Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#ஆர்.என்.ரவி - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 03 Jul 2023 03:44:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’இலாகா இல்லாத அமைச்சர் என்றால் என்ன..?’’ கி.வீரமணி விளக்கம் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25ae%25be-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a4-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/#respond Mon, 03 Jul 2023 03:44:14 +0000 https://madrasmurasu.com/?p=4681 ’’இலாகா இல்லாத அமைச்சர் என்றால் என்ன?’’ என்பது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விளக்கம் அளித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு 1.7.2023 அன்று பேட்டியளித்தார். அவரது பேட்டி வருமாறு: குற்றாலத்தில், திராவிடர் கழகத்தின் சார்பில், 44 ஆவது ஆண்டு பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏராளமான பட்டதாரி இளைஞர்கள், இருபால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முகாமில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த நான்கு நாள்களாக இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. ‘திராவிட […]

The post ’’இலாகா இல்லாத அமைச்சர் என்றால் என்ன..?’’ கி.வீரமணி விளக்கம் first appeared on Madras Murasu.

]]>
’’இலாகா இல்லாத அமைச்சர் என்றால் என்ன?’’ என்பது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விளக்கம் அளித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு 1.7.2023 அன்று பேட்டியளித்தார். அவரது பேட்டி வருமாறு:

குற்றாலத்தில், திராவிடர் கழகத்தின் சார்பில், 44 ஆவது ஆண்டு பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏராளமான பட்டதாரி இளைஞர்கள், இருபால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முகாமில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த நான்கு நாள்களாக இப்பயிற்சி முகாம் நடைபெற்றது.

‘திராவிட மாடல்’ ஆட்சி, பகுத்தறிவு, சமூகநீதி இவற்றையெல்லாம் மய்யப்படுத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பயிற்சி முகாம் ஓர் அரிய வாய்ப்பு. ஏராளமான மாணவர்கள் இந்த இயக்கத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 44 ஆம் ஆண்டு பயிற்சி முகாமில் கலந்துகொள்ள வந்திருக்கிறேன்; இங்கே வரும்பொழுது செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்: தமிழ்நாடு ஆளுநர், அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு பிறகு திரும்பப் பெற்றது குறித்து தங்கள் கருத்து என்ன?

கி.வீரமணி: ஏற்கெனவே நான் என்னுடைய அறிக்கையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். இதுவரை எத்தனையோ ஆளுநர்கள் தமிழ்நாட் டிற்கு வந்திருந்தாலும்கூட, – ‘திராவிட மாடல்’ ஆட்சி இங்கே சிறப்பாக நடைபெறக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு அனுப்பப்பட்டவராக இருக்கிறார் இந்த ஆளுநர்.

ஏனென்றால், அவர் வந்த நாள் முதல் இந்த நாள் வரை முழுக்க முழுக்க ஒரு போட்டி அரசாங்கத்தையே நடத்துகிறார். அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு விரோதமாக – அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மாகவே நடந்துகொள்கிறார். அரசமைப்புச் சட்டத்தில், அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதைப்பற்றிக்கூட புரிந்து கொள்ளாமல், ஆளுநர் ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டு அவர் இஷ்டப்படி நடந்துகொள்கிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் – அவர்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை உடனுக்குடன் பரிசீலித்து அனுப்பவேண்டும் என்று மற்ற மாநிலங்களில் நடைபெறுவதைப்போல இங்கு நடக்காமல், திட்டமிட்டே இவர் வேண்டுமென்றே 13 மசோதாக்களை கையிலே வைத்திருப்பது மட்டுமல்ல – அண்மையில் நடைபெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு – மற்றவை எல்லாம் உங்களுக்குத் தெரியும்.

வழக்குத் தொடர்ந்து நடைபெறுகிறது – அவருடைய ரிமாண்டை நீட்டித்திருக்கிறார்கள்; மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது – அதனை அனுமதித்திருக்கிறது உயர்நீதிமன்றம். இந்தச் சூழ்நிலையில், ஒருவர்மீது வழக்குப் போடுவதினாலேயே அவர் குற்றவாளி ஆகிவிட முடியாது. தீர்ப்பு வரவேண்டும்; அந்தத் தீர்ப்பில் இரண்டாண்டுகளுக்குமேல் தண்டனை கொடுத்தால் தான், ஒருவரின் பதவியைப் பறிக்க முடியும். மற்ற மாநிலங்களில் இதுபோன்று நடந்திருக்கிறது. ஆனால், அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சினையில் அப்படியில்லை.

யாரை அமைச்சராகப் போடுவது என்பது முதல மைச்சருடைய தனி உரிமை; ஆங்கிலத்தில் அதற்கு இருக்கின்ற சொல் Prerogative – ”It is a Prerogative of the Chief Minister of any State. To whom he should appoint Minister and advice of the Chief Minister” என்ற வார்த்தைதான் அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது.

முதலமைச்சருடைய அறிவுரைப்படி, அவர் யாரைப் பரிந்துரை செய்கிறாரோ, அதில் கையெழுத்துப் போடவேண்டியதுதான் ஒரு ஆளுநருடைய வேலை. அரசமைப்புச் சட்டத்தின் 163 ஆவது பிரிவில் மிகத் தெளிவாக இருக்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் நியமித்திருக்கிறார். இலாகா இல்லாத அமைச்சர்களை நியமிப்பது என்பது காலங்காலமாக இருந்திருக்கிறது. ஏன்? கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜ கோபாலாச்சாரியார், இலாகா இல்லாத அமைச்சராக இருந்திருக்கிறார்.

இலாகா இல்லாத அமைச்சர் என்று சொன்னால், அவருக்கு வேலை இல்லை என்று அர்த்தம் இல்லை. எந்த இலாகாவில் என்ன செய்யவேண்டுமோ அதை செய்வதற்குப் பரிபூரண சுதந்திரம் அவருக்கு உண்டு. அப்படி இருக்கக்கூடிய சூழலில், அமைச்சர் செந்தில்பாலாஜியை மாற்றுவதற்கோ, நீக்குவதற்கோ ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது. அதுகுறித்து நான் எழுதிய அறிக்கையில், அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின்கீழ் நீங்கள் சொல்கிறீர்கள்? என்று கேட்டிருந்தேன்.

ஆளுநரின் அறிவிப்பைக் கண்டித்து, நீதிமன்றத் திற்குப் போய் நாங்கள் நீதியை நிலைநாட்டுவோம் என்று முதலமைச்சர் சொல்லிவிட்டார். மக்கள் மன்றம் கொதித்தெழுந்துவிட்டது; அதே நேரத்தில் நீதிமன்றத்திற்குப் போனால் என்னாகும்? ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் இந்த ஆளுநர் கண்டிக்கப்பட்டு இருக்கிறார், பேரறிவாளன் வழக்கில்.

”உங்களுடைய எல்லையைத் தாண்டி நீங்கள் நடந்துகொள்கிறீர்கள்; உங்கள் அதிகார எல்லையை நீங்கள் மீறுகிறீர்கள்” என்று தெளிவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆகவே, ஆளுநருடைய நிலைப்பாடு, அரச மைப்புச் சட்டத்திற்கு விரோதமானது.

அதைவிட வேடிக்கை என்னவென்றால், தமிழ் நாட்டுத் தலைவர்கள் – ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அத்துணைத் தலைவர்களும் ஆளுநரைக் கண்டித்து அறிக்கைகளைக் கொடுத்தவுடன், ஆளுநர் உணர்ந்தாரோ என்னவோ – அதனுடைய ஆபத்தை உள்துறை அமைச்சர் தெரிந்து கொண்டிருக்கின்றார்.

உச்சநீதிமன்றத்திற்கு வழக்குப் போனால், அது யார் யாரையெல்லாம் பாதிக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டதினால், நான்கு மணிநேரத்தில் தமிழ் நாட்டு ஆளுநரின் அறிவிப்புத் திரும்பப் பெறப்பட்டது.

இதுபோன்று முன்யோசனையற்ற, தெளிவற்ற நிலையில் அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர், இப்பொழுது என்ன சொல்கிறார், இந்திய அரசு வழக்குரைஞருடன் ஆலோசனை செய்யவிருக்கிறேன் என்கிறார்.

சட்ட ஆலோசனை கேட்ட பிறகு, செய்வதுதான் மிகவும் முக்கியம். ”வண்டிக்கு முன்னால் குதிரையைக் கட்டுவதா? குதிரைக்கு முன்னால் வண்டியைக் கட்டுவதா?” ”ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு!”

தமிழ்நாட்டு ஆளுநர் எல்லாவற்றிலும் ஆத்திரமாக இருக்கிறார்; வள்ளலாரை சனாதனி என்று சொல்கிறார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்புகிறார். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார். ஆரிய – திராவிடத்திற்கு விளக்கம் சொல்கிறார். இவர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் – போட்டி அரசு நடத்தவேண்டும்? என்று துடிக்கிறார்.

ஆகவே, தமிழ்நாடு முழுக்க வைக்கவேண்டிய கோரிக்கை தமிழ்நாடு ஆளுநர் உடனே ராஜினாமா செய்யவேண்டும்; அவருக்கு ஜனநாயக உணர்வு இருந்தால், ராஜினாமா செய்வார், நான் தவறு செய்து விட்டேன் என்று. அப்படி அவர் செய்வதற்குத் தயாராக இல்லை யென்றால், அவரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்.

”ஆளுநரை வெளியேற்று! ஆளுநரை டிஸ்மிஸ் செய்” என்கிற கோரிக்கை – தமிழ்நாடு முழுக்க உள்ள மக்களின் கோரிக்கையாக வரும் – அதற்கான இயக்கத்தை கட்டுவோம். இதுதான் இப்பொழுது மிகவும் முக்கியம்.

இவ்வாறு கி.வீரமணி கூறினார்.

The post ’’இலாகா இல்லாத அமைச்சர் என்றால் என்ன..?’’ கி.வீரமணி விளக்கம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
’’ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க கையெழுத்து..! துரை வைகோ அறிவிப்பு https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/#respond Mon, 19 Jun 2023 04:18:29 +0000 https://madrasmurasu.com/?p=4122 மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிக்கை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தி தற்போது 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை எதிர்நோக்கி காத்திருக்கும் அவல நிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம். உலகப் பொதுமறை நூலான திருக்குறளுக்கு காவி சாயம் பூசும் வகையில் தொடர்ந்து பேசி […]

The post ’’ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க கையெழுத்து..! துரை வைகோ அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிக்கை:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தி தற்போது 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை எதிர்நோக்கி காத்திருக்கும் அவல நிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம்.

உலகப் பொதுமறை நூலான திருக்குறளுக்கு காவி சாயம் பூசும் வகையில் தொடர்ந்து பேசி வருவதும், ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிப்பெயர்த்த ஜி.யு.போப்பை விமர்சனம் செய்வதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வாடிக்கை.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தும், 45 -க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி அவசர தடைச் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய பெருமைக்குரியவர் ஆர்.என்.ரவி அவர்கள். ஆளுநரை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே அவசர அவசரமாக ஒப்புதல் அளித்தார்.

இப்படி, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஜனநாயக விழுமியங்களை குழி தோண்டி புதைக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகின்றார். தனக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு ஒன்றிய அரசின் ஏஜெண்ட் போல அவர் நடந்து கொள்வதும், தனக்கு கிடைத்த மேடைகளை பயன்படுத்தி மத பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பின்மைக்கு எதிரானது ஆகும்.

கடந்த 14.06.2023 அன்று சென்னையில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 29 ஆவது பொதுக்குழுவில் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்குமாறு குடியரசுத் தலைவரிடம் கேட்டுக் கொள்ளும் கையெழுத்து இயக்கத்தினை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஏன் நீக்க வேண்டும் என்பதை பொதுமக்களிடம் விளக்கிச் சொல்லி அவர்களிடம் கையெழுத்து பெரும் இயக்கத்தினை மறுமலர்ச்சி தி.மு.கழகம் 20.06.2023 முதல் 20.07.2023 வரை நடத்திட உள்ளது.

நம் வலிமையை நாட்டுக்கு உணர்த்தவும், வெகுஜன மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கழகத் தோழர்கள் கையெழுத்து இயக்கத்தினை வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.
கழக மாணவர் அணி, இளைஞர் அணி உள்ளிட்ட அமைப்புகளும் ஆர்வமுடன் இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

வருகின்ற 20.06.2023 அன்று தென்செனையில் மறுமலர்ச்சி தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கத்தினை நான் தொடங்கி வைக்க உள்ளேன்.

கழகத் தோழர்கள் பெருமளவில் இந்நிகழ்வில் கழக கொடியுடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். ஊடகங்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதால் மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்கள் எண்ணிக்கையில் அதிகமாக பங்கேற்பது அவசியமானது ஆகும்.

The post ’’ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க கையெழுத்து..! துரை வைகோ அறிவிப்பு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed/ 0
’’ஆளுநரை கண்டித்து அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்வோம்..!’’ துரை வைகோ https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25ae%25b0%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/#respond Wed, 14 Jun 2023 05:00:27 +0000 https://madrasmurasu.com/?p=3840 மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிக்கை: தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை சீர்குலைக்கும் வகையில் பட்டமளிக்கும் கடமையைச் செய்யாமல் தவிர்த்து காலதாமதப்படுத்தி வருதல், தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில், அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு மாறாக செயல்பட்டு, ஒன்றிய அரசின் தலையீட்டை வலிந்து திணிக்க விரும்பி, துணைவேந்தர்களை நியமிக்காமல் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் செயலற்ற தன்மையை உருவாக்குதல், மேற்காணும் முக்கிய காரணங்களை முன்பே சிந்தித்து, தமிழ்நாடு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில், தமிழ்நாடு […]

The post ’’ஆளுநரை கண்டித்து அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்வோம்..!’’ துரை வைகோ first appeared on Madras Murasu.

]]>
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிக்கை:

தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை சீர்குலைக்கும் வகையில் பட்டமளிக்கும் கடமையைச் செய்யாமல் தவிர்த்து காலதாமதப்படுத்தி வருதல், தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில், அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு மாறாக செயல்பட்டு, ஒன்றிய அரசின் தலையீட்டை வலிந்து திணிக்க விரும்பி, துணைவேந்தர்களை நியமிக்காமல் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் செயலற்ற தன்மையை உருவாக்குதல்,

மேற்காணும் முக்கிய காரணங்களை முன்பே சிந்தித்து, தமிழ்நாடு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டிருத்தல் ஆகியவற்றைக் கண்டித்து, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (Federation of Students Organisation – Tamil Nadu) சார்பில் வரும் 16.06.2023 அன்று, காலை 09.00 மணியளவில் சென்னை, ஆளுநர் மாளிகைக்கு அருகிலுள்ள சின்னமலை சாலை சந்திப்பில், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FSO – TN) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பட்டமளிப்பு விழாவிற்கு தேதி தராமல் லட்சகணக்கான மாணவர்கள் வாழ்வில் அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி -யைக் கண்டித்து 09.06.2023 அன்று நான் அறிக்கை கொடுத்திருந்தேன். இந்நிலையில் மாணவர் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த முன்வந்து இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். மறுமலர்ச்சி தி.மு.க மாணவர் அணியும் மேற்கண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளது.

கழக மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் ஒருங்கிணைப்பில் சென்னை மண்டல மாணவர் அணி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்வதோடு, சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட கழகத் தோழர்களும் மாணவர் அணி நிர்வாகிகளுடன் இணைந்து கழக கொடியுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆளுநரை கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க.வின் அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்வோம். கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பிற்கு (Federation of Students Organisation – Tamil Nadu) எனது வாழ்த்துகள்!

The post ’’ஆளுநரை கண்டித்து அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்வோம்..!’’ துரை வைகோ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/feed/ 0
“ஆளுநருக்கு அரசியல் செய்வதற்கு மாணவர்களின் எதிர்காலமா கிடைத்தது?” துரை வைகோ https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d/#respond Fri, 09 Jun 2023 14:48:00 +0000 https://madrasmurasu.com/?p=3660 மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அறிக்கை: “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாகளுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவி, தற்பொழுது மாணவர்கள் வாழ்விலும் விளையாடுகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் சனாதன இந்துத்வா கருத்துகளையும், ஆளும் அரசை விமர்சித்து எல்லை மீறுகிறார் ஆளுநர் என சமீபத்தில் கூட இயக்க தந்தை வைகோ விமர்ச்சிருந்தார். பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு தேதி வழங்க வேண்டுமென்றால் ஒன்றிய அமைச்சர் ஒருவர் கலந்து கொள்ளவேண்டும் என ஆளுநர் விரும்புவதாக உயர்கல்வித்துறை […]

The post “ஆளுநருக்கு அரசியல் செய்வதற்கு மாணவர்களின் எதிர்காலமா கிடைத்தது?” துரை வைகோ first appeared on Madras Murasu.

]]>
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அறிக்கை:

“சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாகளுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவி, தற்பொழுது மாணவர்கள் வாழ்விலும் விளையாடுகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் சனாதன இந்துத்வா கருத்துகளையும், ஆளும் அரசை விமர்சித்து எல்லை மீறுகிறார் ஆளுநர் என சமீபத்தில் கூட இயக்க தந்தை வைகோ விமர்ச்சிருந்தார்.

பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு தேதி வழங்க வேண்டுமென்றால் ஒன்றிய அமைச்சர் ஒருவர் கலந்து கொள்ளவேண்டும் என ஆளுநர் விரும்புவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். கலந்துரையாடல் நிகழ்வை ஏற்படுத்த வேண்டும் என நிர்பந்திப்பதாக தகவல் வருகின்றது. ஆளுநருக்கு அரசியல் செய்வதற்கு மாணவர்களின் எதிர்காலமா கிடைத்தது.

மாணவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியும் இதர தரம்களும் தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் தற்காலிக பட்ட/பட்டய சான்றிதழ்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. மேற்படி மதிப்பெண் மற்றும் பட்ட/பட்டய சான்றிதழ்களை அங்கீகரித்து ஒப்பளிக்கும் உரிமை பல்கலைக் கழக வேந்தரான ஆளுநர்களுக்கு தான் உண்டு. அந்த வகையில் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஒரு மாணவருக்கு பட்ட/பட்டய சான்றிதழ்கள் வழங்க முடியும்.

மரபு வழியாக ஆளுநர் தலைமையில்தான் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழா தேதி முடிவானவுடன் அந்தநாளிலோ அல்லது அதற்கு முந்தைய நாட்களிலோ ஒப்பளிப்பு கூட்டம் நடத்தப்பட்டு கையெழுத்து பெறப்படும். பாஜக ஆளுநர்கள் வரும் வரை இதில் எந்த பிரச்சனைகளும் வந்ததில்லை. பட்டமளிப்பு விழாவில் பல்கலை வேந்தரான ஆளுநரோ, இணை வேந்தரான உயர்கல்வி அமைச்சரோ பேரூரை ஆற்றுவதில்லை. ஆளுநர் அலுவலகத்தில் அனுமதி வாங்கி அழைக்கப்படும் சிறப்பு விருந்தினரே மாணவர்களிடம் உரை நிகழ்த்துவார்.

இங்குதான் ஆளுநர் ஆர்.என் ரவி, ஒன்றிய அமைச்சர்களை அழைக்க வேண்டும், சனாதன கொள்கைகளை பேசக்கூடிய வடக்கத்திய தலைவர்களை அழைக்கவேண்டும் என நிர்பந்தபடுத்துகிறார். அவர்கள் தரும் தேதியும் தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சர் தேதியும் ஒத்துபோகவேண்டும். அதனாலும் காலவிரயம் ஏற்படுகிறது.

பட்டமளிப்பு விழாவில் அந்த பகுதி இளைஞர்கள் ஒரே கூரையின் கீழ் கூடும் நிகழ்வு. அந்த நிகழ்வை தங்கள் சனாதன மதவெறி கொள்கைகளை பரப்பும் களமாக ஆளுநர் ஆர்.என்.ரவி நினைப்பதால்தான் இத்தகைய குளறுபடிகள் நிகழ்கின்றன. பல்கலை கழகங்கள் தரும் தற்காலிக பட்ட / பட்டய சான்றிதழ்கள் ஆறுமாதம் மட்டுமே செல்லுபடியாகும். எனவே பட்டமளிப்பு விழா நடத்த ஏற்படுத்தும் காலதாமதத்தால் 9.29 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கடினமாகும்.

இது குறித்து நான் ஏப்ரல் 1-ஆம் தேதி செய்தியாளர்களுக்கு விரிவாக பேட்டி அளித்திருந்தேன். அதை மீண்டும் நினைவு கூறுகிறேன், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் கல்லூரி வளாக நேர்முக தேர்வில் (campus interview) வேலை வாய்ப்பை பெற்ற மாணவர்கள் ஆறு மாத காலத்திற்க்குள் பட்ட/பட்டய படிப்பு முடித்த சான்றிதழை தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் சமர்பிக்க விட்டால் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும், எண்ணற்ற மாணவர்கள் ஆளுநரின் இந்த நடவடிக்கையால் கிடைத்த வேலை வாய்ப்பையும் இழந்துள்ளனர்.

மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

The post “ஆளுநருக்கு அரசியல் செய்வதற்கு மாணவர்களின் எதிர்காலமா கிடைத்தது?” துரை வைகோ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d/feed/ 0
’’தொடர்ந்து அத்துமீறி பேசும் கவர்னர் ஆர்.என்.ரவி..!’’ அமைச்சர் தங்கம் தென்னரசு https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%25b1%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25af%2587 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87/#respond Tue, 06 Jun 2023 11:04:50 +0000 https://madrasmurasu.com/?p=3515 கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அத்துமீறி பேசி வருகிறார் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை கவர்னர் முற்றிலும் அறியவில்லையோ? அல்லது அறிந்தும் அறியாமல் இருப்பதாக காட்டிக் கொள்கிறாரா என்பது தெரியவில்லை. கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அத்துமீறி பேசி வருகிறார். அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் கவர்னர் ரவி. கவர்னர் அண்மைக்காலமாக முழு அரசியல்வாதியாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். சிதம்பரம் […]

The post ’’தொடர்ந்து அத்துமீறி பேசும் கவர்னர் ஆர்.என்.ரவி..!’’ அமைச்சர் தங்கம் தென்னரசு first appeared on Madras Murasu.

]]>
கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அத்துமீறி பேசி வருகிறார் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை கவர்னர் முற்றிலும் அறியவில்லையோ? அல்லது அறிந்தும் அறியாமல் இருப்பதாக காட்டிக் கொள்கிறாரா என்பது தெரியவில்லை. கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அத்துமீறி பேசி வருகிறார்.

அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் கவர்னர் ரவி. கவர்னர் அண்மைக்காலமாக முழு அரசியல்வாதியாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். சிதம்பரம் விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் கவர்னர் இப்படி பேசியிருப்பார் என கருதுகிறேன்

முதலமைச்சர் மீதான விமர்சனம் பிரதமர் மீதான விமர்சனமாக பார்க்க வேண்டும். தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். சர்ச்சைகளுக்கு கவர்னர் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கவர்னர் ஆர்.என்.ரவி துணைவேந்தர் மாநாட்டை அரசியலுக்காக பயன்படுத்தியுள்ளார்.

2021-22 ம் நிதியாண்டில், தமிழ்நாட்டில் 4,79,213 நிறுவனங்கள், 36,63,938 பணியாளர்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது; 2022-23-ல் நிறுவனங்கள் 7 லட்சமாக உயர்ந்துள்ளது. எல்லா தரவரிசைகளிலும் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் சூழலில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய கவர்னர் எப்படி இந்த உண்மைகளை மறைத்துவிட்டு பேசுகிறார் என தெரியவில்லை.

அகில இந்திய அளவில் வெளியிட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் உள்ள டாப் 100 பல்கலைக்கழகங்களில், 20 பல்கலை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடியவை; டாப் 100 கல்லூரிகளில், 30 தமிழ்நாட்டில் இருப்பவை.

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் பேசியதை ஏற்க முடியாது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்க பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்வரின் ஜப்பான் பயணத்தின் மூலம் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளன.

தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழுகிறது. உகந்த சூழல் காரணமாக தமிழகத்தை நோக்கி உலக முதலீட்டாளர்கள் படையெடுக்கிறார்கள். கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் உயர்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

The post ’’தொடர்ந்து அத்துமீறி பேசும் கவர்னர் ஆர்.என்.ரவி..!’’ அமைச்சர் தங்கம் தென்னரசு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87/feed/ 0