Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#கலைஞர்100 - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Sat, 04 Nov 2023 10:12:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி உங்கள் ஊருக்கு எப்போது வருகிறது தெரியுமா..? https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/#respond Sat, 04 Nov 2023 10:04:22 +0000 https://madrasmurasu.com/?p=7376 “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி, கன்னியாகுமரியில் இருந்து இன்று சென்னை நோக்கி புறப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறது இந்த முத்தமிழ்த்தேர். இறுதியாக சென்னை வந்தடைகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முத்தமிழ்த்தேர் எப்போது வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படவேண்டும் என்பதற்காக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்து அறிவித்தார். அதில், “எழுத்தாளர்-கலைஞர்” குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் […]

The post “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி உங்கள் ஊருக்கு எப்போது வருகிறது தெரியுமா..? first appeared on Madras Murasu.

]]>

“முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி, கன்னியாகுமரியில் இருந்து இன்று சென்னை நோக்கி புறப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறது இந்த முத்தமிழ்த்தேர். இறுதியாக சென்னை வந்தடைகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முத்தமிழ்த்தேர் எப்போது வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படவேண்டும் என்பதற்காக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்து அறிவித்தார்.

அதில், “எழுத்தாளர்-கலைஞர்” குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்திவருகிறது.

கன்னியாகுமரி முக்கோணப் பூங்கா

அந்தவகையில், முத்தமிழறிஞர் கலைஞர்  புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பன்முகத்தன்மையினை எடுத்து செல்லும் வகையில், எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி தயார் செய்யபட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தி 04.11.2023 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கன்னியாகுமரி, காந்தி மண்டபம் அருகில் உள்ள முக்கோணப்பூங்காவில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடக்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் “முத்தமிழ்த்தேர்” என்ற அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் 04.11.2023 அன்று முக்கோணப்பூங்கா, பழத்தோட்டம், ஜீரோ பாய்ண்ட் ஆகிய இடங்களிலிலும், 05:11.2023 அன்று முதல்  05:12.2023 வரை கீழ்கண்ட நாட்களில் அந்தந்த மாவட்டங்களிலும் காட்சிப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக முத்தமிழ்த்தேர் வருகை

04.11.2023 -கன்னியாகுமரி
05:11.2023 – திருநெல்வேலி
06.11.2023 -தூத்துக்குடி
07.112023 – விருதுநகர்
08.11.2023 – தேனி
09.11.2023 – மதுரை
10.11.2023 – மதுரை
11.11.2023 – இராமநாதபுரம்
12.11.2023 – தீபாவளி விடுமுறை
13.11.2023- புதுக்கோட்டை
14.11.2023- சிவகங்கை
15.11.2023 – நாகப்பட்டினம்
16.11.2023 – மயிலாடுதுறை
17.11.2023 – திருவாரூர்
18.11.2023 – தஞ்சாவூர்
19.11.2023 – திருச்சிராப்பள்ளி
20.11.2023 – திண்டுக்கல்
21.11.2023 – கோயம்புத்தூர்
22.11.2023 – திருப்பூர்
23.11.2023 – ஈரோடு
24.11.2023 – கரூர்
25.11.2023 – நாமக்கல்
26.11.2023 – சேலம்
27.11.2023 – தருமபுரி
28.11.2023 – கிருஷ்ணகிரி
29.11.2023 – திருப்பத்தூர்
30.11.2023 – திருவண்ணாமலை
01.12.2023 – விழுப்புரம்
02.12.2023 – செங்கல்பட்டு
03.12.2023 – காஞ்சிபுரம்
04.12.2023 – சென்னை

எனவே, தங்கள் மாவட்டங்களில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வருகையின் போது பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், இளம் தலைமுறையினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

The post “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி உங்கள் ஊருக்கு எப்போது வருகிறது தெரியுமா..? first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/feed/ 0
’’காலத்தால் அழிக்கமுடியாத ஒரு கருவூலம்..!’’ விகடன் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/#respond Thu, 21 Sep 2023 04:49:40 +0000 https://madrasmurasu.com/?p=6434 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 20.9.2023 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில், விகடன் குழுமத்தின் சார்பில் “கலைஞர் 100 – விகடனும் கலைஞரும்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது: உரையினை தொடங்குவதற்கு முன்னால், வரவேற்புரை ஆற்றியிருக்கக்கூடிய  சீனிவாசன், இங்கே எடுத்து வைத்திருக்கக்கூடிய உரிமையோடு எடுத்து வைத்திருக்கக்கூடிய, நம்பிக்கையோடு எடுத்து வைத்திருக்கக்கூடிய, அவருடைய கோரிக்கைக்கு ஒரு விளக்கம் சொல்ல விரும்புகிறேன். அவர் எடுத்து வைத்திருக்கக்கூடிய கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை முதலில் நான் தெரிவித்துக் கொள்ள […]

The post ’’காலத்தால் அழிக்கமுடியாத ஒரு கருவூலம்..!’’ விகடன் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 20.9.2023 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில், விகடன் குழுமத்தின் சார்பில் “கலைஞர் 100 – விகடனும் கலைஞரும்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:

உரையினை தொடங்குவதற்கு முன்னால், வரவேற்புரை ஆற்றியிருக்கக்கூடிய  சீனிவாசன், இங்கே எடுத்து வைத்திருக்கக்கூடிய உரிமையோடு எடுத்து வைத்திருக்கக்கூடிய, நம்பிக்கையோடு எடுத்து வைத்திருக்கக்கூடிய, அவருடைய கோரிக்கைக்கு ஒரு விளக்கம் சொல்ல விரும்புகிறேன். அவர் எடுத்து வைத்திருக்கக்கூடிய கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நாங்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் இந்த நூல்கள் வாங்கக்கூடிய விஷயத்தில் நடந்திருக்கக்கூடிய பல்வேறு தவறுகள் இங்கே சொல்லமுடியாது. சொல்வதும் முறையல்ல. ஆனால் அவைகள் எல்லாம் சரிசெய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. சரி செய்வதற்கே இவ்வளவு நாட்கள் ஆகியிருக்கிறது. அதற்குள் நான் போக விரும்பவில்லை. திரு. சீனிவாசன் சொன்னது போன்று ஒளிவு மறைவற்ற நூல்கள் தேர்வு செய்ய online வழியாக விண்ணப்பங்கள் பெற்று அதனை தேர்வு செய்ய நிபுணர்கள் அடங்கிய தேர்வுக்குழு அமைப்பதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கூடுதலாக, இன்னொரு தகவல். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நூல்கள் வாங்குவதற்கு 190 உறுப்பினர்கள் பரிந்துரைக்க, 20 துறை சார்ந்த நிபுணர்கள் தேர்வு செய்து மூன்றரை இலட்சம் புத்தகத்தை 50 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறோம் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கலைஞர் 100 – விகடனும் கலைஞரும்’ என்ற புத்தகத்தை நாங்கள் தயாரித்திருக்கிறோம், அதற்கு நீங்கள் உங்களுடைய அணிந்துரையை வழங்கிட வேண்டும் என்று என்னிடத்தில் கோரிக்கை வைத்தார்கள். இந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்தார்கள். அதைப் பார்த்ததும் நான் மெய் மறந்து போனேன். மெய் சிலிர்த்துப் போனேன். மிகப் பிரமிப்பாக இருந்தது.

இப்போது எனக்கு இருக்கக்கூடிய கவலையெல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் இருந்து இதைப் பார்க்கவில்லையே என்ற அந்த கவலை தான் என்னை இப்போது ஆட்கொண்டிருக்கிறது. அவர் பார்த்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஆனால் அவர் இல்லை என்று சொன்னாலும் அவருடைய அன்பு மகனாக இருக்கக்கூடிய நான் அதைப் பார்த்து அவர் சார்பில், மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன்.

நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை, ஊடகங்களும் – ஊடகவியலாளர்களும் முக்கியமாக கலைஞரை கொண்டாடியாக வேண்டும்.

பத்திரிக்கையாளர் – எழுத்தாளர் – அரசியல் ஆளுமை – திரையுலக கதை வசனகர்த்தா – நாடக நடிகர் – சின்னத்திரை வசனகர்த்தா என்று பன்முக ஆற்றலைக் கொண்டவர் கலைஞர் என்பதால், அவரை ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் அனைவருமே போற்றுவது பொருத்தமான ஒன்று.

அப்படிப்பட்ட கடமையைதான், ஆனந்த விகடன் மறக்காமல் – மறுக்காமல் இன்றைக்கு அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில், இந்த நிகழ்ச்சியை சிறப்போடு நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நிர்வாக இயக்குநர் திரு.சீனிவாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை உங்கள் அனைவரின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்களை பற்றி ‘தி இந்து’ குழுமத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘மாபெரும் தமிழ்க் கனவு’. அதேபோல், தலைவர் கலைஞர் அவர்களை பற்றி தயாரிக்கப்பட்ட ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ போல, விகடன் சார்பில்
‘கலைஞர் 100’ புத்தகத்தை இந்த மேடைகளில், நாம் பார்க்கிறோம், இனி அனைத்து மேடைகளிலும் இதைப் பார்க்கத்தான் போகிறோம்.

இது ஏதோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் – தோழர்கள் – பொறுப்பாளர்கள் மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் – பொதுமக்கள் எல்லோரும் வாங்கிப் படித்துப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

கலைஞர் 100 – வெளியிடுகின்ற ஆனந்த விகடன், இன்னும் சில ஆண்டுகளில் ‘விகடன் 100’ விழாவை காண இருக்கிறது. அதற்கு முன்கூட்டியே இந்த விழாவின் மூலமாக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அந்த நிகழ்ச்சிக்கு நிச்சயமாக என்னை அழைப்பார்கள். நம்முடைய கலைஞானியையும் அழைப்பார்கள். இந்து ராம் அவர்களையும் அழைப்பார்கள். இருந்தாலும் முன்கூட்டியே என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

விகடன் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து திராவிட இயக்கத் தலைவர்களோடு ஆனந்த விகடன் நெருக்கமான நட்பைப் பெற்றிருந்தது. நம்முடைய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு ஏட்டை நடத்தியபோது, அதற்கு அதிகப்படியான விளம்பரங்களை பெற்றுத் தந்தவர், யார் என்று கேட்டால், ஆனந்த விகடனின் பிதாமகரான எஸ்.எஸ். வாசன் அவர்கள்தான்.

அதேபோல் பேரறிஞர் அண்ணா அவர்களும் எஸ்.எஸ்.வாசன் அவர்களும் மிகமிக நெருக்கமாக இருந்தவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்முறையாக முதலமைச்சராக 1967-ஆம் ஆண்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு உள்ளே வருகின்ற நேரத்தில் ‘வருக அண்ணாதுரை’ என்று விகடன் தலையங்கம் தீட்டியது.
அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முதல் மாநாட்டின்போது தனியாக 8 பக்கம் சிறப்புப் பகுதியை வெளியிட்டதும் ஆனந்த விகடன்தான். இங்கே குறிப்பிட்டு நினைவுபடுத்தினார்கள், இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு. பேரறிஞர் அண்ணா அவர்கள் அதை சென்னையில் நடத்தியபோது, அலங்கார ஊர்திகள் தயாரிக்கின்ற பொறுப்பை எஸ்.எஸ்.வாசன் அவர்களிடம்தான் முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள் ஒப்படைத்து இருந்தார்கள்.

அன்றைக்குப் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கலைஞர் அவர்களும், எஸ்.எஸ்.வாசன் அவர்களும் இணைந்து நடத்திய ஊர்வலம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தநேரத்தில், தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய கவிதாஞ்சலி, இன்றைக்கும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். யாரும் அதை மறக்க முடியாது… அதில் கடைசியாக சொல்வார்.

‘இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா’ என்று அந்தக் கவிதை எல்லாரையும் கலங்க வைக்கும்.

இந்தக் கவிதையை கேட்டு அதிகம் கலங்கினார் எஸ்.எஸ்.வாசன் அவர்கள். ‘உலகிலேயே இதயத்தை இரவலாகக் கேட்ட தலைசிறந்த கவிஞர் நீங்கள்தான்’ என்று வாசன் அவர்கள் கலைஞரை பாராட்டினார். இதை கலைஞர் அவர்களே பல மேடைகளில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

அதே நட்பானது எஸ்.எஸ்.வாசன் அவர்களின் புதல்வர் மரியாதைக்குரிய எஸ்.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் தொடர்பு இருந்தது. 1980-ஆம் ஆண்டு ‘ஆனந்த விகடன் பொன்விழா’ நடந்தது. அப்போது அதிமுக ஆட்சி, எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சர். ஆனாலும், அந்த விகடன் பொன்விழாவிற்கு, பல நிகழ்ச்சிகள், அதில் கவியரங்க நிகழ்ச்சிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைத்தான் இந்த விகடன் அழைத்தது.

கலைஞர் பேசினார், அந்தக் கவிதையாகவே சொன்னார். கொள்கையிலே வேறுபாடு இருந்தாலும் – அதைச் சொல்கையிலே பண்பாடு தேவை என்று செய்கையிலே காட்டியவன் விகடன் தானே!” என்று தலைவர் கலைஞர் அவர்கள் கவிதையால் பாராட்டினார்.

“எத்தனையோ அரசியல் மாறுபாடுகள் – கருத்து வேறுபாடுகள் இவற்றிற்கு இடையே எல்லாவற்றையும் கடந்து அன்பும், நட்பும், தூய்மையான பாசமும் இருவரிடையே நிலவிட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு தோழமை வேண்டும் என்றால், அது நானும், பாலுவும் கொண்டுள்ள தோழமைதான்’- என்று தலைவர் கலைஞர் அவர்களே எழுதி இருக்கிறார். அந்தளவிற்கு இருவரும் நட்பாக இருந்தவர்கள்.
மூத்த பத்திரிக்கையாளர், என்னுடைய அன்பிற்குரிய திரு. சோலை அவர்கள் என்ன பற்றி ஒரு புத்தகம் எழுதினார். 2010-ஆம் ஆண்டு விகடன் பிரசுரம்தான் வெளியிட்டது. ‘ஸ்டாலின் – மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில்’ என்ற தலைப்பில் அந்த புத்தக வெளியீட்டு விழா, சென்னை காமராசர் அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

இன்று கலைஞர் 100 நூலை விகடன் தயாரித்து வெளியிடுகிறது. எனவே, இந்த நட்பு என்பது காலம் காலமாக தொடரக்கூடிய ஒரு குடும்ப நட்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது!

இந்தப் புத்தகம் தலைவர் கலைஞர் பற்றிய கருவூலமாக அமைந்திருக்கிறது. இதைப் படிக்கும்போது தலைவர் கலைஞருடைய வாழ்க்கையோடு நாம் பயணிப்பதை போலவே அமைந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், தலைவர் கலைஞர் அவர்களுடைய டைரியைப் போல இருக்கிறது என்றே சொல்லலாம். முக்கியமான காலக்கட்டத்தில், தலைவர் கலைஞர் அவர்கள் அளித்திருக்கக்கூடிய பேட்டிகள், நிருபர்களுக்கு தந்திருக்கக்கூடிய பதில்கள், விகடன் எழுதிய கட்டுரைகள் எல்லாம் இதில் இடம் பெற்றிருக்கிறது.

தன்னுடைய கலைப் பயணம் பற்றி 60 வாரங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியிருக்கிற துணுக்குகளை படித்தாலே ஐம்பது ஆண்டு கால சினிமா உலகத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

1969-ஆம் ஆண்டு அண்ணா மறைவிற்கு பிறகு, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில், “கழகத்தின் முன்னேற்றத்திற்குப் பெருமளவு காரணமாக இருந்த திரு. கருணாநிதியின் ஆர்வமும் ஆற்றலும் அவரது நிர்வாகத்திலும் பிரதிபலித்து, தமிழகம் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று விகடன் உளமார விரும்புகிறான்” – என்று 23.2.1969 தேதியிட்ட விகடன் தலையங்கம் எழுதி இருந்தது.

1989-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தப்போது, ‘கலைஞரே வருக! கருத்தான ஆட்சி தருக’- என்று தலையங்கம் தீட்டியதும் ஆனந்த விகடன்தான். அப்படிப்பட்ட ஆட்சியை தான் கலைஞர் அவர்கள் தந்தார்கள்.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும், கலைஞர் அவர்கள் எடுத்த நிலைப்பாடுகளை இந்த நூலில் நாம் தெரிந்து கொள்ளமுடியும். கலைஞருடைய உழைப்பு, அறிவு, ஆற்றல் பற்றி தெரிந்து கொள்வதற்கு கருவூலமாக இந்த நூல் அமைந்திருக்கிறது. இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் கலைஞரை பற்றிய 108 பதிவுகள் இதில் இடம் பெற்றிருக்கிறது. இதற்கு மேல், மீதியை புத்தகத்தை வாங்கி நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பத்திரிக்கை அதிபர்கள் எல்லாம் பெருமளவு இங்கே குழுமியிருக்கிறீர்கள். எனவே அவர்கள் குழுமியிருக்கக்கூடிய இந்த மேடையில், ஒரு ஆட்சி செயல்படுத்தி வருகிற நல்ல திட்டங்களை மனப்பூர்வமாக ஆதரித்து எழுதுங்கள். அப்படி எழுதினால்தான், நீங்கள் விமர்சிக்கும்போதும், அதற்கு உண்மையான மதிப்பும் மரியாதையும் இருக்கும்.

எதையும் ஆதரித்து எழுதாமல் – விமர்சித்து மட்டுமே எழுதினால், அந்த விமர்சனங்களுக்கு மதிப்பே இருக்காது. சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் அதை சுட்டிக் காட்டுவதும்தான் நடுநிலையான பத்திரிகைக்கு இருக்கக்கூடிய தர்மம்! அதன்படி தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்று மிகுந்த பணிவோடு நான் கேட்டுக்கொள்கிறேன். எனக்காக இல்லை, நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக, இந்த சமுதாயத்திற்காக, இந்த இனத்திற்காக. ஏன் என்றால், இன்று ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. இதை அரசியல்ரீதியாக நாங்கள் எதிர்கொண்டு தடுப்போம். ஆனால், அது மட்டும் போதாது.

ஜனநாயகத்தினுடைய நான்காவது தூணாக இருப்பது, போற்றப்படுவது, பத்திரிகைகள்தான். எனவே, தங்களுடைய கடமையை நீங்கள் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்து, ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் இந்தியாவின் விடுதலைப் போராட்டக் காலத்தில் வீறுகொண்ட போராட்டங்களை ஆதரித்த இதழ்கள்.

1930-ஆம் ஆண்டும் – 1942-ஆம் ஆண்டும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஆனந்த விகடன் நெருக்கடிக்கு உள்ளானது. ‘அடக்குமுறை நீண்டநாள் தலைவிரித்தாட முடியாது’- என்று அப்போது ஆனந்தவிகடன் தலையங்கம் தீட்டியது.
‘இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுங்கள் என்று சொல்வது ஆட்சேபகரமானது என்றால் விகடனும் குற்றவாளிதான்’- என்று அப்போது துணிச்சலாக விகடன் தலையங்கம் எழுதியது!

அதே ஆனந்த விகடனில், கடந்த மாதம் 16.8.2023 இதழில் தீட்டப்பட்ட தலையங்கம் மிகமிக முக்கியமானது. ஒன்றிய அரசால் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பத்திரிகை மற்றும் காலமுறை இதழ்கள் பதிவு மசோதாவை கண்டித்து அந்த தலையங்கம் இருந்தது.

கொடுமையான விதிகளுடன் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய மசோதா, பத்திரிகைச் சுதந்திரத்தை மிக மோசமாக நசுக்கும், அபாயகரமான விதிகளைக் கொண்டுள்ளது என்றும் – இவர்கள் செய்துள்ள திருத்தத்தின் மூலமாக செய்தித்தாள் பதிவாளர் – ஒரு செய்தித்தாள் நிறுவனத்துக்குள் நுழைந்து சோதனையிட முடியும் என்றும் – நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவிலும், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கும் பல அம்சங்கள் உள்ளன என்றும் – ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலை ஒன்றிய அரசு தொடர்ச்சியாகச் செய்து வருகிறது என்றும், ஆனந்த விகடன் கண்டித்து தலையங்கம் தீட்டி இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம், ஒன்றிய அரசு அமல்படுத்திய தகவல் தொழில்நுட்பத் திருத்த விதிகள் 2023-ம், இதேபோன்ற மோசமான அம்சங்களை கொண்டிருந்தது என்று விகடன் தலையங்கம் கண்டித்திருக்கிறது. விமர்சனம் செய்பவர்களின் குரல்வளையை நெரிப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றும் சொல்லி இருக்கிறது விகடன்.

நான் சொல்லவில்லை. விகடன் தலையங்கம் சொல்லி இருப்பதைதான் இங்கே நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதைத்தான் நான் வாசித்தேன். இதைத்தான் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடி என்று சொல்கிறேன். நான் அரசியல் பற்றிப் பேசவில்லை, ஜனநாயகத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.
மணிப்பூர் மாநிலம் நான்கு மாதங்களாக எரிந்து கொண்டு இருக்கிறது. அதை பற்றி நான் விவரிக்க விரும்பவில்லை. அது எல்லாருக்கும் தெரியும். மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று மூன்று வாரங்களாக விகடன் இதழிலேயே தொடர் கட்டுரை வெளியாகி இருக்கிறது. அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்றார்கள். சென்று விட்டு அந்த அறிக்கையையும் கொடுத்தார்கள்.
அப்படி அறிக்கை கொடுத்தவர்கள் மீதே மணிப்பூர் அரசு வழக்கு போட்டிருக்கிறது. எடிட்டர்ஸ் கில்டு அமைப்புக்கே இந்த நிலைமை என்றால், யோசித்துப் பார்க்கவேண்டும். ஏன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கடுமையாக இதை கண்டித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றமாக இருந்தாலும், தேர்தல் ஆணையமாக இருந்தாலும், அரசியல் சட்ட அமைப்புகள் அனைத்தும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்ற இந்த நேரத்தில், ஜனநாயகம் காக்க – அதன் மூலமாக இந்தியாவை காக்க வேண்டிய கடமை என்பது நான்காவது தூணாக இருக்கின்ற பத்திரிகைகளிடம் தான் இருக்கிறது.

ஜனநாயகம் காக்கப்பட்டால் தான் பத்திரிக்கைத் துறை என்பதே எதிர்காலத்தில் இருக்கும் என்பது என்னுடைய அக்கறையுள்ள வேண்டுகோளாக நான் இங்கே சுட்டிக்காட்டுகிறேன். அதை இந்த மேடையில் வைப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதித்தான் எடுத்துச் சொன்னேனே தவிர வேறு ஒன்றும் இல்லை!

காலத்தால் அழிக்கமுடியாத ஒரு கருவூலத்தை கலைஞருக்காக உருவாக்கிக் தந்திருக்கக்கூடிய இந்த நூலை அர்ப்பணித்திருக்கக்கூடிய ஆனந்த விகடன் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் அவர்களுக்கும் – விகடன் பிரசுரம் ஆசிரியர் குழுவுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை, வணக்கத்தை தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த விழாவில், கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடர்புடைய புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மக்கள் நீதிமையம் தலைவர் கமல் ஆகியோர் பார்த்தனர். விகடன் குழுமத்தின் தலைவர் சீனிவாசன், அந்த படங்கள் குறித்து விளக்கினார். இதையடுத்து, விழாவில் கலந்து கொண்டவர்களும் இந்த புகைப்படக் காட்சியைப் பார்த்தனர். அவர்களில் பலர் தங்களுக்கு பிடித்த புகைப்படங்களுக்கு முன், செல்பி எடுத்துக்கொண்டனர். பழைய நினைவுகளை உடன் வந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டனர் விகடன் வாசகர்கள்.

The post ’’காலத்தால் அழிக்கமுடியாத ஒரு கருவூலம்..!’’ விகடன் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
’’கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டிகள்..!’’ திமுக சட்டத் துறை அறிவிப்பு https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%259e%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25af%2582%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25ae%25be-2 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-2/#respond Wed, 20 Sep 2023 05:36:06 +0000 https://madrasmurasu.com/?p=6409 கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக சட்டத் துறை சார்பில் மண்டல வாரியாக பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என்று அதன் விபரப்பட்டியலை சட்­டத்­து­றைச் செய­லா­ளரும் மூத்த வழக்­க­றி­ஞருமான என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அறிவித்துள்ளார். தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் கழ­கத் தலை­வர்­அ­வர்­க­ளின் அறி­வு­ரைக்­கி­ணங்க தி.மு.க. சட்­டத்­து­றைச் சார்­பில் “தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் நூற்­றாண்டு விழா”­வி­னை­யொட்டி மண்­டல வாரி­யாக பேச்­சுப் போட்டி நடை­பெ­று­கி­றது. இது­கு­றித்து தி.மு.க. சட்­டத்­து­றைச் செய­லா­ளர் மூத்த வழக்­க­றி­ஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அறிக்கை வரு­மாறு:– “தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர் […]

The post ’’கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டிகள்..!’’ திமுக சட்டத் துறை அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக சட்டத் துறை சார்பில் மண்டல வாரியாக பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என்று அதன் விபரப்பட்டியலை சட்­டத்­து­றைச் செய­லா­ளரும் மூத்த வழக்­க­றி­ஞருமான என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அறிவித்துள்ளார்.

தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் கழ­கத் தலை­வர்­அ­வர்­க­ளின் அறி­வு­ரைக்­கி­ணங்க தி.மு.க. சட்­டத்­து­றைச் சார்­பில் “தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் நூற்­றாண்டு விழா”­வி­னை­யொட்டி மண்­டல வாரி­யாக பேச்­சுப் போட்டி நடை­பெ­று­கி­றது.

இது­கு­றித்து தி.மு.க. சட்­டத்­து­றைச் செய­லா­ளர் மூத்த வழக்­க­றி­ஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அறிக்கை வரு­மாறு:–

“தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் நூற்­றாண்டு விழா”­வி­னை­யொட்டி தி.மு.க. சட்­டத் துறை­யின் சார்­பில்,சட்­டக் கல்­லூரி மாண­வர்­கள் மற்­றும் மூன்று ஆண்­டு­க­ளுக்­குட்­பட்ட இளம் வழக்­க­றி­ஞர்­க­ளுக்­கான பேச்சு போட்­டி­களை கீழே குறிப்­பிட்­டள்ள அட்­ட­வ­ணை­யில் குறிப்­பிட்­டுள்­ள­ வாறு நடத்­திட திட்­ட­மி­டப் பட்­டுள்­ளது. போட்­டி­கள் தமி­ழில் மட்­டு­மே­ந­டத்­தப்­ப­டும்.

போட்­டி­க­ளுக்­கான தலைப்­பு­கள் பின்­வ­ரு­மாறு :

1. கலை­ஞ­ரின் பார்­வை­யில் சமூக நீதி,

2. கலை­ஞ­ரின் பார்­வை­யில் மாநி­ல­சு­யாட்சி,

3. கலை­ஞ­ரின் பார்­வை­யில் மக­ளிர் முன்­னேற்­றம்,

4. கலை­ஞ­ரின் பார்­வை­யில் தொழில் வளம்,

5. கலை­ஞ­ரின் பார்­வை­யில் கல்வி.

மேற்­சொன்ன இந்த ஐந்து தலைப்­பு­க­ளில் ஏதே­னும் ஒரு தலைப்­பினை போட்டி துவங்­கு­வ­தற்கு முப்­பது நிமி­டங் க­ளுக்கு முன்பு போட்டி நடத்­தும் நடு­வர்­கள் அறி­விப்­பார்­கள். அந்த தலைப்­பினை ஒட்­டியே போட்­டி­யா­ளர்­கள் ஐந்து நிமி­டங்­க­ளுக்­கு­ மி­கா­மல் தமி­ழில் பேசி­ட­வேண்­டும். மாநி­லம் முழு­தும் உள்ள சட்ட கல்­லூ­ரி­களை ஆறு மண்­ட­லங்­க­ளாக பிரித்து, அந்­தந்த மண்­ட­லத்­தில் எந்த தேதி­யில், எந்த ஊரில் போட்­டி­கள் நடை­பெ­றும் என்­பதை கீழே இணைத்­துள்ள அட்­ட­வ­ணை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

போட்­டி­க­ளுக்­கான பரிசு விவ­ரம். ஒவ்­வொரு மண்­ட­லத்­தி­லும் முதல் பரிசு ரூபாய் 50,000/- தங்­கப் பதக்­கம், சான்­றி­தழ், இரண்­டாம் பரிசு – ரூபாய் 25,000/- வெள்­ளிப்­ப­தக்­கம், சான்­றி­தழ், மூன்­றாம் பரிசு – ரூபாய் 15,000 / -தாமி­ரப் பதக்­கம், சான்­றி­தழ், இரண்டு ஆறு­தல் பரிசு – ரூபாய் 5,000/- வெண்­க­லப்­ப­தக்­கம், சான்­றி­தழ். வழங்­கப்­ப­டும்.

ஒவ்­வொரு மண்­ட­லத்­தி­லும் வெற்றி பெற்ற முதல் மூன்று பரிசு பெற்­ற­வர்­க­ளுக்­கான (சட்­டக் கல்­லூரி மாண­வர்­கள் மற்­றும் இளம் வழக்­க­றி­ஞர்­கள்) “மாநில அள­வி­ லான இறு­திப் போட்டி” வரு­கிற 6.12.2023 (புதன்­கி­ழமை) அன்று நீலாங்­கரை, “ஆர்.கே.கன்­வென்­ஷன் சென்­ட­ரில்” நடை­பெ­றும்.

மாநி­லத்­தில் உள்ள சட்­டக் கல்­லூரி முதல்­வர்­கள் தங்­கள் கல்­லூ­ரி­யி­லி­ருந்து பங்கு பெற விரும்­பும் மாண­வர்­க­ளின் பட்­டி­ய­லினை, தங்­கள் மண்­ட­லத்­தின் போட்டி நடை­பெ­றும் நாளுக்­கு­முன்­பு­கீழே குறிப்­பி­டப்­பட்­டுள்ள “பேச்­சுப் போட்டி ஒருங்­கி­ணைப்­பா­ளர்­க­ளி­டம்” ஒப்­ப­டைக்க வேண்­டு­கி­றோம். தவிர்க்க முடி­யாத கார­ணங்­க­ளால் பெயர் அளிக்க முடி­யாத மாண­வர்­கள் போட்டி நடக்­கும் இடத்­தில் நேர­டி­யாக உரிய அடை­யாள அட்டை அல்­லது கல்­லூரி முதல்­வ­ரின் அனு­மதி கடி­தத்­து­டன் கலந்து கொள்­ள­லாம்.

இறு­திப் போட்­டி­யில் கலந்து கொண்டு வெற்றி பெறும் சட்­டக் கல்­லூரி மாண­வர்­கள் மற்­றும் வழக்­க­றி­ஞர்­க­ளுக்கு முதல் பரிசு – ரூபாய் 1,00,000/- தங்­க­ப­தக்­கம், சான்­றி­தழ், இரண்­டாம் பரிசு – ரூபாய் 50,000/- வெள்­ளிப்­ப­தக்­கம், சான்­றி­தழ், மூன்­றாம் பரிசு – ரூபாய் 30,000/- தாமி­ரப்­ப­தக்­கம், சான்­றி­தழ், இரண்டு ஆறு­தல்பரிசு – ரூபாய் 10,000/= வெண்க­லப்­ப­தக்­கம், சான்­றி­தழ்.

பேச்­சுப் போட்டி ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள் கே.எஸ். இர­விச்­சந்­தி­ரன் (சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் 98400-22250), ஜெ. பச்­சை­யப்­பன் – (சட்­டத் துறை துணைச் செய­லா­ளர் 98402-60178 ) கே.சந்­துரு – (சட்­டத் துறை துணைச் செய­லா­ளர் 94440-06999), கே.ஜே.சர­வ­ணன் – (தலை­மைக் கழக வழக்­க­றி­ஞர் 98410-57345)

மண்­டல வாரி­யாக பேச்­சுப் போட்டி நடை­பெ­றும் தேதி, இடம் ஆகிய விவ­ரங்­கள்

30.09.2023 – (மாண­வர்­கள்)

01.10.2023 – (வழக்­க­றி­ஞர்­கள்)

அரசு சட்­டக் கல்­லூரி, செங்­கல்­பட்டு (இடம்), டாக்­டர்.அம்­பேத்­கர் அரசு சட்­டக் கல்­லூரி, பட்­ட­றைப் பெரும்­பு­தூர், திரு­வள்­ளூர் வட்­டம் (ம) மாவட்­டம், பி.எஸ்.அப்­துர் ரஹ்­மான் பல்­க­லைக் கழ­கம், சென்னை, சவிதா பல்­க­லைக் கழ­கம், சென்னை, வேல் டெக் ரங்­க­ரா­ஜன் டாக்­டர்.சகுந்­தலா ஆர் & டி இன்ஸ்ட்­டி­யூட் ஆப் சயின்ஸ் & டெக்­னா­லஜி, சென்னை, விநா­யகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்­டே­சன், காஞ்­சி­பு­ரம் , சாய் பல்­க­லைக்­க­ழ­கம், சென்னை. டாக்­டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்­றும் ஆராய்ச்சி நிறு­வ­னம், மது­ர­வா­யல், சென்னை. பிரிஸ்ட் பல்­க­லைக்­க­ழ­கம், புதுச்­சேரி வளா­கம், புதுச்­சேரி

07.10.2023 – (மாண­வர்­கள்)

08.10.2023 – (வழக்­க­றி­ஞர்­கள்)

அரசு சட்­டக் கல்­லூரி, திரு­நெல்­வேலி (இடம்)

எஸ்.தங்­கப்­ப­ழம், சட்­டக் கல்­லூரி, தென்­காசி (தனி­யார்) , துளசி பெண்­கள் சட்­டக் கல்­லூரி, தூத்­துக்­குடி (தனி­யார்) , முகில், சட்­டக் கல்­லூரி, கன்­னி­யா­கு­மரி (தனி­யார்),

கல­ச­லிங்­கம் அகெ­டமி ஆப் ரிசர்ச் & எஜி­கே­சன், விரு­து­ந­கர்

14.10.2023 – (மாண­வர்­கள்)

15.10.2023 – (வழக்­க­றி­ஞர்­கள்)

அரசு சட்­டக் கல்­லூரி, சேலம் (இடம்)

அரசு சட்­டக் கல்­லூரி, வேலூர் , அரசு சட்­டக் கல்­லூரி, தரு­ம­புரி , அரசு சட்­டக் கல்­லூரி, கோய­முத்­தூர், மத்­திய சட்­டக் கல்­லூரி, சேலம் (தனி­யார்), அரசு சட்­டக் கல்­லூரி, நாமக்­கல்

கேஎம்சி சட்­டக் கல்­லூரி, திருப்­பூர் (தனி­யார்), ஈரோடு சட்­டக் கல்­லூரி, ஈரோடு (தனி­யார்), காரூண்யா பல்­க­லைக் கழ­கம், கோய­முத்­தூர்

21.10.2023 – (மாண­வர்­கள்)

22.10.2023 – (வழக்­க­றி­ஞர்­கள்)

அரசு சட்­டக் கல்­லூரி, மதுரை (இடம்)

அரசு சட்­டக் கல்­லூரி, காரைக்­குடி, அரசு சட்­டக் கல்­லூரி, இரா­ம­நா­த­பு­ரம், அரசு சட்­டக் கல்­லூரி, தேனி, பிரிஸ்ட் பல்­க­லைக்­க­ழக வளா­கம், அர­ச­னூர், சிவ­கங்கை, ஜி.டி.என். சட்­டக் கல்­லூரி, திண்­டுக்­கல் (தனி­யார்)

28.10.2023 – (மாண­வர்­கள்)

29.10.2023 – (வழக்­க­றி­ஞர்­கள்)

டாக்­டர்.அம்­பேத்­கர் அரசு சட்­டக் கல்­லூரி, புதுப்­பாக்­கம்,

செங்­கல்­பட்டு மாவட்­டம் (இடம்), அரசு சட்­டக் கல்­லூரி, விழுப்­பு­ரம்

சரஸ்­வதி சட்­டக் கல்­லூரி, திண்­டி­வ­னம் (தனி­யார்) , பாரத் பல்­க­லைக் கழ­கம், சேலை­யூர், சென்னை.

செட்­டி­நாடு அகெ­டமி ஆப் ரிசர்ச் & எஜி­கே­சன், கேளம்­பாக்­கம், சென்னை.

ஹிந்­துஸ்­தான் இன்ஸ்ட்­டி­யூட் ஆப் டெக்­னா­லஜி & சயின்ஸ், சென்னை

சத்­தி­ய­பாமா இன்ஸ்ட்­டி­யூட் ஆப் சயின்ஸ் & டெக்­னா­லஜி பல்­க­லைக்­க­ழ­கம், ஜேப்­பி­யார் நகர், சென்னை. எஸ்­ஆர்­எம் பல்­க­லைக்­க­ழ­கம், காட்­டாங்­கு­ளத்­தூர், காஞ்­சி­பு­ரம்

வேல்ஸ் இன்ஸ்ட்­டி­யூட் ஆப் சயின்ஸ், டெக்­னா­லஜி & அட்­வான்ஸ்டு ஸ்டடிஸ் (விஸ்­டாஸ்), வேல்ஸ் பல்­க­லைக்­க­ழ­கம், சென்னை. வி.ஐ.டி. பல்­க­லைக் கழ­கம், வேலூர் (சென்னை வளா­கம்)

தமிழ்­நாடு டாக்­டர்.அம்­பேத்­கர் சட்­டப் பல்­க­லைக்­க­ழ­கம், சென்னை.

04.11.2023 – (மாண­வர்­கள்)

05.11.2023 – (வழக்­க­றி­ஞர்­கள்)

அரசு சட்­டக் கல்­லூரி, திருச்­சி­ராப்­பள்ளி (இடம்)

அன்னை தெரசா சட்­டக் கல்­லூரி, புதுக்­கோட்டை (தனி­யார்) , சாஸ்த்ரா பல்­க­லைக்­க­ழ­கம், தஞ்­சா­வூர் , தன­லட்­சுமி சீனி­வா­சன் பல்­க­லைக் கழ­கம், திருச்­சி­ராப் பள்ளி., தமிழ்­நாடு தேசிய சட்­டப் பல்­க­லைக் கழ­கம், திருச்­சி­ராப்­பள்ளி

இவ்­வாறு தி.மு.கழக சட்­டத் துறைச் செய­லா­ளர் என்.ஆர். இளங்கோ, எம்.பி., தெரி­வித்­துள்­ளார்.

The post ’’கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டிகள்..!’’ திமுக சட்டத் துறை அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-2/feed/ 0
’இதழாளர் – கலைஞர்’ தலைப்பில் புகைப்படக் கண்காட்சி..! அரிய புகைப்படங்கள் தர கோரிக்கை https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a4%25e0%25ae%25b4%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%259e%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/#respond Wed, 12 Jul 2023 11:58:44 +0000 https://madrasmurasu.com/?p=5059 முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 22.05.2023 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரின் பரிமாணங்களை போற்றும் வகையில் 12 தலைப்புகளில் குழுக்கள் அமைத்து, நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, “இதழாளர் – கலைஞர்” என்ற தலைப்பிற்கான குழு, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை […]

The post ’இதழாளர் – கலைஞர்’ தலைப்பில் புகைப்படக் கண்காட்சி..! அரிய புகைப்படங்கள் தர கோரிக்கை first appeared on Madras Murasu.

]]>
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 22.05.2023 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரின் பரிமாணங்களை போற்றும் வகையில் 12 தலைப்புகளில் குழுக்கள் அமைத்து, நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, “இதழாளர் – கலைஞர்” என்ற தலைப்பிற்கான குழு, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் 26.06.2023 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநரும், உறுப்பினர் செயலருமான த.மோகன், மற்றும் உறுப்பினர்களான நக்கீரன் கோபால், திரு.விஜய் சங்கர், பாபு ஜெயக்குமார், கோவி.லெனின், மு.குணசேகரன், செந்தில்வேலன், அருண் ராம், இந்து என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், நவீன தமிழ்நாட்டை உருவாக்கியதில் முத்தமிழறிஞர் கலைஞர் பங்கு மிகவும் அளப்பரியது என்று போற்றினார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் பன்முக ஆற்றலையும், மக்களுக்காக செயல்படுத்திய நலத்திட்டங்களையும் வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் “இதழாளர் – கலைஞர்” எனும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் செய்தியாளர் சந்திப்பு, செய்தியாளர்களுடனான தனிப்பட்ட கலந்துரையாடல் போன்ற அரிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

எனவே, ஊடகவியலாளர், பொதுமக்கள் தங்களிடம் மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் ஏதேனும் அரிய புகைப்படங்கள் இருப்பின், அவற்றை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள ஏதுவாக புகைப்படக் கண்காட்சியில் இடம்பெறும் வகையில், அப்புகைப்பட நகல் ஒன்றை jdmemorials@gmail.com எனும் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post ’இதழாளர் – கலைஞர்’ தலைப்பில் புகைப்படக் கண்காட்சி..! அரிய புகைப்படங்கள் தர கோரிக்கை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/feed/ 0
’’கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் அமைச்சர்கள் தலைமையில் 12 குழு..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%259e%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25af%2582%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25ae%25a8 https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8/#respond Mon, 12 Jun 2023 04:22:11 +0000 https://madrasmurasu.com/?p=3720 தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை இருந்த வரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்த நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் ஜுன் 2023 திங்கள் […]

The post ’’கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் அமைச்சர்கள் தலைமையில் 12 குழு..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை இருந்த வரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்த நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் ஜுன் 2023 திங்கள் முதல் ஜூன் 2024 திங்கள் வரை தமிழ்நாடு அரசால் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22.5.2023 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ’’நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி ‘தமிழினத் தலைவர்’ கலைஞரை பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்லாமல், அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக அறிவித்து, நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த விழாக்கள் அமைய வேண்டும். மாதந்தோறும் ஒவ்வொரு பொருளின் அடிப்படையில் இந்த விழாக்களை நடத்திட வேண்டும். பெரிய அளவிலான விழாக்களாக மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும்.  பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாக அமைய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, 2.6.2023 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு, அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக ஆற்றிய பணிகள், நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த குறும்படத்தையும் வெளியிட்டார்.

முத்தமிழறிஞர் கலைஞர், பல்வேறு திறமைகள் கொண்ட பன்முக வித்தகர். அவர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரின் பரிமாணங்களை போற்றும் வகையில்

இதழாளர் – கலைஞர்
எழுத்தாளர் – கலைஞர்
கலைஞர் – கலைஞர்
சமூக நீதிக் காவலர் – கலைஞர்
பண்பாட்டுப் பாசறை – கலைஞர்
ஏழைப் பங்காளர் – கலைஞர்
சட்டமன்ற நாயகர் – கலைஞர்
பகுத்தறிவு, சீர்திருத்தச் செம்மல் – கலைஞர்
நவீன தமிழ்நாட்டின் சிற்பி – கலைஞர்
நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்
தொலைநோக்குச் சிந்தனையாளர் – கலைஞர்
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் – கலைஞர்

இத்தலைப்புகளில் அமைச்சர் பெருமக்கள் தலைமையில் இணைத் தலைவர்கள், உறுப்பினர் செயலர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட 12 குழுக்கள் அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.

இக்குழுக்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முகத்தன்மையை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோருடன் இணைந்து எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் விழாக்களாக அமைய வேண்டும் என்பதற்கான திட்டப் பணிகளை மேற்கொண்டு, அரசுடன் இணைந்து விழாக்களை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

 

The post ’’கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் அமைச்சர்கள் தலைமையில் 12 குழு..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8/feed/ 0
’’பன்முகத் திறன் கொண்ட கலைஞரின் நூற்றாண்டு..!’’ தீக்கதிர் தலையங்கம் https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f-%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95/#respond Sat, 03 Jun 2023 06:45:30 +0000 https://madrasmurasu.com/?p=3302 தமிழ்நாட்டின் முதல்வராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் விளங்கிய கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு இன்று (ஜூன் 3) துவங்குகிறது. நவீன தமிழக அரசியல் வரலாற்றை கலைஞரை தவிர்த்துவிட்டு யாரும் எழுதி விட முடியாது. பன்முகத் திறன் கொண்ட அவர் கலைத்துறையிலும், இலக்கியத்துறையிலும், இதழியல் துறையிலும், நிர்வாகத்துறையிலும் அழுத்தமான முத்திரைகளை பதித்துள்ளார். 1969இல் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக பணியாற்றியுள்ளார். 1957ஆம் ஆண்டில் தமிழக […]

The post ’’பன்முகத் திறன் கொண்ட கலைஞரின் நூற்றாண்டு..!’’ தீக்கதிர் தலையங்கம் first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாட்டின் முதல்வராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் விளங்கிய கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு இன்று (ஜூன் 3) துவங்குகிறது.

நவீன தமிழக அரசியல் வரலாற்றை கலைஞரை தவிர்த்துவிட்டு யாரும் எழுதி விட முடியாது. பன்முகத் திறன் கொண்ட அவர் கலைத்துறையிலும், இலக்கியத்துறையிலும், இதழியல் துறையிலும், நிர்வாகத்துறையிலும் அழுத்தமான முத்திரைகளை பதித்துள்ளார்.

1969இல் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக பணியாற்றியுள்ளார். 1957ஆம் ஆண்டில் தமிழக சட்டப் பேர வைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், தாம் போட்டி யிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

அவசர நிலைக் காலத்தின் போது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு அவர் உறுதியாக பணியாற்றியது என்றென்றும் நினைவு கூரப்படும். அதேபோன்று மாநில உரிமைகளுக்காகவும், மாநில சுயாட்சிக் காகவும் அவர் அயர்வின்றி களமாடியுள்ளார்.

பெரியார் நினைவு சமத்துவபுரம், வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரியில் திருவள்ளுவ ருக்கு சிலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அருந்ததிய அமைப்புகளின் வேண்டு கோளை ஏற்று அருந்ததிய மக்களுக்கு உள்ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக இஸ்லாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை என அவரது தனித்த சாதனைகள் என்றென்றும் தமிழக மக்களால் நினைவு கூரப்படும்.

இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவப் பருவத்திலேயே பொது வாழ்க்கைக்கு வந்த அவர், தனது இறுதிக் காலம் வரை பொது வாழ்வில் பணியாற்றியதன் மூலம் நீண்ட நெடிய பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார்.

தன்னுடைய துடிப்புமிக்க வசனங்களின் மூலம் தமிழ் திரையுலக வரலாற்றில் தனித்தடம் பதித்தவர் அவர். இளம் வயதிலேயே முரசொலி ஏட்டை துவக்கி நடத்திய அவர் இந்தியஅளவில் ஒரு முன்னுதாரணமான ஊடகவியலாளராக விளங்கினார். இலக்கியத்துறையிலும் அவருடைய பங்களிப்பு அசாத்தியமான ஒன்று.

தீக்கதிர் நாளேட்டின் முதன்மையான வாசகர்களில் ஒருவராக விளங்கிய அவர், தீக்கதிர் சுட்டிக்காட்டிய பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். தீக்கதிர் வெளியிட்ட பெரும்பாலான மலர்களுக்கு வாழ்த்துரைவழங்கியுள்ளார்.

மதவெறி சக்திகளுக்கு எதிரான விரிந்து பரந்த களத்தையும், ஒற்றுமையையும் கட்ட வேண்டிய இன்றைய சூழலில் அவர் முன்வைத்த பகுத்தறிவும், சுயமரியாதைக் கருத்துக்களும், மாநில உரிமை முழக்கங்களும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளும் ஜனநாயக சக்திகளுக்கு வலுவூட்டக்கூடியதாக அமைந்துள்ளன. தமிழக அரசியலையும் தாண்டி இந்திய அளவில் மதிக்கத்தக்க தலைவர்களில் ஒருவராக விளங்கிய அவரது நூற்றாண்டு மதச்சார்பற்ற அரசியல் களத்திற்கு வலிமை சேர்ப்பதாக அமையட்டும்.

The post ’’பன்முகத் திறன் கொண்ட கலைஞரின் நூற்றாண்டு..!’’ தீக்கதிர் தலையங்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95/feed/ 0