 பதிப்புகளிலும் பணியாற்றும் தொழிலாளர் தோழர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் கட்சியின் […]

The post ”தீக்கதிரின் சுடரொளி திசையெங்கும் பரவட்டும்..!” கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.

]]>
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிர் ஏடு வைர விழா கண்ட பெருமிதத் தோடு 60 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 61 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இனிய நாளில் தீக்கதிர் வாசகர்கள், ஆசிரியர் குழு, செய்தியாளர்கள், நிர்வாகப் பிரிவு உள்ளிட்ட மதுரை, சென்னை,கோவை, திருச்சி, எண்மப் பதிப்பு என 5 பதிப்புகளிலும் பணியாற்றும் தொழிலாளர் தோழர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தீக்கதிர் ஏடு கடந்து வந்த 60 ஆண்டுகள் என்பது வெறும் ஆண்டுக் கணக்கல்ல. பாட்டாளி வர்க்கத்திற்காக அயராமல் படை நடத்தி வந்துள்ள வீர வரலாற்றின் வியத்தகு பக்கங்கள். ஊடக உலகில் உண்மையின் பேரொளி என்ற முத்திரை வாசகத்துடன் வெளிவந்து கொண்டிருக்கும் தீக்கதிர், கடந்து வந்த பாதை என்பது மலர்களால் அலங்கரிக்கப்பட்டது அல்ல; நெருப்பு ஆற்றை நீந்திக் கடந்த நீண்ட வரலாறாகும்.

இந்திய பொதுவுடமை இயக்கத்துக்குள் கடந்து வந்த சித்தாந்தப் போராட்டத்தில் உருவானது தீக்கதிர் ஏடு. தோழர் என்.அப்பு என்ற அற்புதசாமியை ஆசிரியராகக் கொண்டு 1963 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதியன்று தீக்கதிர் தனது புரட்சிக்கரப் பயணத்தை துவங்கியது. ‘கோவை தொழிலாளி வர்க்கம் கொடுத்த செந்தீக்கதிரை உயர்த்திப் பிடித்திடுவோம்’ என்ற வாசகத்துடன் முதல் ஏடு வெளியானது. கோவை தொழிலாளர்கள் கொடுத்த நிதியுதவியுடன் சென்னையில் அச்சடிக்கப்பட்டு, முதல் ஏடு வெளியானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான பிறகு, கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக தீக்கதிர் மாறியது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக மாறிய போது, இன்றும் நம்மோடு வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிற தோழர் என்.சங்கரய்யா ஆசிரியராக இருந்தார். நிர்வாகப் பொறுப்பினை வி.பி.சிந்தன் ஏற்றார். 1969 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் மதுரைக்கு மாற்றப்பட்ட போது, தீக்கதிர் அலுவலகமும் மதுரையிலிருந்து செயல்படத் துவங்கியது. 1971 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தீக்கதிர் நாளேடாக மாறியது. அது முதல், தொடர்ந்து நாளேடாக வெளி வந்து கொண்டிருக்கிறது.

1975 இல் அவசரநிலை காலம் அறிவிக்கப்பட்ட நிலையில், தீக்கதிர் ஏடு இரட்டைத் தணிக்கை கொடுமைக்கு ஆளானது. அன்றைக்கு ஜனநாயக தீபத்தை அணையாமல் உயர்த்திப் பிடித்ததில் தீக்கதிருக்கு பெரும் பங்கு உண்டு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, சமூக விரோதிகளால் மதுரை தீக்கதிர் அலுவலகம் தீக்கிரையானது. ஒருமுறை, தீ விபத்துக்கு உள்ளானது. அப்போதும்கூட, ஒருநாள்கூட தடைபடாமல் தீக்கதிரை கொண்டு வந்த பெருமை அதில் பணியாற்றிய தொழிலாளர்களைச் சாரும். கொரோனா முடக்க காலத்திலும்கூட தீக்கதிர் முடங்கி விடவில்லை. சில மாதங்கள் நாளேடுகளே வெளிவராத நிலையில், எண்ம பதிப்பாக தன்னுடைய பணியை இடையறாது தொடர்ந்தது தீக்கதிர் ஏடு. மதுரையைத் தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி என நான்கு பதிப்புகளாக வெளிவரும் தீக்கதிர், தற்போது எண்மப் பதிப்பாகவும், செயலி, முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் ஆப், யூடியூப் என அனைத்து சமூக ஊடக வடிவிலும் உலகம் முழுவதும் உண்மையின் பேரொளியை பரப்பி வருகிறது.

ஊடக உலகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. மாறிவரும் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொண்டு தீக்கதிரும் தன்னை மேம்படுத்திக் கொண்டு வந்துள்ளது. ஆனால், ஒருபோதும் தன்னுடைய வர்க்க நிலைபாட்டில் சமரசம் செய்து கொண்டதில்லை. இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்கள் ஊடக ஜனநாயகத்தை முடக்க முயல்கிறார்கள். கார்ப்பரேட் மயமாகிப் போன ஊடகங்கள் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக தினம் தினம் மாரீச யுத்தம் நடத்தி வருகிறது. பாட்டாளி வர்க்கச் செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன பெரும்பாலான ஊடகங்கள். இந்தப் பின்னணியில் தமிழக உழைக்கும் மக்களின் வாளும் கேடயமுமாக பணியாற்றி வருகிறது நம்முடைய தீக்கதிர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடாக மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக இடதுசாரி சக்திகளின் பெருங்குரலாக பெருமுழக்கம் செய்கிறது தீக்கதிர். கட்சிப் பத்திரிகை கட்சியின் அமைப்பான ‘என்று பிரகடனம் செய்த மாமேதை லெனின் அவர்கள் நடத்திய இஸ்க்ரா’ என்ற ஏட்டின் தாக்கத்தினால் தீக்கதிர் என்று பெயரிடப்பட்ட இந்த ஏடு, அநீதிகளை சுட்டெரிக்கும் நெருப்பாகவும், உழைக்கும் மக்களின் பேரரணாகவும் செயல்படுகிறது. குரலற்றவர்களின் குரல்தான் தீக்கதிர். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர், உரிமைகள் மறுக்கப் பட்டோர், இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பு மக்களின் போராட்டத்திற்கான போர்க்கருவியாக விளங்குகிறது தீக்கதிர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடாக மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக இடதுசாரி சக்திகளின் பெருங்குரலாக பெருமுழக்கம் செய்கிறது தீக்கதிர். கட்சிப் பத்திரிகை கட்சியின் அமைப்பான ‘என்று பிரகடனம் செய்த மாமேதை லெனின் அவர்கள் நடத்திய இஸ்க்ரா’ என்ற ஏட்டின் தாக்கத்தினால் தீக்கதிர் என்று பெயரிடப்பட்ட இந்த ஏடு, அநீதிகளை சுட்டெரிக்கும் நெருப்பாகவும், உழைக்கும் மக்களின் பேரரணாகவும் செயல்படுகிறது. குரலற்றவர்களின் குரல்தான் தீக்கதிர். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர், உரிமைகள் மறுக்கப் பட்டோர், இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பு மக்களின் போராட்டத்திற்கான போர்க்கருவியாக விளங்குகிறது தீக்கதிர்.

கட்சியின் மாநிலத் தலைவர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சந்தா சேர்ப்பு பணியில், இந்த 10 நாளும் மொத்தமாக முழுவீச்சுடன் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு, பணிகள் உற்சாகமாக நடந்து வருகின்றன. பொய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக, மதவெறி சக்திகள் 24 மணி நேரமும் இயங்கி வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், அவர்களது பொய்த் தயாரிப்புப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதை எதிர்கொள்ள வேண்டுமானால், உழைக்கும் மக்கள் கையில் உள்ள உருக்கு போன்ற ஆயுதம்தான் தீக்கதிர். இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, பன்முகத்தன்மை உள்ளிட்ட விழுமியங்களை பாதுகாக்கவும் தமிழ், தமிழ்நாட்டின் நலன் காத்து நிற்கவும் தீக்கதிரின் பணி இன்றியமையாதது. வீதி விதியாக, வீடு வீடாக செல்வோம்! தீக்கதிரின் சந்தாதாரர்களை பன்மடங்காக்குவோம்! தீக்கதிரின் சுடரொளி திசையெங்கும் பரவட்டும்!

The post ”தீக்கதிரின் சுடரொளி திசையெங்கும் பரவட்டும்..!” கே.பாலகிருஷ்ணன் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8a%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a/feed/ 0
’’டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களை 20,000 ஆக உயர்த்துக..!’’ முதமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கடிதம் https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%af%8d-4-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%258e%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25af%2582%25e0%25ae%25aa%25e0%25af%258d-4-%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%af%8d-4-%e0%ae%a4/#respond Thu, 15 Jun 2023 08:09:29 +0000 https://madrasmurasu.com/?p=3921 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (15.06.2023) முதலமைச்சர் திருமிகு மு.க. ஸ்டாலின்-க்கு எழுதியுள்ள கடிதம்: கொரோனா தொற்று காரணமாக 2019, 2020, 2021 ஆகிய மூன்று ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் எந்த தேர்வும் நடைபெறவில்லை. கொரோனா தொற்று குறைந்த பிறகு கடந்தாண்டு தாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியிடப்பட்டு Group -1, Group – 2, Group 2-A, Group – 4 ஆகிய தேர்வுகள் […]

The post ’’டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களை 20,000 ஆக உயர்த்துக..!’’ முதமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கடிதம் first appeared on Madras Murasu.

]]>
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (15.06.2023) முதலமைச்சர் திருமிகு மு.க. ஸ்டாலின்-க்கு எழுதியுள்ள கடிதம்:

கொரோனா தொற்று காரணமாக 2019, 2020, 2021 ஆகிய மூன்று ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் எந்த தேர்வும் நடைபெறவில்லை. கொரோனா தொற்று குறைந்த பிறகு கடந்தாண்டு தாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியிடப்பட்டு Group -1, Group – 2, Group 2-A, Group – 4 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. Group 4 தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவு இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. Group – 4 க்கான காலிப் பணியிடங்கள் 10,117 என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10,000 என்கிற அளவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல், கடந்த ஆண்டுதான் தேர்வு நடத்தப்பட்டு இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளில் தேர்வுகள் நடத்தப்படாத காரணத்திலும், ஓய்வு பெற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், கொரேனா ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பினை இழந்த இளைஞர்கள் அரசுப் பணிக்கு முயற்சித்து வருவதாலும் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்பொழுது விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்திற்கு அதிகமாகவும் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்திற்கு அதிகமாகவும் உள்ளது.

அரசுப்பணியில் சேர இளைஞர்களுக்கான பிரதான வாய்ப்பாக இருப்பது டிஎன்பிஸ்சிதான். கொரோனா காலத்தில் அறிவிக்கப்படாத பணியிட வாய்ப்புகள் மற்றும் உருவாகியிருக்கும் கூடுதல் காலிப் பணியிடங்களையும் கணக்கில் கொண்டால் தற்போது மூன்றரை லட்சத்திற்கு மேல் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை தற்போது அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களான மின்சாரம், போக்குவரத்து, ஆவின் போன்ற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், சமீபத்தில் குரூப் 4 தேர்விற்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதில் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் இடம் பெறவில்லை என்பது அந்த இளைஞர்களுக்கு ஏமாற்றத்தையும் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், தமிழகத்தில் 3.5 லட்சத்திற்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், கொரோனா காலத்தில் அறிவிக்கப்படாத பணியிட வாய்ப்புகள் மற்றும் உருவாகியிருக்கும் கூடுதல் காலிப்பணியிடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து காலிப் பணியிடங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்காலத்தில் நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அதேசமயம், தற்போது அறிவிக்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள 10,000 காலிப்பணியிடங்களை குறைந்தபட்சம் 20,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்து அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிட வேண்டும்.

The post ’’டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களை 20,000 ஆக உயர்த்துக..!’’ முதமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கடிதம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%af%8d-4-%e0%ae%a4/feed/ 0