acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’காவிரி நீர் – கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம்..!’’ சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது; முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம் first appeared on Madras Murasu.
]]>The post ’காவிரி நீர் – கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம்..!’’ சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது; முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம் first appeared on Madras Murasu.
]]>The post ’’உச்ச நீதிமன்றம் செல்வோம்..!’’ அமைச்சர் துரைமுருகன் first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து மேலும், அந்த அறிக்கையில் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளதாவது:
காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையின்படியும், மாண்பமை உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பின்படியும், நீர்ப்பற்றாக்குறை வருடங்களில் நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் குறைபாடு விகிதாச்சாரத்தின்படி பகிர்ந்து கொள்ளவேண்டும். இதனை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் உச்ச நீதிமன்றம் CWMA மற்றும் CWRC ஆகிய அமைப்புகளை அமைக்க உத்தரவிட்டதன்படி, ஜூன், 2018 முதல் இவ்வமைப்புகள் நடைமுறையில் உள்ளன. தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், மழையளவு குறைந்து இருப்பினும், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு CWRC மற்றும் CWMA ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரின் அளவை குறைபாடு விகிதாசாரத்தின் (pro rata) படி கணக்கிட்டாலும், அவ்வாறு கணக்கிடப்பட்ட அளவை விடக் குறைவாகவே 15 நாட்களுக்கு ஒரு முறை உத்தரவிட்டு வருகின்றன. அதையும் அளிக்க கர்நாடகா மறுப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகத்தான் கருத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய தேதியில் (12.09.2023) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 63.801 டி.எம்.சி. ஆகும். மேலும், செப்டம்பர் மாதத்தில் IMD யின் அறிக்கையின்படி மழை பெய்ய வாய்புள்ளது. இதன் மூலம் சுமார் 10 டி.எம்.சிக்கு மேல் செப்டம்பர் மாதத்தில் கிடைக்கும். இதுதவிர, வடகிழக்கு பருவ மழை காலத்திலும், இந்த 4 அணைகளுக்கு குறைந்தது 30 டி.எம்.சி. நீர் கிடைக்க வாய்புள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, CWRC கர்நாடக அணைகளில் இருந்து நாளை (13.09.2023) முதல் அடுத்த 15 நாட்களுக்கு, வினாடிக்கு 5000 கன அடி வீதம் 6.48 டி.எம்.சி நீர் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இது பற்றாக்குறை விகிதாச்சாரப்படி பார்த்தாலும் மிகக் குறைவு தான். இதையும் கர்நாடக அரசு அளிக்க முடியாது என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல.
உச்சநீதிமன்ற ஆணையின்படி ஒரு ஆண்டில் கர்நாடகா குடிநீருக்காக உபயோகிக்கக்கூடிய நீரின் அளவு (consumptive use) 6.75 டி.எம்.சி மட்டுமே. இதற்காக காவிரியிலிருந்து எடுக்க வேண்டிய நீரின் அளவு 33.75 டி.எம்.சி என்றாலும், அதில் குடிநீர் பயன்பாட்டிற்கு பிறகு காவிரி படுகையில் கர்நாடகா திரும்ப அளிக்க வேண்டிய நீர் (Return flows) 27 டி.எம்.சி ஆகும். நிலைமை இவ்வாறு இருக்க, குடிநீர் தேவை என்ற போர்வையில் கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலே ஆகும்.
இவ்வாறு, ஒரு மூத்த கர்நாடக அமைச்சர் இருமாநில விவசாயிகளின் நலன்களை கருதாமல் கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. உச்ச நீதிமன்றத்தில் இப்பிரச்சனை குறித்து எடுத்துரைத்து, காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்.
இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
The post ’’உச்ச நீதிமன்றம் செல்வோம்..!’’ அமைச்சர் துரைமுருகன் first appeared on Madras Murasu.
]]>The post ’’கருகிய குறுவை நெற்பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம்..!” டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
காவிரியில் போதிய அளவு தண்ணீர் வராததால், காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு கண்களுக்கு எட்டிய வரை எந்த வாய்ப்புகளும் தென்படாததால், அரும்பாடுபட்டு வளர்த்த குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற முடியாதோ? என்ற கவலையிலும், வேதனையிலும் காவிரி படுகை உழவர்கள் ஆழ்ந்துள்ளனர்.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக, மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஜூன் 12&ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டதால், வழக்கத்தை விட அதிகமாக 5.10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை பருவ நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டன. ஆனால், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், கர்நாடக அணைகளில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாததால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே குறுவைப் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. இயற்கை கை கொடுத்தாலோ, உச்சநீதிமன்றம் நீதி வழங்கினாலோ, குறுவை பயிர்களை பெரிய அளவில் பாதிப்பின்றி காப்பாற்றி விடலாம் என்று உழவர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில் எல்லா வாய்ப்புகளும் நழுவி விட்டன; நம்பிக்கைகள் பொய்த்து விட்டன.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த சில வாரங்களாகவே வினாடிக்கு 8000 கன அடிக்கும் குறைவாக தண்ணீர் தான் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த அளவு 6503 கன அடியாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. இன்றைய நிலையில், குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், வினாடிக்கு குறைந்தது 15,000 கன அடி வீதம் காவிரியில் நீர் திறந்து விட வேண்டும். ஆனால், அதற்கு சிறிதளவு கூட வாய்ப்பு இல்லை.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று காலை 46 அடிக்கு கீழாகவும், அணையின் நீர் இருப்பு 15 டி.எம்.சிக்கு கீழாகவும் குறைந்து விட்டன. மேட்டூர் அணையின் நீர்வரத்தும் வினாடிக்கு 3000 கன அடிக்கும் கீழ் சென்று விட்டது. இத்தகைய சூழலில் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் இன்னும் ஒரு சில நாட்களுக்குக் கூட தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை. கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளிலும் சேர்த்து 64 டி.எம்.சி தண்ணீர் இருப்பதால் அம்மாநில அரசு மனம் வைத்தால் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால், வினாடிக்கு 5000 கன அடி வீதம் திறக்கப்படும் தண்ணீரையே, செப்டம்பர் 12&ஆம் நாளுக்குப் பிறகு வழங்க முடியாது என்று கர்நாடகம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. காவிரி சிக்கலில் கடைசி நம்பிக்கையாக இருந்த உச்சநீதிமன்றமும், காவிரி வழக்கை இம்மாதம் 21&ஆம் நாளுக்கு ஒத்திவைத்து விட்டதால், இப்போதைக்கு குறுவை பயிர்களைக் காப்பாற்ற அரசிடமும், உழவர்களிடமும் எந்த தீர்வும் இல்லை.
காவிரி பாசன மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அறுவடை நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு வழியே இல்லை. குறுவைப் பயிர்கள் காப்பாற்றப்படாவிட்டால், உழவர்களுக்கு பேரிழப்பு ஏற்படக்கூடும். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஓரளவு வெற்றியாக நடைபெற்று வருகிறது. அதற்கு முன் காவிரியில் தண்ணீர் கிடைக்காததால் தொடர்ந்து 8 ஆண்டுகள் உழவர்கள் பேரிழப்பை எதிர்கொண்டனர். காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்களுக்கு அதேநிலை மீண்டும் ஏற்படக்கூடாது.
உழவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படாமல் அரசு தான் தடுக்க வேண்டும்.
காவிரியில் தண்ணீர் இல்லாததால் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர்கள் கருகும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட பகுதிகளிலும் கூட தண்ணீர் பற்றாக்குறை காரணமாக போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வரும் வேளாண்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும் கூட, உறுதியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு ஏமாற்றமளித்திருக்கிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் என்.எல்.சி நிறுவனத்தால் குறுவை பயிர்கள் அழிக்கப்பட்ட போது ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதையே அளவுகோலாகக் கொண்டு தண்ணீர் இல்லாமல் கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். விளைச்சல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், பாதிப்பின் மதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post ’’கருகிய குறுவை நெற்பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம்..!” டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.
]]>The post ’’காவிரியின் வரலாறு தெரியாமல் மத்திய அமைச்சர் பேசுகிறார்..! அமைச்சர் துரைமுருகன் first appeared on Madras Murasu.
]]>இது குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில் வருமாறு:
கடந்த இரண்டு மாதகாலமாக கர்நாடகம் தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவித்த அளவுப்படி தண்ணீரை வழங்கவில்லை.
இது குறித்து முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கும், ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் அவர்களை நான் இரண்டுமுறை நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கி இருக்கிறேன்.
காவிரி மேலாண்மை வாரியம் முழுமையாக செயல்படவில்லை!
காவிரியிலிருந்து தண்ணீரை திறந்து விடு என்று கூறுகிற அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்குதான் உண்டு. அந்த வாரியம் கூட்டிய கூட்டங்களில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா அவர்கள் கலந்து கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை அறிவுறுத்த வேண்டும்என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனாலும், காவிரி மேலாண்மை வாரியம் இதுவரையில் முழுமையாக செயல்படவில்லை. நீர் சராசரியாக கிடைக்கும் வருடங்களில் கர்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு திறந்து விடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரை பகிர்ந்து கொள்வதை Pro Rata Basis என்று குறிப்பிடுவார்கள். அந்த பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை செய்யவில்லை. இந்த வாரியம் ஒன்றிய அரசின் கீழ்இயங்குகிறது. எனவேதான் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட கர்நாடகத்தை அறிவுறுத்துமாறு வாரியத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த பணியை வாரியம் செய்யவேண்டும் என்றுதான் தமிழக முதல்வர் அவர்களும் பிரத மருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
அந்த கடிதத்திற்கு பிரதமர் அலுவலகமோ அல்லது ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரோ பதில் அளிக்காத நிலையில், ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் என்பவர், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி, இரண்டும் ஓர் அணியில் இருக்கிறார்கள் ஏன் பிரச்சினையைநேரில்பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.
ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அர்களுக்கு காவிரி பிரச்சினையின் முழு விவரம் தெரியவில்லை என்று நினைக்கிறேன். 1967 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை இப்பிரச்சினை குறித்து பேசிபேசி எந்தமுடிவிற்கும் வர முடியாத நிலையில் தான் ஒன்றிய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு உச்சநீதி மன்றத்திற்கு போய், உச்சநீதிமன்றம் சிலதிருத்தங்களோடு தீர்ப்பு வழங்கிவிட்டபிறகு இரு மாநிலங்களிடையே பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை. பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்திருந்தால் நடுவர் மன்றம் அமைத்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. இவையெல்லாம் நீண்டகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வரலாறு.
உரிமையை நிலைநாட்டுவதில் அவரவர் உறுதி!
‘தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறுவேறு’என்று கிராமங்களில் கூறுவது போல, தோழமையாக இருந்தாலும் தோழமையாக இல்லாவிட்டாலும் அவரவர் உரிமையை நிலை நாட்டுவதில் அவரவர்கள் உறுதியாக இருப்பார்கள். அந்த நிலைப்பாடுதான் தமிழகத்தின் நிலைப்பாடு.
இந்த விவரமெல்லாம் தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் தளபதிக்கு அறிவுரை சொல்வது போல் ஓர் அறிக்கை விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
அடிப்படை வரலாறு தெரியாமல் பேசும் ஒன்றிய அரசு!
இதில் இன்னொரு வேடிக்கை. வேடிக்கையானது மட்டுமல்ல வேதனையானது என்னவென்றால், தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சராகவும், முன்னாள் முதல்வராகவும் இருந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கர்நாடக மாநில முதல்வரோடும், நீர் வளத்து றை அமைச்சரோடும் பேசி தண்ணீரை பெறவேண்டும் என்று தெரிவித்திருப்பதுதான். இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலையில்தான் நடுவர் மன்றம் போனோம், தீர்ப்பு பெற்றிருக்கிறோம். இந்த தீர்ப்பில் ஏதாவது பிரச்சினை என்றால் உச்சநீதி மன்றத்தைத்தான் நாடேவேண்டுமேதவிர, மீண்டும் கர்நாடக மாநிலத்தோடு பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறுவது காவிரி பிரச்சினையின் அடிப்படை வரலாறே தெரியாத தனம் தான். பாவம், அரசியல் பிரச் சினையில் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறார் என்பதைத்தான் அவர் அறிக்கை காட்டுகிறது.
இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
The post ’’காவிரியின் வரலாறு தெரியாமல் மத்திய அமைச்சர் பேசுகிறார்..! அமைச்சர் துரைமுருகன் first appeared on Madras Murasu.
]]>The post ’’செயல்படாத காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை நீக்குக..!’’ பெ. மணியரசன் first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாட்டு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், குறுவைச் சாகுபடியைப் பாதுகாப்பதற்குரிய காவிரி நீரைக் கர்நாடகத்திடம் திறந்துவிடச் செய்வதற்காகப் புதுதில்லி சென்று (05.07.2023), நீராற்றல் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவாத்-ஐ சந்தித்து, மனு கொடுத்துத் திரும்பியுள்ளார்.
ஒன்றிய நீராற்றல் துறை அமைச்சர், தமது செயலாளரை அழைத்துக் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் இவ்வேண்டுகோளைத் தெரிவிக்குமாறு கூறியுள்ளார் என்று தமிழ்நாடு அரசின் செய்தி – மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. நாளேடுகளிலும் இவ்வறிக்கை வந்துள்ளது.
குறுவைப் பயிரைப் பாதுகாக்க முடியுமா என்ற அச்சத்தில் உழவர் பெருமக்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள். மேட்டூர் அணையில் கிடுகிடுவென தண்ணீர் வற்றி, இன்னும் சில நாட்களுக்கே இப்போது திறந்துவிடும் அளவில், காவிரி நீரை குறுவைக்குத் திறந்துவிட முடியும் என்ற அவலநிலை உள்ளது. அதற்குள் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் திறந்துவிடாவிட்டால், ஐந்து இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி காய்ந்து கருகிவிடுமோ என்று உழவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு, மன உளைச்சலில் உள்ளார்கள்.
தமிழ்நாட்டு அமைச்சரோ, எந்த உறுதியும் உடனடி நிவாரணமும் பெறாமல் ஒப்புக்கு மனு கொடுத்துத் திரும்பியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை ஒரு தடவை கூடக் கர்நாடக அரசு, தானே முன்வந்து திறந்து விட்டதில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசை வற்புறுத்தி, தனது மேற்பார்வையில் தண்ணீர் திறந்துவிட்டதும் இல்லை! தமிழ்நாட்டில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட்சிகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தண்ணீரைப் பெற்றுத் தந்ததும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக பருவம் தவறிய பெருமழை பெய்ததால், மிகை வெள்ளம் வெளியேறி, மேட்டூர் அணையை நிரப்பியிருக்கிறது அல்லது தமிழ்நாட்டுப் பாசனத்திற்குத் தண்ணீர் தந்திருக்கிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு இப்போது தலைமை தாங்கும் ஹல்தர், ஏற்கெனவே பணி நிறைவு பெறும் வரை ஒன்றிய அரசின் நீராற்றல் துறையின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். சட்டவிரோதமான முறையில், கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்ட திட்டம் அறிவித்தபோது, அதற்கான திட்ட முழு அறிக்கையை (Detailed Project Report – DPR) தாக்கல் செய்யுமாறு கோரிப் பெற்றவர் இதே ஹல்தர்தான். கர்நாடக அரசின் ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டு விளக்க அறிக்கையை ஹல்தர் தலைமையிலான நீராற்றல் துறைக்கு அனுப்பி வைத்தது. ஹல்தர் அவ்வறிக்கையை ஏற்றுக் கொண்டு, காவிரி மேலாண்மை ஆணையம் அதை விவாதித்து ஏற்க வேண்டும் என்பதற்காக, அதற்கு அனுப்பி வைத்தார்.
பணி நிறைவு பெற்ற பின், அதே ஹல்தர் தான் இப்பொழுது காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருக்கிறார். இவர் ஒரு தடவை கூட உச்ச நீதிமன்றம் மாத வாரியாகத் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தந்ததில்லை. அதற்குரிய நடவடிக்கை எடுத்ததில்லை. ஆனால், காவிரி ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கொடுப்பதை நிகழ்ச்சி நிரலில் சேர்த்து வருகிறார்.
இப்பொழுது தமிழ்நாட்டின் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுமக்கள் மனு கொடுப்பதுபோல் ஒரு மனுவைப் புதுதில்லியில் கொடுத்துவிட்டு வந்துள்ளார். கர்நாடக துணை முதல்வராகவும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ள டி.கே. சிவக்குமார் ஒளிவுமறைவின்றி அண்மையில் புதுதில்லியில் செய்தியாளர்களிடம், காவிரி மேலாண்மை ஆணையம் திறந்துவிடச் சொன்னாலும், கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடாது; எங்கள் அணைகளில் மிகவும் குறைவாக தண்ணீர் இருக்கிறது என்று வெளிப்படையாக அறிவித்தார்.
கர்நாடகத்தில் உண்மையிலேயே வழக்கத்தை விடக் காவிரி நீர் குறைவாக இருந்தால், அதைத் தமிழ்நாட்டுடன் பகிர்ந்து கொள்வதற்குக் காவிரித் தீர்ப்பாயம், பற்றாக்குறை காலப் பகிர்வுத் திட்டத்தையும் (Distress Formula) அறிவித்துள்ளது. அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. அதன்படி, தண்ணீரைப் பெறத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அதற்கு முன், கர்நாடக அணைகளிலும், அம்மாநிலம் புதிதாக உண்டாக்கிக் கொண்ட மற்ற நீர்நிலைகளிலும் இப்பொழுது தண்ணீர் உண்மையில் எவ்வளவு இருக்கிறது என்று கண்டறியத் தமிழ்நாட்டிலிருந்து தகுதியுள்ள ஓர் ஆய்வுக்குழுவைத் தமிழ்நாடு அரசு அனுப்ப வேண்டும்.
தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படாத நிலையில், தாக்கப்பட்டதாக ஒரு வதந்தியை வடநாட்டார் பரப்பிவிட்டபோது, பீகார் அரசு தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்குழு அனுப்பி ஊர் ஊராக புலம் பெயர்ந்த மக்களையும், தமிழ்நாட்டு அதிகாரிகளையும் விசாரித்தது. அதற்குத் தமிழ்நாடு அரசு முழுமையாக ஒத்துழைத்தது. இப்பொழுது கர்நாடகத்தில் உள்ளது தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரசின் ஆட்சி! எனவே, உடனடியாக ஒரு வல்லுநர் குழுவைக் கர்நாடகத்திற்கு அனுப்பி, காவிரி நீர் நிலையின் உண்மை நிலையை அறிந்து, அதற்கேற்ப கோரிக்கை வைக்க வேண்டும்.
இதையெல்லாம் செய்யாமல், கணக்குக் காட்டுகின்ற முறையில் புதுதில்லிக்குப் போய் துரைமுருகன் மனு கொடுத்ததை ஏற்கும் மனநிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களின் உழவர்கள் இல்லை! அத்துடன், செயல்படாத காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை நீக்கிவிட்டு, தமிழ்நாடு அரசும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதியுள்ள ஒருவரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அமர்த்தும்படி தமிழ்நாடு அரசு இந்திய அரசுக்குக் கோரிக்கை வைக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றி டெல்டா மாவட்டக் குறுவைப் பயிரையும், அடுத்த சம்பா சாகுபடியையும் பாதுகாக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
The post ’’செயல்படாத காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை நீக்குக..!’’ பெ. மணியரசன் first appeared on Madras Murasu.
]]>