acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களை 20,000 ஆக உயர்த்துக..!’’ முதமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கடிதம் first appeared on Madras Murasu.
]]>கொரோனா தொற்று காரணமாக 2019, 2020, 2021 ஆகிய மூன்று ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் எந்த தேர்வும் நடைபெறவில்லை. கொரோனா தொற்று குறைந்த பிறகு கடந்தாண்டு தாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியிடப்பட்டு Group -1, Group – 2, Group 2-A, Group – 4 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. Group 4 தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவு இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. Group – 4 க்கான காலிப் பணியிடங்கள் 10,117 என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10,000 என்கிற அளவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல், கடந்த ஆண்டுதான் தேர்வு நடத்தப்பட்டு இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
கடந்த மூன்று ஆண்டுகளில் தேர்வுகள் நடத்தப்படாத காரணத்திலும், ஓய்வு பெற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், கொரேனா ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பினை இழந்த இளைஞர்கள் அரசுப் பணிக்கு முயற்சித்து வருவதாலும் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்பொழுது விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்திற்கு அதிகமாகவும் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்திற்கு அதிகமாகவும் உள்ளது.
அரசுப்பணியில் சேர இளைஞர்களுக்கான பிரதான வாய்ப்பாக இருப்பது டிஎன்பிஸ்சிதான். கொரோனா காலத்தில் அறிவிக்கப்படாத பணியிட வாய்ப்புகள் மற்றும் உருவாகியிருக்கும் கூடுதல் காலிப் பணியிடங்களையும் கணக்கில் கொண்டால் தற்போது மூன்றரை லட்சத்திற்கு மேல் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை தற்போது அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களான மின்சாரம், போக்குவரத்து, ஆவின் போன்ற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், சமீபத்தில் குரூப் 4 தேர்விற்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதில் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் இடம் பெறவில்லை என்பது அந்த இளைஞர்களுக்கு ஏமாற்றத்தையும் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், தமிழகத்தில் 3.5 லட்சத்திற்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், கொரோனா காலத்தில் அறிவிக்கப்படாத பணியிட வாய்ப்புகள் மற்றும் உருவாகியிருக்கும் கூடுதல் காலிப்பணியிடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து காலிப் பணியிடங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்காலத்தில் நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அதேசமயம், தற்போது அறிவிக்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள 10,000 காலிப்பணியிடங்களை குறைந்தபட்சம் 20,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்து அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிட வேண்டும்.
The post ’’டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களை 20,000 ஆக உயர்த்துக..!’’ முதமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கடிதம் first appeared on Madras Murasu.
]]>The post ”ஆண்டுக்கு 1.5 லட்சம் அரசு வேலை..!” டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 24-ஆம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தேர்வு எழுதியவர்களால் கடந்த இரு மாதங்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானது. இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன் ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 ஆயிரம் நான்காம் தொகுதி பணியாளர்கள் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். காலியாகும் பணிகளை நிரப்ப வேண்டும் என்றாலும் கூட, ஆண்டுக்கு 10,000 நான்காம் தொகுதி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், 2012-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 10,718, 2017-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,351, 2019-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,398 என கடந்த 11 ஆண்டுகளில் 29,951 நான்காம் தொகுதி பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 3 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள் தான் கடந்த 11 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தெளிவாக கூற வேண்டுமானால், சராசரியாக ஆண்டுக்கு 2,722 நான்காம் தொகுதி பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
11 ஆண்டுகளில் 1.10 லட்சம் நான்காம் தொகுதி பணியாளர்களை தேந்தெடுக்க வேண்டிய தமிழக அரசு, 30 ஆயிரத்துக்கும் குறைவான பணியாளர்களையே தேர்ந்தெடுத்திருக்கிறது. அப்படியானால், காலியிடங்களை நிரப்புவதாக இருந்தால் கூட, இந்த முறை குறைந்தது 80,000 நான்காம் தொகுதி பணியாளர்களை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும். ஆனால், கடந்த 30.03.2022 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி 7,301 நான்காம் தொகுதி பணியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 21.03.2023 ஆம் நாளிட்ட அறிவிப்பின்படி இந்த எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.
தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. நடப்பு திமுக அரசின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாக இந்த காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மாறாக ஒவ்வொரு ஆண்டும் அனைத்து வகை பணிகளுக்கும் சேர்த்து 10,000 பேர் கூட தேர்ந்தெடுக்கப் படுவதில்லை என்பது தான் உண்மை.
நான்காம் தொகுதி பணிக்கான தேர்வு எழுதியவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தையும், அரசுத்துறைகளின் தேவையையும் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நான்காம் தொகுதி பணியாளர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக, அதாவது 20 ஆயிரமாக அதிகரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
அதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் இருண்ட வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும்.
The post ”ஆண்டுக்கு 1.5 லட்சம் அரசு வேலை..!” டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.
]]>The post ’’சப்-இன்ஸ்பெக்டர், நிலைய அதிகாரி 750 காலிப்பணியிடம்..!’’ ஜுன் 30 கடைசி நாள் first appeared on Madras Murasu.
]]>தீயணைப்புத்துறை:
பணி: நிலைய அதிகாரி
காலிப் பணியிடம் : 129 (ஆண்-90, பெண்-39)
காவல் துறை:
பணி: சப்-இன்ஸ்பெக்டர் (காவல் சார்பு ஆய்வாளர்-தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை)
காலிப் பணியிடம்:
தாலுகா : 366 (ஆண்-257, பெண்-109)
ஆயுதப்படை: 145 (ஆண் – 102, பெண்-43)
தமிழ்நாடு சிறப்பு காவல் படை: 110 (ஆண் மட்டும்)
மொத்த காலிப்பணி இடம்: 750
விண்ணப்பம் காலம்: கடைசி நாள் 30.06.2023 https://www.tnusrb.tn.gov.in/

வயது:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் -இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் -32
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்-அருந்ததியர், பழங்குடியினர்-35
திருநங்கைகள் -35
ஆதரவற்ற விதவைகள் -37
முன்னாள் இராணுவத்தினர் – 47
20 சதவிகித காவல் துறை ஒதுக்கீடு விண்ணப்பத்தாரர்கள்- 47
என்று வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் அல்லது 10+3+2/3 என்ற முறையில் பட்டம்.
தேர்வு நடைபெறும் தேதி: ஆகஸ்ட் மாதம் நடைபெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்வு பாடத்திட்டம்:

The post ’’சப்-இன்ஸ்பெக்டர், நிலைய அதிகாரி 750 காலிப்பணியிடம்..!’’ ஜுன் 30 கடைசி நாள் first appeared on Madras Murasu.
]]>The post ’’கிராம வங்கிகளில் 8,612 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>கல்வித்தகுதி : பட்டதாரிகள், விவசாய பட்டதாரிகள், கால்நடை பட்டதாரிகள், பொறியாளர்கள், பட்டய கணக்கர்-சிஏ, சட்ட பட்டதாரிகள், எம்.பி.ஏ (மார்க்கெட்டிங்) என்று கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன் அனுபவம்: அலுவலக உதவியாளர், அதிகாரி ஸ்கேல் 1 ஆகிய பதவிகளுக்கு முன் அனுபவம் தேவையில்லை. மற்ற பதவிகளுக்கு ஒர் ஆண்டு முதல் அதிகபட்டம் 5 ஆண்டு முன் அனுபவம் தேவை.
வயது வரம்பு : For Officer Scale- III (Senior Manager)- Above 21 years, For Officer Scale- II (Manager) – Above 21 years – Below 32 years, For Officer Scale- I (Assistant Manager) – Above 18 years – Below 30 years, For Office Assistant (Multipurpose) – Between 18 years and 28 years. மத்திய அரசின் விதிகளின் படி, வகுப்பு வாரியான வயது வரம்பு தளர்வுகள் உண்டு.

தேர்ச்சி முறை : முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என்று மூன்று கட்டங்களில் தேர்வு நடைபெறும்.
தேர்வு மொழி : பொதுவாக இந்த தேர்வு ஆங்கில வழியில் நடக்கிறது. தமிழ்நாடு பாண்டிசேரி தேர்வர்கள் தமிழ் வழியில் தேர்வு எழுதலாம்.
தேர்வு மய்யம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர்.
முன் தேர்வு பயிற்சி: இத்தேர்வு எழுதுவோருக்கு கிராம வங்கி சார்பில் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி தேவைப்படுவோர், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான விரும்பத்தை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். இந்த முன் தேர்வு பயிற்சி வகுப்புகள் 17.07.2023 முதல் 22.07.2023 வரை நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ரூ.175, மற்றவர்களுக்கு 850 என்று விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடைசி நாள் : 21.6.2023
விண்ணப்பம், முழு விபரம் : https://www.ibps.in
மொத்தமுள்ள 43 கிராமப்புற வங்கிகளில் தமிழ்நாடு கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. 43 வங்கிகளுக்கும் பொதுவான தேர்வு இது. அனைத்து வங்கிகளுக்குமான இத்தேர்வை ஆங்கிலத்தில் எழுதலாம். தமிழ்நாடு, பாண்டிச்சேரியை சேர்ந்தவர்களுக்கு தமிழ் வழியில் எழுத வாய்ப்பு உண்டு. அதுபோல மற்ற மாநிலத்தவர் அவரவர் தாய் மொழியில் எழுத வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
The post ’’கிராம வங்கிகளில் 8,612 காலிப்பணியிடம்..!’’ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் வேலை..!’’ டிகிரி, டிப்ளமோ, தட்டச்சு, பிளஸ் டூ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>கல்வித்தகுதி : ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு டிப்ளமோ, ஜூனியர் செக்ரட்ரியட் பணிக்கு பிளஸ் 2, தட்டச்சு பயிற்சி, அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் பணிக்கு டிகிரி, மற்ற பணிகளுக்கு பதவி வாரியாக மாறுபடும்.
வயது : 2.7.2023 அடிப்படையில் சர்வேயர் 25, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட், ஜூனியர் இன்ஜினியர் 27 மற்ற பணிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : இணைய வழியாக எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள் : 2.7.2023
விவரங்களுக்கு : www.dda.gov.in
The post ’’டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் வேலை..!’’ டிகிரி, டிப்ளமோ, தட்டச்சு, பிளஸ் டூ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ”வங்கியில் 240 அதிகாரி பணியிடங்கள்..!” பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>கல்வித் தகுதி : பொருளாதாரம் பிரிவுக்கு எம்.ஏ., ஆர்க்கிடெக் பிரிவுக்கு பி.ஆர்க்., கிரடிட் பிரிவுக்கு சி.ஏ., மற்ற பிரிவுகளுக்கு பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.1.2023 அடிப்படையில் ஆபிசர் பிரிவுக்கு 21 – 30, மானேஜர் பிரிவுக்கு 27 – 38 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : இணைய வழியாக எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி.
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180 (ஜி.எஸ்.டி., வரி உட்பட)
கடைசி நாள் : 11.6.2023
விவரங்களுக்கு : www.pnbindia.in
The post ”வங்கியில் 240 அதிகாரி பணியிடங்கள்..!” பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>