Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#ஐஐடி_மெட்ராஸ் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Wed, 05 Jun 2024 05:36:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 அமெரிக்கன் ”சயின்ஸ்” இதழில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி கட்டுரை..!’’ முதலாவது ஆய்வுக் கட்டுரை இது https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a4%25e0%25ae%25b4%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%bf/#respond Wed, 05 Jun 2024 05:36:09 +0000 https://madrasmurasu.com/?p=9049 ”நீர்த்துளிகளால் உடைக்கப்படும் இயற்கை தாதுக்கள் நானோ துகள்களை உருவாக்குவதாக ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்”.  சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் பொதுவான கனிமங்களை நீர் நுண்திவலைகளால் உடைக்கச் செய்து நானோ துகள்களை உருவாக்கிட முடியும் என நிரூபித்துள்ளனர். மதிப்புவாய்ந்த ‘சயின்ஸ்’ இதழில் வெளியிடப்படும் ஐஐடி மெட்ராஸ்-ன் முதலாவது ஆய்வுக் கட்டுரை இதுவாகும். மேகங்கள், மூடுபனி போன்ற வளிமண்டல நீர்த்துளிகளில் உள்ள அயனி இனங்கள் மற்றும் தொடர்பு மின்மயமாக்கல் மூலம் சார்ஜ் செய்யப்படலாம். […]

The post அமெரிக்கன் ”சயின்ஸ்” இதழில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி கட்டுரை..!’’ முதலாவது ஆய்வுக் கட்டுரை இது first appeared on Madras Murasu.

]]>
”நீர்த்துளிகளால் உடைக்கப்படும் இயற்கை தாதுக்கள் நானோ துகள்களை உருவாக்குவதாக ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்”. 

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் பொதுவான கனிமங்களை நீர் நுண்திவலைகளால் உடைக்கச் செய்து நானோ துகள்களை உருவாக்கிட முடியும் என நிரூபித்துள்ளனர். மதிப்புவாய்ந்த ‘சயின்ஸ்’ இதழில் வெளியிடப்படும் ஐஐடி மெட்ராஸ்-ன் முதலாவது ஆய்வுக் கட்டுரை இதுவாகும்.

மேகங்கள், மூடுபனி போன்ற வளிமண்டல நீர்த்துளிகளில் உள்ள அயனி இனங்கள் மற்றும் தொடர்பு மின்மயமாக்கல் மூலம் சார்ஜ் செய்யப்படலாம். தாதுக்களின் சிதைவு புதிய மூலக்கூறுகளை உருவாக்கி புதிய மேற்பரப்புகளை உருவாக்குகிறது. அத்தகைய மேற்பரப்புகளில் பல்வேறு வகையான வினையூக்கங்களும் ஏற்படக்கூடும். இந்த செயல்முறைகள் உயிர்வழித் தோற்றத்தில் முக்கியமானதாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

பூமியில் விழக்கூடிய நானோ துகள்கள், மூலக்கூறுகளால் ஆன ‘நுண்ணிய நீர்த்துளிகள் விழுதல்’ (microdroplet showers) என்பது கிரகத்தின் வேதியியல் மற்றும் உயிரியல் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சயின்ஸ் இதழானது அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மெண்ட் ஆஃப் சயின்ஸ் எனப்படும் உலகின் மிகப் பழமையானதும், மிகப்பெரிய பொது அறிவியல் அமைப்பால் மதிப்பாய்வு செய்யப்படுவதாகும். பிரபல கண்டுபிடிப்பாளர் தாமஸ் எடிசன் வழங்கிய மூலதனத்துடன் 1880-ல் தொடங்கப்பட்ட பின்னர், முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் மையமாக இந்த அமைப்பு விளங்கி வருகிறது. அதிகளவில் மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரைகளில் தொடர்ந்து தரவரிசையில் இருக்கும் கட்டுரைகளைக் கொண்ட உலகின் தலைசிறந்த கல்வி இதழ்களில் ஒன்றாக சயின்ஸ் கருதப்படுகிறது.

பத்மஸ்ரீ விருதுபெற்றவரும் ஐஐடி மெட்ராஸ் வேதியியல் துறையின் நிறுவனப் பேராசிரியருமான தாளப்பில் பிரதீப், ஐஐடி மெட்ராஸ்-ல் பிஎச்டி முடித்த ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் ஆசிரியரான செல்வி பி.கே.ஸ்பூர்த்தி ஆகியோர் தலைமையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பெங்களூரு ஜவஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், இந்திய அறிவியல் அகாடமியின் தலைவருமான உமேஷ் வி.வாக்மேரின் அறிவுரையின் கீழ், செல்வி கோயேன்ட்ரிலா தேப்நாத் கணக்கீட்டுப் பணிகளை மேற்கொண்டார். கண்டுபிடிப்புகள் அனைத்தும் 31 மே 2024 தேதியிட்ட சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. (DOI: 10.1126/science.adl3364)

இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் வேதியியல் துறையின் நிறுவனப் பேராசிரியர் தாளப்பில் பிரதீப், “நுண்துளிகள் ரசாயன எதிர்வினைகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதும், அதன் விளைவாக புதிய ரசாயனப் பிணைப்புகள் உருவாவதும் நாம் அறிந்ததுதான். மைக்ரோ துளிகளால் ரசாயன பிணைப்புகளை உடைக்க முடியும் என்று எங்கள் எண்ணத்தில் தோன்றியதன் விளைவுதான் இந்த கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது” எனக் குறிப்பிட்டார்.

இந்த ஆராய்ச்சியின் அடுத்தகட்டம் குறித்து விவரித்த அவர், “பாறைகளை இயற்கையான சிறுதுகள்களாக்கி மணலாக மாற்றுவது இயற்கையாக நடைபெறுகிறது. வெளிப்படையாகக் கூறினால், மண்ணுக்கு மணலை உருவாக்குவதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளோம். எதிர்காலத்தில் போதிய வளங்களுடன் பாலைவனங்களிலும் பசுமையாக்க முடியும்” என்றார்.

ஐஐடி மெட்ராஸில் பிஎச்டி ஆராய்ச்சிக் கட்டுரையை அண்மையில் முடித்த முதல் ஆசிரியரான செல்வி பி.கே.ஸ்பூர்த்தி இந்த ஆராய்ச்சியின் பயன்பாடுகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

இதன் செயல்பாடு குறித்து பேராசிரியர் உமேஷ் வி. வாக்மேர், “நீர் நுண்துளிகளுக்கு உள்ளார்ந்த சிக்கலான செயல்முறைகளை இந்த நிகழ்வு உள்ளடக்கியதாகும், அதன் செயல்முறையைப் புரிந்துகொள்வதன் மூலம் பல அடிப்படை அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்” என்றார்.

The post அமெரிக்கன் ”சயின்ஸ்” இதழில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி கட்டுரை..!’’ முதலாவது ஆய்வுக் கட்டுரை இது first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%bf/feed/ 0
’’மெட்ராஸ் ஐஐடி-யில் படிக்க வேண்டுமா..?’’ மாணவர்களுக்கு அழைப்பு https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%2590%25e0%25ae%2590%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/#respond Thu, 30 May 2024 10:44:39 +0000 https://madrasmurasu.com/?p=9036 சென்னை ஐஐடி-யின் நேரடி செயல் விளக்க நாள் நிகழ்ச்சி ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறுகிறது. சென்னை ஐஐடி வளாகத்தைப் பார்வையிட்டு அனுபவங்களைப் பெற ஜேஇஇ தேர்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மெட்ராஸ் ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி, 2024 ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நேரடி ‘செயல் விளக்க நாள்’ நிகழ்வை அதன் நிறுவன வளாகத்தில் நடத்துகிறது. இந்த நிகழ்வின்போது, ஜேஇஇ 2024 தேர்வர்கள் இக்கல்வி நிறுவன வளாகத்தைப் பார்வையிடுவதுடன் ஐஐடி மாணவர்களின் வளாக அனுபவத்தை நேரடியாகப் பெறலாம். தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுடன் கலந்தாலோசிக்கவும், புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் இதன் மூலம் வாய்ப்புக் கிடைக்கிறது. சென்னை ஐஐடி-க்கு அன்றைய நாட்களில் நேரடியாக வருகை தர முடியாத மாணவ-மாணவிகள் […]

The post ’’மெட்ராஸ் ஐஐடி-யில் படிக்க வேண்டுமா..?’’ மாணவர்களுக்கு அழைப்பு first appeared on Madras Murasu.

]]>
சென்னை ஐஐடி-யின் நேரடி செயல் விளக்க நாள் நிகழ்ச்சி ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறுகிறது. சென்னை ஐஐடி வளாகத்தைப் பார்வையிட்டு அனுபவங்களைப் பெற ஜேஇஇ தேர்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மெட்ராஸ் ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி, 2024 ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நேரடி ‘செயல் விளக்க நாள்’ நிகழ்வை அதன் நிறுவன வளாகத்தில் நடத்துகிறது. இந்த நிகழ்வின்போது, ஜேஇஇ 2024 தேர்வர்கள் இக்கல்வி நிறுவன வளாகத்தைப் பார்வையிடுவதுடன் ஐஐடி மாணவர்களின் வளாக அனுபவத்தை நேரடியாகப் பெறலாம்.

தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுடன் கலந்தாலோசிக்கவும், புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் இதன் மூலம் வாய்ப்புக் கிடைக்கிறது.

சென்னை ஐஐடி-க்கு அன்றைய நாட்களில் நேரடியாக வருகை தர முடியாத மாணவ-மாணவிகள் 2024 ஜூன் 17-ம் தேதியன்று இணையதள அமர்வில் கலந்து கொள்ளலாம். இந்நிகழ்வின் போது சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி மற்றும் இதர ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் இந்த வளாகத்தின் கல்வி தொடர்பாகவும், கல்வி சாரா வாழ்க்கை பற்றியும் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள்.

பெங்களூருவைச் சுற்றியுள்ள ஜேஇஇ தேர்வர்கள் 2024 ஜூன் 11 அன்று பெங்களூருவில் உள்ள எஸ்டி ஆடிட்டோரியத்திலும் மற்றும் ஹைதராபாத் பகுதியில் உள்ள ஜேஇஇ தேர்வர்கள் 2024 ஜூன் 12 அன்று ஹைதராபாத்தில் உள்ள டி-ஹப்பிலும்  நடைபெறும் செயல்விளக்க நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.

இந்நிகழ்வுகளில் பங்கேற்க குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே இருப்பதால் ஜேஇஇ தேர்வர்கள் உடனடியாக பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். www.askiitm.com/demo   இந்த நிகழ்வு குறித்துப் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “இளம் மாணவர்கள் தங்களது வாழ்க்கைப் பாதையை முடிவு செய்ய இது ஒரு மிகமுக்கிய தருணமாகும். அவர்கள் எல்லாவற்றையும் நன்கு புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்.

ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஜேஇஇ தேர்வு எழுதியுள்ளவர்களை, முன்கூட்டியே எங்களது வளாகத்தைப் பார்வையிடச் செய்யும் நிகழ்ச்சி இதுவாகும். இதில் பல்வேறு பொறியியல் மற்றும் பிற துறைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை அவர்களுக்குச் சென்னை ஐஐடி வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.

AskIITM என்ற இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் செயல்விளக்க நாள் நிகழ்வை முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள்  வடிவமைத்து நடத்தி வருகிறார்கள். இது தவிர, சென்னை ஐஐடி தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் Instagram மற்றும் YouTube ல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

The post ’’மெட்ராஸ் ஐஐடி-யில் படிக்க வேண்டுமா..?’’ மாணவர்களுக்கு அழைப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/feed/ 0
’’ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் மகிழ்ச்சி விழா..!’’ 2 நாள் கொண்டாட்டம் https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2590%25e0%25ae%2590%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3 https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/#respond Wed, 01 Nov 2023 13:13:49 +0000 https://madrasmurasu.com/?p=7319 ஐஐடி மெட்ராஸ், மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக ‘சவேரா’ சமூக விழிப்புணர்வு விழாவை நடத்துகிறது. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) சர்வதேச மற்றும் முன்னாள் மாணவர் உறவுகளுக்கான அமைப்பின் சார்பில், மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக சவேரா என்ற சமூக விழிப்புணர்வு விழா 2023 நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. நன்கொடை இயக்கம் இக்கல்வி நிறுவன வளாகத்திலும், சென்னையின் இதர பகுதிகளிலும் மாணவர்களைக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் […]

The post ’’ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் மகிழ்ச்சி விழா..!’’ 2 நாள் கொண்டாட்டம் first appeared on Madras Murasu.

]]>
ஐஐடி மெட்ராஸ், மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக ‘சவேரா’ சமூக விழிப்புணர்வு விழாவை நடத்துகிறது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) சர்வதேச மற்றும் முன்னாள் மாணவர் உறவுகளுக்கான அமைப்பின் சார்பில், மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக சவேரா என்ற சமூக விழிப்புணர்வு விழா 2023 நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

நன்கொடை இயக்கம்

இக்கல்வி நிறுவன வளாகத்திலும், சென்னையின் இதர பகுதிகளிலும் மாணவர்களைக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் நன்கொடை வழங்கும் நன்கொடை இயக்கமும் இதில் இடம் பெற்றிருக்கிறது.

தனிநபர்கள் தங்களைப் பற்றிய விவரங்கள், கனவுகள், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள ஓரிடத்தை உருவாக்குவதற்கான கூட்டுத் தேடலாகும். சவேராவின் ஒவ்வொரு அம்சமும் பெருமகிழ்ச்சிக்கான காரணத்தை குறிப்பிட்ட நோக்கத்துடன் நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களால் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்வுகள் வருமாறு:

4 நவம்பர் 2023

• மகிழ்ச்சி ஓட்டம் : வளாகத்திற்குள் மகிழ்ச்சிக்காக ஒரு ஓட்டம்.

• நன்கொடை இயக்கம்: பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் நன்கொடை வழங்குவார்கள்

• வேடிக்கையூட்டல்: வேடிக்கையூட்டும் நிகழ்ச்சியுடன் நிதி திரட்டல்

• ஜாம் அமர்வு: கதைசொல்லல், கவிதை, திறந்த மைக் அமர்வுகள், குழுவாக விரும்பிச் செய்தல் (group jamming).

5 நவம்பர் 2023

• ஹேப்பி ஸ்ட்ரீட் : ஜும்பா, யோகா, இசை போன்றவற்றால் தெரு முழுவதும் மகிழ்ச்சி நிரம்பிய நிகழ்வுகள்.

• சிஎஸ்ஆர் எக்ஸ்போ: நிறுவனங்கள் மன ஆரோக்கியத்தில் தங்களது சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துரைக்கும்

• கண்காட்சி: பல்வேறு தன்னார்வ நிறுவனங்களின் அரங்குகள், உணவு, பொருட்கள் விற்பனைக் கடைகள்.

• பயிற்சிப் பட்டறைகள்: உள்ளூர் கலை வடிவங்கள், கலை தெரபி வரை பயிற்சிப் பட்டறைகள்.

• ‘நம்ம சவேரா’ : சென்னை மாணவர்கள் வழங்கும் இசை, நடனம் மற்றும் தெருநாடகம்

• தொண்டு நிகழ்ச்சி – பிரபலமான நபரைக் கொண்டு நிதி திரட்டல்

• டிஜே நைட்- நடன இரவு நிகழ்ச்சி

வாழும் உலகைப் பாராட்ட வேண்டும்

சவேரா விழாவின் பின்னணியில் உள்ள சிந்தனை வெளிப்பாடு குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ்-ன் சர்வதேச மற்றும் முன்னாள் மாணவர் உறவுகளுக்கான ஆசிரிய ஆலோசகர் பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம் கூறுகையில், “தொழில்நுட்பக் கண்டுப்பிடிப்புகளுடன் எங்களது மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியமும் நல்வாழ்வும் முதன்மையானவை. சவேரா மூலம் இக்கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அனைவரும் நாம் வாழும் உலகைப் பாராட்ட வேண்டும். அதனால் அவர்கள் சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைச் செய்ய உந்துதல் பெறுவார்கள்” எனக் குறிப்பிட்டார்.

மாணவர்கள் தங்களது அறைகளை விட்டு வெளியே வரவும், சக மாணவர்களுடன் விளையாடவும், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதைப் பகிர்ந்து கொள்ளவும், சமூகத்தை மகிழ்விக்க ஒரு சிறிய நடவடிக்கை எடுக்கவும் ஊக்குவிக்கப்படுவார்கள்.

The post ’’ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் மகிழ்ச்சி விழா..!’’ 2 நாள் கொண்டாட்டம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%90%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/feed/ 0
’’கழிவுநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றும் ஏரோஜெல் உறிஞ்சி..!’’ ஐஐடி மெட்ராஸ் https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be/#respond Mon, 30 Oct 2023 12:42:52 +0000 https://madrasmurasu.com/?p=7253 ஐஐடி சென்னை மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கழிவுநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றுவதற்கான பயனுள்ள ஏரோஜெல் உறிஞ்சிகளை உருவாக்கியுள்ளனர். சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகம், இஸ்ரேல் ஆகியவை இணைந்து கழிவுநீரில் இருந்து மாசுபாட்டை அகற்றுவதற்கான ஏரோஜெல் உறிஞ்சியை உருவாக்கியுள்ளனர். கிராஃபீன் மாற்றியமைக்கப்பட்ட சிலிக்கா ஏரோஜெல், தொடர்ச்சியான ஓட்டநிலைகளில் 76 சதவீதத்துக்கும் மேலாக மாசுபாடுகளை (பிபிஎம் நிலை) நீக்கி பெரிய அளவிலான நீர் சுத்திகரிப்புக்கு நிலையான வழிமுறையை […]

The post ’’கழிவுநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றும் ஏரோஜெல் உறிஞ்சி..!’’ ஐஐடி மெட்ராஸ் first appeared on Madras Murasu.

]]>
ஐஐடி சென்னை மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கழிவுநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றுவதற்கான பயனுள்ள ஏரோஜெல் உறிஞ்சிகளை உருவாக்கியுள்ளனர்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகம், இஸ்ரேல் ஆகியவை இணைந்து கழிவுநீரில் இருந்து மாசுபாட்டை அகற்றுவதற்கான ஏரோஜெல் உறிஞ்சியை உருவாக்கியுள்ளனர்.

கிராஃபீன் மாற்றியமைக்கப்பட்ட சிலிக்கா ஏரோஜெல், தொடர்ச்சியான ஓட்டநிலைகளில் 76 சதவீதத்துக்கும் மேலாக மாசுபாடுகளை (பிபிஎம் நிலை) நீக்கி பெரிய அளவிலான நீர் சுத்திகரிப்புக்கு நிலையான வழிமுறையை அளிக்கிறது. இந்த முடிவுகளைக் கொண்டு பெரிய அளவில் மேம்படுத்த ஆராய்ச்சிக் குழுவினர் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

பெரும்பாலும் காற்றுடன் கலந்திருக்கும் மிகமிக இலகுரக திடப் பொருட்களாக ஏரோஜெல்கள் சிறந்த உறிஞ்சிகளாக (மாசுபாடுகளை அகற்றப் பயன்படுத்தும் திடப்பொருள்) செயல்படுகின்றன. அத்துடன், சரிசெய்யக்கூடிய மேற்பரப்பு வேதியியல், குறைந்த அடர்த்தி, அதிக நுண்துளை அமைப்பு போன்ற நன்மைகளும் அவற்றால் கிடைக்கப் பெறுகின்றன. இப் பொருட்கள் ‘திடக் காற்று’, ‘உறைந்த புகை’ என்றெல்லாம் எளிமையாக குறிப்பிடப்படுகின்றன.

உலக மக்கள் தொகையில் 18 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா, உலகளவிலான நீர்ஆதாரங்களில் வெறும் 4 சதவீத அளவுக்கு மட்டுமே இருப்பதால் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது. எனவேதான் நீர் மாசுபாட்டை சரிசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீர் சார்ந்த தொழில்களான மருந்து மற்றும் ஜவுளி உற்பத்தித் துறைகளில் இந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தித் துறையில் மட்டும் ஆண்டுதோறும் ஏறத்தாழ 10 லட்சம் டன் அளவுக்கு நச்சு செயற்கை சாயங்கள் வெளியேற்றப்படுகின்றன. நீர்வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் இதனால் கடும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு பெற்ற பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் தலைமையிலான ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிக் குழுவில், ஐஐடி மெட்ராஸ் கெமிக்கல் என்ஜினியரிங் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான சுபாஷ் குமார் சர்மா, பி.ரஞ்சனி, டெல் அவிவ் பல்கலைக் கழகத்தின் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் ஹடாஸ் மாமனே ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழுவினரின் கண்டுபிடிப்புகள் மதிப்புமிக்க இதழான நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (https://doi.org/10.1038/s41598-023-43613-w)-ல் ஆய்வறிக்கையாக வெளியிடப்பட்டது.

இதுபோன்ற ஆராய்ச்சியின் அவசியம் குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ்-ன் கெமிக்கல் என்ஜினியரிங் துறைப் பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் கூறுகையில், “கழிவுநீர் சுத்திகரிப்புக்கான உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டுமின்றி, நீரின் தரத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், அசுத்தமான தண்ணீருடன் தொடர்புடைய சுகாதாரப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தவும் அவசியமாகிவிட்டன” எனக் குறிப்பிட்டார்.

“வழக்கமான கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளைக் கொண்டு மாசுபாடுத் தடயங்களை அகற்ற முயல்வது அதிலும் குறிப்பாக மருந்து உற்பத்தித் துறையில் மிகக் கடினமாக இருந்து வருகிறது. இதனைச் சமாளிக்கும் வகையில், உறிஞ்சுதல், நவீன ஆக்சிஜனேற்ற முறை, சவ்வு வடிகட்டுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சுற்றுச்சூழலுக்கு இயைந்த இயற்கை முறை, குறைந்த செலவு, மிகத் திறமையாக மாசுக்களை நீக்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக ‘உறிஞ்சுதல் முறை’ விரும்பத்தக்கதாக உள்ளது” என்றார்.

இஸ்ரேலின் டெல்அவிவ் பல்கலைக்கழக மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவு பேராசிரியர் ஹடாஸ் மாமனே கூறும்போது, “எங்களது கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட GO-SA ஏரோஜெல்களின் மேற்பரப்பு வேதியியலை மாற்றியமைத்து, குறிப்பிட்ட மாசுக்களை சுத்திகரிக்கும் வகையில் தனிப்பயனாக்க முடியும். ஏரோஜெல்களை திரும்பவும் உருவாக்கி, மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் கழிவுகள் குறைந்துகொண்டே வருவதுடன், குடிநீரை சுத்திகரிக்க ஆகும் இயக்கச் செலவுகளும் வெகுவாகக் குறையும். நீர் சுத்திகரிப்புக்கு இது நிலையான தீர்வாகவும் அமைகிறது” என்றார்.

The post ’’கழிவுநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றும் ஏரோஜெல் உறிஞ்சி..!’’ ஐஐடி மெட்ராஸ் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be/feed/ 0