acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ”சமூக நீதிக்கு முன்னோடி மாநிலம் தமிழ்நாடு..!” அமைச்சர் எ.வ.வேலு first appeared on Madras Murasu.
]]>நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க. இளைஞர் அணி, மருத்துவ அணி, மாணவர் அணி மற்றும் பொறியாளர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து 10.11.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி கலையரங்கில் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி மாணவர்களிடம் டிஜிட்டல் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு
நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை எம்.பி தலைமை வகித்தார். கழக பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் பிரவீன்ஸ்ரீத ரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் எஸ்.கண்ணதாசன், கோ.ராஜசேகர், எம்.ரமேஷ், எஸ்.சதீஷ்குமார், டி.திலீப்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் மு.க.கௌதமன், இரா.மின்னல் கமல், ஏ.வெங்கடாஜலபதி, ஆ.மாதேஸ்வரன், தேவிமகேந்திரன், மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் டாக்டர் சவீதாகதிரவன், டி.எம்.கலையரசு, டாக்டர் முத்தையாசிவராஜ், சக்திவேல், டாக்டர் எஸ்.விக்னேஷ், டாக்டர் யோகேஸ்வரன், டாக்டர் வி.தமிழரசன், டாக்டர் சதீஷ்குமார், டாக்டர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் காலேஜ் கு.ரவி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை, பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ. வேலு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:–
சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளையில் தான் பொறுப்பில் இருந்த போது கம்பன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை நினைவுபடுத்தி பேசியவர் இந்த கல்லூரியில் படித்து சென்ற மாணவிகளின் பலர் அரசுத்துறை அதிகாரிகளாகவும், பல்வேறு கல்லூரிகளில் தலைவராகவும் பேராசிரியர்களாகவும் இருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் முயற்சி வரவேற்கத்தக்கது!
பலர் என்னை பல இடங்களில் பார்க்கும் பொழுது தாங்கள் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் எங்களை மாணவிகளாக நீங்கள் பார்க்காமல் தங்களுடைய மகள்களாக பார்த்து பாதுகாத்து படிக்க வைத்தீர்கள் என்று கூறுவது எனக்கு மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது. எனக்கு பெண் பிள்ளைகள் இல்லை என்ற கவலையை போக்கியது கம்பன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகள்தான்.
‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற வள்ளுவரின் பொன்மொழிக்கு ஏற்ப நீட் தேர்வுக்கு எதிராக விளை யாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்திருக்கும் இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால் ஆற்றல் அறிவு மக்களிடம் செல்வாக்கு இருப்பவர்களால் தான் முடியும் இவை அனைத்தும் அமைச்சர் உதய நிதி ஸ்டாலினிடம் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள், மாணவ, மாணவிகள் யார் பேச்சை, கேட்கிறார்கள் என்றால் அனைவரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கேட்கிறார்கள் என்பதால் தான் தமிழ்நாட்டில் பல்வேறு அமைச்சர்கள் இருந்தாலும் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை உதயநிதி ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். இதற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் மாணவ, மாணவிகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்து உதவிட வேண்டும்.
மாணவ, மாணவிகளாகிய உங்களை மருத்துவத்துறையில் தற்பொழுது படிக்க வைக்க ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு தடையாக இருப்பது நீட் தேர்வு என்றும், 28க்கும் மேற்பட்ட மாநிலங்களைக் கொண்ட மிகப்பெரிய நாடு இந்தியா என்றும் ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தமிழக முதல்வர் மட்டும் ஏன் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று ஏன் கேட்கிறார்கள் என்றால் இந்தியாவிலேயே விழிப்புணர்வு அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்றும், திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டின் அடையாளம்.
விழிப்புணர்வை உருவாக்கிய இயக்கம்!
ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டும்தான் வாக்குரிமை இருந்த காலங்கள் உண்டு என்றும் சொத்து வைத்திருந்தாலும், வரி கட்டி இருந்தாலும் கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்காத காலங்கள் இருந்ததை சுட்டிக்காட்டி பேசிய அவர் நீதிக் கட்சி தான் பெண்களுக்கு வாக்குரிமையை தமிழ்நாட்டில் முதன் முதலில் கொண்டு வந்தது என்று பேசிய அவர் இந்தியாவில் விழிப்புணர்வு உருவாக்கிய இயக்கம் திராவிட இயக்கம்.
ஒரு காலத்தில் ஆஸ்திக்கு ஆண் குழந்தை, ஆசைக்கு பெண் குழந்தை மூடநம்பிக்கைகள் இருந்த காலத்தை, மூடநம்பிக்கைகளை தூக்கி எறிந்து ஒரே வயிற்றில் பிறந்த ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சொத்தில் சம உரிமை அளித்து சட்டத்தை நிறைவேற்றியது தந்தை பெரியாரும், தலைவர் கலைஞரும் தான்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டத்தை இப்பொழுதுதான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அனைத்து மாநிலங்களும் பின்பற்றுகின்றனர். தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மும்மூர்த்தி களும் பெண்கள் படித்தால் தான் நாட்டின் சமுதாயம் முன்னேறும் என்றும், பெண்களுக்குத்தான் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த தெரியும்.
ஒத்துழைப்புத் தாரீர்!
பெண்கள் கையில் நாட்டை கொடுத்தால் தான் நாடு வளர்ச்சி அடையும் என்ற அடிப்படையில் பெண்களை படி, படி, படி என்று சொன்ன இயக்கம் திராவிட இயக்கம் இதுபோல பல்வேறு வரலாறுகள் திராவிட இயக்கத்திற்கு உண்டு.
பல்வேறு வரலாறுகளைக் கொண்ட திராவிட இயக்கம் தற்பொழுது நீட் தேர்விற்கு விலக்கு வேண்டும் என்று தொடர்ந்து அமைச்சர் உதயநிதி தலைமையில் போராடி வருகிறது நாட்டில் பலரும் பல்வேறு வகையில் அவர் அவர்கள் சக்திக்கு ஏற்றார் போல வரிகளை கட்டிக்கொண்டு வருவதாகவும் இதனால் தான் அரசு நடைபெற்று கொண்டு இருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதல்வர் கல்வித்துறை, மருத்துவத்துறை, கட்டுமானத் துறை ஆகிய மூன்று துறைகளை யும் தனது கண்களாக பாவித்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்றும் கல்வித்துறைக்காக 20 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கி கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் நிறைவேற்றி வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகம், ஒன்றிய அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் கருதியும் கையில் எடுத்துள்ள நீட் தேர்வு கையெழுத்து இயக்கத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணைத்தலை வர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஸ்ரீதரன், பொன்.முத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்டப் பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் ப்ரியாவிஜய ரங்கன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன்,
மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி.எம்.நேரு, மங்கலம் பிரபாகரன், ஏ.ஏ.ஆறுமுகம், பொன்.தனுசு, சி. ராம்காந்த், பாலமுரளிகிருஷ்ணா, ஒன்றியச் செயலாளர் பெ.கோவிந்தன், கோ. ரமேஷ், கி.ஆறுமுகம், த.செந்தில்குமார், பேரூர் செயலாளர் சி.கே.அன்பு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் எம்.ஆர்.கலைமணி, கே.கந்தன், எம்.வெங்கடேஷ் உட்பட மாண வர்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சு.ராஜாங்கம் நன்றி கூறினார்.
The post ”சமூக நீதிக்கு முன்னோடி மாநிலம் தமிழ்நாடு..!” அமைச்சர் எ.வ.வேலு first appeared on Madras Murasu.
]]>The post ’’ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் எ.வ.வேலு..!’’ first appeared on Madras Murasu.
]]>சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், 22.9.2023 அன்று நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலைகள் பராமரிப்பு மற்றும் தரமான சாலைகள் அமைப்பது குறித்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். அப்போது பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.
’சாலைகளை பராமரிப்பது கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் முக்கிய பணியாகும். பராமரிப்பு பணிகளுக்கு அனைத்து பொறியாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். முதலமைச்சரின் விபத்தில்லா தமிழகம் என்ற இலக்கை அடைய சாலைகள், பள்ளமில்லா சாலைகளாக பராமரிக்கப்பட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலைகளாக இருந்தாலும், அவற்றில் குழிகள் (pot holes) இருப்பின் அதை ஆய்வு செய்து, சீர் செய்ய திட்ட இயக்குநர் மற்றும் மண்டல அலுவலர் ஆகியோரிடம் அறிவுறுத்த வேண்டும்’’ என்று அமைச்சர் வேலு தெரிவித்தார்.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம், சென்னை – கன்னியாகுமரி சாலை மேம்பாட்டு திட்டம் போன்ற திட்டங்களில் செயல்படுத்தப்படும் சாலைகளில், தார்சாலை போடும் வரை போக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலைகளை பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கத் தவறும் பட்சத்தில், அது குறித்த தகவல்களை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகை சேர்ந்த பொறியாளர்கள், உடனடியாக கண்டறிந்து அதனைத் தலைமை பொறியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். சாலைகளில் உள்ள வேகத்தடைகளை வர்ணம் பூசி தேவையான அறிவிப்பு பலகைகள் அமைத்து, விபத்துக்கள் ஏற்படா வண்ணம் பராமரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சாலை பாதுகாப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். சாலையில் உள்ள மரங்களுக்கு கருப்பு வெள்ளை வர்ணம் அடித்தல், போன்ற பணிகளை செய்து விபத்து ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். சாலை ஓரங்களில் உள்ள ஆபத்தான, உடையும் நிலையில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும். சாலைப் பணிகளை தரமாக செயல்படுத்துவதை தாரக மந்திரமாக கொண்டு, பொறியாளர்கள் பணியாற்ற வேண்டும். அனைத்து பணிகளுக்கும் பண பட்டுவாடா செய்யும் முன் தரக்கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர்களைக் கொண்டு தரத்தினை உறுதி செய்து கொண்ட பின்பே பண பட்டுவாடா செய்ய வேண்டும்.
ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை அலகில் உள்ளது போல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு மற்றும் பிற அலகுகளில் செயல்படுத்தப்படும் பணிகளிலும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களின் அறிவிக்கையை அளவு புத்தகங்களில் அளவீடு பதிவு செய்ய வேண்டிய அவசியம் குறித்து அமைச்சர் வேலு எடுத்துரைத்தார்.
மேம்பாட்டு பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களிடம் சாலைகளை ஒப்படைத்த பின், அச்சாலைகளில் ஏற்படும் நொடிகளை அவ்வப்போது சீர்செய்து, பணி முடிக்கும் வரை பள்ளமில்லா சாலைகளாக பராமரிக்க வேண்டிய பொறுப்பு அந்த ஒப்பந்ததாரருக்கு உள்ளது, அதை உறுதி செய்ய வேண்டியது அந்த பொறியாளரின் கடமையாகும், இவ்வாறாக இல்லாமல் அந்த ஒப்பந்ததாரர் தார் பணி செய்யும் வரை பள்ளங்களுடன் சாலைகள் வைத்துக் கொண்டிருப்பது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது.

பணிகள் செயலாக்கத்தின் போது, சாலை பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பணி நடைபெறும் இடங்களில் சாலை பாதுகாப்பு உறுதி செய்வதை சாலை பாதுகாப்பு அலகில் உள்ள பொறியாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து அதை உறுதி செய்ய வேண்டும். பணிகள் நடைபெறும் பொழுது விபத்துக்கள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள், நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே (அதாவது அக்டோபர் மாதம்) முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், மெட்ரோ, கழிவுநீரகற்று வாரியம் போன்ற பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களின் மறுசீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட வேண்டும். பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து உடனடியாக பணிகளை செயலாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட சாலைகளில் தோண்டும் பணிகள் அனைத்திலும் அக்டோபர் மாதத்திற்குள் மறுசீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட வேண்டும். மழைநீர் வடிந்து செல்ல ஏதுவாக உயர்மட்ட புருவங்களை வெட்டுதல், தாழ்ந்த புருவங்களை நிரப்புதல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள், வடிகால்களில் உள்ள செடிகள், முட்புதர்கள் போன்ற தடைகள் நீக்கப்பட வேண்டும்.
மலைப்பகுதிகளில் அமைந்துள்ள சாலைகளில் உள்ள (Catch pit) பிடிக்குழி, வடிகால் போன்றவற்றை மழைநீர் வடிந்து செல்ல ஏதுவாக நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். மழை பெய்தவுடன் கள ஆய்வு செய்து, எங்கு மழைநீர் தேங்குகிறது, எங்கு மழை நீர் சாலையைக் கடக்கிறது போன்றவற்றை ஆய்வு செய்து, அவற்றை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மின் அறுவை இயந்திரம், ஜெனரேட்டர், மின்சார நீரேற்று பம்புகள் மற்றும் லாரிகள் போன்ற அனைத்து இயந்திரங்களையும் உடனடியாகக் கொண்டு செல்ல ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவை அடிப்படையில் மணல் பைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மைத் திட்டம் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளங்கண்டு முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும். அவசர கால பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மழைக்காலத்தில் வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் பாதசாரிகளின் சுரங்கப்பாதைகளில் நீர் தேங்குவதைத் தவிர்க்க தேவையான நீரேற்று பம்புகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அமைச்சர் வேலு அறிவுறுத்தினார்.
மேலும், அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, ஜவகர்லால் நேரு சாலை, கத்திப்பாரா முதல் கோயம்பேடு வரை, ஜெனரல் பீட்டர்சன் சாலை, காந்தி இர்வீன் பாலம், திருவள்ளுவர் சாலை, இராமபுரம் சாலை, கொளத்தூர் சாலை, சென்னை தினத்தந்தி அலுவலகம் முன்பாக போன்ற இடங்களில் நடைபெறும் பணிகளை போர்க்கால அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.
இந்த வருடம் நிரந்தர வெள்ள சீரமைப்பு பணிகளுக்காக 46 பணிகளுக்கு 105 கோடி ரூபாய் மதிப்பில் நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துப் பணிகளும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். கொளப்பாக்கம் சாலை, அணை ஏரி போன்ற இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் விரைந்து செயல்படுத்தி முடிக்கப்பட வேண்டும். மழை நீர் வடிகால் பணிகளை கண்டறிந்து விரைந்து முடிக்கப்பட வேண்டும் மேலும் இந்த ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள வடிகால்களில் வண்டல் மண்ணை பிடிக்கும் குழி பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி விரைந்து முடிக்கப்பட வேண்டும். எச்சரிக்கை பலகைகள், தகவல் பலகைகள், ஆகியவற்றின் இணைப்புகளில் உறுதித்தன்மை சரி பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் வேலு உத்தரவிட்டார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய 100 இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், 100 இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள், 100 சிறு பாலங்களை புனரமைத்தல் போன்ற பணிகளை திட்டமிட்டவாறு செயல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வேலு கேட்டுக் கொண்டார்..
இந்த வருடம் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்ட நபார்டு, சிஆர்ஐடிபி, சிஎம்டிபி, போன்ற பல்வேறு திட்டங்களில், அனைத்து அலகுகளில் உள்ள பணிகளுக்கு மதிப்பீடுகள் தயாரித்து, ஒப்பந்த புள்ளியில் கோரப்பட்டு, விரைவாக பணிகள் துவங்கப்பட வேண்டும். சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிக்க, ஒரு செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றார் அமைச்சர் எ.வ.வேலு.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.பிரபாகர், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர், அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post ’’ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் எ.வ.வேலு..!’’ first appeared on Madras Murasu.
]]>