acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post குடிமைப்பணி (ஐஏஎஸ்) தேர்வெழுதும் மாணவர்களுக்கு ரூ.7500 ஊக்கத்தொகை அமைச்சர் உதயநிதி வழங்கினார் first appeared on Madras Murasu.
]]>UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு
இந்நிலையில் 2023-24க்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசுக் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலை தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.7,500 வீதம், பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது சமீப காலமாக UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்க தமிழக அரசால் எடுக்கப்பட்டிருக்கும் மாபெரும் முயற்சியாகும்.
கல்வி ஊக்கத்தொகை
இதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணி முதல்நிலை தேர்வு முடிவுகள் 12.06.2023 அன்று வெளியான நிலையில் அதில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு, இதுவரை 435 மாணவர்களுக்கு தலா ரூ.25000 வீதம் ரூ.1,08,75,000 (ரூபாய் ஒரு கோடியே எட்டு லட்சத்து எழுபத்தையாயிரம்) முதன்மைத் தேர்வுக்கு தயாராவதற்கான ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையானது, மாணவர்களை தேர்வுக்குத் தயாராகும் செலவீனங்களிலிருந்து விடுவித்து, தேர்வின் அடுத்தடுத்த நிலைகளை வெற்றிகொள்ள ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாததிற்கு ரூ.7500
கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி போட்டித்தேர்வு பிரிவால் நடத்தப்பட்ட ஒன்றிய அரசின் முதல்நிலை தேர்வுக்கான உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு (UPSC Prelims Scholarship Exam) நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 52,225 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 32,638 மாணவர்கள் ஊக்கத்தொகைக்கான தேர்வை எழுதினர். அத்தேர்வில் தேர்வான 1000 மாணவர்களுக்கு இனி வரும் 10 மாததிற்கு ரூ.7500 வீதம் என ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும்.
1000 மாணவர்
இதன் தொடர்ச்சியாக, UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவானது கடந்த 10.09.2023 அன்று அரசு தேர்வுகள் இயக்ககம், நடத்தியது. இத்தேர்வுக்கான முடிவுகள் 27.09.2023 அன்று வெளியான நிலையில், 7.10.2023 முதல் 10.10.2023 வரை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் மாத ஊக்கத்தொகை வழங்கும் விழா இன்று (14.10.2023), சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
அமைச்சர் உதயநிதி
குடிமைப் பணிகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களை செலவுகளின் அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் இத்திட்டமானது சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வருவதால், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்விழாவுக்கு தலைமை வகித்து, மாணவர்களுக்கு முதல் மாத ஊக்கத்தொதைக்கான வரைவோலையினை வழங்கினார்.
குறிப்பு: தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்வது, ஊக்கத்தொகை பெறுவது, பாடம் படிப்பது தொடர்பாக https://www.civilservicecoaching.com/ என்ற இணையத்தளத்தை பார்க்கவும்.
The post குடிமைப்பணி (ஐஏஎஸ்) தேர்வெழுதும் மாணவர்களுக்கு ரூ.7500 ஊக்கத்தொகை அமைச்சர் உதயநிதி வழங்கினார் first appeared on Madras Murasu.
]]>The post ’’வன்னியர் சமூகத்தினருக்கு இலவச விடுதியுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்புகள்..!’’ ஆகஸ்ட் 27 கடைசி நாள் first appeared on Madras Murasu.
]]>இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவ மாணவிகள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை நேரிலோ அல்லது கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ 27.08.2023 தேதிக்குள் அனுப்புமாறு அந்த அற்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள செங்கல்வராய நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும். 8807778029, 9342888707 என்ற எண்களில் கூடுதல் விபரங்களைப் பெறலாம். அறக்கட்டளை செயலாளரை 9840794202 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு http://ptleecntrust.com/ என்ற இணையத்தையும் பார்க்கலாம். P T Lee Chengalvaraya Naicker IAS Academy (Study Centre For Competitive Examinations) விண்ணப்பம் http://ptleecntrust.com/pdf/appias.pdf என்ற லிங்கில் உள்ளது. Email: ptleecniasacademy@gmail.com
The post ’’வன்னியர் சமூகத்தினருக்கு இலவச விடுதியுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்புகள்..!’’ ஆகஸ்ட் 27 கடைசி நாள் first appeared on Madras Murasu.
]]>The post ’’ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வு – 1,525 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தேர்வு..!’’ first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், நான் முதல்வன், திட்ட இயக்குநர் (போட்டி தேர்வுகள்) வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து தரும் வகையில் ஒரு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும்!
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இது சமீப காலமாக UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்க தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்டிருக்கும் மாபெரும் முயற்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை 10.09.2023 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.
ஏற்கனவே, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான (சென்னை ஆர்.ஏ.புரம், கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் ம் மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகம்) நுழைவுத் தேர்வும் இதில் ஒருங்கிணைக்கப்படுகிறது.
www.naanmudhalvan.tn.gov.in – முழுவிபரம்..!
இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்து பார்த்து, 02.08.2023 அன்று முதல் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2023 ஆகும்.

முக்கிய நாட்கள்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி – 02.08.2023
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி – 02.08.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 17.08.2023
நுழைவுச் சீட்டு வெளியீடு – 30.08.2023
தேர்வு நாள் – 10.09.2023 (10.00 am – 1.00 pm)
கல்வித் தகுதி:
குறைந்தபட்ச கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதெனும் ஒரு இளநிதல பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி (01.08.2024 அன்று):
புதியவர்களுக்கு (50 இடங்கள்):
குதறந்தபட்சம் – 21 ஆண்டுகள்
அதிகபட்சம் – 22 ஆண்டுகள் *
*(மருத்துவம், ஒருங்கிந்த பட்டப் படிப்பு, கால்நடை மருத்துவம்
போன்றவற்றில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பின்
போது உரிய சான்றுகதளச் சமர்ப்பித்தால் வயது தளர்வு வழங்கப்படும். வயது
தளர்வு தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு திறன்
மேம்பாட்டு கழகத்திற்கு (TNSDC) உண்டு.)
குறைந்தபட்ச வயது: 21
அதிகபட்ச வயது:
அ) ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/ ஆதிதிராவிடர் (அருந்ததியர்) 37
வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
ஆ) மாற்றுத்திறனாளி மாணவர்கள் எந்த வகுப்பைச் சார்ந்தவராக
இருப்பினும் 42 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
இ) பிற்படுத்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) /
மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 35 வயதுக்கு
மிகாதவராக இருக்க வேண்டும்.
ஈ) பொதுப்பிரிவினர் 32 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
தேர்வுத் திட்டம்:
கொள்குறி வகை– 150 (100 பொது அறிவு + 50 CSAT)
* குறிப்பு :
1. தவறான பதில்களுக்கு எதிர் (மைனஸ்) மதிப்பெண்கள் இல்லை.
2. கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும்
பாடத்திட்டம்:

மேற்குறிப்பிடப்பட்ட தேர்வு மதிப்பெண், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தின் (AICSCC) விண்ணப்பதாரர்களையும் தேர்வு செய்யப் பயன்படுத்தப்படும். அதாவது, சென்னை ஆர்.ஏ.புரத்தில் இயங்கி வரும் மையத்தின் முழுநேரப் பயிற்சிக்கு 225 நபரும், பகுதி நேரப் பயிற்சிக்கு 100 நபரும், கோயம்புத்தூரில் முழு நேர பயிற்சிக்கு 100 நபரும், மதுரையில் முழு நேரப் பயிற்சிக்கு 100 நபரும் என மொத்தம் 525 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே, மேற்குறிப்பிட்ட தேர்வு எழுதும் போட்டித்தேர்வாளர்கள், AICSCC மையத்தில் பயிற்சி பெற விரும்பினால் விண்ணப்பத்தில் பயிற்சி பெற விரும்பும் மையத்தினை குறிப்பிட வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு Phone: 9043710214 / 9043710211 Email: nmcegrievances@naanmudhalvan.in என்ற எண்ணிலும் இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
The post ’’ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வு – 1,525 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தேர்வு..!’’ first appeared on Madras Murasu.
]]>The post ’’குடிமைப் பணி, வனப் பணி முதல் நிலைத் தேர்வு ரிசல்ட் வெளியானது..!’’ first appeared on Madras Murasu.
]]>தேர்வு விதிகளின் படி, இந்த அனைத்து தேர்வர்களும் முதன்மைத் தேர்வு 2023-க்காக விரிவான விண்ணப்பம் ஃபார்ம் -1 (டிஏஎப்-1)-1ல் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள், விண்ணப்ப தேதி, சமர்ப்பிப்பு ஆகிய விவரங்கள் ஆணையத்தின் இணைய தளத்தில் அறிவிக்கப்படும்.
இறுதித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பிறகு, முதல்நிலைத் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண்கள், கட்-ஆஃப் மதிப்பெண்கள், விடைகள் ஆகியவை ஆணையத்தின் இணையதளமான https://upsc.gov.in-ல் வெளியிடப்படும்.
தேர்வர்கள், தங்களுக்கானத் தகவல்கள், தெளிவுகள் ஆகியவற்றை புதுதில்லி ஷாஜகான் சாலையில் உள்ள டோல்பூர் இல்லத்தில் உள்ள தேர்வுக்கூடக் கட்டிடம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் அணுகி தெரிந்து கொள்ளலாம். மேலும் 011-23385271, 011-23098543 அல்லது 011-23381125 என்ற தொலைப்பேசி எண்கள் மூலம் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.upsc.gov.in/
மொத்தம் 1,105 காலிப்பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் பலலட்சம் பேர் எழுதினார்கள். அதில், முதல் நிலைத்தேர்வில் பங்கேற்றவர்களில் 14,624 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களது விபரம் தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது.
குடிமைப் பணி விபரம்:
(i) Indian Administrative Service
(ii) Indian Foreign Service
(iii) Indian Police Service
(iv) Indian Audit and Accounts Service, Group ‘A’
(v) Indian Civil Accounts Service, Group ‘A’
(vi) Indian Corporate Law Service, Group ‘A’
(vii) Indian Defence Accounts Service, Group ‘A’
(viii) Indian Defence Estates Service, Group ‘A’
(ix) Indian Information Service, Group ‘A’
(x) Indian Postal Service, Group ‘A’
(xi) Indian P&T Accounts and Finance Service, Group ‘A’
(xii) Indian Railway Protection Force Service, Group ‘A’
(xiii) Indian Revenue Service (Customs & Indirect Taxes) Group ‘A’
(xiv) Indian Revenue Service (Income Tax) Group ‘A’
(xv) Indian Trade Service, Group ‘A’ (Grade III)
(xvi) Indian Railway Management Service, Group ‘A’
(xvii) Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade)
(xviii) Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service (DANICS), Group ‘B’
(xix) Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service (DANIPS), Group ‘B’
(xx) Pondicherry Civil Service (PONDICS), Group ‘B’
(xxi) Pondicherry Police Service (PONDIPS), Group ‘B’
வனத்துறை: வனப்பணி: (IFS)
குடிமைப் பணிக்கும் வனத்துறைக்கும் பொதுவானதுதான் இந்த முதல் நிலைத்தேர்வு. இதில், விண்ணப்பத்தாரர்கள் விருப்பம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் வனத்துறை முதன்மைத் தேர்வுக்கு (மெயின்) 1,958 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். இந்திய வனத்துறை அதிகாரி (Indian Forest Service) பணிக்கு 150 பேர் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். வனத்துறை முதன்மைத் தேர்வு, அதன்பிறகு நேர்முகத் தேர்வு நடைபெறும். வனத்துறை அதிகாரி இறுதி பட்டியல் வெளியாகும்.
The post ’’குடிமைப் பணி, வனப் பணி முதல் நிலைத் தேர்வு ரிசல்ட் வெளியானது..!’’ first appeared on Madras Murasu.
]]>The post ஐ.ஏ.எ.ஸ் தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர் சூரஜ்..!’’ வீல் சேரில் வாழ்ந்தவரின் வெற்றிச் சரித்திரம் first appeared on Madras Murasu.
]]>யுபிஎஸ்சி நடத்தும் குடிமைப் பணியாளர் தேர்வில் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி), ஐபிஎஸ் (இந்திய காவல் பணி), ஐஎஃப்எஸ் (இந்திய வெளியுறவு பணி) மற்றும் குரூப்-ஏ, குரூப்-பி பணியிடங்களுக்கான குடிமைப் பணிகளுக்கானத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி), முதன்மைத் தேர்வு (மெயின்) மற்றும் ஆளுமைத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.
இதில் முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி நடத்தப்பட்டு, அதே மாதத்தில் தேர்வு முடிவுகளும் வெளியிடப் பட்டன. முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 16 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, டிசம்பர் 6-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது. இறுதித் தேர்வான ஆளுமைத் தேர்வு கடந்த 18-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த 23.5.2023 அன்று வெளியிடப்பட்டது.
இதில் அனைத்து வகுப்பினரும் போட்டியிடக்கூடிய பொதுப் பிரிவில் 345 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினர் (EWS ) 99 பேர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC ) 263 பேர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் (SC ) 154 பேர், பழங்குடியினர் (ST ) 72 பேர், மாற்றுத்திறனாளிகள் 41 உள்பட மொத்தம் 933 பேரை குடிமைப் பணிகளில் நியமனம் செய்ய யுபிஎஸ்சி பரிந்துரைத்தது.
சூரஜ் வெற்றிச் சரித்திரம்:
குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றிபெற்றுள்ள ஒவ்வொரு தகுதியான மாணவரின் பயணமும் ஒருவருக்கொருவர் வேறுபட்டது. அதில் ஆயிரம் சுவராஸ்யங்கள் புதைந்து கிடக்கின்றன. 933 பேரில் 917-வது ரேங்க் பெற்ற, உத்திரபிரதேசத்தின் கஸ்வா குரவலியைச் சேர்ந்த சூரஜ் திவாரி (வயது27), ‘நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும், முயற்சி செய்பவர்கள் ஒருபோதும் தோற்க மாட்டார்கள்’ என்பதற்கு உதாரணம். ஏழு கடல் தாண்டியதை விட சிவில் சர்வீஸ் தேர்வில் தகுதி பெறுவதே சூரஜ் திவாரிக்கு பெரிய விஷயமாக இருந்தது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுராஜ், ரயில் விபத்தில் தனது வலது கை, இரண்டு கால்களை இழந்த நிலையிலும், மனம் தளராமல் யுபிஎஸ்சி தேர்வெழுதி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். உ.பி-யில் மெயின்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுராஜ், கடந்த 2017-ஆம் ஆண்டு காசியாபாத்தின் தாத்ரி பகுதியில் நடந்த ரயில் விபத்தொன்றில் சிக்கி தனது வலது கை, இடது கையில் இரண்டு விரல்கள், இரண்டு கால்களையும் இழந்தவர். கை, கால்களை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல், குடிமைப் பணித் தேர்வுக்குப் படித்து, தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார்.
சூரஜ் திவாரியுடன் ஒரு உரையாடலில், அவர் தனது வெற்றி மந்திரத்தைப் பகிர்ந்து கொண்டார். ’’நான் சுயமாகப் படித்தேன். எந்த பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொள்ளவில்லை. படிப்பைத் தவிர வேறு எதிலும் எனது கவனத்தை செலுத்தவில்லை. இந்த வெற்றி ஒன்றே என்னையும் எனது குடும்பத்தையும் காப்பாற்றும் எதிர்காலம் என்று முழுமையாக நம்பினேன். அதில் வெற்றிபெற்றுவிட்டேன். இப்போது பலருக்கு நான் முன்மாதிரி’’ என்கிறார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் சூரஜ். அவரது தந்தை, ராஜேஷ் திவாரி, ஒரு தையல் தொழிலாளி, குராவ்லியில் ஒரு சிறிய சேலை கடை வைத்துள்ளார்.
2017 இல், சூரஜ் புதுடெல்லியில் உள்ள தனது கல்லூரியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது. ஜனவரி 29, 2017 அன்று அவர் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு விபத்தைச் சந்தித்தார். அவரது இரண்டு கால்களும் முழங்காலுக்கு மேல் இருந்தும் வலது கை முழங்கைக்குக் கீழேயும் இழந்ததால், அவர் படுக்கையில் மூழ்கி, அவரது இயற்கை உபாதைகளுக்கு கூட குடும்ப உறுப்பினர்களையே முழுமையாக நம்பியிருந்தார்.
இந்த சோகம் அவரது நடை மற்றும் எழுதும் திறனை மட்டுமல்ல, மனச்சோர்வையும் ஏற்படுத்தியது. சூரஜின் சிகிச்சை 4 மாதங்கள் தொடர்ந்தது. வீட்டின் நிலையும் மோசமடையத் தொடங்கியது, சிறிது நேரம் கழித்து சூரஜின் சகோதரர்களில் ஒருவரும் இறந்தார். இது அவரது வாழ்க்கையின் இருண்ட கட்டம் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறினர். ஆனால், சூரஜ் நிலைமையை தோற்கடித்தார்.
கோவிட்-19 இன் போது, அவர் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார். அவர் தனது முதல் முயற்சியிலேயே எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றார், ஆனால் நேர்காணலுக்கு ஒரு சில மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால் அதற்கு அழைக்கப்படவில்லை. இரண்டாவது முயற்சியில் அவர் தகுதி பெற்றார். முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அவரது வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
சூரஜ் கல்லூரி நண்பர்கள் கூறுகையில், டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி எங்களுடன் படித்தான். படிப்பு வரவில்லை என்பதால் கடைசி 6 மாதம் கல்லூரிக்கு வரவில்லை. பின்னர், பிஏ ருஷ்யன் படிப்பு முடித்தான். சூரஜ் கடின உழைப்பு ஐஏஎஸ் தேர்வெழுதும் பலருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. அவரை உதாரண புருஷ்ன் என்று இப்போதே பலரும் பேசத்தொடங்கி விட்டனர். இப்போது சூரஜ், எங்களுக்கு வழிகாட்டி’’ என்றார்.
சூரஜ், ‘’நன்றாக இருந்த நான், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கால்கள் அகற்றப்பட்ட நிலையில் துடிதுடித்துப் போனேன். எனது வாழ்க்கை பாதையை நிர்ணயித்துக் கொண்டேன். பெற்றோர் நண்பர்கள் துணையுடன் வெற்றி பெற்றுவிட்டேன். உழைப்பு மட்டுமே நிஜம். 2017-க்கு பிறகு எங்கள் வீட்டுக்கு தீபாவளித் திருநாள் இப்போதுதான் திரும்பி வந்ததுள்ளது’’ என்று மகிழ்ச்சியுடன் அம்மா ஆஷா தேவையை பார்த்துக் கொண்டே கூறினார்.
வாழ்த்துகள் சூரஜ்..!
The post ஐ.ஏ.எ.ஸ் தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர் சூரஜ்..!’’ வீல் சேரில் வாழ்ந்தவரின் வெற்றிச் சரித்திரம் first appeared on Madras Murasu.
]]>