acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது..!’’ கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கட்சியை வளர்ப்பதற்காக பல கட்டங்களாக விட்டுவிட்டு பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பெரும் பணத்தை செலவு செய்து கட்சியினரை திரட்டி, குறிப்பிட்ட நகர வீதிகளில் அந்தப் பாத யாத்திரை நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றுகிற அண்ணாமலை, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்கிற மமதையில் காழ்ப்புணர்ச்சியோடு சர்ச்சைக்குரிய விஷமத்தனமான கருத்துகளை கூறி வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோர் குறித்து மிக மிக இழிவான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்துகிறார்.
இவரைப் போல இழிவாக கருத்துக் கூறியவர்கள் கடந்த காலங்களில் வரலாற்றிலிருந்து துடைத்தெறிய ப்பட்டது திடீர் அரசியல்வாதியான அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அண்ணாமலையை பொறுத்தவரை ஆட்டைக்கடித்து, மாட்டை கடித்து தற்போது மனிதனை கடிக்க வந்திருக்கிறார்.
தமிழகத்தில் ஈராயிரம் ஆண்டுகளாக ஊறிப் போன சமூக அடக்குமுறைகளை, அநீதிகளை, சாதிய ஏற்றத் தாழ்வுகளை, தீண்டாமை கொடுமைகளை துடைத்தெறிவதற்காக தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டு தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அற்புதமான தலைவர் தந்தை பெரியார். கடவுள் மறுப்பு கொள்கையை பகுத்தறிவின் அடிப்படையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தந்தை பெரியார் பரப்புரை மேற்கொண்டு வந்தார். இதில் மாற்றுக்கருத்து கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.
ஆனால், அண்ணாமலையைப் போல நாகரீகமற்ற முறையில் பெரியாரை விமர்சனம் செய்தது கிடையாது. ரங்கம் கோயிலுக்கு முன்புள்ள பெரியார் சிலையை அகற்றுவது தான் நோக்கம் என்று கூறுகிறார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மகாத்மா காந்தி படுகொலையில் குற்றவாளியான சாவர்க்கர் படத்தை பா.ஜ.க. திறந்து வைத்ததற்கு கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால், அந்தப் படத்தை அகற்ற வேண்டுமென்று கோரி எவரும் போராட்டம் நடத்த முன்வரவில்லை.
காந்தியடிகளை கொன்ற கோட்சேவை தியாகி என்று பிரக்யாசிங் தாகூர் கூறியதற்காக பா.ஜ. அவர் மீது நடவடிக்கை எடுத்ததா? இந்திய விடுதலையைப் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியை இழிவுபடுத்துகிற பா.ஜ.க.வுக்கு என்ன தண்டனை கொடுப்பது ? இதற்கெல்லாம் அண்ணாமலை விளக்கம் கூறுவாரா? சமூகநீதியை பாதுகாத்த பெரியாரையும், காமராஜரையும் இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது.
இத்தகைய அருவெறுக்கத்தக்க அநாகரீக பேச்சுகளினால் பா.ஜ. குழிதோண்டி புதைக்கப்படுவது உறுதி. தமிழக அரசியல் வரலாற்றில் இவர்களது பங்களிப்பை வரலாற்று நூல்கள் மூலம் அறிந்து கொண்டு பேசுவது நல்லது.
இத்தகைய பேச்சுகளினால் கடுமையாக பாதிக்கப்படப்போவது அண்ணாமலை அல்ல. மாறாக, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில்39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே அண்ணாமலையின் பேச்சுகள் உதவப் போகிறது. எனவே, தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் அண்ணாமலை ஆளாவதை எவராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ’’அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது..!’’ கே.எஸ்.அழகிரி first appeared on Madras Murasu.
]]>The post ’’காமராஜரை மறந்த சோனியா காந்தி..!’’ டாக்டர் தமிழிசை ஆதங்கம் first appeared on Madras Murasu.
]]>ஆனால், கிராமப்புற குழந்தைகளுக்கு வசதியாக 18,000 பள்ளிகளைத் திறந்து கல்வியில் சம வாய்ப்பு அளித்ததன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வலுவான அடித்தளத்தை அமைத்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்த முன்னாள் முதல்வர் கர்மவீரர்,கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன்?’’
இவ்வாறு, தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆதங்கத்தை தனது முகநூலில் தெரிவித்துள்ளார்கள்.
The post ’’காமராஜரை மறந்த சோனியா காந்தி..!’’ டாக்டர் தமிழிசை ஆதங்கம் first appeared on Madras Murasu.
]]>The post ’’அனைவருக்கும் வழிகாட்டும் சக்தி காமராஜர்..!’’ பிரதமர் மோடி first appeared on Madras Murasu.
]]>பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:
“திரு கே. காமராஜரின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருமகன், சமூக அதிகாரமளித்தலுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாகும். வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் நலன் மீதான அவரது தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் அர்ப்பணிப்போம் .”
The post ’’அனைவருக்கும் வழிகாட்டும் சக்தி காமராஜர்..!’’ பிரதமர் மோடி first appeared on Madras Murasu.
]]>The post ‘’அதனால்தான், இன்றைக்கும் பெருந்தலைவர் காமராஜர் போற்றப்படுகிறார்; நினைவு கூரப்படுகிறார்..!’’ first appeared on Madras Murasu.
]]>கல்விக்கண் திறந்த காமராஜர்:
படிக்காத மேதையான காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். மெட்ராஸ் மாகாணத்தின் மூன்றாவது முதலமைச்சராக 1954 ஆம் ஆண்டு பொறுப்பு ஏற்றார். அதில் இருந்து 1963 ஆம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். கல்வியே அனைவரையும் முன்னேற்றும் என்பதால் இலவச கல்வியை அறிமுகப்படுத்தினார். படிக்க சென்று விட்டால் வயிற்று பொழப்பிற்கு எங்கே செல்வது என்ற நிலை குழந்தைகளின் பெற்றோர்களிடம் இருந்தது. இதனை போக்க மதிய உணவு திட்டத்தினையும் பள்ளிகளில் கொண்டு வந்தார். அது மட்டுமல்லாமல் அனைவருமே சமம் என்ற எண்ணத்தை மாணவ, மாணவிகளிடம் கொண்டு வர சீருடை திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். ஓவ்வொரு ஊரிலும் பள்ளிக்கூடட்ம் இருக்க வேண்டும் என்று பள்ளிபடிப்புக்காகவே 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்து வைத்தார் காமராஜர்.
காமராஜரின் திட்டங்கள்:
ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையான ஒன்று உணவு. விவசாயமே அதற்கு தீர்வு என்பதால் விவசாயம் மேலோங்கி நிற்க மேட்டூர் கால்வாய் திட்டம், பவானி திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்வள திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அணைகளை கட்டி, நீர் வழித்தடங்களையும் வெட்டி விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். வானம் பார்த்த வறண்ட பூமிகளை வளமாக்கினார். வேலையின்மையைப் போக்க நெய்வேலி நிலக்கரி திட்டம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ், கல்பாக்கம் அணுமின் நிலையம், ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை, கிண்டி டெலி பிரிண்டர் என பல தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் உருவாக்கினார்.
எளிமை மாறாத காமராஜர்:
தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சர் பதவியில் இருந்தும் வாடகை வீட்டில் வசித்து, கதர் ஆடையையே உடுத்திய அரசியல் தலைவர். நம் நாட்டின் வளர்ச்சி இளைஞர்களிடம் உள்ளது என்பதால் தனது முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். கட்யில் இருக்கும் மற்றவர்களும் ஆட்சி நிர்வாகத்திற்கு வர வேண்டும் என்றும் அதற்கு தானே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் முதலமைச்சர் பதவியை துக்கி ஏறிந்தார். கட்சி பணிக்கு திரும்பினார். காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய தலைவராக இருந்து, நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியை வழி நடத்தினார். படிக்காத மேதை காமராஜர், நாட்டின் மூன்று பிரதமர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கும் ஆற்றல் மிக்க அதிகாரத்தை பெற்றிருந்தார். பிரதமர் இந்திரா காந்தியோடு ஏற்பட்ட முரண்பாடுகளால் கட்சியில் இருந்து வெளியேறினார். உடல்நலக்குறைவால், அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
பொற்கால ஆட்சி
தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக விளங்கிய காமராஜர் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றைத் தாரக மந்திரமாகப் பின்பற்றினார். இவற்றையெல்லாம் வலியுறுத்திய காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி, அவர் பிறந்தநாளில் மறைந்து அவரோடு இரண்டறக் கலந்துவிட்டார். காந்தியத்தின் கடைசித் தூண்களுள் ஒன்று சாய்ந்துவிட்டது என்று கூறுவது மிகவும் பொருத்தமாகும். வாழ்நாளில் தனக்கென்று எந்த சொத்தையும் அவர் சேர்த்ததில்லை. ஆனால், நவீனத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பொற்கால ஆட்சி நடத்தி, அடித்தளம் அமைத்த பெருமை காமராஜருக்கு உண்டு. அதன்மூலம் தமிழ்ச் சமுதாயம் அடைந்த பயன்கள் ஏராளம். அதனால்தான், இன்றைக்கும் பெருந்தலைவர் காமராஜர் போற்றப்படுகிறார்; நினைவுகூரப்படுகிறார். காமராஜர் நம்மை விட்டு மறைந்தாலும் அவரது புகழும், பணிகளும் மக்கள் மனதில் என்றுமே நிலைத்து நிற்கும்..!
– தே. சுகன்யா
The post ‘’அதனால்தான், இன்றைக்கும் பெருந்தலைவர் காமராஜர் போற்றப்படுகிறார்; நினைவு கூரப்படுகிறார்..!’’ first appeared on Madras Murasu.
]]>The post ’’காமராஜர் பிறந்தநாளில், 7740 புத்தகங்களைப் பொது நூலகத்துறைக்கு வழங்கினேன்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121-ஆவது பிறந்தநாளான இன்று, நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பங்கேற்று, அவரது புகழைப் போற்றினேன்.

அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக 2017-இல் பொறுப்பேற்றது முதல், என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகளையும் பொன்னாடைகளையும் தவிர்த்து, புத்தகங்களை அளித்திடச் சொல்லியிருந்தேன். அதன்படி என்னை வந்தடைந்த புத்தகங்களில் ஒன்றரை இலட்சம் புத்தகங்களை தமிழ்நாட்டின் பல்வேறு நூலகங்களுக்கும், என்னிடம் புத்தகங்கள் வேண்டி கடிதம் எழுதியவர்களுக்கும் அளித்துள்ளேன்.

அதன் தொடர்ச்சியாக, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்த #கல்விவளர்ச்சிநாள்-இல், 7740 புத்தகங்களைப் பொது நூலகத்துறைக்கு வழங்கினேன்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் – கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு நாள் என இந்நாளில், ‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம்!
The post ’’காமராஜர் பிறந்தநாளில், 7740 புத்தகங்களைப் பொது நூலகத்துறைக்கு வழங்கினேன்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>