acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’ எந்த மொழியுடனும் இந்தி போட்டிப்போடவில்லையா..?’’ டாக்டர் ராமதாஸ் கேள்வி first appeared on Madras Murasu.
]]>The post ’’ எந்த மொழியுடனும் இந்தி போட்டிப்போடவில்லையா..?’’ டாக்டர் ராமதாஸ் கேள்வி first appeared on Madras Murasu.
]]>The post ’’உள்ளூர் மொழிகளுடன் இந்தி போட்டியிடவில்லை..!’’ அமைச்சர் அமித்ஷா first appeared on Madras Murasu.
]]>மத்திய உள்துறை அமைச்சர் தனது உரையில், விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி ஐந்து உறுதிமொழிகளை நாட்டின் முன் வைத்துள்ளார். அவற்றில் இரண்டு பாரம்பரியத்தை மதிப்பது மற்றும் அடிமைத்தனத்தின் அடையாளங்களை அழிப்பதாகும். இவற்றை 100 சதவிகிதம் செயல்படுத்துவதற்கு, அனைத்து இந்திய மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழியும் தங்கள் வலிமையைக் காட்ட வேண்டும் என்று அமித் ஷா கூறினார். மொழியை மதிக்காமல் பாரம்பரியத்தை மதிப்பது முழுமையடையாது என்றும், உள்ளூர் மொழிகளுக்கு மரியாதை அளித்தால் மட்டுமே ஆட்சி மொழியை ஏற்றுக்கொள்வோம் என்றும் அவர் கூறினார். இந்தி உள்ளூர் மொழிகளுடன் போட்டியிடவில்லை. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே தேசம் அதிகாரம் பெறும் என்று அமித் ஷா கூறினார். ஆட்சிமொழியின் வேகம் மந்தமாக இருந்தாலும், எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல், அதற்கான ஏற்பை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர்.
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை 10 மொழிகளில் தொடங்க பிரதமர் நரேந்திர மோடி முன்முயற்சி எடுத்துள்ளார் என்றும், விரைவில் இந்த படிப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்கும் என்றும், அந்த தருணம் உள்ளூர் மொழிகள் மற்றும் அலுவல் மொழிகளின் எழுச்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி இந்தி மற்றும் பிற அனைத்து இந்திய மொழிகளையும் உலகளாவிய மேடையில் பெருமையுடன் முன்வைப்பதால், இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கு வேறு எந்த சாதகமான தருணமும் இருக்க முடியாது என்று அவர் கூறினார். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஒரு உரை கூட ஆங்கிலத்தில் ஆற்றியதில்லை, அரசாங்கத்தின் அமைச்சர்களும் இந்திய மொழிகளில் உரை நிகழ்த்த முயற்சிக்கின்றனர். இது பல்வேறு மொழிகளை இணைக்கும் இயக்கத்திற்கு நிறைய உத்வேகத்தை அளிக்கிறது.
அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது சட்டம் அல்லது சுற்றறிக்கையிலிருந்து வரவில்லை. மாறாக நல்லெண்ணம், உத்வேகம் மற்றும் ஊக்கத்திலிருந்து வருகிறது என்று அமித் ஷா கூறினார். அடிமைக் காலத்திற்குப் பிறகும் இந்திய மொழிகளும் அவற்றின் அகராதிகளும் அப்படியே இருந்தன, இது ஒரு பெரிய சாதனை என்று அவர் கூறினார். நமது நாட்டை ஒன்றிணைக்க மொழிகள் வேலை செய்துள்ளன என்று திரு ஷா கூறினார்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2014 வரை, அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் ஒன்பது தொகுதிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும், 2019 முதல் மூன்று தொகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இந்த தொகுதிகள் பாடவாரியாக தயாரிக்கப்பட்டுள்ளன என்றும், 12 வது தொகுதியின் கருப்பொருள் ‘எளிமைப்படுத்துதல்’ என்றும் அவர் கூறினார். அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த அமித் ஷா, எதிர்காலத்திலும் அலுவல் மொழியை மேம்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் குழு தொடர்ந்து பணியாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப், மத்திய உள்துறை இணையமைச்சர்கள் அஜய் குமார் மிஸ்ரா, நிஷித் பிரமானிக் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
The post ’’உள்ளூர் மொழிகளுடன் இந்தி போட்டியிடவில்லை..!’’ அமைச்சர் அமித்ஷா first appeared on Madras Murasu.
]]>The post ”அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக்குழுக்களை கலைக்க வேண்டும்..!” டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.
]]>தில்லியில் நடைபெற்ற மத்திய நலவாழ்வு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா, “மாநில மொழிகளை நாம் பேசினாலும், தேசிய மொழி என்ற அடிப்படையில் இந்திக்கு மரியாதை அளிக்க வேண்டும். இந்தி மொழி தான் நமது தேசியத் தன்மையை உருவப்படுத்துகிறது; தேசிய ஒற்றைத் தன்மைக்கும், ஒற்றுமைக்கும் இந்தி மொழி தான் பாலமாக செயல்படுகிறது என்பதால் அனைவரும் இந்தியில் பேச வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இது மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சக பணியாளர்கள் மீதான இந்தித் திணிப்பு ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவதைப் போன்று இந்தி நாட்டின் தேசிய மொழியும் அல்ல; அது இந்தியாவை ஒருங்கிணைக்கவும் இல்லை. இந்தி மொழி என்பது நாட்டின் அலுவல் மொழி மட்டும் தான். எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல்மொழி என்ற நிலையை அடைவதற்கு தகுதியானவை தான். தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளும் ஒரே அளவில் வைத்து மதிக்கப்பட வேண்டும். மாறாக மற்ற மொழிகளை புறக்கணித்து விட்டு, இந்தி மொழிக்கு மட்டும் முதன்மைத்துவம் அளித்தாலும், இந்தி பேசாத மக்கள் மீது திணித்தாலும் அது மக்களிடம் பிளவைத் தான் ஏற்படுத்தும் என்பதை மத்திய அமைச்சர் மாண்டாவியா உணர வேண்டும்.
மத்திய அரசின் அலுவல்கள் முழுக்க முழுக்க இந்தியில் மேற்கொள்ளப்படுவதை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக் குழுக்கள் (Hindi Salahkar Samiti) ஏற்படுத்தப்பட்டிருப்பதே இந்தியை திணிக்கும் செயல் தான். ஒரு மொழிக்கு மட்டும் முதன்மைத்துவம் அளிப்பதை ஏற்க முடியாது. இந்தி ஆலோசனைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, ஆண்டுக்கு இரு முறை அதன் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் இந்தியைத் திணிக்கும் செயல் தான். பிறமொழி பேசும் மக்களுக்கு எதிரான இந்த அமைப்புகளை உடனடியாக மத்திய அரசு கலைக்க வேண்டும்.
மத்திய அரசின் அலுவல்களில் இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். அதற்காக, இந்தித்திணிப்பை கைவிட்டு விட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
The post ”அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக்குழுக்களை கலைக்க வேண்டும்..!” டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.
]]>The post ‘’எமது மண்ணில் தமிழுக்குப் பதிலாக இந்தியைத் திணிக்கும் முயற்சியை எதிர்ப்போம்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை first appeared on Madras Murasu.
]]>இந்தியாவின் அனைத்துக் குடிமக்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துவரும் நிலையில், ஒன்றிய அரசும் அதன் நிறுவனங்களும் பிற இந்திய மொழிகளைவிட இந்திக்கு அனைத்து வழிகளிலும் தேவையற்ற மற்றும் நியாயமற்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்குகின்றன. மேலும், மக்கள் நலனுக்காக அல்லாமல், இந்தியை நம் தொண்டையில் திணிக்கவே அவர்கள் தங்கள் மதிப்புமிக்க வளங்களைச் செலவிட விரும்புகிறார்கள்.
இவ்வகையில் சமீபத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அநீதியானது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர், இந்தி பேசாத மக்களையும் மற்றும் இந்தி பேசாத ஊழியர்களையும் அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்தியாவில் இந்தி பேசாத குடிமக்கள் தங்கள் கடின உழைப்பாலும் திறமையாலும் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தங்களின் பங்களிப்புகளை அளிக்கும்போதிலும், அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதைச் சகித்துக் கொள்ளும் காலம் மலையேறிவிட்டது.
இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடும், திமுகவும் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம். ஒன்றிய அரசில் ரயில்வே, அஞ்சல் துறை, வங்கி, நாடாளுமன்றம் என அனைத்து இடங்களிலும் எம்மையும், எமது மக்களையும் அன்றாடம் பாதிக்கும் வகையில் இந்திக்கு வழங்கப்படும் அவசியமற்ற சிறப்புநிலையை நீக்குவோம்.
நாங்கள் எங்கள் வரிகளை செலுத்துகிறோம், முன்னேற்றத்திற்குப் பங்களிக்கிறோம், எங்கள் வளமான மரபு மற்றும் இந்த நாட்டின் பன்முகத்தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். எங்கள் மொழிகள் சமமாக நடத்தப்பட வேண்டும். எமது மண்ணில் தமிழுக்குப் பதிலாக இந்தியைத் திணிக்கும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம்.
The post ‘’எமது மண்ணில் தமிழுக்குப் பதிலாக இந்தியைத் திணிக்கும் முயற்சியை எதிர்ப்போம்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை first appeared on Madras Murasu.
]]>The post ”இது தான் பாஜக..!” சு. வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>தமிழர் எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே!
உங்கள் அமைச்சகம் இந்தியை விதிகளை மீறி தமிழ்நாட்டில் திணிப்பதை முதலில் நிறுத்துங்கள்.
உங்கள் பொறுப்பில் உள்ள அலுவல் மொழி அமலாக்கம் எப்படி நடைபெறுகிறது பாருங்கள்!

அரசு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அலுவல் மொழி விதிகள் விதி எண் 5 ஐ 100 % அமலாக்கச் சொல்லி இந்தி பயன்பாட்டை வலியுறுத்துகிறது.
ஆனால் அலுவல் மொழி விதிகள் பிரிவு 1 (ii) மிகத் தெளிவாக தமிழ்நாட்டிற்கு அது பொருந்தாது என்று கூறுவதை தாண்டி 5 வது பிரிவை பேசும் கபடம் அரங்கேறுகிறது.
G.S.R 1052 – In exercise of the powers conferred by section 8, read with sub-section(4) of section 3 of the Official Languages Act, 1963 (19 of 1963), the Central Government hereby makes the following rules, namely ;
1) Short title, extent and commencement –
i) These rules may be called the Official Languages (Use for Official Purposes of the Union) Rules, 1976.
ii) They shall extend to the whole of India, except the State of Tamilnadu.
iii) They shall come into force on the date of their publication in the Official Gazette.
தமிழைக் காவு கொடுத்து விட்டு தமிழர் பிரதமர் ஆவார் என்று உங்கள் ஆசை வார்த்தைகளுக்கு தமிழை நேசிக்கிற ஒரு தமிழர் கூட ஏமாற மாட்டார்.
முதலில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கும், உங்கள் அலுவல் மொழி அமலாக்க குழுவிற்கும் ஒன்றை சொல்லுங்கள்.
“அலுவல் மொழி விதி 1 (ii) காட்டி தமிழ்நாட்டிற்குள் நுழையாதீர்கள்” என்று.
தமிழ்நாட்டில் உள்ள இந்தி அமலாக்க செல்களை கலையுங்கள்.
இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி., கூறியுள்ளார்.
The post ”இது தான் பாஜக..!” சு. வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>