கனி­மொழி கருணாநிதி எம்.பி., ஆற்­றிய உரை வரு­மாறு:-

“இன்று உலக எழுத்­த­றிவு நாள். இந்த நாளிலே மாபெ­ரும் தமிழ்க் கனவு நிகழ்ச்­சி­யில் உங்­களை எல்­லாம் சந்­திப்­ப­தில் மகிழ்ச்சி. மாபெ­ரும் தமிழ்க் கனவு என்­றால் என்ன? மாணவ மாண­வி­களை சந்­தித்து உரை­யா­டும் நிகழ்­வுக்கு இந்த பெயர் ஏன் வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது?

மாபெ­ரும் தமிழ்க் கனவு என்ற தலைப்­பில் பேர­றி­ஞர் அண்­ணா­வைப் பற்றி அழ­கான ஒரு புத்­த­கம் வெளி­யி­டப்­பட்­டது. அண்­ணாவை பற்றி மற்­ற­வர்­கள் எழு­தி­யி­ருக்­கக் கூடிய கட்­டு­ரை­கள், பேச்சு, செயல்­பா­டு­க­ளின் தொகுப்பு அது.

தமிழ்­நாட்­டில் இரண்டே இரண்டு ஆண்­டு­கள் முத­ல­மைச்­ச­ராக பணி­யாற்­றிய ஒரு தலை­வர், மிகப்­பெ­ரிய குடும்­பத்­தில் பிறக்­கா­மல் ஏழ்மை சூழ்ந்த மிகச் சாதா­ரண குடும்­பத்­திலே பிறந்த ஓர் இளை­ஞர், தன் வாழ்­நா­ளெல்­லாம் புத்­த­கங்­களை நேசித்த ஒரு மனி­தர், தன் வாழ்க்­கையை எப்­படி செதுக்கி, தமிழ்­நாட்­டின் கன­வு­களை செதுக்கி, இன்­று­வரை இந்த நாட்­டில் இருக்­கக் கூடிய அறி­வு­ஜீ­வி­கள் எல்­லாம் போற்­றக் கூடிய, இன்­றும் பாரா­ளு­மன்­றத்­திலே அவ­ரது பேச்­சு­களை மேற்­கோள் காட்­டக் கூடிய அள­வுக்கு ஒரு மனி­த­ரால் தமி­ழ­கத்­தின் கன­வு­களை கட்டி எழுப்ப முடிந்­தது என்­றால் அவர்­தான் பேர­றி­ஞர் அண்ணா.

பேர­றி­ஞர் அண்ணாவின் கனவுகள்!

அந்த பேர­றி­ஞ­ரைப் பற்றி அவ­ரு­டைய கன­வு­க­ளைப் பற்றி நாம் பேசும்­போ­து­தான்… தமி­ழ­கத்­தின் கன­வு­க­ளை­யும் இங்கே இருக்­கக் கூடிய மாண­வர்­க­ளின் கன­வு­க­ளை­யும் ஒன்­றி­ணைக்­கக் கூடிய ஒன்­றாக இந்த மாபெ­ரும் தமிழ்க் கனவு நிகழ்ச்­சியை நம்­மு­டைய முத­ல­மைச்­சர் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார்.

தமிழ்­நாடு எப்­போ­துமே எழுத்தை, கல்­வி­யைக் கொண்­டா­டக் கூடிய ஒரு மாநி­ல­மாக திகழ்­கி­றது. இன்­றைய மாண­வர்­க­ளா­கிய நீங்­கள் எந்த செய்­தி­யை­யும் செல்­போன், சோஷி­யல் மீடியா மூல­மாக உட­னக்­கு­டன் தெரிந்­து­கொள்ள வாய்ப்­பு­டை­ய­வர்­க­ளாக இருக்­கி­றீர்­கள். இப்­ப­டிப்­பட்ட நிலை­யில் உல­கின் மற்ற நாடு­க­ளு­டைய பண்­பா­டு­கள், நாக­ரி­கங்­கள் ஆகி­ய­வற்­றைப் பற்­றி­யெல்­லாம்படிக்­கக் கூடிய தெரிந்­து­கொள்­ளக் கூடிய வாய்ப்பு உங்­க­ளுக்கு இருக்­கி­றது. அப்­ப­டித் தேடும்­போதுஉல­கின் எந்த மொழி­யி­லா­வது எந்த நிலப்­ப­ரப்­பி­லா­வது, எந்த பண்­பாட்­டி­லா­வது கல்­வியை தமிழ் மக்­கள் கொண்­டா­டி­ய­து­போல் கொண்­டாடி இருக்­கி­றார்­களா என்­றால்இல்லை.

ஏனென்­றால் எல்லா இடங்­க­ளி­லும் கல்வி என்­பது மேட்­டுக்­கு­டி­யைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு மட்­டும்­தான். ஒரு காலத்­தில் ஆங்­கி­லே­யர்­கள் வரு­கைக்­குப் பின் சில உயர் குடி­க­ளுக்­கு­ தான் கல்வி என்ற நிலை உரு­வா­கி­யது.

அதற்கு முன்­னால் இருந்தே தமி­ழர்­கள்இந்த மண்­ணில் இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் கல்விஎன்­பது அறிவு என்­பது எழுத்து என்­பது எல்­லோ­ருக்­கும் போய் சேர வேண்­டும் என்று நினைக்­கக் கூடி­ய­வர்­க­ளாக வாழ்ந்­தி­ருக்­கிறார்­கள்.

எண்­ணும் எழுத்­தும் கண்­ணெ­னத் தகும் என்­றார் ஔவை­யார். குறிப்­பிட்ட சில­ருக்கு தான் எண்­ணும் எழுத்­தும் கண்­ணெ­னத் தகும் என்று சொல்­ல­வில்லை, எல்­லோ­ருக்­குமே எண்­ணும் எழுத்­தும் கண் என்று சொன்­னார் ஔவை­யார். வள்­ளு­வ­ரும் இதே­தான் சொல்­கி­றார். கல்வி என்ற கண் இவ­ருக்கு மட்­டும் தான் என்று தமிழ் கூற­வில்லை. அனைத்து மனி­தர்­க­ளுக்­கும் கல்வி என்­பது கண். எல்­லோ­ருக்­கும் கல்வி வேண்­டும். கல்வி இல்லை என்­றால், எழுத்­த­றிவு இல்லை என்­றால் கண் இல்லை. அது புண் என்று சொல்­லக்­கூ­டிய அள­வுக்கு கல்­வியை கொண்­டா­டிய மண்­தான் தமிழ்­நாடு.

தடை­கள் வந்­தன..!

இங்கே நமது மாவட்ட ஆட்­சித் தலை­வர் பேசும்­போது சொன்­னார். மார்க்கோ போலோ இங்கே 1292ல் வந்த போது மக்­கள் எவ்­வ­ளவு சீரும் சிறப்­போ­டும் நாக­ரி­கத்­தோ­டும் வாழ்ந்­தி­ருக்­கி­றார்­கள் என்­பதை குறிப்­பிட்டு எழுதி இருக்­கி­றார் என்று இங்கே பேசும்­போது சொன்­னார்.

1610 ஆம் ஆண்டு ராபர்ட்டோ டி நோபிலி என்ற பாதி­ரி­யார் மது­ரைக்கு வந்­தார். அப்­போது அவர் என்ன எழு­து­கி­றார் என்­றால் இங்கே இருக்­கக்­கூ­டிய மனி­தர்­க­ளுக்கு கல்வி அறிவு இல்லை, எல்­லோ­ரும் பண்­ணை­யில் அடி­மை­க­ளாக வேலை செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள், தமிழ் மக்­க­ளுக்கு உரிமை இல்லை அடி­மை­க­ளாக வேலை செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். சில­ருக்கு மட்­டும் தான் இங்கே பாட­சா­லை­கள் இருக்­கின்­றன. அவர்­க­ளும் சமஸ்­கி­ருத கல்­வியை மட்­டுமே பயின்று கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்று 1610 இல் வந்த ராபர்ட்டோ எழு­து­கி­றார். இதி­லி­ருந்து நமது மேம்­பட்ட கல்வி, நமது மேம்­பட்ட நாக­ரி­கம் ஆகி­யவை கொஞ்­சம் கொஞ்­ச­மாக தொலைந்து போய் இருக்­கி­றது என்­பது தெரி­கி­றது.

கீழ­டி­யிலே ஓர் அழ­கான அருங்­காட்­சி­ய­கத்தை தமிழ்­நாடு அரசு உரு­வாக்கி இருக்­கி­றது. கீழடி அகழ்­வா­ராய்ச்சி என்­பது எவ்­வ­ளவு போராட்­டத்­திற்­குப் பிறகு தொடர்ந்து நடை­பெற்­றது என்­பது உங்­க­ளுக்கு தெரிந்­தி­ருக்­கும். அங்கே அகழ்­வா­ராய்ச்­சியை தொடர்ந்து நடத்­தக் கூடாது என்று பல தடை­கள் வந்­தன. அதை­யெல்­லாம் மீறி தான் அங்கே அகழ்­வா­ராய்ச்சி நடத்­தப்­பட்­டது. அந்த கீழடி அருங்­காட்­சி­ய­கத்­தில் நீங்­கள் சென்று பார்த்­தீர்­கள் என்­றால் நம்­மு­டைய பானை ஓடு­க­ளிலே எழுத்து இருக்­கி­றது.

2600 ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் இருந்த தமிழி என்ற நம்­மு­டைய எழுத்­து­முறை இருந்­தி­ருக்­கி­றது. இது­வ­ரைக்­கும் இந்­தி­யா­வி­லேயே தொன்­மை­யான எழுத்து வடி­வம் என்­பது அசோ­கர் காலத்­திலே இருந்­தது தான் என்று சொல்­லு­வார்­கள்.

ஆனால் நம்­மு­டைய தமிழ் எழுத்து வடி­வம் என்­பது அதற்­கும் இதற்­கும் சம்­பந்­தமே இல்­லா­மல்… அது வேறு நாம் வேறாக இருந்­தி­ருக்­கி­றோம் என்று சொல்­லக்­கூ­டிய அள­வுக்கு ஒரு தனித்­து­வ­மான தமிழ் வடி­வம் எழுத்துவடி­வம் நம்­மி­டம் இருந்து இருக்­கி­றது.

அனை­வ­ருக்­கும் கல்வி என்று வாழ்ந்­த­வன் தமி­ழன்!

கல்­வெட்­டிலே அர­சர்­கள் தான் அதி­கம் எழு­தி­யி­ருக்­கி­றார்­கள். தங்­க­ளது ஆட்­சி­யைப் பற்றி தங்­க­ளது பெயரை பற்றி எழு­தச் செய்­வார்­கள். ஆனால் பானை ஓட்­டில் சாதா­ரண இடங்­க­ளில் சாமா­னிய மனி­தர்­கள் எழு­து­கி­றார்­கள் என்­றால் எந்த அதி­கா­ர­மும் வைத்­துக் கொண்டு இருக்­கா­த­வர்­கள். அவர்­க­ளுக்­கும் எழுத்து தெரிந்­தி­ருக்­கி­றது என்­றால்… சாதா­ர­ண­மாக சின்ன ஊரில் கிடைக்­கக்­கூ­டிய பானை ஓட்­டில் கூட எழுத்­துக்­கள் இருந்­தது என்­றால் கல்வி என்­பது எல்­லோ­ருக்­கும் கிடைக்­கக்­கூ­டிய ஒன்­றாக தமிழ் மக்­கள் வாழ்ந்­தி­ருக்­கி­றார்­கள் என்ற பெரு­மை­யு­டைய மாநி­லம் தான் தமிழ்­நாடு. வேறு எங்­கும் இது­போல இல்லை.

சிலர் மட்­டும்­தான் படிக்க வேண்­டும். மற்­ற­வர்­கள் படித்­தால் அவர்­கள் காதில் ஈயத்­தைக் காய்ச்சி ஊற்று என்று சொல்­லக்­கூ­டி­ய­வர்­கள் இருந்த நிலை­யிலே… அனை ­வ­ருக்­கும் கல்வி என்று அப்­போதே வாழ்ந்­த­வன் தமி­ழன். இந்­தப் பெருமை நாம் தெரிந்து கொள்ள வேண்­டிய ஒன்று.

கீழடி­யில் நடக்­கக்­கூ­டிய அகழ்­வா­ராய்ச்­சி­க­ளாக இருக்­கட்­டும்… கொற்­கை­யில் நடக்­கக்­கூ­டிய அகழ்­வா­ராய்ச்­சி­க­ளாக இருக்­கட்­டும்… ஆதிச்­ச­நல்­லூ­ரில் நடக்­கக்­கூ­டிய ஆய்­வு­கள் இவற்­றை­யெல்­லாம் நீங்­கள் போய் பார்க்க வேண்­டும். உங்­க­ளில் எத்­தனை பேர் போய் இவற்­றை­யெல்­லாம் பார்த்து இருக்­கி­றீர்­கள்? (பல­ரும் பார்க்­க­வில்லை என்­கி­றார்­கள்). எத்­தனை பேர் ஜெயி­லர் பார்த்­தீர்­கள்?” என்று கேட்க அரங்­கத்­தில் சிரிப்­பொலி.

“நீங்­கள் படங்­கள் பார்க்க வேண்­டாம் என்று சொல்­ல­வில்லை. அதே நேரத்­தில் இங்கே தான் இருக்­கின்­றன நம்­மு­டைய கீழடி, ஆதிச்­ச­நல்­லூர், சிவ­கங்கை.

நம்­மு­டைய முன்­னோர்­கள் எப்­படி வாழ்ந்­தி­ருக்­கி­றார்­கள் என்­பது பற்­றிய ஆச்­ச­ரி­ய­மான விஷ­யங்­களை அங்கே நாம் பார்க்க முடி­யும். இன்­டர்­நெட்­டில் நாம் பார்க்­கிற சுவா­ர­சி­ய­மான விஷ­யங்­களை விட மிக சுவா­ர­சி­ய­மான விஷ­யங்­களை இத்­த­கைய அகழ்­வா­ராய்ச்­சி­க­ளிலே நாம் தெரிந்து கொள்ள முடி­யும்.

இப்­போது தண்­ணீர் கொண்டு வரு­வ­தற்­கான பைப் போட்ட உடனே கூட உடைந்து விடு­கி­றது. ஆனால் 2000 ஆண்­டு­க­ளுக்கு முன்பு தமி­ழர்­கள் தண்­ணீர் கொண்டு வரு­வ­தற்­காக அமைத்த குழாய்­கள் இன்­ன­மும் உடை­யா­மல் எந்த பிரச்­சி­னை­யும் இல்­லா­மல் அங்கே கண்­டெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதன் மூலம் நமக்கு எப்­ப­டிப்­பட்ட திற­மை­கள் இருந்­தி­ருக்­கின்­றன என்­பதை நீங்­கள் தெரிந்து கொள்ள முடி­யும்.

இங்கே வேலை­வாய்ப்பு முகாம்­கள் நடத்­தப்­ப­டும் போது பல்­வேறு நிறு­வ­னங்­கள் இங்கே வந்து அந்த முகாம்­க­ளில் கலந்து கொள்­ளும் மாண­வர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­களை வழங்­கும். ஆனால் நம்­மு­டைய மாண­வர்­கள் அப்­பாவை விட்டு போக மாட்­டேன் அம்­மாவை விட்டு போக மாட்­டேன் என்று சொல்­கி­றார்­கள். இப்­போ­தெல்­லாம் நேருக்கு நேர் பார்த்து கொண்டு பேசக்­கூ­டிய அள­வுக்கு செல்­போன்­கள் இருக்­கின்­றன. நினைத்த நேரத்­தில் ரயிலை பிடித்து ஊருக்கு ஓடி வந்து விட­லாம். ஆனால் நாம் வெளியே செல்­வ­தற்கு எவ்­வ­ளவு சிந்­திக்­கி­றோம்?

ஆனால் அன்­றைக்கு தமிழ்­நாட்­டிலே இருந்து எகிப்­திலே போய் வியா­பா­ரம் செய்­தி­ருக்­கி­றார்­கள். அங்கே இருக்­கக்­கூ­டிய மனி­தர்­கள் இங்கே வந்து வாழ்ந்­தி­ருக்­கி­றார்­கள். அப்­படி என்­றால் அன்­றைய தமி­ழர்­க­ளின் புதிய விஷ­யங்­களை எதற்­கும் அச்­சப்­ப­டா­மல் தேடக்­கூ­டி­ய­தில் இருந்த ஆர்­வம் நம்மை உரு­வாக்கி இருக்­கி­றது என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்­டும்.

தலை­முறை தாண்டி சிந்­தித்த தமி­ழர்­கள்!

இங்கே எல்­லா­ருக்­கும் எல்­லாம் எல்­லோ­ரும் சமம் என்­ப­து­தான் தமிழ்­நாட்­டின் நிய­தி­யாக இருந்­தி­ருக்­கி­றது. பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும் என்­பது தான் தமிழ் மண் சொல்­கிற கலாச்­சா­ரம்.

இன்று கால­நிலை மாற்­றத்தை பற்றி சொல்லி வருத்­தப்­பட்டு கொண்­டி­ருக்­கி­றோம். கால­நிலை மாற்­றம் மனி­தர்­கள் உட்­படஎல்லா உயி­ரி­னங்­க­ளை­யும் அழித்­துக்கொண்டு இருக்­கி­றது. விலங்­கு­கள், மீன்­கள், கடல் வாழ் உயி­ரி­னங்­கள் இவற்­றை­யெல்­லாம் கொஞ்­சம் கொஞ்­ச­மாக அழித்­துக் கொண்­டி­ருக்­கி­றது.

இந்த அச்­சம் ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய மன­தி­லும் இருக்­கக்­கூ­டிய சூழ்­நி­லை­யிலே, பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும் என்று சொல்லி எல்லா உயிர்­க­ளை­யும் மதிக்­கக் கூடிய அள­வுக்கு… தலை­மு­றை­களை எல்­லாம் தாண்டி சிந்­தித்­த­வர்­கள் தான் தமி­ழர்­கள். அவர்­கள் வழி­யிலே தான் நாம் இன்­றைக்கு வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றோம். அவர்­கள் உரு­வாக்­கிய அந்த அறிவு, புரி­தல் இதெல்­லாம் நம்மை வழி நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றது. தமிழ்­நாடு மட்­டும் எப்­படி வித்­தி­யா­ச­மாக சிந்­திக்­கி­றது என்ற ஒரு கேள்வி பல­ருக்கு தொடர்ந்து எழுந்து கொண்­டி­ருக்­கி­றது. ஏனென்­றால் தொன்­மை­யாக காலம் கால­மாக… நமது சிந்­த­னை­கள் எல்­லோ­ருக்­கு­மா­ன­தாக இருந்து கொண்­டி­ருக்­கி­றது.

யாரை­யும் நீ வேண்­டாம், நீ விலகி, இரு உன்னை ஏற்­றுக் கொள்ள மாட்­டேன் என்று சொல்­லாத ஒரு பண்­பா­டாக… ஒரு நாக­ரி­க­மாக ஒரு இன­மாக தமிழ் இனம் வாழ்ந்­தி­ருக்­கி­றது. அத­னால்­தான் நாம் இந்­திய தேசம் தொடக்­கூ­டிய எல்­லை­களை முன்­கூட்­டியே தாண்டி இருக்­கக் கூடி­ய­வர்­க­ளாக நாம் உரு­வாகி இருக்­கி­றோம்.

ராபர்ட்டோ அடி­மை­க­ளாக இருக்­கி­றார்­கள் என்று சொன்ன தமிழ்­நாட்­டில் கல்வி வளம் பெற்ற ஒரு தமிழ்­நா­டாக இன்­றைக்கு உயர்­கல்­வி­யிலே மிகச்­சி­றந்த இடத்தை பெற்­றி­ருக்­கக் கூடிய தமிழ்­நா­டாக இன்று மாறி­யி­ருக்­கி­றது என்­றால் அதற்­கான வர­லாறை நாம் புரிந்து கொள்ள வேண்­டும்.

கி.ரா.வின் ‘கத­வு’­­கதை!

கோவில்­பட்­டி­யைச் சேர்ந்த எழுத்­தா­ளர் கி ராஜ­நா­ரா­ய­ணனை உங்­க­ளுக்­கெல்­லாம் தெரிந்து இருக்­கும். எல்­லோ­ரா­லும் கொண்­டா­டக் கூடிய எழுத்­தா­ளர் அவர். அவ­ரு­டைய கதவு என்ற சிறு­க­தை­யிலே இரண்டு குழந்­தை­கள் இருப்­பார்­கள். அவர்­கள் வீட்­டில் ஒரு கதவு இருக்­கும். வச­தியே இல்­லாத குடும்­பம். அம்மா தின­மும் கூலி வேலைக்கு போவார். அப்பா வெளி­யூ­ரில் வேலை செய்­கி­றார். இந்த ரெண்டு குழந்­தை­க­ளும் வீட்­டில் கத­வில் ஏறி விளை­யா­டு­வது தான் தின­சரி அவர்­க­ளு­டைய பொழு­து­போக்கு. டிவி எல்­லாம் அப்­போது இல்லை.

கத­வில் ஏறி ஏறி விளை­யாடி… டிக்­கெட் போட்டு உன்­னு­டைய ஸ்டேஷன் வந்­து­ருச்சு… என்­னு­டைய ஸ்டேஷன் வந்­து­ருச்சு என்று சொல்லி விளை­யாடி அந்த கத­வோடு அவர்­க­ளு­டைய வாழ்க்கை ஒன்­றி­ணைந்து இருந்­தது.

இந்த நேரத்­தில் தான் அவர்­கள் வரி செலுத்­த­வில்லை என்று சொல்லி நான்கு பேர் வந்து அந்த கதவை கழட்­டிக்­கொண்டு போய்­வி­டு­கி­றார்­கள். இப்­போது அந்த வீட்­டில் கதவு இல்லை. குழந்­தை­கள் வருத்­த­மாக இருக்­கி­றார்­கள்.

ஒரு நாள் தம்பி மாலை­யில் வந்து சாப்­பாடு கொடு என்று தன் அக்­கா­வி­டம் கேட்­கி­றான். அக்­கா­வும் குழந்­தை­தான். சாப்­பாடு இல்லை என்று சொல்­கி­றாள். காலை­யிலே கஞ்சி காய்ச்­சி­னியே எங்கே என்று கேட்­கி­றான்.

கஞ்சி வச்­சி­ருந்­தேன். நம்ம வீட்­டுல கதவு இல்­லா­த­தால நாய் வந்து குடிச்­சிட்டு போயி­டுச்சு என்று அவள் சொல்­கி­றாள். அவன் பசி­யோடு தூங்க செல்­கி­றான்.

கதவு இல்­லா­த­தால் வாடைக்­காற்று வீட்­டுக்­குள்ளே வரு­கி­றது. கைக்­கு­ழந்­தைக்கு அந்த காற்­றால் பாதிக்­கப்­பட்டு ஜுரம் வந்து விடு­கி­றது. வைத்­தி­யம் பார்க்க முடி­ய­வில்லை அந்த குழந்தை இறந்து விடு­கி­றது. அவர்­க­ளு­டைய வாழ்க்­கையே மாறி விடு­கி­றது.

ஒரு நாள் அந்த தம்பி அக்­கா­வி­டம் சொல்­கி­றான். நம்ம வீட்­டுக் கதவை அங்க போட்டு வச்­சி­ருக்­காங்க போய் பார்க்­க­லாம் என்று. இரு­வ­ரும் போய் அந்த கதவை பார்த்­து­விட்டுஅவ்­வ­ளவு மகிழ்ச்­சி­யோடு திரும்பி வரு­கி­றார்­கள்.

இந்­தக் கத­வுக்கு பின்­னால் இருக்­கிற வறுமை, இந்த கதைக்கு பின்­னால் இருக்­கக்­கூ­டிய உணர்வு, இந்த கதைக்கு பின்­னால் இருக்­கக்­கூ­டிய நிரா­சை­கள், இந்த கதைக்கு பின்­னால் இருக்­கக்­கூ­டிய அந்த பிள்­ளை­க­ளின் கல்­விக் கனவு கலைந்து போன வன்­மம் இவை அத்­த­னை­யை­யும் கதவு என்­னும் கதை­யிலே கி.ரா. கொண்டு வந்­தி­ருக்­கி­றார்.

இப்­ப­டித்­தான் பல குழந்­தை­கள் வாழ்­வ­தற்கு வழி இல்­லா­மல்… அந்த குடும்­பமே ஒரு­வேளை உண­வுக்­காக போராட வேண்­டிய கால­கட்­டத்­திலே நாம் வாழ்ந்­தி­ருக்­கி­றோம். ஒரு­வேளை உண­வுக்­காக ஒரு குடும்­பமே அடி­மை­யாக வேலை செய்­யும். ஒரு­வேளை உண­வுக்­காக தங்­கள் வாழ்க்­கை­யையே எஜ­மா­னர்­க­ளுக்கு எழு­திக் கொடுத்­து­வி­டக்­கூ­டிய அவ­லத்­தோடு இந்த மண்­ணிலே பலர் வாழ்ந்­தி­ருக்­கி­றார்­கள்.

தமிழ்­நாட்­டிலே சாதித்த கல்வி!

ஆனால் இன்று நம்மை அடி­மைப்­ப­டுத்தி வைத்­தி­ருந்த உணவு அர­சி­ய­லில் இருந்து நாம் வெளியே வந்­தி­ருக்­கி­றோம். கல்வி என்­பது எல்­லோ­ருக்­கும் ஆனது என்­பது தமிழ்­நாட்­டிலே சாதிக்­கப்­பட்டு இருக்­கி­றது. இன்­ன­மும் இந்த சாத­னையை நிகழ்த்­தாத பல மாநி­லங்­கள் இந்­தி­யா­விலே இருக்­கின்­றன.எல்­லோ­ருக்­கும் கல்வி எல்­லோ­ருக்­கும் உணவு என்ற நிலையை நாம் உரு­வாக்கி இருக்­கிறோம்.

சில பேர் சொல்­ல­லாம் எல்­லா­வற்­றை­யும் இல­வ­ச­மாக கொடுக்­கி­றார்­கள் என்று. இது இல­வ­சம் இல்லை. ஒரு­வேளை உண­வுக்­காக அடி­மை­க­ளாக இருந்த நிலையை மாற்றி எழு­தி­யது. இதற்­குப் பின்­னால் இருக்­கிற சமூக நீதியை புரிந்து கொள்ள வேண்­டும். உண­விற்­காக அடி­மை­யாக இருந்­த­வர்­களை விடு­தலை செய்­தோம் என்ற நிலைமைதமிழ்­நாட்­டில் சாத்­தி­யப்­பட்­டி­ருக்­கி­றது என்ற பெருமை நமக்கு உண்டு.

பள்­ளி­கள் இல்­லாத இடங்­களே கிடை­யாது!

பல மாநி­லங்­க­ளில் பல இடங்­க­ளில் இன்­றும்பள்­ளிக்­கூ­டங்­களே கிடை­யாது. ஆனால் தமிழ்­நாட்­டில் பள்­ளிக்­கூ­டங்­கள் இல்­லாத இடங்­களை கிடை­யாது. பெருந்­த­லை­வர் காம­ரா­ஜ­ரில் தொடங்கி இன்று வரை பள்­ளிக்­கூ­டங்­கள் உயர்­கல்­விக்­கான கல்­லூ­ரி­கள் என்று ஒவ்­வொரு அர­சும் தொடர்ந்து பணி செய்து இருக்­கி­றது. இது சமூக நீதிக்­கான போராட்ட வர­லாற்­றிலே மிக முக்­கி­ய­மான பகுதி.

பள்­ளி­கள் இருந்­தும் மாண­வர்­கள் பள்­ளிக்­கூ­டங்­க­ளுக்கு பெரிய அள­வில் வர­வில்லை. அப்­போது சென்­னை­யிலே ஜஸ்­டிஸ் பார்ட்டி அரசு பள்­ளி­க­ளில் மதிய உணவு என்­பதை சிறிய அள­வில் கொண்டு வரு­கி­றார்­கள். அதை அவர்­க­ளால் மேற்­கொண்டு எடுத்து செல்ல முடி­ய­வில்லை. அதற்­குப் பிறகு பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்ற பிறகு மாண­வர்­கள் பள்­ளிக்­கூ­டங்­க­ளுக்கு வந்து படிக்­கா­மல் மாடு மேய்த்­துக் கொண்­டி­ருந்­ததை பார்க்­கி­றார். ஏன் மாடு மேய்க்­கி­றீங்க பள்­ளிக்­கூ­டத்­துக்கு போக­லையா என்று கேட்­ட­போது, ‘நான் மாடு மேய்க்­காம பள்­ளிக்­கூ­டத்­துக்கு போனா நீ சாப்­பாடு போடு­வியா?’ என்று அந்த மாண­வர்­கள் கேட்­டார்­கள்.

காம­ரா­ஜர் உரு­வாக்­கிய மதிய உண­வுத்­திட்­டம்!

சென்னை வந்த முத­ல­மைச்­சர் காம­ரா­ஜர் பள்­ளி­க­ளில் மதிய உணவு திட்­டத்தை உரு­வாக்கி காட்­டி­னார். அதற்­குப் பிறகு தொடர்ந்து வந்த ஆட்­சி­யி­னர் அது எந்த ஆட்­சி­யாக இருந்­தா­லும் தி.மு.க.வாக இருக்­கட்­டும் அ.தி.மு.க.வாக இருக்­கட்­டும் யாரும் அந்­தத் திட்­டத்தை நிறுத்­த­வில்லை. அதை இன்­னும் விரிவு படுத்­திக் கொடுத்­தார்­கள்.

ஒன்­றிய அர­சாங்­கம் 2035-ல் 50 சத­வீ­தம் மாண­வர்­களை உயர்­கல்­விக்கு கொண்டு செல்ல வேண்­டும் என்ற இலக்கு வைத்­தி­ருக்­கி­றது. ஆனால் தமிழ்­நாட்­டில் உயர்­கல்­விக்கு செல்­லும் மாண­வர்­கள் விகி­தம் சென்ற ஆண்டு 52 சத­வீ­தத்தை தாண்டி விட்­டோம். இதற்கு கார­ணம் அந்த பிள்­ளை­கள் படிக்க வேண்­டும் என்­ப­தற்­காக நாம் தொடர்ந்து செய்­தி­ருக்­கிற முயற்­சி­கள்.

கல்­லூ­ரி­களை உரு­வாக்­கிய தலை­வர் கலைஞர்!

பிள்­ளை­க­ளுக்கு திரு­ம­ணம் செய்ய வேண்­டும் என்­ப­தற்­காக படிப்பை நிறுத்தி விடக்­கூ­டாது.அத­னால்­தான் திரு­மண உத­வித் தொகைதிட்­டத்தை தலை­வர் கலை­ஞர் கொண்டு வந்­தார். எட்­டா­வது வரை படிக்க வையுங்­கள் பத்­தா­வது வரை படிக்க வையுங்­கள் உங்­கள் மகளை நாங்­கள் திரு­ம­ணம் செய்து தரு­கி­றோம் என்று ஒரு அரசு இருக்­கி­றது என்­றால்… அந்த மாண­வர்­க­ளின் கல்வி மீது அர­சுக்கு எவ்­வ­ளவு அக்­கறை இருக்க வேண்­டும்!

கல்­லூ­ரி­கள் ரொம்ப தூரத்­தில் இருந்­தால் அனுப்ப மாட்­டார்­கள். குறிப்­பாக பெண் பிள்­ளை­களை அனுப்­பவே மாட்­டார்­கள். அவர்­கள் ஊருக்கு அரு­கி­லேயே கல்­லூ­ரி­களை உரு­வாக்­கி­னால் அவர்­கள் நிச்­ச­ய­மாக படிக்­கும் வாய்ப்பு உண்­டா­கும் என்­ப­தற்­காக தான் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் சின்ன சின்னஊர்­க­ளில் கூட கல்­லூ­ரி­களை உரு­வாக்­கி­னார். இன்று நாம் தேசிய அள­வை­விட, அவர்­கள் 27% தான் இருக்­கி­றார்­கள். ஆனால் நாம் உயர் கல்வி விகி­தத்­தில் இவ்­வ­ளவு முன்­னேறி இருக்­கி­றோம் என்­றால்… எத்­தனை பேர் இழுத்து வந்­தி­ருக்­கிற தேர் தான் இது.

இத்­தனை பேர் போராடி இத்­தனை பேர் கஷ்­டப்­பட்டு கல்­வியை அனை­வ­ருக்­கு­மா­னது என்ற நிலையை நாம் தமிழ்­நாட்­டில் உரு­வாக்கி இருக்­கி­றோம். இது நம்­மி­ட­மி­ருந்து தட்டி பறிக்­கப்­ப­டக் கூடாது என்­றால் நீங்­கள் இந்த போராட்ட வர­லாற்றை தெரிந்து கொள்ள வேண்­டும்.

ஒரு காலத்­தில் சமஸ்­கி­ரு­தம் தெரிந்­தால் தான் மெடிக்­கல் காலேஜ் குள்­ளேயே போக முடி­யும். சமஸ்­கி­ரு­தம் தெரிந்­த­வர்­கள் மட்­டும்­தான் அதா­வது ஒரு ஜாதியை சேர்ந்­த­வர்­கள் மட்­டும்­தான் மருத்­து­வர்­கள் ஆக முடி­யும் என்ற நிலை இருந்­தது. நீதிக்­கட்சி ஆட்­சி­யிலே தான் அந்த சட்­டம் மாற்­றப்­பட்­டது. அதற்­கு­முன் பெண்­கள் மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் படிக்க முடி­யாத நிலை இருந்­தது. ஆண்­கள் போல பெண்­கள் வேட­மிட்­டுச் சென்று படித்த அவ­லங்­க­ளும் உண்டு.

கல்­விக்­காக இந்த உல­கம் இவ்­வ­ளவு போராடி இருக்­கி­றது. இதை­யெல்­லாம் நீங்­கள் தெரிந்து கொண்­டால் தான் நாம் பெற்­றி­ருக்­கக் கூடிய இந்த உரி­மை­களை பாது­காத்து வைத்­துக் கொள்ள முடி­யும். ஏனென்­றால்இவ்­வ­ளவு கஷ்­டப்­பட்டு இதை நம் கையில் கொடுத்து விட்டு சென்­றி­ருக்­கி­றார்­கள்.

இன்று நாம் எல்­லோ­ரும் சர்வ சாதா­ர­ண­மாக கல்­லூ­ரி­க­ளுக்கு சென்று படிக்­கி­றோம் என்­றால் அதற்­குப் பின்­னால் இருக்­கும் போராட்­டங்­கள் என்ன… என்­பதை எல்­லாம் தெரிந்து கொண்­டால் தான் இந்த கால­கட்­டத்­தில் நான் பெற்­றி­ருக்­கும் உரி­மை­களை பாது­காக்க முடி­யும்.

நீங்­கள் உங்­கள் பெற்­றோ­ரி­டம் போன் கேட்­டி­ருப்­பீர்­கள். அவர்­கள் வாங்கி தர தாம­திப்­பார்­கள். அவன் வச்­சி­ருக்­கான் இவன் வச்­சி­ருக்­கான் எனக்கு போன் வாங்கி தா என்று சொல்­வீர்­கள். பழைய போன் ஆக இருந்­தால் கூட கொடு என்று சொல்­வீர்­கள். ஒரு கட்­டத்­தில் உங்­க­ளுக்கு போன் வாங்கி கொடுத்த பிறகு அப்­போ­து­தான் உங்­க­ளுக்கு அதன் மதிப்பு தெரி­யும்.

இன்று நாம் கல்­லூ­ரி­யில் உட்­கார்ந்து இருக்­கி­றோம், நாளை நினைத்­தால் சிலிக்­கான் வேலி­யில் போய் வேலை செய்ய முடி­யும் என்ற நிலையை இன்று நாம் அடைந்­தி­ருக்­கி­றோம் என்­றால் அதற்­கான வேல்யூ என்ன மதிப்பு என்ன என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்­டும்.

அதைப் புரிந்து கொள்ள வேண்­டு­மென்­றால் நமக்­காக பல போர்க்­க­ளங்­களை சந்­தித்­த­வர்­கள், ரத்­தம் சிந்­தி­ய­வர்­கள், கண்­ணீர் விட்­ட­வர்­கள் இவர்­க­ளு­டைய வர­லா­று­களைநாம் தெரிந்து கொள்ள வேண்­டும் அது தெரிந்­தால்தான் இதை நம்­மால் பாது­காக்க முடி­யும்.

ஏனென்­றால் நமக்கு இருப்­பது மாபெ­ரும் தமிழ் கனவு. அந்த கனவு எல்­லோ­ரும் சமம் எல்­லோ­ருக்­கும் எல்லா வாய்ப்­பு­க­ளும் இருக்க வேண்­டும். ஆண் -பெண், சாதி -மதம் என்ற வித்­தி­யா­சம் இல்­லா­மல் ஒரு அழ­கான உல­கத்தை நாம் உரு­வாக்க வேண்­டும். எல்­லோ­ரும் என்­றும் இங்கே தலை நிமிர்ந்து வாழக்­கூ­டிய சுய­ம­ரி­யா­தை­யோடு வாழக்­கூ­டிய பெரி­யார் கனவு கண்ட ஒரு வாழ்க்கை வாழக்­கூ­டிய உரிமை இருக்­கி­றது. அது­தான் நம்­மு­டைய தமிழ் கனவு அதை உரு­வாக்­கக் கூடி­ய­வர்­கள் நீங்­கள்­தான்.”

இந்­நி­கழ்ச்­சி­யில், சமூ­க­ந­லன் மற்­றும் மக­ளிர் உரி­மைத்­துறை அமைச்­ச­ரும், தூத்­துக்­குடி வடக்கு மாவட்ட செய­லா­ள­ரு­மான கீதா ஜீவன், மாவட்ட ஆட்­சி­யர் செந்­தில்­ராஜ், மாந­க­ராட்சி மேயர் ஜெகன் பெரி­ய­சாமி, கல்­லூரிமுதல்­வர் சுப்­பு­லெட்­சுமி, நகர் மன்­றத் தலை­வர் கரு­ணா­நிதி மற்­றும் பலர் கலந்­து­கொண்­ட­னர்!

இவ்­வாறு கனி­மொழி கருணாநிதி எம்.பி. உரை­யாற்­றி­னார்.