acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ‘’திருமண முறை மாறாத ஒன்றல்ல..!’’ தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் first appeared on Madras Murasu.
]]>ஒரே பாலினத் தம்பதிகளின் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க மறுப்பது, அரசியலமைப்பு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை மீறுவது மற்றும் பாரபட்சம் காட்டுவதாக அமையும் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் ஆகியோர் தங்களின் தீர்ப்புகளை வழங்கிய நிலையில், ஒரே பாலினத் தம்பதிகள் சேர்ந்து வாழ்வதில் சட்டம் குறுக்கிட முடியாது என்றாலும், அவர்களின் திருமணம், தத்தெடுப்பு உரிமைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்று நீதிபதிகள் ரவீந்திர பட், ஹீமா கோலி மற்றும் பி.எஸ்.நரசிம்மா அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேநேரம், ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்காத காரணத்தாலேயே சிறப்புத் திருமணம் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்பதையும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகள் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
உரிமை கோரி தாக்கலான 21 மனுக்கள்
ஒரே பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. “திருமணத்துக்கான இணையரைத் தேர்வு செய்யும் உரிமை எல்.ஜி.பி.டி.க்யூ. (Lesbian, Gay, Bisexual, Trans gender, Queer or Questioning pers ons or the community – LGBTQ) சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்படவேண்டும்; ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. மேலும், இது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14 மற்றும் 21-ஐ மீறுவதாகும்” என்று இந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டு இருந்தன.
ஒன்றிய பாஜக அரசு எதிர்ப்பு
ஆனால், இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஒன்றிய அரசு ஆட்சேபம் தெரிவித்தது. “ஒரே பாலினத் தம்பதிகளின் திருமண விவகாரத்தில் நாடாளுமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும். நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மேலும், திருமணம் என்பது ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டுமே நடக்க முடியும்” என ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.
மத அமைப்புகளும் கூப்பாடு
ஜமாத்துல் உலமா இ- ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், “ஒரே பாலினத்தவரின் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது மிகவும் அபாயகரமான நடவடிக்கையாகும். இதை நாடாளுமன்றம் எப்போதும் முன்னெடுக்காது என்பதால், நீதிமன்றமும் இதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கக் கூடாது” என்றார். மேலும், “ஒரே பாலின திருமணம் போன்ற கருத்துக்கள் தீவிர நாத்திக உலகக் கண்ணோட்டங்களைக் கொண்ட மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து தோன்றியதாகவும், அதை இந்தியாவின் மீது திணிக்கக்கூடாது” என்றும் குறிப்பிட்டார்.
இதேபோல ஆர்எஸ்எஸ்-சின் மகளிர் பிரிவான சம்வர்தினி நியாஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது என்பது, இந்து திருமண சட்டத்தின் அடிப்படையையே தோல்வியடையச் செய்யும்” என்று குரல் எழுப்பினார்.
“ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது இந்திய பாரம்பரியத்தின் வேரை அசைத்து, சமூகத்தை தலைகீழாக்கும். ஒரே பாலின தம்பதிகளால் வளர்க்கப்படும் குழந்தைகளின் வளர்ச்சியும், குண நலனும் பாதிக்கப்படும். மேற்கத்திய நாடுகளின் தாராள நடத்தைகளை நமது நாட்டின் இந்து கலாச்சாரத்தின் மீது திணிப்பதாக இது அமையும்” என்றும் கூறினார். இந்நிலையில் தனது தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வை ஏற்படுத்திய தலை மை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 2023 ஏப்ரலில் துவங்கி 10 வேலை நாட்கள் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த மே 11 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், செவ்வாயன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை வழங்கியது. முதலில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தனது தீர்ப்பை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: ஒரு நபரின் பாலினம் அவர்களின் பாலினத் தேர்வுடன் தொடர்புடையது அல்ல. அதாவது திருநங்கை என்பது அவர்களின் பாலினம். அவர்கள் ஆண்களைத் திருமணம் செய்வது பாலின தேர்வு. ஒரு திருநங்கை, ஆணைத் திருமணம் செய்து கொள்ள முடியும். அத்தகைய திருமணம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரு திருநங்கை இது போல திருமணம் செய்து கொள்ள சட்டம் உள்ள போது, திருநங்கைக்கும்- திருநங்கை க்கும் இடையிலான திருமணம், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணங்களும் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படலாம்.
திருமண அமைப்பு மாறாத ஒன்றல்ல!
சிறப்புத் திருமண சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முடியாது என்று கூற முடியாது. திருமணம் ஒரு நிலையான மற்றும் என்றும் மாறாத அமைப்பு என கூறுவது சரியல்ல, திருமணத்தில் பல சீர்திருத்தங்கள் சட்டங்களால் கொண்டு வரப்பட்டுள்ளன. நமது முன்னோர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்காத பல விஷயங்கள் இன்று ஏற்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது. முன்னர் நடைமுறைப் படுத்தப்பட்ட குழந்தைத் திருமணம், சதி எனும் உடன் கட்டை ஏறுதல் ஆகியவை இன்று நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன.
நீதிமன்றம் தலையிட உரிமை உண்டு
திருமணம் சார்ந்த ஒரே பாலினத்தவர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்ற ஒன்றிய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. திருமணம் சார்ந்த சட்டத்தின் சரத்துகளை நீதிமன்றம் ஆய்வுக்கு உட்படுத்த முடியும். ஒரு சட்டம் செல்லுமா? செல்லாதா? என்பதை ஆராயக் கூடிய அதிகாரத்தை நீதிமன்றத்திடம் இருந்து பிரித்து விட முடியாது. குடும்ப விவகாரங்களில் நீதிமன்றங்களின் தலையீட்டை நிராகரிக்க முடியாது. இது நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டதுதான். அத்தகைய நீதிமன்றத் தலையீடு இல்லாமல் போனால் பலவீனமானவர்கள் பாதிக்கப்படுவர்கள். பொதுமக்களின் அடிப்படை உரிமையை நீதிமன்றமே பாதுகாக்கும்.
நாடாளுமன்ற அதிகாரத்திற்குள் வரவில்லை
அதற்காக, திருமண சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்றத்தை, நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது. நீதிமன்றங்கள் சட்டங்களை இயற்ற முடியாது; நாடாளுமன்றம்தான் சட்டத்தை இயற்ற வேண்டும்; திருமண சட்டத் சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும். சிறப்புத் திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அது நாட்டை விடுதலைக்கு முந்தைய காலத்துக்குதான் இழுத்துச் செல்லும்.
பணம், வாழ்விடம் தீர்மானிக்கவில்லை
தன்பாலின உறவு என்பது நகர்ப்புற கருத்தோ அல்லது சமூகத்தின் உயர் வகுப்பினருக்கானது மட்டும் அல்ல. இது பொதுவானது. எந்த தரப்பினர் வேண்டுமானாலும் இதில் ஈடுபடலாம். ஒயிட் காலர் வேலையில் உள்ள பணக்கார ஆங்கிலத்தில் பேசும் ஆண்களை மட்டுமே தன்பாலின உறவாளர்கள் என்று கூறிக்கொள்ள முடியாது. ஒரு கிராமத்தில் விவசாய வேலை செய்யும் பெண் கூட தன்பாலின உறவாளர்களாக இருக்கலாம். மேலை நாடுகளில், பணக்காரர்களின் பகுதிகளில் மட்டுமே தன்பாலின உறவாளர்கள் உள்ளனர் என்ற கருத்தை முதலில் மாற்ற வேண்டும். முதலில் இதை ஒழிக்க வேண்டும். நகரத்தில் வாழும் எல்லோரும் பணக்காரர்கள் என்றும் சொல்ல முடியாது. ஒருவரின் சாதி, பொருளாதாரம் இதை எல்லாம் தாண்டி ஒருவர் ஒரே பாலின உறவாளர்களாக இருக்க முடியும்.
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது தனி உரிமை
அந்த வகையில், இந்த நீதிமன்றம் ஒரே பாலின உறவாளர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டவில்லை. அதுமட்டுமல்ல, பாலியல் நோக்குநிலையின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட முடியாது என்பதை அங்கீகரித்துள்ளது. வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது ஒருவரின் வாழ்க்கைப் போக்கைத் தேர்ந்தெடுப்பதன் ஒரு பகுதியாகும். சிலர் இதை தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவாகக் கருதலாம். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21-ஆவது பிரி வின் கீழ் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரத்துக்கான உரிமை ஆகியவற்றின் அடிப்படையுடன் தொடர்புடையது. தன்பாலின தம்பதிகள் மட்டுமே நல்ல பெற்றோராக இருக்க முடியும் என்று சட்டம் கருத முடியாது. இது பாகுபாடு காட்டுவதாக அமையும். எனவே, ஒரே பாலின தம்பதிகளுக்கான தத்தெடுப்பு விதிமுறைகள் அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளது. தன்பாலின தம்பதிகளுக்கு பாகுபாடுகாட்டுகின்றன.
பால் புதுமையரும் குழந்தையை தத்தெடுக்க முடியும்
குழந்தையை தத்தெடுக்க பால்புதுமை தம்பதிகளுக்கு உரிமை உள்ளது. பால்புதுமை தம்பதிகள் உள்பட திருமணம் செய்து கொள்ளாத தம்பதிகளும் குழந்தையை தத்தெடுக்க உரிமை உள்ளது. ஒரே பாலின தம்பதிகளால் குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாது என்பதற்கான ஆதாரப்பூர்வமான தரவுகள் இல்லை. ஒரே பாலின தம்பதிகள் சமூகத்தில் அனைவரையும் போல சமமாக வாழ அடிப்படை உரிமை உள்ளது. யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க அவர்களுக்கு தான் சுதந்திரம் இருக்கிறது. ஒரே பாலின உறவாளர்கள் (பால் புதுமையர்) உட்பட அனைத்து நபர்களும் தங்கள் வாழ்க்கையின் தார்மீக தரத்தை தீர்மானிக்க உரிமை உண்டு. எதிர்பால் ஈர்ப்பு தம்பதிகளுக்கு செல்லும் பலன்கள், உதவிகள் ஆகியவை தன்பாலின தம்பதிகளுக்கு மறுக்கப்பட்டால் அது அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். தனிச்சட்டம் உள்பட தற்போதுள்ள சட்டங்களின்படி, எதிர்பால் ஈர்ப்பு உறவுகளில் மருவிய பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது.
காவல்துறை துன்புறுத்தக் கூடாது
பாலியல் அடையாளங்களை கண்டறிவதற்காக பால்புதுமை தம்பதிகளை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை துன்புறுத்தக்கூடாது. பால்புதுமை தம்பதியினரின் உறவு தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு போலீசார் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும். பாலின மாற்று சிகிச்சை, குடும்பத்துடன் சேர்ந்து வாழுதல் என்கிற நிபந்தனைகளை தன்பாலின உறவாளர்களுக்கு கட்டாயமாக்கக் கூடாது” இவ்வாறு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
The post ‘’திருமண முறை மாறாத ஒன்றல்ல..!’’ தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் first appeared on Madras Murasu.
]]>