acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’ஆளுநரை கண்டித்து அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்வோம்..!’’ துரை வைகோ first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை சீர்குலைக்கும் வகையில் பட்டமளிக்கும் கடமையைச் செய்யாமல் தவிர்த்து காலதாமதப்படுத்தி வருதல், தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில், அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு மாறாக செயல்பட்டு, ஒன்றிய அரசின் தலையீட்டை வலிந்து திணிக்க விரும்பி, துணைவேந்தர்களை நியமிக்காமல் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் செயலற்ற தன்மையை உருவாக்குதல்,
மேற்காணும் முக்கிய காரணங்களை முன்பே சிந்தித்து, தமிழ்நாடு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டிருத்தல் ஆகியவற்றைக் கண்டித்து, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (Federation of Students Organisation – Tamil Nadu) சார்பில் வரும் 16.06.2023 அன்று, காலை 09.00 மணியளவில் சென்னை, ஆளுநர் மாளிகைக்கு அருகிலுள்ள சின்னமலை சாலை சந்திப்பில், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FSO – TN) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பட்டமளிப்பு விழாவிற்கு தேதி தராமல் லட்சகணக்கான மாணவர்கள் வாழ்வில் அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி -யைக் கண்டித்து 09.06.2023 அன்று நான் அறிக்கை கொடுத்திருந்தேன். இந்நிலையில் மாணவர் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த முன்வந்து இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். மறுமலர்ச்சி தி.மு.க மாணவர் அணியும் மேற்கண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளது.
கழக மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் ஒருங்கிணைப்பில் சென்னை மண்டல மாணவர் அணி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்வதோடு, சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட கழகத் தோழர்களும் மாணவர் அணி நிர்வாகிகளுடன் இணைந்து கழக கொடியுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஆளுநரை கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க.வின் அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்வோம். கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பிற்கு (Federation of Students Organisation – Tamil Nadu) எனது வாழ்த்துகள்!
The post ’’ஆளுநரை கண்டித்து அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்வோம்..!’’ துரை வைகோ first appeared on Madras Murasu.
]]>The post “ஆளுநருக்கு அரசியல் செய்வதற்கு மாணவர்களின் எதிர்காலமா கிடைத்தது?” துரை வைகோ first appeared on Madras Murasu.
]]>“சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாகளுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவி, தற்பொழுது மாணவர்கள் வாழ்விலும் விளையாடுகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் சனாதன இந்துத்வா கருத்துகளையும், ஆளும் அரசை விமர்சித்து எல்லை மீறுகிறார் ஆளுநர் என சமீபத்தில் கூட இயக்க தந்தை வைகோ விமர்ச்சிருந்தார்.
பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு தேதி வழங்க வேண்டுமென்றால் ஒன்றிய அமைச்சர் ஒருவர் கலந்து கொள்ளவேண்டும் என ஆளுநர் விரும்புவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். கலந்துரையாடல் நிகழ்வை ஏற்படுத்த வேண்டும் என நிர்பந்திப்பதாக தகவல் வருகின்றது. ஆளுநருக்கு அரசியல் செய்வதற்கு மாணவர்களின் எதிர்காலமா கிடைத்தது.
மாணவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியும் இதர தரம்களும் தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் தற்காலிக பட்ட/பட்டய சான்றிதழ்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. மேற்படி மதிப்பெண் மற்றும் பட்ட/பட்டய சான்றிதழ்களை அங்கீகரித்து ஒப்பளிக்கும் உரிமை பல்கலைக் கழக வேந்தரான ஆளுநர்களுக்கு தான் உண்டு. அந்த வகையில் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஒரு மாணவருக்கு பட்ட/பட்டய சான்றிதழ்கள் வழங்க முடியும்.
மரபு வழியாக ஆளுநர் தலைமையில்தான் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழா தேதி முடிவானவுடன் அந்தநாளிலோ அல்லது அதற்கு முந்தைய நாட்களிலோ ஒப்பளிப்பு கூட்டம் நடத்தப்பட்டு கையெழுத்து பெறப்படும். பாஜக ஆளுநர்கள் வரும் வரை இதில் எந்த பிரச்சனைகளும் வந்ததில்லை. பட்டமளிப்பு விழாவில் பல்கலை வேந்தரான ஆளுநரோ, இணை வேந்தரான உயர்கல்வி அமைச்சரோ பேரூரை ஆற்றுவதில்லை. ஆளுநர் அலுவலகத்தில் அனுமதி வாங்கி அழைக்கப்படும் சிறப்பு விருந்தினரே மாணவர்களிடம் உரை நிகழ்த்துவார்.
இங்குதான் ஆளுநர் ஆர்.என் ரவி, ஒன்றிய அமைச்சர்களை அழைக்க வேண்டும், சனாதன கொள்கைகளை பேசக்கூடிய வடக்கத்திய தலைவர்களை அழைக்கவேண்டும் என நிர்பந்தபடுத்துகிறார். அவர்கள் தரும் தேதியும் தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சர் தேதியும் ஒத்துபோகவேண்டும். அதனாலும் காலவிரயம் ஏற்படுகிறது.
பட்டமளிப்பு விழாவில் அந்த பகுதி இளைஞர்கள் ஒரே கூரையின் கீழ் கூடும் நிகழ்வு. அந்த நிகழ்வை தங்கள் சனாதன மதவெறி கொள்கைகளை பரப்பும் களமாக ஆளுநர் ஆர்.என்.ரவி நினைப்பதால்தான் இத்தகைய குளறுபடிகள் நிகழ்கின்றன. பல்கலை கழகங்கள் தரும் தற்காலிக பட்ட / பட்டய சான்றிதழ்கள் ஆறுமாதம் மட்டுமே செல்லுபடியாகும். எனவே பட்டமளிப்பு விழா நடத்த ஏற்படுத்தும் காலதாமதத்தால் 9.29 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கடினமாகும்.
இது குறித்து நான் ஏப்ரல் 1-ஆம் தேதி செய்தியாளர்களுக்கு விரிவாக பேட்டி அளித்திருந்தேன். அதை மீண்டும் நினைவு கூறுகிறேன், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் கல்லூரி வளாக நேர்முக தேர்வில் (campus interview) வேலை வாய்ப்பை பெற்ற மாணவர்கள் ஆறு மாத காலத்திற்க்குள் பட்ட/பட்டய படிப்பு முடித்த சான்றிதழை தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் சமர்பிக்க விட்டால் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும், எண்ணற்ற மாணவர்கள் ஆளுநரின் இந்த நடவடிக்கையால் கிடைத்த வேலை வாய்ப்பையும் இழந்துள்ளனர்.
மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
The post “ஆளுநருக்கு அரசியல் செய்வதற்கு மாணவர்களின் எதிர்காலமா கிடைத்தது?” துரை வைகோ first appeared on Madras Murasu.
]]>The post ”தமிழ்நாட்டு மக்கள் பொங்கி எழுவர் என்பது உறுதி..!” கி.வீரமணி first appeared on Madras Murasu.
]]>திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை:
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக ஆர்.என்.ரவிஒன்றிய டில்லி அரசால் நிய மிக்கப்பட்டவர்அவர் பதவியேற்ற நாள்முதல் இன்றுவரை அரசமைப்புச் சட்டப்படி தாம் ஏற்ற பதவிப் பிரமாணத்திற்கு எதிராகவும் ஓர் ஆர்.எஸ்.எஸ். சனாதனியாகவும் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாகவே வெளிப்படுத்தி நடத்தி வருவதோடு, தமிழ்நாடு அரசின் எதிர்க்கட்சித் தலைவராகவே தம்மை பாவித்து, முற்றிலும் விரும்பத்தகாத வகையில், தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியான தி.மு.க. ஆட்சிக்கு எதிராக போட்டி அரசு ஒன்றினை தனது ராஜ்பவன் நடவடிக்கைகள்மூலம் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும் நடத்தி வருகிறார்
ஏற்கெனவே கடந்த ஆண்டு (2022) ஏப்ரலில் பேரறிவாளன் வழக்கில் இவரது நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பகிரங்கமாகவே தனது கண் டனத்தைத் தெரிவித்து, கருத்துரையைப் பதிவு செய்தது – தீர்ப்பின்மூலம்.
‘‘மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்; தனித்த கண்ணோட் டத்துடன் செயல்பட முடியாது” எனத் தெளி வாகக் குறிப்பிட்டது.
அதற்குப் பிறகு ‘‘ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் ஓர் அங்கம் என்பதை அரசமைப்புச் சட்டம் 163(1) கூறு தெளிவுபடுத்து கிறது; அதன்படிதான் அவர்கள் கடமையாற்ற முடியும்” என்றும் மேலும் சில வழக்குகளில் அண்மையில் இவ்வாறான பல தீர்ப்புகள் வெளிவந்துள்ளன!
ஆனால், இங்குள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசுவதோடு, ஆளுநர் மாளிகையை சனாதன சத்சங்க பிரச்சார அலுவலகம்போல ஆக்கியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு விரோதமான கருத்துகளை – சட்டம் ஒழுங்குப் பிரச்சினையானாலும், சிதம்பரம் தீட்சிதர்கள் நடத்தும் குழந்தை மணம்பற்றியும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் போன்று வெளிநடப்புச் செய்து அப்பதவியின் மாண்பையே சீர்குலைத்தார்.
நேற்று (5.6.2023) ஒரு செய்தி – ராஜ் பவனிலிருந்து வந்துள்ளது5 லட்சம்-பாராட்டு சான்றிதழ் – ‘‘சமூக சேவ கர்களுக்கான கவர்னர் விருது” – விண்ணப்பிக்க ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள்.தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பல விருதுகளை தக்கவர்களை அடையாளம் கண்டு கொடுத்து வருகிறது – பல ஆண்டுகளாக.அதற்குப் ‘போட்டி’யாகவோ அல்லது தனக்குத் தனி விளம்பரம் தேடவோ இப்படி ஒரு முயற்சியா? நாட்டில் நடப்பது கவர்னர் ஆட்சியா? புரியவில்லை
அரசமைப்புச் சட்டப்படி,தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்துதானே இவருடைய ஊதியம் – மற்றச் செலவுகள் வழங்கப்படுகின்றனநிறுவனங்களுக்கு ரூ.3 லட்சமும், தனி நபர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்குவாராம் – அறிவிப்பு நேற்று வந்துள்ளதுதமிழ்நாடு அரசுக்கு எதிராக இப்படி ஒரு ‘‘போட்டி அரசு” நடத்துகிறார்!
அரசின் கொள்கை முடிவுகளுக்கு (Policy Decisions) எதிராக பகிரங்கமாகப் பேசி, சர்ச்சை களை வளர்த்து வருவதை வாடிக்கையாக்கிக் கொள்ளுகிறார்சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதக்களை – சட்ட வரைவுகளை – மாதக் கணக்கில் நிலுவையில் போட்டு வைத்து அரசுடன் ‘ஒத்துழையாமை’ இயக்கத்தை நடத்துகிறார்
தமிழ்நாட்டை தொழில்மயமாக்கி, இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பெருக்கி, தமிழ் நாட்டை வளப்படுத்த வளர்ச்சியடையச் செய்ய வெளிநாட்டு முதலீட்டார்களைச் சந்தித்து அழைக்க முதலமைச்சர் தனது குழுவின ருடன் துபாய், சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்று முதலீடுகளைப் பெற்றுவந்துள்ள நிலையில், அதனைக் கொச்சைப்படுத்துவதுபோல, அதற்கு எதிராக 4.6.2023உதகமண்டலத்தில் பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை அழைத்துப் பேசியபோது சிறிதும் சம்பந்தம் இல்லாத வகையில்,‘‘வெளிநாடு செல்வதால் மட்டும் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள்” என்று நையாண்டி செய்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகா? சம்பந்தா சம்பந்தமில்லாதது இது.
வன்மையான கண்டனத்திற்குரிய ஆளுநரின் இத்தகைய அரசமைப்புச் சட்ட விரோத பேச்சுக்கும், செயலுக்கும் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் பொங்கி எழுவர் என்பது உறுதி இதுபற்றி தமிழ்நாட்டு அனைத்து ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைந்த பதில் நடவடிக் கையை விரைவில் அறிவிப்பது காலத்தின் கட்டாயமாகும்
The post ”தமிழ்நாட்டு மக்கள் பொங்கி எழுவர் என்பது உறுதி..!” கி.வீரமணி first appeared on Madras Murasu.
]]>