acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’இடைநிலை ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..!’’ மொத்தம் 2,768 ஆசிரியர்கள் நியமனம் first appeared on Madras Murasu.
]]>ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
2023-2024 ஆம் ஆண்டிற்காக 1768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்புவதற்கு அறிக்கை 09.02.2024 அன்று வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேற்படி பதவிக்கான 1000 கூடுதல் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை 16.07.2024 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையத்தளத்தில் (website: http:// www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வு
’’ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கையின் படி, 23.06.2024 அன்று நடைபெற இருந்த இடைநிலை ஆசிரியர் (SGT) தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. மேற்கண்ட தேர்வானது வருகின்ற 21.07.2024 அன்று (ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறும் என்று விண்ணப்பத்தாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது’’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று தேர்வெழுதும் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
The post ’’இடைநிலை ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..!’’ மொத்தம் 2,768 ஆசிரியர்கள் நியமனம் first appeared on Madras Murasu.
]]>The post ”தேசிய ஆசிரியர்கள் விருது 2024..!” யார் யார் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>தேசிய ஆசிரியர் விருதுகள் 2024-க்கு தகுதியான ஆசிரியர்களிடமிருந்து ஆன்லைன் சுய பரிந்துரைகள் ஜூன் 27 தேதி முதல் கல்வி அமைச்சகத்தின் இணையதளத்தில் http://nationalawardstoteachers.education.gov.in வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் பரிந்துரைகளைப் பெறுவதற்கான கடைசி தேதி ஜூலை 15 ஆகும். இந்த ஆண்டு, மாவட்ட, மாநில, தேசிய அளவில், மூன்று கட்ட தேர்வு செயல்முறை மூலம், 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த விருது செப்டம்பர் 5-ம் தேதி புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.
கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று, அதாவது செப்டம்பர் 5-ம் தேதி வெளிப்படையான மற்றும் ஆன்லைன் தேர்வு செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. இதற்காக தேசிய அளவிலான ஒரு விழாவை ஆண்டு தோறும் ஏற்பாடு செய்து வருகிறது.
நாட்டின் மிகச் சிறந்த ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடுவதும், தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பின் மூலம் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல் மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திய அந்த ஆசிரியர்களைக் கௌரவிப்பதும் தேசிய ஆசிரியர்கள் விருதின் நோக்கமாகும்.
தகுதி நிபந்தனைகள்:
மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில / யூனியன் பிரதேச வாரியத்துடன் இணைந்த தனியார் பள்ளிகளால் நடத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைவர்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள்.
மத்திய அரசு பள்ளிகள், அதாவது கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள், பாதுகாப்பு அமைச்சகம் நடத்தும் சைனிக் பள்ளிகள், அணுசக்தி கல்வி சங்கம் நடத்தும் பள்ளிகள், பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் நடத்தப்படும் ஏகலைவா மாதிரி குடியிருப்பு பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய பள்ளிகள் சான்றிதழ் தேர்வு கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) ஆகியவற்றுடன் இணைந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
The post ”தேசிய ஆசிரியர்கள் விருது 2024..!” யார் யார் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’ஆசிரியர் தகுதி தேர்வு டிசம்பரில் அறிவிப்பு வெளியாகிறது..!’’ இலவச பயிற்சி வகுப்புக்கு இன்றே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாட்டில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட ரீதியாக நடத்தப்பட்டு வருகின்றன.
மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிக்கான வழிகாட்டும் மையங்களில் தன்னார்வ பயிலும் வட்டங்கள் செயல்பட்டு வருகின்றது.
அங்கு, இப்பபயிற்சியை திறன்மிக்க பயிற்றுநர்கள் நடத்தி வருகிறார்கள். அதனுடன் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். பாட குறிப்பு மற்றும் புத்தகங்கள் போன்றவற்றின் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாய்ப்பினை பெற மாவட்டம் தோறும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சென்று சேவைகளை பெற வேண்டும். கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்காக பயன்பெறும் வகையில் (https://tamilnaducareersrvices.tn.gov.in/)
என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்து கொண்டும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
அலைபேசி வாயிலாக பயன்படுத்த அலைபேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. https://tamilnaducareersrvicestngov.in/ இந்த இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வருகின்ற டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வின் அறிவிப்பானது வெளியிடப்படும். மேலும் இதன் விவரங்களை தெரிந்து கொள்ள http://www.trbtn.nic.in என்ற இணயதளத்தை அணுகலாம்.
இவ்வேலை வாய்ப்பிற்கான கல்வி தகுதிகள் பின்வருமாறு:
தாள் -1
1. 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
2. இறுதி ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி அல்லது பயில்பவராக இருக்க வேண்டும்.
தாள் – 2
1. B.Ed தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
2. இறுதி ஆண்டு B.Ed தேர்ச்சி அல்லது பயில்பவராக இருக்க வேண்டும்.
இவ்வேலை வாய்ப்பிற்கான வயது : உச்ச வயது வரம்பு இல்லை
ஆசிரியர் தகுதி தேர்விற்கான நேரடி இலவச பயிற்சியானது சென்னையில் உள்ள கிண்டியில் ஆகஸ்ட் மாதம் 21 – ம் தேதி அன்று துவங்க உள்ளது.
TET பேப்பர் – 1 மற்றும் பேப்பர் – 2 விற்கான பயிற்சியைப் பெற
https://forms.gle/rnAmqdhpf2ujwp5e8 என்ற கூகுள் படிவம் லிங்கை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் இதனைப் பற்றிய தகவல்களை பெற 9499966021, 043-22501032 என்ற அலைபேசி எண்ணை அணுகவும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
– தே.சுகன்யா
The post ’’ஆசிரியர் தகுதி தேர்வு டிசம்பரில் அறிவிப்பு வெளியாகிறது..!’’ இலவச பயிற்சி வகுப்புக்கு இன்றே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் 4,062 காலிப்பணியிடம்..!’’ ஜுலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>இங்கே மாணவர்கள் கட்டாயம் தங்கிப் படிக்கவேண்டும். இப்பள்ளி ஜவஹர் நவோதயா வித்தியாலயம் போல மாணவர்களுக்கு உணவுடன் தங்குமிடமும் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான கல்வி அந்தந்த மாநில அரசின் விருப்பப்படி சி.பி.எஸ்.இ அல்லது மாநிலப் பாடத்திட்டத்தில் கல்வி கற்பிக்கப்படுகிறது.
இந்தியாவில் 690 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளை அமைக்க இந்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது 401 பள்ளிகள் செயல்பாட்டில் உள்ளது. 401 பள்ளிகள் 1,13,275 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அதில் ஆண் மாணவர் எண்ணிக்கை 56,107 மற்றும் பெண் மாணவியர் எண்ணிக்கை 57,168 ஆகும்.
தமிழ்நாடு:
தமிழகத்தில் விழுப்புரம், சேலம் , நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல் என ஆறு பள்ளிகள் செயல்படுகின்றன. மேலும், இருளர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயனடைவதற்காக, 17 கோடி ரூபாயில், மத்திய அரசின் ‘ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி’, வண்டலுார் அருகே கட்டப்பட்டு உள்ளது. அனைத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பள்ளியில் இருளர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கி சேர்ந்து படித்து வருகின்றனர்.
வேலைவாய்ப்பு:
பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில், பள்ளி முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணக்கர், இளநிலை உதவியாளர் (தலைமையகம்) ஆகிய பதவிகளில், காலியாக உள்ள 4062 பணியிடங்களுக்கு ஜூலை 31 க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி – https://emrs.tribal.gov.in/
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2023
பள்ளி முதல்வர் Principal : 303
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் PGT : 2266
கணக்கர் Accountant : 361
இளநிலை உதவியாளர் (தலைமையகம்) Jr. Secretariat Assistant (JSA) : 759
ஆய்வக உதவியாளர் Lab Attendant : 373
மொத்தம் காலிப்பணியிடம்: 4062
கல்வித் தகுதிகள்:
முதல்வர் : 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிகளின் படி, இன அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. முதுநிலை பட்டப்படிப்புடன் பி.எட்., படித்திருக்க வேண்டும். 12 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். Vice Principal / PGT / TGT பணிகளில் கலவையாக இந்த அனுபவம் இருக்க வேண்டும். இந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளுர் மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் PGT: – 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிகளின் படி, இன அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஆங்கிலம், ஹிந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு, வணிகவியல் ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். PGT(RegionalLanguage) : Marathi, Odiya, Telugu , Sanskrit, Bengali Santhali ஆகிய மொழிகள் மண்டல மொழிகள் என்ற அடிப்படையில் மொழி ஆசிரியர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அத்துடன் அந்தந்த பாடத்தின் அடிப்படையில் பிஎட் முடித்திருக்க வேண்டும்.
கணக்கர்: வணிகவியல் பட்டதாரிகள், 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி இன அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
இளநிலை உதவியாளர் (தலைமையகம்) : 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இந்தியில் 30 வார்த்தைகள் அல்லது ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் அடிக்க தெரிந்திருக்க வேண்டும். 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி இன அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
ஆய்வக உதவியாளர்: 12 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திட்டத்தை எடுத்து படித்திருக்க வேண்டும். அல்லது 10-ம் வகுப்பு முடித்ததுடன் லேப் டெக்னிக் குறித்து சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர் வயது 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி இன அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பக் கட்டணம்: பள்ளி முதல்வர் பதவிக்கு, ரூ.2000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ரூ.1500, ஆசிரியர் அல்லாத இதர அனைத்து பதவிகளுக்கும் ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு குறித்த முழு விபரம் அறிய https://emrs.tribal.gov.in/ என்ற அறிவிக்கையை பார்க்கவும். தேர்வுக்கு விண்ணப்பிக்க, தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் Online Submission of Application Form (upto 23:50 Hrs. of 31st July 2023).
The post ’’ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் 4,062 காலிப்பணியிடம்..!’’ ஜுலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post “அமைச்சர் பொன்முடி வாக்குறுதி என்னாச்சு?” டாக்டர் அன்புமணி கேள்வி first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாட்டில் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை இடைநிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் நேரடியாக பணியமர்த்துவது குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவெடுத்து அறிவிக்கப் படும் என்று உறுதியளித்து இன்றுடன் 25 நாட்களாகியும் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. 80 ஆயிரத்திற்கும் கூடுதலான தகுதித்தேர்வு வெற்றியாளர்களின் எதிர்காலம் குறித்த விவகாரத்தில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு பத்தாண்டுகளாக ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. தங்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும்; பணி வழங்க வடிவமைக்கப்பட்டுள்ள சமூகநீதிக்கு எதிரான நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அதை செய்ய வேண்டிய தமிழக அரசு, அதற்கு மாற்றாக 2018-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தேர்வை திணித்தது. அதாவது ஒருவர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலும், மீண்டும் ஒரு போட்டித் தேர்வில் வென்றால் தான் ஆசிரியராக முடியும். இந்த அநீதிக்கு எதிராக தகுதித் தேர்வில் வென்றவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்; அவர்களுக்கு பா.ம.க. துணை நிற்கிறது.
ஆண்டுக்கு ஒரு போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லாத நிலையில், கடந்த மே 9-ஆம் நாள் முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். ஐந்தாவது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்த நிலையில், மே 13-ஆம் நாள் அரசின் சார்பில் அவர்களுடன் பேச்சு நடத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அடுத்த ஒரு வாரத்தில் இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். அதன்பின் இன்றுடன் 25 நாட்கள் நிறைவடைந்து விட்டன.
ஆனால், தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக ஆசிரியர்களாக அமர்த்துவது பற்றி அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இன்னும் கேட்டால், இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான பணிகளைக் கூட தமிழக அரசு தொடங்கவில்லை.
தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக ஆசிரியர்களை நியமிப்பதில் ஒரு சட்ட சிக்கல் இருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. உண்மையில் தகுதித் தேர்வை ரத்து செய்வதில் தான் சட்ட சிக்கல்கள் உள்ளன; போட்டித்தேர்வை ரத்து செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 10ஆம் வகுப்பு வரையிலும் இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதி வழங்குகிறது.
அதற்காக மத்திய அரசு விதித்த நிபந்தனையின்படி 2012 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதனால், தகுதித் தேர்வை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அதற்குப் பிறகும் போட்டித் தேர்வுகளை நடத்த வேண்டிய தேவை தமிழக அரசுக்கு இல்லை. இது தொடர்பாக 2018-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட பள்ளிக்கல்வித் துறையின் 149-ஆம் எண் அரசாணையை ரத்து செய்து ஆணையிட்டாலே போதுமானது.
பள்ளிக்கல்வித்துறையில் அண்மைக்காலமாக சில சரியான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித்துறையின் ஆணையர் பொறுப்பை அகற்றி விட்டு, மீண்டும் இயக்குனர் பதவிக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அதற்கான ஆணையை நேற்று பிறப்பித்திருக்கிறது. அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 5 மாதங்களில் எந்தப் பணிக்கும் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படாததை நான் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதே போல், பள்ளிக்கல்வித்துறையில் கடந்த காலங்களில் நிகழ்ந்த அனைத்து தவறுகளும் திருத்தப்பட வேண்டும்; அதில் தகுதித்தேர்வில் வென்றோருக்கு பணி வழங்குவது முதன்மையாக இருக்க வேண்டும்.
இந்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மூலம் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் அரசாணை 149-ஐ நீக்கி விட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அத்துடன், ஏற்கனவே இருந்தவாறு ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 57-ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
The post “அமைச்சர் பொன்முடி வாக்குறுதி என்னாச்சு?” டாக்டர் அன்புமணி கேள்வி first appeared on Madras Murasu.
]]>The post ’’திராவிடன் என்ற சொல் இன எதிரிகளை அச்சுறுத்தும்..!” எழுத்தாளர் ப.திருமாவேலன் first appeared on Madras Murasu.
]]>தி.மு.க. செய்தித் தொடர்புக் குழுத் தலைவர், மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், எழுத்தாளர் ப.திருமாவேலன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் பேசினர்.
எழுத்தாளர் ப.திருமாவேலன் ஆய்வுரை நிகழ்த்தி பேசியதாவது:
திராவிட பல்கலைக்கழகத்தின் நிரந்தரமான வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரே ஒரு சாதனையை மட்டும் தான் ஆசிரியர் பாக்கி வைத்திருந்தார் அதுவும் இன்றைக்கு நிறைவேறி இருக்கிறது. அதுதான் விடுதலை களஞ்சியம்.
தமிழர் தலைவர் ஆசிரியருடைய சாதனை என்பது பெரியாருக்கு பின் விடுதலையை விடாமல் நடத்தியது. மேலும், எனக்கு பின்னால் என் வாரிசு என் புத்தகங்கள் தான் என்றார் பெரியார். இன்று, பெரியாருக்கு பிறகு அதிக அளவில் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதிலும் பெரியாரின் புத்தகங்களை பதிப்பிக்காமல் பதிப்பகம் நடத்த முடியாது என்று நினைக்கக் கூடிய அளவில்மாற்றியது ஆசிரியருடைய அடுத்த சாதனை.
பெரியாருக்கு பிறகு திராவிடம் இருக்காது, இந்த இயக்கம் இருக்காது என்று நினைத்தபோது பெரியாரே பரவாயில்லை என்று எதிரிகளை சொல்ல வைத்தது ஆசிரியரின் சாதனை. அதிலும் குறிப்பாக குடிஅரசு, பகுத்தறிவு போன்ற வார இதழ்களை தொகுப்பது என்பது கொஞ்சம் எளிமையான காரியம். ஆனால், விடுதலை போன்ற நாளிதழை தொகுத்திருக்கிறார் என்றால் இது யாரும் செய்ய முடியாத மகத்தான சாதனை.

தமிழர், தமிழினம் பற்றிய செய்திகளை மட்டும் விடுதலையில் திருப்பிப் பார்ப்பதற்கே தனக்கு அய்ந்து ஆண்டுகள் ஆனது. ஆனால் இன்றைக்கு விடுதலை தொகுதியாக வருகிறது என்றால் அது மிகப் பெரிய சாதனையின் தொடக்கம். நீதிக்கட்சியால் திராவிடன் நாளிதழ் தொடங்கப்பட்ட நாள் 01.06.1917. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடன் என்று சொல்லை பயன்படுத்துவது இன எதிரிகளை அச்சுறுத்தும் என்று நம் மூதாதையர்கள் சிந்தித்தார்கள்.
தமிழினத்தின் மானத்தைக் காக்க உருவாக்கப்பட்ட இந்த விடுதலை 89 ஆண்டுகள் நடந்திருக்கிறது. அதில் 61 ஆண்டுகாலம் ஆசிரியராக நம் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி இருந்திருக்கிறார். இது இந்த இயக்கத்தின் வரலாற்றில் மட்டுமல்ல, இதழியல் வரலாற்றில், உலகளாவிய அளவில் அனைவரும் பாராட்டிப் போற்ற வேண்டிய காரியமாக அமையும் என்றார்.
இந்த தொகுதியில் முதல் செய்தியாக எனது கண்ணில் பட்டது குழந்தை திருமணங்களை பற்றியது. அது 1936 -ல் சாரதா சட்டத்தின்படி குழந்தை திருமணங்களை பற்றி விடுதலையில் செய்தி வந்திருக்கிறது. அன்று இருந்த சனாதனத்தின் புத்தி 2023 ஆம் ஆண்டிலும் அப்படியே இருக்கிறது. எனவே, இந்த நூலின் தேவை என்பது இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தேவை.
தந்தை பெரியாரின் தொலைநோக்கு, அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை நமக்கு காட்டும். குறிப்பாக 1927-ல் பார்ப்பனர்களுக்கு விரோதமாக நீங்கள் பேசத் தொடங்கினால் உங்களை உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள் என்று காந்தியிடம் பெரியார் சொன்னார். 1947 இல் அதுவே நடந்தது.
1945-இல் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அதற்கு முன்பாகவே விடுதலையில் ஹிட்லர் தற்கொலை தான் செய்து கொள்வார் என்று தலைப்பு செய்தி வந்தது. இப்படியாக தொடர்ந்து தந்தை பெரியார் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற தரிசனத்தை பெற விடுதலையின் ஒவ்வொரு தொகுதியும் வெளிவர வேண்டும். மிகப்பெரிய போர்வாளாய் மட்டுமல்லாமல், கேடயத்தையும் சேர்த்து நமக்காக வழங்கி இருக்கக்கூடிய ஆசிரியருக்கு நன்றி.
இவ்வாறு, எழுத்தாளர் ப.திருமாவேலன் பேசினார்.
The post ’’திராவிடன் என்ற சொல் இன எதிரிகளை அச்சுறுத்தும்..!” எழுத்தாளர் ப.திருமாவேலன் first appeared on Madras Murasu.
]]>